Monday, March 21, 2022

ஆண்களுக்கு அதிக விந்து அணுக்கள் உற்பத்தியாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்...

*ஆண்களுக்கு அதிக விந்து அணுக்கள் உற்பத்தியாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்*

*தேவையான மூலப்பொருட்கள்*

1.பூனைக்காலி விதை - 100 கிராம்
2.ஓரிதழ் தாமரை - 50  கிராம்
3.அஸ்வகந்தா - 50 கிராம்
4.ஆலம் விதை - 50 கிராம்

*செய்முறை விளக்கம்*

✍🏿 மேலே குறிப்பிட்டுள்ள மூலப்பொருட்கள் அனைத்தையும் சேகரித்து சூரிய ஒளியில் நன்கு காய வைக்கவும்

✍🏿 அதில் பூனை காலி விதை மட்டும் எடுத்து அதை ஊற வைத்து வேக வைத்து அதன் தோல்களை நீக்கி விடவும்,நீக்கிய பிறகு நன்கு உலர வைக்கவும்

✍🏿 நன்கு காய்ந்த 4 மூலப்பொருட்களும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும்

✍🏿 அரைத்த பொடியை ஈரப்பதம் காற்று படாமல் பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்

*சாப்பிடும் முறை*

தினமும் இரவு உணவுக்கு பின் 100மி வெதுவெதுப்பான பாலில் 1 ஸ்பூன் அளவு பவுடரை கலந்து தொடர்ந்து 2 மாதம் வரை எடுக்கவும்

*மருத்துவ நன்மைகள்*

1.விந்து அதிகம் உற்பத்தியாகும்
2.விந்து கெட்டிப்படும்
3.உந்து தன்மை அதிகரிக்கும்
4.உடல் சுறுசுறுப்பாக மாறும்
5.உடல் வலி குறையும்

*கவனிக்க*

மூலிகைகள் பொறுத்த வரை வாங்கி அரைத்து கொள்வது தான் நல்ல பலனை கொடுக்கும் ஏற்கனவே விற்பனையில் கிடைக்கும் பொடி வகைகள் பெரிய அளவில் பலன் கொடுக்காது

சர்க்கரை வியாதி உள்ளவர்கள்,நரம்புத்தளர்ச்சி, ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் பலனை எதிர்பார்க்க வேண்டாம்...

Sunday, March 20, 2022

பாதவெடிப்பு முற்றிலும் குணமாக இயற்கை வழி மருத்துவம்

பாதவெடிப்பு முற்றிலும் குணமாக இயற்கை வழி மருத்துவம்

தேவையான மூல பொருள்

1.கிளிஞ்சல் சுண்ணாம்பு - 20 கி
2.நெல்லிக்காய் சாறு - 10 மி
3.விளக்கு எண்ணெய் - 20 மி

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு நெல்லி கனியே சிறியதாக நறுக்கி அதனை நன்றாக அரைத்து பிழிந்து வரும் சாற்றினை 10 மி.லி என்ற அளவில் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இதனுடன் கிளிஞ்சல் சுண்ணாம்பையும் சேர்த்துக்கொண்டால் அது பசை போன்ற தன்மையை அடையும்.

மேலும் இந்த பொடியை விளக்கு எண்ணெய் உடன் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கி பாத வெடிப்பு உள்ள பகுதிகளில் தொடர்ந்து தேய்த்து வந்தால் பாதவெடிப்பு முற்றிலுமாக குணமடையும்

Saturday, March 19, 2022

உடல் எடை குறைக்க உதவும் டீ தயாரிக்கும் முறை..

*உடல் எடை குறைக்க உதவும் டீ தயாரிக்கும் முறை*

*தேவையான மூலப்பொருட்கள்:*

1.இலவங்கப்பட்டை பொடி - 50 கிராம்
2.சுக்கு பொடி - 50 கிராம்
3.மஞ்சள் தூள் - 50 கிராம்
4.சப்ஜா விதை - 100 கிராம்
5.மிளகு  பொடி - 25 கிராம்
6.எலுமிச்சை - 1/2 பழம்

*செய்முறை விளக்கம்*:

✍️மேற்கூறிய பொடி வகைகளை அனைத்தும் தயார் செய்து கூறிய அளவுகளில் எடுத்து கொள்ளவும்

✍️அனைத்து பொடிகளையும் கலந்து வைத்து கொள்ளுங்கள்

✍️200மி நீரை கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு 5-கிராம் இருக்கும் அளவுக்கு கலந்து நன்கு கொதிக்க விடவும்

✍️பிறகு வடிகட்டாமல் எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் 1/2 ஸ்பூன் சப்ஜா விதை கலந்து காலை மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடம் முன்பு டீ போல சூடாக குடிக்க வேண்டும்

✍️சுவைக்கு தேன் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து கொள்ளவும் ஆனால் துவர்ப்பு சுவையுடன் குடிப்பது மிக நல்லது

*விதிமுறைகள்:*

✍️உடல் எடை குறைய வேண்டும் என்றால் 3 வேலை உணவு அவசியம் டயட் இருக்க கூடாது.

✍️நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் குறைந்தது 3-4 லிட்டர்

✍️இரவு நேரமாக உறங்க செல்ல வேண்டும்

✍️உடலுக்கு தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதை நிறுத்தவும் பசிக்கு மட்டும் சாப்பிடுங்கள்

✍️முடிந்த அளவு ஏதேனும் உடற்பயிற்சி கட்டாயம் செய்யவும்

*தவிர்க்க வேண்டியவை:*

முட்டை,பிராய்லர் கோழி,அதிக சாதம்,எண்ணெய் பொறித்த உணவுகள்,இனிப்பு உணவுகள்

*மருத்துவ நன்மைகள்:*

🔅உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும்
🔅ஜீரணம் எளிதில் ஆகும்
🔅மல சிக்கலை தடுக்கும்
🔅உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்

Tuesday, March 15, 2022

தேமல் மற்றும் மங்கு மறைய இயற்கை மருத்துவ முறை

*தேமல் மற்றும் மங்கு மறைய இயற்கை மருத்துவ முறை*

👉 *தேவையான மூலப்பொருட்கள்*

1.அரிதாரம் – 1 கட்டி
2.கோவைக்காய் சாறு - சிறிதளவு தேவையான அளவு

👉 *செய்முறை*

அரிதாரம் கட்டியை கோவைக்காய் சாறு விட்டு நன்கு மைய்ய அரைத்து பளிங்கு நிறம் ஆனதும் பயன்படுத்த தயார் செய்து கொள்ளுங்கள்

அரிதாரம் கட்டி அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்

👉 *பயன்படுத்தும் முறை*:

தேமல் மற்றும் மங்கு உள்ள இடங்களில் நன்கு சுத்தம் செய்த பிறகு அரைத்த கலவையை தடவி வெயிலில் படும் படி காயவிடவும்

இதனை தொடர்ந்து 3 வாரம் காலம் பயன்படுத்தினால் தேமல் உள்ள இடத்தின் அருகில் உள்ள நிறம் அப்படியே தேமல் உள்ள பகுதிக்கு மாறும் 

*மருத்துவ பயன்கள்:*

1.மங்கு / மரு மறையும்
2.தேமல் படர்வது நிற்கும்
3.தோல் அரிப்பு சரியாகும்

Sunday, March 13, 2022

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க...

தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படுறீங்களா? இந்த ஜூஸ்களை குடிங்க...

காலநிலை மாற்றத்தினால், இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் அவஸ்தைப்படக்கூடும். அதுமட்டுமின்றி இவைகள் அளவுக்கு அதிகமாகும் போது, காய்ச்சல் வர ஆரம்பிக்கும். ஆகவே அப்படி அவஸ்தைப்படும் போது, ஆரம்பத்திலேயே அதனை சரிசெய்வதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டால், நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பதைத் தடுக்கலாம்.

ஒருவேளை அப்படி சிகிச்சை எடுக்காமல், லேசாக கரகரவென்று தான் உள்ளது என்று சாதாரணமாக நினைத்தால், பின் தொண்டையானது அளவுக்கு அதிகமாக புண்ணாகிவிடும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை, இருமல், தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப் புண்ணை சரிசெய்யும் ஒருசில அருமையான ஜூஸ்களைக் கொடுத்துள்ளோம். இந்த ஜூஸ்கள் அனைத்தும் நிச்சயம் தொண்டைப் புண்ணை குணமாக்கும் தன்மை கொண்டவை. மேலும் நிபுணர்கள் கூட இந்த ஜூஸ்களை குடிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

எனவே இருமல் மற்றும் தொண்டைப் புண்ணால் காய்ச்சல் வருவதற்குள், அவைகளை சரிசெய்ய கீழ்க்கூறிய ஜூஸ்களை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால், மூன்றே நாட்களில் தொண்டைப் புண்ணில் இருந்து விடுபடலாம்.

குறிப்பு: இந்த ஜூஸ்களை குடிக்கும் போது, அதில் குளிர்ச்சியான தண்ணீரோ, பாலோ அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்க்கக் கூடாது.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிவதோடு, புண்ணும் குணமாகும்.

இஞ்சி ஜூஸ்

இஞ்சியில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழித்துவிடும். எனவே தொண்டை கரகரவென இருக்கும் போதே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்துவிடுங்கள்.

கேரட் ஜூஸ்

கேரட்டில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது தொண்டையில் எவ்வித தொற்றுகள் இருந்தாலும் குணப்படுத்திவிடும். அதலும் இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், தொண்டைப் புண்ணின் தொல்லையில் இருந்து குணமாகலாம்.

பூண்டு ஜூஸ்

இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் போது 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்தால், உடனே குணமாகிவிடும்.

குருதிநெல்லி ஜூஸ் (Cranberry Juice)

தொண்டைப் புண்ணை சரிசெய்யும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் குருதிநெல்லி. ஆகவே தொண்டைப் புண் இருக்கும் போது குருதிநெல்லியை ஜூஸ் போட்டு குடியுங்கள்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண் மற்றும் வலி குணமாகும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழை ஒரு சிறப்பான மூலிகைப் பொருள். இந்த கற்றாழையை சாறு எடுத்து, அதில் சிறிது கிராம்பு பொடி சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

தக்காளி ஜூஸ்

தினமும் இரண்டு முறை தக்காளி ஜூஸில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.

புதினா ஜூஸ்

இஞ்சி, பூண்டு போன்றே புதினாவிலும் ஆன்டி-பாக்டீரியல் பொருள் உள்ளது. அதற்கு இதனை சாறு எடுத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து குடிக்க வேண்டும்.

அன்னாசிப் பழ ஜூஸ்

அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்.

கிவி ஜூஸ்

கிவி பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் கூட தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், இது வறட்சி இருமலில் இருந்து பாதுகாக்கும்.

வாழைப்பழ ஜூஸ்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதனை ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணை சரிசெய்யலாம். மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால், சளி மற்றும் இருமலில் இருந்து விலகி இருக்கலாம்.

தர்பூசணி ஜூஸ்

தர்பூசணியை வெதுவெதுப்பான நீரில் ஜூஸ் போட்டு குடித்தால், தொண்டைப் புண்ணினால் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஆப்ரிக்காட் ஜூஸ்

தொண்டைப் புண்ணினால் அவஸ்தைப்படும் போது, ஆப்ரிக்காட் ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

மிளகு கசாயம்

மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து, பின் அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட்டு, அந்த நீரை சூடாக குடித்தால், தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, தொண்டைப் புண் உடனே குணமாகும்.

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு

*இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு*

✍️ *தேவையான மூலப்பொருட்கள்:*

1.மருதாணி இலை - 1 கைப்பிடி
2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி
3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி
4.எலுமிச்சை - 1 பழம்

✍️ *செய்முறை:*

1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும்

✍️ *பயன்படுத்தும் முறை:*

வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள்

✍️ *கடைபிடிக்க வேண்டியவை:*

1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும்

2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம்

3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது

4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம்

5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் வந்தால் அது வெள்ளை முடி அதற்கு இதன் பலனை எதிர்பார்க்க வேண்டாம்

✍️ *மருத்துவ பலன்கள்:*

1.தலை குளிர்ச்சியாகும்
2.பேன் தொல்லை நீங்கும்
3.முடி உதிர்வு குறையும்
4.இளநரை படி படியாக தடுக்கப்படும்

Saturday, March 12, 2022

தினம் ஒரு மூலிகை பழம்பாசி

தினம் ஒரு மூலிகை பாவட்டை

தினம் ஒரு மூலிகை மாசிபத்திரி

தினம் ஒரு மூலிகை நாபி பயன்கள்

தினம் ஒரு மூலிகை முக்கம் பாலை பயன்கள்

மிளகின் வகைகளும் அதன் பயன்பாடும்

தினம் ஒரு மூலிகை அந்தி மந்தாரை

தினம் ஒரு மூலிகை பேரரத்தை

தினம் ஒரு மூலிகை முசுமுசுக்கை

மூலிகை சீயக்காய்

மூலிகை சீயக்காய்


நம் பாரம்பரியத்தில் முன்னோர்கள் அனைவரும் நமக்கு அரிய மூலிகை பொக்கிஷங்களை கொடுத்து சென்று உள்ளனர்.. அதனை பேனிகாக்க மறந்து விட்டதனால் பல விதமான நோய்களுக்கு ஆளாகி உள்ளோம்..

இன்றைய காலங்களில் வேதி பொருட்களை கொண்டுதான் ஷாம்பு, குளியல் சோப்பு தயாரிக்க படுகிறது.அதனை உபயோகிப்பதால் நம் உடல்நலத்திற்க்கு தீங்கை உண்டாக்கிறது..

( உதாரணமாக முடி கொட்டுதல்,கண் எரிச்சல்,இளநரை, உடல் சூடு )
வாரம் ஒருமுறை தலைக்கு சீகைக்காய் போட்டு குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

பழங்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க சீகைக்காய் பயன்படுத்தப் பட்டு வந்தது.. அத்தகைய சீகைக்காயில் வைட்டமின்.. ஏ.. சி.. டி.. ஈ..மற்றும்..கே..போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளது.. மேலும்இதில்.. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும்.. ஏராளமாக நிறைந்துள்ளன.. சீகைக்காயில் நிறைந்துள்ள ஓர் பொருள் மயிர் கால்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதன் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது..

அதனால் தான் அக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனையும், வழுக்கைத் தலை பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.. சீகைக்காயில் இன்னும் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.. அதற்கு அந்த சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்..

அதிலும் வாரம் ஒருமுறை சீகைக்காயைக் கொண்டு தலைமுடியை அலசினால், தலையில் ஏற்படும் பல பிரச்சனைகள் விலகும்.. சரி, இப்போது சீகைக்காயைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை தேய்த்து குளித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்..

நரைமுடி தடுக்கப்படும்..

சீகைக்காய் கொண்டு தலைமுடியை பராமரித்து வந்தால், நரைமுடி தடுக்கப்படும்.. அதற்கு நெல்லிக்காய், சீகைக்காய் மற்றும் பூந்திக் கொட்டையை ஒன்றாக அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நரைமுடி மறைய ஆரம்பிக்கும்..

பொடுகுத் தொல்லை..

பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவராயின் சீகைக்காய் கொண்டு தலைமுடியை அலசுங்கள்.. இதனால் சீகைக்காயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும்.. ஆன்டி-பாக்டீரியல்.. தன்மை ஸ்கால்ப்பில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களை நீக்கி, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும்..

தலைமுடி உதிர்வது குறையும்

சீகைக்காயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வருபவர்களுக்கு தலைமுடி உதிர்வது குறைவதோடு, முடியின் வலிமையும் அதிகரிக்கும்.. மேலும் சீகைக்காய் தலைமுடி உடைவதைத் தடுக்கும்.. ஆகவே உங்களுக்கு தலைமுடி உதிரும் பிரச்சனை இருந்தால் சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரியுங்கள்..

முடி வலிமையடையும்

சீகைக்காய் மயிர்கால்களின் வலிமையை அதிகரிக்கும் திறன் கொண்டது.. மேலும் இது தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும்.. எனவே உங்களுக்கு தலைமுடி வளர வேண்டுமானால், ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசாமல், சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்..

காயங்களை குணப்படுத்தும்

ஸ்கால்ப்பில் சிறு வெட்டுக்காயங்கள் இருப்பின் அதனை சீகைக்காய் குணப்படுத்தும். அதற்கு சீகைக்காய் பொடியை நீர் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும்.. இப்படி செய்வதன் மூலம் காயங்கள் குணமாவதோடு, அரிப்புக்கள் ஏற்படாமலும் தடுக்கும்..

20.. மூலிகைகள் கலவை அடங்கிய சீயக்காய் தூள்..

1.. சீயக்காய்
2.. பூந்திகொட்டை
3..  ஆவாரம் பூ
4.. பொடுதலை
5.. தோரைக்கிழங்கு
6.. நெல்லிக்காய்
7.. பெரிய லவங்கப்பட்டை
8.. பொன்னாங்கொட்டை
9.. மகிழ்ம்பூ
10.. நன்னாரி
11.. வெட்டிவேர்
12.. சிமைகிச்சிலி கிழங்கு
13.. கரிசலாங்கன்னி
14.. தவனம்
15.. செம்பருத்தி பூ
16.. கார்போக அரிசி
17.. ரோசா பூ
18.. பூலான் கிழங்கு
19.. மரூவு
20.. வெந்தயம்

தேவைக்கேற்ப அனைத்து சரக்குகளையும் வாங்கி வந்து சுத்தம் செய்து எடுத்து அரைத்துக் கொள்ளவும் ..

தயவுசெய்து யாரும் இந்த சீகைக்காய்த் தூளை தயார் செய்து கொடுக்க முடியுமா என்று போன் செய்து கேட்கக் கூடாது .. இதில் அதை சேர்த்து அரைத்தால் என்னவாகும் இதைச் சேர்த்து அரைத்தால் என்னவாகும் என்று நீங்களாகவே முடிவுகள் செய்து கொள்ள வேண்டும் ..

.. நன்றி

சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய !!!

சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய !!!*

_எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள்:_

* உடலில் நீர் வறட்சி
* சிறுநீரக கற்கள்
* கல்லீரல் பிரச்சனை
* அல்சர்
* விந்து அல்லது விரைகளில் உள்ள
தொற்றுநோய்
* பால்வினை நோய்
* நீரிழிவு
* ஊட்டச்சத்துக் குறைவு
* குறுகிய சிறுநீர் பாதை

தீர்வுகள்:

°அன்னாசிபழம் மற்றும் முள்ளங்கி சம அளவு சாறு எடுத்து, இரண்டும் கலந்து பருகி வந்தால் சிறுநீர்பாதையில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

° அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க
வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக
இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள்
நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும் இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

° சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.

° நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம்.சொல்லப்போனால், நெல்லிக்காய் பெரும்பாலான ஆயுர்வேத மருந்துவத்தில் நோயை குணமாக்கப் பயன்படுகிறது.

° தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து
வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.

° ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.

° எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆகவே தினமும் இரண்டு அல்லது மூன்று முறை,கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம். மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும்.🌷🌷

கால்சியம் சத்து குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

*🌷🌷கால்சியம் சத்து குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்*

பெண்களில் சிலர் 30 வயதை தொட்டலே முதுகு வலி, மூட்டுவலி என்கிறார்கள். இதற்கு காரணம் கால்சியம் குறைபாடாகும். நம் உடலில் 99 சதவிகிதம் கால்சியமானது கடின திசுக்களாக பற்கள் மற்றும்எலும்புகள் வடிவத்தில் இருக்கும். இது ஹார்மோன்களின் சுரப்பு, ரத்தக்குழாய் சீரான செயல்பாடு, தசைகள் சுருங்கி விரிதல், இதயக்துடிப்பு போன்ற உடல் இயக்கங்களுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்தாகும்.

குழப்பம், நினைவாற்றல் இழப்பு, தசைப்பிடிப்பு, கை, பாதம் மற்றும் முகத்தில் உணர்ச்சியில்லாது போவது, மன அழுத்தம், அடிக்கடி நகத்தில் பாதிப்பு ஏற்படுதல், பற்கூச்சம், எலும்புகளில் வலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்றவை கால்சியம் குறைபாட்டை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஆகும்.

கால்சியம் குறைபாடு ஏற்பட காரணங்கள்

நம் உடலில் தோல், நகம், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக தினமும் கால்சியத்தை இழந்து கொண்டிருக்கிறோம். சத்துள்ள சரிவிகித உணவு உண்ணாமை, செரிமானக்கோளாறுகளால் உணவில் உள்ள சத்துக்கள் உடலில் சேராமல் போவது. உயர் மற்றும் குறைந்த அளவு மெக்னீசியம் மற்றும் பாஸ்பேட் சத்து இருத்தல், சிறுநீரக செயலிழப்பு கணைய ஒவ்வாமை, வைட்டமின் டி அளவு குறைதல் மற்றும் சில வகை மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவு போன்ற காரணங்களால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களுக்கு வயது முதிர்ச்சி போன்ற பிற காரணங்களாலும் கால்சியம் குறைபாடு ஏற்படலாம்.

கால்சியம் சத்து நிறைந்த உணவுகள்

கால்சியம் சத்து நிறைந்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்வதன் மூலமாகவும் கால்சியம் சத்து குறைபாட்டை சரி செய்யலாம்.

முதலாவதாக பால் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடலில் கால்சியம் சத்து அதிகரிப்பதுடன் உடல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

தினசரி 5 பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கும். அத்துடன் பாதாமில் உள்ள பி2 வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து உறுதியான தசை வளர்ச்சிக்கு உதவும்.

கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் சத்தை உடல் எளிதில் கிரகித்து கொள்ள இது வழிவகுக்கும்.

மீன், ஆட்டு எலும்பு மஜ்ஜைகள், நாட்டுகோழி போன்ற உணவுகளை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். இவை கால்சியம் சத்து எளிதில் உடலில் சேரவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.

பொன்னாங்கண்ணி கீரை, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை மற்றும் மணத்தக்காளி கீரை போன்ற கீரை வகைகளையும் அத்தி, கொய்யா, ஆரஞ்சு, கிவி, பெர்ரி, அன்னாசி, லிச்சி, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, முந்திரி போன்ற பழவகைகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்த கொள்ள வேண்டும். இவை உடலில் சீரான இயக்கத்துக்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.

மனதை ஒருநிலைப்படுத்தி பல்துலக்க கூறும் சித்த மருத்துவம்

*🌷🌷மனதை ஒருநிலைப்படுத்தி பல்துலக்க கூறும் சித்த மருத்துவம்*

இப்போது பலருக்கு 30 வயதிலேயே பல் ஆட்டம் காண்கிறது. கிருமிகள் குடியிருக்கின்றன. பல் கூச்சம் அதிகரிக்கிறது.

இந்த நேரத்தில் `ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழி எல்லோருக்கும் நினைவில் இருக்கும். வேலமரக்குச்சிகளில் பல் துலக்க, பற்கள் உறுதியாகி திடமாகும் எனவும், வேப்பங்குச்சிகளில் பல் துலக்க பற்கள் தூய்மையாகும் எனவும், பச்சை நாயுருவி வேரால் பல் அழுக்குகள் நீங்கி பற்கள் அழகாகும் எனவும் நம் முன்னோர் கூறி வைத்துள்ளனர்.

பல் துலக்குவதற்கு மேற்குறிப்பிட்ட குச்சிகள் மட்டுமின்றி மா, தேக்கு, மருது, நாவல், விளா, நொச்சி, புங்கை மர குச்சிகளைப் பயன்படுத்தலாம், என்றும் சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

துவர்ப்பு சுவையுள்ள குச்சிகளால், ஈறுகளில் ஏற்படும் புண்கள், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல் போன்றவை குணமடைந்து ஈறுகள் பலமடையும். பற்கள் பளிச்சென்று காட்சி அளிக்கும். கசப்பு சுவையுள்ள குச்சிகளால் பற்களில் குடியேறியுள்ள கிருமிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருக்கும். பசுமையான மரங்களிலிருந்து, பூச்சி அரிக்காத நல்ல குச்சிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை நீரால் கழுவி, ஒரு பக்க நுனியை கடித்து, ‘பிரஷ்’ போல மாற்றிக்கொண்டு பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு பல் இடுக்குகளிலும், ஈறுகளிலும் குச்சியின் நுனியைக்கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும். நடந்துகொண்டும் `செல்போனில்’ பேசிக்கொண்டும் பல் தேய்க்கக்கூடாது. ஓரிடத்தில் நிலையாக இருந்து, மனதை ஒருமுகப்படுத்தி பல் துலக்க வேண்டும், என்கிறது சித்த மருத்துவம்.

வைட்டமின்-சி குறைபாட்டால் ஏற்படும் `ஸ்கர்வி’ நோயினால் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிவது இயல்பு. எனவே, அந்த நிலையில் வேப்பங்கொழுந்தால் ஈறுகளை மிருதுவாகத் தடவலாம். திரிபலா சூரணத்தால் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவை) வாய் கொப்பளிக்கலாம். அத்துடன், வைட்டமின்-சி குறைபாட்டைப் போக்க மருத்துவ சிகிச்சை தேவை. கால்சியம் சத்து நிறைந்த கீரைகள், காய்கள், பால் பொருட்களை உட்கொள்வதால் பற்கள் பலமடையும்.

சிறிது வறுத்த ஓமத்தின் பொடி, மாசிக்காய், லவங்கப்பட்டை, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மிளகு ஆகியவற்றின் பொடிகளைப் பயன்படுத்தலாம். லவங்கம், சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்துப் பொடி செய்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் தேய்த்தால் அஜீரணம், வாந்தி போன்றவை குணமாகும். திரிபலா சூரணத்தைப் பற்பொடியாக தினமும் பயன்படுத்தினால் பல் கூச்சம் நீங்கும், பற்களில் நோய்க் கிருமிகள் அண்டாது.
🌷🌷

கண் குறைபாடுகள் அனைத்திற்கும் தீர்வு தரும் நேத்திர பூண்டு தைலம் செய்முறை விளக்கம்:

*கண் குறைபாடுகள் அனைத்திற்கும் தீர்வு தரும் நேத்திர பூண்டு தைலம் செய்முறை விளக்கம்:*

1.சுத்தமான நல்லெண்ணெய் – 100 மி
2.நேத்திரப்பூண்டு – 50 கிராம்
3.தும்பை -10 கிராம்
4.கரிசாலை -10 கிராம்
5.பொன்னாங்காணி -10 கிராம்
6.கற்றாழை – 10 கிராம்

*செய்முறை விளக்கம்:*

✍️ வரிசை எண் 3 முதல் 6 வரை உள்ள இலைகளை சுத்தம் செய்து அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொள்ளுங்கள்

✍️ பிறகு நல்லெண்ணெய் ஒரு வாணலியில் ஊற்றி கொதிக்க வைத்து அதில் நேத்திரப்பூண்டு அரைத்து அதில் போட்டு நன்கு கொதிக்க விடவும் பிறகு 50-மி யாக சுண்டியதும் வடிகட்டி கொள்ளவும்

✍️ வடிகட்டிய எண்ணையில் ஏற்கவனே தயார் செய்து வைத்துள்ள சாறு கலந்து கொள்ளவும் 

✍️ கலந்து வைத்து கொண்டு இந்த எண்ணெயை மதியசூரிய வெயிலில் படும்படி ஒரு 3 மணிநேரம் வைக்கவும்

பிறகு,இந்த எண்ணை பயன்படுத்த தயார்

*பயன்படுத்தும் முறை:*

✍️காலை மற்றும் இரவு ஓய்வு நேரங்களில் இரு கண்களுக்கும் 2 சொட்டு அளவு விட்டு கண்களை மூடி மூடி திறக்கவும் பிறகு 30 நிமிடம் ஓய்வில் இருக்கவும்,பிறகு தேவைப்பட்டால் முகம் கழுவி கொள்ளலாம்

✍️இதை 15 முதல் 60 வயதினர் மட்டுமே பயன்படுத்த வேண்டும், குழந்தைகள் எடுக்க கூடாது

✍️அதிகப்பட்சம் 21 நாட்கள் பயன்படுத்தினால் போதும்

*மருத்துவ பயன்கள் என்ன???*

1.கண்களை சுத்தம் செய்யும்
2.புரை ஆரம்ப நிலையில் தடுக்கும்
3.கண் எரிச்சல் கண் அரிப்பு உடனடியாக தீரும்
4.கண் வலி நீங்கும்
5.தூரபார்வை மற்றும் கிட்டபார்வை தெளிவு பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது

*கவனிக்க:*

நாட்டுமருந்து கடைகளில் இந்த தைலம் விற்பனைக்கு கிடைக்கும் இதில் ஒரிஜினல் மட்டுமே பலன் கொடுக்கும் மற்றவை பலன் கொடுக்க வாய்ப்பில்லை தயவுசெய்து விலை குறைவாக வாங்க வேண்டாம்

இது ஒரு பாரம்பரிய வைத்திய முறை கண் குறைபாடு உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

ரத்த அழுத்தம் BP நிரந்தரமாக சரியாக / குறைய இயற்கை வைத்திய முறை செய்முறை விளக்கம்.

*ரத்த அழுத்தம் BP நிரந்தரமாக சரியாக / குறைய இயற்கை வைத்திய முறை செய்முறை விளக்கம்:*

*தேவையான மூலப்பொருட்கள்:*

1.கருங்காலிப்பட்டை - 50 கிராம்
2.சத குப்பை - 50 கிராம்
3.சீரகம் - 50 கிராம்
4.கருஞ்சீரகம் - 50 கிராம்
5.ஏலக்காய் - 20 கிராம்

*சூரணம் செய்முறை விளக்கம்:*

1 to 4 வரை கூறியவற்றை எடுத்து சுத்தம் செய்து வறுத்து தூள் செய்து வைத்து கொள்ளவும்

அதனுடன் ஏலக்காய் இடித்து கலந்து கொள்ளுங்கள்

மூலப்பொருட்கள் நாட்டுமருந்து கடையில் கிடைக்கும்

*சூரணம் சாப்பிடும் முறை:*

100 மி நீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து சுண்டவைத்து சூடாக டீ போல காலை மற்றும் இரவு உணவுக்கு 30 நிமிடங்கள் முன் தினமும் தொடர்ந்து 2 மாதம் சாப்பிட இரத்த அழுத்த நோய் குறையும்.

*மருத்துவ பலன்கள்:*

1.ரத்த அழுத்தம் குறையும்
2.தலைசுத்தல் சரியாகும்
3.பாத அரிப்பு சரியாகும்
4.கண் எரிச்சல் குணமாகும்
5.இதய துடிப்பு சீராகும்

இது ஒரு பக்கவிளைவு இல்லாத இயற்கை சூரணம் அனைத்து வயதினருக்கும் ஏற்றது / சர்க்கரை உள்ளவர்களுக்கு மட்டும் பலன் குறைவாக கிடைக்கும்,மற்றபடி அனைவருக்கும் ஏற்றது

உடல் எடை குறைய ஒரு எளிய பானம்...

*உடல் எடை குறைய ஒரு எளிய பானம்*

*தேவையான மூல பொருட்கள்*

1.துளசி - சாறு 1 ஸ்பூன் 
2.எலுமிச்சை - சாறு 1 ஸ்பூன்
3.சுத்தமான தேன் - ஒரு ஸ்பூன்
4.பட்டைப்பொடி - 1/2 ஸ்பூன்
5.தண்ணீர் - 200மி

*செய்முறை:*

✍🏿 தண்ணீர் நன்றாக கொதிக்க வைத்து அதில் பட்டை பொடி கலந்து சிறிது நேரம் சுண்ட கொதிக்க வைக்கவும்

✍🏿 அதில்,துளசி சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நன்றாக ஆற்றி கொள்ளவும்

✍🏿 அதில் சுத்தமான நாட்டு தேன் கலந்தால் போதுமானது

*சாப்பிடும் முறை*

தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த பானத்தை சூடான பதத்தில் குடிக்க வேண்டும் பிறகு ஒரு மணி நேரம் கழித்து உணவும் சாப்பிடலாம்

*பயன்கள்*

1.உடல் எடை குறையும்
2.வயிறு சதை, கை, கால் சதை குறையும்.
3.வயிறு சுத்தமாகும்
4.வாயு குறைபாடு நீங்கும்
5.உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கும்

*கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்*

1.எண்ணெய் உணவுகள்,இரவு நேர அசைவம்,பேக்கரி உணவுகள் கூடாது

2.எண்ணையில் பொறித்த அசைவம் கூடாது

3.தினசரி குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், சுடுநீர் என்றால் மிக நல்லது

4.அரிசி உணவு அளவாக சாப்பிட வேண்டும், குறைத்து கொள்ளுங்கள்

5.முட்டை வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுங்கள்

முக்கியமாக,இரவு நேரமாக தூங்க பழகி கொள்ளுங்கள்,காலை சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள்


*முக்கிய குறிப்பு*

இந்த பானம் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க மிக அருமையாக வேலை செய்யும் ஆனால் அதற்கு சில உணவு கட்டுப்பாடுகளும்,உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்...எதையும் செய்யாமல் உடல் எடை மட்டும் குறைவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று...🙏🏼

சிறுநீரக கல் கரைய மற்றும் சிறுநீர் கடுப்பு சரியாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

சிறுநீரக கல் கரைய மற்றும் சிறுநீர் கடுப்பு சரியாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

*தேவையான மூலப்பொருட்கள்*

1.பரங்கிக்காய் விதை - 50 கிராம்
2. வெள்ளரி விதை - 50 கிராம்
3. நெருஞ்சில் முள் - 50 கிராம் 
4. வில்வ வேர்ப்பட்டை - 50 கிராம் 

*செய்முறை விளக்கம்:*

மேற் கூறிய பொருட்களை காயவைத்து வறுத்து சுத்தம் செய்து கொள்ளவும்

காயவைத்து பொருட்களை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்து கொள்ளுங்கள்

10 நாட்களுக்கு வரும் வரை குறைவான அளவில் அரைத்து வைத்து கொள்ளுங்கள்,இல்லை என்றால் கட்டி கட்டி கொள்ளும்

*சாப்பிடும் முறை:* 

தினமும் காலை வெறும் வயிற்றில் உணவுக்கு முன் மட்டும் 200 மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு (5 கிராம்) கலந்து நன்கு கொதிக்க வைத்து 100 மி யாக சுண்டியதும் சூடாக குடிக்கவும்

குறைந்தது ஒரு நாள் ஒன்றுக்கு 4-5 லி தண்ணீர் குடிக்க வேண்டும்

*மருத்துவ பயன்கள்*

1.சிறுநீரக கற்கள் வெளியேறுகிறது
2.சிறுநீரக அடைப்பு சரியாகும்
3.சிறுநீரக எரிச்சல் அடியோடு சரியாகும்
4.பித்தப்பை கற்கள் கரையும்

இந்த சூரணம் அனைவரும் ஏற்றது...சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் பலன் கொடுக்காமல் போக அதிக வாய்ப்புண்டு...

கை கால் மூட்டு வலி சரியாக வீக்கம் குறைய ஒரு எளிய வீட்டு வைத்தியம் மூலிகை எண்ணெய் செய்முறை விளக்கம்

*கை கால் மூட்டு வலி சரியாக வீக்கம் குறைய ஒரு எளிய வீட்டு வைத்தியம் மூலிகை எண்ணெய் செய்முறை விளக்கம்*

*தேவையான மூலப்பொருட்கள்:*

1.நொச்சி இலை - 10 எண்ணிக்கை
2.உத்தாமணி இலை - 5 எண்ணிக்கை
3.சுக்கு - 2 சிறிய அளவிலான துண்டு
4.நல்லஎண்ணெய் - 100 மி

*செய்முறை விளக்கம்:*

✍️ நல்லெண்ணெய் நன்றாக சூடாக்கி கொள்ளவும் 

✍️ அதில் நொச்சி மற்றும் உத்தாமணி இலை ஆகியவைற்றை அரைத்து சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்

✍️ நல்ல கொதி நிலையில் உள்ள பொழுது சுக்கு அரைத்து அதில் கலந்து சுண்ட காய்ச்சவும்

நன்கு சுண்டிய எண்ணையை குளிர்ச்சி படாத பகுதியில் ஒரு டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளவும்

*பயன்படுத்தும் முறை:*

தினமும் இரவு உறங்க செல்லும் முன்பு வலி உள்ள மூட்டு பகுதிகளில் நன்கு அழுத்தி தேய்த்து கொள்ளவும் பிறகு ஒத்தடம் கொடுக்கவும் இல்லை என்றால் காயும் வரை விட்டால் போதும்

*:::நினைவில் கொள்க:::*

ஏதேனும் விபத்து ஏற்பட்டு எலும்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இது பலன் கொடுக்காது...மற்றபடி அனைத்து வயதினருக்கும் பலன் கொடுக்கும்

தீராத இருமல் / கக்குவான் இருமல் / ஈளை இருமல் நிரந்தரமாக குணமாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்

*தீராத இருமல் / கக்குவான் இருமல் / ஈளை இருமல் நிரந்தரமாக குணமாக இயற்கை மூலிகை சூரணம் செய்முறை விளக்கம்*

*தேவையான மூலப்பொருட்கள்*

1.திரிகடுகு - 25 கிராம்
2.கிராம்பு - 10 கிராம்
3.ஏலக்காய் - 25 கிராம்
4.பச்சை கற்பூரம் - 10 கிராம்
5.வாய்விளங்கம் - 25 கிராம்
6.அதிமதுரம் - 25 கிராம்
7.சீரகம் - 25 கிராம்
8.ஓமம் - 10 கிராம்

*சூரணம் செய்முறை விளக்கம்:*

மேற்கூறியவற்றை அனைத்தையும் சுத்தம் செய்து காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்

*சாப்பிடும் முறை:*

100 மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு ( 3 கிராம் ) சூரணம் கலந்து காலை மற்றும் மாலை உணவுக்கு முன் குடிக்கவும்

*கடைபிடிக்க வேண்டிய வழிமுறை:*

1.குறைந்தது 2- 3 மாதம் இதனை தவறாது கடைபிடிக்கவும்

2.சுடுநீர் அதிகம் குடிக்க வேண்டும்

3.இனிப்பு,எண்ணெய் பொருட்கள், அதிக காரம் கூடாது

*மருத்துவ பயன்கள்:*

1.தீராத அனைத்துவகை இருமல் நிரந்தரமாக குணமாகும்

2.நுரையீரல் பலப்படும்

3.வயிறு புண் சரியாகும்