Thursday, January 28, 2016

குதிகால் வலி ஆயுர்வேத சிகிச்சை

குதிகால் வலிக்கான ஆயுர்வேத சிகிச்சை

குதிகால் வலியால், குறைந்தது 10 மில்லியன் ஜனங்கள் அவதிப்படுகின்றனர். ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸ் நோயாளிகளில் 80% குதிகால் வலியால் பாதிக்கப்படுகின்றனர். ரூமாடாய்ட் ஆர்த்தரைடீஸ் நோயாளிகளை குறைந்த அளவில் குதிகால் வலியால் பாதிக்கப்படுகின்றனர். குதிகால் வலி 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் இருந்தாலும் 8 லிருந்து 13 வயது சிறுவர்களையும் பாதிக்கும். குதிகால் எலும்பு (Calcareus) பாதத்தில் உள்ள எலும்புகளில் பெரியது. நடக்கும் போது உடல் எடையை தாங்கும் வளைவான அமைப்பு (Arch) நாம் தடுமாறாமல் இருக்க உதவுகின்றன. குதிகால் வலி பாத திசுக்கள் (Plantar fascia) மற்றும் பாத வளைவை தாங்கும், காலின் நான்கு விரல்களை வளைந்து நிமிர செய்யும் தசையை தாக்கும்.
இந்த அழற்சியை உண்டாக்குபவை • ரூமடாய்ட் ஆர்த்தரைடீஸ் • ஆங்கிலோஸிஸ் ஸ்பான்டிலைட்டீஸ் • கவுட் • சோரியாடிக் ஆர்த்தரைடீஸ் • பாலியல் வியாதிகள் • காச நோய் முதலியன.

குதிகால் வலி காரணங்கள் • கரடு முரடான பாதையில் நடப்பது. High heels எனப்படும் குதிகால் மேலே தூக்கியிருக்கும் படி செய்யப்பட்ட காலணிகள், அதிகமாக நடப்பது. • குளிர் பாதிப்பு, தண்ணீரில் அலைதல் • அதிக எடையை தூக்குதல் • வாதத்தை ஏற்றும் உணவுகள்.

குதிகால் வலி அறிகுறிகள் • நடப்பது கஷ்டமாகும். இரவில் ஏற்படும் வலி அல்லது ஒய்வில் இருக்கும் போது உண்டாகும் குதிகால் வலி. • வலி பல நாட்கள் நீடிப்பது. • குதிகால் கருமை அடைதல், வீக்கம் • ஜுரம்.

குதிகால் வலி ஆயுர்வேத சிகிச்சை 


1. ஸ்நேஹனா – உராய்வை குறைக்கும் ‘வழவழப்பு’ எண்ணைகளால் ‘அப்யங்கம்’ மசாஜ் செய்வது.
2. ஸ்வேதனா – ஒத்தடம் கொடுப்பது.
3. லேபம் – களிம்புகளை தடவுதல்
4. சோதனா – உடலின் கழிவுப்பொருட்களை வெளியேற்றுதல். ஸ்வேத முறையினால் ஏற்படும் பலன்கள் • வாத தோஷம் சீரடைகிறது • “விறைப்பு” குறைகிறது. • தசைகள் இறுக்கம் குறைந்து ‘ரிலாக்ஸ்’ ஆகின்றன. • இரத்த ஓட்டம் மேம்படுகிறது. • ஸ்வேதத்தின் போது மசாஜ் செய்தால் டென்ஷன், வலி குறையும். உள்ளுக்கு, ருமடாய்ட் ஆர்த்தரைடீஸால் ஏற்பட்ட குதிகால் வலிக்கு, சிம்ஹாநாத குக்குலு கொடுக்கப்படும். ஆஸ்டியோ – ஆர்த்தரைடீஸால் வரும் குதிகால் வலிக்கு ‘நிர்குண்டி தைலம்’ நல்ல பலனளிக்கும்.

வாத நோய்கள் உள்ளவர்களுக்கு ஏற்படும் குதிகால்வலி ஒரு அறிகுறியே ஆகும். ஆயுர்வேத சிகிச்சை, இந்த வாதநோய்களையும் கருத்தில் கொண்டு, முழுமையாக தரப்படும். தவிர எஸ்ட்ரோஜன் குறைவு, அதனால் ஏற்படும் கால்சியம் கிரகிக்கபடாத நிலை போன்றவற்றுக்கு நெல்லி, சதவாரி, சல்லாக்கி, மஞ்சள், சுக்கு போன்ற மருந்துகள் தரப்படும். குளிர் ஒத்தட பயன்கள் • வீக்கம், சுழற்சி குறையும் • தசைகள் மரத்துப் போவதால் வலி குறையும் • தசை கசிவுகளை குறைக்கும்

சூடு ஒத்தட பயன்கள் • வலி குறையும் • பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிக ரத்தம் பாயும். • தசைகள் தளரும். யோகாசனங்கள் பலனளிக்கும் – பிராணாயமம் சேர்த்து குதிகால் வலி ஆசனங்களை முறையாக கற்றுக் கொண்டு செய்யவும். குதிகால் வலி, பாதத்தில் வளரும் ‘முளை’ போன்ற எலும்பினாலும் (Squr) ஏற்படும். இதற்கும் யோகாசனங்கள் பலன் தரும்

Wednesday, January 27, 2016

சர்க்கரை நோயை இனி கட்டுக்குள் வைக்கலாம் : 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்

சர்க்கரை நோயை இனி கட்டுக்குள் வைக்கலாம் : 5 ரூபாயில் புதிய ஆயுர்வேத மூலிகை மாத்திரை அறிமுகம்.

புதுடெல்லி, அக்.26-

சத்தமே இல்லாமல் உயிருக்கு ‘உலைவைக்கும்’ சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடிய மலிவுவிலை ஆயுர்வேத மாத்திரை நேற்று அறிமுகம் செய்விக்கப்பட்டது.

'BGR-34' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மாத்திரை நான்குவகை அரியமூலிகைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ‘டைப் டூ’ என்றழைக்கப்படும் அதிதீவிரத்தன்மை கொண்ட நீரிழிவால் பாதிக்கப்பட்ட உயிரினங்களிடம் ஆரம்பகட்டத்தில் இந்த மாத்திரையைகொண்டு நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் 67 சதவீதம் வெற்றிகரமான விளைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமன்படுத்தியும், அதிகமாக சுரக்கும் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தியும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு பின்விளைவுகளை இந்த 'BGR-34' மாத்திரை பெருமளவில் தடுப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரியால் அறிமுகம் செய்விக்கப்பட்ட இந்த மாத்திரை நேற்று வர்த்தகரீதியாக விற்பனைக்காக வெளியிடப்பட்டது. 100 மாத்திரைகளின் விலை 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள, பக்கவிளைவுகள் ஏதும் இல்லாத இந்த 'BGR-34' இன்னும் 15 நாட்களில் நாட்டிலுள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

Saturday, January 23, 2016

தொண்டை வலிகள்

எந்த நோயானாலும் உடனடியாகக் குணமாக வேண்டும். அதற்கு பணத்தைக் கொடுத்தால் எதையும் செய்துவிட முடியும் என்பதும், எந்த நோயானாலும் ஆண்டிபயோடிக் மருந்துகளை போட்டால் உடனே குணமாகும் என்பதும் சிலரது திடமான நம்பிக்கைகள்.

அந்த எண்ணங்கள் இரண்டும் தவறானவை என்பதை அவர்களது அனுபவங்கள் சொல்லிக் கொடுத்து விடும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.


நல்ல காய்ச்சலோடு நடுங்காத குறையாக, சாப்பாடு விழுங்க முடியாத அளவு தொண்டை வலி.இரண்டு நாட்களாக உப்புத் தண்ணிரால் வாயைக் கொப்பளித்தும். குணமாகவில்லை என்றால் அவசியம் மருத்துவரை அணுகவும்

தொண்டை வலிகள்

தொண்டை வலிகள் அடிக்கடி ஏற்படுபவை என்றாலும், வலியானது பொதுவாக அடித் தொண்டையில் வேதனையைக் கொடுக்கும்.


இந்த தொண்டை வலி கடுமையாக இருப்பது. ஒரு பக்கம் மட்டும் வலிப்பது, சுரண்டுவது, அரிப்பது, எரிவது, எச்சில் விழுங்குவதில் சிரமம் எனப் பல வேறுபாடுகள் உண்டு.

ஆனால் பெரும்பாலான தொண்டை வலிகள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. மருந்துகள் சாப்பிடாமலேயே மாறக் கூடியவை.


தொண்டை வலி என்பது ஒரு நோயல்ல. அது ஒரு அறிகுறி மாத்திரமே. பல்வேறு நோய்களில் இதுவும் ஒரு அறிகுறியாக வெளிப்படும். சில தருணங்களில் காது வலியும் சேர்ந்து வருவதுண்டு.

தொற்று நோய்கள்

முக்கிய காரணம் சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். பெரும்பாலான காய்ச்சல்கள் தொண்டை வலியுடன், மெல்லிய தொண்டை தடிமன், உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் வரும். சிலருக்கு இருமல் தொடரும். சில தருணங்களில் இதுபோன்ற தருணங்களில் மலம் இளக்கமாகப் போவதும் உண்டு. இதற்கு மருந்துகள் தேவைப்படாது. தானாகவே குணமாகிவிடும்.

குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டைக் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்றவற்றோடு தொண்டை வலியும் சேர்ந்து வரலாம்.

மொனோநியுகிளியோசிஸ் என்பது வழமையான வைரஸ் காய்ச்சல் போன்றதுதான். தொண்டை வலியுடன் டான்சில் வீங்கியிருக்கும். இத்துடன் காய்ச்சல், களைப்பு, சோர்வு, இயலாமை, தலையிடி போன்ற அறிகுறிகள் முக்கியமாக இருக்கும். அத்துடன் கழுத்தில் நெறிக்கட்டிகள் இருக்கும். நோய் தணிய ஒரிரு வாரங்கள் செல்லும். நெறிக்கட்டிகள் மறைய மேலும் ஒரிரு வாரங்கள் செல்லும்.

மேற்கூறிய அனைத்தும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுபவை. இதற்க்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் உதவாது. ஓய்வு எடுத்தல், உப்பு நீரால் வாய் கொப்பளித்தல் போன்றவை உதவும்.

பாக்டீரியா தொற்று நோய்கள்

இதில் முக்கியமானது ஸ்ரெப்ரோகோகஸ் கிருமியால் ஏற்படும் தொண்டை வலியாகும். காய்ச்சல் இருந்தபோதும் தொண்டை தடிமன் சளி மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் இருப்பதில்லை. ரூமாடிக் இருதய நோய் வருவதற்குக் காரணம் இதுதான்.

தொண்டை வலியுடன் வரும் பாக்டீரியா தொற்றில் டான்சில் வீக்கம்,
epiglottitis, uvulitis இவற்றுடன் பாலியல் தொற்று  நோய்களான கொனரியா, கிளாமிடியா போன்றவையும் அடங்கும்.

கிருமித் தொற்று அல்லாத தொண்டை வலிகள்

வாழ்க்கைச் சூழலிலிருந்து தொண்டையை உறுத்தும் பொருட்களாலும் சாதாரண தொண்டை வலிகள் ஏற்படுகின்றன. வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைவான நேரங்களில் தொண்டை வலி பொதுவாக ஏற்படுகிறது. புகைத்தல், சூழலில் தூசி அதிகரித்து மாசுறுதல் போன்றவையும் காரணமாகலாம்.

இதைத் தவிர தொண்டைக்குள் நாசி நீர் இறங்கல் (Postnasal drip) மற்றொரு காரணமாகும். பொதுவாக எந்நேரமும் எமது நாசியில் நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது. நாம் இதை உணர்வதில்லை. தொண்டை தடிமன் போன்ற நோய்கள் ஏற்படும்போது மூக்கால் நீராக ஓடும்போதே நாம் அதனை உணர்கிறோம். அத்தருணங்களில் மூக்கிலிருந்து அதிகளவு நீர் சுரந்து தொண்டைக்குள் இறங்கும்போது சில தருணங்களில் தொண்டைவலியும் ஏற்படுவதுண்டு.

பலர் மூக்கிற்கு பதிலாக வாயால் மூச்சு எடுத்துவிடும் நிலமை ஏற்படுகிறது. ஓவ்வாமைகளால் மூக்கு அடைப்பு ஏற்படுவது, குறட்டை விடுவது போன்றவற்றால் இது நேரலாம். இதுவும் தொண்டைவலியை ஏற்படுத்துவதுண்டு.

இரைப்பையில் இருக்கும் அமிலம் மேலெழுந்து வருவது தொண்டைவலிக்கான மற்றொரு முக்கிய காரணமாகும்.
நமது இரைப்பையில் அமிலம் பொதுவாகச் சுரக்கிறது. இது இரைப்பையிற்குள் மட்டுமே இருந்து உணவுச் செரிமானத்துடன் சேர்ந்து சிறு குடலுக்குள் செல்ல வேண்டியது. மாறாக, மேலெழுந்து நெஞ்சறைக்குள் இருக்கும் களத்திற்குள் வந்தால் அது புண்ணாகலாம்.

இதை மருத்துவத்தில் gastro esophageal reflux என்பர். நெஞ்செரிப்பு, உணவு மேலெழுந்து வரல், புளித்த ஏப்பங்கள், வாயில் அமிலச் சுவை போன்ற பல அறிகுறிகள் இருக்கலாம். சிலருக்கு இதனால் இருமலும், ஆஸ்த்மாவும் ஏற்படுவதும் உண்டு.

சில தருணங்களில் அத்தகைய அறிகுறிகள் ஏதும் இன்றி தொண்டைவலி மட்டும் தோன்றவும் கூடும்.

ஆண்டிபயோடிக் மருந்துகள் தேவையா?

இக் காரணங்கள் அனைத்தையும் சேர்த்து நோக்கும் போது தொண்டை வலியானது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது தெரிகிறது. கிருமித் தொற்று அல்லாத காரணங்கள் பலவும் இருக்கின்றன. எனவே அவசரப்பட்டு ஆண்டிபயோடிக் மருந்து போடுவது அவசியமற்றது.

அவசியமற்றது மட்டுமல்ல, ஆபத்தானது எனவும் கூறலாம்.

ஏனெனில் அவற்றால் ஒவ்வாமை எதிர்வினைகள் (Allergy) ஏற்படலாம். ஒரு முறை ஒவ்வாமை ஏற்பட்டால் மீண்டும் அந்த மருந்தை அவர் உபயோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

அத்துடன் ஆண்டிபயோடிக் மருந்துகளால் பல பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு. ஓங்காளம், வயிற்றுப் புரட்டு, பசியின்மை, வாந்தி, வயிற்றோட்டம், தோல் அழற்சி எனப் பல வகையானவை. அத்துடன் பங்கஸ் கிருமிகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

முக்கிய பாதிப்பு ஆண்டிபயோடிக்கிற்கு எதிரான ஆற்றலை பெற்று கிருமிகள் (Antibiotic resistance) பெருகுவதாகும். அடிக்கடியும் தேவையற்ற விதத்திலும் இவற்றை உபயோகிக்கும் போது நோய்க் கிருமிகள் அவற்றை எதிர்த்து வளரும் ஆற்றலைப் பெறுகின்றன. இதனால் அடுத்த முறை அதைவிட வீரியமான ஆண்டிபயோடிக் மருந்துகளை உபயோகிக்க நேர்கிறது.

முன்பு வழக்கமாக உபயோகிக்கப்பட்ட பல மருந்துகள் வீரியமிழந்து இப்பொழுது செயல்படாமல் போய்விட்டன.

"புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றவே" என நீங்கள் கேட்கலாம். உண்மையில் புதிய ஆண்டிபயோடிக் மருந்துகளைக் கண்டுபிடிப்பது மிகக் குறைவாகவே இருக்கின்றன. இதனால் கடுமையான கிருமிகளுக்கு எதிரான மருந்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. Methicillin-resistant Staphylococcus aureus (MRSA) போன்ற மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் மருத்துவத்திற்கு உலகளாவிய ரீதியில் பெரும் சவாலாக மாறியுள்ளன.

எனவே அவசியமற்று ஆண்டிபயோடிக் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. இன்று பலர் தொண்டைவலி, காய்ச்சல் என்றவுடன் அமொக்சசிலின் (Amoxicillin) போன்ற மருந்துகளை மிட்டாய் சாப்பிடுவது போல முழங்கித் தள்ளுகிறார்கள். இதன் ஆபத்து பின் வரும் கால ஓட்டத்தில் தான் புரியும்.

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

• உடலுக்கும் தொண்டைக்கும் சற்று ஆறுதல் கொடுங்கள்.
• உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது நல்லது.
• சூடான நீராகாரங்களைப் பருகுவது நல்லது.
• நீராவி பிடிப்பதில் பலர் சுகம் காண்கிறார்கள்.

எத்தகைய நிலையில் மருத்துவரைக் காண்பது அவசியம்

• தொண்டை வலியுடன் வீக்கமும் ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியம்.
• தொண்டை வலியுடன் நாக்கு உதடுகளில் வீக்கம் ஏற்பட்டால்
• நீராகாரங்களை அருந்துவதும், மருந்துகளை விழுங்குவதும் கூட சிரமமான நிலையில் தவறாது அணுக வேண்டும்.
• நாக்கு வரண்டு தாகம் அதிகரித்து நீர் இழப்பு நிலை ஏற்படுதல், தலை நிமிர்த்த முடியாதபடி மயக்கம் போல வருதல்.
• தொண்டை வலியுடன் கழுத்தில் நெறிக்கட்டிகள் தெரிந்தால்.
• கடுமையான காய்ச்சலுடன் திடீரென தொண்டை வலி ஏற்பட்டால்.
• அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற 
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்

Wednesday, January 20, 2016

வயிற்றுப் போக்கு, இரத்த மூலத்தை குணப்படுத்தும் அல்லி

வயிற்றுப் போக்கு, இரத்த மூலத்தை குணப்படுத்தும் அல்லி

தாவரவியல் பெயர்: Nymphae nouchali Burmf 

நீரில் மிதக்கும் அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி. மலர்கள் நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும். வெண்ணிற மலர்களையுடையது வெள்ளை அல்லி எனவும், செந்நிற மலர்களையுடையது செவ்வல்லி, அரக்காம்பல் எனவும், நீல மலர்களையுடையது கருநெய்தல் (நீலோற்பலம்), குவளையெனவும் வழங்கப் பெறும். இலை, பூ, விதை, கிழங்கு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. கிழங்கு குளிர்ச்சி தரும். பூ தாது வெப்பகற்றும், இரத்தக் கசிவைத் தடுக்கும். 

1. இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர எளிதில் ஆறும். 

2. 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து காலையில் வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை, மாலை குடித்துவர சிறு நீரில் இரத்தம் சீழ் வருதல், நீர்ப்பாதைப் புண், சிறு மிகுதியாகக் கழிதல, தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும். 

3. அல்லிக் கிழங்கை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட குடல்புண், வயிற்றுப் போக்கு, மூலம் ஆகியவை குணமாகும். கருவுற்றிருக்கும்போது மாதவிலக்குக் கண்டால் இதனைப் பயன்படுத்தக் குணமாகும். 

4. கருநெய்தல் பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக காய்ச்சி வடிகட்டியத்தில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தென் பதமாகக் காய்ச்சி காலை, மாலை 15 மி.லி.யாகச் சாப்பிட மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும், இதயப்படபடப்பைத் தணிக்கும். 

5. கருநெய்தல் மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தீரும்.

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் எளிய பாட்டி வைத்தியம்

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் எளிய பாட்டி வைத்தியம்

வெள்ளைத் தோலின் மீதுள்ள மோகத்தால், பலரும் தங்களின் சருமத்தையும் வெள்ளையாக்க முயற்சிப்பார்கள். குறிப்பாக சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். நீங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முயற்சிக்கிறீர்களா? அப்படியெனில் சில எளிய பாட்டி வைத்தியங்களைப் பின்பற்றி வாருங்கள். இதனால் நிச்சயம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். 

* சிறிது பாதாமை காலையில் நீரில் ஊற வைத்து, இரவில் அதன் தோலை நீக்கிவிட்டு, 2 டீஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, படுக்கும் முன் முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். 

* தினமும் கடலை மாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். 

* 2 டீஸ்பூன் அரிசி மாவில், சிறிது குளிர்ந்த டீ டிகாசனை சேர்த்து, 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை ஃபேஸ் பேக் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம். 

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சிறிது கடலை மாவுடன், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.

கடலை எண்ணையை பயன் படுத்துவோம் .....!உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறத. இவ்விரு நாடுகளின்
மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்...

இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக
இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே அமெரிக்கா இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.
கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின்

உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதியும் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண் களுக்கு பெரிதும் தேவையான போலிக்அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் மற்றும் போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம்.
அது தவறு.

நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

நாகரீகம் பகுத்தறிவு என்ற பெயரில் படிக்காதவர்களை விட படித்தவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்பதை பிற நாடுகள் இன்றும் நம்மிடம் நிரூபித்துகொண்டிருகிறது.
வேறு உதாரணம் - மேகி நூடுல்ஸ், குளிர் பானங்கள் மற்றும் பல......

நீரிழிவு நோயை குணப்படுத்தும் நெல்லிக்காய் சாறு ...!
நமக்கு எளிதாக கிடைக்கும் விலை மலிவான நெல்லிக்காயில் வைட்டமின் சி அளவுக்கதிகமாக நிறைந்துள்ளது. நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது.

இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால் அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும்.

* நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது.

* நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது படிப்படியாக குறையும்.

* நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகிவிடும்.

* நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

* நல்ல புதிய நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும்.

* கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் சாறு மிகவும் சிறந்ததாக இருக்கும்.

* முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
FB.com Ganesan Pondicherry

இஞ்சி சமையலறை மருத்துவர் ..1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

Ganesan Pondicherry

கல்லீரல் -சிறுநீரகத்துக்கு பலம் தரும் பூசணிக்காய்
பூசணிக்காய் ஒரு உணவுக்காகும் காய் என்பதை மட்டுமே நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் அதை நம் முன்னோர் கண்ணேறு (திருஷ்டி) கழிப்பதற்கெனவும் மருத்துவத்துக் கெனவும் பல்லாயிரம் ஆண்டுகளாகவே பயன்படுத்தி வந்துள்ளனர்.

பூசணி கொடி இனத்தைச் சார்ந்தது ஆகும். இதன் இலைகள் பெரிதாகவும் ஐந்து பிளவுகளையும் ஓரத்தில் பெற்றுள்ளது. காய்கள் மிகவும் பெரிதாகவும் உருண்ட வடிவாயும் இருக்கும். காயில் மேலும் கீழம் சற்று குழிவான அமைப்பைப் பெற்றிருக்கும். பூசணியில் இருவகை உண்டு. ஒன்று சர்க்கரை பூசணி, இன்னொன்று வெண் பூசணி. வெண் பூசணி, சர்க்கரைப் பூசணி என இரண்டுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

வெண் பூசணியின் முற்றிய காய்கள் தலைவலியைப் போக்கவும், நெஞ்சகச் சளியை நீக்கவும், மூச்சிறைப்பைப் போக்கவும், சிறுநீரக கோளாறுகளுக்கும் குறிப்பாக சிறுநீரை பெருக்கி வெளித்தள்ளவும், வயிற்றில் சேர்ந்து துன்பம் செய்யும் நாடாப் புழுக்களை வெளியேற்றும் புழுக் கொல்லியாகவும், உலர்ந்த பூசணிக்காயின் பொடி சளியுடன் ரத்தம் சேர்த்து துப்புகின்ற நோய்தனை குணமாக்கவும் வெண் பூசணியின் விதையில் இருந்து கிளைசனாட்ஸ், ``ஸ்டெரால் எஸ்ட்டர்ஸ்'' ``பாஸ்பாட்டிடைல் கோலின்'' ஆகிய கொழுப்புச் சத்தான மருத்துவவேதிப் பொருட்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன.

மேலும் வெண் பூசணியின் விரையினின்று பிரிக்கப்பெறும் குடல் நோய்கள் குறிப்பாக குடற்புண்களை ஆற்றும் தன்மையுடையதாக மருத்துவ ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. சீன மருத்துவத்தில் வெண் பூசணியின் பூவை மஞ்சள் காமாலை, சீதபேதி, இருமல் ஆகிய நோய்களை போக்கவும் வேர்ப்பகுதியை மஞ்சள் காமாலை, சிறுநீர்ப்பாதை எரிச்சல், சீதபேதி ஆகியவற்றைக் குணப்படுத்தவும் வெண்பூசணியின் தண்டுப் பகுதியை முறையற்ற மாதவிலக்கை சீர்செய்யவும், தோலில் மேற்புறத் தழும்புகளை குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர்.
வெண்பூசணியை ஆயுர்வேதத்தில் ``கூஷ்மாண்டம்'' என்கிற பெயரால் குறிப்பிடுவர். வெண்பூசணி சூட்டைத் தணிக்கும் என்றும் அதிகமாக உட்கொள்வதால் வாதச்குடைச்சல், ஐயப்பெருக்கு, மாந்தம் இவை உண்டாகும்

www.facebook.com/NaattuMarunthu/

Saturday, January 16, 2016

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை: நாட்டு வைத்தியம்!

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை: நாட்டு வைத்தியம்!

#கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.

#மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள். பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.

#மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.

அழகான நீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய் !!!

அழகான நீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய் !!!

அழகான நீண்ட கூந்தலுக்கு இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும்.


தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர் 
நெல்லிக்காய் காய்ந்த பொடி - 10 கிராம்!
தான்றிக்காய் பொடி - 10 கிராம்
வேப்பிலைப் பொடி - 10 கிராம்
கறிவேப்பிலைப் பொடி - 10 கிராம்
மருதாணிப் பொடி - 10 கிராம்
கரிசலாங்கண்ணிப் பொடி - 10 கிராம்
செம்பருத்திப் பூ காய்ந்த பொடி - 10 கிராம்
வெட்டி வேர் - 10 கிராம்
ரோஜா இதழ் - 10 கிராம்
சந்தனப் பொடி - 10 கிராம்

இந்த பொடிகளை ஒன்றாகச் சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்சி, பின்பு சூரிய ஒளியில் 5 நாட்கள் வைத்து பின்பு வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகித்து வந்தால், கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு போன்றவை நீங்கும். புழுவெட்டு நீங்கும். உடல் சூடு தணிந்து, பித்த நரை மாறும்

மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை!


மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை!

கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி 1 நாளைக்கு ரெண்டு வேளைன்னு 10 நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வா.. மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும். அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வா.. அப்புறம் மூலம் உன் பக்கமே திருப்பிப்பாக்காம ஓடிப்போயிடும்.

-பாட்டி வைத்தியம்

உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்களும், அதனை விரட்டும் வழிகளும்

உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்களும், அதனை விரட்டும் வழிகளும்

உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள் 

உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதற்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension) என்று பெயர். இதில் பரம்பரை மரபு அணுகோளாறும் அடங்கும். மற்ற காரணங்களால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension) என்று பெயர்.நம் உடலில் உள்ள சின்னச் சின்ன குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அது பெரிய ஆபத்துகளை உருவாக்குகிறது. அந்த வகையில் மிகவும் ஆபத்தானது ரத்த அழுத்தம். சாதாரண விஷயம் போல தோன்றினாலும் இதை கட்டுக்குள் வைக்காவிட்டால் இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் என முக்கிய உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார் மருத்துவ நிபுணர் குமரன் அப்புசாமி. ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் 40 வயதுக்கு மேல்தான் வரும் என்று சொன்னது அந்தக் காலம். இப்போது 25 வயதிலேயே ஹார்ட் அட்டாக் பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இதற்கு அடிப்படை காரணம் ரத்த அழுத்தப் பிரச்னை.

ரத்த அழுத்தத்தை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் விடும்போது இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய் சுருங்கி மாரடைப்பு உண்டாகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் சுருங்கி மூளைக்கு போகும் ரத்தம் குறைந்தால் பக்கவாதம் ஏற்படுகிறது. மேலும் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் வெடித்து மரணம் ஏற்படும் ஆபத்தும் உள்ளது. ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக உயர்வது, குறைவது இரண்டுமே பிரச்னைதான். வழக்கமாக மாரடைப்புக்கு பிறகு இதயம் ரத்தத்தை பம்பிங் செய்வது குறையும். அப்போது ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. இதயம் வீங்கும் பட்சத்திலும் குறைந்த ரத்த அழுத்தம் வரலாம்.

குறைந்த ரத்த அழுத்தத்தால் அடிக்கடி மயக்கம் ஏற்படலாம். அட்ரீனல் சுரப்பி எனப்படும் ஹார்மோன் சுரப்பியில் டியூமர் வரலாம். இதனாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இயல்பாகவே அதிகளவு டென்ஷன், கோபம் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றும். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்புள்ளது.

95 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவார்களுக்கு ஹார்மோன்களின் அளவு மாறுதல், சிறுநீரகக் கோளாறுகள், இரத்தம் சிறுநீரகத்துக்குக் குறைவாகச் செல்லுதல், இருதய தமணி சுருங்குதல், கர்ப்பத்தடை மாத்திரை உட்கொள்ளுதல் வேண்டாத தீய பழக்கங்கள் (உ.ம்) புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

கவலை, பதற்றம், பயம், மன இறுக்கம் போன்றவைகளால் இரத்த அழுத்தம் கூடலாம். அதிகமாக உப்பு (Sodium salt) உட்கொள்வதால் அதிகமான உப்பு இரத்தத்தில் கலக்கிறது. இதனால் இரத்தம் அதன் அடர்த்தி நிலையைக் குறைக்க உடலில் உள்ள நீரை அதிகமாக எடுத்துக்கொண்டு சிறுநீரகம் மூலமாக அதை வெளியே தள்ள முனைகிறது. இதனால் இரத்த அழுத்தம் கூடுகிறது.

நவீன காலத்தில் டின்னில் அடைத்த உணவுகளும், திடீர் உணவுகளும் (fast food) மிகவும் சாதாரணமாகி, விட்டது. இதனால் பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு விடுகிறது. காரணம் இதில் ருசிக்காக சேர்க்கப்படும் அதிகளவு கொழுப்புப் பொருட்களும், அஜினமோட்டோ என்ற வினோதமான உப்பும்தான். இந்த உப்பு கலந்த உணவை சாப்பிடுபவர்களிடம் ஒரு தீராத விருப்பத்தை (fast food) உண்டுபண்ணிவிடும். மேலும் இதனால் நீண்ட நேரம் உணவின் சுவை கெடாமல் பாதுகாக்க முடியும். ஆனால் உடலுக்கு மிகவும் தீங்கு செய்யும்.

உடல் எடை கூடக்கூட உயர் இரத்த அழுத்தம் வரும் வாய்ப்பும் கூடுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள சுமார் 50% பேர் ஒன்று அளவுக்கு மீறி எடையுள்ளவர்களாகவோ அல்லது இரத்தத்தில் உயர் கொழுப்புத் தன்மை உடையவர்களாகவோ இருக்கின்றனர் என்று கண்டறிந்துள்ளனர்.

அடுத்ததாக, வயது ஆக ஆக இரத்த நாள தமணிகளின் சுருங்கி விரியும் தன்மை (addiction) குறைகிறது. இது 45-60 வயது காலகட்டத்தில் மிகவும் அதிகமாகி, அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் பெரும்பாலும் இரத்தத் தமணிகளின் உட்சுவரின் குறுக்களவு குறைவதால் ஏற்படுகிறது. இது ஏன் குறைகிறது. இதற்கு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள கொழுப்புப் பொருட்கள் வேதியியல் மாற்றம் அடைந்து மற்ற பல கொழுப்புப் பொருட்களுடனும், இரத்தத்தை உறையவைக்கும் பிற இரத்தப் பொருட்களுடனும் (elasticity) சேர்ந்து இரத்தத் தமணியின் உட்சுவரின் நோய்வாய்ப்பட்ட திசுக்களுக்கு இடையே மெல்ல மெல்ல படிந்து விடுகிறது.

இதற்கு ஃஈஃ கொலஸ்ட்ரால் மிகவும் உதவுகிறது. இதனால் இரத்த நாளக் குறுக்களவு குறைகிறது. இதற்கு ஆங்கிலத்தில் ‘ஆத்திரோமா’ (Atheroma) என்று பெயர். எந்த அளவுக்கு இது தமணியின் உட்சுவரில் படிகிறதோ அந்த அளவுக்கு அதன் குறுக்களவு குறைந்து இரத்த அழுத்தம் கூடுகிறது. இந்த இரத்த அழுத்தத்தால் மிக மிக சிறு தந்துகிகளின் இரத்த நாளச் சுவர்களின் குறுக்களவு குறைந்து இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் உணவுப் பொருட்களும் பிராண வாயுவும் திசுக்களுக்குச் சென்று அடைய முடியாமல் அழிய ஆரம்பித்துவிடுகிறது. இது சிறுநீரகத்தில் ஏற்பட்டால் சிறுநீரக திசுக்கள் அழிகிறது. இதுவே மூளையில் ஏற்பட்டால் மூளை செயலிழப்பு (Stroke) உண்டாகிறது. இதுவே இருதய திசுக்களில் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம்தான் எல்லா நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது.

சிறு வயதில் உடலை வருத்தி வேலை செய்யாமல் இருப்பது, அளவுக்கு அதிகமாக அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதால் உடலில் சேரும் கொழுப்பு, தவறான உணவு முறை, அடிக்கடி குளிர்பானங்களை உட்கொள்வதால் ரத்தத்தில் அதிகரிக்கும் உப்பின் அளவு, மது மற்றும் போதைப் பழக்கங்கள், அதிக உடல் எடை போன்ற காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. ரத்த அழுத்த அறிகுறி உள்ளவர்கள், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வதுடன் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

பாதுகாப்பு முறை

முதலில் உங்கள் உடல் எடை, உயரத்துக்கு ஏற்றதுதானா என்பதை சோதித்து சரி செய்யவும். தினமும் சில மணி நேரம் வாக்கிங் அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சியை கட்டாயம் செய்யவும். உணவில் நிறைய காய்கறிகள், பழ வகைகள் சேர்க்கவும். சாப்பாட்டில் உப்பு குறைவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மருத்துவரின் ஆலோசனையுடன் அதிக உடல் எடையை குறைக்கவும். புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அது ரத்தக் குழாயை சுருங்க செய்யும். உடனடியாக புகைபிடிக்கும் பழக்கத்தை விடவும். இதேபோல் மிகை ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மதுப்பழக்கத்தையும் விட வேண்டும். மதுவை விட முடியாதவர்கள் மதுவின் அளவை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும்.

ரெசிபி

ஓட்ஸ் உப்புமா: ஓட்ஸ் ஒரு கப், மோர் 20 மி.லி. அரைப்பதற்கு இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு கட்டு கொத்தமல்லி. இவற்றை எண்ணெயில் வதக்கி அரைத்து வைக்கவும். ஓட்ஸை தனியாக மிக்சியில் அரைத்து மோரில் கலந்து வைக்கவும். இத்துடன் அரைத்த கலவையை சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து தேவையான உப்பு சேர்த்து கலந்து வைத்துள்ள ஓட்ஸ் கலவையை சேர்த்து உப்புமா பதத்துக்கு கிளறி இறக்கவும். இதில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளதால் எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

முருங்கைக்காய் வடை: பத்து முருங்கைக்காய்களை வேக வைத்து, உள் பகுதி சதையை சேகரிக்கவும். கடலைப்பருப்பு இரண்டு கப் ஊற வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய் சதைப்பகுதியை அரைத்த மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சிறிதளவு, அரிசி மாவு 2 டீஸ்பூன், உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து வடைக்கு தேவையான பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். இதில் தேவையான இரும்புச் சத்து உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெஜிடபிள் மசாலா கறி: காலி பிளவர் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பீன்ஸ், கேரட் தேவையான அளவு, குடைமிளகாய் - ஒரு கப், பட்டை, கிராம்பு, சோம்பு, வரமிளகாய், கொத்தமல்லி, ஏலக்காய், சுக்கு சிறிதளவு ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்கறி வகைகளை பாதியளவு வெந்தபின் இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை, வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து வதக்கவும். மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். இதில் போதுமான அளவு நார்ச்சத்து இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு சேருவதை தடுக்கும்.

டயட்

தவறான உணவு முறை காரணமாக உடலில் சேரும் கெட்ட கொழுப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தப் பிரச்னை தோன்றுகிறது. மன உளைச்சல், டென்ஷன் மற்றும் அதிகபட்ச கோபமும் ரத்த அழுத்த பிரச்னையை உருவாக்குகிறது. நீண்ட நாள் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் ரத்த அழுத்தம் வரலாம். இதன் தொடர்ச்சியாக மாரடைப்பு, பக்கவாதம்கூட ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்னைகளை துவக்கத்திலேயே தடுக்க அதிக உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு டயட்டில் கவனம் செலுத்தவும். உடலில் நல்ல கொழுப்பு சேருவதற்கான உணவுகளை கண்டறிந்து சேர்த்துக் கொள்ளவும்.

உப்பு அதிகமாக சேர்க்கப்படும் ஊறுகாய், வத்தல், வடகம் ஆகியவற்றை தவிர்க்கவும். உணவு தயாரிப்பில் பயன்படுத்தும் எண்ணெயின் அளவை குறைக்கவும். அசைவ உணவு அடிக்கடி எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்தவும். எண்ணெயில் பொறித்த உணவுகளையும் தவிர்ப்பது அவசியம். பால் மற்றும் பால் பொருட்களின் அளவையும் குறைப்பது நல்லது. தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் வாக்கிங் அவசியம்.

கீரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும். பழங்கள் நிறைய எடுத்துக் கொள்ளவும். பீசா, பர்கர் உள்ளிட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.

அமுக்காராவை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.

ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.

ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.

எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அளவு பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய், ரத்த அழுத்தம் வராது.

கல்யாண முருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சரியாகும்.

சர்ப்பகபந்தா வேரை பொடி செய்து தினமும் அரை கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராகும்.

கர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு.....!!!

கர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு.....!!!

கர்ப்பமான பெண்களுக்கு உண்டாகும் மசக்கை, குமட்டல் வாந்தி போன்றவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாறுடன் சீரகத்தூளைக் கலந்து அருந்தி வந்தால் வாந்தி குமட்டல் குணமாகும். குழந்தை பிறந்த சிறிதுநேரத்தில் தாய்க்கு சீரகத் தண்ணீர் கொடுத்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்

-பாட்டி வைத்தியம்கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?:

குழந்தை இல்லாதவர்கள் கண்டிப்பாக படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்!!கர்ப்பம் தரிக்க சரியான வயது என்ன ?:

கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல் ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு.

இந்த வயதுகளில் இல்லை எனறால் குழந்தை பிறக்காதா? அப்படி இல்லை. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.

சில புள்ளி விவரங்கள்:30 வயதில், 75% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 91% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

35 வயதில், 66% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள்,84% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள். 40 வயதில், 44% பெண்கள் ஒரு வருடத்தில் கர்ப்பமாவார்கள், 64% நான்கு ஆண்டுகளில் கர்ப்பமடைந்து விடுவார்கள்.

ஆண்களின் வயது கர்ப்பத்துக்கு முக்கியம் இல்லையா?:

இதுவும் ஓரளவுக்கு முக்கியமே, ஆனால் பெண்ணின் வயது அளவுக்கு முக்கியமானது அல்ல. இதற்குக் காரணம், பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.

ஆண்கள் பற்றிய புள்ளி விவரம்:

20–39 வயதில், 90% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும். 40–69 வயதில், 50% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

80 வயதிற்கு மேல், 10% ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்து உற்பத்தியாகும்.

கருமுட்டை உற்பத்தியாகும் காலம்:

பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (ஃபேலோபியந் ட்யூப்) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ஒவ்யுலேஶந்) என்று பெயர்.

கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை: எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (ஃபேலோபியந் ட்யூப்) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (ஸ்பர்ம்) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.

உடலுறவு கொள்ள சரியான கால கட்டம் எது?:

உங்கள் முட்டை வெளி வரும்போது, அதாவது ஒவுலஷன் (ஒவ்யுலேஶந்) நடக்கும்போது, அதற்கு இரண்டு நாட்கள் முன்னாலும், இரண்டு நாட்கள் பின்னாலும், உடலுறவு கொள்வது மிகுந்த பயனளிக்கும். முட்டை வெளியீடு (ஒவ்யுலேஶந்) காலம் நடக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? இந்த நாட்களில் உடலில் பல மாற்றங்கள் நடக்கும். அவற்றை கவனித்து உங்களுக்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

1. உங்கள் பெண்ணுருப்பிலிருந்து வரும் திரவம் (ஸர்விகல் ம்யூகஸ்) மிகவும் வழவழப்பாகவும், ஈரமானதாகவும் ஆகி விடும்.

2. மேலும், உங்கள் மார்பகங்கள் மென்மையாக ஆகும். வயிறு பிடிக்கும் (பெல்லி க்ரம்ப்ஸ்), காம வேட்கை அதிகரித்தல், ரத்தச் சொட்டுக்கறை (ஸ்பாடிங்க்), உங்கள் கணவருக்கு அருகிலேயே இருக்கத் தோன்றும்.

3. முட்டை கருப்பையில் இருந்து வெளி வந்தததும் உங்கள் உடல் வெப்பம் 0.4ஊF – 0.8ஊF அதிகமாகும். நீங்கள் டிஜிட்டல் தெர்மாமீட்டர் (டிஜிடல் தர்மாமீடர்) ஒன்றை கடையிலிருந்து வாங்கி வந்து, உங்கள் உடல் வெப்பத்தை பட்டியல் போட்டு, இந்த காலத்தை கண்டு பிடிக்கலாம். இதற்கான பட்டியல் மாதிரிகளை இப்போது இணையங்களிலேயே தருகிறார்கள். இதன் மாதிரியை நீங்கள் இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

http://www.storknet.com/cubbies/preconception/bbt-blank.pdf

4. உங்களுக்கு மாத விலக்கு ரொம்ப சீராகவும், சரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையும் நடந்தால், உங்கள் முட்டை வெளியீடு (ஒவ்யுலேஶந்) நாள் சரியாக 14 ஆம் நாள் நடக்கும். உங்களுக்கு மாதவிலக்கு சீராக வரவில்லை என்று சொன்னால், முட்டை வெளியீடு நாள் என்பது, உங்கள் மாத விலக்கு ஆரம்பிக்கும் நாளிலிருந்து சரியாக 14 நாட்கள் முன்னால் நடக்கும்.உதாரணமாக, உங்கள் மாதவிலக்கு சுழற்சி 31 நாட்கள் என்றால், உங்கள் முட்டை வெளியீடு நாள் 31- 14 = 17. 17ஆம் நாள் தான் உங்கள் முட்டை வெளியீட்டு நாள். இது தவிர ஒவ்யுலேஶந் டெஸ்டிங் கிட்ஸ் போன்ற பொருட்கள் இப்போதெல்லாம் புழக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சிறு நீரில் உள்ள ஹார்மோன் அளவைக் கொண்டு உங்கள் முட்டை வெளியீட்டு நேரத்தை சரியாக சொல்லி விடும்.

கர்ப்பமடைய முயற்சி செய்யும் போது எதை எதை தவிர்க்க வேண்டும்?: உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (பாபி ஆயில்) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (லூப்ரிக்யான்ட்) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.

பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உள்ளே பீய்ச்சி அடிக்கிறார்கள்.இதை வெஜைநல் Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கருப்பிடிக்க நினஈகும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத் திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.

எளிய இய‌ற்கை வைத்தியம் !!!

எளிய இய‌ற்கை வைத்தியம் !!!

1. இருமல் தணிய தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு எள் உட்கொண்டு வந்தால் குணமாகும். 
* 2. பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட இருமல், ஈளை, சீதக்கடுப்பு, புகையிருமல் ஆகியவை குணமாகும். கடுக்காயை வடகம் செய்து உட்கொண்டு வர வாந்தி, மூலம், வீக்கம், வயிற்றுவலி, சூலை, இரத்த சோகை முதலியன நீங்கும். பல்லில் ரத்தக் கசிவு உள்ளவர்கள் கடுக்காய், உப்பு, சீரகம் மூன்றையும் அரைத்து தினம் இருவேளை பல் துலக்க சுகம் பெறும்.

* 3. நிம்மதியான உறக்கம் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
* 4. முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகு செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
* 5. இலவங்கப் பூ சூரணத்தை முலைப்பால்விட்டு உறைத்து நெற்றியில் பற்றிட ஜலதோஷம் போகும். * 6. நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும். பல் கூச்சம் இருந்தால் புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
* 7. படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
* 8. பித்தம் நீங்க கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும் பனை வெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.
* 9. பித்தத்தால் ஏற்படும் தலைச்சுற்று போக காலை வெறும் வயிற்றில் கொஞ்சம் வேப்பம்பூவுடன் சிறிய துண்டு கருப்பட்டி வைத்து அரைத்து இரண்டு பெருநெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.
* 10. சாதாரண தலைவலிக்கு, சுக்கை தண்ணீர்விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பற்றுப் போட்டால் நீங்கும். சுரத்தின் போது ஏற்படும் கடுமையான தலைவலிக்கு கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப்போட்டால் குணமாகும்.
* 11. வெற்றிலையின் காம்பு, லவங்கம், ஏலரிசி ஆகியவற்றை சம அளவாக எடுத்து பால் கலந்து அரைத்து, சூடாக்கி, கொதிக்க வைத்து நெற்றிப் பொட்டிலும், உச்சந்தலையிலும் போட்டுவர கடுமையான தலைவலி விலகும்.
* 12. சாதாரண பல்வலிக்கு ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொண்டாலே போதும் வலி அதிகமாக இருந்தால் கடுகை அரைத்துப் பல்வலி இருக்கும் பக்கம் கன்னத்தின்மேல் பொடி செய்து பற்றுப் போட்டால் குணமாகும். படிகாரம், லவங்கப்பட்டை, சுக்கு, கடுக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து சலித்து அந்தத் தூளைக் கொண்டு காலையிலும், இரவிலும் பல் துலக்கி வந்தால் எவ்வகையான பல் வலியும் அகலும்.
* 13. ஈரல், பித்தப்பை, ரத்த ஓட்டம் சம்பந்தமான வியாதிகள், நரம்பு மண்டலம் சரியாக இயங்காமை, ரத்த சோகை மற்றும் சில நோய்களைக் குணப்படுத்த திராட்சை பயன்படுத்தப்படுகிறது.
* 14. ரத்தம் சுத்தமடைய பசும்பாலில் உலர்ந்த அல்லது பச்சை திராட்சையைப் போட்டு காய்ச்சி, கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடைந்து உடல் நலம் பெறும்.
* 15. பித்தம் நீங்க கருவேப்பிலையைத் துவையல் செய்து சாப்பிடுவது பித்தத்தைப் போக்கும். சுக்கும், பனைவெல்லமும் போட்டுக் காய்ச்சிய நீரைக்குடித்து வந்தால் பித்தம் ஏற்படாது.

www.naattumarunthu.blogspot.in