Monday, May 24, 2021

பித்தப்பைகல் நீங்க…

*💊 பித்தப்பைகல் நீங்க…❓*


💢👉 500மி.லி. விளக்கெண்ணெயில் 200கிராம் பூண்டை பேஸ்ட் ஆக போட்டு அத்துடன் 30கிராம் இந்துப்பு,20கிராம் பெருங்காயம் பொடித்துப் போட்டு நன்கு கொதிக்க விடவும் அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிண்டிவரவும் ஒரு பக்குவத்தில் எண்ணெய் தனியாக பிரிந்து கீழ் உள்ள பேஸ்ட் மெழுகு பதம் வந்தவுடன் இறக்கிவைத்து நன்கு ஆறியதும் எண்ணையை மட்டும் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும் மண்டியை தூர எறிந்து விடவும். மேற்கண்ட எண்ணையை தினமும் இரவு உணவுக்குப் பின் 2ஸ்பூன்
(தேக வலிவையறிந்து) சாப்பிட்டு வர காலையில் எந்த சிரமமும் இன்றி மலம்கழியும். இதை 2 மாதம் தொடர்ந்து அருந்தினால் பித்தப்பை கல் கரைந்து விடும்.


⭐ முருங்கைக்கீரையை அடிக்கடி உப்பின்றி சமைத்து சாப்பிட்டு வர கரையும்.

⭐ பூலாப்பூ எனும் சமூலத்துடன் ( பூலாப்பூவின் அனைத்து பாகங்களும்.) முருங்கைக்கீரை சம அளவு சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு காலை வெறும் வயிற்றில் ஒரு மாதம் சாப்பிட்டு வர பெரிய கற்களும் கரைந்து விடும். மருந்து சாப்பிட்டு  முடியும் வரை மது, மாமிசம் கூடாது. உப்பைத் தவிர்த்தால் கல் சீக்கிரம் கரையும்.

⭐ "யானை நெருஞ்சிமுள் " இச்செடியின் இலையை கழுவி விட்டு குடிநீரீல் முக்கிஎடுத்தால் நீர் வழுவழுப்பாக மாறும் இந்நீரை தினமும் வெறும் வயிற்றில்பருகி வர ஒரே மாதத்தில் நாட்பட்ட கற்ககளும் வெளியேறும். 

தினமும் 300 Ml அளவு அருந்தினால் போதும். பக்க விளைவுகள் எதுவுமில்லை. இச்செடி வரண்ட பிரதேசங்களில் வளரும். மலை அடிவாரத்திலும் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பூ பூக்கும். இதன் காய் யானை தலை வடிவில் இருப்பதால் இப்பெயர் இச்செடிக்கு.

⭐ ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

⭐ ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.
எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.

⭐ இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.
மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

⭐ சிறுகீரை தீநீர் 48 நாள் காலையில் குடிக்கவும்.

⭐ வாழைத்தண்டு சாறுடன் கொள்ளு சேர்த்து குடிக்கவும்.

⭐ நெருஞ்சில் இலையை பொடி செய்து காலையில் இரண்டு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அப்படி குடித்து வந்தால் ஆறுநாட்களில் இந்த நோயை குணப்படுத்தலாம்.

⭐ எலுமிச்சை சாரை ஒரு கப் நீரில் பிழிந்து ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை அருந்தவும். 

⭐ ஒரு கப் தண்ணீரை கொதிக்க விட்டு கொதி வந்தவுடன் நெருப்பை அணைத்து , இதில் அரை டீஸ்பூன் கீழாநெல்லி கீரை பொடியை சேர்த்து கலக்கவும். பத்து நிமிடம் கழித்து நீர் ஆறியவுடன் வடிகட்டி அருந்தவும். ஒரு நாளைக்கு ஒருமுறை குடித்தால் போதும். இதை ஒரு வாரம் குடிக்கவும். கீழநேல்லிக் கீரை கல்லை கரைக்கும் தன்மை கொண்டது. இது பித்தப்பைக் கல், கிட்னியில் கல், கல்லீரலில் கல் அனைத்தையும் கரைக்க வல்லது.

⭐ஆப்பிள், பேரிக்காய்,ஆரஞ்சு போன்ற உணவுகளில் தினமும் ஏதாவது ஒன்றை உண்பது இந்த நோய் வராமல் இருக்க வாய்ப்பு.

⭐வெஜிடபிள் சலாட் ஆக முள்ளங்கி, பீட்ரூட் ஆகியன தினமும் இரண்டு மூன்று துண்டுகளை சாப்பிடுவதும் இந்த நோய் வராமல் இருக்க வாய்ப்பு .

⭐வெந்ததை மட்டும் சாப்பிடாமல் தினமும் ஒரு கப் பழக்கலவை மற்றும் காய்கலவை சாப்பிட இந்த மாதிரி நோய்கள் அண்டாமல் இருக்க வாய்ப்பு.

⭐வாரம் ஒரு முறை முள்ளங்கி சாறெடுத்து 25 மி.லி. குடித்து வர நோய் கடுமையிலிருந்து சற்றே தீர்வு கிடைக்கலாம்.


⭐ நெருஞ்சில் விதை, சிறுவழுதுணை, வெண் வழுதுணை, பெருமல்லிகை, பாதிரி போன்ற மூலிகைகளை கஷாயமாகக் காய்ச்சி சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக்கற்கள், பித்தப்பை கற்கள் போன்றவை விடுபடுவதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.

⭐ கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.

⭐ வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம்.

⭐ வலி இல்லாத காலத்தில் நிலவேம்பு சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம்.

⭐ முழுமையான கொழுப்பு கொண்ட இறைச்சி, வெண்ணெய் மற்றும் பால் போன்ற பொருட்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தூண்டி, பித்தப்பை பாதிப்பை ஆரம்பித்து வைக்கும்.

⭐ கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணை நிறைந்த அல்லது வறுத்த உணவுகளை பித்தக்கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த உணவு பொருட்கள் பித்தப்பையை கடினமான வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. பின் ஒரு நாள் திடீரென்று, அந்த கற்கள் பித்தநீர்பைக்கு தடையை ஏற்படுத்தலாம்.

⭐ கனோலா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய்கள், உண்மையில் பித்தப்பைக் கற்களை தடுப்பதில் திறன் மிக்கவை. அதுமட்டுமின்றி, நட்ஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.

⭐ குளிர்ந்த நீரில் கிடைக்கும் மீன் வகைகளான டூனா, கானாங்கெளுத்தி மற்றும் சாலமன் வகைகளை சாப்பிடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா-3, பித்தப்பையின் செயல்பாட்டை அதிகரித்து, பித்தக்கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.

⭐ சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உயர் கிளைசீமிக் கார்போஹைட்ரேட் உணவு பொருட்களை தவிர்க்கவும். உருளைக்கிழங்கு, அரிசி, பாஸ்தா மற்றும் ரொட்டி உணவுகள், உடலினுள் சென்று நமது உடலால் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தாலும், அவை பித்தப்பை கற்களை உருவாக்கும்.

⭐ காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். இதனால் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் மூலமும் தெரிய வந்துள்ளது.

⭐ நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களான தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைத்து, இயற்கையாக பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும். நினைவில் கொள்ள வேண்டியவை...

🔴 உடலில் பித்தக்கற்கள் இருந்து, அதனால் எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றால், அப்போது எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டாம். அந்த நேரம், உணவுகளில் கவனத்தை செலுத்தினாலே அவை கரைந்துவிடும்.* அதிக பருமன் அல்லது மிக வேகமாக எடை குறைவது போன்றவை பித்தப்பைக் கற்களோடு தொடர்புடையவை. ஆகவே உடல் எடையை குறைக்கும் போது படிப்படியாக மெதுவாக குறைத்தால், இயற்கையாகவே பித்தப்பைக் கற்களை தடுக்கலாம்

No comments:

Post a Comment