Thursday, September 29, 2016

சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

நாட்டுமருந்து
www.facebook.com/NaattuMarunthu
http://naattumarunthu.blogspot.in/

நாட்டுமருந்து வாட்சப்குழு +919787472712 சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!
மூக்கடைப்பு: வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிப்பதால், உடலினுள் வெப்பம் தூண்டப்பட்டு, சுவாசக் குழாய்களில் உள்ள அழற்சிகள் நீக்கப்பட்டு, மூக்கடைப்பில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
தொண்டைப்புண்: தொண்டைப்புண் அல்லது தொண்டை கரகரப்பு இருக்கும் போது, வெதுவெதுப்பான நீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாற்றினைக் கலந்து குடிப்பதால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பித்தக்கற்கள்: பித்தக்கற்கள் இருப்பவர்கள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், சிறிது ஆலிவ் ஆயில் கலந்து தொடர்ந்து குடித்து வந்தால், பித்தக்கற்கள் கரையும். எடை குறையும்: தினமும் காலையில் சுடுநீரில் 1/2 டீஸ்பூன் உப்பு, 1 டீஸ்பூன் மிளகுத் தூள், சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்களை கரைக்கும் செயல் வேகப்படுத்தப்பட்டு, உடல் எடையும் வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
பல் வலி: பல் வலியால் கஷ்டப்படுபவர்கள், இந்த கலவையால் தினமும் வாயைக் கொப்பளித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை கிருமிகளை அழித்து, பல் வலியில் இருந்து நிவாரணம் தரும்
காய்ச்சல்: காய்ச்சல் இருக்கும் போது, சுடுநீரில் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சையுடன், தேன் சேர்த்து கலந்து குடித்து வர, உடலைத் தாக்கிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரித்து, காய்ச்சலில் இருந்து விரைவில் குணமாகலாம்.
குமட்டல்: உப்பு மற்றும் மிளகுத் தூள் வயிற்றில் உள்ள அமிலங்களை நீர்க்கச் செய்யும், எலுமிச்சையின் மணம் குமட்டலைக் குறைக்கும். மொத்தத்தில் இந்த கலவையை எடுத்து வர வயிற்றுப் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..!

நாட்டுமருந்து www.facebook.com/NaattuMarunthu http://naattumarunthu.blogspot.in/

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..! ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவையல்‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம். சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல் தேவையான பொருள்கள் : தூதுவளை இலை - 2 கப் புதினா - 1 கப் பூண்டு - 4 பல் இஞ்சி - 1/2 துண்டு சிறிய வெங்காயம் - 10 சிவப்பு மிளகாய் - 6 எண்ணெய் - 2 டீஸ்பூன் புளி - கோலிக்குண்டு அளவு துருவிய தேங்காய் - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு. தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை : * பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். * கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும். * கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும். * ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும். * மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும். * சுவையான சத்தான தூதுவளை துவையல் ரெடி. * புதினா, தூதுவளை இலையை சிறிது வதக்கினால் மட்டும் போதும்

இடுப்பு எலும்பு தேய்மானம் !!!

நாட்டுமருந்து
www.facebook.com/NaattuMarunthu

http://naattumarunthu.blogspot.in/

இடுப்பு எலும்பு தேய்மானம் !!! தேவையான பொருட்கள் கருப்பு உளுந்து இருபது கிராம் வேர்க்கடலைப் பருப்பு ............நான்கு தேக்கரண்டி வெள்ளை எள்ளு ............ நான்கு தேக்கரண்டி பாசிப் பருப்பு ................ நான்கு தேக்கரண்டி புழுங்கல் அரிசி ......... நான்கு தேக்கரண்டி பெரிய சுக்குத்துண்டு ...... ஒன்று பனை வெல்லம் ...... ஒரு தேக்கரண்டி தேங்காய் துருவல் ... சிறிது செய்முறை: 1.ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 2.வறுத்து எடுத்த அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து சன்னமான பொடியாக எடுக்கவும். 3.இந்தப் பொடியில் இருந்து உளுந்தங் கஞ்சி செய்ய நூறு மில்லி கொதிக்கும் நீரில் ஒரு தேக்கரண்டிப் பொடியைப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட்டுக் கஞ்சியாக வந்தவுடன் பனை வெல்லம் சேர்த்துக் கிளறி நன்கு கொதிக்க விட்டு இறக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து எடுத்தால்சுவை மிக்க உளுந்தங் கஞ்சி கிடைக்கும். வாரம் ஒரு முறை காலை உணவாக இந்த உளுந்தங் கஞ்சியைச் சாப்பிட்டு வர இடுப்பு எலும்பு தேய்மானம் முதுகுத் தண்டு வட வலி அற்புதமான முறையில் குணமாகும்.

Wednesday, September 28, 2016

சத்து மாவு தயாரிக்கும் முறை

நாட்டுமருந்து  வாட்சப்குழு +919787472712

சத்து மாவு தயாரிக்கும் முறை

சத்து மாவு தயாரிப்பு

சத்து மாவு உருண்டை, வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

தேவையானவை அளவு

சோளம்                           100 கிராம்
கம்பு                                25 கிராம்
தினை                           25 கிராம்
கேழ்வரகு                  100 கிராம்
கொள்ளு                   50 கிராம்
பாசிப்பயறு                   25 கிராம்
நெய்                          100 மிலி
ஏலக்காய்த்தூள்          சிறிதளவு

சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.தண்ணீரை  நன்றாக  வடித்த பின்னர் அதை ஒரு வெள்ளை   துணியில் கட்டி 12 மணி நேரம் கட்டி தொங்க விட வேண்டும்.  மற்றும்  4 அல்லது 5 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது தண்ணீர்  தெளிக்க வேண்டும்.  பின்பு , தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைக்கலாம். அல்லது மிக்சியிலும் அரைக்கலாம், சுலபமான  சத்து மாவு தயார்.
சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது.

     அரைத்த மாவுடன் சர்க்கரைத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து… நெய்யை சூடாக்கி அதில் விட்டு உருண்டை பிடிக்கவும்.

2)சத்து மாவு தயாரிக்கும் முறை

1.. பொட்டுக்கடலை, பார்லி, ஜவ்வரிசி, பாதாம் முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கும்,  சத்துமாவு தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை
ராகி                   2 கிலோ
சோளம்              2 கிலோ ,
கம்பு                   2 கிலோ ),
பாசிப்பயறு       அரை கிலோ ,
கொள்ளு          அரை கிலோ ,
மக்காசோளம்    2 கிலோ,
பொட்டுக்கடலை ஒரு கிலோ ,
சோயா                ஒரு கிலோ ,
தினை               அரை கிலோ ,
கருப்பு உளுந்து அரை கிலோ ,
சம்பா கோதுமை அரை கிலோ ,
பார்லி                 அரை கிலோ,
நிலக்கடலை       அரை கிலோ ,
அவல்                அரை கிலோ ,
ஜவ்வரிசி           அரை கிலோ ,
வெள்ளை எள்     100 கிராம் ,
கசகசா                 50 கிராம்,
ஏலம்                  50 கிராம் ,
முந்திரி              50 கிராம் ,
சாரப்பருப்பு         50 கிராம் ,
பாதாம்              50 கிராம் ,
ஓமம்                50 கிராம் ,
சுக்கு                   50 கிராம்,
பிஸ்தா            50 கிராம் ,
ஜாதிக்காய்          2 ,
மாசிக்காய்        2 ,

ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும். ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க  வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும். அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம். எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர்  சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும். அதை கால்கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ அளவு பிளாஸ்டிக் கவரில் அடைத்து லேபிள் ஒட்டி மற்றொரு கவர் இட்டால் விற்பனைக்கு தயார்.
        வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம். தானியங்களை வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.
பயன்கள்
இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
6 மாதம் கெடாது
சத்துமாவு காயவைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 6 மாதம் வரை கெடாது. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை

Monday, September 26, 2016

முருங்கைப் பூ

முருங்கையை உணவிற்கு பயன்படுத்தும் போது பலரும் முருங்கைப் பூவை ஒதுக்குவதுண்டு. ஆனால் அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இயற்கை நமக்களித்த ஓர் வர பிரசாதம் ‘முருங்கைப் பூ’ என்றே கூறலாம். இதன் மகிமைகளை கீழே காண்போம்.

* முருங்கைப் பூவை உணவில் சேர்த்து கொள்வதால் சளி தொந்தரவு நீங்கும்.

* மேலும் முருங்கைப் பூ தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும் தன்மை இந்த பூவுக்கு உண்டு.

* முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சுவைக்காக பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

* பித்தமுள்ளவர்கள் முருங்கைப் பூவை உணவில் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள பித்த நீர் குறையும்.

* நரம்பை வலிமைப்படுத்தும் தன்மை முருங்கைப்பூவிற்கு உண்டு. தொடர்ந்து முருங்கை பூவை உண்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலும் குணமடையும்.

* உடல் சூட்டினை தணிப்பதற்கு முருங்கைப்பூ பயன்படுத்தப்படும். முருங்கைப்பூவை கஷாயமாக்கி சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.

* பெண்களின் உதிரப்போக்கு பிரச்சனைக்கு முருங்கைப்பூவை நன்றாக அரைத்து சாப்பிட்டால் உடனடியாக அப்பிரச்சினை அகலும்.

* உடலில் உஷ்ணம் அதிகரிப்பதால் ஏற்படும் கண் எரிச்சல், கண்ணீர் நீர் வடிதல் போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு முருங்கைப்பூ ஓர் நல்ல மருந்து.

முருங்கையில் உள்ள பூ, காய், வேர், கீரை, பிசின் என அனைத்திலுமே மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே இயற்கை நமக்களித்த இத்தகைய உன்னதமான முருங்கையை நம் எளிதாக வீட்டிலே வளர்த்து பயனடையலாம்.

சர்க்கரை பாதிப்பில் இருந்து நீக்கும் ஆரைக்கீரை. வேறு பயன்கள் என்ன..?

சர்க்கரை பாதிப்பில் இருந்து நீக்கும் ஆரைக்கீரை. வேறு பயன்கள் என்ன..?

         தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த
ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்
நீராரைக் கீரையது நீ
     
 (அகத்தியர் குணவாகடம்)
பொருள் -

இது நன்கு சுவையைத் தரும்.  மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும்.  முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும்.  அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.

நான்கு இதழ்களைக் கொண்ட இவை நீர்பகுதிகளில் அதிகம் வளர்வதால் இதனை நீராரை எனவும் அழைக்கின்றனர் .

இக்கீரையை சமைத்து உண்டுவந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.

நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும்  அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரைக்கீரை சூப்

ஆரைக் கீரை        - 1 கைப்பிடி

கறிவேப்பிலை    - சிறிதளவு

கொத்தமல்லி இலை    - சிறிதளவு

சின்ன வெங்காயம்     - 5

பூண்டுப்பல்        - 3

மிளகு        - 5

சீரகம்        - 1 ஸ்பூன்

சோம்பு        - 1 ஸ்பூன்

இஞ்சி        - 1 சிறு துண்டு

உப்பு        - தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும்.  அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும்.  மலச்சிக்கல் தீரும்.  அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது.  பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும்.

வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

Monday, September 12, 2016

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள் மூலிகைப் பெயர்






அருகம்புல்லும் வேரும்
உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும்.

அரசு
கர்பப்பை கோளாறு, மலட்டுத் தன்மை நீக்கும், சூட்டைக் குறைப்பது, சுரம்போக்கும், வீக்கம் குறைக்கும்.

அத்தி
மலமிளக்கி, காமம் பெருக்கு, நீரிழிவு, மூட்டுவலி, இரத்தமூலம் பெரும்பாடு.

அதிமதுரம்
காமாலை நோய், வெண்குஷ்டம், எலும்பு நோய், விக்கல், மார்புச்சளி, தும்மல், இருமல் போக்கும்.

அத்தி
மலச்சிக்கல், கால், மார்பு எரிச்சல், நீர்கடுப்பு அகற்றும்.

அமுக்ரா
அசதி, பசி இன்மை, முதுமை நீக்கம், காமம் பெருக்கும், சக்தி தரும்

ஆடாதொடை
இரத்தவாந்தி, சளிநோய், இசிவு நோய், கோழை இருமல், ஆஷ்துமா, சீதபேதி, இரத்த பேதி குணமாகும்.

அம்மான் பச்சரிசி
நமைச்சல், தாய்ப்பால் அதிகரிப்பு, வீக்கம், வயிற்றுவலி, சிறுநீரில் போகும் இரத்தம் குணமாகும்.

ஆடு தீண்டாப் பாளை
பலமும் விந்தும் உண்டாகும். மாதவிலக்கைத் தூண்டும், தோல் நோய், மலச்சிக்கல், பூச்சி விஷம் நீக்கும். புண்கள் ஆறும். வாதநோய் நீங்கும். ஆஷ்துமா அகலும்.

ஓரிதழ் தாமரை
காமம் பெருக்கும், சிறுநீர் எரிச்சல், சிற்றின்ப பலவீனம் நீங்கும். சுரம், தலைவலி, வெள்ளை வெட்டைச் சூடு நீங்கும்.

கடுக்காய்
மலச்சிக்கல், பல், கண், காது, மூக்கு தொண்டை நோய்கள், பசியின்மை இரத்த மூலம், ஆண்மை இன்மை, அசதி நீங்கும்.

கல்யாண முருங்கை
மாதவிடாய் கோளாறு நீங்கும், அதிக எடையைக் குறைக்கும்.

கழற்சிக்காய்
அண்டவாய்வு, விதைவீக்கம் குறைக்கும்.

கண்டங்கத்திரி
மார்புச்சளி, தொண்டை கரகரப்பு, நுரையீரல் நோய்கள், பல்வலி போகும்.

கீழாநெல்லி
காமாலை, ஈரல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி
உண்டாகும்.

குப்பை மேனி
மார்புச்சளி, தோல் நோய்கள் போக்கும்.

குமரி இலை
வெள்ளை, வெட்டை சூடு, மலச்சிக்கல் போக்கும். உடல் குளிர்ச்சி
உண்டாகும்.

கோரைக் கிழங்கு
புத்திக் கூர்மை, முடி பக்குவப்படும்.

வல்லாரை
உடல் வலுபெறும், புத்தக் கூர்மைப்படும், நீர் பெருக்கி, மேகப்புண், கட்டி வீக்கம், விரை வீக்கம், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

சிறு குறிஞ்சான்
சர்க்கரை நோய், குணமாகும். கிருமி நாசினியாகப் பயன்படும்.

மணத்தக்காளி
உடல் உரமாக்கும், கோழை அகற்றும், வாய்ப்புண், கடவாய்ப்புண், இருமல், வயிற்றுப்புண், பாண்டு, பெருவயிறு நீங்கும்.

துளசி
சளி, இருமல் நீங்கும், காய்ச்சல், பசி இன்மை, கோபம், வெறி, தூக்கமின்மை நீங்கும்.

பொடுதலை
தலைப் பொடுகு நீங்கும்.

தாமரை
மார்பு இதய நோய் போகும்.

தான்றிக்காய்
பல்நோய் போகும், மலச்சிக்கல் நீங்கும், உடல் பலம் பெரும்.

துத்தி
மூலம், புழுப்பட்டபுண் குணம்பெற மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி, காமம் உண்டாக்கும்.

தும்பை
கோழை அகற்றும், தலைவலி, அசதி, இருமல், வெள்ளை, தாகம், நஞ்சு நீக்கும்.

தூதுவளை
மார்புச்சளி, காசம், இருமல், இரைப்பு, உடல் குத்தல், மந்தம் நீக்கும், ஆண்மை பெருக்கும், நரம்பு வலுப்பெறும்.

நஞ்சறுப்பான்
எல்லாவித நஞ்சும் நீங்கும், சளி கக்குவான் இருமல், வாய்வு பிடிப்பு குணமாகும், பூரம், வீரம், எட்டி, பாதரச விஷங்கள் நீங்கும்.

நாயுருவி
பல்நோய், வியர்வை, படை, தேமல், இரத்தமூலம், பேதி, இருமல், வெள்ளை, சிறுநீர் சிக்கல், சூதகத் தடை நீங்கும்.

நாவல்
பேதி, சீதபேதி, இரத்த பேதி, மதுமேகம், அதிமூத்திரம் தீரும், நீரிழிவு நீங்கும்.

நீர் வேம்பு
சுரங்கள் நீங்கும், விஷம் நீங்கும், தோல்நோய் போகும்.

நீர்முள்ளி
நீர்க்கட்டு, கால்வீக்கம், பாண்டு, வெள்ளை உடல் அசதி, பெரு வயிறு, நீர் எரிச்சல் நீங்கும்.

நெரிஞ்சில்
குளிர்ச்சி உண்டாக்கும், சிறுநீர் பெருக்கும், காமம் பெருக்கும், சிறுநீர் கல்லடைப்பு, சிறுநீர் சதயடைப்பு, சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

நெல்லி
அழகுண்டாகும், குளிர்ச்சியாகும், மலமிளக்கும், சிறுநீர் பெருக்கும், வாந்தி, மயக்கம், தலைச்சுற்று, பிரமேகம் போகும்.

நொச்சி
கிருமி நாசினி, காய்ச்சல், குளிர்சுரம், வீக்கம், கீல்வாயு நீங்கும்.

நீர் பிரம்மி
மூளை வளர்ச்சியடையச் செய்யும், ஞாபக சக்தி உண்டாக்கும், காமம் பெருக்கும், கோழையகற்றும்.

பிரண்டை
உடல் உரமாக்கி, பசித்தூண்டி, மூலம் மந்தம், குன்மம், கழிச்சல், அஜீரணம், வயிற்றுவலி, இருமல், எலும்பு சக்தி பெறும்.

பூவரசு
உடல் உரமாக்கி, சொறி, சிரங்கு, கரப்பான் நீங்கும், கிருமி நாசினி, வீக்கம் நீங்கும், தோல் நோய் குணமாகும்.

பொன்னாங்கண்ணி
பசி உண்டாக்கும், கண்பார்வை கூட்டும், அழகு அதிகரிக்கும், எடை கூடும்.

மருதம்பட்டை
இரத்த அழுத்தம், நீரிழிவு, வெட்டை குணமாகும்.

மாவில்வம்
நீரிழிவு, கண்பார்வை மங்கல் குணமாகும்.

முசுமுசுக்கை
சளியைக் கரைக்கும், உடல் உரமாக்கும்.

முடக்கு அற்றான்
வாய்வு, இடுப்பு வலி, முழங்கால் வலி நீங்கும்.

முருங்கை
அதிக இரத்த அழுத்தம் குணமாகும், காமம் பெருக்கும், உடல் உரமாக்கும்.

மூக்கரட்டை
சிறு நீரகக் கோளாறு நீங்கும், கட்டி கரையும்.

வசம்பு
பசி உண்டாக்கும், இரத்தபித்தம், வாய் நாற்றம், சூலை, இருமல், ஈரல், யானைக்கால் நோய், நஞ்சு, நாடாப்புழு நீங்கும்.

வில்வம்
வியர்வை பெருக்கும், காமம் பெருக்கும், சுரம் நீங்கும் பெரும்பாடு, உடல்வலி நீங்கும்.

வேம்பு
புழுக்கொல்லி, பெருநோய், அம்மைப்புண், சொறிசிரங்கு,பித்தம், காமாலை, முற்றிலும் எல்லா நோய்களுக்கும் கொடுக்கலாம்.

கறிவேப்பிலை
இரும்புச் சத்து உள்ளது, பசித் தூண்டும், சீதபேதி, வயிற்றுளைச்சல் நீங்கும், முடிகறுக்கும்.

ஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக மருந்து :

ஆண்மை விரைப்புதன்மைக்கு அதிகமாக  மருந்து :
....................................................................................................

நீர்முள்ளி :

மணலை கயிறாக திரிப்பேன் என்று சிலர் சொல்லுவதைப் பார்த்திருக்கிறோம் . ஆனால் அது பொய்யல்ல.இந்த நீர்முள்ளி உதவியுடன் மணலை கயிறாக திரிக்க முடியும்.அத்தகைய சக்தி வாய்ந்த இந்த மூலிகை வெக்கை,உஸ்ணத்தை குறைத்து விந்துவை கெட்டிப்படுத்தும்

தேவையானவை:

கசகசா,பால்,நீர்முள்ளி,பாதாம்பருப்பு.

செய்முறை :

நீர் முள்ளி விதை 30 கிராம், பாதாம்பருப்பு 10 கிராம், கசகசா 10 கிராம் ஆகியவற்றை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து பாலுடன் சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
....................................................................................................

நீர்முள்ளி வித்து  ஐந்து விரலால் அள்ளும் அளவுக்கு எடுத்து இரவில் ஒரு செவ்வாழை பழத்தில் வைத்து மறுநாள் காலையில் எழுந்ததும் வெறு வயிற்றில் மென்று சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இந்த நீர்முள்ளி வித்து எல்லா விதமான தாது லேகியத்தில் சேர்க்கப் படுகிறது..

இந்த மருந்து அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

ஆமுக்கார (அஸ்வகந்தா) பவுடர்  (விரைப்புதன்மைக்கு)
ஓரிதல்தாமரை                          "         (ஆண்மை அதிகரிக்க)
பூனைகாலி                                 "         (விந்து ,உயிர்அணுக்கல் அதிகரிக்கும்)
ஜாதிக்காய்                                 "         (ஆண்குறி பருக்க,விரைக்க)
நீர்முள்ளி விதை                       "         (விந்து கெட்டிபடும்)
தண்ணீர்விட்டான் கிழங்கு  "         (ஆண்மை பெருகும்)

மேலே உள்ள பவுடர் அனைத்தையும் தேனில் கலந்து (கட்டி பதம் வரும்வரை)தினமும் காலை மாலை கோலிகுண்டு அளவு சாப்பிடவும்

மருந்தை சாப்பிட்ட உடனே பயன் தெரியும்...

உடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்



"பதினான்கு வேகப்பேர்கள்,பகிர்ந்திட அவற்றைக்கேளாய்,
விதித்திடும் வாதத்தும்மல், மேவுநீர் மலங் கொட்டாவி,
சுதித்திடும் பசிநீர் வேட்கை ,காசமோடிளைப்பு நித்திரை,
மதித்திடு வாந்தி கண்ணீர், வளர்ச்சுக்கிலஞ் சுவாசமாமே,

பதினொன் சித்தர் நாடிநூல்-

உடம்பின் இயற்கையான 14 வேகங்களைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் - 01


உடலிலிருந்து வெளியேறும் காற்றினை அடக்குவதால் வரும் துன்பங்கள் – தீர்வுகள்
.

உடலின் இயற்கையான வேகங்கள் எனப்படும் இயக்கங்களைத் தடுக்கக் கூடாது என சென்ற பதிவில் பார்த்தோம். அதில் முதன்மையான உடலிலிருந்து வெளியேறும் காற்றுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.
.

செரிமானத்தின் போது

வயிறு, குடல் பகுதியில் இயற்கையாக உருவாகும் காற்று வாய் வழியாக வெளியேறும் . 

(மேல்க்காற்று, ஏப்பம்) அல்லது மலவாயின் வழியே வெளியேறும் மலக்காற்று - (கீழ்க் காற்று, அபான வாயு). இந்த இரு வகையான காற்றுக்களையும் வெளியேற்றாமல் தடுத்தால் பல துன்பங்கள் ஏற்படும் என சித்தர் நூல்கள் தெரிவிக்கின்றன.

உடம்பிலிருந்து இயற்கையாக வெளியேறும் வாயுவை முழுவதுமாகத் தடை செய்தாலும் சிறிது சிறிதாகத் தடை செய்து வெளி ஏற்றுவதாலும் மார்புப் பகுதியில் காற்று சேர்ந்து கொண்டு குத்தல் வலி ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால் 

# வயிற்றுப் பகுதியில் செரிக்கும் தன்மை குறைந்து புளிப்புத் தன்மை மிகுந்து அழற்சி (Inflammation – Gastritis) ஏற்படும். 

# குடல் பகுதியிலும் வாயு தங்கித் துன்பம் விளைவிக்கும். 

# பின்பு உடல் முழுமையும் குத்தல் வலி ஏற்படும். 

# மலமும் சிறுநீரும் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுத் துன்பமுண்டாகும். 

# பின்பு பசி உணர்வு சிறிது சிறிதாகக் குறையும்.
.

இப்படி வெளியேற்றாமல் தடுக்கப்பட்ட வாயு இறுதியில் புத்தியையும் மந்தப்படுத்தும்.

மொத்தத்தில் வயிற்றின் உள் உறுப்புகள் (கல்லீரல், மண்ணீரல் போன்றவை), மார்பு உறுப்புகள் (இதயம், நுரையீரல்), மூளை போன்ற முக்கிய உறுப்புகளின் இயக்கங்கள் மாறுபாடடைகின்றன.

மேலும் 

# விதை வாதம் (Inflammation of Scrotum), 

# குடலிறக்கம் (Inguinal and Umbilical hernia), 

# குடல் தளர்வு (Diverticular disease of intestine – creating pockets in the intestinal wall), 

# வயிற்று உப்பிசம் (Floating abdomen) 

போன்ற பல நோய்கள் தொடரும்.

.

வயிற்றில் எப்படி அதிகப்படியான காற்று தோன்றுகிறது?

முக்கியமான இரண்டு காரணங்களால் வயிற்றில் காற்று சேருகின்றது. 

1. வாயின் வழியே காற்று உள் செல்லுதல் (Aerophagia) 

2. உணவின் மீது நுண் கிருமிகள் (Bacteria) வினைபுரிதல்.

.

வாய் வழியே காற்று உட்செல்லக் காரணங்கள் (புறக் காரணம்) 

1. உணர்வு மாறுபட்ட நிலைகளில் – கவலை, அதிக மகிழ்ச்சி, படபடப்பு. 

2. உணவு, நீர் போன்றவற்றை வேகமாக உட்செலுத்துவதால். 

3. தேவையில்லாமல் சில பொருட்களை வில் வைத்து சுவைத்துக் கொண்டோ கடித்துக் கொண்டோ இருத்தல் – Chewing gum. 

4. புகைப் பிடித்தல்.

5. காற்று கலந்த செயற்கைக் குளிர்பானங்கள் (Carbonated beverages)

.

வயிற்றினுள் அதிகப்படியாக காற்று உருவாகக் காரணங்கள் (அகக் காரணம்) :

வாயில் உணவை நன்கு மெல்லாமல் அரைகுறையாக வயிற்றுக்குள் அனுப்புவதாலும் வயிற்றுப் பகுதியில் ஏதேனும் ஒரு காரணத்தால் சரியாகச் செரிமானம் நடக்காததாலும் அரைகுறையாகச் செரிமானமான உணவு குடலைக் கடக்கும் போது குடலில் உள்ள நுண்கிருமிகள் (Bacteria) அந்த உணவின் மீது வினைபுரிந்து அதிகப்படியான வாயுவை உண்டாக்குகின்றன.
.

மேலும் சில காரணங்கள்: 

1. பழக்கமில்லாத நார்ச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுதல். 

2. அரைகுறையாக மென்று சாப்பிட்ட சில பழங்கள் (கொய்யா, பேரீச்சை, அத்தி, திராட்சை ) இவற்றில் உள்ள பழச் சர்க்கரை (Fructose) அதிகப்படியான வாயுவை உண்டாக்கும். 

3. முட்டைக்கோஸ், காலி பிளவர் போன்ற காய்கள் இயற்கையாகவே அதிகம் வாயுவை உண்டாக்கும். அதற்கு அவற்றில் உள்ள Raffinose என்கிற ஒருவகையான சர்க்கரை காரணமாக உள்ளது. அது போன்றே பாசிப்பயிறு, கொண்டைக் கடலை, கடலை மாவு, கிழங்குகள், வாழைக்காய், கொத்தவரங்காய் போன்ற பல உணவுப் பொருட்கள் வாயுவை உண்டாக்கும். அவற்றையெல்லாம் முறைப்படி பக்குவப்படுத்தி சமைக்க வேண்டும். 

4. செயற்கை இனிப்புகள் (Artificial sweeteners’) வயிற்றில் நச்சுக் காற்றினை உண்டாகும். அதே போன்று சில மருந்துகளில் கலக்கப்படும் இனிப்புகளும் (Sorbital – Cough syrup) காற்று உண்டாக்கும். 

5. பால் பொருட்களில் மோரும் நெய்யும் மட்டும்தான் வயிற்றில் காற்று உண்டாக்காமல் வயிற்றைப் பாதுகாக்கும். பால், பாலாடைக்கட்டி, குழைவு (Cream) போன்ற பிற பால் பொருட்கள் வயிற்றில் காற்றினை உண்டாக்கும்.

எனவே தான் சித்தர்கள் மோர் பெருக்கி நெய்யுருக்கி உண்ண வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

பொதுவாக ஒரு நாளில் (24 மணியில்) வயிற்றில் உருவாகும் காற்று 450 மி.லி யிலிருந்து 1500 மி.லி வரை உருவாகி வெளியேறும். அதிகப்படியாக உருவாகும் காற்று வெளியேறாமல் இருப்பதால்தான் பல கேடுகள் உண்டாகின்றன.
.

வயிற்றில் தேவையில்லாமல் அதிகப்படியாக காற்று உருவாகாமல் தடுக்க பல உபாயங்கள் உள்ளன. எளிய 2 முறைகளை மட்டும் பார்ப்போம்.
.

1. அன்னப்போடி

சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு (பெருஞ்சீரகம்), ஓமம், பெருங்காயம், இந்துப்பு (அல்லது கல் உப்பு) ஆகிய 7 பொருட்களையும் சம அளவு எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் கலந்த கலவைக்கு சம அளவு காய்ந்த கறிவேப்பிலைப் பொடியும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு அன்னப் பொடி என்று பெயர். இதனை சோறுடன் கலந்தோ அல்லது மோருடன் கலந்தோ உண்ண அதிகப்படியான காற்று கட்டுப்படும். 
.

2. சுக்கு, மிளகு, கிராம்பு, கல் உப்பு ஆகிய நான்கையும் சம அளவு கலந்து பொடித்துக் கொண்டு அதில் 8 சிட்டிகை அளவு (pinch) 3 வேளை உணவிற்கு முன் வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால் வாயு கட்டுப்படும்.

தும்மலை (Sneeze or Sternutation) அடக்குவதால் வரும் துன்பங்கள் – தீர்வுகள்
.

தும்மல் (Sneeze or Sternutation) என்பது மூக்கில் எற்படும் பிரச்சனைகளை (உறுத்தல், அரிப்பு) நீக்க உடலால் ஏற்படுத்தப்படும் ஒரு செயல் (Way of removing an irritation from the nose).
.

தும்மல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. 

# சில நோய் நிலைகள் தொடர்ச்சியான தும்மலை ஏற்படுத்தும். 

# சில வேளை மூக்கின் உட்புறம் சிறு தூசி ஒட்டிக் கொண்டால் ஒரேயொரு தும்மலோடு அந்த தூசி வெளியேறும். பின்பு தும்மல் வராது. 

மொத்தத்தில் எப்படிப்பட்ட தும்மலாக இருந்தாலும் (காரணம் முக்கியமல்ல) அதனை அடக்கக் கூடாது. அது பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சித்தர்கள் அடக்கக் கூடாத உடல் வேகங்களில் ஒன்றாகத் தும்மலை வகைப் படுத்தியுள்ளார்கள்.
.

தும்மல் இயல்பாக நிகழ்வதற்கு மூக்கில் இருந்து செயல்படும் ஒரு காற்றின் வேலையே காரணம். அந்தத் தும்மலைத் தடுத்தால் தலையின் உள்புறம் பல நோய்கள் உண்டாகும். மூளை பாதிக்கப்படும். கன்ம இந்திரியங்கள் (Organs of motor functions) எனப்படும் வாய், கால், கை, மலவாய், சிறுநீர் வாயில் மற்றும் ஞான இந்திரியங்கள் (Organs of sensory functions) எனப்படும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற பத்து முக்கிய உறுப்புகளும் இயல்பாக இருப்பது போன்ற தோற்றமளித்தாலும் அவை கேடடையும். அதாவது இந்த இந்திரியங்களுக்கு (உறுப்புகளுக்கு) அடிப்படைக் கூறுகள் மூளையில் இருப்பதால் அவை பாதிப்படைகின்றன.

# முகம் ஒருபுறம் கோணுதலை ஏற்படுத்தும் முகவாதம் ஏற்படும். 

# வயிற்றின் அழுத்தம் கூடுவதால் ஆண்களுக்கு விதை வீக்கம், குடல் இறக்கம் ஏற்படும். 

# பெண்களுக்கு கொப்பூழ் பிதுக்கம் (Umbilical hernia) ஏற்படும் என்று சித்தர் பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.
.

தும்மல்:

மூக்கின் உட்புறம் உள்ள சளிச்சவ்வில் (Mucus membrane) ஏதேனும் ஒரு காரணத்தால் உருவாகும் அரிப்பு அல்லது உறுத்தல் (Irritation) மூளையின் ஒரு குறிப்பிட்ட சிறப்பான பகுதியைத் தூண்டுகிறது. அந்தப் பகுதிக்கு தும்மல் மையம் (Sneeze center) என்று பெயர். தும்மல் மையம் தூண்டப்பட்டவுடன் அது தும்மலை உருவாக்கும் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து தும்மலை உண்டாக்குகின்றது. 

# தும்மலை வயிற்றுத் தசைகள், 

# மார்புத் தசைகள், 

# உதர விதானம் (Diaphragm), 

# குரலை உண்டாக்கும் தசைகள், 

# கழுத்துத் தசைகள், 

# கண் தசைகள் 

போன்ற தசைகள் இணைந்து உருவாக்குகின்றன.
.

தும்மல் உருவாகும் போது நுரையீரலிலிருந்து காற்று மணிக்கு 100 மைல் தூரம் என்ற வேகத்தில் மூக்கின் வழியேயும் வாயின் வழியேயும் வெளியேறும். அப்போது ஏறத்தாள 5000 குட்டிக்குட்டி நீர்த்திவலைகள் (Droplets) 12 அடி தொலைவு வரை வெளித் தள்ளப்படும். இந்த நிகழ்வு மூக்கில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சரிசெய்ய உதவும். அங்கு தங்கி உறுத்தலை ஏற்படுத்தும் தூசிகளையும் வெளிப்புறத் துகள்களையும் கிருமிகளையும் வேகமாக வெளியேற்றும்.
.

  தும்மல் உண்டாக்கும் காரணிகள்: 

.

1. வெளிப்புறத்திலிருந்து மூக்கிற்குள் சென்று ஒட்டிக் கொள்ளும் சிறு துகள்கள். காட்டாக தூசு, வேதிப் பொருள், புகை, மிளகு போன்ற வாசனைப் பொருட்கள், மண மூட்டிகள், விலங்குகளின் மெல்லிய முடி, வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் தோல் கழிவுகள் (Pet animal dander) தாவரங்களிலிருந்து வரும் ஒவ்வாத பொருட்கள் (Pollen) 
.

2. சுற்றுப்புறத்தின் திடீர் வெப்பநிலை மாறுபாடு. சூடு கூடுவதோ குளிர் கூடுவதோ திடீரென நிகழ்ந்தால் தும்மல் உண்டாகும். மூக்கின் உட்புறமுள்ள சிறப்பான சவ்வு நுரையீரலுக்கு ஒரே சீரான வெப்பநிலையுள்ள காற்றையே அனுப்பும். அந்தச் சவ்வு தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் போது தும்மல் ஏற்படும். 
.

3. குளிர் காற்று, சாரல், மழை. 
.

4. வயிறு முழுமையும் நிரம்பும்படியாக உணவருந்தல். 
.

5. திடீரென அதிக வெளிச்சத்தைப் பார்த்தல். 
.

6. கிருமித் தொற்று. 
.

7. சில நோய்நிலைகள்: உதாரணத்திற்கு சாதாரண மூக்கடைப்பு (சலதோடம்), மூக்கு உள்பகுதியில் ஏற்படும் அழற்சி (Rhinitis – Nasal cavity – inflammation), சுரம், மூக்கில் அடிபடுதல் (Injury to the Nasal cavity).
.

இப்படி பல்வேறு காரணங்களால் ஏற்படும் தும்மல் பொது இடங்களிலோ, முக்கியக் கூட்டங்களிலோ, அமைதியான இடத்திலோ, வழிபாட்டுத் தளங்களிலோ, பள்ளி கல்லூரி வகுப்புகளிலோ நிகழ்ந்தால் அங்கு நிலவும் அமைதியை கெடுக்கும் என்கிற எண்ணத்தால் பலராலும் அடக்குப் படுகின்றது. இவ்விதம் தும்மலை அடக்குவதால் பல்வேறு துன்பங்கள் தொடரும் என இக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை எல்லாம் சித்தர்கள் பலகாலம் முன்பாக சொன்னவற்றை ஒட்டியே உள்ளன.
.

அவை: 

1. மூளையில் பரவியிருக்கும் இரத்தக்குழாய் விரிவடைந்து இரத்தத் தேக்கம் ஏற்படும் (Brain vessels – Anneurysm). மூளையின் நரம்பு செல்கள் பாதிப்படையும். இதனால் தற்காலிகமாகவோ தொடர்ச்சியாகவோ தலைவலி உண்டாகும்.
.

2. வெளியாகும் காற்று அழுத்தம் தடைபடுவதால் அந்த அழுத்தம் அப்படியே காதிற்குள் சென்று செவிப்பறையை (Ear drum) பாதிக்கச் செய்யும். சில வேளை கேட்கும் திறன் இழப்பு ஏற்படும். 
.

3. மூக்கில் தங்கியிருக்கும் (பிரச்சனையை ஏற்படுத்தும்) பொருட்களை வெளிப்படுத்தவே தும்மல் ஏற்படுகிறது. அதனைத் தடுத்தால் பிரச்சனையை ஏற்படுத்தும் பொருட்கள் குறிப்பாக நுண்கிருமிகள் மூக்கிலேயே தங்கி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். மூக்கின் உள் சவ்வு வீக்கம் ஏற்பட்டு அதன் தாக்கம் உடலின் பல இடங்களுக்குப் பரவும். 


4. தும்மலைத் தடுத்தலால் ஏற்படும் அழுத்தம் மார்பு அறை அழுத்தத்தைப் பாதிக்கும். மார்பறை (Chest) அழுத்தம் அதிகமாவதால் இதயத்திற்குள் செல்லும் இரத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் செலுத்தப்படும். இந்த நிகழ்வு ஒருமுறை எனில் இதயம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். தொடர்ச்சியாகப் பலமுறை எனில் இரத்த ஓட்டத்திலும் இதய இயக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும். 


5. தும்மலைத் தடுத்தலால் ஏற்படும் அழுத்தம் வயிற்றறையையும் பாதிக்கும். இதனால் வயிற்றறை அழுத்தம் அதிகமாகி குடல் பிதுக்கம் (Hernia) ஏற்படும். அது கொப்பூழ் பகுதியிலோ (Umbilical hernia) அல்லது தொடையிடுக்குப் பகுதியிலோ (Inguinal hernia) ஏற்படலாம். 
.

6. கண் அழுத்தம் அதிகமாதல், கண் உட்புறத்தில் உள்ள நுட்பமான இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுதல், இரத்தக்கசிவு ஏற்படல் போன்றவை ஏற்படும்.
.

தும்மல் வருவதற்கானக் காரணங்களை அறிந்து அவற்றை தான் நீக்குதல் வேண்டும். தும்மலை எக்காரணத்தைக் கொண்டும் அடக்கவே கூடாது.

தும்மல் வருவதைத் தடுக்க ஆவிபிடித்தல், நசியம் (மூக்குத்துளி) மருத்துவம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். 

மருத்துவ ஆலோசனை பெற்று முறையான மருத்துவம் மேற்கொண்டால் தடுத்தவிட முடியும் அல்லாமல் சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் திடீர் தும்மலை அடக்காமல் விடுதல் வேண்டும்.

Saturday, September 10, 2016

மிளகு

மிளகு

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.


"வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?"
-குதம்பைச் சித்தர்-

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.

காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.


திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை
மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட
வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.

மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.


மிளகு ஊறுகாய்:
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது.