Thursday, October 11, 2018

















கொத்தவரங்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்


வெண்பூசணி பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்

கத்தரிக்காய்



  • 1.வெண்பூசணி
  • 2.கத்தரிக்காய்
  • 3.கொத்தவரங்காய்
  • 4.புடலங்காய்
  • 5.அரசாணிக்காய்
  • 6.கோவைக்காய்
  • 7.முருங்கைக்காய்
  • 8.பீர்க்கன்காய்
  • 9.தேங்காய்
  • 10.எலுமிச்சை
  • 11.வெண்டைக்காய்
  • 12.வாழைக்காய்


2.கத்தரிக்காய்

உடலும் பூமியும்
நம் உடலில் உள்ள நீர்நிலைகளின் அளவு 75% இந்த பூமியில் உள்ள நீர்நிலைகளின் அளவும் 75%. பூமியிலிருந்து தோன்றிய உடல் பூமியின் பிள்ளையாகவே கருதப்படுகிறது. பூமிக்கு நாம் சொல்லும் அத்தனை அறிவியல் விதிகளும் உடலுக்கும் மிகத்துள்ளியமாக பொருந்தும்.

பூமியில் 75% கடல் நீர். அதன் உப்புத் தன்மையால் அது நமக்கு பயன் அளிப்பதில்லை. அந்த உப்பு நீர் மழையாக மாறி நிலத்திற்கு வரும்போது அது பயன்தரக்கூடியதாக மாறுகிறது. அது போல் நம் உடலில் 75% பிளாஸ்மா. ஒவ்வொரு செல்லிலும் நீர் உள்ளது. நமது உடலில் உள்ள நீரின் உப்புத்தன்மை சரியான அளவில் இருந்தால் மட்டுமே அது நமக்குப் பயன்படும். எனவே உப்புதன்மை அதிகமானால் ஒவ்வொரு செல்லும் பாதிப்படையும். முக்கியமாக செல்லின் வளர்ச்சி பாதிக்கப்படும், செல் வளர்வதற்கான சூழ்நிலை அமையாத மிகவும் போராட்டத்திற்குள்ளாகும்.

சிறுநீரகத்தின் பணி

உப்புத்தன்மை உடலில் அதிகமானால் நீர் ஓட்டம் இருக்காது. உப்பு ஆங்காங்கே தங்குவதால் உடலில் அழுத்தம் ஏற்படும். எனவே தேவையற்ற அதிகப்படியான உப்பை நாம் வெளியேற்றியே ஆகவேண்டும். நாம் உண்ணும் உப்பு சுவையூட்டிகளில் உள்ள உப்பு ( அஜீனோமோட்டோ) மருந்துகளில் உள்ள இரசாயனம், காற்றில் உள்ள விஷத்தன்மை இவைகள் அனைத்தும் இரத்தத்தில் கலக்கின்றன. இவைகள் அனைத்தையும் அழித்து உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். இந்த சுத்தப்படுத்தும் முக்கிய பணியை நமது சிறுநீரகம் செய்கின்றது. இந்த சிறுநீரகம் அல்லாமல் உடலின் ஒவ்வொரு செல்லும் இந்த பணியினை செய்கின்றன. சிறுநீரகம் என்பது தலைமையகம். உடல் முழுவதும் வேலை செய்யும் செல்களால் சீர்ப்படுத்த முடியாத வேலையினையும் சிறுநீரகம்சேர்த்து செய்யும். சிறுநீரகத்தின் மூலம் சுத்தப்படுத்தப்பட்ட நீர்நிலைகள் உடம்பின் வளர்ச்சிக்கு தேவைப்படுகின்றது. அதில் விஷங்கள் இருப்பின் அது உடலை சீரழிக்கும்.

படைப்பில் முக்கியமானதுஅழித்தல் தன்மை. எனவே உடலுக்கு எதிர்மறையான நஞ்சுகளை அழிக்கும் ஆற்றல் வேண்டும். நஞ்சுகள் அழிக்காமல் இருந்தால் அவை ஓரிடத்தில் தேக்கமுறும். நமது உடலானது நீரை பெறுவதும். நீரை செரிப்பதும், நீரை வெளியேற்றுவதும் ஸ்தம்பித்து விடும். எனவே இந்த பிரச்சினைகளை உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அனுபவிக்கும்.

கத்திரிக்காயின் நன்மைகள்

பெண்கள் தலைக்கு குளிப்பதால் தலைவலி ஏற்படும், அதனால் தலைக்கு குளிப்பதில்லை. இது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக மாறுகிறது. ஒரு மின்சாரம் செல்லும் ஒயரின் மேற்புறம் மின்கடத்தாப் பொருள் அமைந்துள்ளது. ஏதோ ஒரு நிலையில் அந்த பொருளில் பாதிப்பு ஏற்பட்டால், நீர் கசிவால் பாதிப்பு ஏற்படும். ஒயரில் உள்ள மின்சாரம் செல்லும் காப்பர் கம்பி நல்ல நிலையில் உள்ளது. ஆனால் மேலே அமைந்துள்ள இன்சுலேசனில் பாதிப்பு உள்ளது.

நோய் தொற்று காரணத்தினால் உடலில் உள்ள நீர்நிலைகள் நரம்புகளோடு தொடர்பு கொள்ளும்போது பாதிப்பு ஏற்படும். அந்த நீரில் உள்ள உப்பு, அமீபா,காளான் , பூஞ்சானம் போன்ற எந்த கிருமிகளாலும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படலாம். எனவே நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு கைகளில் நடுக்கம் ஏற்படும். இந்த நடுக்கம் ஏற்பட முக்கிய காரணம் நமது உடலில் உள்ள நீர்நிலைகள் கெட்டுப் போய் நரம்பினில் பாதிப்பை ஏற்படுத்தும். அதிகப்படியான உப்பானது நரம்பின் மேல் உள்ள தோலை அரித்து விடும். கை நடுக்கத்திற்கு நாம் நரம்பு வைத்தியரை சென்று பார்ப்போம். ஆனால் இதற்கு அடிப்படையான காரணம் சிறுநீரில் உள்ள பிரச்சினையின் பாதிப்பு நரம்பில் வெளிப்படுகிறது. நரம்புகள் நன்றாக உள்ளன. ஆனால் நரம்புக்கு வேண்டிய சூழ்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிறுநீரக மண்டலமானது மற்ற 11 மண்டலத்திற்கும் உதவி செய்கிறது. மற்ற 11 மண்டலங்களும் சிறுநீரகத்திற்கு உதவி செய்கிறது. அப்படி உதவி செய்வதால் மட்டுமே உடலானது சரியான முறையில் இயங்க முடியும். நரம்புகளின் பாதிப்பால் ஏற்படும் கைநடுக்கம் சிறுநீரகத்தால் ஏற்படுகிறது.

கண்களின் உட்புறம் நீர் உள்ளது. அதில் உப்புத்தன்மை ஏற ஏற ஒளி ஊடுரவும் தன்மை குறைந்து விடும். சூரிய ஒளி கண்களில் படும்போது கூச்சம் ஏற்படும். ஒளியை அவர்களால் பார்க்க முடியாது. அதற்கு காரணம் நம் கண்களில் உள்ள நீர்நிலைகளின் தன்மை மாறியிருக்கிறது. எனவே இதனை சரி செய்ய சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சரியான முறையில் இருக்க வேண்டும்

காதுகளின் உட்புறம் நீர் அமைந்துள்ளது. நாம் நேராக நிற்பதற்கு இந்த நீரானது உதவி செய்யும் எனவே காதில் உள்ள நீரின் உப்பின் அளவு அதிகமானால் ஒரு அழுத்தம் இருப்பதாக உணர்வார்கள்

மூக்கிலிருந்து வெளியேறும் சளியானது பச்சை நிறத்தில் வெளியேறும்.

உடலில் உப்புத்தன்மை அதிகமாகி கல்லீரலிலும் உப்புத்தன்மை அதிகரிக்கும். எனவே கல்லீரலானது அதை சுத்தப்படுத்த வேண்டி கொஞ்ச நேரம் சாப்பிடாமல் இருக்க சொல்லி நமக்கு அறிவுறுத்தும். அதுவே நமக்கு நாக்கில் கசப்பு சுவையாக தெரியும், கசப்பு சுவை தெரிகிறது என்றால் உணவை உண்ணக்கூடாது என்று அர்த்தம். அதாவது கல்லீரல் தன்னைத் தானே சுத்தப்படுத்தி கொள்கிறது என்று அர்த்தம். ஆனால் நமது உடலின் மொழி என்னவென்று தெரியாமல் மேலும் மேலும் நாம் உணவினை உட்கொண்டு விடுகின்றோம். நம்மால் இயற்கையை புரிந்து கொள்ள முடியவில்லை. கல்லீரல் என்னால் இயங்க முடியவில்லை என்று கசப்பு சுவையை உணர்த்திய போதும் நாம் உணவினை உட்கொண்டு நம் உடலின் நல்ல இயக்கத்திற்கு எதிராக துரோகம் செய்கின்றோம்.

வெளியில் ஈரபதம் அதிகமானால் நமக்கு சளிபிடித்துக் கொள்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சளி என்பது வேறு. ஈரபதத்தினால் ஏற்படும் சளி என்பது வேறு. எனவே ஈரபதத்தினால் மூச்சு திணறல் ஏற்படும்.

பித்த நீர் நமது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. கொழுப்பும், நீரும் சேர்ந்து தான் பித்த நீர் உருவாகிறது. பித்தப்பையில் உள்ள பித்த நீர் இறுகி கல்போன்று ஆகிவிடக் கூடாது. இதற்கு காரணம் உடம்பில் ஏற்படும் இரசாயண மாற்றத்தின் காரணமாக உடம்பில் அதிக உப்பு சேர்வதன் காரணமாக இறுகும் நிலை ஏற்படும். இதுவே பித்தப்பையில் கல் உருவாக காரணமாகிறது.

வயிற்றில், குடலில் சில சமயங்களில் சாப்பிட்ட உணவில் உள்ள அதிகப்படியான உப்பின் தன்மையானது குடலில் உள்ள தோலை அரிக்க ஆரம்பித்து விடும். தோலை அரித்து விடுவதால் உணவு செல்லும் போது மிகவும் சிரமப்பட்டு செல்லும். மேலும் குடலின் இயக்கத்திற்கு உப்பானது மிகுந்த பிரச்சனைகளை உருவாக்குகிறது. வலியுடன் மலம் போகும். உடலில் உப்புத்தன்மை ஏற ஏற இதன் இயக்கம் பாதிக்கப்பட்டு ஒட்டு குடல் வர வாய்ப்புண்டு. இதற்கு காரணம் சிறுநீரக மண்டலத்தின் செயல்திறன் மட்டுப்படுவதால் நிகழ்ந்தது.

அதிக உப்புத் தன்மையின் காரணமாக சிறுநீரகத்தில் தோன்றும் சிறுநீரகத்தில் ஏற்படும் எந்தக் கற்களானாலும் கத்தரிக்காய் அதை கரைத்து விடும்

சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் இருக்கும். அதிக உப்புத் தன்மையால் தோலில் பாதிப்புக்கள் ஏற்படும். காலில் ஆணி,கழுத்தில் மங்கு, முகத்தில் மருக்கள், ஏற்படும். இவை அனைத்திற்கும் தீர்வு கத்தரிக்காய்.

கத்தரிக்காயின் மூலமாக உடலில் உள்ள எந்த நஞ்சையும் அழிக்க முடியும்

கத்தரிக்காயின் வேலையை கடுகு செய்யுமா?

கத்தரிக்காயின் மூலமாக நமது பாரம்பரியமான கத்தரி வகைகளை அழித்து விட்டார்கள். இந்த கத்தரிக்காய் செய்யும் வேலையை கடுகு எண்ணை சிறப்பாக செய்யும். எந்த ஒரு நஞ்சையும் அழிக்கும் ஆற்றல் கடுகிற்கு உண்டு. எனவே கடுகையும் அழிக்கும் வேலை தற்பொழுது நடைபெறுகிறது.

நமது நாட்டின் பாரம்பரியமான நாட்டு கத்தரிக்காய்க்கு உடலில் உள்ள எந்த நஞ்சையும் அழிக்கும் ஆற்றல் உண்டு. இதற்கு இணையான பொருள் உலகில் இல்லை. அந்த கத்தரிக்காய் நமது கலாச்சாரத்தை விட்டு போய் விட்டது

சுத்தமான கடுகு எண்ணையை 1 ஸ்பூன் எடுத்து 10நிமிடம் வாயில் வைத்திருந்து முழுங்கினால் உடலில் உள்ள கழிவுகளை எளிதில் நீக்க முடியும்.

குணம் : சகிப்புத் தன்மை

ஒருவருக்கு ஒரு வெறுப்புத்தன்மை இருக்கும். அதனால் அவர், இது பிடிக்காது, அது பிடிக்காது என்ற வெறுப்புணர்வால் அவரது உடம்பால் சகித்துக் கொள்ள முடியாது. மனதில் இருப்பதை உடல் அப்படியே காட்டிக் கொடுக்கும். அடிக்கடி சிறுநீர் தொற்று, தண்ணீர் குடித்தால் கூடசளி பிடித்தல், ஐஸ்கீரிம் சாப்பிட்டால் சளிப்பிடிக்கும். அவர்களுக்கு எந்தவிதமான ஈரபதமும் ஒத்துக் கொள்ளாது. இந்த பிரச்சினைகளுக்கு காரணம் அவர்களிடம் சகிப்புத்தன்மை கிடையாது. நாம் சரியாக நடந்து கொண்டால் கூட, நம்மை யாராவது எதிர்மறையாக விமர்சனம் செய்தால், நாம் அவர் மீது நமது வெறுப்புணர்வை காட்டுகிறோம். இந்த பூமியில் ஒரு மனிதன் யார் மீதும் எதிர்மறை கருத்துகள் இல்லாமல் வாழ முடியுமா? என்ன தவறு செய்தாலும் என்ன கஷ்டங்கள் கொடுத்தாலும் எதிர்மறை சிந்தனைகள் வரகூடாது. அப்பொழுதும் அவர்களின் நன்மையைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும். எப்படியாவது அவர்களுக்கு நன்மை நடக்குமா என்று சிந்திக்கக்கூடிய மனப்பான்மை இருந்தால் அது தான் சகிப்புத்தன்மை. நமக்கு யார் எவ்வளவு கஷ்டம் கொடுத்தாலும் நம் மனம் மற்றவர் மீது எதிர்மறையாக சிந்திக்கவில்லை என்றால் நமக்கு சகிப்புத்தன்மை இருக்கிறது என்று பொருள். நமது சிறுநீரகம் சரியாக வேலை செய்யும். பழிக்குப்பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்று செயல்படக் கூடாது.

இந்த உலகில் யார் ஒருவருக்கு சகிப்புத் தன்மையுள்ளதோ அவர்களால் தான் இந்த உலகினை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். சகிப்புத்தன்மையில்லையேல் இந்த சமூகத்திற்கு அவர்கள் எதிர்மறையாக செயல்படுவார்கள். ஒருவருக்கு அந்த மாதரியான சகிப்புத்தன்மை இருந்தது என்றால், எந்த சூழ்நிலையிலும் எதிர்மறையாக இல்லாமல் பிறர் நலன் பொருட்டு மட்டுமே அவரால் நினைக்க முடியும் என்றால் சுயம் பரமாத்மா அவருள் பிரவேசமாகி அவர் ஒரு வேலையினை செய்வார். அப்படியொரு குணாதிசயம் இருந்தால் பகவான் அவர் உடலில் இறங்கி அவருடைய காரியத்தை செய்வார். கடவுளிடம் செல்ல சில விதிமுறைகள் உள்ளன. ஆனால் அந்த கடவுள் நமக்குள் வருவதற்கு ஒரு விதியிருக்கிறது. அது தான் சகிப்புத்தன்மை. எத்தனை தோஷங்கள் இருந்தாலும் அத்தனையையும் நிவர்த்தி செய்வார்.

எனவே மொத்தமாக வருடத்தில் எத்தனை பிரதோஷங்கள் இருந்தாலும் வைகாசி மாதம் வரும் பெரிய பிரதோஷம் விசேஷமானது.

ஈஸ்வரனுக்கு இணையான காய்

சிவன் என்பவர் அழிப்பவர். எதனை அழிக்கின்றார்? எல்லா தீவினைகளையும், பாவங்களையும் அழிக்கின்றார். அது போல் நம் உடம்பில் உள்ள எந்த நஞ்சுகளையும் அழிக்கும் ஆற்றல் கத்தரிக்காய்க்கு இருப்பதால் அது ஈஸ்வரனுக்கு இணையான ஆற்றல் உடைய காய். அன்னாபிஷேக தினத்தன்று கத்தரி,சுரைக்காய் கொண்டு அன்னாபிஷேகம் செய்வார்கள்.

சகிப்புத்தன்மை ஒருவருக்கு இருந்தால் அவர் மூலமாக ஈஸ்வரன் பிரவேசமாகி பல நன்மைகளை செய்வார். ஈஸ்வரன் கோவிலில் ரிஷப வாகனம் ( நந்தி வாகனம் ) இருக்கும். ரிஷபம் பிறரது சீமையை தாங்கி செல்கிறது. அடுத்தவர் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைத்து, ஏற்றுக் கொண்டு தாங்கி செல்பவரிடத்தில், அவருடைய உடலில் ஈஸ்வரன் பிரவேசிப்பார். இது தான் வைகாசி பிரதோஷத்தின் பொருள். இந்த பூமியில் நல்ல மனிதனிடம் சொல்வது கடவுளிடம் செல்வதற்கு சமம். எனவே தான் மக்கள் நந்தியின் காதில் சொல்கிறார்கள்

ஒவ்வொரு கோவிலிலும் தல விருட்சம் என்று ஒன்று இருக்கும். இது நேர்மறையாக செயல்படும். அதாவது ஒரு கல்லை எடுத்து போட்டாலும் அது பழத்தை தரும். அது போல் எதிர்மறையாக செய்தாலும் அது நமக்கு நன்மையை மட்டுமே செய்யும். எப்படி ஒரு சிறிய விதையிலிருந்து விருட்சம் வருகின்றதோ அது மாதிரி இந்த மனித சமுதாயத்திற்கு அடிப்படை ஆதாரம் சகிப்புத்தன்மை. எனவே தான் மரத்தின் கீழ் உட்கார்ந்து தவம் செய்தார்கள். அவர்களுக்கு எல்லாம் கிடைத்தது என்று கூற காரணம் இது தான்.

தவம் என்பதின் பொருள் என்னவெனில் எதன் பொருட்டும், யார் மீதும் எதிர்மறையாக சிந்திக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுப்பது தான் தவம். எந்த காலத்திலும் யார் மீதும் எதிர்மறையான சிந்தனைகள் அணுவளவும் வரக்கூடாது, அது தான் உண்மையான தவம். சகிப்புத் தன்மையினை மிஞ்சிய தவம் உலகினில் ஏதும் இல்லை. கிராமங்களில் தவசி என்ற பெயர் உண்டு. காரணம் அவர் எதையும் தாங்கும் குணம் கொண்டவராக இருப்பார்.

“இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”.

அது போன்று எதிர்மறையாக செய்தாலும் நன்மையே செய்யும் குணாதிசயம் இருப்பது தான் சகிப்புத்தன்மை.

அப்படி நமக்கு சகிப்புத்தன்மை இல்லையெனில் நாம் கத்தரிக்காய் சாப்பிட்டு அந்த சகிப்புத்தன்மையினை பெற்றுக் கொள்ளலாம். சகிப்புத்தன்மையிருந்தால் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. பிறர் பொருட்டு எப்பொழுதும் நன்மையே செய்யும் மனோ பாவனை இருந்தால் உடம்பில் உள்ள எந்த நஞ்சையைும் அழிக்க முடியும். இல்லையெனில் அந்த நஞ்சு நம் உடலிலும், மனதிலும் தங்கி விடும். அப்படி நஞ்சைஅழிக்க முடியவில்லை, ஏன் அந்த சிறுநீரக கல் கரையவில்லை என்றால் நம்மிடம் சகிப்புத் தன்மை குறைவாக உள்ளது என்று பொருள்.

தவறான எண்ணம் இல்லாமல் நோய் எப்படி வரமுடியும்? தவறான எண்ணம் மனதில் இருந்தால் மட்டுமே உடலில் நோய் வரும். உணவு ரீதியாக வரலாம். வந்தால் கூட மனநிலை சரியாக இருந்தால் எளிமையாக சரிசெய்ய முடியும். மனோபலமும், குணமும் இருந்தால் அது எப்படியும் நமது உடலினை தாங்கி பிடிக்கும், கைவிடாது, கைவிட்டால் அவனுடைய குணம் தவறானது.

கத்தரிக்காய் ஈஸ்வரனோடு தொடர்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. கோவிலில் உள்ள நந்தி ஈஸ்வரனை நோக்கியபடியே இருக்கும். இதன் காரணம் நமது முழு எண்ணமும் அந்த படைத்தவனின் மேல் இருக்க வேண்டும். நாம் படைப்பவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நம்முடைய உணர்வில் கலக்க வேண்டும். அவரை விட்டு நாம் எப்பொழுதும் விலகக்கூடாது, நமது யோகத்தை ஈஸ்வரனோடு வைக்க வேண்டும். நந்தீஸ்வரர் என்றாலும், யோகேஷ்வரர் என்றாலும் ஒன்று தான். நாம் நமது காய்கறி வைத்தியத்திற்கு யோகேஷ்வர் என்று பெயரிட காரணம் இந்த பூமியின் நலன் செழிப்பதற்கு , நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த பெயர் அமைக்கப்பட்டது.

மனிதன் மனிதனுக்கு தரும் அங்கீகாரம் என்பது வேறு. ஆனால் மனிதனுக்கு அந்த இறைவனே அங்கீகாரம் கொடுக்கக்கூடிய நிலை எப்பொழுது வரும் என்றால் சகிப்புத்தன்மை இருந்தால் மட்டுமே கிடைக்கும். எனவே சகிப்புத் தன்மையில்லாமல் உங்களுக்குள் வெறுப்புத் தன்மை ஏற ஏற சிறுநீரகம் சீர்குலையும். சகிப்புத் தன்மை இருந்தால் எப்பேர்பட்ட உப்புத் தன்மையையும் கரைத்து விடும். இல்லையெனில் கத்தரிக்காய் சாப்பிட்டு உப்புத் தன்மையினை கரைக்க வேண்டும். சகிப்புத் தன்மையினை கொடுக்கும் ஆற்றல் கத்தரிக்காய்க்கு உண்டு.

இந்த உணவுப் பழக்கத்தின் மூலமாக, ஞானக் கருத்துக்கள் மூலமாக ஒருவரால் அந்த ஈஸ்வரனை தொடர்பு கொள்ள முடியும்

மண்டலம் : சிறுநீரக மண்டலம்

குணம் : சகிப்புத்தன்மை

மாதம் : வைகாசி

செயல்பாடு : செல் வளர்ச்சி, நஞ்சுவெளியேற்றம்

கத்தரிக்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்
http://naattumarunthu.blogspot.com/2018/10/blog-post_11.html

கத்தரிக்காய் பாடல் கேட்க கீழே உள்ள மீடியா ப்ளே பட்டனை அழுத்தவும்

Wednesday, August 29, 2018

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்!

தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)

சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில்
பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடையாது.

அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க விருக்கிறோம்.

இம்மூலிகை காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.

1. கண் பார்வைக் கோளாறுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்
11. ஆசனப்புண்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
21. ரத்தபேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்..

மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

இது ரொம்ப எளிமைதானுங்க..

நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி (சித்த மருத்துவர் ஆலோசனை படி) அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன்றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வர, மேற்கண்ட 26நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட்டு, நோயில்லா பெருவாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்..

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

சளி

🌿 நலம் பெறுவோம் 🌿
🌿 வளம் பெறுவோம் 🌿
☘ நாட்டுமருந்து வாட்சப்குழு ☘
🍁 9787472712 🍁

சளி

அறிகுறிகள்:

சளி.
தேவையான பொருட்கள்:

பூண்டு.
வெங்காயம்.
தக்காளி.
செய்முறை:
பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நன்றாக நசுக்கி தண்ணீர் விட்டு வேகவைத்து சூப் செய்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.

காதுவலி

🌿 நலம் பெறுவோம் 🌿
🌿 வளம் பெறுவோம் 🌿
☘ நாட்டுமருந்து வாட்சப்குழு ☘
🍁 9787472712 🍁

காதுவலி


அறிகுறிகள் :

சளி, இருமல்.
தேவையானப் பொருட்கள்:

சுக்கு.
பால்.
சர்க்கரை.
செய்முறை :

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி கால் லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக காய்ச்சி தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்து இருவேளை சாப்பிட்டுவர காது குத்தல் குறையும்

மூக்கடைப்பு

🌿 நலம் பெறுவோம் 🌿
🌿 வளம் பெறுவோம் 🌿
☘ நாட்டுமருந்து வாட்சப்குழு ☘
🍁 9787472712 🍁

மூக்கடைப்பு

அறிகுறிகள்:

சளி.
மூக்கடைப்பு.
தேவையான பொருள்கள்:

இலவங்கப்பட்டை.
செய்முறை:
இலவங்கப்பட்டை தூளை எடுத்து நீர் விட்டு குழைத்து சிறிது தலையில் தேய்த்து விட்டு சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

ஜலதோஷம்

ஜலதோஷம்

அறிகுறிகள்:

ஜலதோஷம்.
மூக்கில் நீர்வடிதல்.
தும்மல்.
சளி.
தேவையான பொருட்கள்:

கொள்ளு.
செய்முறை:
கொள்ளை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு வேகவைத்து அவித்துக் கொள்ளவேண்டும். பின்பு அதை வடிகட்டி அந்த தண்ணீரை எடுத்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.

கண் எரிச்சல்

கண் எரிச்சல்

அறிகுறிகள்:

கண் எரிச்சல்.
கண் வலி.
தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய்.
வெங்காயச்சாறு.
புளிய இலைச்சாறு.
செய்முறை:
வெங்காயம், புளிய இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் கண் குளிர்ச்சியடையும்.

வாய்ப்புண்

🌿 நலம் பெறுவோம் 🌿
🌿 வளம் பெறுவோம் 🌿
☘ நாட்டுமருந்து வாட்சப்குழு ☘
🍁 9787472712 🍁

வாய்ப்புண்

அறிகுறிகள்:

வாய்ப்புண்.
தேவையான பொருட்கள்:

மோர்.
உப்பு.
செய்முறை:
மோரில் சிறிதளவு உப்பை சோ்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வந்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.

பல்வலி

பல்வலி

அறிகுறிகள்:

பல் வலி
தேவையான பொருள்கள்:

மிளகுத்தூள்.
கிராம்பு எண்ணெய்.
செய்முறை:
பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

தொண்டை வலி

தொண்டை வலி

அறிகுறிகள்:

தொண்டைப்புண்.
தொண்டை வலி.
தேவையான பொருள்கள்:

கிராம்புத்தூள்.
மிளகுத்தூள்.
தேன்.
செய்முறை:
1 தேக்கரண்டி மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் எடுத்து 1 டம்ளர் நீர் விட்டு சிறிது சூடேற்றி எடுத்து அதில் சிறிது தேன் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குறையும்.

இருமல்

இருமல்

அறிகுறிகள்:

இருமல்.
தேவையான பொருட்கள்:

வெங்காயம்.
சர்க்கரை.
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணியில் வைத்து வடிகட்டி கொள்ளவேண்டும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையை கலந்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்க வேண்டும். வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்

விக்கல்

விக்கல்

அறிகுறிகள்:

விக்கல்.
தேவையான பொருள்கள்:

தயிர்.
உப்பு.
செய்முறை:
விக்கல் வரும் போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு போட்டு மெதுவாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

முகப்பரு

முகப்பரு

அறிகுறிகள்:

முகத்தில் ஏற்படும் பருக்கள்.
தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம்.
பால்.
செய்முறை:
சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.

கண் பார்வை


கண் பார்வை

அறிகுறிகள்:

கண்பார்வை திறன் குறைவாக காணப்படுதல்.
கண்பார்வை மங்கலாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:

கேரட்.
துவரம் பருப்பு.
தேங்காய்.
செய்முறை:
கேரட்டை நூறு கிராம் எடுத்து கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் துவரம் பருப்பு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சமைத்துக் கொள்ளவேண்டும். அதை சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

முகம்

முகம்

அறிகுறிகள்:

முகத்தில் பருக்கள் காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்.
எலுமிச்சம் பழச்சாறு.
சந்தனம்.
செய்முறை:
தேங்காய் எண்ணெய், எலுமிச்சம் பழச்சாறு, சந்தனம் ஆகியவற்றை திட்டமான முறையில் கலந்து தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் முகப்பருக் குறையும்.

தும்மல்

தும்மல்

அறிகுறிகள்:

தும்மல்.
தேவையான பொருள்கள்:

பப்ளிமாசு பழம்(grapefruit).
எலுமிச்சை பழச்சாறு.
தேன்.
செய்முறை:
பப்ளிமாசு பழங்களை எடுத்து நறுக்கி அதனுடன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து நன்றாக காய்ச்சி சிறிது தேன் கலந்து காலை, மாலை குடித்து வந்தால் தும்மல் குறையும்.

மூக்கு

🌿 நலம் பெறுவோம் 🌿
🌿 வளம் பெறுவோம் 🌿
☘ நாட்டுமருந்து வாட்சப்குழு ☘


மூக்கு

அறிகுறிகள்:

மூக்கிலிருந்து இரத்தம் வருவது.
தேவையான பொருட்கள்:

வெங்காயம்.
விளக்கெண்ணெய்.
செய்முறை:
பெரிய வெங்காயத்தை தோலை நீக்கி பொடியாக நறுக்கி விளக்கெண்ணெய் விட்டு வதக்கிச் சாப்பிட்டு வந்தால் அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வருவது குறையும்.

ஒற்றை தலைவலி

🌿 நலம் பெறுவோம் 🌿
🌿 வளம் பெறுவோம் 🌿
☘ நாட்டுமருந்து வாட்சப்குழு ☘


ஒற்றை தலைவலி

அறிகுறிகள்:

ஒற்றை தலைவலி.
தேவையான பொருள்கள்:

கேரட் சாறு.
வெள்ளரிக்காய் சாறு.
பீட்ரூட் சாறு.
செய்முறை:
ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

தலைவலிக்கு வாழைப்பழத் தோல்

தலைவலிக்கு வாழைப்பழத் தோல்

தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க கடைகளில் விற்கப்படும் தலைவலி பாம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் சரிசெய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

* 1 வாழைப்பழத்தின் தோல்

* ஐஸ் கட்டிகள்

* ஒட்டும் டேப்

செய்முறை:

வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி, பின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்

தலைச்சுற்றல்

தலைச்சுற்றல்

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத் தலைவலி

ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படும் இஞ்சியானது தலை வலியைக் குணப்படுத்தும் தன்மையுடையது. எனவே தலை வலிக்கும் போது, உண்ணும் உணவில் சிறிது இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால், தலைவலியை குறைக்கலாம்.

பாலிலும் தலைவலியை குறைக்கும் தன்மை உள்ளது. அதிலும் பாலில் உள்ள வைட்டமின் பி என்னும் ரிபோஃப்ளேவின், உயிரணுவின் ஆற்றலை அதிகரிக்கும். உயிரணுவின் ஆற்றலானது குறைவதால் தான் ஒற்றை தலைவலியே உண்டாகிறது.

சூதகவலி,தடை,பெரும்பாடு/அதிகரித்த மாதவிலக்கு,கருப்பைக்கோளாறு தீர:-

சூதகவலி,தடை,பெரும்பாடு/அதிகரித்த மாதவிலக்கு,கருப்பைக்கோளாறு தீர:-

கல்யாணமுருங்கையிலை ரசம்செய்து சாதத்துடன் சாப்பிட்டுவர சூதகவலி தீரும்
      கல்யாணமுருங்கையிலைச்சாறு 30மிலி காலையில் பருகிவர சூதகவலி நீங்கும்
   சிறுகுறிஞ்சான்இலை1பங்கு, களாஇலை2பங்கு சேர்த்து அரைத்து காலையில் சாப்பிட மாதவிலக்கு சீராகும்.கர்பாயாசக்கோளாறு நீங்கும்.

 4 செம்பரத்தைபூக்களை அரைத்து காலையில் சாப்பிட்டுவர மாதவிலக்கு சீராகும்

செம்பரத்தைபூச்சூரணம் 1தேகரண்டி தினமிருவேளை சாப்பிட்டுவர மாதவிலக்கு சீராகும்
 தண்ணீர்விட்டான்கிழங்குச்சூரணம் 2கிராம்,பசுநெய்யில் தினமிருவேளை சாப்பிட்டுவர  பெரும்பாடு  தீரும்

தொட்டாற்சுருங்கிச் சமூலச்சாறு 4தேகரண்டி,தேன்2தேகரண்டி கலந்து தினம்3 வேளை சாப்பிட்டுவர  பெரும்பாடு  தீரும்

தொட்டாற்சுருங்கி இலை கைப்பிடி,சிறிது சீரகம்,வெங்காயம் சேர்த்தரைத்து எலுமிச்சையளவு சாப்பிட பெரும்பாடு தீரும்
 
நாவல்பட்டையை சிதைத்து, 5ல்1ன்றாய்க் காய்ச்சி தினமிருவேளை பருகிவர பெரும்பாடு கட்டுப்படும்
 
6 தேகரண்டி பிரண்டைச்சாற்றுடன், 1தேகரண்டி ந.எண்ணை கலந்து காலையில் சாப்பிட மாதவிலக்கு சீராகும்
 
வில்வ இலைகளை அரைத்து கொட்டைப்பாக்களவு சாப்பிட்டு குளிர்ந்த நீரில் குளித்துவர பெரும்பாடு குணமாகும்                                                         

வேப்பம்பட்டைக்கஷாயம் 200மிலி தினம்3வேளை பருகிவர மாதவிலக்கு சீராகும்

மூலச்சூடு நீங்க அருகம் தைலம்

மூலச்சூடு நீங்க அருகம் தைலம்


அருகம்புல் வேர் – அரை கிலோ

நல்லெண்ணெய் – அரை லிட்டர்

அமுக்கிராக் கிழங்கு – 10 கிராம்

பூமி சர்க்கரை கிழங்கு – 10 கிராம்

     அருகம் வேரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இடித்து 4 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராக காய்ச்சி வடித்து நல்லெண்ணெய் கலந்து அழுக்கிராக் கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு ஆகியவற்றை பால் விட்டு நன்றாக அரைத்து கலக்கி சிறு தீயில் பதமுற காய்ச்சி வடித்து வைத்துக்கொள்ளவும். இது அருகுத்தைலம்.
     ஒரு நாள் விட்டு ஒருநாள் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வர தலைவெப்பம், நீர்க்கடுப்பு, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, நெஞ்சுவலி, மூலச்சூடு, வாதம், பித்தம் ஆகிய நோய்கள் தீரும்.

காபி மருத்துவம்

#காபி_மருத்துவம்

#Healthy_Coffee

#7_நாள்...

#7வகையான_காபிகள்

#ஏராளமான_பலன்கள்..!

காலை எழுந்ததும் ஒரு கப் காபி குடித்தால்தான் அன்றையப் பொழுது ஆனந்தமாகப் புலர்ந்ததாக நம்புகிறவர்கள் பலர். கும்பகோணம் டிகிரியில் தொடங்கி, எஸ்பிரஸ்ஸோ வரை பலர் இன்றைக்குக் காபி பைத்தியம் என்று சொன்னால் அது மிகையில்லை. காபி கொடுத்து விருந்தினரை உபசரிப்பதில் தொடங்குவது, நம் விருந்தோம்பல் பண்பாடு.

உற்சாகமூட்டும் பானம் என்பதையும் தாண்டி, இதற்கெனவே சில மகத்துவங்கள் உண்டு.

#உடலில்……!!!! ????

எனர்ஜி லெவலை அதிகரிக்கும்;

கொழுப்பைக் குறைக்கும்;

அல்சைமர்,

டிமென்ஷியா பிரச்னைகளில் இருந்து காக்கும்...

என பெரிய பட்டியலே
உள்ளது.

வழக்கமான காபியைத் தாண்டி சில ஆரோக்கியமான வகைகளையும் அருந்தலாம்; அவற்றையும் வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம். ஏழு நாள்... ஏழு காபி... என வாரம் முழுக்க அருந்த அருமையான வகைகள்... அவற்றைச் செய்யும் முறைகள்... பலன்கள்!

 1)#கருப்பட்டிகாபி...

தேவையானவை...

கருப்பட்டி - 1/4 கப், காபித்தூள் - 2 டீஸ்பூன்.

செய்முறை...

முதலில் கருப்பட்டியைக் கரைத்து, அதை வடிகட்டவும். ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் காபித்தூளைப் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கவும். அதை வடிகட்டி, கரைத்த கருப்பட்டியைச் சேர்த்து அருந்தவும்.

#1பலன்கள்...

சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடலுக்கு சக்தியளிக்கும். எலும்புகள், பற்களுக்கு உறுதியைத் தரும்.

 2)#தாமரைப்பூகாபி...

தேவையானவை...

வெண்தாமரை அல்லது செந்தாமரை - 1, மிளகு - 5, கிராம்பு -2, ஏலக்காய் - 2, பால் - 1/4 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.

செய்முறை...

இரண்டு டம்ளர் நீரில் காம்பு நீக்கிய தாமரைப்பூவைப் போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதி வரும்போது கிராம்புப் பொடி, மிளகு, ஏலக்காய் சேர்க்கவும். முக்கால் டம்ளர் அளவுக்கு வந்ததும் அதை வடிகட்டவும். அதில் பால், பனங்கற்கண்டு சேர்த்து அருந்தவும்.

#2பலன்கள்...

ஆன்டிஆக்ஸிடன்ட், அமினோஅமிலங்கள், பாலிஃபினால், கிளைக்கோசைட்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன. இது, புற்றுநோய் வராமல் காக்க்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மாதவிடாய்க் கோளாறுகளைச் சீராக்கும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். பெண்களுக்கு மிகவும் ஏற்றது.

 3)#செம்பருத்திப்பூகாபி...

தேவையானவை...

செம்பருத்திப் பூ - 1, ஏலக்காய் - 2, கிராம்பு - 2, மிளகு - 5, பால் - 1/2 கப், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.

செய்முறை...

செம்பருத்திப்பூவின் காம்பு, மகரந்தத் தண்டை நீக்கிவிட்டு, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவிடவும். இதனுடன், ஏலக்காய், கிராம்பு, மிளகைப் பொடித்துச் சேர்க்கவும். கொதித்ததும் வடிகட்டி, பால், பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்த்துப் பருகவும்.

#3பலன்கள்...

செம்பருத்திப்பூவில் மாலிக், சிட்ரிக், டார்டாரிக் அமிலங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. இவை, ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். செரிமானத்தை மேம்படுத்தும். தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பலமாக்கும். சருமத்தைப் பாதுகாக்கும்.

 4)#சுக்குகாபி...

தேவையானவை...

சுக்கு - 1 அங்குலத்துண்டு, ஏலக்காய் - 2, பனஞ்சர்க்கரை - 2 டீஸ்பூன், பால் - 1/2 கப்.

செய்முறை...

சுக்கு, ஏலக்காய் இரண்டையும் சேர்த்து பொடித்துக்கொள்ளவும். இதை ஒரு டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்கவிடவும். பாதியாகச் சுண்டியதும், வடிகட்டி, பால், பனஞ்சர்க்கரை சேர்த்துப் பருகலாம். மாலையில் பருக ஏற்ற பானம்.

#4பலன்கள்...

கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பீட்டாகரோட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை நிறைந்துள்ளன. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கும். சளி, கபம் ஆகியவற்றை நீக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

 5)#பேரீச்சம்விதைகாபி...

தேவையானவை...

பேரீச்சை விதைப்பொடி - 1 டீஸ்பூன், பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்.

செய்முறை...

பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். அதை வடிகட்டி பால், பனங்கற்கண்டு சேர்த்து, வாரம் ஒரு முறை பருகிவரலாம்.

#5பலன்கள்....

பேரீச்சம் விதையில் தாமிரம், செலீனியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை நிறைந்துள்ளன. ரத்தசோகையைப் போக்கும். இது ரத்த உற்பத்திக்கும் தாது உற்பத்திக்கும் உதவக்கூடியது. சருமத்தைப் பாதுகாக்கும்; நினைவாற்றலை மேம்படுத்தும்.

 6)#முருங்கைப்பூகாபி....

தேவையானவை....

முருங்கைப்பூப் பொடி - 1 டீஸ்பூன், பால் - 1 டம்ளர், பனங்கற்கண்டுப் பொடி - 1 டீஸ்பூன்.

செய்முறை....

முருங்கைப் பூவைச் சுத்தம்செய்து உலர்த்திப் பொடி செய்துகொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் இந்தப் பொடியையும் பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கி அருந்தவும்.

#6பலன்கள்....

முருங்கையில் வைட்டமின் ஏ, பி6, பி9, கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. ரத்தசோகையைப் போக்கும், உடலுக்கு வலுவைத் தரும். எலும்புகளை வலுவாக்கும். உடல்வலியைப் போக்கும். ஆண்மையைப் பெருக்கும். நினைவாற்றலை மேம்படுத்தும்.

 7)#ஏலக்காய்காபி ...

தேவையானவை:

காபித்தூள் - 1 டீஸ்பூன், சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன், பால் - 1 1/2 கப், தண்ணீர் - 1/2 கப், ஏலக்காய் - 4.

செய்முறை...

ஒரு சிறு கிண்ணத்தில் காபித்தூளையும் சர்க்கரையையும் போடவும். அதில் 1/4 டீஸ்பூனுக்கும் குறைவான நீரைச் சேர்த்து, ஒரு கரண்டியால் பேஸ்டாக ஆகும் வரை நுரை பொங்க அடிக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலையும் தண்ணீரையும் சேர்க்கவும். அதில், ஏலக்காயை விதை நீக்கிப் போட்டு, நன்கு கொதிக்கவிடவும். ஏலக்காய் வாசனை போகாமல் இருக்க, அடுப்பை சிம்மிலேயே வைத்திருக்கவும். இரண்டு கப்களில் காபி-சர்க்கரைக் கலவையை சமமாக ஊற்றவும். அவற்றில், பால்-ஏலக்காய் கலவையைச் சேர்த்து, மேலே சிறிது காபி பொடி தூவிப் பருகவும்.

#7பலன்கள்...

ஏலக்காயில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன. ஜீரணக் கோளாறுகளைச் சரிசெய்யும் தன்மை ஏலக்காய்க்கு உண்டு. அசிடிட்டி, வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு நிவாரணம் தரும். சிறுநீரகத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகளை விரட்டும் நச்சு நீக்கியாகச் செயல்படும். இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

விரைவில் தொப்பையை குறைக்க சில எளிய குறிப்புகள்...!

விரைவில் தொப்பையை குறைக்க சில எளிய குறிப்புகள்...!

தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்பூன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு  கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்றாக கரைத்து குடிக்க  வேண்டும். இவ்வாறு 30 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.
இஞ்சிசாறு ஒரு டம்ளர் மற்றும் தேன் இரண்டு டம்ளர் இதனை இரண்டையும் நன்றாக கொதிக்க வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை காலை  உணவிற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் மற்றும் மாலை நேரம் ஒரு ஸ்பூன் குடித்து வரவேண்டும். இவ்வாறு தொடர்ந்து 40 நாட்கள் செய்ய நல்ல  மாற்றத்தை உணரலாம்.

இஞ்சியை சாறெடுத்து அதில் நெல்லிக்காய் சாறை கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் மெலியும்.

தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும்  தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும்.

எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் அளிக்கும் நன்மைகள்!!!

கர்ப்பிணிப் பெண்களுக்கு இளநீர் அளிக்கும் நன்மைகள்!!!

கர்ப்பிணிப் பெண்கள் இனப்பெருக்கம் செய்ய இளநீர் அருந்த வேண்டும் என்பதை இந்தோனேசியாவை சேர்ந்த ஒரு சமூகம் பல தலைமுறைகளாக அறிவுறுத்துகிறது. முக்கியமாக இளம் இளநீரை அருந்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. இளம் இளநீரை, குறிப்பாக கர்ப்ப காலத்தின் மூன்றாவது மூன்று மாத காலத்தில் அருந்துவதன் மூலம் பனிக்குடநீர் சுத்தமாகும். மேலும் குழந்தை சுத்தமான தோல், அதிக முடி மற்றும் தெளிவான கண்களுடன் பிறக்கும்.

இதுவரை எந்த ஆய்வுகளும் இதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆனாலும் இளநீர் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை அளிக்கும் பல பொருட்களைக் கொண்டுள்ளது. பாரம்பரிய ஆலோசனைப்படி இதிலுள்ள பொருட்கள் மறைமுகமாக குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது


இயற்கை எலெக்ட்ரோலைட்டுகள்
இயற்கை எலெக்ட்ரோலைட்டுகள்
இளநீரானது எலக்ட்ரோலைட், குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றை அதிக அளவில் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையான ஐசோடோனிக் கனிம வளத்தை மிகுதியாக கொண்டிருப்பதாலும், எலக்ட்ரோலைட் இருப்பதாலும், உடலில் நீரேற்றம் மற்றும் சகிப்பு ஆற்றலை மீட்பதற்கு பயன்படுகின்றது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் நீர் அதிகம் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உண்டாகும் வறட்சியினால், நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம் மற்றும் சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். இதனால் குறைப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
 
இயற்கை நீர்ப்பெருக்கிகள்
இயற்கை நீர்ப்பெருக்கிகள்
இயற்கை நீர்ப்பெருக்கியாக இருப்பதால், இளநீர் சிறுநீரை வெளியேற்றவும், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள ஊட்டமிக்கப் பொருட்கள் உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றைத் தடுக்கவும் பயன்படுகின்றது.

 
நோயெதிர்ப்பு சக்தி
நோயெதிர்ப்பு சக்தி
இளநீரில் உள்ள லாரிக் அமிலம் நோய்க்கு எதிராகப் போராட உதவுகின்றது. மேலும் இது தாய்ப்பாலின் பண்புகளான பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது படர்தாமரை, எச்.ஐ.வி, ஓரணு, ஜியார்டியா லாம்ப்லியா, கிளமீடியா மற்றும் ஹெலிகோபட்டர் போன்ற வைரஸ்களில் இருந்து தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றது.
 
செரிமான உதவி
செரிமான உதவி
இளநீர் செரிமானத்தை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனை உருவாக்கும். இது இரைப்பை தசையை சுருங்கச் செய்வதால் செரிமானம் தாமதமாகும். ஆனால் இளநீர் செரிமானத்தின் வேகத்தை அதிகரிக்க செய்யும்.

 
நல்ல கொழுப்பு அதிகரிப்பு
நல்ல கொழுப்பு அதிகரிப்பு
ஆராய்ச்சிகளின் படி இளநீரில் கொழுப்பும் கொலஸ்ட்ராலும் இல்லை என்றும், இது நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


🌿 நலம் பெறுவோம் 🌿
🌿 வளம் பெறுவோம் 🌿
☘ நாட்டுமருந்து முகநூல்குழு ☘
www.Facebook.com/groups/naattumarunthu

இயற்கை நீர்ப்பெருக்கிகள்

மூலிகை குடிநீர்

 நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

ஆவாரம்பூ நீர்
“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்
சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்
செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்
“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்
குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,
தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்
யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்....
[7:28 AM, 8/27/2018] Siththan: மலச்சிக்கல்(CONSTIPATION )

பாதிநோய்க்கு ஆதி காரணம் மலச்சிக்கலே.
கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். 

3 தேகரண்டி வி.எண்ணையுடன்,சிறிது இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்
 
திரிபலா சூரணம் 1 தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும்
 
கரிசாலை இலை5, தினம் காலையில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்
 
நிலாவாரை சூரணம் 1 தேகரண்டி இரவில் வெந்நீரில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்
 
மஞ்சள்கரிசாலை இலையை பருப்புடன் கடைந்து, நெய்சேர்த்து, சாதத்துடன்  உட்கொள்ள மலச்சிக்கல் தீரும்
 கறிவேப்பிலை,இஞ்சி,மிளகு,சீரகம்,பெருங்காயம் சேர்த்திடித்து,பொடிசெய்து, அரை தேகரண்டி  இரவு உணவுடன் கொள்ள மலச்சிக்கல் தீரும்

சோற்றுக்கற்றாழையின் சோற்றை காயவைத்து,பொடித்து,2சிட்டிகை,சமன் மஞ்சள் தூளுடன்,50மிலி நீரில் பருக மலச்சிக்கல் தீரும்

தூதுவேளைகாயை வற்றல் செய்து,இரவில் பொரித்து உண்டுவர மலச்சிக்கல் தீரும்

முடக்கறுத்தான் இலையை இரசம் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும். குடல் வாயு கலையும்

வில்வ இலைத்தூள் அரைதேகரண்டி,வெண்ணையில் கலந்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட வயிற்றுப்புண்,மலச்சிக்கல் குணமாகும்

ரோஜாகுல்கந்து காலைமாலை கழற்சிக்காயளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் வெள்ளைப்படுதல் குணமாகும்.தொடர்ந்து சாப்பிட இதயம்,கல்லீரல், நுரையீரல், குடல் உறுதியடையும்

பாகல்இலை 10-15 அரைத்துச் சாப்பிட பேதியாகி மலக்கட்டு உடையும்

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…


அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.



நன்மை 1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை 2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை 3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை 4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

நன்மை 5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.



நன்மை 6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை 7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை 8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை 9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை 10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை 11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை 12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை 13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை 14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.



நன்மை 15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை 16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை 17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை 18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை 19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை 20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

மலச்சிக்கல்(CONSTIPATION )

மலச்சிக்கல்(CONSTIPATION )

பாதிநோய்க்கு ஆதி காரணம் மலச்சிக்கலே.
கழிக்கும் மலத்தின் அளவு குறைவது, மலம் கடினமாகுதல், மலம் கழிக்கும் முறைகள் குறைவது அல்லது மலம் கழிக்கும்போது அதிகளவு கஷ்டத்துடன் மற்றும் வலியுடன் மலம் கழிப்பது மலச்சிக்கல் எனலாம். இப்பழக்கம் ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். ஒரு வாரத்திற்கு 12 முறை மலம் கழிப்பது இயல்பான மலம் கழிக்கும் முறை எனலாம். போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். 

3 தேகரண்டி வி.எண்ணையுடன்,சிறிது இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்
 
திரிபலா சூரணம் 1 தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள மலச்சிக்கல் தீரும்
 
கரிசாலை இலை5, தினம் காலையில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்
 
நிலாவாரை சூரணம் 1 தேகரண்டி இரவில் வெந்நீரில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்
 
மஞ்சள்கரிசாலை இலையை பருப்புடன் கடைந்து, நெய்சேர்த்து, சாதத்துடன்  உட்கொள்ள மலச்சிக்கல் தீரும்
 கறிவேப்பிலை,இஞ்சி,மிளகு,சீரகம்,பெருங்காயம் சேர்த்திடித்து,பொடிசெய்து, அரை தேகரண்டி  இரவு உணவுடன் கொள்ள மலச்சிக்கல் தீரும்

சோற்றுக்கற்றாழையின் சோற்றை காயவைத்து,பொடித்து,2சிட்டிகை,சமன் மஞ்சள் தூளுடன்,50மிலி நீரில் பருக மலச்சிக்கல் தீரும்

தூதுவேளைகாயை வற்றல் செய்து,இரவில் பொரித்து உண்டுவர மலச்சிக்கல் தீரும்

முடக்கறுத்தான் இலையை இரசம் செய்து சாப்பிட மலச்சிக்கல் தீரும். குடல் வாயு கலையும்

வில்வ இலைத்தூள் அரைதேகரண்டி,வெண்ணையில் கலந்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட வயிற்றுப்புண்,மலச்சிக்கல் குணமாகும்

ரோஜாகுல்கந்து காலைமாலை கழற்சிக்காயளவு சாப்பிட்டுவர மலச்சிக்கல் வெள்ளைப்படுதல் குணமாகும்.தொடர்ந்து சாப்பிட இதயம்,கல்லீரல், நுரையீரல், குடல் உறுதியடையும்

பாகல்இலை 10-15 அரைத்துச் சாப்பிட பேதியாகி மலக்கட்டு உடையும்

உங்கள் வாழ்வு செழிக்க சில அறிவுரைகள்

'உங்கள் வாழ்வு செழிக்க சில அறிவுரைகள்'

- Dr. DHAMODHARAN, MD.
 
அவசியம் கடைபிடிக்க வேண்டிய  ஆரோக்கிய குறிப்புகள்..!!

1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

8🕹. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு  நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள்.  பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை  சொல்லிக் கொடுங்கள்.

9🕹. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.

10🕹. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11🕹. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12🕹. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13🕹. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

14🕹. கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15🕹. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16🕹. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.  அதை செயல்படுத்தவும்  முயற்சி செய்யுங்கள்.

17🕹. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18🕹. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19🕹. குறுகிய கால இந்த வாழ்க்கையில்  யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20🕹. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21🕹. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22🕹. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23🕹. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.  உங்கள் மனபாரம் நீங்கும்.

24🕹. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25🕹. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைநினைப்பதுப்பது மற்றவர்களின் வேலையல்ல.

26🕹. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27🕹. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28🕹. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29🕹. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
     
30🕹. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்

கடலை எண்ணெய்யின் பயன்கள்

கடலை எண்ணெய்யின் பயன்கள்

கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி வடிகட்டி எடுக்கப்படும் எண்ணெய் ஆகும்.

சாதாரணமாக நல்ல மஞ்சள் நிறம் கொண்ட இந்த எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டபின் இளமஞ்சள் நிறமாக காணப்படும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுவதை தடுக்கும்.

கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது.

'ரெசவராடால்' எனும் நோய் எதிர்ப்பு பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது. இது இதய வியாதிகள், புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது. நோய்த் தொற்றுகளை தடுப்பதிலும் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கு வகிக்கிறது.

450 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில்தான் கடலை எண் ணெய் கொதிக்கும் என்பதால் பண்டங்கள் சமைக்க ஏற்றது கடலை எண்ணெய். வறுத்தெடுக்கும் உணவுகள் செய்ய கடலை எண்ணெய் சிறந்தது.

சிறிய வயது பெண் குழந்தைகளின் முறையற்ற உணவுமுறைகளின் விளைவுகள்

சிறிய வயது பெண் குழந்தைகளின் முறையற்ற  உணவுமுறைகளின் விளைவுகள்

சரியாக 11-14 வயதில் துவங்கும் மாதவிடாய் தற்போது 8 வயதில் 9 வயதில் துவங்க ஆரம்பித்துள்ளது..இதற்கு காரணம் இக்கால உணவுமுறை 5 ம் வகுப்பு படிக்கையிலேயே அதிகம் அவஸ்தைப்பட வைக்கும்.

RCBGH(recombinant bovine growth hormone) என்ற ஹார்மோன் பாலிலும் தயிரிலும் மில்க் சாக்லேட்டிலும் இருக்கும் பட்சத்தில், அதுவும் குழந்தைகளை விரைவில் பூப்பெய்த வைக்கும். அதிகமாக பால்பவுடர் கலந்து செய்யப்படும் சாக்லேட்டுகளாலும் இது நிகழக் கூடும். கன்னாபின்னாவென மில்க் சாக்லேட் சாப்பிடும் குழந்தைகள் விரைந்து மிக இளம் வயதில் பூப்படைவது மட்டுமல்லாமல், சரியாக மாத மாதம் இதனைப் பெறுவதில்லை.. சினைப்பையினுள் நீர்க்கட்டிகள் உருவாகி பின்னர் பூப்பும் முழுமையாய் irregular ஆகிவிடும். Polycystic ovarian disease இன்று அதிகம் பெருகி, ஒழுங்கற்ற மாதவிடாய் வருவதற்கும் சீக்கிரம் பூப்பெய்துவதும் காரணமாகிவிடும்.

அதிகபட்ச புலால் உணவை இளம்வயதில் சாப்பிடுவதும் சீக்கிரம் பூப்பெய்வதற்கான காரணம் என்று சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தற்போது மேலை நாடுகளில் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழிக்கறிகளில் சேர்க்கப்படும் சில ஹார்மோன்கள் 8வயதிற்கு முன்னர் பூப்பெய்துவதற்கானக் காரணமாக கருதுகிறார்கள். பிராய்லர் கோழியில் மட்டுமல்ல, புலாலிறைச்சியில் அதிக எடை கிடைக்க பல ஹார்மோன்கள் சேர்ப்பது, எல்லா விலங்கிறைச்சியிலும் நடக்கிறது. இதில் சேர்க்கப்படும் ஈஸ்டர்டியால் ஹார்மோன் கொஞ்சம் கூடுதலாக அப்படியே இறைச்சியிலும் இருப்பதுதான் இந்த இளம் வயது பூப்பிற்கு காரணம்.  அதற்காக சிறு பிள்ளைங்களுக்கு கோழியே காட்ட வேண்டாம் என்றல்ல. நாட்டு கோழிகறி சாப்பிடலாம்.

எப்போதும் இல்லாத அளவு இப்போது ஓட்ஸ் வியாபாரம் பெருகிவருகிறது. ஓட்ஸிலும் ஈஸ்ட்ரோஜனை அதிகம் தரும் க்ளூட்டன் சத்து கூடுதலாக உள்ளது.. “நாங்க ஒட்ஸ் சாப்பிட்டு ஒல்லியாயிட்டு இருக்கோம்னு,” நினைச்சு ’நாகரீக’ பாட்டிகள் ஒரு டம்ளர் உங்க பேத்திக்கும் இனி அடிக்கடி தர வேண்டாம்.

கொஞ்சம் சீக்கிரம் வயதிற்கு வந்தால் என்ன? என்போருக்கு.. மார்பகபுற்று நோய் வரும் வாய்ப்பு சீக்கிரம் வயதிற்கு வரும் குழந்தைகட்குத்தான் அதிகம். விரைவாக பூப்பெய்தும் பெண்களின் வாழ்நாள் விகிதம் சரியான வயதில் பூப்பெய்தும் பெண்ணைக்காட்டிலும் குறைவு என மருத்துவப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறக்க கூடாது. கோழியோ, பாலோ ஓட்ஸோ எப்போதோ சாப்பிடுவது நிச்சயம் கேடு கிடையாது. விளம்பரம் பார்த்தோ, வசதியாக இருக்கிறதே என்ற சோம்பலிலோ, குழந்தைகள் அடிக்கடி அவற்றைச் சாப்பிடுவதுதான் ஆபத்தாகக் கூடும்.

மாதவிடாய் உண்டாகும் உடல் பருமன் தீர கருஞ்சீரகம்

மாதவிடாய் உண்டாகும் உடல் பருமன் தீர கருஞ்சீரகம்


கருஞ்சீரகம் – 50 கிராம்

வெந்தயம் – 50 கிராம்

முருங்கை இலை (காய்ந்தது) – 50 கிராம்

வேப்பம்பூ – 50 கிராம்

சுக்கு – 25 கிராம்

மிளகு – 25 கிராம்

திப்பிலி – 25 கிராம்

ஏலக்காய் – 25 கிராம்

தேன் – ¾ கிலோ

முதலில் தேன் தவிர மற்ற சரக்குகளை ஒன்றாக்கி, தூள் செய்து கொள்ளவும். பின்னர் தேனை பாத்திரத்திலிட்டு சூடு செய்து நுரை நீக்கவும். பின் பொடித்து வைத்துள்ள தூளை சிறிதாகக் கொட்டி நன்கு கிண்டி இறக்குவும். சூடு ஆறிய பிறகு நெய் 50 கிராம் உருக்கி கலந்து லேகியத்தைப் பத்திரப்படுத்தவும்.

இதில் காலை, இரவு இரண்டு கிராம் வீதம் தொடர்ந்து உணக்குப்பின் சாப்பிட்டு வர, உடல் பருமன், தொப்பை தீரும். பெண்களுக்கு மாதவிடாய் தடையேற்பட்டு உண்டாகும் உடல் பருமன் தீரும். மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும்.

தேமல்;

இயற்கை_மருத்துவம்
இன்று சிறியோர் முதல் பெரியோர் வரை எதிர் நோக்கும் நோய்களில் தேமலும் ஒண்று இதனை குணப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பணத்தை வைத்தியர்களுக்கு வாரி வழங்குகின்றோம் அப்படி வழங்கியும் குணமடைவது குறைவு!
அதற்காகத்தான் குறைந்த செலவில் ஒரு வைத்தியம்!!
#தேமல்; #வெள்ளைப்பூண்டைவெற்றிலைசேர்த்துமசியஅரைத்துதினமும்தோலில்தேய்த்துகுளித்து_வந்தால் தேமல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும்!!

குறிப்பு:-

#3நாட்டு_வெற்றிலைக்கு,
-1பூண்டுபல்,விகிதம் தயார் செய்து கொள்ளவும். தினமும் புதியதாக செய்து பயன்படுத்துவது நலம்.நோயின் தன்மை குறைந்தவுடன் மருத்துவத்தையும் குறைத்து கொள்ளலாம்.

முதுகுவலியின் காரணங்களும் தீர்வும்

முதுகுவலியின் காரணங்களும் தீர்வும்

முதுகுவலி ஒரு காலத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாகவே வந்தது. ஆனால் இப்போதெல்லாம் மிக இளம் வயதிலேயே முதுகுவலி வந்துவிடுகிறது.

நிறைய நேரம் இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்வது, கம்யூட்டர் முன்பாக அதிக நேரம் செலவிடுவது ஆகியவை தான் முதுகுவலி உண்டாக மிக முக்கியக் காரணம்.
இந்த கடுமையான முதுகுவலியின் காரணமாக, கனமான பொருள்களை தூக்கிச் செல்ல முடியாது. ஓரிடத்தில் அதிக நேரம் நிறகவோ உட்காரவோ முடியாமல் போகும். இதுவே 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், முதுகு, கை, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் மிகக் கடுமையான வலி உண்டாகும். இடுப்பு மூட்டுக்களில் உள்ள நரம்புகளில் கூட பிரச்னைகள் உண்டாகும்.

பூண்டு பால்

பால் - 300 மில்லி பூண்டு - 8 முதல் 10 பற்கள் வரை (அளவைப் பொறுத்தது)

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து பால் பொங்கி, லேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பூண்டு பற்களை தோல் உரித்துவிட்டு தட்டி, கொதிக்கும் பாலில் போடு மீண்டும் மிதமான தீயிலேயே வைத்து பூண்டு நன்கு வேகும்வரையில், வைக வைத்துப் பின் இறக்க வேண்டும்.

பூண்டு பாலை தினமும் அதிகாலையில் அல்லது இரவு உணவுக்குப்பின் குடித்து வர இடுப்பு அல்லது முகுதுவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே செல்வதை உணர்ந்து கொள்ள முடியும். இந்த பூண்டுப்பால் என்பது இடுப்பு மூட்டுக்களில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும். மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிக அதிக அளவில் உள்ளன. அதனால் அழற்சி பிரச்னை உள்ளவர்கள் அல்லது யார் வேண்டுமானாலும் இதை குடிக்கலாம். இந்த சுவையை கொஞ்சம் அதிகரிக்க கொஞ்சம் தேன் கலந்தும் பருகலாம்.

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

ரத்த குழாய் அடைப்பு நீங்க..

நண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை
செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும்  உணவில் (ஆயுர் வேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான் ஆச்சரியம்.

தயவு செய்து கவனியுங்கள்.

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச்  செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர் பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவம்  தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து  வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து
சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய  மூலப்பொருள்கள்:

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60
நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு  இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும் நீங்களே
உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.*

நண்பர்களே! இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்., ஏனென்றால் மருத்துவமனை வாங்கும் பெருந்தொகையால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.....!

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள்

காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள்

காலை உணவு என்பது ஒருநாளின் தொடக்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இப்போது பெரும்பாலானோர் தங்களின் பணிநேரத்தை காரணமாக காட்டி காலை உணவை தவிர்த்து வருகின்றனர். மேலும் சிலர் உடல் எடையை குறைப்பதற்காக காலை உணவை தவிர்க்கின்றனர். ஆனால் காலை உணவை தவிர்த்தால்தான் உடல் எடை அதிகரிக்கும் என்பது அறியாத அதிர்ச்சிகரமான உண்மை.

காலை உணவை தவிர்ப்பது எவ்வளவு ஆபத்தானதோ அதைவிட ஆபத்தானது தவறான காலை உணவை உண்பது. நம்மில் பெரும்பாலானோர் செய்வது இதைத்தான். ஆரோக்கியமென நினைத்து நாம் சாப்பிடும் பல காலை உணவுகள் நமக்கு பல தீங்குகளை ஏற்படுத்துகிறது.

மெதுவடை
உளுந்து உடலுக்கு ஆரோக்கியமானதாக இருந்தாலும் இரவு முழுவதும் அமைதியாக இருக்கும் செரிமான மண்டலம் உளுந்தை செரிக்கவைத்து அதில் உள்ள சத்துக்களை உறிஞ்ச நீண்ட நேரம் எடுக்கும். இதனால் செரிமான மண்டலம் நீண்ட நேரம் இயங்க வேண்டிவரும். இதில் 334 கலோரிகள் இருக்கிறது இதனை கரைக்கவே அதிக வேலை செய்ய வேண்டி வரும். எனவே காலை நேரத்தில் மெதுவடை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பரோட்டா
ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல என அனைவரும் நன்கு அறிவோம். இருந்தாலும் ருசிக்காக அதனை சாப்பிடுவதை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். காலையில் பரோட்டா சாப்பிட்டால் அந்த நாள் முழுவதும் மந்தமாகத்தான் இருப்பீர்கள்.

பட்டர் டோஸ்ட்
மிகவும் விரைவாக செய்யக்கூடிய ஒரு காலை உணவு. உண்மையில் இது இந்தியாவை சேர்ந்த உணவல்ல ஆனால் அனைத்து இந்தியர்களாலும் விரும்பப்படும் ஒரு உணவாகும். வெண்ணெயில் சில சத்துக்கள் இருந்தாலும் அதனை நிறமூட்டப்பட்ட பிரெட்டுடன் சேர்த்து சூடுபண்ணும் போது அதன் சத்துக்கள் யாவும் மாயமாகும்.

பூரி
பூரியை காலை உணவாக சாப்பிடுபவர்களுக்கு அன்று நாள் முழுவதும் ஒருவிதமான தலைவலி இருக்கும். அதுதான் எண்ணெய் மயக்கம். காலை நேரத்தில் எண்ணெயில் பொறித்த உணவுகளை முடிந்தளவு சாப்பிடாமல் இருப்பதே நல்லது. அதிலும் பூரியுடன் கொடுக்கப்படும் வேகவைத்த உருளைக்கிழங்கு நிச்சயம் நல்ல பலன்களை கொடுக்காது.

ஆங்கில உணவுகள்
காலை நேரத்தில் ஆங்கில உணவுகளை சாப்பிடும் பழக்கம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது. இது சுவையானதாகவும், ஸ்டைலாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆரோக்கியமானதா என்றால் அதற்கு பதில் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஒரு கேக், பாதி வெந்த இறைச்சி, பாதி வேகவைக்கப்பட்ட முட்டை அதனுடன் ஒரு பழச்சாறு. காலை நேரத்தில் இதனை சாப்பிட்டால் உங்கள் உடலில் அதிகரிக்க போவது தேவையில்லாத கேடு விளைவிக்கக்கூடிய கொழுப்புகள் மட்டுமே.

நூடுல்ஸ்
காலை நேரம் மட்டுமல்ல இதனை எப்பொழுது சாப்பிட்டாலும் ஆரோக்கிய கேடுதான். ஆனால் காலையில் சாப்பிடும்போது விளைவுகள் சற்று அதிகமானதாக இருக்கும்.

கார்ன்ப்லேக்ஸ்
விளம்பரங்கள் என்னதான் இவை எடை குறைப்பிற்கு உதவும் என்று கூறினாலும் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் இவற்றால் எந்த பலனும் இல்லை என்பதே நிதர்சனம். இவற்றில் செயற்கை சர்க்கரையும், உப்பும் சேர்க்கப்பட்டு இருக்கும். உண்மையான தானியங்களில் இருக்கும் சத்துக்கள் மிகக்குறைந்த அளவே இதில் இருக்கும்.

வறுத்த முட்டை
முட்டை என்பது மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றுதான். ஆனால் அதனை வறுக்கும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்து வெறும் கொழுப்புகளே அதிகரிக்கிறது.

பிஸ்கட்
பிஸ்கட்களில் இருப்பது மாவு மற்றும் செயற்கை சுவையூட்டிகள் மட்டுமே. இதனை சாப்பிடும்போது எந்தவித சத்துக்களும் கிடைப்பதில்லை மாறாக மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள்தான் அதிகரிக்கிறது.

இதுபோன்ற காலை உணவுகள் உடலில் கலோரிகளை அதிகரித்து உடல் எடையை வேகமாக அதிகரிக்க செய்யும். எனவே காலை உணவை தவிர்க்காமல் ஆரோக்கியமான இயற்கை உணவான கம்பு, தினை, வரகு, சாமை, கேழ்வரகு களி, பழங்கஞ்சி, காய்கறிகள் ஆகியவை உணவாக உண்ணவும்

சர்க்கரை நோய் குணமாக புங்கன்

சர்க்கரை நோய் குணமாக புங்கன்

சாலையோரங்களில் நிழல் தருவதற்காக வைக்கப்படும் புங்கன் மரத்தின் பூக்களை பயன்படுத்தி சர்க்கரை நோய்க்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் கால் ஸ்பூன் நெய் எடுக்கவும். இதனுடன், வெயிலில் காயவைத்த புங்கன் பூக்களை ஒரு ஸ்பூன் சேர்த்து வதக்கவும். இதை ஆறவைத்து அதிகாலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

புங்கன் மரத்தின் பூக்கள் கொத்துக்கொத்தாக இருக்கும். இந்த பூக்களை சேகரித்து காயவைத்து தினமும் மாலையில் நீரில் கலந்து குடிக்க சர்க்கரை நோய்க்கு அற்புதமான மருந்தாகிறது. கணையத்தை பலப்படுத்தி சீராக இயங்க வைக்கிறது.

புங்கன் மரத்தின் பட்டையை பயன்படுத்தி கழிச்சல், ரத்த மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். புங்கன் மரத்தின் பட்டையுடன் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி அதிகாலையில் குடித்துவர ரத்த மூலம் குணமாகும். கழிச்சல், சீதக்கழிச்சல் பிரச்னை சரியாகும். இந்த நீரை புண்களை கழுவும் மேல் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

அருந்தமிழ் மருத்துவம் 500

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. கொஞ்சம் பொறுமையா படித்து பாருங்கள்.

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!