Tuesday, June 28, 2016

வாழை மரம்

வாழை மரம்
Image result for வாழை மரம்
வெப்பம் மிகுந்த, ஈரமான காலநிலைகளில் வாழை மரங்கள் நன்றாக வளர்கின்றன. இதற்கான நிலப்பகுதியில் நல்ல நீர்ப்பாசன வசதி இருக்க வேண்டும்.

வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக் கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் பரவியது.


வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.

மேலும், வாழைப்பழக் கழிவுகள் காகிதமாக மாற்றப்படுகின்றன. வாழை வாழை இழைகளைக் கொண்டு பட்டுப் போன்ற மென்மையான துணிகள் நெய்யப்படுகின்றன.

ஜப்பானில் பாரம்பரிய கிமானோ ஆடைகளை உருவாக்கவும், நேபாளத்தில் கம்பளம் தயாரிக்கவும் வாழை இழைகள் பயன்படுத்தப்படுகின்றன

வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு வாழையடி வாழையாகத் தொடர்வது. இலை, தண்டு, பூ, காய் மற்றும் பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை.

இவை ஒவ்வொன்றின் சத்துக்கள் பற்றியும் யார் யார் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போமானால்.

வாழைப் பூ –

வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம்.

வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். செரிமானக் கோளாறு இருக்கும் போது வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

வாழைக் காய் –

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில் மாவுச்சத்து அதிகம் இருப்பதால் வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.

 வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம். வாழைக்காய் வறுவல் மற்றும் வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும்.

 செரிமானக் கோளாறு உள்ளவர்கள் மூட்டு வலி இருப்பவர்கள் உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.

வாழைப் பழம் –

அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது. குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம் இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.

சிலர் வாழைப் பழத்தை பால் தயிருடன் சேர்த்து மில்க்‌ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு. வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது.

 ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம்.

வாழைத் தண்டு –

உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை.

 சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கவும் அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது. வாரத்துக்கு நான்கு முறையாவது வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வாழைத் தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு அல்லது சீரகத்தூள் சேர்த்து வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம்.

 உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழை இலை –

வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு மற்றும் மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம்.

வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும்போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன. இதில் பாலிபீனால் இருப்பதால் நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது.

எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து தினமும் வாழை இலையில் உண்ணுவது சிறந்தது

வாழை – மருத்துவ பயன்கள்

வாழை –
மருத்துவ பயன்கள்

Image result for வாழை மரம்
வாழை மரத்தின் பெரும்பாலான பகுதிகள் நமக்கு பயனுள்ளவை. பூ, பிஞ்சு, காய் ஆகியவை துவர்ப்புச் சுவையைத் தூண்டும்; வெள்ளைபடுதலைக் கட்டுப்படுத்தும்.

தண்டு நீர், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.கட்டை, தண்டு ஆகியவை பித்தத்தைக் கட்டுப்படுத்தும்; சிறுநீரைப் பெருக்கும்.

இலை, பட்டை ஆகியவை குளிர்ச்சியுண்டாக்கும். பழம் உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; மலமிளக்கும்; உடலைப் பலப்படுத்தும்.

 வாழை இலையில் உணவு சாப்பிட உடல் ஆரோக்கியம் பெருகும். இரு ஒரு பாரம்பரியப் பழக்கவழக்கமாகும்.

வாழை மரத்தில் நீள்சதுர வடிவிலான பெரிய இலைகள் தண்டில் சுற்று அமைப்பாக வளர்ந்திருக்கும். இலைக்குருத்து, நீண்டு உருண்டவை. இலைக்காம்புப் பகுதி குறுகிய உறை போன்றது.

பூவடிச் செதில்கள், செங்கருநீலம். மலர்கள் ஒருபால் தன்மையானவை, மஞ்சரிக் கொத்தின் கீழே பெண் மலர்களும், மேலே ஆண் மலர்களும் காணப்படும். காய்கள், பெரிய குலையாக வளர்பவை.

கனி, சதைப்பற்றானது. வாழையில் பல வகைகள் காணப்படுகின்றன. அம்பணம், அரம்பை, கதலி போன்ற மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. தமிழகம் முழுவதும் உணவு உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.

எச்சரிக்கை

மூட்டுவலி உள்ளவர்கள் வாழைக்காயை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலமே பல நோய்கள் வருவதைத் தடுக்கலாம்.

வாழைத்தண்டு பொரியல், சாம்பார் செய்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடு நன்றாக இருக்கும், சிறுநீரகக் கற்கள் தோன்றாது; சிறுநீர் நன்றாகக் கழியும்.

ஒரு டம்ளர் அளவு வாழைப்பட்டைச் சாற்றைப் பாம்புக்கடி பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சையாகக உள்ளுக்கு அருந்த் கொடுக்கலாம்.

வாழைப்பழம் இரவில் சாப்பிட்டால் உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆகும்; மலச்சிக்கல் இருக்காது. நோயாளிகளின் உடல் தேற மிகவும் உகந்த பழமாகும்.

வாழை இலைக் குருத்தைத் தீப்புண்கள் மீது கட்ட வேண்டும். கொப்புளங்கள் இருந்தாலும் அவற்றின் மீது வைத்துக் கட்ட அவை மறையும்.

பிஞ்சு வாழைக்காய் கூட்டு செய்து சாப்பிட்டால் உடல் உறுதி அதிகரிக்கும். வயிற்றுப் புண்கள் மாறும்.

வாரம் ஒரு முறை வாழைக்காய் பொரியல், வறுவல் போன்றவை செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்; உடல் உறுதியாகும்.

துவரம் பருப்புடன் வாழைப் பூ சேர்த்து கூட்டுவைத்து சாப்பிட வேண்டும். பித்த நோய்கள் குணமாகும்; இரத்தம் விருத்தியாகும்.

வாழைப்பழம் தரும் சத்துகள்

ஈரம் : 61.3%

சர்க்கரை : 36.4%

புரதம் : 1.3%

கொழுப்பு : 0.2%

தாதுப்பொருட்கள் : 0.7%

சுண்ணாம்புச் சத்து : 0.01%

இரும்புச் சத்து : 0.04%

சிறுநீரகக் கற்கள் கரைய வாழைத்தண்டைச் சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் இரண்டு முறைகள் இவ்வாறு தொடர்ந்து செய்துவர வேண்டும்.

எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பது குணமாக வாழைத்தண்டு கிழங்குகளை, பொடியாக அரிந்து, இடித்துப் பிழிந்த சாறு ½ டம்ளர் அளவு, தினமும் இரண்டு வேளை சரியாகும் வரை குடிக்க வேண்டும்.
(அதிகமான அளவு எடுத்துக் கொண்டாலு ம் தினசரி எடுத்துக் கொண்டாலும் உடலில் கால்சியம் மற்றும் ரத்தக் குறைபாடு ஏற்படும் விகுந்த கவணம் தேவை)

அன்றாட வாழ்வில்

மருத்துவத்தில் மட்டுமின்றி வாழையின் எல்லா பாகங்களும் நமது அன்றாட வாழ்வில் பல வகைகளிலும் பயன்படுபவை ஆகும்.

முகம் பொலிவு பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் இலையில் சாப்பிடுவது மிகுந்த பயன் தரும். பண்டிகைகள், விழாக்கள், சடங்குகளின்போது, வாழை இலையில் பரிமாறப்படும் சாப்பாடே சிறப்பிடம் வகிக்கின்றது.

வாழைப்பழம், மிக முக்கியமான பழ வகையாகும், முக்கனிகளுள் ஒன்றாகும். பூசை, படையலிலும் வாழைப்பழம் இன்றி செய்யப்படும் சடங்கு முழுமை பெறுவதில்லை. நார் பூக்களையும், பூ மாலைகளையும் கட்டுவதற்கு பயன்படும் கயிறாகும்.

வாழை மரம் திருமணம், புனித காரியங்கள், புண்ணிய காரியங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் வாயிலில் கட்டப்படுகின்றது. பூ, பிஞ்சு, காய், தண்டு ஆகியவை நமது அன்றாட உணவு தயாரிப்பில் பயன்படுபவை

ரோஜா – மருத்துவ பயன்கள்

ரோஜா – மருத்துவ பயன்கள்
Image result for ரோஜா குல்கந்து

ரோஜா மலர்கள் காய்ச்சல், தாகம், ஓங்காளம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைபடுதல், ஆகியவற்றைக் குணமாக்கும்; மலமிளக்கும்; கழிச்சலை உண்டாக்கும்.

ரோஜா சிறுசெடி வகையைச் சார்ந்தது. ரோஜா கூர்மையான, வளைந்த முட்கள் நிறைந்த கட்டை போன்ற தண்டில் கூர் நுனிப் பற்கள் கொண்ட சிறகு அமைப்பான கூட்டிலைகளையும் நுனியில் இளஞ்சிவப்பு நிறமான நறுமணமுள்ள மலர்களையும் கொண்டது.


காடுகளில் இயற்கையாக வளரும் ரோஜாவும் உண்டு. இவை மணம் குறைந்ததாக இருக்கும். தமிழகமெங்கும் இதன் வாசனையுள்ள அலங்கார மலர்களுக்காகவும், மருத்துவ உபயோகங்களுக்காகவும் ரோஜா செடி பயிர் செய்யப்படுகின்றது.

ரோஜா மலர்களே மருத்துவப் பயன் கொண்டவை. ரோஜா பூக்களில் இருந்து அத்தர் எனப்படும் நறுமணம் பொருந்திய எண்ணெய் பெறப்படுகின்றது.

50 ரோஜா பூ இதழ்களை ½ லிட்டர் வெந்நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதில் 50 கிராம் சர்க்கரை சேர்த்து பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு 25 மிலி பன்னீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை மூன்று வேளையாகக் குடிக்க வெள்ளை படுதல் குணமாகும்.

10 கிராம் ரோஜா பூவை ½ லிட்டர் நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி வடிகட்டி சர்க்கரை சேர்த்து குடிக்க பித்த நோய் கட்டுப்படும்.

ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்.
புண்கள் குணமாக ரோஜா பூ இதழ்களிலிருந்து குடிநீர் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்.


ரோஜா குல்கந்து:

ஒருபங்கு ரோஜா பூ இதழ்களின் எடையோடு, இருபங்கு எடை கற்கண்டு சேர்த்துப் பிசைந்து, பசையாக்கி, சிறிதளவு தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைக்க கிடைப்பது ரோஜா குல்கந்து ஆகும்.

காலை, மாலை சுண்டைக்காய் அளவு ரோஜா குல்கந்து சாப்பிட்டுவர, மலச்சிக்கல், வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும். ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுவர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதியடையும்

ரோஜா குல்கந்து

ரோஜா குல்கந்து
Image result for ரோஜா குல்கந்து
குண நலன்கள்

பூக்களின் ராணி ரோஜா தான். அதன் அழகும் நறுமணமும் எல்லோரையும் கவரும். காதலர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வதும் ஒற்றை ரோஜா தான். ரோஜா மலர் மருத்துவ குணங்களும் நிறைந்தது.

பல வித வண்ணங்களில் கிடைக்கும் ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கி, கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது. ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்க என்று நீளும் ரோஜாவின் மருத்துவ பயன்களைப்பற்றி தனியாகவே எழுதலாம்.

இங்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் "குல்கந்து" டானிக்கைப் பற்றி பார்ப்போம். குல்கந்து கடைகளில் கிடைத்தாலும், நாமாகவே வீட்டில் தயார் செய்து கொள்வது உத்தமம். பல கலப்படங்கள் செய்யப்படுவதால், தரமான குல்கந்து கிடைப்பது கடினம்.
வீட்டிலேயே தயாரிக்கும் முறை

முறை 1

சிவப்பு ரோஜா இதழ்களை சேகரித்துக் கொள்ள வேண்டும். பல ரக ரோஜாப் பூக்கள் கிடைத்தாலு, குல்கந்து செய்ய சாதாரண ஒரிஜினல் ரோஜா விதை  என்ற ரகப் பூக்கள் தான் பொதுவாக பயன்படுகின்றன.

நல்ல, தரமான, நிறமுடைய நன்கு பூத்த, பெரிய பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும்.

இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.

சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும்.

இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

நன்றாக லேஹிய பக்குவம் வரும் வரை இடிக்கவும்.

இந்த லேகியத்தை ஒரு வாயகன்ற பீங்கான் / கண்ணாடி ஜாடியில் போடவும்.
ஜாடியில் போட்ட லேகியத்தின் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும்.

குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.

முறை 2

இந்த முறையில், சுத்தம் செய்யப்பட்ட இதழ்களுடன், அதே அளவு சர்க்கரை சேர்த்து, வாயகன்ற ஜாடியில் வைக்கவும்.
இந்த ஜாடியை தினமும் வெய்யிலில் 6-7 மணி நேரம் வரை 3 அல்லது 4 வாரங்கள் வைத்து வரவும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள், மரக்கரண்டியால், ஜாடியில் உள்ள சர்க்கரை + இதழ்களை நன்கு கிளறி விட வேண்டும்.

மூன்று / நான்கு வாரங்கள் கழிந்த பின், எடுத்துக் கொண்ட ரோஜா இதழ்களில் எடையில் 8 ல் 1 பாகம் எடை அளவில் பவழம் அல்லது முத்தின் களிம்பை சேர்க்க வேண்டும். இந்த களிம்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

கூடவே 8 ல் 1 பங்கு எடையில், ஏலக்காய் பொடி, வெள்ளி ரேக்கு (ஷிவீறீஸ்மீக்ஷீ யீஷீவீறீ) சேர்க்கலாம்.

இவற்றை சேர்த்த பிறகு ஜாடியை வெய்யிலில் வைக்க வேண்டாம். நன்றாக கிளறி, குல்கந்தை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

அளவு:-

சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை மாலை சாப்பிட்டு வரலாம்.

குல்கந்தின் பயன்கள்

1. உடலின் அதிக பித்த அளவை குறைத்து சீராக்குகிறது.

2. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

3. வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.

4. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி). தவிர குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.

 எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கிறார்கள் போலும்!

5. மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.

6. பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான டானிக் – மருந்து

7. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்

மருதாணி.

மருதாணி.
Image result for மருதாணி இலை
1) மூலிகையின் பெயர் -: மருதாணி.

2) தாவரப்பெயர் -: LAWSONIA INERMIS.

3) தாவரக்குடும்பம் -: LYTHRACEAE.

4) வேறு பெயர்கள் -:

மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி ஆகியவை.

5) தாவர அமைப்பு -:

மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும்,

இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதை வாசனைப் பொருளாகப் பயன் படுத்துகிறார்கள். பாக்கீஸ்தானில் அதிகம் உபயோகிக்கிறார்கள். இதன் பூர்வீகம் வட ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பரவியுள்ளது. இதன் இலைகளை 5 நாட்கள் நிழலில் உலர்த்திப் பயன்படுத்துவார்கள். இதை விதை மூலமும், கட்டிங் மூலமூம் இனப் பெருக்கம் செய்வார்கள்.

6) இதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள் -:

இலைகளில் க்ளூக்கோசைடு, லாசோம், சாந்தோம்கள் லாக்ஸ் தேன்கள் I,II, மற்றும் III. இதன் விதைகளில் பீட்டா ஐநோனோன் போன்ற வேதிய்ப் பொரிட்கள் உள்ளன.

7) பயன்படும் பாகங்கள் -:

இலை, பூ, காய்,வேர் மற்றும் விதை போன்றவை.

8) மருத்துவப் பயன்கள் -:

 மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.

கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.

மேகநோய் -:

பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.

தோல் நோய் -:

 மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள் -

ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர -:

இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.

 நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

உறக்கமின்மை :

தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

பேய் பூதம் -:

 "மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும்.

இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும்.

கரப்பான் புரகண் -:

பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும்.

 இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும்.

கால் ஆணி -:

இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

படைகள்- :

கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும்.

 வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

நாட்டுமருந்து Whatsaap 9787472712

மருதாணி – மருத்துவ பயன்கள்

மருதாணி – மருத்துவ பயன்கள்

மருதாணி பொதுவாக வெப்பத் தன்மையும் துவர்ப்புச் சுவையும் கொண்டது. மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும்; இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் பண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும்.

மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும்; மருதாணி பூக்களைச் சேகரித்து உலர்த்தி தலையணை போல் செய்து படுத்து வர நல்ல தூக்கம் உண்டாவதுடன், தலைப் பேன்களும் குறையும்.

மருதாணி புதர்ச்செடியாகவோ, குறுமரமாகவோ காணப்படும். நடுத்தரமான அல்லது பெரிய அதிகமான கிளைகளுடன் கூடிய தாவரமாகும். மருதாணி இலைகள் ஈட்டி வடிவமானவை. நான்கு கோணங்களுடன் எதிர் எதிராக 2-3 செமீ நீளத்தில் அமைந்திருக்கும்.

மருதாணி மலர்கள், சிறியவை. வெண்மை, இள மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு நிறமானவை. மணம் கொண்டவை. பெரிய நுனிக் கொத்துகளில் தொகுப்பாகக் காணப்படும்.

மருதாணி பழங்கள் சிறியவை. பட்டாணி அளவில் பல விதைகளுடன் காணப்படும். அழகுக்காகவும், அதன் மருத்துவ உபயோகங்களுக்காகவும் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன.

மருதோன்றி, ஐனாஇலை, ஐவனம், அழவணம் ஆகிய பெயர்களும் மருதாணி தாவரத்திற்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

மருதோன்றி இலைகளை மைய அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதனை தேவையான அளவு தேங்காய் எண்ணெயில் போட்டு 21 நாள்கள் வெயிலில் வைத்து பின்னர் வடிகட்டி பத்திரப் படுத்த வேண்டும். இந்த எண்ணெயைத் தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

6 தேக்கரண்டி அளவு புதிதாக சேகரித்த மருதாணி இலைச் சாற்றை வெறும் வயிற்றில் காலை வேளைகளில் குடிக்க வேண்டும். 10 நாள்கள் வரை இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை படுதல் குணமாக்கும்.

மருதாணி இலைகளுடன் சிறிதளவு பாக்கு சேர்த்து அம்மியில் அரைத்து இரவில் கை, கால் நகங்களின் மீது வைத்து, காய்ந்த பின்னர் உறங்கி காலையில் கழுவ வேண்டும். இவ்வாறு 15 நாள்களுக்கு ஒரு முறை செய்து வர நகம் சொத்தையாவது அழுக்குடன் பளபளப்பு இல்லாமல் இருப்பது ஆகிய பிரச்சனைகள் தீரும். மேலும் நகம் தொடர்பாக ஏற்படும் எந்த நோயானாலும் தடுக்கப்படும்.

மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.

சிறிதளவு மருதாணிக் கொழுந்தை நீரில் இட்டு ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரம் ஊறிய பின்னர் இந்த நீரைக் கொதிக்க வைத்து கஷாயம் செய்து கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தால் வாய் கொப்பளிக்க வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் தீரும்.

மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக பாரம்பரிய மருத்துவத்தில் இன்றும் இருந்து வருகின்றது.

மருதாணி விதை எண்ணெயை உடலில் தடவ உடல் எரிச்சல் குணமாகும். மருதாணி இலைகளை அரைத்து பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

மருதாணி இலை மற்றும் மலர்கள் குஷ்ட நோய்க்கு மருந்தாகப் பயன்படுகின்றன. இந்த தகவல்கள் மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
Image result for மருதாணி இலை
நாட்டுமருந்து  Whatsaap: 9787472712

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…


Image result for ரோஜா பூ படங்கள்
1.ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன. இதனைத்
தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து
பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு
நிறத் திட்டுக்கள் மறையும்.

2. கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது. வெயில்
காலங்களில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன்
பசும்பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த
நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை
பாதுகாக்க முடியும்.

3.முகம் பொலிவு அடைய, அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக்
போட்டு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ
வேண்டும்.அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக்
கை, கால்களிலும் போட்டுக்கொள்ளலாம்.

4. உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும்
பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள்
அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும்.
தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ்,
ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.

5.ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும்
நறுமணம் வீசும், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!

முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!
இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தையை கேட்டு அதற்கு
Image result for முருங்கை மரம்
 தவறுதலான அர்த்தம்கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு  பூ, காய், இலை, பிசின்,ஆகியவை கிடைக்கிறது.

இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும்
ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய மூலிகைப் பொருள்கள்

 இவைகளை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதையே

 முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே

 நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?.....