Wednesday, March 30, 2016

 ⁠⁠⁠நவபாஷாணம் என்றால் என்ன? இரகசியங்களும், உண்மை தகவல்களும் !! ⚽ .....( கண்டிப்பாக #படிக்கவும் )

நவம் என்றால் ஒன்பது, #பாஷாணம் என்றால் விஷம். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்கள். சித்தர்கள் முறைப்படி #ஒன்பது #விஷங்களை சேர்த்துக் #கட்டுவது தான் நவபாஷாணம் ஆகும். பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளனவாம் ‼ ......
 இதில் #நீலி எனும் ஓர் பாஷாணமும் உண்டு. இந்த நீலி மற்ற 63 பாஷாணங்களை  செயலிழக்க வைக்கக் கூடிய #தன்மையுடையது ‼..... நவபாஷாணம் என்று கூறப்படும் இந்த ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக #வேதியல், #இயற்பியல் பண்புண்டு 👍 .......

⚽ | நவபாஷாணம் | ⚽

🌻 சித்தரியல் முறைப்படி #அணுக்களைப் பிரித்து, மீண்டும் #சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்கிறார்கள். இதில் அடங்கியிருக்கும் ஒன்பது பஷாணங்கள்:

k1 .... சாதிலிங்கம்
2 .... மனோசிலை
3 .... காந்தம்
4 .... காரம்
5 .... கந்தகம்
6 .... பூரம்
7 .... வெள்ளை பாஷாணம்
8 .... கௌரி பாஷாணம்
9 .... தொட்டி பாஷாணம்

⚽ | நவக்கிரக தன்மை | ⚽

🌻 இந்த நவ பாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் #குணங்கள் ஒத்துள்ளன என்று கூறப்படுகிறது. .நவபாஷாண கட்டு என்பது #சித்தர்களால் மட்டுமே சாத்தியமான விஷயமாகும் 😨 !!

⚽ | நவக்கிரக சக்தி | ⚽

🌻 நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ ⛄ சிலைகள், நவக்கிரகங்களின் #சக்தியை #பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும் !! 💍 👍

⚽ | தமிழ்நாட்டில் நவபாஷாண சிலைகள் | ⚽

🌻 தமிழ் நாட்டில் #மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. 💎 #பழனி #மலைக்கோவில், 💎 கொடைகானல் அருகே உள்ள #பூம்பாறை, 💎 #குழந்தை #வேலப்பர் கோயில். மற்றொன்று #தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

நவபாஷாண சிலைகள் உருவாக்கியாவர்கள் | ⚽

🌻 மூன்றில் இரண்டு சிலைகள் #போகர் 😨 உருவாக்கியவை என்றும் தேவிப்பட்டிணத்தில் இருக்கும் மற்றொன்றை யார் உருவாக்கினர் என்பது தெரியவில்லை ❗ என்றும் கூறப்படுகிறது.

நவக்கிரக தோஷம் கழியும் | ⚽

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழிப் படுபவர்களுக்கு #நவக்கிரகங்களால் ஏற்படும் தீங்கு நீங்கும் ❗.... பழனிமலை #தண்டாயுதபாணியை வழிப் படுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்  👍 என்று கருதப்படுகிறது.

 நோய் தீர்க்கும் மருந்து | ⚽

🌻 பழனி முருக #திருவுருவத்திற்கு #அபிஷேகம் செய்த நீரை / தீர்த்தம் பருகுவதால் (அ) சாப்பிட்டால் 🌻 தீராத நோய்களும் கூட தீர்ந்துவிடும் 🌻 என்று கூறப்படுகிறது .... 👍

மலர்களும் மருந்தாகும்

மலர்களும் மருந்தாகும்
இலுப்பைப் பூ
இலுப்பை பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும்.
ஆவாரம் பூ
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்
.
அகத்திப்பூ
அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு நீங்கும்.
நெல்லிப்பூ
உடலுக்கு குளிர்ச்சி, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயம் வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச் சிக்கலுக்கும் இது உகந்தது.
மகிழம்பூ
மகிழம்பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைப்பாரம் போன்ற நோய்கள் நீக்கிவிடும்.
தாழம்பூ
இந்தப் பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் வேறு எந்தக் கிருமிகளும் நெருங்காது. இதுதவிர இருதயத்திற்கு வலிமையூட்டி உடலுக்கு வனப்பையும் அதிகரிக்கும்.
செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.
ரோஜாப்பூ
இந்த மலரின் மணம் மனதிற்கு மட்டுமின்றி, இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது. பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும் மலர் இது.
வேப்பம்பூ
சிறந்த கிருமி நாசினி இது. இந்தப் பூ வீட்டில் இருந்தால் சின்னஞ்சிறு கிருமிகள் ஓடிவிடும். உடல் குளிர்ச்சிக்கு ஏற்றது இது.
முருங்கைப்பூ
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும் தன்மையுடையது. வயிற்றில் உள்ள கிருமியை ஒழிக்க கூடியது.
மல்லிகைப்பூ
கண் பார்வையை கூர்மையாக்கும் சக்தி இதற்கு உண்டு. காம உணர்ச்சிகளை தூண்டும் தன்மை உண்டு. கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
கருஞ்செம்பை பூ
இந்தப் பூவையும், நல்லெண்ணையும் சேர்த்துக் காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும். தலை பாரம், தலை வலி, கழுத்து நரம்புவலி போன்றவையும் நீங்கும்.
குங்குமப்பூ
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒருவேளைக்கு 5 முதல் 10 இதழ்களை இரவு பசும் பாலில் போட்டு காய்ச்சி குடித்துவர சீதள சம்பந்தமான நோய்கள் நீங்கும். பிறக்கின்ற குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கவும் குங்குமப்பூ உபயோகப்படுகிறது.

Tuesday, March 29, 2016

மஹா மூலிகை நத்தைச் சூரி
நத்தைச் சூரி விதையை புறாவும் , காடையும் , கவுதாரியும் , குருவியும் இதை சாப்பிடுவதால் அவற்றுக்கு போக சக்தி மிக அதிகமாக இருக்கிறது.உடலை மிக அதிகமாக இறுக்கும்.உடல் இரும்பு போல ஆகும்.ஒரு மண்டலம் இச்சா பத்தியத்துடன் இருக்க அதிக பலமுண்டாகும்.விந்தை ஸ்தம்பனம் செய்ய உதவும்.இதனால் நூறு பெண்கள் வந்தாலும் இந்திரிய ஸ்கலிதம் ( விந்து நஷ்டம் ) இல்லாமல் , நூறு பெண்களையும் திருப்தி செய்யலாம். ஏனெனில் விந்து ஞானத்துக்கு மிக முக்கியம்.
இதன் சக்தியை விளக்க ஒரு சிறிய பரிசோதனை செய்து அதை படமாக எடுத்து இங்கே போட்டுள்ளேன்.என்னிடம் இந்த அளவு சக்தியுள்ள ஐ போனில் உள்ள காமிராதான் இருக்கிறது.எனவே படத்தில் இந்த அளவுதான் தெளிவாக எடுக்க முடிந்தது. ஒரு ஒளிக்காட்சி எடுக்க அந்தக் காட்டில் எங்களிடம் வேறு வசதிகள் இல்லை.
நத்தைச் சூரி வேரை வாயில் போட்டு மென்று கொண்டு சாறை நன்றாக மென்று விழுங்கிய பின் கண்ணில் மண்ணைப் போட்டால் கண் உறுத்தாது.கண் அறுகாது . நத்தைச் சூரியினால் கண் பலம் பெற்று விடுவதனால் இந்தளவு இதன் சக்தி வெளிப்படுகிறது


மஹா வில்வம்


Monday, March 28, 2016

புதினாவில், வைட்டமின்-பி, இரும்புச்சத்து அதிக அளவு இருக்கின்றன.


பசியைத் தூண்டுவதற்கு புதினாகீரை பெரிதும் உதவும். சிறுநீரைப் பெருக்கும், வாயுப் பிரச்னையை நீக்கும்.
சுவையின்மைப் பிரச்னையால் அவதிப்படுபவர்களும் வாந்தி வரும் உணர்வு இருப்பவர்களும், புதினாவை துவையலாகச் செய்து சாப்பிடலாம்.
புதினாவுடன் உலர்ந்த பேரீச்சம்பழம், மிளகு, இந்துப்பு, உலர்ந்த திராட்சை, சீரகம் சம அளவு சேர்த்து, எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து அரைத்துக்
கொள்ள வேண்டும். இதை, உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். காய்ச்சலின் போது ஏற்படும் வாய் கசப்பைப் போக்கும். ருசியை உணரவைக்கும்.  
புதினாவை நிழலில் காய வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் சமயங்களில், உலர்ந்த புதினா ஒரு கைப்பிடி எடுத்து, ஒன்றரை லிட்டர் நீர் சேர்த்து, கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்ச வேண்டும். இந்த நீரை, மூன்று, நான்கு மணி நேர இடைவேளையில் 30 - 60 மி.லி குடித்துவந்தால், காய்ச்சல் சரியாகும்.
புதினாவுடன் கற்பூர புல்லை சம அளவு சேர்த்துக் காய்ச்சி, குடிநீர் தயார் செய்து அருந்தினால் தலைவலி, வாந்தி, காய்ச்சல் குணமாகும். சிறுநீர் நன்றாகப் பிரியும். நல்ல உறக்கமும் உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியைப் போக்கும்.
ஈரில் ரத்தம் வடிதல் பிரச்னை சரியாகவும், வாய் துர்நாற்றத்தை  போக்கவும், புதினா இலையை, நிழலில் காயவைத்துப் பொடித்து, பற்பொடியாகப் பயன்படுத்தலாம். 
புதினா இலையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், பெப்பர்மிண்ட் தைலத்தை போல இருக்கும். ஆனால், காரம் குறைவாக இருக்கும்.  இந்த எண்ணெயைத் தலைவலி வந்தால் தடவலாம். இந்த எண்ணெயை, சிறிதளவு நீரில் கலந்து உட்கொள்ள வயிற்றுவலி, வயிறு மந்தம் நீங்கி நன்றாகப் பசி எடுக்கும்.
புதினாவின் வாசனைக்கு, கொசுக்களை விரட்டும் தன்மை உண்டு.  எனவே, வீட்டில் புதினா செடிகளை வளர்க்கலாம்.
புதினா கீரை சாற்றுடன் சிறிது தேன் கலந்து, தலையின் பக்கவாட்டில் தடவ, தலைவலி நீங்கும்.
தலைவலி, மூட்டு வலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு பூசப்படும் களிம்புகளிலும் செரிமானக் கோளாறுகள், இருமல் ஆகியவற்றுக்கான மருந்துகளிலும் புதினா எண்ணெய் சேர்க்கப்படுகிறது

கர்ப்பத்தடை நீக்கும் கல்யாண முருங்கை

இய‌ற்கை வைத்தியம்
கிராமப்புறங்களில், வேலி ஓரங்களில் வளரும் கல்யாண முருங்கைக்கு எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உண்டு.
 சென்னை, மாதவரம் பால் பண்ணையை அடுத்தக் காட்டுப் பகுதியில் கல்யாண முருங்கை மரங்கள் நிறைய உண்டு.
''இந்த ஊர்ல யாருக்கு குழந்தை பிறந்தாலும் தலையில தண்ணி ஊத்தி நான்தான்  குழந்தையை  முதல்ல குளிப்பாட்டுவேன்'' என்று பெருமிதப்படும் நாகபூஷணம் பாட்டி, கல்யாண முருங்கையின் பயன்களைப் பட்டியல் போட்டார்.
''இன்னொரு உசுரை உருவாக்குற பொம்மனாட்டிகளுக்கு இந்த மரம் சாமி கொடுத்த வரம். கன்னிப் பொண்ணுகளுக்கு மாதவிடாய் காலத்துல வவுத்து நோவு, உதிரப்போக்குனு நிறைய வலி இருக்கும். சிலருக்கு வரவேண்டிய  நாள்ல மாதவிடாய் வராமக் கஷ்டப்படுத்தும்.  இது மாதிரியான பிரச்னை உள்ளவங்க கல்யாண முருங்கை இலையைக் கசக்கி சாறெடுத்து மாதவிடாய் வருவதற்கு முன்னாடி மூணு நாள், வந்ததுக்கு அப்புறம் மூணு நாள் காலையில வெறும் வயித்துல இந்தச் சாறைக் குடிக்கணும்.
இந்த வைத்தியத்தை தொடர்ந்து மூணு மாசம் செஞ்சு வந்தா, குழந்தைப்பேறு இன்மைகூட நீங்கி கரு தங்கும். இப்படி குழந்தைப் பாக்கியத்துக்கு உத்தரவாதமா இந்த மரம் இருக்கிறதால, இதை அரச மரத்துக்குச் சக்களத்தின்னும் செல்லமாச் சொல்லுவாங்க!'' எதார்த்தமாய் பேசினார் மாதவரம் நாகபூஷணம் பாட்டி!
'கல்யாண முருங்கை குழந்தைப்பேறு அளிக்குமா?’ - ஆச்சர்யக் கேள்வியை சித்த மருத்துவர் மோகன ராஜிடம் கேட்டோம்.
''நிச்சயமா! குழந்தைப் பேறுக்கு இந்த மரம் ஒரு வரம்! இந்த மரத்து இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் 

வயிற்றில் குடித்துவந்தால் பெண்களுக்கு கருத்தரிப்பது தொடர்பான தடைகள் நீங்கி கருமுட்டை அதிக அளவில் உற்பத்தியாகும். இந்த மரத்தின் இலையை நறுக்கி, அதோடு வெங்காயம், தேங்காய் மற்றும் நெய் சேர்த்து வதக்கி அரைத்து ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிட்டு வந்தால், நன்றாகத் தாய்ப்பால் சுரக்கும். இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக் குளித்தால், சொறி, சிரங்கு குணமாகும்.
சளி, வயிற்றுப் பூச்சித் தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு இந்த இலையுடன் கல் உப்பை சேர்த்து அரைத்துக் கொடுக்க, வாந்தி வாயிலாகவும், காலைக்கடன் கழிக்கும்போதும் கிருமி, சளி வெளியேறிவிடும்.
இந்த இலைச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், உடல் பருமனும் குறையும். இதனுடைய பட்டை பாம்புக் கடிக்கு நல்ல மருந்து!'' என கல்யாண முருங்கையின் மகத்துவங்களை விவரித்தார்.
தோட்டத்துக்கு மட்டும் அல்ல... மக்களின் வாட்டம் நீக்கவும் கைகொடுக்கும் மகத்தான மரம் கல்யாண முருங்கை!

Sunday, March 27, 2016

விரைகள் எங்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள


நாங்கள்தான் விரைகள் பேசுகின்றோம். எங்களைப் பற்றி இந்த ஆண்களுக்கு எப்போதுமே இரண்டு விதமான எண்ணம், ஒரு புறம் அவர்களது ஆண்மையின் அறிகுறி என்று எங்களைச் சொல்வார்கள். மறுபுறம் எங்களைப் பற்றிய பேச்சை எடுக்கவே வெட்கப்படுவார்கள். இந்த இரட்டை வேஷத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உடலில் உள்ள வேறு எந்த உறுப்புக்கும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப்புக்கள் பலரினும் நாங்கள் இளைத்தவர்கள் இல்லை. சொல்லப் போனால் எங்கள் சக உறுப்புக்கள் பலரினும் நாங்கள் மேம்பட்டவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அது எப்படி என்றா கேட்கிறீர்கள். நாங்கள் மட்டும் இல்லையென்றால் நீங்கள், உங்கள் மூதாதையர்கள் எவருமே இருந்திருக்க முடியாது. மனித இனமே தொடர்ந்திருக்க முடியாது.

இந்த விதத்தில் இயற்கை உங்களை விடக் கெட்டிக்காரத்தனமாக இருந்திருக்கிறது. அதனால் பெரும்பாலான சுரப்பிகளிலும் ஒன்றைப் படைத்தது எங்களில் மட்டும் இரண்டைப் படைத் திருக்கிறது. இன்னொரு கஷ்டம் என்னவென்றால் எங்களைப் பற்றிப் பேச்செடுக்கின்ற போதெல்லாம் செக்ஸ் பற்றிப் பேசுவதாகப் பலர் நினைக் கிறார்கள். செக்ஸ்க்கு மட்டும்தானா நாங்கள் உதவு கின்றோம் ? எத்தனை எத்தனை வேதி மாற்றங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் நாங்கள் செய்கிறோம். பெண் குழந்தையைப் போல் பேச்சும் உருவமும் கொண்டிருந்த சிறுவனை ஆண்மகனாக ஆக்கியதும் நாங்கள் தான். அவர்களது முதுமைக் காலத்தில் தொல்லை தராமல் இருக்க வேண்டியவர்களும் நாங்கள் தான். இது தான் எங்களைப் பற்றிய அடிப்படை விவரம். மீதியை இதோ இருக்கின்ற இடது விரை சொல்லுவான்.

நான்தான் இடது விரை (left Testis). பார்ப்பதற்கு நான் ஒன்றும் அவ்வளவு குரூபி அல்ல. ஓவல் வடிவில், கோதுமை நிறமும், பளபளப்பும் கொண்ட எனது எடை சுமார் 4 கிராம், நீள் வாட்டில் 4 செ.மீ. நீளமுள்ள எனது குறுக்களவு 2 செ.மீ. ஆகும்.

எனக்கு இடப்பட்ட பணி இருவகைப் படும். இனப்பெருக்கத்திற்கு உதவுகின்ற விந்தணுக்களை (Sperm) உற்பத்தி செய்வது ஒன்று, ஆண்மைக்கு அடித்தளம் அமைக்கின்ற டெஸ்ட்டோஸ்டீரான் (Testosterone) என்னும் ஹார்மோ னைச் சுரப்பது மற்றொன்று. இந்த ஹார்மோன் தான் உடல் தசைகள் ஓங்கி வளரவும், திசுக்களும், எலும்புகளும் திறன் பெறவும் உதவுவது. இந்த ஹார்மோன் இல்லா விட்டால் ஆண் களுக்கு மனத் துணிவும், வேகமும் குறைந்து போவதுடன் அவர்கள் பெருமையடித்துக் கொள்ளும் மீசையும் தாடியும் வளராமல் போய் விடும்.

இயந்திரத்தை ஒத்தவன் நான். என்னைப் போல் பிற உறுப்புகள் செயல்படுவதென்பது மிகக் கடினம். மிக மெல்லிய பட்டு இழை (Silk thread) பார்த்திருக்கிறீர்களா ? அது போல் 30 முதல் 40 செ.மீ. நீளம் உள்ள மென்மையான ஆயிரம் சிறுகுழாய்கள் என்னுள்ளே இருக்கின்றன. இவைகள் அனைத்தும் தங்கள் உற்பத்திப் பொருளை 6 மீட்டர் நீளமுள்ள குழாயில் கொண்டு வந்து சேர்க் கின்றன. இந்தக் குழாய்களின் அமைப்பில் தான் நான் நாளொன்றுக்கு 5 கோடி விந்தணுக்களை உற்பத்தி செய்கிறேன். அதாவது ஒவ்வொரு இரண்டு மாதங்களிலும் உலக மக்கள் தொகைக்கு ஈடான விந்தணுக்களை உண்டாக்குகின்றேன்.

இவற்றில் ஒன்றோ, இரண்டோ அல்லது மூன்றோதான் தற்போதைய ஆணின் வாழ்வில் தேவைப்படக்கூடும். அப்படியானால் கோடிக் கணக்கான விந்தணுக்கள் ஏன் உற்பத்தி செய்யப்பட வேண்டுமென்றுதானே கேட்கிறீர்கள்? உலகம் தோன்றிய காலத்தில் இனப்பெருக்கம் அவ்வளவு எளிதாக இல்லை. அதை ஈடு செய்வதற்காக இயற்கை செய்த தந்திரம். இது. அறிவியல் முன்னேற்றம் மிகுந்திருக்கும் இக்காலத்தில் இது அனாவசியம் என்று தோன்றுகிறது.

இந்தக் குழாய் அமைப்பு (Duct system) தவிர என்னுள்ளே கோடிக்கணக்கான லேடிக் (Leydig) செல்களும் உள்ளன. டெஸ்ட்டோஸ் டீரான் என்னும் ஆண் ஹார்மோனை சுரக்கின்றவை இந்தச் செல்கள்தான். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இந்த ஆண்மை ஹார்மோன் பெண்கள் உடலிலும் சுரக்கிறது. ஆண்களிடம் சுரக்குகின்ற இந்த ஆண் ஹார்மோனில் 20-ல் ஒரு பங்கு அவர்களது மனைவியர்களின் இரத்த ஓட்டத்தில் இருக்கிறது. இதை அட்ரீனல் சுரப்பி சுரக்கின்றது. இது இல்லாமல் போகுமானால் பெண்களுக்கு உடலுறவில் விருப்பம் இன்றிப் போய்விடும். அது மட்டுமன்றி ஆண்தன்மை அதிகரிக்கவும் கூடும்.

ஆண் குழந்தை தாயின் கருப்பையில் இருக்கின்ற போது நாங்கள் குழந்தையின் உடலுக்குள் இருப்போம். குழந்தை பிறக்க இரண்டு மாதங்கள் இருக்கும் போது மெதுவாக இறங்கி வெளிப்படுவோம். நாங்கள் மாத்திரம் இறங்கி வெளியே வராமல் உள்ளே தங்கிவிடுவோ மானால் அந்தப் பையன் மலடாகி விடுவான். அதன் காரணத்தைக் கேட்டால் ஆச்சரியப் படுவீர்கள்.

மனிதர்களின் உடலின் இயல்பான வெப்பம் (Normal temperature) 98.60 பாரன்ஹீட் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த வெப்பத்தில் என்னால் விந்தணுக் களை உற்பத்தி செய்ய முடியாது. எனது வெப்பம் உடல் வெப்பத்தை விட 3 டிகிரி குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் என்னால் செயல் பட முடியும். இதற்காகவே என்னைச் சுற்றி ஒரு ஏர் கண்டிஷன்ட் அமைப்பே உள்ளது. உடலுக்கு வெளியே ஒரு குளிர்ந்த பையில் நாங்கள் தொங்க விடப்பட்டிருக் கிறோம். இந்தப் பையில் ஏராளமான வியர்வைச் சுரப்பிகள். இவைகள் ஈரப்பசையை ஆவியாக்கி எங்களைக் குளிர்ந்த நிலையில் வைக்க வல்லவை. ஆண்கள் வெந்நீரில் குளிக்கும் போது நாங்கள் விரைந்து கீழே இறங்கிவிடுவதன் காரணம் அந்த வெப்பத்தை எங்களால் தாங்க இயலாது. இப்போது புரிகிறதா ஏன் நம் முன்னோர்கள் ஈரக் கோவணம் கட்ட வேண்டுமென்று சொன்னார்கள் என்று.


நாங்கள் உற்பத்தி செய்கின்ற விந்தணுக்கள் மிக விந்தையானவை. உடலிலேயே மிகச்சிறிய செல்கள் அவை தான். சக்தி மிக்க உருப்பெருக்கியின் மூலம் பார்த்தால் இந்த விந்தணுக்கள் தவளையின் தலைப்பிரட்டை (Tadpote) வோல் தலையும் வாலும் கொண்டு இருக்கும். இந்த வாலைச் சுழற்றி சுழற்றி அவை நகர வல்லவை.

இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு. உடலிலுள்ள செல்கள் ஒவ் வொன்றிலும் 46 குரோமோசோம்கள் இருக்கின்ற போது இந்த விந்தணு செல் களில்மட்டும் 23 குரோமோசோம்கள் தான் இருக்கும். அதாவது மீதி 23 குரோமோ சோம்கள் பெண் முட்டையிடும் இருந்து பெறப்பட வேண்டும் எனது விந்தணுக் களில் ஆண் குழந்தையை உண்டுபண்ணும் ‘வ’ குரோமோசோம்களும், பெண் குழந்தையை உண்டு பண்ணும் ‘ல’குரோமோசோம்களும் உள்ளன. ஆனால் பெண்ணின் முட்டையில்

‘X’குரோமோ சோம்கள் மட்டுமே இருக்கும். எனது விந்தணுவிலுள்ள ‘y’ குரோசோம் முட்டை யோடு இணைக்கின்ற போது ‘XY’ குரோசோம் ஆக உருப்பெற்று ஆண் குழந்தை உண்டாகிறது. அவ்வாறின்றி ‘X’ குரோம்சோம் முட்டையுடன் இணைக்கின்ற போது ‘XX’ குரோம்சோம் உடைய பெண் குழந்தை உண்டாகிறது. எனவே ஆண் குழந்தை பிறப்பதற்கும் பெண் குழந்தை பிறப்பதற்கும் ஆண்களின் விந்தணுவே காரணமேயின்றிப் பெண்கள் காரணமில்லை.

இது தவிர குரோம்சோம்களிலுள்ள ஜீன் களின் மூலமாகவே மரபுப் பண்புகளும், சிறப்பியல்புகளும் குழந்தைகளுக்குச் செல்கின்றன.

ஒரு மணிநேரத்தில் 18 செ.மீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்த விந்தணுக்கள், ஒரு முட்டையைச் சூழ்ந்து கொண்டு உள்ளே செல்ல முயல்வது ஒரு அரிய விந்தையாகும். முட்டையின் கடினமான ஓட்டினை நான் சுரக்கின்ற ஒரு நொதியின் துணை கொண்டு மென்மையாக்கி உள்ளே நுழைய முயல்கின்ற கோடிக்கணக்கான விந்தணுக்களில் ஒன்று தான் வெற்றியடையக் கூடும்.

விந்து வெளியேறுவது நீண்ட நாட்களுக்குத் தடைப்படுமாயின் விந்தணுக்கள் அனைத்தும் காலம் முதிர்ந்து இறக்க நேரும். அவ்வாறின்றி அடிக்கடி வெளியேற்றப் படுமானால் முதிர்ச்சி இல்லாத நிலையில் வெளியாகும் அவைகளால் முட்டையைக் கருவுறச் செய்ய இயலாது போகும்.

அடுத்தடுத்து விந்து வெளியேற்றப் படுகின்ற போது (நாளொன்றுக்கு இரண்டு முறை வீதம் பத்து நாட்களுக்கு) விந்து நீர்மமாக (Watery) ஆவதுடன், அதில் விந்தணுக்களே இல்லாமலும் போகலாம். அவ்வளவு விரைவாக என்னால் உற்பத்தி செய்ய முடியாது. மணமாகிச் சில காலம் குழந்தை இல்லாத தம்பதியர் அடிக்கடி உடற்சேர்க்கையில் ஈடுபட்டால் குழந்தை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று தவறாக எண்ணுவதுடன் அதைச் செயல்படுத்தவும் முனைகின்றனர். மாறாக ஓரிரு வாரங்கள் இடைவெளி விட்டுச் சேர்க்கையில் ஈடுபடு வார்களானால் குழந்தை உருவாகப் பெரிதும் வாய்ப்புண்டு.

சாதாரணமாக ஒரு முறை விந்து வெளி யாகும் போது சுமார் 60 கோடி விந்தணுக்கள் வெளியேறுகின்றன. ஆண்களின் புராஸ்டேட் என்னும் உறுப்பிலிருந்தும், (Prostate) செமினல் வெசிகில் (Seminal Vesicle) என்னும் உறுப்பிலிருந்தும் சுரக்கின்ற சுமார் 5 மி.லி. நீர்மப் பொருளில் இந்த விந்தணுக்கள் மிதக்கவிடப்பட்டுள்ளன. இந்த நீர்மம் மிதவையாக மட்டுமன்றி, விந்தணுக்களுக்கு உணவாகவும் சர்க்கரை, புரதம் மற்றும் கனிமப் பொருள்கள் மிகுதியாக உள்ளன.

சிறுவர்கள் 14 வயது அடைகின்ற வரை நாங்கள் அமைதியாக அடங்கிய நிலையில் இருப்போம். அதன் பின்னர் மூளையில் அமைந்துள்ள பிட்யூட்ரி சுரப்பி எங்களுக்குச் சமிக்ஞைகளை அனுப்பி எங்களைச் செயல்பட வைக்கிறது. இந்தப் பிட்யூட்ரி ஹார்மோன்களில் ஒன்று, விந்தணுக்களை உற்பத்தி செய்யவும் மற்றொன்று டெஸ் டோஸ்டீரான்கள் சுரக்கவும் தூண்டுகிறது.

இந்த டெஸ்ட்டோஸ்டீரான் ஒரு வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone). இந்த நீர்மத்தில் செயல்பாட்டினால்தான் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் சிறுவர்கள் விரைந்து வளர்ந்து, குரல் தடித்து, மீசை அரும்பி இளைஞர்களாக மாறுகின்றனர். அது மட்டுமன்றி, அவர்களது மனப்பாங்கும் மாறுகிறது. தன்னம்பிக்கையும் துணிவும் உண்டாகிறது.

செக்ஸ் எனப்படும் பாலுணர்வுக்கு மட்டும் எனது ஹார்மோன்கள் பயன்படு கின்றன என நினைப்பது தவறு. டெஸ்ட்டோஸ்டீரான் (Testostrone) இல்லாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போகும். உணர்வுகள் மாறுபடும். சினமும், ஆத்திரமும் தூக்கமின்மையும் ஏற்படும். மாதவிலக்கு நிற்கின்ற நேரத்தில் பெண்களுக்கு ஏற்படுவது போன்ற படபடப்பும் எரிச்சலும் ஏற்படும்.

ஒரு ஆணுடைய 25 முதல் 35 வயது வரை நாங்கள் மிகச் சிறப்பாக வேலை செய்து அதிக அளவு ஹார்மோனை சுரக்கிறோம். 45 வயதுக்கு மேல் இது படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கிறது. 60 வயதை எட்டும் போது சுரப்பு கணிசமாகவே குறைந்து விடுகிறது. என்றாலும் அடிப்படைத் தேவைகளுக்கான அளவு சுரப்பு இருக்கும்.

ஆணுக்கு 90 வயது ஆனாலும், நாங்கள் விந்தணுக்களை உற்பத்தி செய்து கொண்டுதான் இருப்போம். ஆனால் தேவையான அளவில் இல்லாமல் இருக்கலாம். வெளியே இருந்து ஹார்மோன் எடுத்தால் உதவியாக இருக்குமா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அது அவ்வளவு தூரம் வெற்றியடைந்ததாகத் தெரியவில்லை. இது தவிர எனக்காக எந்தப் பாதுகாப்பும் தேவையில்லை. இயற்கையில் நீங்கள் நல்ல உடல் நலம் உடையவராய் இருந்தால் மட்டும் போதும். நாங்கள் எங்கள் பணியைச் செவ்வனே செய்வோம்.

ஆண்களுக்கு விரைவாக தாடி மீசை வளர வேண்டுமா?**

ஆண்களுக்கு விரைவாக தாடி மீசை வளர வேண்டுமா?
****************************************************************************

தற்போது ஃபேஷனானது அதிகரித்து வருகிறது. அதிலும் இதுவரை உடைகள், ஹேர் ஸ்டைல் போன்றவற்றில் தான் ஃபேஷன் இருந்தது. மேலும் இதுவரை ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியுமாறு வைப்பது என்று இருந்தார்கள். ஆனால் இப்போது ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடியை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சிலரால் நல்ல அடர்த்தியான மீசையை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தால், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு மீசை மற்றும் தாடியானது சரியான வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே அத்தகைய பிரச்சனையில் இருக்கும் ஆண்களுக்கு, மீசை மற்றும் தாடியை நன்கு வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி பார்க்கலாமே!!!

புரோட்டீன் உணவுகள்
உடலின் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, மீசை மற்றும் தாடியின் வளர்ச்சி உள்ளது. எனவே உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, போதிய ஊட்டச்சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக புரோட்டீன் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளான பீன்ஸ், முட்டை, பால், மீன் போன்றவற்றை அதிகம் டயட்டில் சேர்த்தால், அதில் உள்ள மற்ற சத்துக்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

அடிக்கடி ஷேவிங்
மீசை மற்றும் தாடி நன்கு வளர வேண்டுமெனில், அடிக்கடி ஷேவிங் செய்ய வேண்டும். இதனால் அங்கு கூந்தல் வளர்ச்சி குறைவாக இருந்தாலும், வளர்ச்சியானது அதிகரிக்கும்.

விளக்கெண்ணெய்
மீசை மற்றும் தாடியை நன்கு அடத்தியாக வளரச் செய்வதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது விளக்கெண்ணெயை வைத்து மசாஜ் செய்வது தான். இதனால் அங்குள்ள இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்கள் வலுவோடு வளர்ச்சி பெறும்.

டெஸ்டோஸ்டிரோன்
என்பது ஆண் ஹார்மோன். இவை தான் ஆண்களின் கூந்தல் வளர்ச்சியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களின் உடலில் குறைவாக இருந்தாலும், கூந்தல் வளர்ச்சியானது குறைவாக இருக்கும். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் ஜிங்க் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, மீன், கடல் சிப்பிகள், வேர்க்கடலை, எள் போன்றவற்றை அதிகம் உட்கொள்வதன் மூலம், மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தண்ணீர்
உடலில் வறட்சி இருந்தாலோ அல்லது டாக்ஸின்கள் இருந்தாலோ, அவை கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை மயிர்கால்களுக்கு கிடைக்கப் பெறாமல், தடுக்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

போதுமான தூக்கம்
தூங்கும் போது தான் உடலில் உள்ள அனைத்து பாகங்களில் உள்ள பழுதுகளும் சரியாகும். எனவே மீசை நன்கு வளர்ச்சியடைவதற்கு, நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை வைத்தியம்
ரோஸ்மேரி ஆயிலுடன், ஆப்பிள் சீடர் வினிகர், ஜிஜோபா ஆயில் மற்றும் கற்றாழை ஜெல் போன்றவற்றை கலந்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வந்தால், மீசை நன்கு வளரும்.

அனேக ரோகத்திற்க்கும் .......


அண்ட வாதத்திற்கு .....


சிறுநீரக நோய்களுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் அருமருந்தாக பயன்படும் கொத்துமல்லி(Coriandrum Sativum)

சிறுநீரக நோய்களுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் அருமருந்தாக பயன்படும் கொத்துமல்லி(Coriandrum Sativum)


இது சிறு செடிகளாக வளரும். செடிகளின் நரம்பு போன்ற காம்புகளில் விதைகள் தோன்றுகின்றன. இவ்விதைகள் தனியா எனப்படும். நம். நாட்டில் எங்கும் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாக உத்திரபிரதேசம், வங்கம் என்னும் இடங்களில் பயிர் செய்யப்படுகிறது.


தனியா இனிப்புச்சுவையும், துவர்ப்புச்சுவையும், சீதவீரியமும் கொண்டது. எண்ணெய்ப் பசை கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். லேசானது. செரிமானத்தை வளர்க்கும். சுவையை உண்டாக்கும்.கண்களில் ஏற்படும் தேய்மானம்(Vascular Degeneration & Vascular Hypertension) 1 அ 2 துளி கண்ணில் விட குணமாகும்.கண்களில் கருவளையம், சுருக்கம் ஆகியவற்றை நீக்க கொத்துமல்லி பசையை கண்களைச் சுற்றி போட வேண்டும்.

வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் குணமாகும். அம்மைக்கு மருந்தாக பயன்படுகிறது. சர்க்கரை நோய்க்கு துணை மருந்தாக(Adjuvant Therapy) பயன்படுகிறது.

தீர்க்கும் நோய்கள் 
                  காய்ச்சல், மூன்று தோஷங்கள், நாவறட்சி, வாந்தி, இருமல், இளைப்பு முதலியவற்றைப் போக்கும்.அ டிக்கடி ஏப்பம்(Aeropatia) வராமல் இருக்க நீர் + தனியா விதை + சுக்கு + பனைவெல்லம் சேர்த்துக் குடிக்க குணமாகும்

    தனியா விதை + சோம்பு +  பால் சேர்த்து கொதிக்க வைத்து,  இனிப்புக்காக சிறிது வெல்லம்சேர்த்து குடித்து வர, கருவுற்ற  பெண்களுக்கு கால், கை,  குடலில் ஏற்படும் நீரேற்றம் குணமாகும். இரத்தம் கலந்த சிறுநீர் வரும் நிலை குணமாகும்.நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, ஈரலைப் பாதுகாக்கிறது


மாதர்களுக்கு ஏற்படும் நீர்கட்டி,ஆண்களுக்கு ஏற்படும் விரைவாதம், மலச்சிக்கல் முதலியவற்றை குணமாக்கும் கழற்சிக்காய் (கச்சக்காய் )

மாதர்களுக்கு ஏற்படும் நீர்கட்டி,ஆண்களுக்கு ஏற்படும் விரைவாதம், மலச்சிக்கல் முதலியவற்றை குணமாக்கும் கழற்சிக்காய் (கச்சக்காய் )


கழற்சி காய் (குபேராஷி )

தன்மை :  உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுகிறது. கெட்ட நீரினால் ஏற்படும் துர்வாடையை  அகற்றக்கூடியது .இலேசான உஷ்ண குணத்தை இது பெற்றிருக்கும் .மலத்தை இளக்கி வெளித்தள்ளக்கூடியது. கசப்புச் சுவை உடையது.

தீர்க்கும் நோய்கள் :  மாதர்களுக்கு ஏற்படும் மாதவிலக்கை ஒழுங்குபடுத்தக்கூடியது. வயிற்றில் ஏற்படும் நீர்கட்டியை குணமாக்கும் .அகட்டு வாய்வு அகற்றியாக செயல்படுகிறது. காய்ச்சல் ,விஷக்காய்ச்சல் ,குளிர்காய்ச்சல் குணமாகும். இழுப்பு நோய்களுக்கு இது ஒரு மருந்தாக செயல்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் விரைவாதம் குணமாகும்.   

Saturday, March 26, 2016

சித்த மருத்துவம் மூலிகை -இஞ்சி

சித்த மருத்துவம் மூலிகை -இஞ்சி


1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்
இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர். இஞ்சியைப் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் 10 ஆண்டுகள் நடத்தலாம் என்று நம்பிக்கை தோன்றும்?
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் கொண்ட மூலிகையும் நம் நாட்டில் உண்டு. சுற்றி வளைக்காமலே கூறிவிடுகிறேன். நமது தென்னக சோலை வனப் பயிர்களில் ஒன்றாகிய உயர்ந்த இஞ்சிக்கு தான் சுக்கு என்று பெயர், அதாவது சுக்கு என செல்லமாக அழைத்துப் பின்பு சுக்கு முதலியாரே! என்று கூப்பிடுவது நம் நாட்டு பழக்கமாயிற்றே!
சுக்கும் சுப்பிரமணியமும் ஒன்றுதான். சுக்கு, இஞ்சியான உலராத சுக்கு இவைகளை எல்லா மதத்தினரும், இனத்தவரும் விரும்பி மஜ"த் சுல்தான், டேவிட் பிள்ளை மரியதாஸ், போன்ற முஸ்லீம் கிருஸ்துவ நண்பர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை
என்பது பழமொழி அல்லவா?
நமது வாழ்க்கையில் மஞ்சளுக்கு அடுத்தபடியாக ஸ்தானம் வகிக்கக்கூடியது சுக்கு. மஞ்சளைப் போலவே வடிவம் கொண்டது. இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை இவை மூன்றும் சமையல் அறையின் இணைபிரியாத நண்பர்கள்.
இஞ்சி பொதுக் குணம்
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். சிறப்பாக இஞ்சி எரிப்பு குணத்தை உடையது. கடினமான பண்டங்களை எளிதில் செரிப்பிக்கும். பித்தவாயுவைக் கண்டிக்கும். வாயில் சுரக்கும் உமிழ்நீரைப் பெருக்கிப் பசியைத் தூண்டும். மற்றும் உஷ்ணத்தை உண்டாக்கும் குணமுடையது.
உபயோக முறைகள்
இஞ்சியை சாதாரணமாக தமிழ்நாட்டு சமையலில் சேர்த்துக் கொள்வது மிகப் பழங்கால வழக்கத்தில் ஒன்று. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்த žதளம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை எளிதில் ஜ"ரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சியின் குணமேதென்றால்
இயல்புடன் உரைக்க கேளீர்
அஞ்சிடும் கன்னியாவும் அகன்றிடும்
பித்ததோடம்
நெஞ்சினில் இருமல் கோழை
நெகிழ்ந்திடும்
கபங்கள் தன்னை
மிஞ்சினி வருமேவென்றும் விளம்பிடும்
வேதநூலே (ஓலைச் சுவடி)
சித்த மருத்துவர்களிடம் ஓர் ரகசியமுண்டு. எந்த நோய் ஆனாலும் சரி, முதலில் இந்த இஞ்சி ரசம் என்ற குடிநீரை கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, பால சஞ்žவி மாத்திரை, அன்ன பேதி செந்தூரம் ஆகியவைகளுக்கு நோய் திடமறிந்து அனுபானமாக வைத்து விடுவார்கள். பிணிகளும் விரைவில் மிச்சம் மீத இல்லாமல் உடலைவிட்டு அகன்றுவிடும். ஆனால் இந்த வழக்கம் வர வர மறைந்து போய்விட்டது.
இஞ்சியே இல்லை என்றால் நமக்கு சாப்பாடு ருசிக்காது; பசிக்காது. பிரபல சமையல் நிபுணர்களுக்குத்தான் தெரியும் இஞ்சியின் மகிமை! ஊறுகாய் வியாபாரம் மந்தமாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம். ஆங்கில மருத்துவர்கள் கூட இதனை சொந்தம் கொண்டாடி வருகின்றனர்! அதாவது இஞ்சி ரசாயன முறைப்படி சாறு பிழிந்து அதை மதுசாரத்துடன் கலந்து ஜிஞ்ஜர் பெரீஸ் என்ற மருந்தை தயாரித்து அதை மிக்சர்களில் கலந்து செரிப்புண்டாக்க கொடுக்கின்றனர். மதுவிலக்கு அமுலுக்கு வந்தபின் இந்த ஜிஞ்சர் பெரீஸ் டிஞ்சருக்கு (கெமிஸ்டுகளிடம்) இங்கிலீஸ் மருந்து கடைகளில் ஏகப்பட்ட கிராக்கி (பிளாக்மார்க்கெட்). டாக்டர்களுக்கும் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் புட்டி புட்டியாக எங்குதான் போகின்றனவே? முருகன் தான் அறிவார் இந்த பிளாக் மார்க்கெட்டை!
இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டும் ஒரு அவுன்ஸ், தேன் அரை அவுன்ஸ் ஒன்றாகக் கலந்து கொண்டு ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கமும் வாந்தியும் வரும்போது அரைஅவுன்ஸ் வீதம் கொடுத்துவர நீங்கும். இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்துக் கொடுத்துவர இருமல், இரைப்பு (ஆஸ்துமா) சாந்தியாகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் žவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!
இஞ்சி முறபா
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்த தயாரிப்பது. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
ஆஸ்துமா இருமலுக்கு
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

தொப்பை குறைய ஆண்களுக்கும் பெண்களுக்கும்


தொப்பை கரைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் …

தொப்பை கரைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் …

உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத ஆபத்தான கொழுப்பை கரைக்க எளிய வழி (4 நாட்களில் மாற்றத்தை உணரலாம்)

8 ½ கப் சுத்தமான தண்ணீர் (2லி)
1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி அல்லது 1 டீஸ்பூன் இஞ்சி வேரின் பொடி
1 சிறிய எழுமிச்சை பழம் நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)
1 சிறிய வெள்ளரி பிஞ்சி நறுக்கிய மெல்லிய துண்டுகளாக (thinly sliced)
12 புதினா இலைகள்

அனைத்தையும் 8 ½ கப் சுத்தமான தண்ணீரில் போட்டு இரவு முழுக்க ஊறவிட்டு மறுநாள் வடிகட்டி நீரை மட்டும் சிறிது சிறிதாக பிரித்து குடிக்கவும்.
ஒரே நாள்ல குடிக்க முடியலைன்னாலும் பிர்ட்ஜ்ல வைச்சி இரண்டு நாட்களாக பிரித்து குடிக்கலாம்.
இப்படி தொடர்ந்து 4 வாரங்கள் குடித்து வந்தால் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.
(This drink keeps you hydrated and does not have any side effects.)

கற்பக மூலிகை - துளசி

கற்பக மூலிகை - துளசி 

 கற்பம் என்பது உடலை கல் போல ஆக்குவது. 


துளசி (Ocimum sanctum) மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது. துளசியை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பலரது வீடுகளின் கொல்லைப் புறத்தில், துளசிமாடம் அமைந்துள்ளதை இன்றுகூட நாம் காணலாம். 

துளசியானது இடியைத் தாங்கும் சக்தி கொண்டது என அறிவியல் அறிஞர்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனர். இதனால் தானோ என்னவோ வீடுகளில் துளசி வளர்த்திருப்பார்கள் என தோன்றுகிறது.

துளசியின் மணம் உடலுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

இதற்கு அரி, இராமதுளசி, கிருஷ்ண துளசி, திருத்துளாய், துளவு, குல்லை, வனம், விருத்தம், துழாய், மாலலங்கர் என பல பெயர்கள் உண்டு.

துளசி இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

துளசியை பொதுவாக தெய்வீக மூலிகை என்றே அழைப்பார்கள். கற்ப மூலிகைகளில் இதற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்து மதத்தினர், இலட்சுமி தேவியின் அம்சமாகவே எண்ணி இதனை வழிபடுகின்றனர்.

துளசியின் பயன்கள்

· இருதயம், ரத்த நாளங்கள், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை பலப்படுத்தும் தன்மையும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர்படுத்தும் தன்மையையும் கொண்டது.

· துளசி உடல் சூட்டை சீரான நிலையில் பாதுகாக்கிறது.

· நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது. 

· மன அழுத்தத்தைப் போக்கும்தன்மை கொண்டது. 

· உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. 

· இருமல் மற்றும் சுவாச நோய்களுக்கு அரு மருந்தாக பயன்படுகிறது.

· கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது.

· ஜூரத்தைக் குறைக்கும் குணம் கொண்டது. 

· வயிற்றுப் புண், வாய்ப்புண்களை குணப் படுத்தும்.

துளசியை கற்ப முறைப்படி தினமும் சாப்பிட்டு வந்தால் நோயில்லா பெருவாழ்வு வாழலாம்.

குழந்தைகளுக்கான மார்புச்சளி நீங்க

துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் கற்பூரவல்லி சாறு கலந்து சூடாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு உண்டாகும் மார்புச்சளி, மூச்சு விட முடியாமை, சளியினால் மூச்சுத்திணறல் போன்றவை நீங்கும். மார்புச்சளி வெளியேறும்.

துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு சம அளவு சேர்த்து அதனுடன் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்வு நீங்கி உடல் புத்துணர்வடையும்.

பெண்களுக்கு

துளசியிலை, வில்வ இலை, வெற்றிலை சம அளவு எடுத்து இடித்து சாறு பிழிந்து அதனுடன் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் 1 தேக்கரண்டி எடுத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தி வந்தால் பெண்களுக்கு உண்டாகும் பெரும்பாடு (இரத்தப் போக்கு) குணமாகும்.

ரத்த அழுத்தம் குறைய

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் துளசி இலை, முற்றிய முருங்கை இலை சம அளவு எடுத்து இடித்து 50 மி.லி அளவு சாறில் 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை என இருவேளை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். இது சாப்பிடும் காலங்களில், உப்பு, காரம், புளியைக் குறைப்பது அவசியம்.

உடல் எடை குறைய

துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

குப்பைமேனி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சூரணத்தை தினமும் இருவேளை, வேளைக்கு இரண்டு சிட்டிகை என எடுத்து நெய்யில் குழைத்து தொடர்ந்து உட்கொண்டால் மூலச்சூட்டினால் ஏற்படும் கருப்பு நிறம் மாறும்.

அம்மான் பச்சரிசியுடன், துளசி இலை சம அளவு எடுத்து நன்கு அரைத்து பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும்.

துளசி இலை - 9 எண்ணிக்கை

கடுக்காய் தோல் - 5 கிராம்

கீழாநெல்லி - 10 கிராம்

ஓமம் -5 கிராம்

மிளகு - 3 

எடுத்து மைபோல் அரைத்து மோரில் கலந்து தினமும் மூன்று வேளை கொடுத்துவந்தால், சாம்பல், மண் தின்னும் குழந்தைகள் எளிதில் அவற்றை ஒதுக்கும்.

தொண்டைக்கம்மல், வலி நீங்க

தினமும் துளசியிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக மென்று சாறு இறக்கினால், சளி, தொண்டைக்கட்டு நீங்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையும் நீக்கும்.

10 துளசியிலை எடுத்து அதனுடன் 5 மிளகு சேர்த்து நசுக்கி 2 டம்ளர் நீர்விட்டு அரை டம்ளராக சுண்டக் காய்ச்சி கஷாயம் செய்து சூடாக அருந்தி, பிறகு சிறிது எலுமிச்சை சாறு அருந்திவிட்டு நல்ல கம்பளி கொண்டு உடல் முழுவதும் போர்த்தி விட்டால் மலேரியா காய்ச்சல் படிப்படியாக குறையும்.

சிறுநீரகக் கல் நீங்க

துளசி இலையை ஒரு செப்புப் பாத்திரத்தில் நீர்விட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை எடுத்து இலையோடு சேர்த்து அருந்தி வந்தால் சிறுநீரகக் கல் படிப்படியாக கரையும். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்துவது நல்லது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள், விஷநீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி ரத்தத்தை சுத்தமாக்கும்.

சிறு சிறு பூச்சிக் கடிகளின் விஷம் நீங்க

கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பூச்சிக் கடிகளால் சிலருக்கு உடலில் அலர்ஜி உண்டாகி சருமம் பாதிக்கப்படும். அல்லது வேறு வகைகளில் பாதிப்பு ஏற்படும். இந்த பூச்சிகளின் விஷத்தன்மை நீங்க துளசி இலையை சாறு எடுத்து அதனுடன் சம அளவு தும்பைச் சாறு கலந்து ஒரு வாரம் அருந்தி வந்தால் விஷம் எளிதில் இறங்கும்.

வாய்ப்புண் , வாய் நாற்றம் நீங்க

வயிற்றில் புண்கள் இருந்தால் வாயிலும் புண்கள் உண்டாகும். இதனால் வாய் நாற்றம் வீசும். வாய்ப்புண் ஆற துளசி இலையை பறித்து நீர்விட்டு அலசி, வாயில் வைத்து மென்று மெல்ல மெல்ல சாறினை உள்ளிறக்கினால், வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும். வாய் நாற்றமும் நீங்கும்.

மன அழுத்தம் நீங்க 

மன அழுத்தத்தைப் போக்கும் குணம் துளசிக்கு உண்டு. துளசி இலையை நன்கு மைபோல் அரைத்து அதனுடன் வில்வ இலை சாறு சேர்த்து லேசாக சூடாக்கி அருந்தினால் மன அழுத்தம் நீங்கும்.

பற்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர

துளசி இலை, புதினா இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் கிராம்புப் பொடி சேர்த்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களின் சொத்தை, பல் ஈறு வீக்கம் மேலும் பற்கள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் தீரும். 

தலைவலி தீர

ஒரு கைப்பிடி துளசி இலை மூன்று மிளகு, 1 துண்டு இஞ்சி எடுத்து நன்கு அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.

கண்நோய்கள் தீர

துளசி இலை ஊறிய நீரை 1 மண்டலம் அருந்தி வந்தால் முக்குற்றங்களில் ஒன்றான பித்த அதிகரிப்பு குறையும். இதனால் கண் நரம்புகளின் சூடு குறைந்து நரம்புகள் பலப்படும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. 

சரும நோய்கள் நீங்க 

தேமல், படை உள்ள இடங்களில் துளசியும் உப்பும் சேர்த்து அரைத்து பூசி வந்தால் சரும நோய்கள் நீங்கும்.

துளசி இலைக்கு உள்ளத்தைத் தூய்மையாக்கும் குணமும் உண்டு.

மூலிகை சமையல் - புளியாரை கீரை

மூலிகை சமையல் - புளியாரை கீரை 

        னிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு அளப்பரியது. கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின் வளர்ச்சிக்கு அவசியத் தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள் மருத்துவரை அணுக வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள். 

நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கீரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துவருகிறோம். இம்மாத இதழில் தமிழகம் முழுவதும் பரந்து காணப்படும் புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம் நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும், மெல்லிய தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.

இதனை புளியாக்கீரை, புளிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர். 

Tamil - Puliyarai

English - Indian sorrel

Telugu - Pulichinta

Malayalam - Paliyarel

Sanskrit - Changeri

Hindi - Tinpatiya

Bot. Name - Oxalis corniculata

புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக பரந்து காணப்படும்.

புளியாரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி பல நூல்களில் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பித்த மயக்கமறும் பேருலகின் மானிடர்க்கு

நித்தமருள் வாதகபம் நேருமோ - மெத்தனவே

மூலக் கிராணியறும் மூல வுதிரமறுங்

கோலப் புளியாரைக்கு

- அகத்தியர் குணபாடம்

பித்த மயக்கத்தைப் போக்கும்

சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து தலைவலி, மயக்கத்தை உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை புளியாரைக் கீரையை துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் எற்படும் பாதிப்புகள் குறையும்.

மூல நோயைக் குணப்படுத்த

அசீரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும் மலச்சிக்கலாலும் மூல நோய் உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.

புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி அதனுடன் பூண்டு, வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு, உள்மூலம், மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.

பசியைத் தூண்ட

மன உளைச்சலாலும் மனச்சிக்கலாலும் சிலர் பசியின்றி தவிப்பார்கள். இவர்களுக்கு சிறிது சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல் இருக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு நன்கு பசியும் உண்டாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல், காய்ச்சல் என பல நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன. 

இவர்கள் புளியாரைக் கீரையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.

தலைவலி நீங்க

தலைவலியால் அவதியுறுபவர்கள் புளியாரைக் கீரையுடன் வெள்ளைப் பூண்டு சேர்த்து அரைத்து நெற்றியின் மீது பற்று போட்டால் தலைவலி நீங்கும். இதனுடன் சிறிது பெருங்காயமும் சேர்ப்பது நல்லது.

கட்டிகள் குணமாக

பொதுவாக உடல் சூட்டினால் ஏற்படும் வெப்பக் கட்டிகள் மீது புளியாரைக் கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் கட்டிகள் பழுத்து எளிதில் உடைந்து புண்கள் குணமாகும்.

முகப்பரு நீங்க

புளியாரைக் கீரையோடு சிறிது பன்னீர் விட்டு அரைத்து முகத்தில தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கி முகம் பளபளக்கும்.

பாலுண்ணி, மரு நீங்க

புளியாரைக் கீரையை சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகு பொடி, வெண்ணெய் கலந்து பாலுண்ணி, மரு மீது தடவி வந்தால் வெகு விரைவில் இவை காய்ந்து உதிர்ந்துவிடும்.

குன்ம நோய்களுக்கு

புளியாரைக் கீரையை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு பசுவின் மோர் சேர்த்து தினமும் காலை வேளையில் அருந்திவந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயுக்கோளாறு, குன்ம நோய்கள், மூல நோய்கள் குண-மா-கும். ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பூரண பலனை அடையலாம்.

இந்த மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, காரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கண்கள் குளிர்ச்சியடைய

கணினியில் அதிக நேரம் வேலைசெய்பவர்களின் கண்கள் அதிக சூடாகி வறட்சியடையும். இதனால் கண் நரம்புகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த நீரில் கண்களை அடிக்கடி கழுவி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் கண் பார்வை நரம்புகள் பலப்படும்.

புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், இவற்றைத் தகுந்த அளவு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் பாலியல் சம்பந்தப்பட் நோய்கள் குணமாகும்.

நல்ல சுவையுடன், மருத்துவப் பயன் கொண்ட புளியாரைக் கீரையை கிடைக்கும் காலங்களில் உணவில் சேர்த்து பயனடையுங்கள்.

மூலிகை சாறு...

மூலிகை சாறு...


                ன்று நாம் காலையிலும் மாலையிலும் கடற்கரை, கடைவீதிகள், பொது இடங்களில் சிறிய வண்டியில் மூலிகை சூப் இங்கு கிடைக்கும் என விளம்பரங்களை எல்லா நகரங்களிலும் காண்கிறோம்.

டீ, காஃபி, மது, குளிர் பானங்கள் என பலவற்றை அருந்தி வந்த மக்களிடையே தற்போது புதியதாக முளைத்திருக்கும் இந்த மூலிகை சூப் கடைகள் படையெடுக்கக் காரணம், இவர்களில் சிலர் மூலிகையின் பயனால் நோய் வரும்முன் காக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகவும், நோயின்றி வாழவும் ஆரோக்கியமானது இத்தகைய மூலிகை சாறு (சூப்) களே என்பதை தற்போது உணரத் தொடங்கி விட்டனர் என்ற உண்மை புலனாகிறது.

சில மூலிகைச் சாறுகளை உடலில் மேல்பூச்சாக பயன்படுத்தினால் எண்ணற்ற தோல் வியாதிகளை குணப்படுத்தலாம்.

நம் முன்னோர்கள் நோயின் தாக்கம் இன்றி வாழ அவ்வப்போது வீடுகளில் மூலிகைச் சாறு கொடுப்பார்கள். இது இன்றைய தலை முறையினருக்கு தெரிய வாப்ப்பில்லை.

இந்த மூலிகைச் சாறுகளின் மருத்துவப் பயன்களை அன்றே உணர்ந்த சித்தர்கள் அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக பாடியுள்ளனர்.

இந்த மூலிகைச் சாறுகளின் பயன்களை தற்போது காண்போம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும். நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.

எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம் நீங்கும்.

உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும். நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து.

யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.

இஞ்சி சாறு

நம் முன்னோர்கள்

காலையில் இஞ்சி,

கடும்பகல் சுக்கு

மாலையில் கடுக்காய் என்றார்கள்.

இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால்நோய் என்பதே நம்மை நெருங்காது என்பது சித்தர் வாக்கு.

இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல், இவைகளைக் குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணிச் சாறு

கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில் அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.

பொன்னாங்கண்ணிச் சாறு

பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பொன்னாங்கன்னி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு அருந்திவந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.

தூதுவளைச் சாறு

வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் தூதுவளைச் சாறு அந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

அருகம்புல் சாறு

அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.

தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு

தண்ணீர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால் உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது புஷ்டியை கொடுக்கும்.

பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப் படுத்தும்.

வெள்ளைப் பூண்டு சாறு

வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும். உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல் சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்v வெற்றிலைச் சாறு

வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து. அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

வேலிப்பருத்தி சாறு

சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால் வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.

Wednesday, March 23, 2016

சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் 100 :-

சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள் 100 :-
1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.
35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
98) நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
99) தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
100) தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்