Saturday, July 24, 2021

சிறுநீர் கல் கரைய வைத்தியமும் தடுக்கும் வழிமுறையும்...

சிறுநீர் கல் கரைய வைத்தியமும் தடுக்கும் வழிமுறையும்:::

சிறுகண்பீளைச் சமூலத்தை ஒன்றிரண்டாகப் பொடித்து விதிப்படி குடிநீர் செய்து 30 மி.லி தினம் இருவேளை குடித்து வர சிறுநீரில் குருதி வருதல், சிறுநீரகக் கற்கள் வெள்ளை ஆகியன குணமாகும்.

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது. இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது. அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன. நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன. சுவையும் அதிகம். போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது. உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது.

நாம் ஏன் உணவு உண்கிறோம்?

நமது அன்றாட வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே நமக்கு உணவு தேவைப்படுகிறது. நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை. அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும். ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது. தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பலநோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிறுகச் சிறுக கொல்லுகின்றன.

இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும்.

உணவின் அளவு

ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான். இதனால் தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம், "அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள்" என்று சொன்னார்.

வெற்றுக் கலோரி வேண்டாம்

இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஷாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.

எவை ஆரோக்கியமானவை?

உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.

ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும். கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உட்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும். இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற்கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.

புதிய ஆய்வு

ஆனால் இப்பொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது. கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும். Brigham and Women’s Hospital லில் உள்ள Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும்.

சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.

நமது சூழலில் அதிகம்

எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே.. நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். நமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.

வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பார தூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம்.

சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.

Friday, July 23, 2021

சரும நோய்களை எளிதில் போக்கும் திருநீற்றுப்பச்சை !!

சரும நோய்களை எளிதில் போக்கும் திருநீற்றுப்பச்சை !!


திருநீற்றுப்பச்சை செடியில் ஊதா கலந்த வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை.

இந்த இலைகளில் இருந்து கற்பூர மணம் கொண்ட நறுமணமிக்க எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அது மருத்துவ குணம் நிறைந்தது.

படர்தாமரை தொந்தரவால் அவதிப்படுகிறவர்கள், இதனை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். எல்லாவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. 

விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல் இருக்கும்போது வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படும்.

சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது.

ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு  தேக்கரண்டி விதையை நீரில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். 

எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம். ஜீரண பாதையில் ஏற்படும் புண்களை இது ஆற்றும். நெஞ்செரிச்சலையும் போக்கும். மலச்சிக்கலை போக்குவதற்கு இது சிறந்த மருந்து.

மலச்சிக்கலால் அவதிப்படும் முதியோர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நிவாரணமாகும்.

சித்தம் தெளிவிக்கும் மகாவில்வம்.

சித்தம் தெளிவிக்கும் மகாவில்வம்.
*********************************


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்று திருமூலர் போற்றுவது மகாவில்வ தளம் என்பதில் ஐயமில்லை. மகாவில்வ தரிசனம் என்பது சிவ தரிசனத்திற்கு இணையானது ஆகும். சிவஸ்துதி எனும் மந்திரத்தில் ஏகவில்வம் சிவார்ப்பணம் என்று குறிப்பிடப்படும் வில்வம் சிவ மூலிகைகளுள் சிகரம் மான மூலிகையாகும் மூன்று இதழ்களைக் கொண்டு தோற்றமளிக்கும் வில்வம் சிவபெருமானின் முக்கண் குறிப்பதாக சிவனடியார்கள் போற்றுவர். இதேபோல் 5 ,7 ,10, இதழ்களைக் கொண்ட வில்வம் மரங்களும் உண்டு. இவை அனைத்தும் சிவ தத்துவத்தை விளக்கும் அம்சமாக உள்ளவை என சைவ சமய நூல்கள் போற்றும். சிவ வழிபாட்டின் முதற் பொருளான வில்வம் மரத்தை தொட்டாலும், பார்த்தாலும்,  '
அதீத சக்தி' (cosmic power) உடலுக்கு. உள்த்துக்கும் கிடைக்கிறது என்பது மகரிஷிகளும், ஆச்சாரியர்களும் அனுபவ பூர்வமாக அறிந்த உண்மை! .

மனக் கோளாறு காரணமாக உடல் நலிவுற்றவர்கள்; ஏராளமான பிரச்சினைகளில் மூழ்கி உடலையும் மனதையும் சீரழித்து கொண்டு பித்தம் முற்றியவர்கள் தினசரி காலையில் வில்வ இலைகளைக் கொண்டு இறைவனை அர்ச்சித்து அதில் 10 இலைகளை எடுத்து வாயிலிட்டு மென்று சிறிது வெந்நீருடன் ( தேன் 2 ஸ்பூன் கலந்து ) விழுங்கவும். 1 மணி நேரம் எதுவும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு 48 நாட்கள், 96 நாட்கள் என சாப்பிட்டு வர பிற மருத்துவ முறைகளில் காணாத நன்மைகளை காணலாம். உள்மன சுமைகளை ( depression ) கலைந்து சமநிலை எய்த  வில்வ இலைகள் உதவுகின்றன. இம்முறையை பின்பற்றும் போது கட்டாயம் மாமிச உணவு , புகை , காபி , டீ , அருந்தக்கூடாது. 

சித்தம் கலங்காது இருக்க உதவும் வில்வம் பித்தம் தணியப்  பெரிதும் துணைபுரிகின்றது. பித்த அதிகம் மூளையை பிடிக்கும்போது சித்த பிரமையும் , வயிற்றைப் பற்றும் போது குடற் புண்ணும் சர்மத்தை தாக்கும் போது சொறி, சிரங்கு , தோல் நோய் , கரப்பான் இன்று பல நோய்கள் உண்டாகின்றன. இத்தகைய பித்த தொடர்பான அனைத்து நோய்களையும் வரவொட்டாமலும் , வந்தாள் தொடர் சிகிச்சை மூலம் விரட்டவும் கீழ்கண்ட முறை முற்றிலும் பயனாகின்றது:.

பசுமையான வில்வ இலைகள் 10 ,  சீரகம் 2 சிட்டிகை இரண்டையும் அரைத்து சிறு உருண்டையாக்கி காலை வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது மோருடன் பருகிவர 2 மாதங்களில் வியக்கத்தக்க பலனை காணலாம். தோல் நோய் அறிகுறி தென்பட்டால் முளையிலே கில்லி தடுக்க வில்வ இலைகள் 20 எடுத்து அத்துடன் மிளகு 10 , சீரகம் 2 சிட்டிகை சேர்த்து அரைத்து பசு வெண்ணெயுடன் கலந்து, தினசரி காலை வேளை பருகிவர 3  மாதங்களில் நிவாரனம் பெறலாம். நவீன மருத்துவ சிகிச்சை இந்நோய்க்கு ஆண்டுக்கணக்கில் மருந்து சாப்பிட சிபாரிசு செய்வதை இதன் மூலம் தவிர்க்கலாம். 

குடற்புண், மூலநோய்,கண் பார்வை மங்குதல்,ஆகியவற்றை வில்வ இலைச் சூரணத்தைப் வெந்தயத்துடன் கலந்து ( அரை ஸ்பூன் வில்வ இலை சூரணம் + கால் ஸ்பூன் வெந்தயம் ) இளநீருடன் பருகிவர துரித பலன் காணலாம்.
இளமைத் தவறுகளால் விளையும் பால்வினை நோய்கள், புண், ரணங்கள் ஏற்படுமேயானால், வில்வப் பழச்சதையுடன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அவை விலகும் மலச்சிக்கல் வராது.

கடுமையான நீடித்த சரும நோயில் தவிப்பவர்களுக்கு வரப்பிரசாதம் 'வில்வம்' எனலாம். வில்வ இலையுடன் அதன் வேர்பட்டையும் கலந்து கசாயம் போல் செய்து தேன் கலந்து தினசரி 1 குவளை பருகிவர விரைவில் அவை விலகும். 'வெண்புள்ளி' நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கண்ட முறைப்படி தயாரித்து காலை வேளை சாப்பிட்டு மாலையில் வில்வ காய்களைக் கொண்டு தண்ணீரால் அரைத்து ( சிறிது மஞ்சள் கூட்டவும் ) வெண்புள்ளி மீது பூசி உலரவிடவும்.தொடர்ந்து செய்து வர வெண்புள்ளிகள் மறைந்து மீண்டும் பழைய சருமத்தைப் பெற்றிடும். 

பனிக்கால ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து 6 மாதம் வில்வ இலை சூரணத்துடன் அதிமதுரம், சிற்றத்தை சூரணங்களை கால் ஸ்பூன் ( வகைக்கு ) எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, முற்றிலும் நிவாரணம் பெறலாம்.  இதனை மிகச் சிறப்பாக ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை தொடர்ந்து செய்தால் ஆஸ்துமா ( winter asthma ) வராது தடுக்கலாம். 

சுருங்கக்கூறின்,மனித உடம்பின் ராஜா உறுப்புகளான மூளை, இருதயம், வயிறு, நுரையீரல், நரம்புகளுக்கு 'வில்வ' மரம் உதவுகிறது . வில்வ மர இலை ,வேர் ,பட்டை, பழம் ஆகியவற்றை மூலமாகக் கொண்டு தயாரிக்கப்படும் 'வில்வாதி லேகியம்' அற்புதமான கல்பமாகும். உடலை இருக்க வைத்து நோயின்றி காக்கும்! 

சிவாலயங்களில் மட்டுமே இதுவரை பயன் ஆகிவந்த 'வில்வமரம்' விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கேரளத்தில் உள்ள வேதியல் விஞ்ஞானியின் 'வில்வ இலைகளை' ஆராய்ச்சி செய்ததில் 'நீரிழிவு' நோயாளிகளுக்கு ஒரு 'ஸ்வீட்டான' செய்தியை அளித்துள்ளார். தினசரி காலையில் 10 முதல் இருபது வில்வ இலைகளை மென்று சாப்பிட்டு வருபவர்களுக்கு காலப்போக்கில் 'நீரிழிவு நோய்' கட்டுப்பட்டு விடக் கூடிய வகையில் மீண்டும் கணையத்தைச் சுரப்பிக்கத் தூண்டுகிறதாம். அத்துடன் நீரிழிவு நோயால் வரும் பிற பாதிப்புகளில் இருந்தும் காப்பாற்றுகின்றதாம். பின்விழைவற்ற  இம்முறையால் விரைவில் இந்திய மக்கள் மட்டுமின்றி, உலக மக்கள் நீரிழிவு நோயிலிருந்து விடுபட வாய்ப்பு உண்டு.

சிலருக்கு சில நேரங்களில் கை, கால், முதுகு, பகுதிகளில் எரிச்சலுடன் கூடிய வலியால் அவதிப்படுவார்கள். இதற்கு ஆண்டுக்கணக்கில் மருந்து சாப்பிடும் குணம் காண இயலாதவர்களுக்கு 'வில்வம்' ஒரு வரப்பிரசாதமாகும். தினசரி 5 முதல் 10 வில்வ இலைகளை ( வெட்டிவேர், சந்தனம் ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீருடன் ) மென்று விழுங்கி வர 'பித்த எரிச்சல்' எனும் மேற்கண்ட நோய் படிப்படியே தணியும்.

ஸ்தல விருட்சங்களுள் 'மகாவில்வம்' கையிலயங்கிரிக்குரியதாகும். மூவிலை கொண்ட வில்வத்தைப் தரிசித்தால் ஒரு சிவாலய தரிசனத்துக்கு இணையாகுமென்பர். 10 தளம் கொண்ட மகா வில்வத்தைத் தரிசனம் செய்வது என்பது 108 சிவாலயங்களை வலம்வந்த புண்ணியச் செயல் என்பர் பெரியோர், 10 இதழ்களைக் கொண்ட 'மகா வில்வத்தை' கரங்களிலே கொண்டு, சிவஸ்துதி' யை வாயார, மனதார தரிசித்த  ராவணன் 'சாகாவரம்' பெற்றவன்; நாம் ராவணனைப் போல் பூஜிக்க முடியாவிட்டாலும், வில்வ இலைகளை கிடைக்கும்போது சிவ ஸ்துதி  செய்து அதனை முறைப்படி அருந்திவர, குறைந்தபட்சம் 'நோயற்ற, வாழ்வு வாழலாம்' !

வீட்டுக்கு ஒரு வில்வ மரம் இனி இருந்தால். இல்லையொரு பிணித் தொல்லை யென நல வாழ்வு வாழலாம்! தூய்மையும், பூஜிக்கும் எண்ணமும் உள்ளவர்கள் வீட்டின் முன்புறம் வில்வப் கன்றுகளை நட்டு `துளசிமாடம்' போல் `வில்வமாடம்' வைத்து வழிபட்டு பயன்படுத்தலாம்! பொதுவாக வில்வமரத்தை தெய்வீக விருட்சமாக ஹிந்துக்கள் போற்றுவதால் ஆலயங்களில் மட்டுமே இதனை வளர்ப்பது ஐதீகம்!

1992 ஆம் வருடம் தினமணிகதிரில்
வெளிவந்த கட்டுரை.
*********************************
வைத்யர் சுகவனேஸ்வரன்
சேலம்.ஆத்தூர்.
*********************************

சோம்பின் நன்மைகள்.

சோம்பின் நன்மைகள்.:


சோம்பு நாம் தினமும் சமையலில் சேர்க்கும் ஒரு பொருள். ஆனால் அதன் மருத்துவ குணங்களை பலரும் அறிந்திருப்பதில்லை.  

சோம்பின் நன்மைகள்.:
செரிமான சக்தியைத் தூண்ட:
எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளைக் கூட செரிக்கச் செய்யும் தன்மை சோம்பிற்கு உண்டு. உணவுக்குப்பின் சிறிதளவு சோம்பை வாயில் போட்டு மென்று சாறை கொஞ்சம் கொஞ்சமாக  விழுங்கி வந்தால் உண்ட உணவு எளிதில் சீரணமாகும்.

குடல்புண் ஆற:
சாப்பிட்ட உணவினால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமடைகின்றன. இதனால் குடல் சுவர்கள் பாதிக்கப்பட்டு குடலில் புண்கள் ஏற்படுகின்றன. இந்தப் புண்கள் ஆற சோம்பை தினமும் உணவில் சேர்த்து வந்தால் குடல்புண் நாளடைவில் குணமடையும்.

வயிற்றுவலி, வயிற்று பொருமல் அஜீரணக் கோளாறுகளால்  வயிற்றுவலி, வயிற்று பொருமல் ஆகியவை ஏற்படுகின்றன. இதற்கு உடனே சிறிதளவு சோம்பை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் சிறிது நேரத்தில் குணம் தெரியும்.

கருப்பை பலம்பெற கருப்பை பாதிப்பினால், சிலர் குழந்தை பேறு இல்லாமல் தவிப்பர். இவர்கள், சோம்பை (பெருஞ்சீரகத்தை) இளம் வறுவலாக வறுத்து பொடித்து, வேளையொன்றுக்கு 2 கிராம் வீதம் தனியாகவோ அல்லது பனங்கற்கண்டு கலந்தோ சாப்பிட்டு வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் விலகும்.

ஈரல் பாதிப்பு நீங்க உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான். ஈரல் பாதிக்கப்பட்டால் பித்தம் அதிகமாகி பல நோய்களுக்கு ஆளாக நேரிடும். ஈரல் நோயைக் குணப்படுத்த சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 தேக்கரண்டி  அளவு சாப்பிட்டு வந்தால் ஈரல் நோய் குணமாகும்.

இருமல், இரைப்பு மாற நாள்பட்ட வறண்ட இருமல், இரைப்பு இவைகளால் அவதிப்படுபவர்கள் சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதல் குணமாகும்.

காய்ச்சல் அதிக குளிர் சுரம் இருந்தால் சோம்பை நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால் குளிர் சுரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

பசியைத் தூண்ட பசியில்லாமல் அவதிப்படுபவர்கள் சோம்பை தனியாக மென்று சாப்பிட்டு வந்தால் நன்கு பசியெடுக்கும்.

Thursday, July 22, 2021

முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்

*முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்*

👉 *தேவையான பொருள்*

1.கற்பூர துளசி - ஒரு கைப்புடி அளவு
2.புதினா இலை - ஒரு கைப்புடி அளவு
3.தண்ணீர் - 200 மி.லி
4.தேன் - ஒரு தேக்கரண்டி

👉 *செய்முறை*

✍️முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️பிறகு கற்பூர துளசி இலை மற்றும் புதினா இலை இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

✍️மேலும் கொதிக்கும் தண்ணீருடன் அரைத்த பொருட்களை சேர்த்து கொண்டு 100 மி.லி நீர் வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️இவ்வாறு உருவான நீருடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்துக்கொண்டு தினந்தோறும் இரவு துக்கத்திற்கு முன் குடித்து வந்தால் முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்கும்

முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்

*முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்*

👉 *தேவையான பொருள்*

1.கற்பூர துளசி - ஒரு கைப்புடி அளவு
2.புதினா இலை - ஒரு கைப்புடி அளவு
3.தண்ணீர் - 200 மி.லி
4.தேன் - ஒரு தேக்கரண்டி

👉 *செய்முறை*

✍️முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️பிறகு கற்பூர துளசி இலை மற்றும் புதினா இலை இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

✍️மேலும் கொதிக்கும் தண்ணீருடன் அரைத்த பொருட்களை சேர்த்து கொண்டு 100 மி.லி நீர் வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

✍️இவ்வாறு உருவான நீருடன் ஒரு தேக்கரண்டி தேனையும் சேர்த்துக்கொண்டு தினந்தோறும் இரவு துக்கத்திற்கு முன் குடித்து வந்தால் முற்றிலுமாக குறட்டை பிரச்சனை நீங்கும்

வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

*வெண்புள்ளிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!*
 
நம் உடலைப் போர்த்தியிருக்கும் சருமத்தின் எல்லாப் பகுதிகளிலும் இயல்பான நிறம் மாறி, வெள்ளை நிறம் தோன்றுவதை வெண்புள்ளி என்கிறோம்.  
 
இது மெலனின் என்ற நிறமிக் குறைபாட்டால் ஏற்படுகிறது.  
 
வெவ்வேறு அளவுகள், வடிவங்களில் இருக்கும். 
 
இந்தப் புள்ளிகள் முதலில் ஓர் இடத்தில் தோன்றி, உடல் முழுவதும் பரவும்.  
 
நிச்சயமாக, இது தொற்று நோய் அல்ல. 
 
காரணங்கள்: 
 
உணவில் புரதம் மற்றும் வைட்டமின் குறைபாடு 
வயிற்றில் உள்ள கிருமிகள், 
நாட்பட்ட வயிற்றுக் கோளாறுகள், 
ஹார்மோன் பாதிப்பு, 
மன அழுத்தம், 
நோய்வாய்ப்பட்ட நிலை, 
அமீபியாசிஸ், 
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள் 
கார்போக அரிசியைப் பொடித்து, கால் ஸ்பூன் எடுத்து உண்ணலாம். 
 
காட்டுச் சீரகப் பொடி, மிளகுத் தூள் சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் நீரில் கலந்து சாப்பிடலாம். 
 
நுணா இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் சாப்பிடலாம். 
 
அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து உண்ணலாம். 
 
அதிமதுரப் பொடி, மிளகுப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
வல்லாரை இலையை அரைத்து சுண்டைக்காய் அளவு காலையில் உண்ணலாம். 
 
அரை ஸ்பூன் செங்கொன்றைப் பட்டைப் பொடியில் நீர் சேர்த்துக் காய்ச்சி வடித்து, கால் டம்ளர் அருந்தலாம். 
 
அரை ஸ்பூன் அருகம்புல் பொடியில் ஆலம் பால் ஐந்து சொட்டுகள் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் தினமும் காலையில் உண்ணலாம். 
 
வேப்பிலை, ஒமம் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
தராஇலை, ரோஜாப்பூ இதழ் இரண்டையும் சமஅளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
கரிப்பான் இலைப் பொடி, சுக்குப் பொடி சம அளவு கலந்து, அரை ஸ்பூன் உண்ணலாம். 
 
வெளிப்பிரயோகம்: 
 
கற்கடாகசிங்கியைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம். 
 
கார்போக அரிசியையும், புளியங்கொட்டையையும் நீரில் ஊறவைத்து, அரைத்துப் பூசலாம். 
 
கண்டங் கத்தரிப் பழத்தைக் குழைய வேகவைத்து வடித்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சிப் பூசலாம். 
 
துளசி இலையை மிளகுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். 
 
முள்ளங்கி விதையைக் காடி நீரில் அரைத்துப் பூசலாம். 
 
மருதோன்றி இலைச் சாற்றில் தாளகத்தை இழைத்துப் பூசலாம். 
 
காட்டு மல்லிகை இலையை அரைத்துப் பூசலாம். 
 
சிவப்புக் களிமண்ணை இஞ்சிச் சாற்றில் கலந்து பூசலாம். 
 
மஞ்சளை நீர் சேர்த்துக் காய்ச்சி, வடித்து, அதில் கடுகெண்ணெய் சேர்த்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பின் பூசலாம். 
 
செங்கொன்றைப் பட்டையை அரைத்துப் பூசலாம். 
 
சேராங்கொட்டைத் தைலத்தைப் பூசலாம். 
 
சேர்க்க வேண்டியவை: 
 
பழங்கள், காய்கறிகள், தானியங்கள், கொட்டைகள், சிவப்புக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கறிவேப்பிலை, இஞ்சி. 
 
தவிர்க்க வேண்டியவை: 
 
காபி, தேநீர், சர்க்கரை, வெண்மையான மாவுப் பொருட்கள், தீட்டப்பட்ட தானியங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, புளிப்புப் பொருட்கள் மற்றும் மீன்.
 
*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*