நாம் நமது அன்றாட உணவில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழச்சாறுகள், முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
காலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாக தினம் ஒரு இயற்கை சாறுகளை பருகலாம்.
1. அருகம்புல் சாறு.: தேவையானவை.: அருகம் புல்- ஒரு சிறியகட்டு, தோல் சீவிய இஞ்சித் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: அருகம்புல்லை நன்கு கழுவி நறுக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து பருகலாம்.
2. பாகற்காய் சாறு.: தேவையானவை: பாகற்காய் - ஒன்று, தோல் சீவிய இஞ்சித் துருவல், உப்பு - சிறிதளவு, எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை.: பாகற்காயை கழுவி நறுக்கி விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும். இதனுடன் இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைசாறு சேர்த்து கலந்து பருகலாம்.
3. நெல்லிச்சாறு.: தேவையானவை: நெல்லிக்காய் -5, கறிவேப்பிலை - கைப்பிடியளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை.: நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். இதனுடன் கறி வேப்பிலை சேர்த்து அரைத்து வடிக்கட்டி உப்பு சேர்த்து கலந்து பருகலாம்.
No comments:
Post a Comment