Saturday, May 29, 2021

பொடுகு தொல்லை இனி இல்லை.:


பொடுகு தொல்லை இனி இல்லை.:

பொடுகு தொல்லை பலருக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. தலையின் சருமம் வறண்டு போகவோ, எண்ணெய் வடியவோ விடுவதால் தலைமுடிகள் வறண்டு போவதோடு, பொடுகு வரவும் வாய்ப்புண்டு. குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே.

பொடுகு வருவதற்கான முக்கிய காரணங்கள்.:
ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.

தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹhர்மோன் கோளாறுகள் போன்றவை பொடுகு வருவதற்கான காரணங்கள்.

பொடுகு எதனால் ஏற்படுகிறது.:
பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். 

தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது.

பொடுகு தொல்லைக்கு நீங்கள் என்ன செய்யலாம்.:
👉 பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். 

👉 கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

👉 தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். 

👉 சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

👉 பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

👉 தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.

👉 வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணைய் தேய்த்து குளிக்கவும்.

👉 பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வராது.

👉 வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உஷ்ணமும் குறையும்.

👉 வேப்பிலை சாறும், துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.

No comments:

Post a Comment