Tuesday, November 22, 2016

சிறு கீரை மருத்துவம்

சிறு கீரை

சிறுகீரை வேரை இடித்துச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்குக் குடித்துவந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுகீரையுடன் இஞ்சி , பூண்டு , பெருங்காயம் , மஞ்சள்தூள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து சூப் வைத்துக் குடித்தால் தலைவலி குணமாகும்.

சிறுகீரை , பார்லி ஆகியவற்றோடு சீரகம் ( சிறிதளவு ) மற்றும் மஞ்சள்தூள் ( 4 சிட்டிகை ) சேர்த்துக் கொதிக்ஙவைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம் , உடல் பருமன் குறையும்.

சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல்நோய்கள் குணமாகும்.

சிறுகீரையுடன் சிறு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சிறுகீரையோடு மிளகுத் தூள் , உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யொடு சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.

உடல் நலம் காக்க சிறந்தது யோகா மனநலம் காக்க சிறந்தது யோகா

உடல் நலம்  காக்க சிறந்தது யோகா மனநலம் காக்க சிறந்தது யோகா♻♻

 ♻♻எட்டு போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.♻♻

♻மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்♻

♻நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை
தேடிக் கொள்ளவே விரும்பும்.♻

♻சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை  தருகிறது.♻

♻சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"
என்கிறார்கள்.♻

♻நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.♻

♻இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.♻

♻காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.♻

♻காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்
இதை செய்வதால் என்ன நடக்கும் ♻

♻1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.♻

♻சரி இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.♻

♻8 வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி,               சமநிலை படுத்துகிறது.♻

♻இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்♻

♻மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் ♻

 ♻உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும் ,உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும் ,♻

♻ நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம் , உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கனும்♻

♻காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள் , ஆண்கள் வலது கை பக்கம்-- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும் , ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் , பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும் , மொத்தம.....் 42 நிமிடம்♻

♻1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் ♻

♻2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்னை குறையும் ,♻

♻3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ♻

♻4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறை பாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ♻

♻5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்♻

♻6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஷ்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் ♻

♻7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு , முதுகில் வாய் பிடிப்பு வராது♻

♻8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும் , வாய் கண் காது மூக்கு கருவிகள் நோய் தன்மை தாக்காது , 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும் , மூளைப் பகுதி விழிப்படையும் , மூளைப் பகுதி நோய் தீரும் , தியானங்கள் கை கூடும் , இதை செய்ய வயது வரம்பு இல்லை , இப்பயிற்சி நீங்கள் வாசி யோகத்திற்கு இணையானது ,அதை செய்த செய்த தவப்பயனை பெறுவீர்கள் ♻

♻இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர் , மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிற்பான்.♻

♻மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் சொல்லியவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது ♻

♻நலமுடன் வாழ்க வளமுடன்வாழ்க ♻

சகல நோய் நிவாரணி வில்வம் ,வில்வம் இருக்க செல்வம் எதற்கு !!!

வில்வம் :

திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
துணைக்குடும்பம்: Aurantioideae
சிற்றினம்: Clauseneae
பேரினம்: Aegle Corrêa
இனம்: A. marmelos

சகல நோய் நிவாரணி வில்வம் ,வில்வம் இருக்க செல்வம் எதற்கு !!!

வில்வத்தை கூவளம் என்றும் கூறுவார்கள்,அனைத்து பாகங்களும் மருந்தாக பலன் தரும் தாவரங்களில் வில்வ மரமும் ஒன்று. இதன் இலை, பூ, காய், பழம், வேர், பிசின் பட்டை என அனைத்திலும் நோய் தீர்க்கும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது.

சிறுவர் முதல் பெரியோர் வரை தாக்கும் சிறு நோய்களானாலும் எளிதில் குணமடையா நோய்களானாலும் சிறந்த மூலிகை மருந்தாக செயல்படுகிறது இந்த வில்வ மரம். வில்வ மரத்தின் இலை காரத்தன்மை கொண்டவை.

 இதனை இடித்து பிழிந்த சாற்றில் பசும்பால் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் காய்ச்சல், சோகை, வீக்கம் குணமாகும்.

எளிதில் ஜீர்ணமாகும், ஜீர்ணத்தின் இறுதியில் காரமான சுவை கொண்டது. பழத்தில் தசை வளர்ச்சிக்கு உதவும் Begtin என்ற சத்தும் சர்க்கரை Tannin (டானின்) அமிலமும் விசேஷமாக பழத்தில் நிறம்பியுள்ளன. தோஷங்களில் - வறட்சி, எளிதில் ஜீர்ணமாகும் தன்மை, துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை முதுலியவற்றால் கபத்தையும், சூடான வீர்யத்தினால் வாதத்தையும் கண்டிக்கும்.

மூன்று இலைகளை சுத்தம் செய்து தினமும் மென்று தின்று வந்தால் உட்செல்களிலுள்ள அனைத்து நோய்களும் அகலும். வில்வ இலையின் சாற்றுடன் அதே அளவு கல்யாண முறுங்கை சாற்றையும் சேர்த்து பருகிவர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். மேலும் பச்சை இலைகளாவும் உண்டுவர ஆஸ்துமா நோயையையும் கட்டுப்படுத்துகிறது.

வில்வ மரத்தின் காயை உலர்த்தி பொடி செய்து குழந்தைகளுக்கு சிறிதளவு கொடுத்துவர கழிச்சல், மூலநோய் நீங்கும். இதுபோல் காய்தூளை சிறிது வெள்ளத்துடன் சேர்த்து உண்டால் இரத்தத்தில் உள்ள ங்அதிக கொழுப்பு, செரிமான குறைவால் ஏற்படும் அஜீரண வயிற்று வலி நீங்கும். வில்வ பழத்தின் சதையை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அதில் ஒரு கிராம் எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து மூன்று வேளை உட்கொண்டு வந்தால் சீதபேதி, பசியின்மை ஆகியவையும் குணமாகும்.
ல்
மேலும் பழத்தை ஓடு நீக்கி பிழிந்து சர்க்கரை பாகில் காய்ச்சி சர்பத் செய்து குடித்துவர உடலின் வெப்பம் தணியும், அதிக வேர்வை ஏற்படுவதும் குறைகிறது. மேலும் மலச்சிக்கல் வராது தடுக்கிறது. இது போல் வில்வமரத்தின் பிசின் உடலுக்கு உரமேற்றும் வீரியத்தன்மை கொண்டது. வில்வ வேர் பட்டையை பச்சையாக ஒருகிராம் சீரகத்துடன் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதனை 1 கப் பாலில் கலந்து வடிகட்டி காலையில் மட்டும் பருகிவர தாது பலப்படும்.

வில்வமரத்தின் பாகங்கள் சில நோய்களை முற்றாக குணப்படுத்தவல்லது. மேலும் சிறந்த கொலரா தடுப்பு மருந்தாகவும் வில்வமரத்தின் பாகங்கள் செயல்படுகின்றன.

குறிப்பு : மூலிகைச்சாற்றை இரண்டு வேளைகளுக்கு மேல் பருகக்கூடாது.

பல்வேறு நோய்களிலிருந்து எம்மை பாதுகாக்கும் மிகச்சிறந்த மூலிகை மரமாக விளங்கும் வில்வமரங்கள் சீதோஷ்ண நிலையில் வளர்வதுடன் தற்போது இம்மரங்கள் அரிதாகவே காணப்படுகிறது.

இம்மரங்களின் மருத்துவ குணம் குறித்த விழிப்புணர்வு குறைவால் அழிந்துவரும் நிலையில் உள்ளன. இதிலிருந்து மீட்டு வில்வமரங்களில் விதைகளை நடவு செய்து அனைத்து இடங்களிலும் வளரச் செய்ய வேண்டும்.

வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. கனி தொடர்பான, முட்கள் காணப்படும் 15 மீட்டர் வரை உயரும். இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டது இதை மகாவில்வம் என்பார்கள்.

கூட்டிலையின் சிறிய இலைகள் நீள் வட்டமானது, ஈட்டி வடிவமானது, இலைப்பரப்பு வழவழப்பாக ஒளிரும் தன்மை உடையது. இலையடி ஆப்ப வடிவமானது அல்லது உருண்டையாக இருக்கும். இலை விளிம்பு இடைவெளிகளில் வெட்டப் பட்டிருக்கும் இலை நுனி விரிந்திருக்கும் அல்லது பிளவுற்று இருக்கும். சில சமயம் நீண்டு அரச இலையைப் போல் வளர்ந்திருக்கும். பூக்கள் ஐந்தங்க மலர் வகையைச் சேர்ந்தது.

தெளிவில்லாத் தட்டைத்தகடு கொண்டது. மகரந்தத் தூள்கள் எண்ணற்றவை கனி பெரிய வகையைச் சேர்ந்தது. கெட்டியன ஓடாக இருக்கும். விதைகள் பல அகலத்தைக் காட்டிலும் நீளம் அதிகம். இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். இது ஒரு விருட்சகம். கோவில் தோரும் இதை வைத்திருப்பார்கள்.

இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன் படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது. ஸ்பரிசத் தீட்சைக்கு வில்வ மரம். இதை விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப் படுகிறது.

வேர் நோய் நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம் மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க் குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.

வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன் இலை காச நோயைத் தடுக்கும். தொத்து வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும்.

விஷப் பாண்டு ரோகத்தை குணமாக்கும். பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். சன்னி ஜுரங்களைப் போக்கும்.
இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும்.

பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். அழகையும் உடல் வன்மையையும் உண்டு பண்ணும்.
பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு வலியைப் போக்கும் மூச்சடைப்பைத் தவிற்கும்.

பாண்டு, சோகை, மேக நோய், வாதவலி, பசியின்மை, கை – கால் பிடிப்பு, கிரந்தி நோய், சளி, தடிமன், இருமல், காசம், காமாலை, வீக்கம், உடல் அசதி, காது, கண்நோய்கள், இரத்த பேதி, அரிப்பு, மாந்தம், மலேரியா, போன்ற எல்லா வகை நோய்களையும் குணமாக்க வல்லது வில்வம்.
வில்வ பழத்தின் ஓட்டை உடைத்து உட்சதையில் சர்க்கரை சேர்த்து ஒரு தேக்கரண்டியில் கிண்டி உண்ணலாம், சில நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்த நோயைக் கண்டிக்கும்.

வாய்ப்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண் எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.

வில்வ காயை உடைத்து உள்ளே உள்ள சதையைக் கத்தியால் தோண்டி எடுத்து, புளி, இஞ்சி, கொத்துமல்லி, மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட்டால் மேற்கண்ட நோய்களைக் குணப்படுத்தும்.
நூறு வருடங்களுக்கு மேல் வயதான வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

வில்வ பழத்தின் சதையை 3 பங்கு நீர் விட்டு அரைத்து வடிகட்டி அத்துடன் பழுப்புச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் வீதம் ஒரு நாளைக்கு 3 முறை வீதம் குடித்து வந்தால் மலத்தில் சீதம், ரத்தம் போவதை தடுத்து, மலம் ஒழுங்காக வெளியேற்றும். உடல் வெப்பமும் நீங்கும். குடல் திடமடையும்.

இதை குழந்தைகளுக்கு அவுன்ஸ் கணக்கில் கொடுக்கலாம். வில்வ பழத்தின் உள் சதையை எடுத்து அதற்குத் தக்க படி எள் எண்ணெய் சேர்த்து, அதே அளவு பசும் பாலும் சேர்த்து பதம் வரும் வரை காய்ச்சி ஒரு புட்டியில் வைத்துக் கொண்டு வாரம் 2 நாள் தைலம் தேய்த்து வந்தால் வெப்ப அதிகரிப்பால் ஏற்படும் கண் எரிச்சல், உடல் அசதி, கை கால் வீக்கம் தீரும் கண்கள் குளிர்ச்சியடையும். இப்படிக் குளிக்கும் நாட்களில் பகல் தூக்கம் ஆகாது உடலுறவு கூடாது.

வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால் பற்களில் உண்டாகும் பல நோய்கள் போகும்.

வில்வக் காயைச் சுட்டு உடைத்து அதிலுள்ள சதையை மட்டும் எடுத்து பால் விட்டு அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வர கண்ணெரிச்சல், உடல் வெப்பம் நீங்கும் முடி உதிர்வது நிற்கும்.

வில்வக்காயை உடைத்து அதன் சதையைப் பசும் பால் விட்டரைத்து விழுதாக்கி இரவு நேரங்களில் உடலில் காணப் படும் கரும் புள்ளிகளில் தடவி காலையில் முகம் அலம்ப வேண்டும். ஒரு மாதத்தில் நிறம் மாறி மறைந்து விடும்.

வில்வக் காயை சுடவேண்டும். சுட்டால் வெடிக்கும். வெடித்த காயின் உள்ளேயிருக்கும் சதையை மட்டும் எடுத்து அரைத்து சூடாக வலி, வீக்கம், கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் நாள்பட குணமாகும்.

ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் கழித்து, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும், ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.

வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும் அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும்.

வில்வ இலை, அத்தி இலை, வேப்ப இலை, துளசி இலை இவை நான்கிலும் 25 கிராம் எடுத்துக்கொண்டு 5 கிராம் கடுகையும் சேர்த்து ஒரு மண் பானையில் போட்டு வேண்டிய அளவு நீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன்னதாக 50 மில்லி லிட்டர் கஷாயத்தையும் குடித்து வர 45 நாட்கள் முடிந்தால் கால் ஆணி நீங்கி விடும்.

வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.

வில்வ வேரை 10 – 15 மி.கி. எடுத்து நன்றாக இடித்து 100 மி.லி.தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பசும் பாலில் சேர்த்து தினமும் காலை வேளையில் குடித்து வர விந்துவைப் பெருக்கும். ஆண்மையை அதிகரிக்கும்.

வில்வ இலைக் கஷாயம் பருகக் கைகால் பிடிப்பு, உடல்வலி முதலியவை குணமாகிவிடும். கோமூத்திரம் விட்டு இலைகளை இடித்து பிழிந்து வடிகட்டி 40-50 IL வரை காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட ரத்த சோகை, காமாலை போன்ற நோய்கள் நீங்கும்.

பத்தியமாக இருக்க வேண்டும். அது போல இலையை தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு வலி வீக்கம் உள்ள உடல் பகுதிகளில் ஊற்றினால் அவைகள் குறைந்துவிடும். வில்வ வேர்க் கஷாயம் பருக நாடி நரம்புகளில் ஏற்படும் அதிர்வுகளை நீக்கி சாந்தமடையச் செய்யும்.பாதி பழுத்தும் பழுக்காத நிலையிலுமுள்ள வில்வக் காய்களை ஒட்டுடன் துண்டு துண்டாக உடைத்து வெயிலில் உலர்த்தி, இடித்து- சுத்தமான வெள்ளைத் துணியில் சலித்து சூர்ணத்தை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். சீதேபேதி, ரத்தபேதியில் இரண்டு பெரிய மேசைக்கரண்டி வெந்நீரில் போட்டு கெட்டியாக கூழ் போலச் செய்து ஆறிய பிறகு சாப்பிட வியக்கும்படியாகக் குணமாகும். காய் பசியை தூண்டிவிடும், மலத்தைக் கட்டும். குடல் கிருமிகளை நீக்கும். பழம் துவர்ப்பு, இனிப்புச் சுவை கொண்டது. மலத்தை இளக்கி சுகமாக கழியச் செய்யும். பழத்தை பாலுடன் கலந்து சிறிது மீளகுப் பொடி சேர்த்து இரவு சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிட தாது புஷ்டி உண்டாகும். மூலநோயும் நீங்கும்.

வில்வ இலைச் சாறு கல்லீரலின் செயல்களை தூண்டிவிட்டு பித்தத்தை தெளிவுறச் செய்யும்.வேர் ஹருதயத்திற்கு உகந்ததும், பழம் ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதிலும் வில்வம் சிறந்தது.

கபத்தின் அடைப்பினால் மூச்சுத் திணறல் ஏற்படும் நேரங்களில் இலைச்சாறு சாப்பிட கபத்தை கரைத்து விடும், ஜலதோஷம், இருமல், ஆஸ்த்மா நிவ்ருத்தியாகும். இலைச்சாறு சிறுநீரை சுண்டச் செய்யும் கர்ப்பபையில் ஏற்படும் தடிப்பு, வெள்ளைப்டுதல் போன்றவை வில்வத்தின் உபயோகத்தில் குணமடைந்து விடும்.

வில்வத்தின் வேர்த்தோல் விஷஜ்வரம் எனும் முறைக்காய்ச்சலை நீக்கும். இலைச்சாறும் ஜ்வரத்தை நீக்கிவிடும். வில்வப்கஷாயம் பேதி, கபம், வாந்தி, குமுட்டலை குணப்படுத்தும்.

புரோட்டின், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, உலோகச்சத்து,மாச்சத்து, கலோரி - உஷ்ணம் போன்றவை ஆப்பில், மாதுளை, பழங்களில் இருக்கும் அளவு சத்தை விட அதிகம் வில்வ பழத்திலுண்டு என்பதை அறிய வியப்பாக உள்ளது

விரல் நகங்கள் சொல்லும் நோய்கள்

நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால் வாயுத் தொல்லை அதிகமாக இருபத்தற்கான அறிகுறிகளாம்.

விரல் நகங்கள்
விரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றி இருப்பதற்கான அடையாளமாகும்.

உடலில் போதிய இரத்தம் இல்லையென்றால் கை விரல் நகங்கள் வெளுத்துப்போய் காணப்படும்.

விரல் நகங்கள் மஞ்சள் நிறத்தில் தென்பட்டால் இரத்தத்தில் நிக்கோடின் விஷம் கலந்திருப்பதிற்க்கான அறிகுறியாகும்.

நகங்கள் சற்று உப்பி காணப்பட்டால் மூச்சு சம்மந்தமான நோய்கள் மற்றும் ஆஸ்துமா வருவதற்க்கான வாய்ப்புகள் உண்டு.

விரல் நகங்கள் சற்று நீல நிறமாக தென்பட்டால் இதயம் பலவீனமாக இருப்பதற்கு அடையாளமாகும்.

நகங்கள் மிகவும் சிவப்பாக இருந்தால் உட்லில் இரத்தத்தின் அளவு மிகவும் அதிகமாக இருப்பதை காட்டுகிறது இவர்களுக்கு இரத்த கொதிப்பு வருவதற்கு வாய்புகள் உண்டு.

நகங்களில் சொத்தைகள் காணப்பட்டால் இவர்களுக்கு போதிய ஊட்ட சத்து இலை என்று அர்த்தம்.

லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல இரத்த ஒட்டத்தை குறிக்கும்.

Saturday, November 19, 2016

சீந்தில் கொடி.

சீந்தில் கொடி.


1) மூலிகையின் பெயர் -: சீந்தில் கொடி.


2) தாவரப்பெயர் -: TINOSPORA CARDIFOLIA.


3) தாவரக்குடும்பம் -: MENISPERMACEAE.


4) வேறு பெயர்கள்-
அமிர்த வல்லி, சோமவல்லி, சாகாமூலி சஞ்சீவி, ஆகாசவல்லி போன்றவை.(GUDUCHI).


5) பயன் தரும் பாகங்கள் -:
கொடி, இலை மற்றும் வேர்.


6) வளரியல்பு - :

சீந்தில் கொடி தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. வரட்சியைத் தாங்கக்கூடியது.உயரமான மரங்களில் காடுகளில் அதிகமாகப் படரும் ஏறு கொடி. கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடியில் வளரக் கூடியது.

இதய வடிவ இலைகளையும் தக்கையான சாறுள்ள தண்டுகளையும் காகிதம் போன்ற புறத் தோலையும் உடைய ஏறு கொடி. கொடியின் தரை தொடர்பு அகற்றப் பட்டால் கொடியின் மெல்லிய விழுதுகள் வளர்ந்து தரையில் ஊன்றி கொடிதழைக்கும்.

 இது கோடையில் பூக்கும். பூ ஆண், பெண் என்ற இருவகையுண்டு. மஞ்சள் நிரத்தில் இருக்கும்.  பெண் பூ தனியாக இருக்கும். அவரை விதை போன்று சிவப்பு நிற விதைகள் உண்டாகும். விழுதுகள் 30 அடி நீளங்கூட வளரும். விதையை விட தண்டு கட்டிங் மூலம் இனப் பெருக்கம் சிறப்பாக இருக்கும்.


7) மருத்துவப்பயன்கள் -:

முதிர்ந்த கொடியை நறுக்கி இடித்து நல்ல நீரில் கரைத்து வடிகட்டி அசையாது சில மணி நேரம் வைத்திருந்து நீரை வடித்துப் பார்க்க அடியில் வெண்ணிறமான மாவு படிந்திருக்கும். மீண்டும் நீர் விட்டுக் கரைத்து தெளிய வைத்து இறுத்து எடுத்து உலர்த்தி வைக்கப் பளிச்சிடும் வெண்ணிறப் பொடியாயிருக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப் படும். இது ஓர் கற்ப மருந்தாகக் கருதப்படுகிறது. உணவுக் கட்டுப் பாட்டுடன் நீண்ட நாள் சாப்பிட பல பிணிகளும் நீங்கும் என்பதாம்.

சீந்தில் உடற்பலம், சிறுநீர், காமம், தாய்ப்பால், பித்தம் ஆகியவற்றைப் பெருக்கும்.

முறை நோய் மஞ்சள் காமாலை, வாதம், கேன்சர், அல்சர், ஈரல் நோய் ஆகியவை தீர்க்கும், உடல் தேற்றும்.


சீந்தில் சர்க்கரை, கல்லீரல், மண்ணீரல் ஆகியவைகளை உரம் பெறச் செய்யும். பிற மருந்தின் சேர்கையுடன் நீரிழிவு, காமாலை, பாண்டு, சோகை, வீக்கம், இருமல், கபம், சளி, வாந்தி, காய்ச்சல்,மூர்ச்சை ஆகியவற்றைத் தீர்க்கலாம்.

சீந்தில் கொடி, நெற்பொறி வகைக்கு 50 கிராம் 1 லிட்டர் நீரிலிட்டு 150 மில்லியாக வற்றக் காய்ச்சிக் காலை, மதியம், மாலையாக 50 மி.லி. யாகக் குடித்து வர மேக வெப்பம், தாகம் தீரும்.


முதிர்ந்த கொடிகளை உலர்த்திப் பொடித்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி பாலுடன் சாப்பிட்டு வர உடல் உரம் பெறும்.

 பனங்கற்கண்டுடன் சாப்பிட மதுமேகத்தால் தோன்றும் கை, கால் அசதி, மிகுதாகம், உடல் மெலிவு, விரல்களில் சுருக் சுருக்கென்று குத்துதல் ஆகியவை தீரும்.

-பிரசவத்தின் போது சாகாமூலி என்ற சீந்தில் கொடியின் சிறு துண்டை தாயின் கால் கட்டை விரலில் கட்டி விடுவர்.இதனால் பிரசவகாலத்தில் தாய், சிசு இருவரும் நலமாக பிறக்கின்றனர். பிறக்கும் குழந்தைக்கு எந்த நோய் கிருமியும் தாக்கப்படுவதில்லை. இது உண்மை இன்று கிராமபுறங்களில் இதை செய்கின்றனர்.அதனால் தான் இதற்கு சாகா மூலி என்ற பெயர் வந்துள்ளது.


பெண்களை அதிகமாக தாக்கக்கூடியது மார்பக புற்றுநோய். இந்த நோயில் இருந்து பெண்களை காப்பாற்றும் அரிய வகை மூலிகை செடிதான் சீந்தில் கொடி என்று அழைக்கப்படும் வஞ்சிக் கொடியாகும்.

 சித்த வைத்தியத்தில் வஞ்சிக் கொடி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீந்தில் கொடிக்கு, வஞ்சி மரம், ஆகாச வல்லி, அமிர்தவல்லி, சோமவல்லி, சாகா மூலி என்று பல பெயர்கள் உண்டு. பெயரைக் கேட்டாலேயே நடுநடுங்க வைக்கும் எய்ட்ஸ் மற்றும் வெட்டை, மேகம் போன்ற கொடிய நோய்களை குணமாக்கும் மருந்து வஞ்சிக் கொடியில் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குவதற்கு வஞ்சிக் கொடியை சாப்பிட கொடுப்பதும் அந்த கால வழக்கமாகும்.

 வஞ்சிக்கொடி சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து என்று அகத்திய முனிவர் அன்றே எழுதி வைத்திருக்கிறார். இன்றைய விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சியிலும் மேற்கண்ட மருத்துவ ஆற்றல் உண்மையென்று உணரப்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோயால் ஏற்படும் அடைப்பின் காரணமாக உருவாகும் மஞ்சள் காமாலை, காச நோய்களில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கக்கூடிய மருந்து சீந்தில் கொடியில் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.


சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, சிறுநீரக செயல் இழப்பு, ஆண்மைத்தன்மை குன்றுதல், கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது.

சிறு உபாதைகளான மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள், நாள்பட்ட காய்ச்சல் மற்றும் சீதபேதியை குணமாக்கும். வெட்டை நோயை விரட்டும். இந்திரியம் தானாக வெளியேறுவதை தடுக்கும். இந்த கொடி கசப்புச் சுவை கொண்டது. ஏதாவது ஒரு மரத்தைப் பற்றிக் கொண்டு ஒட்டுண்ணியாகப் படரக்கூடியது.

ஆலமரத்தைப் போலவே இதன் பிரதான கிளைகளிலிருந்தும் மெல்லிய கிளைகள் விழுதுகள் போலத் தொங்குகின்றன.
தண்டுப் பகுதியில் ஆங்காங்கே வெண்மை வண்ணத்தில் சில முண்டுகள் தெரிகின்றன. வெற்றிலையைப் போன்ற தோற்றம் கொண்டவை இதன் இலைகள். சீந்தில் கொடியின் அனைத்துப் பாகங்களும் கசக்கும்

சீந்தில் நம் நாட்டிலும், மற்றும் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளான பர்மா, இலங்கை போன்ற நாடுகளிலும் அதிகமாக பயிரிடப்படும் மூலிகையாகும். இதற்கு சோமவல்லி, அமிர்த வல்லி, அமிர்தை, அமிர்தக் கொடி, குண்டலி சீந்திற் கிழங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.

சீந்தில் இலை வெற்றிலைப் போல பச்சை நிறமாக இருக்கும். பழம் சிவப்பாகவும் சிறியதாகவும் இருக்கும் இது மற்ற மரங்களின் மீது படர்ந்து வளரும் கொடியினத்தைச் சார்ந்தது.

சீந்திலின் கொடியிலிருந்து மெல்லிய விழுதுகள் தொங்கும். இக்கொடியின் இலை,கொடி,வேர், சமூலம் என் அனைத்து பாகங்களும் மருந்துவத்திற்கு பயன்படுகின்றது.

சீந்திலின் கொடியை அறுத்து விட்டாலும் இலைகள் வாடாமல் பசுமையாக இருக்கும். அதனால் இதற்கு “சாகா மூலிகை” என்ற பெயர் வந்தது.

சாதாரணமாக சீந்தில் கொடிக்கு கோடை காலத்தில் அதிக சத்து இருக்கும். மழை மற்றும் பனிக்காலங்களில் சத்து மிகவும் குறைந்து காணப்படும்.

சீந்தில் இலை:-

சீந்திலின் இலையை அனலில் வாட்டி, புண்கள் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் குணமடையும். மேலும் இதன் இலையை அரைத்து கோடை காலங்களில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெறும் வயிற்றில் காலை வேளையில் சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.

சீந்தில் கொடி:-

முற்றிய கொடி இளம் கொடியை விட நிறைய பலன்களைத் தரும். அதாவது முற்றிய கொடியில் கைப்பு தன்மை அதிகம் இருக்கும். முதிர்ந்த கொடியைக் கோடைகாலத்தில் சேகரிக்க வேண்டும். மற்ற காலங்களில் சேகரிக்கப்படுவதற்கு இக்குணம் நிறைந்திராது.

நன்றாக முற்றிய சீந்தில் கொடி இடித்தது -
35 கிராம்

கொத்தமல்லி                             - 20 கிராம்
சுக்கு                                      - 20 கிராம்
அதிமதுரம், சோம்பு                   - தலா 10 கிராம்

எடுத்து இடித்து எல்லாவற்றையும் சேர்த்து தண்ணீர் ஒரு லிட்டர் விட்டு கொதிக்க வைத்து கால் லிட்டராக சுண்ட வைத்து, வடிகட்டி காலை, மாலை இரு வேளை மூன்று நாட்கள் குடித்து வந்தால் அஜீரணம், வயிறு உப்புசம், நாட்பட்ட வாதம், பலக்குறைவு முதலியன குணமாகும்.

சீந்தில் சர்க்கரை:-

கோடைக்காலத்தில் முற்றிய சீந்தில் கொடியை இடித்து, அதில் 5 படி தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து, ஒரு நாள் முழுவதும் வைத்து, அதை தெளிய வைத்து விடவும். பிறகு அந்த தெளிந்த நீரை, கீழே ஊற்றி விட்டு அடியில் உள்ளதை மட்டும் எடுத்து, தண்ணீரை விட்டு கலக்கித் தெளிய விட வேண்டும்.

இது போல் ஐந்தாறு தடைவ செய்து கடைசியாக திப்பிலை நீக்கி நீரை அசையாமல் வைத்து தெளிவினை இறுத்து காய வைத்து எடுத்தால் நமக்கு சீந்தில் சர்க்கரை கிடைக்கும்.

இந்த சீந்தில் சர்க்கரையை வாயில் வைத்தால் சுவை இல்லாமலிருக்கும். இதை மற்ற மருந்துகளுடன் அனுபானமாக கொடுக்கலாம். மேலும் இது கல்லீரல், நுரையீரல் மற்றும் மண்ணீரலுக்கு நல்ல பலத்தைக் கொடுக்கும்.

சீந்தில் புகை:-

உடல் மெலிந்து மிகவும் நலிவுடன் இருப்பவர்கள் சீந்தில் கொடியை தீயிலிட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர்ந்தால் உடல் பலத்தை பெறுவார்கள்


 சீந்தில் கொடியிலிருந்து இலைகளைப் பிரித்து நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். உலர்ந்த இலைகளைப் பொடித்து வைத்துக்கொண்டு நீரில் கலந்து ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

சீந்தில்  தண்டுகளைக் காய வைத்து ஒரு தேக்கரண்டி பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பொடியை நான்கு டம்ளர் நீர் விட்டு காய்ச்ச வேண்டும். ஒரு டம்ளர் அளவாக சுண்டிய பிறகு காலையில் வெறும் வயிற்றில் குடித்து  வந்தால் பசியின்மை, வயிற்றுவலி, செரிமானமின்மை ஆகிய துன்பங்கள் விலகும். காய்ச்சலுக்கும் இது நல்ல மருந்து.

சீந்தில் கொடியை இடித்து குளிர் நீர் விட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் நன்றாகக் கடைந்து திப்பியை நீக்கிவிட்டு நீரை மட்டும் வெயிலில் வைத்திருந்தால் நீர் தெளிந்துவரும். அந்த தெளிந்த நீரை வடிகட்டிவிட்டு புதிதாக தண்ணீர் சேர்த்து கலக்கி வெயிலில் சுண்ட வைக்க வேண்டும். இப்படி பலமுறை செய்வதால் வெண்மையான மாவு போன்ற பொருள் நமக்குக் கிடைக்கும். இதுவே சீந்தில் சர்க்கரை எனப்படும். (இந்த சீந்தில் சர்க்கரை நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது.)

 இந்த சீந்தில் சர்க்கரையை ஒரு கிராம் முதல் நான்கு கிராம் வரையில் வாயிலிட்டு நீர் அருந்துவதால் கடும் ஜுரத்துக்கு பின் ஏற்படும் உடல் இளைப்பு, மண்ணீரல் வீக்கம், இருமல், மூர்ச்சை, வாந்தி, ஆஸ்துமா ஆகியன குணமாகும். மேலும் இதனால் நாட்பட்ட சிறுநீர்ப்பை நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும்.

சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.

சீந்தில் கொடி 35 கிராம் அளவு எடுத்து நசுக்கி அதனோடு  கொத்தமல்லி, அதிமதுரப்பொடி வகைக்கு 4 கிராம் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனோடு 300 மி.லி. நீர் சேர்த்து சோம்பு, பன்னீர் ரோஜாப்பூ ஆகியன தலா 10 கிராம் சேர்த்து இரண்டு டம்ளர் நீர்விட்டு ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி வைத்துக்கொண்டு 25 மி.லி. முதல் 50 மி.லி. வரை தினமும் காலையில் எடுத்துக் கொண்டால் வயிற்று உப்புசம், நாள்பட்ட செரிமானமின்மை, வயிற்றைப் பாதித்துத் துன்பம் செய்கிற பல்வேறு நோய்களும் விலகும்.

சீந்தில் கொடியோடு நெற்பொரி வகைக்கு 50 கிராம் அளவு எடுத்து சேர்த்து ஒரு லிட்டர் நீர் விட்டுக் காய்ச்சி, 150 மி.லி. ஆகச் சுண்டச் செய்து தினமும் இருவேளை 50 மி.லி. அளவு குடித்துவர மேகச்சூடு, நாவறட்சி நீங்கும். எந்த சிரமுமின்றி வீடுகளில் வளரக் கூடிய சீந்தில் எனும் அமிர்தத்தை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்!

மூட்டு வலிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியது. ரத்தத்தின் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியது. கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது என
எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி

Saturday, November 12, 2016

மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு


அக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள்

அக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப்புகள்

ஒழுங்கற்ற மாதவிடாய்
A.முந்திய மாதவிடாய்
B.தாமதமான மாதவிடாய்
C. முறையற்ற மாதவிடாய் (காலம் மற்றும் இடைவெளிகளில்) சுற்று
குறிகளை வேறுபடுத்திப்பார்த்தல்
சிறுநீரக குறைபாடு குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள
ஒழுங்கற்ற மாதவிடாய்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்ச் சுற்றில் வழக்கத்திற்கு மாறாக மாற்றங்கள், அதாவது மாதவிடாய்ப் போக்கின் நிறம், அளவு, காலம், மற்றும் அதனுடன் இணைந்த குறிகள் இவற்றில் மாற்றங்கள் ஏற்படும் பொழுது ஒழுங்கற்ற மாதவிடாய் எனப்படுகிறது. பொதுவாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம்
1. முந்திய மாதவிடாய் சுற்று
2. தாமதித்த மாதவிடாய் சுற்று
3. முறையற்ற மாதவிடாய் சுற்று
என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். பொதுவாக மாதவிடாய் சுற்று என்பது 28 நாட்கள் (காலம் மற்றும் இடைவெளி சேர்த்து) என்று கணக்கிடப்படுகிறது. வழக்கமான மாதவிடாய் வெளிப்படும் நாளுக்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் முன்னதாக அல்லது மாதம் இருமுறை வெளிப்படும் போக்கு என்பது முந்திய மாதவிடாய் சுற்று என்றும், வழக்கமான மாதவிடாய் நாளுக்கு தாமதமாக எட்டு அல்லது ஒன்பது நாட்களுக்குப் பிறகோ அல்லது 40 முதல் 50 நாட்களில் (அல்லது அதற்கும் தாமதமாக) வெளிப்படும் மாதவிடாய்ப் போக்கு என்பது தாமதித்த மாதவிடாய் என்றும் அழைக்கப்படுகிறது.
வெளிப்புற நோய்க் காரணிகள், குளிர், வெப்பம், ஈரம் மற்றம் கவலைகள், ஒழுங்கற்ற முறையற்ற பாலியல் வாழ்க்கை, ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறுதல் போன்ற காரணங்களால் இரத்தம் மற்றும் சக்தி(Q1) இவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டில் சீர்குலைவு ஏற்படுகிறது. இந்த சீர்குலைவு கூடுதல் சக்தி ஓட்டப்பாதைகளான ‘சோங்’ (chong) மற்றும் இன விருத்தி சக்தி (Ren) ஓட்டப்பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்தப் பாதிப்புகள் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு காரணமாக அமைகின்றன.
காரணமும், நோயின் போக்கும்

A.முந்திய மாதவிடாய்

I. இரத்தத்தில் வெப்பத்தன்மை: அபரிதமான உள்உடல் வெப்பம் காரணமாக, அதாவது ‘யின்’ தன்மை குறைவதாலும் ’யாங்’ தன்மை அதிகமாவதாலும் முந்திய மாதவிடாய் ஏற்படுகிறது. காரசாரமான உணவுகள் சாப்பிடுவது, கருப்பையில் வேலை செய்யக்கூடிய, வெப்பத்தை உண்டாக்க கூடிய மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, தேக்க மடைந்த கல்லீரல் சக்தியிலிருந்து மாற்றப்பட்ட வெப்பம் இவைகளால் இனவிருத்தி மற்றும் ’சோங்’ சக்தி ஓட்டப் பாதைகளில் ஏற்படும் பாதிப்புகளே முந்திய மாதவிடாய் சுற்றிற்கு காரணமாகின்றன.
II. சக்திகுறைபாடு: அதிகப்படியான உழைப்பு, முறையற்ற சத்தியில்லாத உணவுகள் மண்ணீரல் பலவீனமடைவதற்கு காரணமாவதாலும், மத்திய வெப்பமண்டலப் பகுதியில் ஏற்படும் சக்தி குறைபாடு மாதவிடாய்ப் போக்கை கட்டுபடுத்த தவறுவதாலும் முந்திய மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது. “அதிகப்படியான உள் உடல் வெப்பத்தை நாடி பிரதி பலிக்கவில்லையெனில், கல்லீரல் மற்றும் இருதயத்தின் சக்தி குறைபாடு காரணமாக இரத்தம் கட்டுபடுத்தத் தவறும் பட்சத்தில் முந்திய மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது.

B.தாமதமான மாதவிடாய்

I. இரத்தக்குறைவு: நாள்பட்ட நோய்கள் மற்றும் ஒரே பிரசவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்தல் போன்ற காரணங்களால் நாள்பட்ட இரத்தப் போக்கு, பலவீனம் ஏற்பட்டு இரத்தம் கெட்டுப் போய்விடுகிறது. ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்களும், அதிகப்படியான உழைப்பும் மண்ணீரல் மற்றும் இரைப்பையை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக, இனவிருத்தி மற்றும் சோங்சக்தி ஓட்டப் பாதைகளில் இரத்தக் குறைவு ஏற்படுகிறது. முடிவு தாமதமான மாதவிடாய் சுற்று ஆகிறது.
II. இரத்தத்தில் குளிர்தன்மை: இது பெரும்பாலும், தொடர்ச்சியான ‘யாங்’ தன்மையில் குறைபாடு மற்றும் உடல் குளிர்ச்சி ஏற்படுவதால் ஏற்படுகிறது. அதிகப்படியான பக்குவப்படுத்தப்படாத உணவுகளை சாப்பிடுவதாலும் குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதாலும், மழை மற்றும் குளிரில் அடிபடுவதாலும் தாமதமான மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது. நோயை உண்டாக்க கூடிய குளிர்தன்மை இனவிருத்தி மற்றும் சோங் சக்தி ஓட்டப்பாதைகளை தாக்குவதால் சுலபமான இரத்த ஓட்டத்திற்கு தடையை உண்டு பண்ணுகிறது. இதன் காரணமாக தாமதமான மாதவிடாய்ச் சுற்று ஏற்படுகிறது.
III. தேக்கமடைந்த சக்தி : உணர்ச்சிகளின் அழுத்தத்தால் சக்தி(ண1) யின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுவதன் காரணமாக சக்திக் தேக்கம் நிகழ்கிறது. இந்த சக்தித் தேக்கம் இயல்பான இரத்த ஓட்டத்தை தடை செய்வதன் காரணமாக இனப்பெருக்க மற்றும் சோங் சக்தி ஓட்டப் பாதைகளில் இயல்புக்கு மாறான செயல்பாடுகள் நடைபெறுகின்றன. இதனால் சரியான காலத்தில் இரத்தத் தொகுப்பு உருவமைக்கப்பட முடியாது போகிறது. அப்பொழுது தாமதமான மாதவிடாய்ச்சுற்று ஏற்படுகிறது.

C. முறையற்ற மாதவிடாய் (காலம் மற்றும் இடைவெளிகளில்) சுற்று

I. கல்லீரல் சக்தித் தேக்கம் : கடும் கோபத்தின் அழுத்தம் கல்லீரலை சேதப்படுத்தி சேமித்து வைக்கப்பட்ட இரத்தத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றது. இது இனப்பெருக்க மற்றும் சோங் சக்தி ஓட்டப்பாதைகளில் இரத்தத்தின் செயல்பாட்டைக் குறைக்கிறது இதனால் முறையற்ற மாதவிடாய்சுற்று உண்டாகிறது.
II சிறுநீரகத்தில் குறைபாடு : பக்குவப்படாத வயதிற்கு முன் செய்யப்படும் திருமணம் (18 வயதிற்கு முன்) முறையற்ற இஷ்டப்படியான பாலியல் வாழ்க்கை முறை ஒரே பிரசவத்தில் பல குழந்தைகளைப் பெற்றெடுத்தல் போன்ற காரணங்கள் சிறுநீரக பலத்தை குறைக்கின்றன. இந்தச் செயல்பாடுகள் சாரத்தையும் இரத்தத்தையும் உட்கொள்கின்றன. சிறுநீரகம் தன் செயல்பாடுகளான சாரத்தை சேமித்தல் மற்றும் இனப்பெருக்க, சோங் சக்தி ஓட்டப்பாதைகளை ஒழுங்குபடுத்தும் வேலையை செய்யத் தவறும் பொழுது முறையற்ற மாத விடாய்ச்சுற்று ஏற்படுகிறது.

குறிகளை வேறுபடுத்திப்பார்த்தல்

A. முந்திய மாதவிடாய்ச்சுற்று
I. இரத்தத்தில் வெப்பத்தன்மை
குறிகளின் முக்கியவெளிப்பாடுகள்
குறுகியகால மாதவிடாய் சுழற்சி, அடர்த்தியான, அடர்சிவப்பு நிற மாதவிடாய்ப் போக்கு, அதிக அளவு போக்கு அமைதியின்மை, நெஞ்சில் நிறைந்த உணர்வு, பழுப்பு நிற சிறு நீர், மஞ்சள் படிவத்துடன் சிவந்து காணப்படும் நாக்கு, வேகமான, பலமான நாடி
குறிகளைப் பகுத்தாய்தல்
அடர்த்தியான, அடர்சிவப்பு நிற, ஏராளமான போக்கு உள் உடல் வெப்பத்தைக் குறிக்கிறது. இந்த உள் உடல் வெப்பம் கல்லீரல் மற்றும் இருதயத்தின் ஆற்றலைக் குறைப்பதால் அமைதியின்மை மற்றும் நெஞ்சில் நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த உடல் உள்வெப்பமானது இருதயத்திலிருந்து சிறுகுடலுக்கு இறக்கம் செய்யப்படும்பொழுது குறைவான அடர் மஞ்சள் நிற சிறுநீர் உற்பத்தியாகிறது. நாக்கில் மஞ்சள் படிவமும், துரிதமான நாடியும் உடல் உள்வெப்பத்தை குறிக்கிறது.
II.சக்தி குறைபாடு
குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள் : ஏராளமான, மெல்லிய நீர் போன்ற இளஞ்சிவப்பு நிற மாதவிடாய்ப் போக்கு, குறைவான சுழற்சிக்காலம், உடல் மற்றும் மனத்தளர்ச்சி படபடப்பு, குட்டைசுவாசம், அடிவயிற்றில் காலியாகவும், கனமாகவும் இருப்பது போன்ற உணர்வு (தன்னிச்சையாக மனதில் எழும்), மெல்லிய படிவத்துடன் காணப்படும் வெளுத்த நாக்கு பலவீனமான நாடி.
குறிகளைப் பகுத்தாய்தல்
மண்ணீரல் சக்தியானது மத்திய வெப்ப மண்டல ஆதிக்கம் செலுத்தி இரத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது., அங்கு இன விருத்தி மற்றும் சோங் சக்தி ஓட்டப் பாதைகளின் இடையூறுகள், ஏற்படுத்தினால், ஏராளமான, மெல்லிய, இளஞ்சிவப்பு நிறப்போக்கு குறைந்த கால மாதவிடாய் சுழற்சிக்கு அல்லது முந்திய மாதவிடாய் சுற்றுக்கு வழிவகுக்கிறது. உடல், மனதளர்ச்சி கட்டை சுவாசம் மற்றும் அடி வயிற்றில் காணப்படும் காலியான கனமான உணர்வு சக்தி குறைபாட்டின் அடையாளங்களாகவும் மற்றும் பலவீனமான நாடியும் (சக்தி குறைபாட்டின் அடையாளம்) காணப்படுகிறது.
B. தாமதமான மாதவிடாய்
இரத்தக்குறைவு
குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்: குறைவான சுழற்சிக்காலத்தில், குறைவான இளஞ்சிவப்புநிற மாதவிடாய்ப்போக்கு, அடிவயிற்றில் காலியான வலி நிறைந்த உணர்வு, உடல் இளைப்பு, மஞ்சள் நிற வெளிறிய உடல், பொலிவிழந்த தோல் (சருமம்), கிறுகிறுப்பு, தலைசுற்றல், மங்கலான பார்வை, படபடப்பு, தூக்கமின்மை மற்றும் மெல்லிய படிவத்துடன் கூடிய வெளிர்சிவப்பு நிற நாக்கு பலவீனமான நூல் போன்ற மெல்லிய நாடி
குறிகளைப் பகுத்தாய்தல்
நாள்பட்ட நோய்களில் அடிபட்டதால் அல்லது நாள்பட்ட இரத்தப்போக்கினால் பலவீனமான உடல்வாகு அமையப் பெற்றால், அவர்களுக்கு சரியான நேரத்தில் இரத்தம் உருவாக்கப்பட்டு, இரத்தத்தொகுப்பு உருவமைக்கப் பட முடியாத காரணத்தால் குறைவான, இளஞ்சிவப்பு நிற இரத்தப்போக்கு, குறைவான சுழற்சிக்காலத்தில் ஏற்படுகிறது. இரத்தம் கருப்பையை பராமரிக்கத்தவறும் பொழுது அடிவயிற்றில் வலி நிறைந்த, காலியான உணர்வு காணப்படுகிறது. சக்தி ஓட்டப்பாதைகள், இரத்த நாளங்கள், தசைகள் மற்றும் சருமம் இவைகளுக்கு சரியான போஷக்கு கிடைக்காத பொழுது, உடல் இளைப்பு, மஞ்சள் நிற வெளிறிய உடல், பொலிவிழந்த தோல் போன்ற குறிகள் தோன்றலாம். கல்லீரலுக்கும், இருதயத்திற்கும் இரத்தத்தால் ஊட்டமளிக்கத் தவறும் பட்சத்தில் கிறுகிறுப்பு, மங்கலான பார்வை படபடப்பு மற்றும் தூக்கமின்மை உண்டாகிறது. நாக்கிற்கு சரியான ஊட்டம் கிடைக்கப் பெறாததால் இரத்த நாளங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால் வெளிர்சிவப்பு நிற (டண்ய்ந் ஸ்ரீர்ப்ர்ன்ழ்ங்க்) நாக்கு மற்றும் பலவீனமான நூல் போன்ற மெல்லிய நாடி காணப்படுகிறது.
II. இரத்தத்தில் குளிர்ந்த தன்மை
குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்
தாமதமான மாதவிடாய்ச்சுழற்சியில் கருநிற போக்கு, அடிவயிற்றில் கீழ் வலி வெப்பத்தால் சற்று மட்டுப்படும். ஆழமான, மெதுவான நாடி (குறிகளைப் பகுத்தாய்தல்
மாதவிடாய்க்காலங்களில் நோய்த்தன்மையான குளிரின் இரத்த ஓட்டத்தின் வேகம் தடைபடுகிறது. இதனால் தாமதமான மாதவிடாய்ச் சுற்று, குறைவான மற்றும் கருநிறப்போக்கு காணப்படுகிறது. கருப்பையில் உள்ள குளிர்ச்சி (குளிர்தன்மை) இயல்பான சக்தி மற்றும் இரத்த ஓட்டத்தை தடைசெய்கிறது. மேலும் அங்கு வலி விட்டு விட்டு தோன்றுகிறது. (அடிவயிற்றில்). இயல்பிலேயே குளிரிச்சி தன்மையை உடைய ‘யின்’ ‘யாங்’ தன்மையை சேதப்படுத்துகிறது. மேலும் கை, கால்களில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது. நாக்கில் மெல்லிய வெண்மையான படிவமும், ஆழமான மெதுவான நாடியும் குளிர்ச்சிதன்மையின் சம்பந்தப்பட்ட நோய்க் குறிகளின் அடையாளமாக காணப்படுகிறது.
III சக்தி தேக்கம் குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்
கருஞ்சிவப்பு நிற போக்குடன் குறுகியகால மாதவிடாய் சழற்சி, அடிவயிற்றில் உப்பிசத்துடன் கூடிய வலி, மன அழுத்தம், அடைபட்ட நெஞ்சு (மூச்சு விட சிரமம்) எதிர்களித்தால் சற்று மட்டுப்படும், மார்பு சார்ந்த வயிற்றுப் பகுதியிலும் மார்பகப் பகுதிகளிலும் வீக்க உணர்வு, நாக்கில் மெல்லிய வெள்ளை நிறப் படிவம் மற்றும் வீணை தந்தி போன்ற விறைப்பான நாடி.
குறிகளைப் பகுத்தாய்தல்
தேக்கமடைந்த கல்லீரல் சக்தி தடைபட்ட இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது, மேலும் அடிவயிற்றில் உப்பிசத்துடன் கூடிய வலியுடன் குறைவான, தாமதமான மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடுகிறது. சக்தி (Q1) சுலபமாக பயணம் செய்யத் தவறும் பட்சத்தில் மன அழுத்தம், அடைபட்ட நெஞ்சு (மூச்சு விட சிரமமான) போன்ற குறிகள் காணப்படுகின்றன. கல்லீரல் சக்தி ஓட்டப்பாதை மார்பு, விலா எலும்புகளுக்கு அருகில் செல்வதால் கல்லீரல் தேங்கிய சக்தி மார்பகம் மற்றும் மார்பு சார்ந்த வயிற்றுப் பகுதிகளில் ஒரு வித (வீக்கத்தை) உப்பிசத்தை உண்டாக்குகிறது. கல்லீரல் குறைபாடு மற்றும் கல்லீரல் சக்தி தேக்கத்தின் ஒரு குறிப்பிடப்படக்கூடிய அடையாளமாக வீணை தந்தி போன்ற விறைத்த நாடி காணப்படுகிறது.
C. முறையற்ற் மாதவிடாய் சுற்று
கல்லீரல் சக்தித் தேக்கம் குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்
மாதவிடாய் சுழற்சி மற்றும் இரத்தப்போக்கின் அளவில் மாற்றம். அடர்த்தியான, பிசுபிசுவென்று ஒட்டக்கூடிய, நீலம் கலந்த சிவப்பு நிற மாதவிடாய்ப் போக்கு சிரமமான போக்கு, மார்பு சார்ந்த வயிற்றுப்பகுதியில் உப்பிசம், அடிவயிற்றுப் பகுதியில் உப்பிசத்துடன் வலி, மன அழுத்தம் அடிக்கடி பெருமூச்சு விடுதல், நாக்கில் மெல்லிய மென்மையான படிவம் மற்றும் வீணைதந்தி போன்ற விறைப்பான நாடி
குறிகளைப் பகுத்தாய்தல்
கடுங்கோபத்தின் அழுத்தத்தினால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட்டு இயல்பற்ற சக்தி மற்றும் இரத்த ஓட்டத்திற்கு வழிகாட்டுகிறது. இச்செயல்பாடு இரத்தத் தொகுப்பில் இடையூறு ஏற்படுத்தி முடிவில் மாதவிடாய் சுழற்ச்சியிலும், இரத்தப் போக்கின் அளவிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. கல்லீரல் சக்தியின் தேக்கம் தடைபட்ட இரத்த ஓட்டத்திற்குக் காரணமாகிறது. சிரமமான போக்கை உண்டாக்குகிறது. மார்பு சார்ந்த வயிற்றுப்பகுதியிலும் மார்பகப் பகுதிகளிலும் உப்பிசத்தையும், அடிவயிற்றுப் பகுதிகளில் உப்பிசத்துடன் கூடிய வலியையும் ஏற்படுத்துகிறது. அடிக்கடி பெருமூச்சு விடுவதால் தேக்கமடைந்த சக்தியை சற்று விடுவிக்கலாம். கல்லீரல் சக்தி தேக்கத்தின் ஒரு குறிப்பிடப்படும் படியான அடையாளமாக தந்தி வீணை போன்ற விரைப்பான நாடி காணப்படுகிறது.

சிறுநீரக குறைபாடு குறிகளின் முக்கிய வெளிப்பாடுகள்

மாறுபட்ட மாதவிடாய்ச் சுற்றில், குறைந்த அளவிலான, இளஞ்சிவப்பு நிற இரத்தப் போக்கு, கிறுகிறுப்பு, செவியிரைச்சல், அடிமுதுகு மற்றும் முழங்கால் மூட்டுக்களில் வலி, பலவீனம் காணப்படும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்,தளர்ந்த மலம், வெளுத்த மெல்லிய படிவத்துடன் கூடிய நாக்கு, ஆழமான பலவீமான நாடி ஆகிய குறிகள் காணப்படுகின்றன.
குறிகளைப் பகுத்தாய்தல்

சிறுநீரக சக்தியில் பற்றாக்குறை ஏற்படும் பொழுது, பாதிக்கப்பட்ட செயல்பாடுகளுடைய இனவிருத்தி மற்றும் சோங் சக்தி ஓட்டப்பாதைகள் மாதவிடாய்ப் போக்கில் ஒழுங்கற்ற நிலையை உண்டாக்குகிறது. மேலும் இரத்தத் தொகுப்பின் கட்டுமானத்தில் (உருவாக்கத்தில்) வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இச்செயல்பாடுகள் மாதவிடாய் சுற்றில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பற்றாக்குறைவான சிறுநீரக சக்தி, சாரத்தையும் இரத்தத்தையும் படிப்படியாக குறைத்து விடுவதால் அது குறைவான, அடர்த்தியற்ற இளஞ்சிவப்பு நிற மாதப்போக்கிற்கு அடிகோல்கிறது. சிறுநீரகம் எலும்புகளில் செயல்பாட்டை காட்டுகிறது. மஜ்ஜையை உருவாக்குகிறது. சிறுநீரக சக்தி ஓட்டப்பாதை காதில் திறக்கிறது. மேலும் இடுப்பு வழியாக பயனிக்கிறது. அதனால் சிறுநீரகத்தின் குறைபாடுடைய நிலை - மஜ்ஜை உற்பத்தியில் பின்னடைவை ஏற்படுத்துகிறது, செவித்திறனைக் குறைக்கிறது. மற்றும் செவியிரைச்சல் உண்டாகிறது. இடுப்புப் பகுதியில் ஊட்டசக்தி குறைவுபடுவதால் அடிமுதுகிலும் முழங்கால் மூட்டிலும் பலவீனம் மற்றும் புண் போன்ற வலியை உண்டாக்குகிறது. சிறுநீரைக் கட்டுப்படுத்த தவறுவதால் அடிக்கடி சிறுநீர் வெளிப்படுகிறது, மேலும் மலக்குடலிருந்து மலம் வெளித்தள்ளப் படுவதால் தளர்ந்த மலம் அடிக்கடி வெளிப்படு கிறது. வெளுத்த மெல்லிய படிவத்துடன் கூடிய நாக்கு மற்றும் பலவீனமான ஆழமான நாடி, சிறுநீரகத்தில் ‘யாங்’ தன்மை குறைபாட்டைக் காட்டுகிறது

உடம்பை குறைக்க இயற்கைவழிமுறைகள்

ற்கை Image result for உடல் எடை குறைய எளிய உடற்பயிற்சிகள்
உடம்பை குறைக்க இயற்கைவழிமுறைகள்
சோம்பு தண்ணீர்
அமுக்கிரா வேர்
சுரைக்காய்
பப்பாளி காய்
எலுமிச்சை சாறு
வெங்காயம், பூண்டு
அருகம்புல் ஜூஸ்
மந்தாரை வேர்
வாழைத்தண்டு ஜூஸ்
நடைப்பயிற்சி
கொள்ளு தேனீர்
கல்யாண முருங்கை

சோம்பு தண்ணீர்
தாகமாக இருக்கும் போது சாதாரண தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, சோம்பு கலந்த நீரைக் குடித்து வந்தால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, அழகிய உடல் வடிவத்தைப் பெறலாம்.

அமுக்கிரா வேர்
மற்றும் சோம்பு தினமும் ஒரு டம்ளர் அமுக்கிரா வேர் மற்றும் சோம்பு சேர்த்து காய்ச்சிய பாலைக் குடித்து வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

சுரைக்காய்
வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்பைக் கரைப்பதில் சுரைக்காய் பெரும்பங்கு வகிக்கிறது. எனவே வாரம் ஒருமுறை சுரைக்காயை உட்கொண்டு உட்கொண்டு வாருங்கள்.

பப்பாளி காய்
பப்பாளிக் காயை அவ்வப்போது சமைத்து சாப்பிட்டு வந்தாலும், உடல் எடை குறையும்.

எலுமிச்சை சாறு
தினமும் டீ குடிக்கும் போது, அதில் பாலிற்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வந்தால், விரைவில் உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.

வெங்காயம், பூண்டு
கட்டாயம் சமையலில் வெங்காயம், தக்காளி போன்றவை இருக்கும். ஆனால் இவற்றை உணவில் சற்று அதிகமாக சேர்க்கும் போது, அதனால் உடல் எடை குறையும்.

அருகம்புல் ஜூஸ்
அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மந்தாரை வேர்
மந்தாரை வேரை 1 கப் நீரில் போட்டு காய்ச்சி, நீர் பாதியாக குறைந்ததும், வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை பாதியாக குறையும்.

வாழைத்தண்டு ஜூஸ்
வாழைத்தண்டு ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவது தடுக்கப்படுவதோடு, கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையும் குறையும்.

நடைப்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும். அதிலும் நடைப்பயிற்சி ஒன்றை மேற்கொண்டாலே உடல் எடை குறைவதை உணர முடியும்.

கொள்ளு தேனீர்
கொள்ளை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். 2 துண்டுகள் கொடம்புளியை ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் கொள்ளுபொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி குடித்துவந்தால் உடல் எடை குறையும். இதை குடிக்கும்போது அசிடிட்டி பிரச்னை வரலாம். இதனை தவிர்க்க சாப்பாட்டுக்கு பின்னர் மோர் குடிக்கலாம்.

கல்யாண முருங்கை
கல்யாண முருங்கை இலையை பயன்படுத்தி உடல் எடையை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 4 கல்யாண முருங்கை இலைகளை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் 10 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். வடிக்கட்டி காலையில் வெறும் வயிற்றில் 100 மில்லி அளவுக்கு குடித்துவர தேவையற்ற கொழுப்பு கரைந்து வெளியேறும். அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும்Friday, November 11, 2016

வாய்வு கோளாறு ..அடிக்கடி ஆசன வாயில் இருந்து காற்று பிரிதல்
புளி ஏப்பம் வாயிற்று வலி நெஞ்செரிச்சல் சரியாக
வெங்காய சாறு ......... நான்கு தேக்கரண்டி
தோல் நீக்கிய இஞ்சி சாறு ....... ......... நான்கு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு ....... ......... நான்கு தேக்கரண்டி
வாணலியில் அனைத்து சாறுகளையும் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்


கடுகு .............. பத்து கிராம்
மிளகு .............. பத்து கிராம்
பெருங்காயம் .............. பத்து கிராம்
மஞ்சள் தூள் .............. பத்து கிராம்
ஓமம் .............. பத்து கிராம்
இந்துப்பு .............. பத்து கிராம்

ஆகிய பொருட்களை அரைத்துத் தூளாக்கி சிறிது சிறிதாக கொதிக்கும் சாற்றில் தூவி கிளறவும்
லேகியப் பதம் வந்தவுடன் இறக்கி

பனை வெல்லம் . தேவையான அளவு சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் காய வைத்து எடுக்கவும்
தினமும் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து ஓரிரு உருண்டைகள் மென்று தின்று வர மேற்கூறிய நோய்கள் குணமாகும்⁠⁠⁠⁠