Friday, June 30, 2017

பழங்களின் பயன்களும் மருத்துவ குணங்களும்1. மாதுளை - மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும். வயிற்றுக் கோளாறு வராது.

2. நாரத்தம் பழம் - நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

3. முந்திரிப் பழம் - கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

4. கண்டங் கத்திரிப்பழம் - கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

5. தூதுளம் பழம் - தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

06. பலாப்பழம் - பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.

07. இலந்தைப் பழம் - பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

08. திராட்சை - உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.

09. பப்பாளிப் பழம் - யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

10. வாழைப்பழம் - மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

11. வில்வப் பழம் - பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

12. அரசம் பழம் - விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

13. சீமை அத்திப்பழம் - மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

14. பேரீச்சம் பழம் - இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள். இரத்தச் சோகை விலகும்.

15. தர்பூசணிப் பழம் - கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

16. முலாம் பழம் - மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

17. விளாம்பழம் - பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள் விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

18. அன்னாசிப் பழம் - குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச் சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டு வர, தொண்டைக்கட்டு நீங்கும்.

19. தக்காளி - இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி, மலச்சிக்கலையும் போக்கும்.

20. எலுமிச்சம்பழம் - எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

21. கமலா - இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத்தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

22. கொய்யாப் பழம் - கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

23. களாப் பழம் - களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

24. நறுவிலிப் பழம் - நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வர மலச்சிக்கல் அற்றுப் போகும்.

25. ஆல்பகோடாப் பழம் - காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும். அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

http://naattumarunthu.blogspot.in/2017/06/blog-post.html

Saturday, April 8, 2017

எலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை!

எலும்புகளுக்குப் பலம் தரும் கறிவேப்பிலை!

சாப்பிடும்போது கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடுகிறீர்களா? அப்படியெனில், நீங்கள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சத்துகளையும் சேர்த்தே தூக்கி எறிகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வைட்டமின் ஏ, பி1, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து உள்பட பல சத்துகள் கறிவேப்பிலையில் உள்ளன. அகத்திக்கீரைக்கு அடுத்தபடியாக கறிவேப்பிலையில்தான் சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ளது.

கறிவேப்பிலையைத் துவையலாகச் செய்து - கொட்டைப்பாக்கு அளவாவது - சாப்பிட்டு வந்தால் எலும்புகளும் பற்களும் உறுதியாவதோடு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். உடலில் பலவீனம் ஏற்படுவது குறையும். கண், பல் தொடர்பான நோய்கள் குணமாவதோடு, வயதான காலத்திலும் பார்வைத்திறன் மங்காமல் பிரகாசமாகத் தெரியும். துவையல் செய்ய நேரமில்லை என்பவர்கள், வெறுமனே கறிவேப்பிலையை மென்றே சாப்பிடலாம். கறிவேப்பிலை ஜூஸ் செய்தும் அருந்தலாம். கறிவேப்பிலையுடன் கொத்தமல்லித்தழை, புதினா, இஞ்சி சேர்த்து அரைத்து, பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறு கலந்தால் கறிவேப்பிலை ஜூஸ் ரெடி!

உடல் சூடு, அஜீரணம், வாய்வுக்கோளாறு காரணமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால், கறிவேப்பிலையைச் சுத்தம் செய்து, அதில் நான்கில் ஒரு பங்கு சீரகம் சேர்த்து மையாக அரைத்து, கொட்டைப்பாக்கு அளவில் வாயில் போட்டு விழுங்கி வெந்நீரைக் குடிக்க வேண்டும். இதைச் சாப்பிட்ட அரை மணி நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேன் கலந்து சாப்பிட வேண்டும். இப்படி காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

பன்றிக்காய்ச்சல், டெங்கு எனப் பல வடிவங்களில் காய்ச்சல் வந்து பயமுறுத்தும் இந்த நேரத்தில் சாதாரணக் காய்ச்சலோ, விஷக்காய்ச்சலோ - எது வந்தாலும் கறிவேப்பிலைச் சாறு நிவாரணம் தரும். ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், அதில் பாதி மிளகு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் வெந்நீர்விட்டு மையாக அரைக்க வேண்டும். அதை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சிச்சாறு சேர்த்து அரை டேபிள்ஸ்பூன் தேன் கலந்து காலையில் சாப்பிட வேண்டும். மீதியுள்ள மருந்தை இதேபோல மாலையில் சாப்பிட வேண்டும். தேவைப்பட்டால் கொஞ்சம் வெந்நீர் குடிக்கலாம். இதை மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் முழுமையாகக் குணமாகும்.

மனநலப் பிரச்னை உள்ளவர்களுக்கு மையாக அரைத்த கறிவேப்பிலையுடன் பாதியளவு எலுமிச்சைப்பழத்தைச் சாறு பிழிந்து கலந்து, சாதத்துடன் சேர்த்துக் கொடுத்தால் பலன் கிடைக்கும். இதைப் பகல், இரவு எனச் சாப்பிட வேண்டியது அவசியம்.

கோடைக் காலத்தில் சிலருக்கு கண் இமைகளின்மேல் கட்டிகள் வரும். அப்போது, கறிவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து வெண்சங்கைச் சேர்த்து உரைத்து பற்றுப் போட்டு வந்தால், கட்டிகள் பழுத்து உடையும். கட்டிகள் உடைந்தபிறகும் தொடர்ந்து இதைச் செய்து வந்தால் புண்களும் ஆறிவிடும்.

Monday, April 3, 2017

கால் ஆணி மற்றும் பரு குணமாக

கால் ஆணி மற்றும் பரு குணமாக கால் ஆணி மற்றும்

பரு குணமாக. மயில் துத்தம் 10 கிராம் ஊமத்தை இலைச்சாறு 50 மில்லி தேங்காய் எண்ணெய் 100 மில்லி எடுத்து பக்குவமாக மணல் பருவத்தில் காய்ச்சி வடிகட்டி கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்தவும். பயன்கள்:- கால் ஆணி உள்ளவர்களுக்கு கால் ஆணி உள்ள இடத்தில் புது பிளேடுனால் மேலாக அறுத்து இந்த தைலத்தை பஞ்சில் மூன்று சொட்டு விட்டுஅந்த இடத்தில் வைத்து பஞ்சு நகராமல் டேப்பினால் இரவில் ஒட்டி பகலில் எடுத்துவிட வேண்டும் . இவ்வாறு ஒரு வாரம் செய்தால் போதும். கால் ஆணி குணமாகும். ஒரு சிலருக்கு கழுத்து, மார்பு, முகம் முதலிய இடங்களில் மரு தோன்றி அசிங்கமாக இருக்கும். அதற்கு அந்த இடத்தில் இரவில் ஒரு சொட்டு வைத்தால் போதும். ஒருசில நாட்களில் வலி இல்லாமல் உதிர்ந்து விடும். ஆறாத புண்களுக்கு;- சர்க்கரை வியாதி புண்ணுக்கு புங்க மரத்துப் பட்டையினால் கசாயம் வைத்து புண்ணை கழுவி நன்கு துடைத்துவிட்டு இந்த தைலத்தை பஞ்சில் போட்டு காற்றோட்டமாக பேண்டேஜ் துணியினால் கட்டி வர விரைவில் புண் ஆறும். புண் பக்கத்தில் ஈ வராது

சிறப்புப் பஞ்ச கற்பம்

சிறப்புப் பஞ்ச கற்பம் பஞ்ச கற்பத்தைப் பற்றி பல வைத்தியர்கள் அளவு முறையில் மாற்றி பயன் படுத்தி வந்தாலும் சிததர்கள் அனைவரும் கடுக்காத்தோல், விதை நீக்கிய நெல்லி வத்தல், வெண்மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை சம அளவாகப் பயன்படுத்தச் சொல்லி இருக்கின்றனர். அதிலும் போகமாமுனிவர் எழுதிய போகர் 7000, என்ற நூலில் பஞ்சகல்பத்தை இரவில் கரிசலாங்கண்ணிச் சாற்றில் ஊறவைத்து மறுநாள் காவையில் பசுவின் பால் விட்டரைத்து தேய்த்து வெந்நீரில் குளிக்கும் படி சொல்லி இருக்கிறார். இம்முறையில் 15 நாட்களுக்கொருமுறை குளித்து வரச் சொல்லியிருந்தாலும். நோய்களுக்குத் தக்கவாறு தோல்சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாரத்தில் இரண்டு நாட்களும் எயிட்ஸ் நோயாளிக்கு தொடர்ந்து 48, நாட்களும் நோயில்லா மற்றவர்களுக்கு 15, நாட்களுக்கொருமுறையும் கொடுத்து வருகிறோம். இவ்வாறு தயாரித்து பயன்படுத்தும் பஞ்ச கல்பத்தினால் கபாலம் கெட்டியாகும். உரோமம் தும்பி போல் கருப்பாக வளரும் மழையில் நனைந்தாலும் குளிராது கண்பார்வை அதிகரிக்கும் உடம்பில் நச்சு நீர் வெளியேறும். ஞாபகசக்தி அதிகரிக்கும் நீண்ட நாட்கள் தலைவலி நீங்கிவிடும். சிறு வயதில் இருந்தே பயன் 15 நாட்களுக்கொரு முறைபயன் படுத்தி வந்தால் அவர்களக்கு 4448,வகையான நோய்கள் மற்றும் நரை திரை வராது என்றும் சித்தர்கள் நூல்களில் கூறப்பட்டுள்ளது. பாரம்பரிய வைத்தியங்களை கடைப்பிடித்து நோயின்றி வாழ்வோம்.


Thursday, March 30, 2017

வறட்டு இருமல் குணமாக


வறட்டு இருமல் குணமாக

வறட்டு இருமல் என்றால் என்ன?

வறட்டு இருமல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது அதிகமாக குழந்தைகளை பாதிக்கிறது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று அதிக சத்தத்துடன் இருமுவார்கள். இருமும் பொழுது தொண்டையில் எரிச்சல் அதிகமாக ஏற்படும். குறிப்பாக படுத்தவுடன் இருமல் அதிகமாக ஏற்படும். தொண்டை கட்டினாற்போல் பேசுவார்கள்.

வறட்டு இருமல் வரக்காரணம்

வறட்டு இருமல் வர முக்கியமான காரணமாக கருதப்படுவது தூசு மற்றும் புகை. புகை பிடிப்பவகளை மட்டுமின்றி அவர்கள் அருகில் இருப்பவர்களையும் இது பாதிக்கிறது. அசுத்தமான தண்ணீரினால் கூட இந்த நோய் ஏற்படலாம். வறட்டு இருமலின் பெயருக்கு ஏற்றார் போல் இந்த வறட்டு இருமல் சளி இல்லாமல் நம்மை தாக்கும். இதன் மற்றொரு காரணமாக ஒவ்வாமை கூறப்படுகிறது. சிலருக்கு விலங்குகளின் முடியினாலும் வறட்டு இருமல் ஏற்படலாம். சினிமா தியேட்டரில் விற்கும் நாள்பட்ட ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் வறட்டு இருமல் வரும்.வறட்டு இருமலை வீட்டில் உள்ள எளிய பொருட்களை கொண்டு விரட்டலாம்.வறட்டு இருமலுக்கு கொள்ளுப்பொடி,மிளகு, சுக்கு, பூண்டு கசாயம் மருந்து

கொள்ளுப்பயிறு 50கிராம் எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு அதனுடன் மிளகு, சுக்கு, பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு இந்த கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனை இரண்டு நாட்கள், நாளுக்கு இரு வேளை குடித்தாலே போதும் வறட்டு இருமல் மட்டுமின்றி எந்த விதமான இருமலும் காணாமல் போகும்.வறட்டு இருமல் குணமாக எலுமிச்சை, தேன் மருத்துவம்

பொதுவாக இருமல் ஜலதோஷம் அதிகம் உள்ளவர்கள் விட்டமின் c அதிகமாக உட்கொள்ள வேண்டும். காரணம் விட்டமின் c சளி யை எதிர்த்து போராடும் குணம் கொண்டது. எலுமிச்சையில் விட்டமின் c அதிக அளவில் உள்ளது. இளஞ்சூடான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிது எழுமிச்சை சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் மற்றும் அதன் காரணமான சளியும் காணாமல் போகும்.வறட்டு இருமல் குணமாக இஞ்சி, தேன் மருந்து

அரை விரல் அளவிற்கு இஞ்சியை எடுத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொண்டு அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.வறட்டு இருமல் குணமாக உலர் திராட்சை மருந்து

உலர் திராட்சை குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் ஓர் உணவு. 50 கிராம் உலர்திராட்சையை தண்ணீர் விட்டு அரைத்துக் அதனுடன் 50 கிராம் வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து கெட்டியாக ஆகும் வரை கிண்ட வேண்டும். பின்பு இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வர வறட்டு இருமல் குணமாகும். இதன் சுவையும் நன்றாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வறட்டு இருமல் குழந்தைகளுக்கு வந்திருந்தால் இந்த மருந்தை தாரளமாக கொடுக்கலாம்.வறட்டு இருமலுக்கு புதினா மருந்து

வறட்டு இருமலுக்கு வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் புதினா ஒரு அருமருந்தாகும். புதினாவை துவையலாகவோ சூப் செய்தோ சேர்த்துக்கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.வறட்டு இருமல் குணமாக மாதுளம், தேன், இஞ்சி மருந்து

மாதுளம் பழத்தை தோல் இல்லாமல் மாதுளம் பழ முத்துக்களை மட்டும் எடுத்து பழசாறு ஆக்கி கொள்ள வேண்டும். மாதுளம் பழத்தின் முத்துக்களை மிக எளிமையாக எடுக்க, மாதுளம் பழத்தை சரி பாதியாக வெட்டி, பாதி மாதுளம் பழத்தை தலைகீழாக பிடித்துக்கொண்டு ஒரு கரண்டியை வைத்து வேகமாக தட்டினால் முத்துக்கள் தானாய் உதிர்ந்து விடும். மாதுளம் பழசாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும்.வறட்டு இருமல் குணமாக திப்பிலி, தேன் மருந்து

திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வறுத்து பொடி செய்து தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.வறட்டு இருமல் குணமாக வெங்காயம், சர்க்கரை மருந்து

சின்ன வெங்காயம் 150 கிராம் எடுத்துக்கொண்டு அதனை நீர் விட்டு நன்கு அரைத்து சிறு துணியில் வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 150 கிராம் சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்ச வேண்டும். இந்த பாகினை மூன்று வேளையும் பருகி வர வறட்டு இருமல் காணாமல் போகும்.வறட்டு இருமல் குணமாக பால், மஞ்சள், மிளகு மருந்து

நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து அருந்தி வர வறட்டு இருமல் வந்த இடம் தெரியாமல் ஓடி விடும். புகை பிடிப்பவர்கள் வாரம் ஒரு முறையேனும் இந்த மங்சள், மிளகு சேர்த்த பாலை அருந்த வேண்டும்.வறட்டு இருமல் குணமாக பால், பனங்கற்கண்டு, மிளகு மருந்து

நன்கு காய்ச்சிய பாலுடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மூன்று நாள் அருந்த வேண்டும். இப்படி செய்தால் வறட்டு இருமல் மட்டுமின்றி எப்பேர்பட்ட இருமலும் காணாமல் போகும்.வறட்டு இருமல் குணமாக சீரகம், பனங்கற்கண்டு மருந்து

10 கிராம் சீரகத்தை எடுத்துக்கொண்டு அதனை பொடி செய்து கொண்டு அதனுடன் சம அளவில் பனங்கற்கண்டை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். இதை காலை மாலை அரை ஸ்பூன் சாப்பிட்டு இளஞ்சூடான நீரை அருந்தினால் வறட்டு இருமல் குணமாகும். வறட்டு இருமலை குணமாக்க இது மிகவும் எளிமையான முறை ஆகும்.வறட்டு இருமல் சரியாக மிளகு மருந்து

மிளகை நன்கு சிவப்பாக வறுத்து கொண்டு அந்த சட்டியில் சிறிது நீரை ஊற்றி மூடி வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் பாதி நீரை காலையிலும் மீதி நீரை மாலையிலும் அருந்தி வர வறட்டு இருமல் சரியாகும்.வறட்டு இருமல் சரியாக தேன், பட்டை மருத்துவம்

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வறட்டு இருமலை போக்க ஒரு ஸ்பூன் தேனுடன் பட்டையை பொடி செய்து ஒரு சிட்டிகை கலந்து கொடுக்க வேண்டும். இருமல் காணாமல் போகும்.வறட்டு இருமல் குணமாக தேன், தூதுவளை மருந்து

சளிக்கும் இருமலுக்கும் தூதுவளை மிக அருமையான மருந்து. தூதுவளை கொடியை நன்கு காய வைத்து பொடியாக்கி வைத்து கொள்ள வேண்டும். நாட்டு மருந்துக்கடைகளில் தூதுவளை பொடியாகவே கிடைக்கும். ஒரு சிட்டிகை தூதுவளை பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து கொடுத்து வர வறட்டு இருமல் குணமாகும். இருமல் மட்டுமல்லாமல் சளியும் குணமாகும்.

Monday, March 27, 2017

ரத்த அழுத்தம் குறைக்கும் கொடம் புளி

ரத்த அழுத்தம் குறைக்கும் கொடம் புளி

‘மலபார் புளி’ என்ற பெயரும் கொடம் புளிக்கு உண்டு. கொடம் புளியைச் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

கொடம் புளி, கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கும். தென் தமிழகத்தில், மீன் குழம்பு செய்யும்போது, அதில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கொடம் புளியைத்தான் பயன்படுத்துவார்கள்.

கொடம் புளி சுவை மிகுந்தது. ஆனால், சமையலில் அளவாகவே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.

கொடம் புளியைச் சீராகச் சமையலில் சேர்த்துவந்தால், அழற்சிப் பிரச்னைகள் நீங்கும், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

கொடம்புளியை  ஒரு கப் தண்ணீர்  சேர்த்து,  மூன்று மணி நேரம் ஊறவைத்த பின்னர், விழுதாக  அரைத்துக்கொள்ளவும். இதனுடன், வெல்லப்பாகு, ஏலக்காய்த் தூள், சீரகத் தூள், கறுப்பு உப்பு சேர்த்து, சர்பத் போல அருந்தலாம்.

*உடலில் உள்ள கொழுப்பு கரைய*


*உடலில் உள்ள கொழுப்பு கரைய* *தேவையான பொருட்கள்* சின்ன வெங்காயம் ( நாட்டு வெங்காயம் ) அரை கிலோ பசுமாட்டு நெய் கால்கிலோ பனவெல்லம் (அ) பனங்கல்கண்டு தேவையான அளவு *செய்முறை* வெங்காயத்தினை தோலுரித்து கொள்ளவும் பிறகு வானலில் போட்டு நெய் ஊற்றி பொன்னிறமாக வதக்கவும் வதக்கிய வெங்காயம் சூடு ஆரியப்பின் மிக்சியில் போட்டு அரத்துக் கொள்ளவும் அரைத்த வெங்காயத்தினை மறுபடியும் வாணலில் போட்டு நெய் ஊற்றி கிளறவும் *குறிப்பு* சர்க்கரை நோய் உள்ளவர்கள் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் கரி உப்பு அல்லது கருப்பு உப்பு சேர்த்துகொள்ளவும் *சர்க்கரை நோய் இல்லாதவர்கள்* பனங்கல்கண்டு அல்லது பனவெல்லம் சேர்த்து லேகிய பதம் வரும் வரை கிளறி கண்ணாடி குடுவையில் வைத்துக்கொண்டு காலை ஒரு ஸ்பூன் இரவு ஒரு ஸ்பூன் 48 நாட்கள் சாப்பிட்டு வர .... உடலில் உள்ள கொழுப்புகள் கரையும் பருத்த உடல் இளைக்கும்

Tuesday, March 7, 2017

எருக்கம் பூ, செடி மருத்துவ குணங்கள்


எருக்கம் பூ, செடி மருத்துவ குணங்கள் மனம் வருந்தவில்லை மங்கையர் சூடாததற்காக எருக்கம் பூ….

Image result for எருக்கம் பூ


எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்.. எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்….. இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்…. இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும். பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது. இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும். காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும். இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம். எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும். பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது. எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்.. தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம். மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

Wednesday, February 22, 2017

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!!!


பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!!!பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தால் பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்திய நன்னாரிவேரை 3, 4 தடவை கூட பயன்படுத்தலாம்.

* பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

* தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

* கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* பித்தவெடிப்பு இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருது வாகும். கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.
பித்தவெடிப்பிலிருந்து ரத்தம் வந்தால், உடனடியாக தோல் மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது அவசியம்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* ஆலமரப்பால்,அரசமரப்பால் இரண்டும் சமஅளவு கலந்து பூசவும் வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு குணமாகும் .

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.⁠⁠⁠⁠

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம்

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் :
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, எளிதான மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.
அந்தவகையில், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பலவீனத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். திருநீற்றுப்பச்சை, தூதுவளை, வல்லாரை ஆகியவை நரம்புகளை பலப்படுத்தும் மூலிகைகளாக விளங்குகின்றன.
நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை பொறுத்துதான் உடலின் அனைத்து செயல்பாடும் இருக்கும். ஞாபக சக்தி, ஜீரண சக்தி, தூக்கம் போன்றவற்றுக்கு நரம்பு மண்டலம் உதவுகிறது. முதுகுத்தண்டில் அடிபடுதல், அழுத்தம் ஏற்படுவது, மன உளைச்சல், உடற்பயிற்சி இல்லாதது, மூச்சுப்பயிற்சி இல்லாமை, சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது போன்றவை நரம்பை பலவீனப்படுத்தும். இதனால், கை கால்களில் நடுக்கம், சோர்வு, மறதி, உள்ளங்கை கால்களில் வியர்வை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

திருநீற்றுபச்சையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்

. 10 திருநீற்று பச்சை இலைகளை சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது காய்ச்சிய பால் சேர்த்து, காலை வேளையில் குடித்துவர நரம்புகள் பலம் அடையும். சோர்ந்துபோன நரம்புகளை தூண்டுகிறது. உடல் சோர்வை போக்கும்.பல்வேறு நன்மைகளை கொண்ட திருநீற்று பச்சை மணத்தை தரக்கூடியது. நரம்புகளை பலப்படுத்தும் தன்மை உடையது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தும்.

தூதுவளையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தூதுவளை இலை, மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசாலை இலை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர நரம்புகளுக்கு பலம் ஏற்படும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், கல்லீரலை பலப்படுத்தும். நீலநிற பூக்களை உடைய தூதுவளை, நரம்புகளை தூண்டக்கூடிய மூலிகையாக விளங்குகிறது.

வல்லாரை கீரையை பசையாக அரைத்து, தேவையான நல்லெண்ணெய் விட்டு தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை வாரம் ஒருமுறை தலை, உடலில் பூசி குளித்துவர நரம்புகள் தூண்டப்படும். தலைவலி, கழுத்து வலி சரியாகும். உடல் சோர்வு போக்கும். மன சோர்வு நீங்கும்.நரம்பு பலவீனம் அடையும்போது உள் உறுப்புகள் அனைத்தும் பலவீனம் அடைகிறது. மூளை செயல்பாடு குறையும். ஞாபக மறதி, விரல்கள் மரத்துபோகுதல், தொடு உணர்வு குறைதல் ஏற்படுகிறது. நரம்புகளை பலப்படுத்துவதில் செம்பருத்தி, ரோஜா ஆகியவை அற்புதமான மருந்தாகிறது. காலிபிளவர், முளைகட்டிய தானியங்கள் ஆகியவையும் சிறந்த மருந்துகளாகின்றன. தினமும் அரைமணி புல் வெளியில் வெறும் காலோடு நடக்க வேண்டும். இதனால் நரம்பு மண்டலம் தூண்டப்படும். மூளைக்கு இதமான சூழல் ஏற்பட்டு ஞாபக சக்தி பலப்படும்.

வேணல் கட்டியை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெங்காயம், மஞ்சள். சின்ன வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி நசுக்கி, மஞ்சள் சேர்த்து கலந்து கட்டிகள் மீது போட்டுவர நச்சுக்கள் வெளியேறி கட்டிகள் விரைவில் குணமாகும்.⁠⁠⁠⁠

Monday, February 20, 2017

கொழுப்பை குறைக்கும் கொடம் புளி

கொழுப்பை குறைக்கும் கொடம் புளி

கொடம் புளி – Garcina indica
கேரள மாநிலத்தில் பயன்படுத்தப் படும் புளி வகை இது..........
நாம் பயன்படுத்தும் புளி –Termarindus  indica

 1.குடற் புண்ணை உண்டாக்கும்
 2.வாதத்தை உண்டாக்கும்.

புளிப்பு சுவை விரும்பிகள் ,நாம் பயன்படுத்தும் புளிக்கு  பதில் கொடம் புளியை பயன்படுத்தலாம்.......
கொடம் புளியில்
   கால்சியம்
   பாஸ்பரஸ்
   இரும்பு
   தயமின்
   ரிபோப்ளவின் & நியாசின்
மற்றும் முக்கியப் கூறாக
   ஹைட்ரோசி சிட்ரிக் அமிலம் [ hydroxy citric acid ] உள்ளது.........
 இந்த HCA ,
 1.கொழுப்பை உண்டாக்கும் நொதியாம்  Citrate lyase ஐ தடுக்கிறது.......
 2. செரோடினின் ஹார்மோனை அதிகப்படுத்துகிறது ..இந்த ஹார்மோன் பசியை குறைக்கிறது......
யாரெல்லாம் பயன்படுத்த கூடாது
 1.கர்ப்பிணிகள்
 2. பத்து வயதிற்கு குறைவானவர்கள்.

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?
இதை முயற்சி செய்து பாருங்கள்.

#முடக்கொத்தான் இலை ஒரு கைப்பிடி
#கொத்தமல்லி 50 கிராம்
#கரீஞ்சீரகம் 30கிராம்
#சுக்கு 10கிராம்
#சித்தரத்தை 10கிராம்
#மிளகு 10 கிராம்
#கொடம்புளி இரண்டு துண்டுகள்
#பெருங்காயம் சிறிதளவு
#பூனைக்காலி விதை பத்து
எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 டம்லர் நீர்விட்டு  பாதியாக வற்றவைத்து
காலை மாலை விதம்  ஒரு டம்ளர் சாப்பிட்டுவர இளந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி,மூட்டுவலி,உடல் பலவினம்,பாலியல் பலவினம்,உடல்நடுக்கம் போன்றைவை  குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்....

இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நெஞ்சு சளி நீங்க துளசிச் சாறு ஓர் அருமருந்து

நெஞ்சு சளி நீங்க துளசிச் சாறு ஓர் அருமருந்து

தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்.நெஞ்சு சளி நீங்க நெல்லிக்காய், மிளகு , தேன் மருந்து

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.நெஞ்சு சளி நீங்க புதினா, மிளகு மருந்து

புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.நெஞ்சு சளி குணமாக வெற்றிலை மருந்து

வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.நெஞ்சு சளி குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து

வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.நெஞ்சு சளி குணமாக பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மருந்து

பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்.

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்

சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்
சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.

சோடா :
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளி :
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

மாத்திரைகள் :
எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

ஆல்கஹால் :
பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

காரமான உணவுகள் :
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

காபி :
காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

டீ :
காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

தயிர் :
தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும். R.Athi, 8122048418

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.

இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்

கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
கோரை கிழங்கு பொடி 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும். இந்த மருத்துவ முறையை வராகமித்ரர் அங்கரசனைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

குளியல் பொடி:

இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

குளியல்பொடி தயாரிப்பது எப்படி?
மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
வெட்டி வேர் 200 கிராம்
அகில் கட்டை 200 கிராம்
சந்தனத் தூள் 300 கிராம்
கார்போக அரிசி 200 கிராம்
தும்மராஷ்டம் 200 கிராம்
விலாமிச்சை 200 கிராம்
கோரைக்கிழங்கு 200 கிராம்
கோஷ்டம் 200 கிராம்
ஏலரிசி 200 கிராம்
பாசிப்பயறு 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

தந்த ரோகம் - பல்பொடி

தந்த ரோகம் - பல்பொடி

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை
பல்பொடி செய்முறை .
1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும். இதனைக்கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது

மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? கவலைய விடுங்க.

மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? கவலைய விடுங்க... வெங்காயம் போதும்... உடனே மரு மறைஞ்சிடும்...பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் மருக்கள் கொலாஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர்.

அவற்றைப் பின்பற்றி, மருத்துவமனைக்குச் செல்லாமல் நம்முடைய வீட்டிலேயே அவற்றை எளிதமாககப் புாக்கிக் கொள்ள முடியும். என்னென்ன பொருட்கள் மருக்களைப் போக்கும் தன்மை கொண்டவை?

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது வெளியே வருகிற சாறினை மருக்களின் மேல் தேய்த்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து தானாகவே உதிர்ந்துவிடும்.

வெங்காயம்

வெங்காயத்துக்கும் மருக்களைப் போக்கும் சக்தியுண்டு. வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும் வெந்நீர் கொண்டு கழுவலாம். இதை இரவு தூங்கச் செல்லும் முன் அப்ளை செய்து கொண்டால், இரவு முழுக்க ஊற வைக்க முடியும்.

சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மருக்கள் விரைவில் உதிரும்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயிலை தொடர்ந்து சருமத்தில் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.  அதேசமயம் டீ ட்ரீ ஆயிலை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன் மரு உள்ள இடத்தை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். அதற்கடுத்து டீ ட்ரீ ஆயிலைத் தடவலாம்.

ஆயில் தடவும் இடத்தில் சிறிது நேரம் எரிச்சல் உண்டாகும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் போதும் மிக விரைவில் மருக்கள் இருந்த சுவடே தெரியாமல் உதிர்ந்துவிடும்பூண்டு

பூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, அவை விரைவில் மறைய ஆரம்பிக்கும். இதை ஒரு நளைக்கு மூன்று வேளையும் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்

Friday, February 17, 2017

சில சிகிச்சை முறைகள்

சில சிகிச்சை முறைகள்

தமிழ் மருத்துவ முறைப்படி இருபாலருக்குமுரிய சிகிச்சை முறைகள்-மனிதகணம் எனப்படும் மானிட மருத்துவம்.

தேவகணம் எனப்படும் தெய்வ மருத்துவம்.

ராட்சச கணம் எனப்படும் நிசாசர மருத்துவம்.  என இவை முப்பெரும் பிரிவாகக் கூறினாலும், அவற்றின் உட்பிரிவுகளாக வேறு சிலவற்றையும் கூறலாம்.

பொதுவாக வேர்பாரு, தழைபாரு, மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு என்பதற்கிணங்க மூலிகை மருந்துகளால் தீராப் பிணிகளை -பற்ப செந்தூரங்களினாலும், இவ்விரு முறைகளால் நீங்காப் பிணிகளை அறுவை, அக்கினி,காரம் இவற்றைக் கொண்டு நீக்க வேண்டுமெனவும் அறியவும்.

மானிட மருத்துவம்': இது தாவரங்களினாலான குடிநீர், சூரணம்,மணப்பாகு, இளகம், மாத்திரை, சுரசம், பிட்டு, வடகம், போன்றவற்றால் சிகிச்சை செய்வதாகும்.

தேவ மருத்துவம்: சகல பிணிகளும் இயற்கை, செயற்கை காரணங்களினாலும், சில துர் தேவதைகளினாலும்-சில பூர்வ சென்ம தீவினைகளினாலும் ஏற்படுகிறது.

குட்டம்,சுவாசகாசம், சயம் போன்ற கொடிய பிணிகள், முற்பிறவியின் பயனோடு இணைந்தும், பிறவி இலக்கினம்-நட்சத்திரம் இவற்றின் அடிப்படையிலும் ஏற்படுவதாகும். இத்தகைய நோய்களுக்கு மருந்துகள் மட்டுமின்றி, தேவதைக் குற்ற நீக்கக முறைகளும் தேவைப்படும். எனவே இது, பூர்வ கருமானு சாரத்தையே காரணமாகக் கொண்டு -தாது சீவ இனங்களாகிய இரசம்,கெந்தி, பாடாணம், உப்பு,உலோகம்,முத்து, பவளம் போன்றவைகளினாலான பற்பம், செந்தூரம், சுண்ணம்,கட்டு, களங்கு, குளிகை, திராவகம், செயநீர் போன்ற உயர்ந்த மருந்துகளால் சிகிச்சை செய்வதாகும்.

இராட்சச மருத்துவம்: இது கத்தி,கத்திரி, குறடு,சலாக்கை, போன்ற கருவிகளைக் கொண்டு அறுவை, கீறல்,சுட்டிகை,குருதி வாங்கல், கொம்பு கட்டல்,அட்டைவிடல், போன்ற முறைகளில் சதையை அறுத்து செய்யும் சத்திர சிகிச்சையாகும்.

இதை ஏன் பதிவு செய்கிறேன் என்றால் நமது குருமார்களாகிய சித்தர்கள் முப்பது பிரிவுகளாக பிரித்து மருத்து முறைகளை வகுத்துள்ளார்கள். உலகில் உள்ள  அனைத்து மருத்துவ முறைகளும் சித்தாவிலிருந்து பிரதியெடுக்கப்பட்டவை என்பதற்கே

சர்க்கரை வியாதி

நுணாக்கனி-தைராய்டை மேம்படுத்தும்( குணப்படுத்தும்)

நுணாக்கனி-தைராய்டை மேம்படுத்தும்(  குணப்படுத்தும்) அதிசய மூலிகை கனி. தினசரி ஒரு டீஸ்பூன் சாறை 100 மிலி நீரில் கலந்து காலை,மாலை குடிக்கவும். இதன் காய் இலை பட்டைச்சாறை அரைத்து தொண்டையில் பூசிவர கழுத்து வீக்கம் ,தைராய்டு வீக்கம்,கட்டி,புடைப்பு நீங்கும். நுணா என்ற மஞ்சனத்தியில் அடோப்டோஜன் ஹைப்போ,ஹைப்பர் தைராய்டை சீர்படுத்தும்.

அதிக உடல் உடல் சூடு

அதிக உடல் உடல் சூடு, பித்தம்,வயிற்று வலி,நீரழிவும் இணைந்தவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்த அன்பர்கள் முளைந்த வெந்தயம்,வெந்தயக்களி, வெந்தய தோசை,வெந்தயக் கீரை சூப், வெள்ளரி,வெண்பூசணி, இதோடு வெங்காய சாலட், பச்சடி, சூப், பொரியல், சாம்பார் இவைகளில் ஒன்றையோ பலவோ இரவு உணவில் சேர்க்கவும்

ஹைப்போ தைராய்டு

ஹைப்போ தைராய்டு, மெட்டபாலிசம் குறைவாக உள்ளவர்கள்,உடல் பருமன்,ஓபேசிட்டி அதிகரித்தவர்கள் கொள்ளை முளைக்க வைத்து கொள்ளு சுண்டல்,கொள்ளு சூப்,கொள்ளு தோசை,அடை, சப்பாத்தி செய்யலாம். மூட்டுவலி, எலும்பு பலக்குறைவு, தொப்பை சீராகும். சாத்துக்குடி,மாதுளை,திராட்சையை அவ்வப்போது சாப்பிடவும்.

ஹைப்பர் தைராய்டு

ஹைப்பர் தைராய்டு/ உடல் இளைத்தவர்கள் முளை எள் சாப்பிடலாம். எள்ளு லட்டு,கேக்/பர்பி,முந்திரி/பாதாம்/காளிபிளவர்/ தோலுடன் அவித்த உருளை/உளுந்து முளை,பேரீட்சை,பருத்திப்பால்,வள்ளிக்கிழங்கு,கடலை சுண்டல்,பலவகை பயறு சுண்டல்களை அடிக்கடி உணவில் சேர்க்கவும்.

காசநோய்க்கு

காசநோய்க்கு

ஐந்து பூண்டு பற்களை உரித்தெடுத்து 100மிலி பால் 200 மிலி நீர் ஊற்றிக் இலக்கி அடுப்பில் வைத்துக் கொதிக்கவைத்து அது பாதியாக வற்றியதும் இறக்கி இளஞ்சூட்டில் ஒரு நாளைக்கு மூன்றுவேளை அருந்தவும். இவ்வாறு தினசரி செய்து ஒரு மாதம் அருந்தி வர சிறந்த பலன் கிடைக்கும்.

கடும் வயிற்றுவலி,

கடும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என்றாலும் ஐந்து பூண்டு பற்களை பாலில் தட்டிப்பொட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் அருந்த சரியாகும்.

Wednesday, February 15, 2017

பெரும்பாடு

பெரும்பாடு என்று சொல்லக்கூடிய அதாவது தொடர்ந்து அதிகமாக ரத்தம் வெளியேறினால் முருங்கைப் பட்டை, மருதம் பட்டை சம அளவு எடுத்து இடித்து கஷாயமாக காலை,மாலை அரை டம்ளர் கஷாயமாகக் கொடுக்கவும். ஒவ்வொரு மாதமும் அதிக ரத்தப்போக்கு இருக்குமானால் அச் சமயத்தில் இக் கஷாயத்தை மூன்று நாட்கள் சாப்பி நிரந்தரமாக இப்பிரச்சனை நிவர்த்தியாகும்.

கற்பமூலிகைகள் (இவை உடலை நெடுநாள் நிலைக்கச் செய்பவை)

கற்பமூலிகைகள் (இவை உடலை நெடுநாள் நிலைக்கச் செய்பவை)

அவுரி, அழுகண்ணி,ஆமிரம்,இருப்பவல்,எட்டி, ஓரிதழ்தாமரை,கடுக்காய்,கருவூமத்தை, கருந்துளசி,கப்புச்சடைச்சி,கருங்கொடிவேலி,கருவேம்பு,கருநெல்லி,கருவீழி,கல்பிரமி, காட்டு மரிக்கொழுந்து, கிளிமூக்கு மாங்காய்,கீழாநெல்லி, குரோசாணி,குழலாதொண்டை, சங்கநிறக்கரந்தை, சதுரக்கள்ளி,சர்கரை வேம்பு, சங்கத்தூதுவளை, சிவனார் வேம்பு,செங்கொடிவேலி, சாயாவிருட்சம்,செழுமலர்க்கொண்றை,செந்திராய்,கொடிநெல்லி,பலாசு,பிரமி,பொற்கையான்,பொன்னூமத்தை, பெருமலர்க்கொன்றை, எருமைகணைச்சான்,சுரபிசித்தி,நெல்லிமுள்ளி,நாறுகரந்தை, நெபத்திகை, விருத்தி,விட்டுணுகரந்தை, வெள்ளை தூதுளை,வெள்ளை விட்டுணு கரந்தை, சூரியகாந்திப்பூ, மிளகு, வெள்ளை ஆவிரை,மாஞ்சரோகணி, தில்லை, சிவப்புக்கள்ளி,வெண்டாமரை,வில்வப்பூ, மருதோன்றி, வெண்புரசு,பொற்கொன்றை, வெள்ளை நீர்முள்ளி, வெள்ளெருக்கு, வெண்கரந்தை, சேங்கொட்டை, சீந்தில்,வேம்பு,வெள்ளை மந்தாரை,செந்நாயுருவி, செங்கரந்தை,விடத்தேர்,நெல்லிப்பூ,பொன்னாங்கண்ணி,தொழுகண்ணி, நாகதாளி,தாசசின்னிமூலி,சூதபாடாணம்,கற்பூரசிலாசத்து,அமுரியுப்பு, ஈரற்கற்சத்து, சவர்காரம் முதலியனவாகும்.

வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு. இதுக்கு அடிப்படையான மூலிகைகள்

   வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு. இதுக்கு அடிப்படையான மூலிகைகள் கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை. இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் கிடைக்கும் வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.
மருந்து சாப்பிடும்போது உணவில் பத்தியம் உண்டு. புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும். மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மீன், மாமிசம் தவிர்க்கவேண்டும். முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

*  வெந்தயம்.    -  250gm
*  ஓமம்               -  100gm
*  கருஞ்சீரகம்  -  50gm

* மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது.

👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

👉 இருதயம் சீராக       இயங்குகிறது.

👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

👉 கண் பார்வை
தெளிவடைகிறது.

👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

👉மலச்சிக்கல்  நீங்குகிறது.

👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

👉  நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

👍  இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

Tuesday, February 7, 2017

மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம் !!

மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம் !!
கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி ஒரு  நாளைக்கு இரண்டு வேளைன்னு பத்து  நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வாருங்கள். மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும். அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வந்தால் மூலம் இனிமேல் உங்களுக்கு வரவே வராது

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..

1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது.

2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க .

3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும்.

4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக.

5. உணவில் முடக்கறுத்தான், அரைக்கீரை, வாதநாராயணன் கீரை சேர்க்கவும்.

6. உருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்குச் சாற்றையும் அருந்தலாம்.

7. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

8. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒருநாளைக்கு இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

9. வெதுவெதுப் பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தைப் போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

10. ஒரு தேக்கரண்டி குதிரை மசால் என்னும் கால் நடை தீவன விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று முறை அருந்தலாம்.

11. இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பிறகு மூன்று வாரங்கள் இடவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்கள் குடிக்கவும்.

12. ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை இரண்டு பூண்டுப் பற்களுடன் வேகவைத்து நாளொன்றுக்கு இருமுறை சாப்பிடுக.                      

சிறுநீரக கல் எப்படி உருவாகிறது?
நாம் தினமும் குடிக்கும் தண்ணீரில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரியா என பலவகையான உப்புகள் உள்ளன. இவை நாம் சாப்பிடும் உணவு வகைகளிலும் உள்ளன.

சாதாரணமாக இவ்வுப்புகள் சிறுநீரில் வெளியேறிடும். சில சமயம் இவற்றின் அளவு எல்லை தாண்டும் போது, இவை சிறுநீரில் முழுமையாக வெளியேறாமல் சிறுநீர் பாதையில் தங்கும். சிறுநீரகம் சிறுநீரகப்பை இவற்றை இணைக்கும் குழாய்கள் போன்றவற்றில் உப்புகள் படிகம் போல் படிந்து, சிறுக சிறுக சேர்ந்து, கல் போல் பெரிதாகும். இதுதான் சிறுநீரகக்கல்.

சிறுநீரகப்பையின்  புராஸ்டேட் வீங்கிக் கொள்ளும் போது, சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுவதாலும் சிறுநீரகக்கல் உண்டாகலாம். அடிக்கடி சிறுநீர் பாதையில் அழற்சி ஏற்படுவோருக்கும் சிறுநீரகக்கல் தோன்றும். பேராதைராய்டு எனும் ஹார்மோன்சுரப்பியின் மிகையான பணியினால் கால்சியத்தின் அளவு அதிகமாகி சிறுநீரகக்கல் தோன்றும்.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!

வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!

வாயுத் தொல்லை ஏற்படாத மனிதர்களே இல்லை என சொல்லலாம் ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை சாதரணமாக ஏற்படக்கூடியது.  சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.  ஒருவர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வாயுத் தொல்லை ஏற்பட காரணம் :

உணவு செரிமானமாகி, ஒரு பகுதி வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்ச மீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந்து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறியா எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம்.

வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். மொத்தம் மூன்று வகையாக வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைப் பிரிக்கலாம்.

அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள்

பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், சோயா பீன்ஸ், டர்னிப், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை.......

மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள்

ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், செலரி மற்றும் பிரெட்............

குறைந்த வாயுவை வெளியேற்றும் உணவுகள்

முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய், அரிசி..........

வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க என்னதான் வழி?

சமைத்த உணவை சாப்பிடும் போது, கூடவே பச்சைக் காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்டு, சிறிது இடைவெளி விட்டு, பிறகு சமைச்ச உணவை சாப்பிடுவது நல்லது.
காய்கறி, பழங்களில் நார்ச்சத்து அதிகம். அது சமைத்த உணவோட சேர்ந்து சீக்கிரம் செரிச்சு, புளிச்சு, வாயுவை உண்டாக்கும்.

சில பேர் அவசரம் அவசரமா சாப்பாட்டை விழுங்குவாங்க, அப்ப காற்றையும் சேர்த்து விழுங்கறதும் வாயுவுக்கான காரணம்.

மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிக்கிறதைப் பழக்கப்படுத்திக்கிறவங்களுக்கு வாயுத் தொல்லை குறையும்.

வாயுவுக்கு எதிரா போராடுற குணம் கொண்ட உணவுகள் பூண்டு, இஞ்சி, சோம்பு, ஓமம். வாயு அதிகம்னு தெரிஞ்ச உணவுகள்ல இதையெல்லாம் சேர்த்து சமைக்கிறப்ப, வாயு பிரச்சினை குறையும்.

கிழங்கு சாப்பிட்டா முதுகு பிடிச்சிருச்சு, கடலை சாப்பிட்டா கை, கால் பிடிச்சிருச்சு, வாயுனு சொல்றவங்களை நிறைய பார்க்கலாம். உண்மைல வாயுங்கிறது வயித்துப்பகுதில மட்டும்தான் இருக்கும். முதுகுப் பிடிப்பு மாதிரி மத்த பிரச்சினைகளுக்கு காரணம் வேற ஏதாவது இருக்கலாம்.

சுண்டல் சாப்பிட்டா வாயுப் பிரச்சினை வரும். சுண்டலுக்கான தானியத்தை ஊற வச்சிட்டு, அந்தத் தண்ணியை வடிச்சு, வேற தண்ணி மாத்தி, கொஞ்சம் இஞ்சி சேர்த்து பிரஷர் குக் செய்யலாம். இல்லைனா சுண்டலுக்கான கடலையை வெறும் கடாய்ல லேசா வறுத்துட்டு, இளம் சூடான தண்ணீர் விட்டு ஊற வச்சு, வடிச்சு வேக வச்சும் செய்யலாம். முக்கியமா அதோட மேல் தோல் உடையற அளவுக்கு வேக வைக்கணும்.

பழகாத எந்தப் புது உணவையும் ஒரே நாள்ளில் நிறைய சாப்பிடாம, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றதும் நல்லது. பார்ட்டி, விசேஷம்னு முதல்நாள் நிறைய சாப்பிட்டவங்களுக்கு, அடுத்த நாள் வாயுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். பசியிருக்காது. அந்த நேரத்துல இஞ்சி முரபா, இஞ்சி சிரப், இஞ்சி சூரணம், இஞ்சி காபினு எதையாவது எடுத்துக்கிறது உடனடி பலன் தரும்.

Tuesday, January 10, 2017

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்!

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்!

குண்டு உடல்வாகோடு, உடல் எடை அதிகமாகி உடல்பருமனுக்கு ஆளாவது எவ்வளவு தீவிரமான பிரச்னையோ, அதேபோல தீவிரம்கொண்டது எடை குறைந்து, உடல் மெலிந்திருப்பது! அப்படி மெலிந்திருப்பவர்கள், உடல் எடையை அதிகரிக்க வேண்டியதும் அவசியமே!

உடல் எடை அதிகரிக்க

வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற உடல் எடை ஒவ்வொருவருக்குமே மிக மிக அவசியம். சிக்ஸ்பேக் வரவழைக்கிறேன் பேர்வழி என ஆண்களும், மெல்லிடை வேண்டும் எனப் பெண்களும் எடை குறைத்து, உடல் மெலிந்து வருவது இன்று அதிகமாகிவருகிறது. `எனக்குள் என்ன நடக்கிறது?’ என்ற அறிவும் அக்கறையும் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய அடிப்படையான விஷயம்.

உடல் எடையைத் தேற்றுவது என்பது குழந்தைப் பருவம் முதலே இருக்கவேண்டிய அக்கறை. சிறு குழந்தையின் உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால், `இளங்காசம்’ எனும் பிரைமரி காம்ப்ளெக்ஸ் காரணமாக இருக்கக்கூடும். இந்தியாவில், குழந்தைகளின் எடை குறைவுக்கு மிக முக்கியக் காரணம் பிரைமரி காம்ப்ளெக்ஸ்தான். சிறு குழந்தையாக இருக்கும்போதே இதைச் சரியாகக் கவனிக்கத் தவறும்போது பின்னாளில் எப்போதும் மெலிந்த தேகம் நிலை பெற்றுவிட வாய்ப்பு உண்டு.

`டபுள் மீல்ஸ்’ டோக்கன் வாங்கி, என்னதான் கண்டதையும் சாப்பிட்டாலும் உடல் தேற மாட்டேங்குது’ என்கிறவர்களும் இருக்கிறார்கள். உடல் எடை அதிகரிக்க சில உணவுகளும் வழிமுறைகளும் உண்டு. அவை இங்கே...

* ‘கஞ்சி அன்னத்திற்கு காயம் பருத்திடும்’ என்கிறது சித்த மருத்துவம். காலை வேளையில் சிறு குழந்தையாக இருந்தால் சத்து மாவுக் கஞ்சியும், இளைஞர்களாக இருந்தால் அரிசி தேங்காய்ப்பாலும் சாப்பிடுவது உடல் எடை ஏற ஒத்தாச்சை செய்யும். `கஞ்சி’என்பதற்கு காய்ச்சி அருந்துவது என்று பொருள். உடைத்த புழுங்கல் அரிசி, அதில் கால் பங்கு பாசிப் பயறு எடுத்து, வறுத்து திரித்து வைத்துக்கொண்டு நீர்விட்டுக் காய்ச்சி, அதில் சூடான பால், சர்க்கரை, சிறிது பசு நெய் சேர்த்துக் குழந்தைக்கு வாரத்துக்கு இரண்டு, மூன்று தடவை கொடுக்கலாம்.* `இளைத்தவனுக்கு எள்ளு’ என்பது முதுமொழி மட்டுமல்ல, மருத்துவ மொழியும்கூட. இளைத்த உடல் உடையவர்கள், இட்லி, தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச் சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

* பெண் குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில், மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள், சற்று வாளிப்பான உடல்வாகு பெறுவதற்கு எள்ளும் உளுந்தும் மிகவும் பயன்தரும்.

* வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண் இருந்தாலும் சிலருக்கு உடல் எடை ஏறாது. இப்படியான நோய்களுக்கு ஆளானவர்கள், தினசரி காலையில் நீராகாரம் (உடைத்த புழுங்கல் அரிசி கஞ்சியில் வெந்தயம், சீரகம் சேர்த்துச் செய்து வடித்தது), மதியம் மோர், மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இந்த உணவுப்பழக்கம், குடல்புண்ணையும் ஆற்றும்; உடை எடை உயர்ந்திடவும் உதவும்.* வாரத்துக்கு இரண்டு முறையாவது தேங்காய்ப்பாலை உணவில் சேர்ப்பது நல்லது.

* இரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் (Irritable Bowel Syndrome) எனும் கழிச்சல் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறுவது இல்லை. இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்கத் தூண்டும். எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தமாகும்போதும், சூடான, காரமான உணவைச் சாப்பிட்டவுடனும் மலம் கழிக்கத் தூண்டும் இந்த கழிச்சல் நோயில், மெலிந்த தேகம் நிரந்தரமாகிவிடும். இந்த நோய் இருப்பவர்கள், மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது நோயை நீக்கி, உடல் எடையை அதிகரிக்க உதவும்.* எடை அதிகரிக்க அதிகம் உதவுவது, வாழை. அதிலும், நேந்திரம் பழத் துண்டுகளை தேனுடன் சேர்த்து, மாலை வேளைகளில் நொறுக்குத்தீனியாக குழந்தைகளுக்குக் கொடுப்பது எடையை உயர்த்துவதுடன், நோய் எதிர்ப்பாற்றலையும் கூட்டும்.

* பசும்பால், பசு வெண்ணெய் இரண்டும் உடல் எடையைக் கூட்ட உதவும்.

மெலிந்து இருப்பது ஃபேஷனாகி வரும் இந்தக் காலத்தில் உள்ளே மறைந்திருக்கும் நோயை மறந்து அல்லது அலட்சியமாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிடக் கூடாது. வயதுக்கு ஏற்ற சரியான எடை இல்லையென்றால், அது சாதாரண ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் புற்றுநோய் வரை எதுவாகவும் இருக்கலாம். குடும்ப மருத்துவரை அணுகி, உடல் இளைத்தல், எடை குறைதலுக்கான காரணங்களை அறிந்துகொண்டு, உடனே தீர்க்க வேண்டியது அவசியம்.