Monday, July 25, 2016

மூல நோய் தீர்க்கும்துத்திக்கீரை

மூல நோய்"
ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள்.
*
மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும் போது, மலம் வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும் போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே தள்ளிக் கொண்டு வந்து விடுகின்றன.
*
மேலும் காய்ந்த மலம் ஆசன வாயைக் கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும் போது அந்த வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர் அல்லது ஆசன வாய் வெடிப்பு என்கிறார்கள்.
*
இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன.
*
ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ் முன்னோர்கள் இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள்.
*
அவை:- நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினை மூலம், மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்தி மூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம்.
*
இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவ மூலம் என்றும் சொன்னார்கள்.
*
நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.
*
அதனடிப்படையில் மூல நோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும் போது பக்க விளைவுகள் இல்லாமல் மூல நோய் குணமாகும்.
*
ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் மருந்துகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன.
*
இதனால் உள் மூலம் குணமாகும், வெளி மூலம் சுருங்குகிறது. ஆசன வாயில் இருக்கும் சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. மீண்டும் வருவதில்லை.
*
*
உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
*
"துத்திக்கீரை" என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது.
*
எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலை மீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டி விட, கட்டி உடைந்து விடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்று விடும். வேண்டுமானால் மூலத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை செய்து பார்க்கலாம்.
*
*
துத்திக்கீரயின் மற்ற பயன்கள்:
*
இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
*
"மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ் சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும் இப்படியிற் றுத்தி யிலையை" (அகத்தியர் குணபாடம்)
*
*
மலச்சிக்கல் தீர:-
*
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச்சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்து விடும்.
*
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
*
*
மூல வியாதி குணமாக:-
*
காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூல நோயாக மாறுகிறது.
*
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர் விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூல நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூல நோய் படிப்படியாகக் குணமாகும்.
*
*
உடல் சூடு தணிய:-
*
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.
*
*
வெப்பக்கட்டி குணமாக:-
*
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.
*
துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
*
*
பல் ஈறு நோய் குணமாக:-
*
துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
*
*
குடல் புண் ஆற:-
*
துத்திக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.
*
*
சிறு நீர் பெருக்கி:-
*
சரியாக சிறு நீர் பிரியாமல் இருந்தால் சிறு நீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறு நீரக நோய் வராது.
*
துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
*
*
மூல நோய் விரட்ட:-
*
எல்லா வகை மூல நோய்களுக்கும் பக்குவமான மருந்து இது. கிராமங்களில் கிடைக்கும் மருந்து. அது தான் வேப்பமுத்து. அதன் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும். ஒரு பாக்கின் அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மாலையிலும் ஒரு பாக்கு அளவு அரைத்து உருட்டிச் சாப்பிட வேண்டும். இப்படியே (ஒரு மண்டலம்) நாப்பத்தெட்டு நாள் சாப்பிடணும். பத்தியம் உண்டு. அதாவது, மூல வியாதிக்கு மருந்து சாப்பிட்டு முடியும் வரை, உடல் உறவு கூடாது. சூடு உண்டாக்கி மூலம் அதிகமாகும். அருகம்புல் சாறும் நல்லது.


2 comments:

 1. வணக்கம்.
  சகோதர சகோதரிகளே மூல நோய் ஏற்பட்டால் ஆரம்பத்திலே அலட்சியபடுத்தாமல் பார்த்து சரி செய்து விடுங்கள். இல்லையென்றால் பெரும் அவதிபட வேண்டும்.நான் அப்படிதான் ஆரம்பத்தில் நன்றாக பார்க்காமல் விட்டு பின் என்னால் சரியாக உட்காரகூட முடியவில்லை. பாத்ரூம் போகும் போது மிகுதியான வலி இரத்தம் என் பல பிரச்சனை. எங்கு வைத்தியம் பார்த்தும் சரியாகமல் முடிவில் ஆப்ரேசன் செய்து கொள்ள முடிவு செய்தேன். அதிலும் சிலர் ஆப்ரேசன் செய்தாலும் முழுமையாக குணமாகவில்லை மீண்டும் வருகிறது என என்னை குளப்பினார்கள். முடிவில் நண்பர் ஒருவரின் உதவியால் சேலத்தில் வைத்தியர் ஒருவரை சந்தித்து மருந்து பெற்றேன். 3 நாளில் நல்ல வித்யாசம். 2மாதத்தில் முழுமையாக குணமாகிவிட்டது. மூலநோய் உள்ளவர்கள் இவரை தொடர்புகொண்டு முழு பயன் பெறுங்கள். பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு கூறுங்கள்.நன்றி.
  மூல நோய் வைத்தியர் நெம்பர்:9688888410, 6383456410

  ReplyDelete
 2. வணக்கம்.
  சகோதர சகோதரிகளே மூல நோய் ஏற்பட்டால் ஆரம்பத்திலே அலட்சியபடுத்தாமல் பார்த்து சரி செய்து விடுங்கள். இல்லையென்றால் பெரும் அவதிபட வேண்டும்.நான் அப்படிதான் ஆரம்பத்தில் நன்றாக பார்க்காமல் விட்டு பின் என்னால் சரியாக உட்காரகூட முடியவில்லை. பாத்ரூம் போகும் போது மிகுதியான வலி இரத்தம் என் பல பிரச்சனை. எங்கு வைத்தியம் பார்த்தும் சரியாகமல் முடிவில் ஆப்ரேசன் செய்து கொள்ள முடிவு செய்தேன். அதிலும் சிலர் ஆப்ரேசன் செய்தாலும் முழுமையாக குணமாகவில்லை மீண்டும் வருகிறது என என்னை குளப்பினார்கள். முடிவில் நண்பர் ஒருவரின் உதவியால் சேலத்தில் வைத்தியர் ஒருவரை சந்தித்து மருந்து பெற்றேன். 3 நாளில் நல்ல வித்யாசம். 2மாதத்தில் முழுமையாக குணமாகிவிட்டது. மூலநோய் உள்ளவர்கள் இவரை தொடர்புகொண்டு முழு பயன் பெறுங்கள். பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு கூறுங்கள்.நன்றி.
  மூல நோய் வைத்தியர் நெம்பர்:9688888410, 6383456410

  ReplyDelete