Sunday, March 10, 2019

திரிகடு சூர்ணம்-Trikatu choornam

திரிகடு சூர்ணம்-Trikatu choornam

( ref-பாவப்ரகாச நிகண்டு – மத்யம கண்டம்)
தேவையான மருந்துகள்:
1. சுக்கு – சுந்டீ - 10 கிராம்
2. மிளகு – மரீச்ச - 10 “
3. திப்பிலி – பிப்பலீ - 10 “

குறிப்பு -சுக்குக்கு புற நஞ்சு எனவே -சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

செய்முறை:
இவைகளை முறைப்படி பொடித்துச் சலித்து ஒன்று கலந்து பத்திரப்படுத்தவும்.
அளவு:
½ முதல் 1 கிராம் வரை ஒரு நாளைக்கு 2-3 வேளைகள் கொடுக்கவும்.

அனுபானம்:
தேன், நெய், தண்ணீர்.

தீரும் நோய்கள்:
விட்டுவிட்டு வரும் முறைக்காய்ச்சலைப் போன்ற பலவிதகாய்ச்சல்கள் (ஜ்வர), வயிற்று உப்புசம் (ஆத்மான), உணவில் விருப்பமின்மை (அரோசக), பசியின்மை (அக்னி மாந்த்ய), பழுதடைந்த செரிமானத்தால் வரும் நோய்கள் (ஆமதோஷ), கழுத்தில் தோன்றும் நோய்கள் (காலரோக), பீனிசம் (பீனஸ), தோல் நோய்கள் (குஷ்ட), இருமல், ஜலதோஷத்துக்கு சர்க்கரை மற்றும் தேனுடன் சேர்த்துத் தரப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டியவை -
திரிகடு என்ற இந்த திரிகடுகு -பல மருந்துக்கு துணை மருந்தாக -அனுபானமாக உபயோகப்பதுண்டு
திரிகடுகு -சிறந்த கார்ப்புள்ளது -நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது ,நெஞ்சு சளி , ஜலதோஷத்தை நீக்கும் ..நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் ,இம்மண்டல பலஹீனத்தை போக்கும்
நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும் ,புதுப்பிக்கும் ,கபம் சார்ந்த பிரச்சனைகளை போக்கும்
இன உறுப்புகளின் கோளாறுகளை நீக்கும் ,பெண்களின் கரு முட்டை வெடித்தல் குறைபாடு உள்ளவர்களுக்கு பட்டு கருப்புடன் கொடுத்தல் சிறந்தது ,ஆண்களின் விந்தடைப்பு என்ற பிரச்சனைக்கும் -திரிகடு சார்ந்த ஷட்தர்ணம் சூரணத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம்.

மேலும் உடல் எடை கூடிய நோயாளிகள்,அதிக கொழுப்பு சத்துள்ள நோயாளிகள் ,Thyroid குறைவாக சுரக்கும் நோயாளிகள் ,உடல் வீக்கம் சார்ந்த நோயாளிகள் ,மற்றும் வளர் சிதை மாற்றமுள்ள நோயாளிகளில் இந்த மருந்து -தக்க துணை மருந்துகளோடு நன்றாக வேலை செய்யும்
செரிமான சுரப்பி ,வயிற்றில் சுரக்கும் நொதி கோளாறுகள் -எப்படி இருந்தாலும் சரி செய்து -ந்யூற்றிசன் என்ற சக்தி குறைபாடில்லாமல் ,எல்லா குடல் உறிஞ்சுகளையும் வேலை செய்யவைத்து ,உடல் சக்திகளை வேலை செய்யவைக்கும் .
வலிகளை போக்கும் மருந்துகளில் -இந்த மருந்தை பல வலி நிவாரண மூலிகை மருந்துகளின் சேர்க்கையோடு சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும்

பல பற்ப ,செந்தூரங்களை கொடுக்கும் போது -த்ரிகடுவை மூல மருந்து சூரணமாக பயன் படுத்தலாம்.ஆனால் பொடிவடிவில் கிடைக்கும் சூரணமே சிறந்த பலன் அளிக்கும்
திரிகடுகு சேராத ஆயுர்வேத ,சித்த ,யுனானி மருந்தே இல்லை எனலாம்.

இயற்கையான முறையில் குளியல் பொடி தயாரிப்பது எப்படி...?.

இயற்கையான முறையில் குளியல் பொடி தயாரிப்பது எப்படி...?.

குளியல்பொடி தயாரிக்க:

மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சோம்பு 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் 100 கிராம், வெட்டி வேர் 200 கிராம், அகில்  கட்டை 200 கிராம், சந்தனத் தூள் 300 கிராம், கார்போக அரிசி 200 கிராம், தும்மராஷ்டம் 200 கிராம், விலாமிச்சை 200 கிராம், கோரைக்கிழங்கு 200  கிராம், கோஷ்டம் 200 கிராம், ஏலரிசி 200 கிராம், பாசிப்பயறு 500 கிராம் இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும்  நறுமணம் வீசும்.

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு  முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்  பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

குளியல் பொடி

குளியல் பொடி

கடலை மாவு - 1/2 கிலோ
பாசிப்பயறு மாவு - 1/2 கிலே
பூலாங்கிழங்கு பொடி - 200 கிராம்
ஆவாரம்பூ பொடி - 250 கிராம்
குப்பைமேனி பொடி - 100 கிராம்
சந்தணம் - 100 கிராம்
வெட்டி வேர் பொடி - 100 கிராம்
( பெண்கள் இதில் கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம் மற்றும் நலுங்கு மாவு - 100 கிராம்)

(குழந்தை எனில் கஸ்தூரி மஞ்சள் - 200 கிராம், மகிழம்பூ பொடி - 100 கிராம், ரோஜா பொடி - 100 கிராம்)

இக்குளியல் பொடியை ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரும் பயண்படுத்தலாம்.


தலைக்கு சீயக்காய்

சீயக்காய் பொடி - 100 கிராம்
பெரிய வெங்காயம் வற்றல் பொடி - 100 கிராம்
வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி - 100 கிராம்
கறிவேப்பிலை பொடி - 50 கிராம்
வெந்தய பொடி - 25 கிராம்
மருதாணி பொடி - 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் வாங்கவும் அல்லது இலையை காய வைத்து பொடி செய்யவும்)

இரவில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் தேவைக்கு ஏற்ப மேலே சொன்ன பொடியை போட்டு கொதிக்க வைத்து பாதி ஆனதும் இறக்கி மூடிவைத்து காலையில் தேய்த்து குளிக்க இளநரை, முடி கொட்டும் பிரச்சினை சரியாகும்.
(இரும்பு பாத்திரத்தில் கொதிக்க வைத்தால் சிறப்பு.
அதிலும் தண்ணீர் பதில் டீ டிகாஷனில் செய்தால் முடி பளபளப்பாக இருக்கும்)


#பொடுகு முடி உதிர்தலை தடுக்க#

சின்ன வெங்காயம் அரைத்து வடிகட்டி அதில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து மண்டையில் படும்படி தேய்த்து 1 மணி நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்து வரவும்.

வாரம் 2 நாள் நல்லெண்ணெய் குளியல் அவசியம். (ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமை. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் நல்லது)

தேங்காய் எண்ணெயில் சின்ன வெங்காயம் போட்டு காய்ச்சி இதை தினமும் தலைக்கு தேய்த்து வரவும்.

கண்இமைகள் அடர்த்தியாகவளர ஐந்துடிப்ஸ்

கண்இமைகள் #அடர்த்தியாகவளர #ஐந்துடிப்ஸ்

சில இயற்கையான முறைகளை பயன்படுத்தி, கண் இமை முடிகளை அடர்த்தியாக வளரச் செய்து நமது கண்களின் அழகை அதிகப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பொதுவாக கண் இமை முடிகள் ஒரு நாளைக்கு சுமார் 0.15 மி.மீ வரை தான் வளருகின்றது. அவ்வாறு வளரும் முடிகள் சுமார் 5 முதல் 6 மாதங்களில் உதிர்ந்து விடுகின்றது. பின் உதிர்ந்த கண் இமை முடிகள் மீண்டும் முழுமையாக வளர 8 முதல் 10 வாரங்கள் எடுத்துக் கொள்கிறது.

கண் இமைகளானது, நம்முடைய இரண்டு கண்களையும் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது, கண்களை அழகாகவும், வசீகரமாகவும் காட்டுகிறது. நாம் அன்றாடம் கண் இமைகளுக்கு தரமற்ற கண்மைகளை பயன்படுத்துவதன் மூலம், கண் இமைகள் உதிரும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே சில இயற்கையான முறைகளை பயன்படுத்தி, கண் இமை முடிகளை அடர்த்தியாக வளரச் செய்து நமது கண்களின் அழகை அதிகரிக்கலாம்.

கண் இமைகளை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

1. விட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்து அதில் இருந்து ஜெல் வடிவ மருந்தை எடுத்து, அதை ஒரு தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெயுடன் நன்கு கலக்கி, இதனை தினமும் இரவில் ஒரு சிறிய பஞ்சியில் நனைத்து, ஒரு சொட்டு விட்டு கண் இமை முடி மீது நன்கு தேய்க்க வேண்டும் இந்த மருந்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் கண் இமை முடியின் அடர்த்தியை இரு மடங்கு வலுவாக்குகிறது.

2. ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் ஈமு எண்ணெய் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலந்து, அதை தினமும் இரவில் கண் இமை முடியின் மீது தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதில் உள்ள இயற்கையான உயர் கொழுப்பு அமிலங்கள் கண் இமை முடியை வலுவாக்கி நன்கு வளரச் செய்கிறது.

3. சிறிய அளவிலான பெட்ரோலியம் ஜெல்லியை ஒரு பழைய சுத்தமான மஸ்காரா கோலில் எடுத்து தினமும் இரவில், தூங்குவதற்கு முன் கண் இமை முடிகளின் மீது நன்கு தடவ வேண்டும். இதனால் நன்கு அடர்த்தியான கண் இமை முடிகள் கிடைக்கும்.

4. தினமும் சாதரணமாக கண் இமைகளை மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். எனவே நம்முடைய விரல்களில் ஒரு சில துளிகள் ஆலிவ் எண்ணெய் எடுத்து, விரல் நுனி வைத்து சூடாகும் வரை நன்கு தேய்த்து, மென்மையாக 5 நிமிடங்கள் வரை வட்ட இயக்க வடிவில் விரலை வைத்து கண் இமைகளை மசாஜ் செய்ய வேண்டும்.

5. விளக்கெண்ணெய் 2 தேக்கரண்டி எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி எலுமிச்சை துறுவலை நன்கு கலந்து, பின் இதை 48 மணி நேரம் ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை மட்டும் தனியாக எடுத்து, தினமும் இரவில் சில துளிகளை எடுத்து கண் இமை முடிகளின் மீது தடவி வர வேண்டும்.

அக்குள் கருமையைபோக்க...

அக்குள் #கருமையைபோக்க...

உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே கருமையாக இருக்கும். அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான்  அக்குள். அக்குள் கருமையை போக்க வீட்டிலிருக்கும் பொருள்களைக் கொண்டு எளிதாக போக்கலாம்.


உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. உருளைக்கிழங்கை வெட்டி, அதனைக் கொண்டு அக்குளை 5-10 நிமிடம்  மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருமையானது  விரைவில் நீங்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, அக்குளை தேய்த்து, 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் குளித்து முடித்த பின்னர், ஏதேனும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

தயிர்

தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம்  ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவி, உலர வைக்க  வேண்டும். இந்த முறையினாலும் அக்குள் கருமையைப் போக்கலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை தினமும் வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும் அல்லது வெள்ளரிக்காய் சாற்றில், சிறிது  எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

ஆரஞ்சு தோல்

எலுமிச்சையைப் போன்றே ஆரஞ்சிற்கும் கருமையைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை உலர  வைத்து பொடி செய்து, அத்துடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 10 நிமிடம்  ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெந்தயமா…எங்களுக்கு #தெரியுமேன்னு சொல்றீங்களா..

வெந்தயமா………

#எங்களுக்கு #தெரியுமேன்னு #சொல்றீங்களா..

ஆமா. நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சது தான்..

அதற்கான பதிவு தான் இது.. பாருங்க..

முயலுங்க..
பலன் சொல்லுங்க..

நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்கவும்  உதவும்..

வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.

வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.

வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

#வெந்தயத்தை #முளைக்கட்டச்_செய்வது #எப்படி?

♦முறை 1

* முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறைவெப்பநிலையில் வைக்க வேண்டும்.

* பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் செய்து வர, வெந்தயம் முளைக்கட்டியிருப்பதைக் காணலாம்.

♦♦முறை 2

வெந்தயத்தை  எடுத்துக் கழுவிட்டு, முதல் நாள் இரவு தண்ணில ஊறப் போட்டுருங்க. மறு நாள் நல்லா ஊறியிருக்கும். அப்ப அந்தத் தண்ணியை வடிச்சிட்டு, மெல்லிசு துணி இருந்தா அதுல கட்டி, அதே பாத்திரத்தில் போட்டு இறுக்கமா மூடி வச்சிருங்க. துணியோட ஈரம் காயாம அப்பப்ப, ஒரு மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம் லேசா தண்ணி தெளிச்சுக்கிட்டே இருக்கணும். மறு நாள் துணியை தொளைச்சுக்கிட்டு முளை விட்டிருக்கும் பாருங்க, பாத்தாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்!

★சரி, துணி இல்லாட்டினா என்ன பண்றது?

அப்பவும், ஊற வெச்ச தண்ணீரை வடிச்ச பிறகு, சும்மா அதே பாத்திரத்தில் அப்படியே போட்டு, நல்லா மூடி வச்சிருங்க. மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம், பயறைக் கழுவி, தண்ணீரை வடிச்சுட்டு வைக்கணும்.  மறு நாள் பார்த்தீங்கன்னா, பயறு முளை விட்டு இரண்டு மடங்கா ஆயிரும்!

பயறை 10 நாட்கள் நிழலில் காய வைக்கவும்.

ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் காய வைக்கவும்.

நன்று காய்ந்த பின் மிஷினில் திரித்துக் கொள்ளவும்.

அரைத்த வெந்தய பொடியை
காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளவும்.

#எப்படி #பயன்படுத்துவது……???

♦முளைக்கட்டிய வெந்தயம்

வெந்தயத்தை முளைக்கட்ட வைத்தால், அதில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்திருக்கும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

♦வெந்தயம்

உஷ்ணம் குறைக்கும்
வெந்தய - மோர் பானம்

தேவையான பொருட்கள் :

வெந்தயம்- 1 கப்
மிளகு-1/4கப்
சுக்கு-சிறு துண்டு
மோர் - 1 கப்

செய்முறை :

• வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

• ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

• கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.

♦வெந்தய லேகியம்:

வெந்தயம்,

மிளகு,

திப்பிலி,

பெருங்காயம்

இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட……

சீதக்கழிச்சல், வெள்ளை,
மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

♦வெந்தயம்               
♦மருத்துவம்

மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு
3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம்.

வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம்.

5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும்.

6கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

♦சர்க்கரை வியாதியைக்கு

பாகற்காய்,

நாகப்பழக் கொட்டை,

வெந்தயம்

அகியவைகளைச் சமஅளவில் கலந்து பவுடராக்கி ஒரு டீஸ்பூன் அளவில் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவரவும்.

♦பாகற்காய்,

நாகப்பழக் கொட்டை,

வேப்பிலை,

பிரிஞ்சி இலை,

வெந்தயம்

ஆகிய 5 பொருட்களையும் பவுடராக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் இரண்டு வேளைதருவார்கள்.

♦கருஞ்சீரகம் 12 கிராம்,

காசினி விதை 6 கிராம்,

வெந்தயம் 6 கிராம்

அளவில் சேர்த்துப் பவுடராக்கி மூன்று கிராம் வீதம் காலை- மாலை இரண்டு வேளை சாப்பிடவும். தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும்.

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

♦வெதுவெதுப்பான வெந்தய நீர்

வெந்தயத்தை பொடி செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் வெந்தயப் பொடியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் நன்மை கிட்டும்.

♦நீரில் ஊற வைத்த வெந்தயம்

ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டிவிட்டு, வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.
இப்படி சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிறு நிறைந்து, பசியுணர்வு கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டமும் குறையும்.

♦வெந்தயம் மற்றும் தேன்

ஒரு டம்ளர் நீரில் வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, காலையில் எழுந்ததும் குடித்தாலும், உடல் எடை குறையும்.

♦வெந்தய டீ

வெந்தயத்தைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன், உடல் எடையையும் குறைக்க உதவும்.

குறிப்பாக இது செரிமானத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதிலும் வெந்தய டீயுடன் பட்டைத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.

#மேலும்_படிங்க………

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சில நோய்கள் தணியும்.

வெந்தயம், வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.

உடல் மெலிந்தவர்கள், வெந்தயம் சேர்த்து தயாரித்த அடையை, கருணைக்கிழங்குடன் சாப்பிட்டால் உடல் பருமனாகும்.

ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாகச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.

பிரசவித்த பெண்ணுக்கு பால்சுரப்பு அதிகரிக்க வெந்தய
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடித்து, கோதுமை மாவும் கருப்பட்டியும் சேர்த்து தயாரிக்கும் இனிப்புக் களி‘ பால்சுரப்பை அதிகரிக்க செய்யும்.

♦கொலஸ்ட்ரால் குறையும் :-

தற்போது கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் நிறைய பேருக்கு உள்ளது. அத்தகைய கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை வெந்தயம் போக்கும். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தில் உள்ள உட்பொருட்கள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதற்கு வெந்தயத்தில் உள்ள ஸ்டெராய்டல் சாப்போனின்கள் தான் காரணம். இவை தான் கெட்ட கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.

♦இரத்த சர்க்கரை அளவு :-

உங்கள் வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் உங்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புள்ளது. ஆனால் தினமும் வெந்தயத்தை சமையலில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.

♦இதய நோய்கள் :-

மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே இதய பிரச்சனைகள் அதிகம் வருகிறது. இதனைத் தவிர்க்க வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம், சோடியத்தின் செயல்பாடுகளைக் குறைத்து, இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.

♦தொண்டைப்புண் மற்றும் காய்ச்சல் :-

வெந்தயம் தொண்டைப்புண் மற்றும் காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். எனவே உங்களுக்கு இப்பிரச்சனைகள் இருக்கும் போது, சிக்கன் சூப்பில் வெந்தயத்தை பொடி செய்து சேர்த்து குடியுங்கள், இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

♦எடை குறையும் :-

உடல் எடையால் கஷ்டப்பட்டு வருபவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்ததும் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இதனால் உங்கள் பசி கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிப்பது குறையும்.

♦தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் :-

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், வெந்தயத்தை உணவில் சேர்த்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள டையோஸ்ஜெனின், தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டும்.

♦மாதவிடாய் கால அவஸ்தைகள் :-

பெண்கள் வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களில் இருந்து விடுபடலாம். எனவே உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, தசைப் பிடிப்புகள் போன்றவை அதிகம் இருந்தால், இந்த வழியை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

♦குடல் புற்றுநோய் :-

வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களான சாப்போனின்கள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றச் செய்து, குடல் புற்றுநோயில் இருந்து நம்மை விலகி இருக்கச் செய்யும்.

#வெந்தய__டீதயாரிப்பது #எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

நன்மை 1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை 3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை 4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

 நன்மை 6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 நன்மை 15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

தேரையர் பூண்டு தைலம்

தேரையர் பூண்டு தைலம்

தேரையர் அந்தாதி 
சுவடி முறை

 
செய்பாகம் : பூண்டு வசம்பு வகைக்கு 10 கிராம் வீதம் எடுத்து பூண்டின் மேல்தோல் அதன் முளை நீக்கி அதன்பின் வசம்பை பொடி செய்து  இரண்டையும் நன்கு உருவாகும்படி அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பின் கண்ணாடி அல்லது பீங்கான் கோப்பையில் 200ml நல்லெண்ணெயை ஊற்றி அதில் பூண்டு வசம்பு அரைத்த விழுதை கலந்து சூரிய ஒளியில் ஏழு நாட்கள் வைத்து எண்ணெய்யை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

மேற்கண்ட பூண்டுத் தைலத்தை தலை,புருவம், இமை தாடி மீசை பகுதியில் மேல்பூச்சாக பூச புழவெட்டினால் உதிர்ந்த முடியும் முளைக்கும். புழவெட்டும் குணமாகும்.
அத்துடன் மண்டை கரப்பான் அரிப்பு சொரி  பொடுகு சுண்டு  தீரும்.

மாதவிடாய் கோளாறுகள் போக்க மகத்தான வைத்தியங்கள்

மாதவிடாய் கோளாறுகள் போக்க மகத்தான வைத்தியங்கள்

அருமருந்து.மருத்துவம் நிறைந்த இலைகளில் வேப்பிலை முதன்மை வாய்ந்தது .வேப்பிலை சாறு தொடர்ந்து அருந்துவதன் மூலம் வயிற்று கசடு நீங்கி சீரான மாதவிடாய் வர செய்யும்.

மாதவிடாய் கோளாறின் முக்கிய காரணம் இரத்தமின்மை.பீட்ரூட் உடம்பில் ரத்தம் ஊற செய்யும்.இதன் சாற்றை தினம் அருந்துவதன் மூலம் உடலில் ரத்தம் அதிகரிக்கும்.🐝

பப்பாளியை சிறு துண்டுகளாகவோ அல்லது சாறு எடுத்தோ அருந்துவது மாதவிடாய்க்கு நல்ல மருந்து.பப்பாளி வாங்கும் பொழுது நாட்டு பப்பாளியா என்பதை நன்கு கவனித்து வாங்கவும்.அதிலும் விதை நிறைந்த நாட்டு பப்பாளியாக இருப்பது சால சிறந்தது.

கற்றாழை உள்ளே இருக்கும் ஜெல் போன்ற பகுதியை 7 முறை நீர் விட்டு கழுவி தண்ணீர் கலந்தோ அல்லது மோர் கலந்தோ அருந்துவதன் மூலம் மாதவிடாய் கோளாறை தவிர்க்கலாம்.
பீட்ரூட் போல கேரட்டும் உடம்பில் ரத்தம் அதிகரிக்க உதவும்.சிலருக்கு பீட்ரூட் சுவை பிடிப்பதில்லை அவர்கள் தினம் 5 கேரட்கள் உண்ணலாம்.அல்லது அவற்றை சாறாக எடுத்து அருந்துவதன் மூலம் ரத்தம் அதிகரிக்க செய்யும்.இது மாதவிடாய் வருவதற்கும்,வந்த பின்னர் ரத்தமில்லாமல் உடம்பு சோர்வடைவதை தவிர்க்கும.

உடல் சூட்டை குறைக்க அஞ்சரை பெட்டியில் இருக்கும் அதிசயமே வெந்தயம்.இதை தினம் காலை தண்ணீர் உடனோ அல்லது மோர் உடன் வெறும் வயிற்றில் தினம் எடுத்து கொள்வதன் மூலம் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உடல் சூடு மற்றும் வயிற்று வலியை தவிர்க்கலாம்.

பேரிட்சை பழம் தினம் காலை 2 அல்லது 3 சாப்பிட்டு வந்தால் இரும்பு சத்து கிடைக்கும்.இது ரத்தம் ஊறவும் மாதவிடாய் காலங்களில் தெம்பு கொடுக்கவும் உதவும்.

எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம் ஹெர்பல் ஷாம்பு!!

எந்தவொரு கலப்படமும் இல்லாமல் இனி வீட்டிலே தயாரிக்கலாம்

ஹெர்பல் ஷாம்பு!!

நாம் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இயற்கையான பொருட்களை கொண்டு நமது முடி பராமரிப்புக்கு பெற முடிகிறது. வீட்டில் தயாரித்த இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் முடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது கூந்தலுக்கு போதுமான போஷாக்கை அதன் வேர்களுக்கு கொண்டு செல்கிறது.
தேவையான பொருட்கள்:
வெந்தயம்
உலர்ந்த சிகைக்காய்
உலர்ந்த நெல்லிக்காய்
ரீத்தா (பூந்தி கொட்டை)
தண்ணீர்
ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை:
வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த நெல்லிக்காய் - 1/2 கப்
உலர்ந்த சிகைக்காய் - 1/2 கப்
பூந்தி கொட்டை - 10
தண்ணீர் - 1.5 லிட்டர்
செய்முறை:
முதலில் ஒரு வட்டவடிவிலான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மூடி போட்டு மூடி விட வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து இந்த கலவையை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். தோராயமாக 2 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். இந்த கலவையானது கருப்பு மற்றும் சோப்புத் தன்மை கிடைக்கும் வரை கொதிக்க விட வேண்டும்.
இது நடந்த பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹெர்பல் ஷாம்பு உங்கள் வீட்டிலேயே தயாராகி விட்டது.

அதிசய மருந்து மின்சார தைலம் !

அதிசய மருந்து மின்சார தைலம் !


1. புதினா உப்பு  (மென்தால்- Menthol )   ----  30 கிராம் .

2.ஓம உப்பு   (தைமால்_Thymol)                   ----  30 கிராம்

3.கட்டி கற்பூரம் என்ற பூச்சூடம்(Camphor)  ----  15. கிராம்

4.பச்சை கற்பூரம்                            ---   15. கிராம்

ஒரு கண்ணாடி பாட்டிலில் நான்கு பொருட்களையும் தனித்தனியாக தூள் செய்துஒன்றாக கலந்து சற்று  நேரம் வெயிலில் வைக்கவும் நீராக உருகி விடும்  பின் வடிகட்டி உபயோகிக்கலாம் .

தீரும் நோய்கள் .
******
 1.சாதாரணம் சுரம்: மூன்று முதல் ஐந்து சொட்டு காபி அல்லது பாலில் கலந்து கொடுக்கவும்
. 2. வயிற்று வலி: ஐந்து துளி வென்னீரில் கொடுக்கவும்.
3. வாந்தி தேனில் எலுமிச்சம்பழச் சாறு கலந்து மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 4. காலரா பழுப்பு சர்க்கரையில் மூன்று விட்டுக் கொடுக்கவும் 3 மணி நேரத்தில் நிற்காவிடில் நிற்கும் வரை மூன்று மணிக்கு ஒரு தடவை கொடுக்கவும்.
5. தலைவலி இஞ்சி சாற்றில் தேன் கலந்து மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 6. விக்கல் சூடான பாலில் மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.
 7. கக்குவான் இருமல் தேன் அல்லது நன்னாரி சர்பத்தில் இரண்டு துளி விட்டுக் கொடுக்கவும் தொண்டையில் தைலத்தை தேய்க்கவும் உள் நாக்கில் தடவவும் இவ்வாறு நான்கைந்து நாட்கள் செய்யவும்.
8. தாது விருத்திக்கு வெண்ணையில் அல்லது அல்வாவில் மூன்று துளி விட்டு காலை மாலை சாப்பிட்டு வரவும்.
 9. பித்தத்திற்கு எலுமிச்சை இலை அகத்திக்கீரை சம அளவு கசாயம் ஒரு அவுன்சு கசாயத்தில் மூன்று துளி விட்டு ஐந்து நாட்கள் சாப்பிடவும்.
10. காசத் தீர்க்கும் கோழை நாசத்திற்கும்
ஆடாதொடை கசாயத்தில் தேன் விட்டு மூன்று துளி வீதம் குணமாகும்வரை சாப்பிடவும்.
11. மந்தாரகாசம் கண்டங்கத்திரி தூதுவளை துளசி இவைகளை சேர்த்து கசாயம் செய்து நெய் தேன் விட்டு ஒரு வேலைக்கு மூன்று துளி குணமாகும்வரை சாப்பிடவும் (தேனும் நெய்யும் சம அளவாக சேர்க்கக்கூடாது சிறிது கூடுதல் குறைச்சலாக சேர்க்க வேண்டும் ஒரு மனிதன் தேனையும் நெய்யையும் சம அளவு சேர்த்து குடித்தால் அது மரணத்துக்கு ஏதுவாகும்).
12. சகல வலி பஞ்சில் நனைத்து வலியுள்ள பாகத்தில் தொட்டு வைக்கவும் வீக்கத்தில் தைலத்தைத் தேய்த்து ஒத்தடம் கொடுக்கவும்.
13. இடுப்பில் பிடிப்பு கை கால் குடைச்சல் சுக்கு கசாயத்தில் மூன்று துளி இதுபோல் மூன்று நாள் வலியுள்ள பாகத்தில் தைலம் தேய்த்து மணலை வறுத்து ஒத்தடம் கொடுக்கவும். 14. காதில் சீல் தேங்காய் எண்ணெய் ஒரு அவுன்சில் ஏழு துளி கலந்து காதில் மூன்று துளி விட்டு பஞ்சில் அடைக்கவும் தவிர பாலில் மூன்று துளி விட்டு மூன்று நாள் சாப்பிடவும். 15. கண்டமாலை கட்டிகளுக்கு வேப்ப எண்ணெய் ஒரு அவுன்சில் 10 துளி ரணங்களில் தடவவும்.
16. குழந்தைகளின் மாந்தகம் மஞ்சனத்தி துளசி பொடுதலை இவை ஒன்றில் கஷாயம் செய்து தேன் விட்டு அதில் ஒரு துளி விட்டு மூன்று நாள் கொடுக்கவும்.
17. அண்டவாதம் குடல்வாதம் எருக்கலம் பூவில் மொட்டு பூ ஒன்று வெள்ளைப் பூடு பல் 1 மிளகு 5 அரைத்து அதில் துளி விட்டு இரண்டு வேளை கொடுக்கவும் மேலே மேற்படி தைலத்தை தடவி தேங்காயை துருவி அத்துடன் களர்ச்சி கொட்டை இலையையும் சேர்த்து சூடு பண்ணி ஒத்தடம் கொடுக்கவும்.
18. ஜன்னி இஞ்சி முருங்கைப்பட்டை வெள்ளைப்பூடு இவைகளைத் தட்டி சாறு எடுத்து ஒரு கரண்டி வேப்ப எண்ணெய் கலந்து ஐந்து சொட்டுகள் கொடுக்கவும்.
19. சோகை நீர் வீக்கத்திற்கு நீர்முள்ளி இலை கோவை தண்டு சுரைக்கொடி வகைக்கு கைப்பிடி எடுத்து கசாயம் செய்து இரண்டு துளி விட்டு ஒரு வாரம் கொடுக்கவும்.
 20. மூலக் கிராணி வயிற்று இரைச்சல் தான்றிக்காய் சூரணத்தில் திரிகடி எடுத்து தேனை கலந்து 2 துளி 5 நாட்கள் கொடுக்கவும்.
21. வயிற்றுக்கடுப்பு எருமை தயிரில் லவங்க கொழுந்தை சேர்த்து அரைத்து நெல்லியளவு அதில் ஒரு துளி மூன்று நாட்கள் அல்லது நாவல் பட்டை கசாயத்தில் ஒருதுளி ஆகாரம் ஜவ்வரிசியில் கஞ்சி அல்லது தயிர் சாதம் மட்டும் சேர்க்கவும்.
22. பெண்கள் பெரும் பாடு பசு வெண்ணெயில் மூன்று துளி மூன்று வேளை கொடுக்கலாம்.
23. நடுக்கல் சுரம் முந்தின  வேப்பம் பட்டை கசாயத்தில் மூன்று துளி 3 நாட்கள் கொடுக்கலாம்.
24. அஜீரணம் குளிர்ந்த நீரில் 2 துளி கொடுக்கவும்.
25. நீரடைப்பு வெள்ளரிக்காய் வாழைத்தண்டு முள்ளங்கி இவை ஒன்றின் சாரில் இரண்டு துளி கலந்து கொடுக்கவும். 26. சரீரத்தில் திடீர் தடிப்பு மதமதப்பு நீர் சம்பந்தமான சரீர உப்பிசம் காலை மாலை மூன்று துளி காப்பியில் கொடுக்கவும்.
27. தேள் பூரான் மூட்டை பூச்சி கடிக்கு பொன்னாவாரை கசாயத்தில் ஒரு அவுன்சில் சீனி போட்டு இரண்டு துளி கொடுக்கவும்.
28. ரத்த காசத்திற்கு தேங்காய் பாலுடன் தேன் கலந்து ஒரு ஸ்பூன் அளவு அத்துடன் மருந்து 2 துளி இது காலையில் பின் மாலையில் தேங்காய் பாலுடன் நெய் கலந்து இரண்டு துளி கொடுக்கவும்.
29. கரப்பான் சொறி சிரங்கு நில ஆவாரை சூரணத்தில் திருகடி பிரமாணத்தை எடுத்து ஒரு துளி விட்டுக் கொடுக்கவும் வேப்ப எண்ணெயில் கொஞ்சம் விட்டு மத்தித்து மேலுக்கு ரணங்களில் மேல் போடவும்.
30. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று கட்டி வெள்ளரி விதை கசாயத்தில் ஒரு துளி வீதம் ஐந்து நாட்கள் கொடுக்கவும் .

மேற்படி 30 வியாதிகளையும்.
ஆரம்பநிலையில் இருந்தால் இந்த மருந்து குணப்படுத்தும்.

  31. தலைவலி தலைபாரம் வலி உள்ள இடத்தில் தடவி லேசாக தேய்த்து விடவும் புருவத்திற்கு மேற்புறம்  பொட்டு பகுதியில் தடவி தேய்த்து விடவும்.
32. பல் வலி பஞ்சில் தொட்டு வலியுள்ள இடத்தில் வைக்கவும் எச்சில் விழுங்க கூடாது சிறிது நேரம் கழித்து வெண்ணீரில் வாய் கொப்பளிக்கவும்.
33. தொண்டை வலி தொண்டைப் பகுதியில் லேசாக தடவி விடவும் சுடு நீரில் இரண்டு துளி விட்டு வாய் கொப்பளிக்கவும்.
 34. அடிபட்ட வீக்கம் ரத்தக்கட்டு  போன்ற இடத்தில் தைலத்தை தாராளமாக தடவி விடவும் தேய்க்கக் கூடாது காலையில் தடவி மாலையில் சுடு நீர் விட்டு கழுவவும் மாலையில் தடவி காலையில் சுடு நீர் விட்டுக் கொள்ளவும். 35. கண்ணில் நீர் குத்தல் புருவத்திற்கு கீழ் கண்ணில் படாமல் தடவி விடவும் கண்ணில் இருந்து நீர் வெளியேறி சுகப்படும்.
 36. உடல்வலி தசைவலி தேங்காய் எண்ணெயில் சில துளி விட்டு வலி உள்ள இடத்தில் தேய்த்து விடவும்.                                 மேலும் பலவிதங்களில் இதை பயன்படுத்தலாம்.

முக்கிய குறிப்பு

தைலம் கடுமையான எரிச்சலைக்கொடுக்கும் மென்மையான தோல் உள்ளவர்கள் குறைவாக பயன்படுத்தவும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கு கைக்கு எட்டும் தூரத்தில் வைக்க கூடாது.

Saturday, March 9, 2019

சளி தொல்லை நீங்க மருத்துவம் :

சளி தொல்லை நீங்க மருத்துவம் :

1. மிளகைத் தூளாக்கி, வெல்லம், நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சளித்தொல்லை பறந்து போய்விடும்.

2. மிளகுப் பொடியை ஒரு காட்டன்துணியில் முடிந்து காலையில் குளித்ததும் உச்சந்தலையில் தேய்க்க சளி, தும்மல் எல்லாம் பறந்தே போய்விடும்.

3. சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

4. நெஞ்சு சளிதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
5. கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு(காணப்பயறு) சூப் அருமையான மருந்து.

6. கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

7. தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

8. மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

9. வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

10.சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

11. துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

_12. சிறு வெங்காயச் சாறு (20 மிலி), தேன் (20 மிலி), இஞ்சிச்சாறு (20 மிலி) இம்மூன்றையும் ஒன்றாக கலந்து ஒருவேளை வீதம் தொடர்ந்து இரு தினங்கள் உணவுக்கு முன் பருகி வர சிறந்த பலனைத் தரும்.

13. ஓமம் பொடி (10 கி.), மஞ்சள்பொடி (20 கி.), பனங்கற்கண்டு (40 கி.), மிளகு பொடி (10 கி.). சூடான பசும்பாலில் மேற்கூறிய நான்கையும் ஒன்றாக கலந்து அதில் 5-8 கிராம் வரை இருவேளை காலை, மாலை பருகி வர உடன் குணம் கிடைக்கும்.

14. தும்பைச் செடியின் இலைச்சாறு (10 மிலி), சிறு வெங்காயச் சாறு (10 மிலி), தேன் (5 மிலி). இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து தினமும் மூன்று வேளை வீதம் உணவுக்கு முன் தொடர்ந்து பருகிவர சிறந்த குணம் கிடைக்கும்.

15. சளி, தடுமன்( ஜலதோசம்) அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியினை சாப்பிடுவது நல்லது இரண்டு நாட்களிலே நல்ல குணம் ஆகலாம். ( இது உண்மையாய் எனக்கு குளிர்காலங்களில் அன்டிபயடிக்ஸ் எடுப்பதினை முற்றாக இல்லாமல் செய்கிறது)

16. நன்றாக சளி பிடித்துக் கொண்டு மூக்கு, ஒழுகத்தொடங்கினால் மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி வைத்துக்கொண்டு தேனில் கலந்து மூன்று முறை ஒவ்வொருநாளும் சாப்பிட்டு வர இரண்டு நாளில் சரியாகப்போயிரும்.

காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மலையில் கடுக்காய், 45 நாட்கள் சாப்பிட உலுத்த  தேகம் இறுகும். காலையில் இஞ்சியை தேனில் கலந்து சாப்பிடவும், மதியம். சுக்கு பொடி ஒரு ஸ்பூன் சாப்பாட்டில் கலந்து சாப்பிடவும், இரவு கடுக்காய் பொடி வெண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

உடலில் உள்ள தழும்புகள் மறைய :

உடலில் உள்ள தழும்புகள் மறைய :

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா? இருக்கட்டும் என்று யாரும் அதனைப் பற்றி கவலைப்படாமல் இருக்க முடியாது.

அவற்றை நீக்க எங்கே விளம்பரங்கள் வந்தாலும் அதனை தேடி ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். ஆனால் பலன் என்னமோ ஜீரோதான்.கடைகளில் விற்கப்படும் மருந்துகளில், விட்டமின் ஈ, சில ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் மாய்ஸ்ரைஸ்ர் அவ்வளவுதான் இருக்கும்.

இதைக் கொண்டு எந்த தழும்பும் போனதாக நிரூபிக்கப் படவில்லை.
தழும்புகளை போக்க இப்போது பரவலாக சில இயற்கை பொருட்களை உபயோகித்தாலும் அவை எல்லாமுமே பலன் தராது.

மேலும் சில விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அப்படி தழும்புகளில் உபயோகப்படுத்த வேண்டியவை மற்றும் கூடாதவைகளை இப்போது பார்க்கலாம்.

பயன்படுத்தக் கூடியவை :

எலுமிச்சை சாறு :
எலுமிச்சை சாற்றில் ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. அது பாதிக்கப்படத்தில் உருவான திசுக்களின் மேல் வினைபுரிந்து அவற்றை இலகுவாக்கிறது. இதனால் மெல்ல தழும்புகள் மறையும். எலுமிச்சை சாறை தழும்பின் மீது தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். பின்னர் கழுவலாம்.

தேன்+ சமையல் சோடா :
2 ஸ்பூன் தேனில் 2 ஸ்பூன் சமையல் சோடாவை கலந்து, தழும்புகளில் தேயுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். விரைவில் தழும்பு மறையும்

கற்றாழை :
கற்றாழையின் சதைப்பகுதி பாதிக்கப்பட்ட திசுக்களை ரிப்பேர் செய்து புதிய செல்கள் அங்கே உருவாக தூண்டுகிறது. காற்றாழையின் சதையை எடுத்து தழும்பு உள்ள பகுதிகளில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

பயன்படுத்தக் கூடாதவை :

ஹைட்ரஜன் பெராக்ஸைட் :ஹைட்ரஜன் பெராக்ஸைடை உபயோகிக்கக் கூடாது இதில் உள்ள இயற்கையான கெமிக்கல் சருமத்துடன் வினைபுரிந்து அதிக ஆக்ஸிஜனை உருவாக்கி, அங்கே சரும திசுக்களை பாதிக்கச் செய்யும்.

ஹைட்ரஜன் பெராக்ஸைடை உபயோகிக்கக் கூடாது இதில் உள்ள இயற்கையான கெமிக்கல் சருமத்துடன் வினைபுரிந்து அதிக ஆக்ஸிஜனை உருவாக்கி, அங்கே சரும திசுக்களை பாதிக்கச் செய்யும்.

விட்டமின் ஈ எண்ணெய் :விட்டமின் ஈ எண்னெயை தழும்பில் உபயோகிக்கக் கூடாது. இதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் புதியதாக தழும்பை ஏற்படுத்திவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்

வெயில் படக் கூடாது :வெயில் தழும்புகளில் மேல் பட்டால் அது மறையும் காலமும் நீடிக்கும். ஆகவே வெயில் படாமல் காக்க வேண்டும். அவற்றிலுள்ள சக்தி வாய்ந்த புற ஊதாக்கதிர்கள் தழும்பினை பாதிக்கும்

வெண் புள்ளி நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருத்துவம்

வெண் புள்ளி நோய்க்கு எளிய அனுபவ வீட்டு மருத்துவம்

வெண் புள்ளி என்ற வெண்குஷ்டம் என்ற விடிலிகோ நோய்க்கு மிகச் சிறந்த எளிய அனுபவ வீட்டு மருத்துவம்

கண்டங்கத்தரி காய்ந்த வற்றல் ......இரண்டு தேக்கரண்டி ( நாட்டு மருந்துக்
கடைகளில்கிடைக்கும் )

செக்கு நல்லெண்ணெய் .......நூறு மில்லி

நல்லெண்ணெயை நன்கு காய்ச்சி கொதித்துக் கொண்டிருக்கும் நல்லெண்ணெயில் கண்டங்கத்தரி வற்றலைப் போட்டு நன்கு சிவக்கும் வரை கிளறிவிட்டு தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி ஆற வைத்து கண்ணாடிப் பாட்டிலில் சேமித்து வைக்கவும்

தினமும் காலையில் எழுந்தவுடன் உடலில் வெள்ளையாக இருக்கும் இடங்களில் இந்த தைலத்தைத் தேய்த்து சூரிய வெளிச்சத்தில் அரை மனி நேரம் வெயில் படும்படி நின்று வர வேண்டும் தொடர்ந்து பயன்படுத்திவர வெண் புள்ளி நோய் பரிபூரணமாகக் குணமடையும்

வேறு தோல் நோய்கள் இருந்தாலும் சரியாகி தோல் மினு மினுப்படையும்

மூன்று நாட்களில் அக்கி கொப்பளங்களை பரிபூரணமாகக் குணமாக்க பாட்டி வைத்தியம்!

மூன்று நாட்களில் அக்கி கொப்பளங்களை பரிபூரணமாகக் குணமாக்க பாட்டி வைத்தியம்!

கோடை காலத்தில் வெப்ப மிகுதியால் சிலருக்கு உடலில் அக்கி என்னும் நோய் தோன்றலாம் அந்தக் காலத்தில் குயவர்களிடம் சென்று மண்பாண்டம் செய்யப் பயன் படுத்தப் படும் மண் கலவையைக் குழைத்து பூசி இந்த நோயைப் போக்குவார்கள் அதற்கு அக்கி எழுதுதல் என்று பெயர் பலருக்கு முதுகுப் பகுதியில் அக்கி எனப்படும்

 கண்ணுக்குத்தெரியாத வேர்க்குரு போன்ற நீர் வடியும் சிறு சிறு கொப்புளங்கள் அதிகப் படியான வெயிலின் தாக்குதலால் ஏற்பட்டு அரிப்பு எரிச்சல் நீர் வடிதல் போன்ற துன்பங்களைத் தரும்

இதை எளிதாகப் போக்க மிகச் சிறந்த எளிய அனுபவ நிரூபணமான வீட்டு மருந்துஇருக்கிறது மருந்து போட்ட ஓரிரு நாட்களிலேயே குணமடைவதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்

 மருந்து பசலைக் கீரை இலைகளை அரைத்துப் பிழிந்து எடுத்த சாறு நாட்டுப் பசு வெண்ணெய் ஆகிய இரண்டு பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பசை போல செய்து அக்கிப் புண்கள் மீது இரவில் பூசி காலையில் மிதமான வெந்நீரில் குளித்து வர மூன்று நாட்களில் அக்கி பரிபூரணமாகக் குணமாகும். இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

கோடை ஆரம்பிப்பதால் முன்னெச்சரிக்கை யாக இருப்பது நல்லது.

கண்களை பராமரிக்க

கண்களை பராமரிக்க :

1.வாரத்திற்கு இரண்டு முறை கண் இமைகளில் பன்னீரை தடவி வந்தால் இமைகளில் உள்ள சுருக்கம் நீங்கும்.இமைகள் கருமை நிறத்துடன் அழகாக இருக்கும்

2.வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்துக்கொண்டால் கண்களுக்கு நல்ல குளிர்ச்சியும், ஒளியும் கிடைக்கும்.

3.இரவு படுக்கைக்கு செல்லும்போது கண்களில் இரண்டு சொட்டு விளக்கெண்ணையை விட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி பெற்று அழகு மிளிர காட்சி தரும்.

4.கண்களை அடிக்கடி குளிர்ந்த நீர் கொண்டு கழுவ வேண்டும். ஈரதுணி கொண்டும் ஒற்றி எடுக்கலாம். கண்களை அதிகமாக பயன்படுத்தி தொடர்ந்து வேலை செய்யும் போது வேலையின் நடுவே சிறிது ஓய்வு எடுக்கலாம். கண்களை உள்ளங்கையில் பொத்திக்கொண்டு இருட்டில் கண்களை விழித்து பார்ப்பது, வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ள உணவுகளை உண்பது போன்றவை கண்களை பாதுகாக்கும் முறையாகும். கேரட்டை பச்சையாக சாப்பிட்டாலும் கண்களுக்கு நல்லது.

5.கேரட்டை வெட்டி, வெட்டப்பட்ட பகுதியால் கண்களின் புருவங்களில் தேய்த்து வந்தால் கண் புருவம் ஒழுங்காகவும், கருமையாகவும் வளரும்.

6.கண்களுக்கு மை தீட்டும் போது அடர்த்தியாக இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
மூக்கின் மேல் பகுதியிலிருந்து கண்கள் சற்று தள்ளியிருந்தால் மைக் கோடுகள் மூக்கின் அருகே செல்லுமாறு இருக்க வேண்டும்.
புருவத்தில் இருந்து கண்கள் சற்று அதிகமாக கீழிறங்கியிருந்தால் புருவப்பகுதியில் மைக் கோட்டினை சற்று தடிப்பாக இழுக்க வேண்டும்.

7.கண்களில் கண்ணாடி அணியும் பெண்கள் மைக்கொடுகளை சற்று பட்டையாக அமைத்தால் மையிட்டிருப்பது பளிச்சென்று தெரியும்.

8.கண்களுக்கு மை தீட்டுவதற்கு முன்னர், கண்களை நன்றாக கழுவி முதல் நாள் இட்ட மைக் கறை போன்ற அழுக்குகளை அகற்ற வேண்டும். கண்களுக்கு மை இடும் போது குச்சிகளை பயன்படுத்தாமல் அதற்கென உள்ள மெல்லிய ரக பிரஷ்களை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக இமைகளில் மை தீட்ட பிரஷ்களை தவிர வேறெதையும் பயன்படுத்த கூடாது.

ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி இருமலை விரட்டும் தூதுவளை....!

ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி இருமலை விரட்டும் தூதுவளை....!

தூதுவளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும் பூ இதை உட்கொண்டால் உடல் பெருக்கும். ஆண்மை பெருகும் வலுமை கிடைக்கும். தூதுவளை காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள் தீரும். அழற்சி தீரும். வாயு தொந்தரவு தீரும்.
தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.


வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மிளகு கல்பகம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத, பித்த நோய்கள் தீரும்.

தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத்  தூண்டும்.

தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்தாகும்.

மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளைக் கீரை சிறந்த மருந்து. தூதுவளைக் காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒரு மண்டலம் கற்பக முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான  பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய் நீங்கும்.



தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு வலு கொடுக்கும். தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமல், நீங்கும். பாம்பின் விஷத்தை முறிக்கும்.

தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல், கண் நோய்கள் நீங்கும். தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.

தூதுவளையின் பழம் இறுகிய சளியை நீக்கும். இருமல் மற்றும் பாம்பின் நஞ்சு நீக்கும். தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். திண்டைப் புற்று கருப்பை புற்று வாய்ப்புற்று ஆகியவற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன்  கொடுத்துள்ளது.

ஆஸ்துமா நோயாளிகள் காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால். ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

அல்சர் அவதியா..?
சித்த மருத்துவத்தில்
சிறப்பான தீர்வு!

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.
கடைப்பிடிக்க வேண்டியவை:
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.
பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.
தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

சோற்றுக்கற்றாழை வைதிய முறைகள் :

சோற்றுக்கற்றாழை வைதிய முறைகள் :

மூட்டு வலி  உடனே மறைய :

ஏழு முறை சுத்தி செய்த சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் (5கிராம்) ,பெருங்காயம்  (4 சிட்டிகை) சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி உடனே மறையும்.

கப சார்ந்த பிரச்சனை தீர :

சுத்தி செய்த சோற்றுக்கற்றாழைச் சோற்றுடன் (5கிராம்) , மிளகுத் தூள்
(கால் ஸ்பூன்) சேர்த்துக் காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் கப நோய்கள் அனைத்தும் தீரும்.

குடல் புண் , குடல் நோய்கள் குணமாக :

சோற்றுக்கற்றாழைச் சோற்றில் பச்சைப் பயறை ஊறவைத்து காயவைத்து , பிறகு கஞ்சி காய்ச்சிக்  காலை மாலை என இருவேளையும் ஒரு டம்ளர் வீதம் குடித்து வந்தால் வயிற்று வலி , குடல் புண் , குடல் நோய்கள் அனைத்தும் தீரும்.

நீர் அடைப்பு நீங்கி சிறுநீர் தாராளமாக வெளியேற :

சோற்றுக்கற்றாழைச் சோற்றில்
(30 கிராம்) , கடுக்காய்த் தூள் (10 கிராம்) , வெங்கார பஸ்பம் (3கிராம்) , பனை வெல்லம் (25 கிராம்) ஆகியவற்றைக் கலந்து சாப்பிட்டு வந்தால் ஒரிரு முறை பேதி ஆகும். இதனால் நீர் அடைப்பு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

கண் எரிச்சல் குணமாக :

சோற்றுக்கற்றாழையை நீளவாக்கில் கீறி சதை எடுத்து கண்ணில் வைத்துக் கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குணமாகும்.

காதில் சீழ் வடிதல் நிற்க :

சோற்றுக்கற்றாழையை நெருப்பில் வாட்டி இறுக்கிப் பிழிந்து சாறு எடுத்து காதில் மூன்று சொட்டுகள் விட்டு வந்தால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

தோல் மென்மையாக மாற வேண்டுமா :

சோற்றுக்கற்றாழைச் சோற்றை  எடுத்து பருக்கள் மீது தடவி வந்தால் , அவை விரைவில் விழுந்து தோல் மென்மையாக மாறும்.

அனுபவ சித்த வைத்திய முறை

அனுபவ சித்த வைத்திய முறை

1. சோம்பு 100 கிராம்
2 . சதகுப்பை 100 கிராம்
3. கருஞ்சிரகம் 100 கிராம்
4. மல்லி 100 கிராம்
5, அதிமதுரம் 100 கிராம்
6. லவங்கப்பட்டை 100 கிராம்
7. கற்கண்டு 500 கிராம்

1, முதல், 6 வரையுள்ள சரக்குகளை தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும் . இவைகளை தனித்தனியாகத் தூள் செய்து சலித்து எடுத்து . ஒன்றாக் கலந்து கொள்ளவும் கற்கண்டையும் நன்றாகப் பொடித்து சலித்து மற்ற சரக்குடன் உறவாகும் படி கலந்து பத்திரப்படுத்தவும்.

காலை, மாலை 1 கிராம் முதல் 2 , கிராம் வரை மோருடன் அல்லது காய்ச்சி ஆறிய நீருடன் சப்பிட்டு வர அனல் மந்தம், உஷ்ண பேதி, வயிற்றில் எரிச்சல், வயிற்று பொருமல் , இரைப்பை வலுக் குறைவு இவைகள் தீரும், குருதி வலிமை உண்டாகும்

மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்

மாசிக்காயைக் கருகாமல் வறுத்துப் பொடியாக 1 கிராம் எடுத்து சிறிது தேன் அல்லது நெய்யில் கலந்து சாப்பிட பெரும்பாடு, நீர்த்த கழிச்சல், இரத்த கழிச்சல், மிகு வியர்வை குணமாகும்.

மாசிக்காயை நீர் விட்டு இழைத்து ஆசன வாயில் தடவி வர அதிலுள்ள வெடிப்பு, புண் குணமாகும். தேமல், படைகளுக்குத் தடவி வர அவை குணமாகும்.

மாசிக்காயைப் பொடி செய்து நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளிக்கப் பல் நோய் குணமாகும். பல் ஈறு பலப்படும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 கரண்டி பொடியை அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வயிற்றுக் கடுப்பு, மந்தப் பெருங்கழிச்சல், நாள்பட்ட இருமல், கறும்புள்ளி, வெட்டை, காய்ச்சல் குணமாகும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.

மாசிக்காயை இடித்துப் பொடியாக்கி 2 சிட்டிகை அளவு எடுத்து சிறிது வெண்ணெயுடன் அல்லது 1 டம்ளர் பாலுடன் 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப் போக்கு குணமாகும்.

மாசிக்காய்களைச் சுட்டு அதன் சாம்பலை வெட்டுக் காயத்தின் மேல் வைத்து அழுத்த இரத்தம் உடனே நின்று விடும்.

மாசிக்காய்த் தூள் 20 கிராம், சாம்பிராணித் தூள் 25 கிராம், பன்றி நெய் 150 கிராம் சேர்த்துக் களிம்பு செய்து, 10 கிராம் அளவு எடுத்து சிறிது அபினுடன் கலந்து வெளிமூல (பவுத்திர) முளைக்குப் பூச குணமாகும்.

மாசிக்காய்த் தூள் 5 கிராம் 3 வேளை கொடுக்க மயில்துத்தம், மர உப்பு, பூ நீர் உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், அபின், வாந்தி உப்பு இவற்றின் நஞ்சு முறியும்

பித்தப்பைகல் எளிதில்நீங்க_வழிகள்

பித்தப்பைகல் எளிதில்நீங்க_வழிகள்

அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரணகோளறு, அல்சர்மஞ்சள் காமாலை_நோய் போன்ற பல வியாதிகள் வரும்.

#பித்தப்பைகல் #இருப்பது #உறுதியானால்

1. அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும்.

2. வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக் கூடாது.

3. பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.

4. ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

5. ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்கவேண்டும் ,

6. பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும்.

7. மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

#_பித்தப்பைகல் #நீங்க

1. இந்த வகை நோயினால் பாதிக்க பட்டவர்கள் நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

3. ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது என்று கூறுகிறார்.

1. வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம்,

2. கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.
வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.

3. உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.

4. வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.

உடல் முழுவதும் ஒரே அரிப்பா?

உடல் முழுவதும் ஒரே அரிப்பா?
இதோ சூப்பர் மருந்துவேம்பு இலை மூலிகைகளில் பெரும் சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது.
பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், வாதாளி போன்றவை வேம்பு இலையின் மற்ற பெயர்கள் ஆகும்.
இதன் இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய் முதலியவை பயன்படுகிறது.
வேம்பின் மகத்துவங்கள்
வேப்பங்கொழுந்தும் அதிமதுரப்பொடியும் சமன் சேர்த்து நீர் விட்டு அரைத்துப் பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி நாள் தோறும் 3 வேளை ஓரிரு மாத்திரை கொடுத்து வர அம்மை நோய் தணியும்.
வேம்பு இலையை அரைத்துக் தேய்தால் உடல் அரிப்பு, ஆறாத ரணம், கட்டி, வீக்கம் ஆகிய பிரச்சனைகள் தீரும்.
வேப்பங்கொழுந்து 20 கிராம், ஈர்க்கு 10, 4 கடுக்காய் தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் விளக்கெண்ணெய் கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும்.
வேப்பம் குச்சியால் தொடர்ந்து பல துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் போகும், பற்கள் உறுதியாகும்.
5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.
வேப்பம்பழ சர்பத் குடித்து வந்தால் உடலில் சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
வேப்பம் பூவில் துவையல், ரசம் குமட்டல், வாந்தி மயக்கம் குணமாகும்

சருமத் தடிப்பு, அரிப்பு நீங்க:

சருமத் தடிப்பு, அரிப்பு நீங்க:

கஸ்தூரி மஞ்சள் – 150 கிராம்

கருஞ்சிரகம் – 50 கிராம்

வெள்ளை மிளகு – 10 கிராம்

கடலைப்பருப்பு – ½ கிலோ

வெற்றிலை உலர்ந்தது – ¼ கிலோ

இவையனைத்தையும் ஒன்று கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒவ்வாமையில் ஏற்படும் சருமத் தடிப்பு, அரிப்பு, நமைச்சல், தோல் வியாதிகளுக்கு இந்தப் பொடியை பூசிக் குளிக்க உடனே குணமாகும்.

இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.

இருமல், சளியால் அவஸ்தைப்படுபவராயின், அதற்கு கண்ட கண்ட மாத்திரைகளை எடுக்காமல், இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்ய முயலுங்கள்.

1.ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.

2.கொய்யாப்பழத்தை மிளகுத் தூள் தொட்டு சாப்பிட, நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கும்.

3.வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

4. தவசு முருங்கை இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவு காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை குடிக்க வேண்டும்.

5. வெற்றிலையை சாறு எடுத்து, தேன் கலந்து குடித்தாலும், இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

6 .இரவில் படுக்கும் முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் வருவதைத் தடுக்கலாம்.

7.கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரைக் குடிப்பதன் மூலமும் விரைவில் சளித் தொல்லை நீங்கும்.

8. 12 மிளகை நன்றாகப் பொடித்து, இரண்டு கப் பாலில் சேர்த்து சுண்ட காய்ச்சவும். இனிப்பு தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

9. 10 கிராம்புகளைப் பொடித்துக் கொள்ளவும். நான்கு அல்லது ஐந்து கிராம்புடன் பொடித்த கிராம்புத் தூளை சேர்த்து மூன்று கப் தண்ணீர் விடவும். அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து ஒரு கப்பாகச் சுண்டியதும், வடிகட்டி பனை வெல்லத்தை சேர்க்கவும்.

10. மிக்சியில் சிறிது சுக்கை போட்டு பொடித்துக்கொள்ளவும். இந்த பொடியை் பாத்திரத்தில் போட்டு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு கப்பாகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டவும். சூடான பால் மற்றும் கருப்பட்டி சேர்த்து பருகவும்.

சித்தரத்தைநீர்மருந்து :

சித்தரத்தைநீர்மருந்து :

இடுப்பில் தண்டுவட எலும்புகள் முடியுமிடத்தில், சிலருக்கு கடும் வலி தோன்றி,

இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருவர்.

அவர்கள், அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு,
சிறு துண்டுகளாக வெட்டிய உலர்ந்த சித்தரத்தையை அதில் வைத்து தேய்க்க,
 சித்தரத்தையின் நார்ப்பகுதி தனியே வரும்,
அதை எடுத்துக் கொண்டு, சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து,
 தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த கலவையை இளஞ்சூட்டில்,

 இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவிவர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.

குடல் புண், வாய் புண் சூரணம்

குடல் புண், வாய் புண் சூரணம்

கடுக்காய் பிஞ்சு
தான்றிக்காய்
மனத்தக்காளி வத்தல்
மங்குஸ்தன் ஓடு
மாதுளை ஓடு
இந்துப்பு
கசகச
சாதிக்காய்
நன்னாரி வேர்
நெல்லி முள்ளி
மாங்கொட்டை பருப்பு

இவை அனைத்தும் இடித்து சூரணித்து இந்துப்பை பொடித்து வறுத்து சேர்த்து கொள்ளவும் காலை எழுந்தவுடன் ஒரு வேளை, இரவு படுக்க போகும் போது ஒரு வேளை நெய்யில் சாப்பிட குடல் புண், வயிற்றுப் புண் குணமாகும்.

100 கிராம் குடல் புண் சூரணம் சங்கு பற்பம் 30 கிராம் சேர்த்த கேப்சூலில் அடைத்து காலை, மாலை உணவுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் சாப்பிட சரியாகும்...

கருகருவென்று நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு? இதோ சில இயற்கையான டிப்ஸ்:

கருகருவென்று நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு? இதோ சில இயற்கையான டிப்ஸ்:

இன்றைய இளம் தலை முறையினரை வாட்டிவதைக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்தல். தலைமுடி வயதான காலத்தில் கூட உதிராமல் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்க சில இயற்கை முறைகள்:

1) ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால், தலை முடி அடர்த்தியாக வளரும்.

2) செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி, அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு குளிக்க கூந்தல் அடர்த்தியாக வளரும்.

3) கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

4) மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.

5) வேப்பிலை, கொட்டையுடன் கூடிய 4 வேப்பம் பழத்தையும், வேப்பம் குச்சியையும் சேர்த்து சம அளவு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை தண்ணீரில் கலந்து தலையில் தேய்க்க வேண்டும். தேய்த்து பின்பு சிறிது நேரம் காயவிட்டு பிறகு நன்கு அலசுங்கள்.

இவ்வாறு வாரம் இருமுறை குளித்து வந்தால் தலையில் இருக்கும் ஈறுகள் மற்றும் பொடுகுகள் அழிவது மட்டுமின்றி தலை முடி கருகருவென்று வளரும். முடி உதிர்வு பிரச்சனையை போக்கும். இந்தப் பொடியை சீயக்காயுடன் சேர்த்தும் உபயோகிக்கலாம்."

திரிபலா சூரணம் நன்மைகள்

திரிபலா சூரணம் நன்மைகள்

நெல்லிக்கனி.நெல்லிக்கனியின் மருத்துவகுணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறுநெல்லி, பெருநெல்லி என்று இரண்டுவகை இருக்கிறது இதில் பெருநெல்லிதான் அதிக மருத்துவ குணம் கொண்டது. இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில்  கிடைப்பதில்லை.ஆனால் முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

நெல்லிக்கனி மூப்பை தடுக்கும் முறை

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக் கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஆண்டி-ஆக்ஸிடேன்ட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு. மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு,  அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் வைட்டமின் 'சி',உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ளன. 75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லி கிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும்,  இரும்புச் சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக் கனியின் மருத்துவகுணங்கள்:

நெல்லிக்கனியின் சிறப்புகளை ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு பயனுள்ளது. ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின்-சி சத்து உடலில் உள்ள இரும்புச்சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. இதய வால்வுகளில், இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது.
மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

கண்நோய்கள்தீர

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்தி வந்தால் கண்புரை நோய்,  கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

பல்வலி, ஈறு நோய்களுக்கு

தான்றிக்காய் பொடியினால் சிலந்திநஞ்சு, ஆண்குறிப்புண், வெள்ளை, குருதியழல் நோய் நீங்கும். பல்வலி தீரும். தான்றிப் பொடியைத் தேனில் கலந்து கொடுக்க அம்மை நோய் நீங்கும். தான்றிக்காய் பொடியினால் கண் ஒளி பெருகும். புண்பட்ட இடத்தில் இதன் பருப்பை உரைத்துப்பூச புண்ணாறும். இதன் கொட்டை நீக்கிக் கருகாமல் வறுத்துப் பொடித்து 1 கிராம் அளவு சர்க்கரை கலந்து காலை, மாலை கொடுக்க மலச்சிக்கல், குடல் பலமின்மை, காய்ச்சல், பித்தத் தலைவலி, இரத்தமூலம், சீதபேதி ஆகியவை தீரும். தான்றிப்பொடி 3 கிராமுடன் சமன் சர்க்கரை வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட பித்த நோய்கள், வாய்நீர் ஒழுகல் தீர்ந்து கண்பார்வை தெளிவுறும். தான்றிக்காய் தோலை வறுத்துப் பொடித்து தேனுடனோ சர்க்கரையுடனோ காலை மற்றும் மாலை சாப்பிட இரத்தமூலம் நிற்கும். தான்றிக்காய் தோலை சேகரித்து சூரணம் செய்து கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டி அளவு தேனில் கலந்து தினசரி சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும். தான்றிக்காயைச் சுட்டு மேல் தோலை பொடித்து அதன் எடைக்குச் சமமாய் சர்க்கரை கலந்து தினம் காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி, ஈறுநோய்கள் போன்றவை குணமாகும்.

அடிபட்ட காயங்கள் புண்களை ஆற்ற

கடுக்காய் துவர்ப்புச் சுவை அதிகமாகவும், இனிப்பு, புளிப்பு, கார்ப்பு மற்றும் கசப்பு சுவைகள் குறைவாகவும் இயற்கையாகவே ஐம்பெரும்பூதங்களின் ஒருங்கிணைப்பாய்க் காணப்படும் கடுக்காயானது வாத, பித்த மற்றும் கப மாறுதல்களினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்கும். கடுக்காயில் கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய் மற்றும் பால்கடுக்காய் என்று நான்கு வகைகள் உண்டு. இவை நான்கும் உடலை அழிவிலிருந்து காக்கும் கற்ப மூலிகைகளாகக் கருதப்படுகின்றன. இமயமலைப் பகுதிகளில் தவத்திலிருக்கும் தவமுனிவர்கள் இவற்றைத் தேடி உண்பதாகக் கூறப்படுகிறது. தேவமருத்துவராகக் கருதப்பட்ட தன்வந்திரி பகவான் தம்மிடம் எப்போதும் கடுக்காய் வைத்திருந்தார். கொட்டை நீக்கியகடுக்காய் 10 கிராம் அளவு எடுத்து 2 குவளை தண்ணீரில் கொதிக்க வைத்து 1/2 குவளை அளவு சுருக்கி வடித்துச் சாப்பிடுவதால் அடிக்கடி நீர் பிரிவது கட்டுப்படும். புண்களைக் கழுவ புண்கள் ஆறும். வாயிலுள்ள புண்களுக்கு கொப்பளித்தால் ஆறும்.

கண் பார்வை தெளிவு பெறும்

முன் சொன்ன நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் முறைப்படி  கலந்த மருந்துக்கு திரிபலாசூரணம் என்றபெயர். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலாசூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு அதற்குப் பிறகு பசும்பால் சாப்பிடுவது கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

சாப்பிடும் முறை

திரிபலா சூரணம் பயன்படுத்தும் முறை: மேற்சொன்னபடி நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை இரவு உணவு முடித்த பிறகு ½ மணி நேரம் கழித்து 1 டம்ளர் வெதுவெதுப்பான (Luke-Warm Water) நீரில் 1 டீஸ்பூன் அளவு (5 கிராம்) எடுத்து நன்றாக கலக்கி அருந்தவும்.

தீரும் நோய்கள்: ஒரே நாளில் மலச்சிக்கலும், மற்றும் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு அவர்கள் சாப்பிட்டு வரும் மருந்துகளோடு துணை மருந்தாக சாப்பிட்டு வர சர்க்கரைநோய் தொடர்பான உடல் உபாதைகள் குறையும். நாம் சாப்பிடும் ஆங்கில மருந்துகளின் எதிர்விளைவுகளை (Side Effects) குறைக்க திரிபலா சூரணம் தினமும் சாப்பிட்டு வரலாம். திரிபலா சூரணம் தினம் சாப்பிட்டு வர நம் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நமக்கு வரும் பெரும்பாலான 100 க்கும் மேற்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

இந்தச் சூரணத்தை முறைப்படி சாப்பிடுவதால் வாயுத்தொல்லை, உணவு செரிக்காத தொல்லை, மலச்சிக்கல், உடற்சூடு, மூல எரிச்சல், வயிற்றுப் புண், இரத்தக் குறைவு, வெண்குட்டம், கண் நரம்பு நலக்குறைவு ஆகிய நோய்கள் தீரும். சர்க்கரை நோய் தீரும். தொப்பை, உடல் எடை குறையும்.

நோய் தீர்க்கும் கீரைகள்

நோய் தீர்க்கும் கீரைகள்

பாலக்கீரை

பாலக்கீரையால் சிறுநீர்கடுப்பு, நீரடைப்பு, ருசியின்மை, வாந்தி, ஆகிய நோய்கள் நீங்கும் உடல் சூட்டை தணிக்க வல்லது. தண்ணீர் தாகத்தையும் நாவரட்சியையும் போக்கவல்லது அதிக சீதபேதி ஆகியவற்றைக் குணமாக்கும்.அமிலம் மிகுதியால் ஏற்படும் நெஞ்சுக் கரிப்பை நீக்கும் வயிற்றுபுண்ணை ஆற்றவல்லது. அல்சருக்கு சிறந்த மருந்தாகும்.

முடக்கத்தான் கீரை

காசம் சொறி சிரங்கு கரப்பான் போன்ற நோய்கள் குணமாகும். இடுப்பு பிடிப்பு, இடுப்பு குடைச்சல், கைகால் வலி, கை கால் குடைச்சல் முதலியனவற்றை குணமாக்கும் நரம்பு சம்பந்தமான நோய்களை நீக்கும் ஆற்றலை பெற்றது. இக்கீரை நரம்பு மற்றும் தசைநார்களுக்கு வலுவூட்ட வல்லது. மூலநோய்களுக்கு சிறந்த மருந்து.

அரைக்கீரை

பிரசவித்த பெண்களின் பிரசவித்த மெலிவை போக்கி உடலுக்கு சக்தியையும், பலத்தையும் கொடுக்கின்றன. இருமல், நுரையீரல் காய்ச்சல்களை போக்கும். நீர்க்கோர்வை, குளிர் காய்ச்சல், வாத காய்ச்சல், உடலில் தேங்கும் வாய்வு வாத நீர்களைப் போக்கும். பிடரி நரம்பு வலித்தல் நரம்பு வலி சன்னி தலைவலி ஆகியவற்றை குணப்படுத்தும்.

கரிசலாங்கண்ணி கீரை

கல்லீரல், மண்ணீரல் நுரையீரல், சிறுநீரகம், ஆகிய உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. இந்த உறுப்புகளில் தேங்கும் கழிவுகளை நீக்கி கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது. உடலில் கனத்தையும் பருமனையும் தொந்தியையும் கரைக்க விரும்புகிறவர்கள் இக்கீரையை நான்தோறும் பகல் உணவில் நான்கு வாரங்கள் தொடர்ந்து உண்டு வர பலன் கிடைக்கும்.

கருவேப்பிலை

இது உடலுக்கு பலம் உண்டாக்ககூடியது. பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. பித்தத்தை தணித்து உடல் சூட்டை ஆற்றும் குணம் உடையது. வயிற்றோட்டம் பித்தவாந்தி உணவு செரியாமை வயிற்று உளைச்சல் போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

பசலைக்கீரை

இக்கீரை நோய் தடுப்பு சக்தி உடையது. ரத்தத்தை உண்டாக்கும் நல்ல பலத்தை உடலுக்கு தரும். ரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் ஆற்றலுடையது. குறைந்த மற்றும் மிகுந்த அழுத்தமாயினும் இரண்டையும் சமன்படுத்தும் ஆற்றல் பெற்றது.

சிறுகீரை இக்கீரை உடலுக்கு வனப்பையும் அழகையும் தரும். வாதநோயை போக்கும் கல்லீரலுக்கு நன்மையைச் செய்யும். உடலில் தோன்றும் பித்த சம்பந்தமான நோய்களை இது கண்டுபிடிக்கும். விஷக்கடி முறிவாகப் பயன்படக்கூடியது.

சுக்கான் கீரை

வயிறு சம்பந்தபட்ட எல்லா நோய்களையும் கட்டுபடுத்தும். வாயுவுத் தொல்லைகளைப் போக்கும் சூட்டு இருமல் ஆஸ்துமா மூச்சுத் திணறல் ஆகியவற்றைக் கட்டுபடுத்தும் ஈரலுக்கு வலுவைத் தந்து பசியைத் தூண்டும் செரிமான ஆற்றலையும் பெருக்கச்செய்யும். நெஞ்செரிச்சல் கடும் பித்தம் முதலியவற்றை கண்டிக்கும். பித்தத்தினால் ஏற்படும் வாந்தியைக் குணப்படுத்தும் வயிற்றுச்சூட்டை தணித்து வயிற்றில் ஜிரணமாகாத பொருட்களை ஜீரணிக்கச் செய்கிறது.

தூதுவாளைக் கீரை

ஆஸ்தூமா நோயைக் குணப்படுத்தும் நிமோனியா, டைபாய்டு, சுபவாத சுரம் போன்ற நோய்களுக்கு இது மருந்தாகும். குளோரோமைசின் ஆன்டிபயாடிக்ஸ் போன்று மிக விரைவாகவும் வேகமாகவும் அபாயம் எதுவுமின்றி நோயாளியை பாதுகாக்கும். உடல்பலமும் முகவசீகரமும் அழகும் தரவல்லது.

பொன்னாங்கன்னி

இக்கீரையை உண்பதால் வாய்ப்புண், வாய்நாற்றம், மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும். மூலச்சூடு கைகால் எரிச்சல் வயிற்றெறிச்சல் ஈரல் நோய் முதலியன நீங்கும். நல்ல பசியை உண்டாக்கும். கருவிழி நோய்கள் குணமாகும்.

மணத்தக்காளி கீரை

உடலுக்கும் அழகுக்கும் வசீகரத் தன்மையும் கொடுக்கும். இக்கீரை இதயத்திற்கு பலமும் வலிமையும் ஊட்ட வல்லது. குடல் புண்ணுக்கு ஏற்றதொரு மருந்து இது. உடம்பின் களைப்பை நீக்கி நல்ல தூக்கத்தை கொடுக்கவல்லது. தலைவலிக்கு சிறந்த மருந்து.

முருங்கைக் கீரை

நீரிழிவு வியாதியை நீக்கும் ஆற்றலுடையது. நெஞ்சில் உள்ள கோழையை அகற்றும் தன்மை பெற்றது. சிறுநீரை பெருக்கித் தள்ளும் ஆற்றல் கொண்டது. ரத்த விருத்திக்கு ஏற்றது. தொண்டை தொடர்பான நோய்களை நீக்கும்

வாயு தொல்லை நீங்க!!!

வாயு தொல்லை நீங்க!!!

சுக்கு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
இந்துப்பு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
கருஞ்சீரகம் - 50 கிராம்
கடுக்காய் - 50 கிராம்
பெருங்காயம் - 50 கிராம்
சாதிக்காய் - 50 கிராம்

இவை அனைத்தையும் முறைப்படி சுத்தி செய்து தனித் தனியாக மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பின் எல்லா பொடிகளையும் சேர்த்து நன்றாக கலந்து  கொள்ளவும்.

தேன், மோர், வெந்நீர் இதில் ஏதாவது ஒன்றுடன் கால் டீஸ்பூன்  அளவு கலந்து காலை, இரவு சாப்பிட்டு வர வாயு தொல்லை, விலா எலும்பு வலி, இடுப்பிலிருந்து மார்பு வரை வேதனை தரும் வாயு தொல்லை, மூச்சை அழுத்தி பிடிக்கும் நெஞ்சு வலி, முதலியவைகள் குணமாகும்.

தலையில் பொடுகு வந்துவிட்டதே என்ற கவலை இனி இல்லை....!

தலையில் பொடுகு வந்துவிட்டதே என்ற கவலை இனி இல்லை....!

பாசிப்பயறு மாவு, தயிர் கலந்து தலையில் ஊறவைத்துப் பின்னர்க் குளிக்க வேண்டும். கற்றாழைச் சாற்றைத் தலையின் மேல் பகுதியில் நன்கு படும்படி தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
தலையில் சிறிதளவு தயிர் தேய்த்துச் சில நிமிடங்கள் கழித்துச் சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வேப்பிலைக் கொழுந்து, துளசி ஆகியவற்றை மையாக அரைத்துத் தலையில் தேய்த்துச் சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது. வாரம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்க்க வேண்டும்.

நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர், கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிதுநேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்வது நல்லது.

பசலை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.

காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.

சின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்

ஞாபக சக்தி விருத்திக்கு சூரணம்

ஞாபக சக்தி விருத்திக்கு சூரணம்

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

செய்முறை :

1 - வல்லாரை இலை - 70 -கிராம்
2 - துளசி இலை - 70 -கிராம்
3 - சுக்கு - 35 -கிராம்
4 - வசம்பு - 35 -கிராம்
5 - கரி மஞ்சள் -35 -கிராம்
6 - அதிமதுரம் -35 -கிராம்
7 - கோஷ்டம் - 35 -கிராம்
8 - ஓமம் - 35 -கிராம்
9 - திப்பிலி - 35 -கிராம்
10 - மர மஞ்சள் - 35 -கிராம்
11 - சீரகம் - 35 -கிராம்
12 - இந்துப்பு - 35 -கிராம்

இவைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :

காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்

இதயம் வலுவாக ஆவாரை மூலிகைத் தேனீர்

இதயம் வலுவாக ஆவாரை மூலிகைத் தேனீர்:

ஆவாரம்பூ – 100 கிராம்

ரோஜாப்பூ – 50 கிராம்

சுக்கு – 25 கிராம்

மிளகு – 10 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

துளசி – 50 கிராம்

இவற்றை ஒன்றிரண்டாய் இடித்து தூளாக்கி 1 spoon எடுத்து வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு நீர் எடுத்து கொதிக்க வைத்து தேனீர் போல் தினசரி அதிகாலையில் சாப்பிட்டு வர இதயம் வலுவாகும். உடல் பருமன், ஊளைச்சதை குறையும்.

Saturday, February 16, 2019

கன்னங்களை குண்டாக்க உதவும் பழம்: ஒன்று இருந்தாலே போதும்

கன்னங்களை குண்டாக்க உதவும் பழம்: ஒன்று இருந்தாலே போதும்
கொழு கொழு கன்னங்கள் தான் நம் முகத்திற்கு அழகை கொடுக்கிறது.
ஆனால் சிலருக்கு இருக்கும் ஒட்டிய கன்னங்கள் அவர்களின் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும். அவர்களுக்கான டிப்ஸ் இதோ,
தேவையான பொருட்கள்
சப்போட்டா பழம் – 1
சந்தனம் – 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்
தயாரிப்பது எப்படி?
முதலில் சப்போட்டா பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் சம அளவில் சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டரை கலந்து கன்னங்களில் தடவ வேண்டும்.
அதன் பின் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இம்முறையை வாரம் 3 நாட்கள் தொடர்ந்து செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
மற்றொரு முறை
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு போட்டு அதை 10 நிமிடங்கள் வாயில் வைத்திருக்க வேண்டும். இதை தினமும் செய்து வந்தால், கன்னங்கள் குண்டாகும்.
நன்மைகள்
கன்னப் பகுதியில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும்.
கொலாஜன் அதிகமாக உற்பத்தியாகும்.
கன்னங்களில் சதை வளர்ச்சி தூண்டப்படும்.
கன்னங்கள் கொழு கொழுவென்று அழகாக மாறும்.