Monday, May 23, 2016

தராய்டு பிரச்சனைகளை சரிசெய்யும் ஜூஸ் -

தராய்டு பிரச்சனைகளை சரிசெய்யும் ஜூஸ் - 

இயற்கை மருத்துவம்

ஆயிரக்கணக்கான மக்கள் அவஸ்தைப்படுவது தைராய்டு பிரச்சனையால் தான் . குறிப்பாக இப்பிரச்சனையால்பெண்கள் தான் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு தைராய்டு பிரச்சனையால் தான் இவ்வளவு கஷ்டம் என்று தெரிவதில்லை.தைராய்டு என்பது தொண்டையின் நடுவே பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ள ஓர் சுரப்பி. இந்த சுரப்பியில் இருந்து சுரக்கப்படும் ஹார்மோன்கள் தான் உடலின் பல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறதுஇந்த சுரப்பியில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும், அது உடலின் மற்ற பாகங்களிலும் பிரச்சனைகளை உண்டு பண்ணும். தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் ஏற்படும்.தைராய்டு
பிரச்சனைகளைத் தடுக்கும் அற்புத ஜூஸ்!தைராய்டு பிரச்சனை வகைகள் கழுத்தின் அமைந்துள்ள தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அவை:* ஹைப்பர் தைராய்டு
* ஹைப்போ தைராய்டுஹைப்பர் தைராய்டு
:-ஹைப்பர் தைராய்டு என்னும் நிலை தைராய்டு சுரப்பி அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதால் ஏற்படுவதாகும்.ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள் :-ஹைப்பர் தைராய்டு ஒருவருக்கு இருந்தால், ஒருசில அறிகுறிகள் தென்படும்.

அவை பெரிய கண்கள், அதிகமாகவியர்வை வெளியேறுவது, மிகுதியான சோர்வு, திடீர் உடல் எடை குறைவு, கவனச்சிதறல், வயிற்றுப்போக்குபோன்றவை.ஹைப்போ தைராய்டு :-தைராய்டு சுரப்பி போதிய அளவின்றி குறைவான அளவில் தைராய்டு ஹைர்மோன்களை சுரந்தால், அந்நிலையை ஹைப்போ தைராய்டு என்று அழைப்பர்.ஹைப்போ தைராய்டு அறிகுறிகள் முகம் வீங்கி காணப்படுவது, உடல் பலவீனம், உடல் சோர்வு, மலச்சிக்கல், காரணமின்றி திடீரென்று உடல் பருமனடைவது, சரும வறட்சி போன்றவை ஹைப்போ தைராய்டு இருப்பதற்கான அறிகுறிகளாகும்.இப்போது தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போம்.தேவையான பொருட்கள் :-சர்க்கரையில்லா கிரான்பெர்ரி சிரப் - 1 கப்தண்ணீர் - 8 டம்ளர்இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன்பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப்எலுமிச்சை ஜுஸ் - 1/4 கப்செய்முறை :-மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அந்த ஜூஸை தினமும் விரும்பும் நேரத்தில் குடித்து வரலாம்.உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் :-இந்த ஜூஸை குடிப்பதால், ஆரம்பத்தில் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றல் அளவில் மாற்றங்களைக் காணலாம். அத்துடன் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் சிறு முன்னேற்றம் தெரிந்து, தைராய்டு ஹார்மோன்கள் சீரான அளவில் சுரப்பதைக் காண முடியும்.

திருமணமாகி நீண்ட நாட்களாக உங்களுக்கு குழந்தை இல்லையா ? ? ? ?

திருமணமாகி நீண்ட நாட்களாக உங்களுக்கு குழந்தை இல்லையா ? ? ? ?
திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.
அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.
குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.
இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.
இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.
இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.
கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.
பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

Monday, May 16, 2016

சோரியாசிஸ்


நரை, திரை, மூப்பு, பிணி அணுகாமல் என்றும் இளமையாக இருக்க..

நரை, திரை, மூப்பு, பிணி அணுகாமல் என்றும் இளமையாக இருக்க..

நெல்லிக்காயில் பல அதிசய குணங்கள் உண்டு. நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சியளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

தமிழ் மருத்துவத்தில் நெல்லிக்காய்க்குப் முக்கியமான இடம் இருக்கிறது. நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கல்சியம் 50 மில்லிகிராம், பொஸ்பரஸ் - 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஒரு அப்பிள் பழத்தில் உள்ளதை விட அதிக விற்றமின்களும் கனியுப்புக்களும் நெல்லிக்காயில் உள்ளது.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது.

கண்களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

சகல வயதினருக்கும் பல வழிகளில் நிவாரணம் தரும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. நெல்லிக்காய் ஜாம் உண்பதால் உங்கள் இளமை அதிகரிக்கும், நீண்ட காலம் வாழ உதவும், உடலும் குளிர்ச்சியடையும், முடி வளர்ச்சியை தூண்டும்.

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது. நெ‌ல்‌லி‌க்காயை ‌பிறை ‌நிலா வடிவ‌த்‌தி‌ல் வெ‌ட்டி தே‌னி‌ல் ஊறவை‌த்து எடு‌த்து காயவை‌த்து ப‌த்‌திர‌ப்படு‌த்‌தி தேவை‌ப்படு‌ம்போது சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம். ஊறுகா‌ய் போ‌ட்டு‌ம் சாப்பிடலாம் .

உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் `சி` உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது.

நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் `சி`, செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம். மேலும் இதில் தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டு.நெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு,காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது.

நெல்லி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும். அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவதித்து இருப்போம். நானும் அனுபவித்து இருக்கின்றேன் .

பல மருத்துவ குணங்களை கொண்ட நெல்லியில் அப்பிளை விட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது. எச்.ஐ.வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறது. மேலும் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ்,விட்டமின் பி என்பனநிறைந்துள்ளது.

பல மருத்துவ குணங்களை கொண்ட நெல்லிக்காயை பலர் சுவைத்து இருப்பர். பலர் சுவைத்து இருக்க மாட்டார்கள் . நெல்லிக்காய் எங்கேயும் கிடைத்தால் சாப்பிட்டு பாருங்கள்

Sunday, May 15, 2016

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

சீரகத்தின் மருத்துவப் பயன்கள்

1. சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

2. சீரகத்தையும், உப்பையும் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே தீரும்.

3. சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும்.

4. சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

5. சீரகத்தை அரைத்து மூல முளையில் பூசினால் மூலம் வற்றும்.

6. சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

7. சீரகத்தை மென்று தின்றாலே, வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.

8. சீரகப்பொடியோடு எலுமிச்சைச் சாறு சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் பித்தம் அகலும்.

9. நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.

10. சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

11. சீரகத்தை வறுத்து சுடு நீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும், மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.

12. சீரகம், வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து, பாலில் கலந்து காலையில் குடித்து வர தாது பலம் கூடும்

உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க..

உடல் எடையை குறைக்க வேண்டுமா? பச்சை பயிறு சாப்பிடுங்க..

பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.

குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.

பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.

சத்துக்கள் நிறைந்தது

பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.

சரும புற்றுநோய்

பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

எடையைக் குறைக்கும்

உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.

உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

Saturday, May 14, 2016

தேமல் மறைய

தேமல் மறைய

முகத்தில் தேமல் அகல

பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை முகத்தில் தேமல் உள்ள இடங்களில் பூசி வர முகத்தில் காணும் தேமல் அகலும். 

தேமல் குறைய
அருகம்புல், கஸ்தூரிமஞ்சள் , மருதோன்றி அரைத்து பூச குணமாகும்.

தேமல் குணமாக
நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும்.

தேமல் குணமாக
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும்.

தேமல் குறைய
நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் குறையும்.

தேமல் மறைய
எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.

தேமல் குறைய
எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும்.

தேமல் குறைய
மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும் .

தேமல் நீங்க
துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

தேமல் குறைய
சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் குறையும்.

தேமல் மறைய
சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்

தாம்பத்யம்


தேன்


Monday, May 9, 2016

இப்படித்தான் கிரீன் டீ தயாரிக்கணும்...


இப்படித்தான் கிரீன் டீ தயாரிக்கணும்...

கிரீன் டீயை தூளாக வாங்கி பயன்படுத்த கூடாது. உலர்த்திய கிரீன் டீ இலைகளை வாங்கி, வெந்நீரில் போட்டு, மூடிவைக்க வேண்டும். ஒரு சில நிமிடங்களில் கிரீன் டீயின் ஃபிளேவர் வெந்நீரில் கலக்கும். இதில், சர்க்கரை சேர்க்காமல், தேவைப்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்தால் முழு பலன்களும் கிடைக்கும். க்ரீன் டீயில் பால் சேர்க்கக்கூடாது.

1.கிரீன் டீயில் ஃப்ளவனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. இளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.

2. கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

3.கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.

4.கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.

5. கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

6. வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். இது கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்.

தண்ணீர் வைத்தியம்... குளிக்க... குடிக்க..



தண்ணீர் வைத்தியம்... குளிக்க... குடிக்க..

கோ டை வெயில் கொளுத்த ஆரம்பிச்சுடுச்சு. குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவும் விட்டாச்சா?! பகலெல்லாம் வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வெச்சு சமாளிப்பது கஷ்டமான காரியம்தாங்க!

‘தாகம்’னு அடிக்கடி ஃப்ரிஜ் தண்ணியை எடுத்து குடிக்கப் போறாங்க. அது, உடம்பு சூட்டை கிளப்பி விடுமே தவிர, தாகத்தைத் தீர்க்காது. அதை விட நன்னாரி வேர் ஊறப்போட்ட தண்ணியை குடிக்கச் சொல்லுங்க. உடம்பு உஷ்ணம், தாகம் சட்டுனு தணியும். மலையாளத்துக்காரங்க எல்லாம் சீரகம் ஊற வச்ச தண்ணியைத்தான் குடிப்பாங்க. கோடைக் காலத்துக்கு உடம்பை குளுமை பண்ற அருமையான தண்ணி அது. அதுல துளசியையும் சேர்த்து போடலாம். எதுவானாலும் ஒவ்வொரு நாளும் புதுத் தண்ணியைத் தயார் பண்ணணுங்க.

வெயில் நேரத்துல குழந்தைகள் மட்டுமில்லாம பெரியவங்களுக்குக்கூட அக்கி, அம்மை மாதிரியான நோய்கள் வரலாம். அதைத் தடுக்க, ஒரு வாளி நிறைய தண்ணியில நிறைய வேப்பிலையை போட்டு வெயில்ல வச்சுடுங்க. தண்ணி சூடானதும் வேப்பிலையை எடுத்துப் போட்டுட்டு குளிங்க. கிருமிகள்கிட்டேயிருந்து உடம்பை காக்கிற அருமையான கிருமிநாசினி தண்ணி இது!

பெண்கள்னா உடம்புல மஞ்சளும் ஆண்கள்னா கொஞ்சம்போல சந்தனமும் பூசி, நல்லா தேய்ச்சி இந்த தண்ணியில குளிச்சா, அதோட பலனே தனி! ஒரு பக்கெட் தண்ணிக்கு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிஞ்சு குளிச்சா, வியர்வை நாற்றம் நீங்கி இன்னும் ஃப்ரெஷ்ஷா இருக்கலாம்.

குழந்தைகளுக்கு ரெடிமேட் ஜூஸ்கள்லாம் வாங்கிக் கொடுக்காம இளநீர், நீர்மோர்னு குடிக்க வைக்கிறது ரொம்ப நல்லது. அவங்களுக்கு ரொம்பப் பிடிச்ச ‘கேரட் கீர்’ பண்றது எப்படினு சொல்றேன்.

கேரட்டை தோல் சீவி நல்லா கழுவிக்குங்க. கால் கிலோ கேரட்டுக்கு மூணு பெரிய சில்லு தேங்கா சேர்த்து ஒரு டம்ளர் தண்ணி விட்டு மிக்ஸில மையா அரைச்சுக்குங்க. அதை காய்கறி வடிகட்டில போட்டு ஜூஸை மட்டும் எடுத்து தேவையான அளவு வெல்லம் (இரும்பு சத்து கிடைக்கும்), ரெண்டு டேபிள்ஸ்பூன் தேன் கலந்து குடிக்கக் கொடுங்க. வெயில் நேரத்துல சாப்பிடப் பிடிக்காம குழந்தைங்க அடம்பிடிச்சாக்கூட, இந்த மாதிரி ஹெல்தி டிரிங்க் தேவையான சத்து கொடுத்து ஈடுகட்டிடும். சொல்றது புரிஞ்சுதா?

பார்வைத்திறனை மேம்படுத்தும் அத்தி !

பார்வைத்திறனை மேம்படுத்தும் அத்தி ! 




50 கிராமில் 37 கலோரிகள் உள்ளன.

தினசரி நார்சத்துத் தேவையில் 6 சதவிகிதம் இதில் இருந்து கிடைக்கும்.

பொட்டாசியம் நிறைந்துள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

மெனோபாஸைக் கடந்த பெண்களுக்கு நல்லது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

தினமும் மூன்று நான்கு அத்தி சாப்பிட்டுவந்தால், உடல் பொலிவுபெறும். முதுமையைத் தாமதப்படுத்தும்.

கெரோட்டினாய்டு உள்ளதால், பார்வைத்திறனை மேம்படுத்தும்.

ஆக்ஸிலேட் நிறைந்துள்ளது, சிறுநீரகக் கல் நீங்க உதவும். தினமும் ஆறு அத்திகளை ஒரு கப் நீரில் ஊறவைத்து, மறுநாள் பருகிவரலாம்.

கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு நல்லது.

தினமும் இரண்டு மூன்று அத்தியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் நீங்கும்.

வைட்டமின் சி நிறைந்துள்ளதால், தொண்டைப்புண்கள், குடல்புண்களை ஆற்றும்.

கொழுப்பை கட்டுப்படுத்தும் தர்பூசணி


இயற்கையின் கொடையாக, கோடை காலத்தில் மட்டுமே சில பழங்கள் கிடைக்கின்றன. அவற்றுள், கோடை வந்ததுமே சாலையோரத்தை நிறைக்கும், நீர் நிறைந்த தர்பூசணிப் பழத்தை விரும்பாதவர் இருக்க முடியுமா?


தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் (Citrulline) என்ற சத்துப் பொருள், கொழுப்புச் சேர்வதை தடுக்கிறது. ரத்தத்தில் இந்த சிட்ரூலின் கலந்ததும், சிறுநீரகத்தின் உதவியுடன் 'அர்ஜனைன்’ (Arginine) என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. இந்த அர்ஜனைன், கொழுப்பு செல்களைக் கட்டுப்படுத்தி, கொழுப்பு அதிக அளவில் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. இதுதவிர காயம், புண் உள்ள பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. காயம்பட்ட பகுதியில் நல்ல ரத்த ஓட்டம் காரணமாக ஆக்சிஜன் அளவு அதிகரித்து, புண் விரைவில் குணமாக உதவுகிறது. புண் உள்ள பகுதியில் புதிய திசுக்கள் உற்பத்திக்கும் அர்ஜனைன் காரணமாகிறது.

தர்ப்பூசணியில், 'ஃபைட்டோ நியூட்ரியன்ட்ஸ்’ என்ற சத்து உள்ளது. இது, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கிறது. இதில் உள்ள மூலப்பொருள்கள் ரத்தம் வழியாகச் சென்று, நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகிறது. தினமும் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் நம்முடைய ஆற்றல் அளவை 23 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடியும். இதில், மகிழ்ச்சிக்கான 'டோபோமைன்’ என்ற ரசாயனம் சுரக்க உதவும், வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இப் பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
எல்லோருக்கும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம் என்பதால், தர்பூசணியை எந்த வயதினரும் சாப்பிடலாம். இந்தப் பழம் உடலில் உள்ள நீரின் அளவினை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவும்.