Tuesday, August 10, 2021

சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

சுண்டைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்

 
காடுகளில் தானாக வளரும் சுண்டை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். நாம் பால் சுண்டையை பற்றி பாப்போம்.

சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இது கசப்பு சுவை உடையது. இந்த கசப்பு தன்மையானது இரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு இது உதவுகிறது.

சுண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும்.

குடல் புண்களை ஆற்ற
சுண்டைக்காயானது நுண்புழுவால் உண்டான நோய்கள், வலி நோய்கள் போன்றவற்றை போக்கும். மலச்சிக்கலை போக்கி அஜீரணக் கோளாறுகளை போக்கும்.

வாந்தி மயக்கம் நீக்கும்
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் மிளகு, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலை மற்றும் கறிவேப்பிலை இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் இருமல், கபக்கட்டு, மூலத்தில் இரத்தம் வெளியேறுதல், மூலக்கடுப்பு, மூலச்சூடு போன்ற நோய்கள் நீங்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரை பெருக்கும். உடல் சோர்வு, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை நீக்கும்.

ஜீரண தன்மை
சுண்டைக்காயில் உள்ள இலைகள், காய், வேர் என முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது.

இதன் இலைகள் இரத்த கசிவை தடுக்க கூடியவை.

காய்கள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகின்றது. இந்த முழு தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டதாகும்.

நீரிழிவு நோயினால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம், வயிற்றுப்பெருமல், உடற்சோர்வு போன்றவை நீங்க சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் போதும்.

மார்பு சளியை நீக்க
முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊற வைத்து, வெயிலில் காயப்போட்டு எடுத்து பத்திரப்படுத்தி , தினமும் குழம்பு செய்தோ அல்லது எண்ணெயில் வறுத்தோ சாப்பிடலாம். இது மார்பு சளியை நீக்கும்.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதல் உடையவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வயிற்று கிருமிகள் உடையவர்கள் வாரம் 3 முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்று கிருமி, மூலக்கிருமி போன்றவை நீங்கும். வயிற்றுப்புண் ஆறும்.

வயிற்று புழுக்கள் நீங்க
சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும். ஆசனவாய் அரிப்பு நீங்கும்.

நாம் அன்றாடம் உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

Wednesday, August 4, 2021

சூட்டு கொப்புளங்களால் அவதியா? இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்!

சூட்டு கொப்புளங்களால் அவதியா? இதனை போக்க இதோ சில வீட்டு வைத்தியங்கள்!

பெரும்பாலும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் நேரத்தில் சூட்டு கொப்பளம் ஏற்படுகின்றது.

குறிப்பாக வெயில் காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூட்டுக் கொப்பளங்களால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.

ஒரு நாளைக்கு மூன்று முறை என்று ஒரு வாரத்திற்குச் செய்து வந்தால், இந்த சூட்டுக் கட்டிகள் கரைவதை நீங்கள் காணலாம். அப்படிச் செய்யும் போது கட்டிகள் கரையத் தொடங்கினால், அந்த இடத்தை நன்கு சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
சில துளி தேயிலை மர எண்ணெய்யைத் தேங்காய் எண்ணெய்யோடு சேர்த்து, பாதிக்கப் பட்ட இடங்களில் ஒரு பஞ்சால் நனைத்து வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு மூன்று முறையாவது செய்து வந்தால், விரைவில் குணமடைந்து விடும்.
மஞ்சளைச் சிறிது நீரில் குழைத்துப் பாதிக்கப் பட்டுள்ள இடத்தில் பூசவும். இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் கட்டி உடைந்து குணமாகி விடும். இந்த மஞ்சள் தூளுடன், சிறிது இஞ்சியை அரைத்துச் சேர்த்துத் தடவினால் விரைவில் குணமாகி விடும்.

சளி இருமல் தொண்டை வலியால் அவதிப்படும் அனைவருக்குமான மருத்துவம்... நாட்டு மருந்து குழு

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் சுக்கு - கருப்பட்டி காபி குடித்தால் விரைவில் குணமாகி நல்ல பலன் கிடைக்கும். இங்கு இதன் செய்முறையை கீழே பார்க்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:

தண்ணீர் - 1 கப்
சுக்கு பொடி - 1 டீஸ்பூன்
கருப்பட்டி - 2 டேபிள் ஸ்பூன் பொடி செய்து கொள்ளுங்கள்

சுக்கு பொடி செய்ய:

உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் - 1/2 கப்
மல்லி (தனியா) - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்.

நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான இயற்கை எண்ணெய்

*நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான இயற்கை எண்ணெய்*

*தேவையான பொருள்*

1.மஞ்சள் பொடி - 15 கிராம்
2.சந்தன தூள் - 5 கிராம்
3.கிச்சிலி கிழங்கு - 5 கிராம்
4.கோரை கிழங்கு - 5 கிராம்
5.கசகசா -  5 கிராம்
6.நல்ல எண்ணெய் - 100 மி.லி

*செய்முறை*

✍️கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

✍️பிறகு நல்லஎண்ணெய் தவிர மீதம் உள்ள பொருட்களை நன்கு இடித்து பொடியாக்கி கொள்ளவும்.

✍️பிறகு 100 மி.லி நல்லஎண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

✍️மேலும் நல்லஎண்ணெய் உடன் இடித்து பொடியாக்கப்பட்ட பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.

✍️மேலும் இந்த பொருட்களை நன்கு தைலமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.

✍️பிறகு இந்த தைலத்தை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.

மேலும் இந்த தைலத்தை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொண்டு நரம்பு வலி மற்றும் நரம்பு வீக்கம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் நரம்பு வலி முற்றிலுமாக நீங்கும்.

வெந்தயத்தால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்
























தலைமுடி கறுப்பாக வளர