Friday, February 27, 2015

திருநீற்று பச்சிலை (திருநீருபத்ரி)திருநீற்று பச்சிலை (திருநீருபத்ரி)
*********************************************************************
நீண்ட காலம் பூக்காத தாவரங்களின் அருகில் இரண்டு திருநீற்றுப் பச்சிலை செடியை வைத்தால் மகரந்தச்சேர்க்கை நடந்து, விரைவில் பூக்கள் பூக்கும். இதன் இலைகள் மணம் மிக்கவை. தெற்கு ஆசியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மூலிகை இந்தியா, இலங்கை நாடுகளில் அதிகளவு வளர்கிறது. இந்த இலையை கசக்கி முகர்ந்தாலே தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை ஆகியவை சரியாகும். வாந்திகளுக்கு இது கைகண்ட மருந்து. குறிப்பாக, ரத்தவாந்திக்கு மிகவும் பயன்தரக்கூடியது. இதற்கு, உருத்திரசடை, பச்சை சப்ஜா என்ற வேறு பெயர்களும் இருக்கிறது.

பருக்கள் பட்டுப்போகும்
புண்கள், காயங்களுக்கு வெளிப்பூச்சாக இது பயன்படுகிறது. அஜீரணத்தைப் போக்கும் குணமுடையது. படர்தாமரை உள்ளிட்ட சரும நோய்களை குணமாக்கும். இதன் தைலத்தை தனியாகவோ, எண்ணெயில் சேர்த்தோ தலைக்கு வைத்து குளித்தால் பேன், பொடுகு பறந்து போகும்.
பருவ வயதுடையவர்களின் முக்கிய பிரச்னை முகப்பரு. குறிப்பாக இளம் பெண்கள் பருக்களை ஒழிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்து கண்ட கண்ட அழகுசாதன முகப்பூச்சுகளை வாங்கித் தடவுகிறார்கள். சிலர் பருக்கள் உடனே போக வேண்டுமே என்பதற்காக, அளவுக்கு அதிகமாக முகப்பூச்சுகளை தடவுகிறார்கள். இதனால் பரு இருந்த இடம் சூட்டினால் வெந்து, கருப்பு நிறத்துக்கு மாறி விடுகிறது. பணத்தை கொடுத்து, பாதிப்பை ஏன் வாங்க வேண்டும்.
மனிதகுலம் வளமாக வாழத் தேவையான அனைத்தையும் படைத்த இயற்கை, இதற்கொரு தீர்வு வைத்திருக்காதா.. என்ன? அப்படிப்பட்ட தீர்வுதான் திருநீற்றுப் பச்சிலை. வீடுகளில், தொட்டிகளிலோ, புறக்கடையிலோ ஒரே ஒரு செடி இருந்தால் போதும், உங்கள் முகப்பரு பிரச்னை இட்ஸ் கான்... என ஆனந்த கூச்சல் இடுவீர்கள்.
தேவையற்ற நீரை வெளியேற்றும்
இதன் இலையை கசக்கி, சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும். சாதாரண பருக்கள் மட்டுமல்ல.. புரையோடி சீழ்வைத்த பருக்கள், விஷப்பருக்கள் கூட மறைந்துவிடும். அதேபோல கண்கட்டி உள்ளிட்ட சூட்டுக் கொப்புளங்களுக்கும் இதன் சாறு அருமையான நிவாரணி. இதன் விதைகள் குளிர்பானங்களுக்கு நறுமணமும், குளிர்ச்சியும் கொடுக்க பயன்படுகின்றன.
இதன் வேரை இடித்து, பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீரை பெருக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும்.
ஆண்டி ஆக்ஸிடெண்ட்
பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில், பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம் போன்ற தாது உப்புகள் இருக்கின்றன. இவற்றை தவிர, சிட்ரால், சிட்ரோனெல்லால், ஜெரானியால், மெத்தில் சின்னமேட், லிமோனின், மென்த்தால், ஐசோகுவர், செட்ரின், காம்ப்ஃபெரால் போன்ற வேதிப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன.
இதனால் இந்த மூலிகை ஆண்டி ஆக்ஸிடெண்டாக செயல்பட்டு நோய்க் கிருமிகளை அழிக்கிறது. இன்னும் பல நோய்களுக்கும் திருநீற்றுப் பச்சிலையில் தீர்வு காத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நீங்கள் பயன்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

எருக்கம் பூ…

மனம் வருந்தவில்லை
மங்கையர் சூடாததற்காக
எருக்கம் பூ….*****************************************************************
எருக்குச் செடி பல இடங்களில் வளருவதைப் பார்க்கிறேம். இதன் மருத்துவ குணங்கள்..
*******************************************************************
எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்…..

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்….
இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.
காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும். இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை GUINEA WORMA எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.
எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.
பூ நல்ல ஒரு ஜீரணகாரி. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.
எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..
தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாûலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.
மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

மலடு நீக்கும் அதிமதுரம்!

மலடு நீக்கும் அதிமதுரம்!
**************************************************குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மூலிகைகளின் மூலம் மலடு நீக்கும் மருத்துவத்தை கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். அதிமதுரம் எனப்படும் அரிய மூலிகை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆண், பெண்களின் குழந்தை பேறின்மையை போக்கும் என்றும் சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொள்வோம்.

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.
மலடு நீங்கும்
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
அதிமதுரத்தினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை இரண்டு முதல் மூன்று மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
பிரசவத்திற்கு முந்தைய உதிரப்போக்கு
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை குணமடையச்செய்யலாம்.
தாய்ப்பால் பெருகும்
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
மலச்சிக்கல் நீங்கும்
சிறுநீரக கல்லினை நீக்கும் மருந்தாக அதிமதுரம் திகழ்கிறது.
இது சிறுநீர் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும் உதவும்.
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
தொண்டைக் கட்டு இருமல் சளி
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும். அதிமதுரம் லேகியம் சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
ஆஸ்துமா குணமடையும்
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
வழுக்கை நீங்கி முடி வளரும்
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

Thursday, February 26, 2015

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட!!!

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட!!!
*******************************************************************
உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ்டிரைடிஸ்” என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.
அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.
மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட்ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கும்.
தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவறான மருந்துகளின் காரணமாகவும் அல்சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டாக்குகிறது. மேல் மற்றும் நடுவயிறு, மார்பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலியினை ஏற்படுத்தும். பசியின் போது வலிக்கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும்.
இதனால் வயிறு உப்பியது போலத் தோன்றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின்னர் மறைந்து மறுபடியும் உங்களைத் தொல்லை செய்யும். எப்படித் தடுக்கலாம்?
தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ளலாம். வலி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும்.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.
இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாட்டி வைத்தியம் அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.
அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.
ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

தோல் நோய்களுக்கு வீட்டிலேயே இருக்கு மருந்து !!!

******************************************************************************
உடலின் மிகப் பெரிய உறுப்பு எது? பலரால் யூகிக்க முடியாது. அந்தக் கேள்விக்குப் பதில்… தோல்! ஆம், 50-கே.ஜி தாஜ்மஹாலாக இருந்தாலும் சரி, 90-கே.ஜி தொப்பைத் திலகமாக இருந்தாலும் சரி… அவர்கள் எடையில் 12 முதல்15 சதவிகிதம் வரை தோல்தான். பலரும் நினைப்பதுபோல் தோல், காதலுக்கு ‘மார்க்கெட்டிங்’ செய்யும் வழவழ வஸ்து மட்டும் அல்ல; ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளுக்கு வாழும் இடம் கொடுத்து, உடலுக்குத் தீங்குசெய்ய நினைக்கும் கிருமிகளை, உடலுக்குள் புகவிடாமல் செய்யும் உறுப்பு.

Monday, February 23, 2015

பன்றிக் காய்ச்சலை கபசுரக் குடிநீர் குணப்படுத்தும்: சித்த மருத்துவ நிபுணர்கள் தகவல்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலைக் குணப்படுத்த சித்த மருத்துவ முறையில் "கபசுரக் குடிநீர்' (தூள்) மிகவும் பலன் தரும் என்று சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
நிலவேம்பு, சிறுதேக்கு உள்பட 11 முக்கிய மூலிகைகளை உள்ளடக்கிய "கபசுரக் குடிநீர்' (சித்த மருந்துத் தூள்) பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்கவும் உதவும் என்றும் சித்த மருத்துவர்கள் கூறினர்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு நிகழாண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரை 743 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நிகழாண்டு இதுவரை பன்றிக் காய்ச்சலால் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஞாயிற்றுக்கிழமை கணக்கீடு அடிப்படையில், 121 நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு நிகழாண்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் பன்றிக் காய்ச்சலால்தான் உயிரிழந்தனரா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அறிகுறிகள் என்ன? சாதாரண காய்ச்சலுடன் தலைவலி, இருமல்,ஜலதோஷம், உடல் சோர்வு, வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். தொண்டை கரகரப்புடன் 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் அல்லது இருமல் ஏற்படுவதும் பன்றிக் காய்ச்சலின் அறிகுறியாகும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அவசியமாகும்.
11 மூலிகைகள் சேர்ந்த சித்த மருந்து: தமிழகத்தில் 2006-ஆம் ஆண்டு சிக்குன்குன்யா, டெங்கு வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவியபோது சித்த மருந்தான "நிலவேம்புக் குடிநீர்' (தூள்) கஷாயத்தின் காய்ச்சலைப் போக்கும் ஆற்றல் பிரபலமடையத் தொடங்கியது.
இதையடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்றும்கூட நிலவேம்புக் குடிநீர் (தூள்) நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க, குணப்படுத்த உதவும் "கபசுரக் குடிநீர்' குறித்து சித்த மருத்துவ நிபுணர் தெ.வேலாயுதம் கூறியதாவது:
சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு "யுகி' என்ற முனிவர் கண்டுபிடித்த "கபசுரக் குடிநீர்' (தூள்) சித்த மருந்து பலன் அளிக்கும். நிலவேம்பு, கண்டுபாரங்கி என்று அழைக்கப்படும் சிறுதேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவள்ளி, சீந்தில், கோரைக்கிழங்கு, கோஷ்டம், அக்ரஹாரம் ஆகிய மூலிகைகளை சம அளவில் எடுத்து
"கபசுரக் குடிநீர்' தயாரிக்கப்படுகிறது. இந்த "கபசுரக் குடிநீர்' அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
தொண்டை கரகரப்பு ஏற்படும் ஆரம்ப நிலையில் சித்த மருத்துவரிடம் சென்று "தாளிசாதி வடகம்' (மாத்திரை) சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைக்கும். பன்றிக் காய்ச்சல் என உறுதிப்படுத்தப்படும் நிலையில் "கபசுரக் குடிநீரை' கஷாயமாக காய்ச்சிக் குடித்தால் பலன் கிடைக்கும்.
அதாவது, நான்கு தேக்கரண்டி தூளை, 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, வடிகட்டுவதன் மூலம் கிடைக்கும் 60 மில்லி லிட்டர் கஷாயத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாள்கள் குடிக்க வேண்டும்' என்றார் டாக்டர் தெ.வேலாயுதம்.

பன்றி காய்ச்சல் மருந்து

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்
*****************************************************

நம் முன்னோர்கள் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற ரீதியில் தங்கள் உணவு பழக்கத்தை வைத்திருந்தனர். அதனால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். இன்றைய நவீனஉலகமும், இயந்திரத்தனமான வாழ்க்கையும் அத்தகைய உணவு பழக்கத்தை நம்மை விட்டு தள்ளி விட்டுள்ளது. அதனால்தான், வாழ்க்கையின் குறிப்பிட்ட நாட்களை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டிய சூழ்நிலையில் தவித்து வருகிறோம். அந்த வகையில் நமது முன்னோர்களின் உணவில் முக்கிய பங்கு வகித்த வெந்தயத்தின் மகிமை அலாதியானது.

வெந்தயத்தில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின்பு வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டாது.

இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது. ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின்பு மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும். வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபிபொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

உடல் குளிர்ச்சிக்கு:

நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது. இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான பயன்களும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சல் குறைவதோடு சீக்கிரம் ஆறும் தன்மைக் கொண்டது. வயிற்றுப்போக்கை குணமடைய செய்வதோடு, தாய்ப்பால் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும். வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, சுண்டக்காய்ச்சி, இருவேளையும் அரை டம்ளர் வீதம் குடித்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாக குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்னையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறைவதுடன், அடர்த்தியாக முடி வளரவும் செய்கிறது. பொடுகு பிரச்னை, அரிப்பு குறைவதோடு முடியை பளபளப்பாகவும் வைக்கிறது. வெந்தய விழுதை பருக்கள் மீது தடவ பருக்கள் மறையும். ஆகவே, வெந்தயத்தை பயன்படுத்தி தான் பாருங்களேன் அதன் பயன்களும், மருத்துவ குணங்களும் என்னவென்று உங்களுக்கே தெரியும்.
Photo: உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

*************************************************************************************
கொத்தமல்லி கீரை-----------மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும்.
அரைக்கீரை------------ நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும்.
வள்ளாரை---------- நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும்.
அகத்திக்கீரை------------- மலச்சிக்கலைப் போக்கும்.
முளைக்கீரை------------ பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும்.
பொன்னாங்கன்னி-----------இரத்தம் விருத்தியாகும்.
தர்ப்பைப் புல்: ---------இரத்தம் சுத்தமாகும். கஷாயம் வைத்து பருகவும்.
தூதுவளை:----------- மூச்சு வாங்குதல் குணமாகும்.
முருங்கை கீரை: -------பொறியல் செய்து நெய்விட்டு 48 நாட்கள் சாட்பபிட தாது விருத்தியாகும்.
சிறுகீரை: ----------நீர்கோவை குணமாகும்.
வெந்தியக்கீரை--------: இருமல் குணமாகும்
புதினா கீரை:------ மசக்கை மயக்கம், வாந்தி குணமாகும்.
அறுகீரை:------- சளிக்காய்ச்சல், டைபாய்டு குணமாகும்
Photo: நாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்...??

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! மற்றுமொரு நாட்டு மருந்து முறை

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! மற்றுமொரு நாட்டு மருந்து முறை ......
*****************************************************************************
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

ஆண்மைக்கு ரோஜா குல்கந்து
****************************************************
காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் “குல்கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

தாது விருத்தி தரும் பூசணிக்காய்
*******************************************************
பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்.

இனிமையான உறவுக்கு இலுப்பை பூ
****************************************************************
இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.

குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்
***************************************************
சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்
Photo: குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்! மற்றுமொரு நாட்டு மருந்து முறை ......

தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க குறிப்புக்கள்..

**********************************************************************
பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
* அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
* அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
* முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
* ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கிராம் அளவு காலையில் மட்டும் பாலில் கலந்து குடித்து வர தாய்பால் பெருகும்.
* குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்குப் புதிய நன்மை :-
+++++++++++++++++++++++++++++++++++++++++++

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மை நேர்கிறது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந் நிலையில், புதிய நன்மையாக, குறைந்தபட்சம் ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு தங்கள் வாழ்நாளின் பின்னாளில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது ஒரு புதிய ஆய்வு.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது, மூன்று மாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

இந்த ஆய்வுக்காக, ஒரு குழந்தையாவது உள்ள 56 ஆயிரம் இளந்தாய்மார்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அதன் முடிவில், தங்கள் குழந்தைக்குப் புட்டிப் பால் கொடுக்கும் தாய்மார்களை விட, ஆறுமாத காலத்துக்காவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு அடுத்த 14 ஆண்டு காலத்துக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறியப்பட்டது.
அமெரிக்க நோய்ப் பரவல் மற்றும் கட்டுப்பாடு இதழில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையில், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 12 சதவீதம் பேர், தங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காதவர்கள் என்று தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்குப் பின்னணியில் இருப்பது, தாய்ப்பால் கொடுப்பதே என்று இந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்படவில்லை என்றபோதும், தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் நன்மை சேர்க்கும் என்பதை சான்றுடன் நிரூபித்திருக்கிறது.

விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!
Photo: தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க குறிப்புக்கள்..

பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்

பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்
*****************************************************************************

குளிர் காலத்தில் காலைப்பொழுதில் எழுந்தவுடன் சிலர் குளிரின் தாக்கத்தால் தாங்கமுடியாத பல் வலியால் துடித்துக் கொண்டிருப்பர். அப்போது உடனே அந்த வலிக்காக மருத்துவரிடம் செல்ல முடியாத காரணத்தினால்,வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தான் சரிசெய்ய பலர் முயற்சிப்பர்.

மேலும் அக்காலத்தில் பல் வலி ஏற்பட்டால், அப்போது எத்தனையோ வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி தான் சரிசெய்தார்கள். சொல்லப்போனால்,அக்காலத்தில் சமைலறையைத் தான் மருத்துவமனையாக பயன்படுத்தி வந்தனர். இன்னும் நம்முடைய பாட்டிகளிடம் போய் கேட்டால், அவர்கள் பலவிதமான சூப்பர் டிப்ஸ்களை தருவார்கள். ஆனால் காலப்போக்கில், நாம் இருக்கும் அவசர நிலையில் சிறு சிறு பிரச்சனைக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுகிறோம்.

ஒருவேளை வீட்டிலேயே மருத்துவம் செய்து நோய் குணமாகாது போனால், உடனே நம்முடைய மருத்துவ முறைகளை அலட்சியப்படுத்துகிறோம். இந்நிலையில் மருத்துவர்கள் கூறுவதையே வேத வாக்காக நினைக்கிறோம். அவ்வாறான எண்ணத்திலிருந்து விடுபட்டு சில வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றி எவ்வாறு பல்வலியை போக்கிக் கொள்ளலாம் என்பதை இங்கு காணலாம். பல்வலியைப் போக்க இந்த வழிகளை பின்பற்றிப் பாருங்கள்.

கிராம்பு

இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால்,பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

உப்பு

பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கோப்பை முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர,பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

பூண்டு

ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் (allicin) என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் இந்த நல்ல பலன் கிடைக்கும்.

கோதுமைப்புல்

சாறு கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வர, அதிலிருந்து புல் முளைக்கும். அதனை பறித்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.

வெங்காயம்

பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

கொய்யாப்பழ இலை

வீட்டில் கொய்யா மரம் இருந்தால் இரண்டு இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம்.

ஐஸ் கட்டிகள்

ஐஸ் கட்டிகளை வலியுள்ள இடத்தில் வைத்து எடுக்க சிறிது நேரத்தில் பல் வலி குறைந்து,வீக்கமும் வற்றிவிடும்.

கால்சியம் உணவுகள்

பல் வலி உள்ளவர்கள் அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவை தவிர்க்கவும். கால்சியம் சத்துக்கள் நிரம்பிய உணவு வகைகளை உண்ணவும். நெல்லிக்காய், பால், வெண்ணை, எலுமிச்சை போன்றவற்றை முறையாக உண்டு வர பற்கள் பலமடையும்.

நல்லெண்ணெய்

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இஞ்சி சாறு

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு வீக்கதிலுள்ள கேட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

சூடம்

சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.

மருத்துவர் ஆலோசனை

தேவையில்லாமல் மருத்துவரை அணுக வேண்டாம். மிகவும் மோசமான நிலையில், பல்லை நீக்கினால் மட்டுமே நல்லது என்ற முடிவு வரும் போது ஒரு நல்ல மருத்துவரை அணுகலாம். தேவையில்லாமல் பல்லை நீக்கினால் அது பல வித பிரச்சனைகளில் கொண்டு விட்டு விடும். பல்லை நீக்கியவுடன் எதுவும் தெரியாது. காலம் போகப் போக பல்வலியுடன் தலைவலியும் சேர்ந்து வந்துவிடும். அதனால் இவ்விஷயத்தில் எச்சரிக்கையோடு இருக்கவும்.
Photo: பல் வலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்

2,440 people reached

முடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வு

முடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வு
***************************************************
ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும் மிகப்பெரிய பொறுப்பு தலையில் இருக்கும் முடிக்கு உள்ளது. முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றில் கோட்டை விட்டு விடுவதால் முடி கொட்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

எண்ணெய் வகைகளை மட்டுமே மாற்றிக் கொண்டிருப்பதால் முடிப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்கிறார் ஹோமியோ மருத்துவர்.

தினமும் 50 முதல் 100 முடிகள் கொட்டுவது இயல்பான விஷயமே. முடி கொட்டும் பிரச்சினைக்கு பல காரணங்கள் உள்ளன. சத்துக்குறைபாடான உணவு,அதிகப்படியாக கெமிக்கல் உள்ள ஷாம்புவை அடிக்கடி பயன்படுத்துதல் மற்றும் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பு எண்ணெய் வகைகளை அடிக்கடி மாற்றுவதால் முடி கொட்டுவது அதிகரிக்கலாம்.

தலையில் பொடுகு ஏற்பட்டாலும் முடி கொட்டும். தலையின் தோல் பகுதியில் காணப்படும் வறட்சியின் காரணமாக முடி கொட்டலாம்.

தலையின் தோல் படலத்தில் எண்ணெய் அதிகமாக சுரப்பதால் ஏற்படும் பிசுக்கினாலும் முடி கொட்டும். வியர்வை அதிகமாக சுரத்தல், தைராய்டு ஹார்மோன் குறைபாடு, பரம்பரைக் காரணங்களாலும் முடி கொட்டலாம்.

ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, மாதவிலக்கில் ஏற்படும் முறையற்ற சுழற்சி,ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆகியவை கூட முடி கொட்டக் காரணமாக இருக்கலாம்.

ரத்த சோகை உள்ளவர்களுக்கும் முடி கொட்டும் பிரச்சினை இருக்கும். தலைப்பகுதியில் சொரியாசிஸ் பிரச்சினை இருந்தாலும் முடி கொட்டும். ஷாம்பு மற்றும் எண்ணெய்யை மாற்றுவதால் மட்டும் முடி கொட்டும் பிரச்சினையை தீர்க்க முடியாது.

முடிகொட்டுவதற்கு முன் சில அறிகுறிகள் ஏற்படும். முடி வலுவிழந்து மெல்லியதாக மாறும். முடியில் மெலனின் குறைபாட்டினால் முடியின் கருப்பு வண்ணம் குறைந்து சிவப்பு வண்ணம் அதிகரிக்கும். எப்போதும் வறட்சியாக காணப்படும். நுனிப்பகுதி வெடிக்கும்.

இதன் அடுத்த கட்டமாக முடி கொட்ட ஆரம்பிக்கும். ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வது மற்றும் உணவில் கவனம் செலுத்துவதன் மூலம் முடி கொட்டும் பிரச்சினையைத் தவிர்க்கலாம்.

பாதுகாப்பு முறை – ஊட்டச்சத்து மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவுகள் தினமும் இருக்கும்படி பார்த்து கொள்ளவும். அதேபோல் முடியை அடிக்கடி அலசி அதில் அழுக்கு சேருவதை தடுக்கவும். முடிக்கு எண்ணெய் வைக்காமல் வறண்ட நிலையில் வைத்திருந்தால் முடியின் நுனிப்பகுதி வெடித்து முடி வலுவிழந்து உதிர்ந்து விட வாய்ப்புள்ளது.

எனவே முடிக்கு தகுந்த ஷாம்புவை டொக்டரின் ஆலோசனைப்படி பின்பற்றலாம். பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு தொடங்கிய பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் முடி கொட்டும் பிரச்சினை சிலருக்கு ஏற்படுகிறது.

எனவே மாதவிலக்கு குறைபாடு இருப்பின் அதை சரிசெய்ய வேண்டும். வாரத்துக்கு மூன்று முறை யாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஷாம்புவை அடிக்கடி மாற்றக்கூடாது. மேலும் அரப்பு மற்றும் பூந்திக்காயை பொடி செய்தும் தலைக்கு குளிக்க பயன்படுத்தலாம்.

முடியை மென்மையாக கையாள வேண்டும். இயற்கையான காற்றில் முடியை உலர்த்துவது நல்லது.
முடி உதிர்தல்,உடைதல் இரண்டு பிரச்சினைக்குமே தோல் மருத்துவரிடம் சிகிச்சை எடுப்பது நல்லது.

பொடுகுப் பிரச்சினை உள்ளவர்கள் அதற்கான ஷாம்பு மற்றும் சிகிச்சை முறைகளை கடைபிடிப்பதன் மூலம் விடுபடலாம். மேலும் சொரியாசிஸ் உள்ளவர்களும் அதற்கான சிகிச்சை எடுப்பது அவசியம். பாலிசிஸ்டிக் ஓவரிஸ் பிரச்சினை இருப்பின் அதையும் சரி செய்யவும்.

முக்கியமாக டென்ஷனைக் குறைக்க வேண்டும். தலைக்கு ஆயில் மசாஜ் போன்ற கூடுதல் கவனிப்பும் வேண்டும்.
Photo: முடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வு

நோய்களை குணம் அடைய செய்யும் உதவும் கற்றாழை..

***********************************************************************************
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான தாவரம், கற்றாழை. ஏதேனும் வெட்டுக்காயமோ, தீக்காயமோ ஏற்பட்டால், உடனடி நிவாரணத்துக்குக் கற்றாழை உதவும்.
கற்றாழையை நன்றாகத் தோல் சீவி, ஆறேழு முறை குழாய் நீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளவும்.
அதனுடன் தேன் அல்லது பனைவெல்லம் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து ஜூஸாக சாப்பிட்டால், மாதவிடாய் வயிற்றுவலி குறையும்.
தோல் அரிப்புக்கு, கற்றாழை ஜெல்லை தடவிவர, அரிப்பு குணமாகும்.
வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும். ஆன்டிஏஜிங்காகவும் கற்றாழை செயல்படும்.
கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும்.
கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும். கற்றாழையின் சதைப்பகுதியை (சோற்றை) தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.
சிறுவர்கள் விளையாடும்போது அடிபட்டு, சிறிய புண்கள் ஏற்படும். அதன் மீது கற்றாழை ஜெல் தடவிவர, காயம் விரைவில் ஆறும்.
கற்றாழையை நன்றாகக் கழுவி, மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை தொடர்ந்து தலைமுடியில் தேய்த்துக் குளித்துவந்தால், நன்றாக முடி வளரும். பொடுகு நீங்கும்.
காலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி முடித்துவிட்டு, வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடிப்பது உடலுக்கு நல்லது.

கற்றாழையில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய எட்டு அமினோ அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்து உள்ளன.
கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸாகக் குடிப்பது, பெண்களுக்கு நல்லது.
இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
Photo: நோய்களை குணம் அடைய செய்யும் உதவும் கற்றாழை..

முதுகு வலியை குறைக்கும் எளிய பயிற்சி..

முதுகு வலியை குறைக்கும் எளிய பயிற்சி..
**********************************************************************
முதுகு வலிக்குரிய எளிய வேக்யூம் சிகிச்சை எம்மில் பலரும் தினமும் முகங்கொடுக்கும் பிரச்சினை முதுகு வலி.

அலுவலகங்களில் பணி யாற்றுவோரும் சரி, வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோரும் சரி, வாகன ஓட்டிகளாக இருந்தாலும் சரி நிச்சயமாக முதுகு வலியால் அவதியுறுவர்.

அமர்ந்த நிலையிலேயே அதிக நேரம் பணி யாற்றுவதாலும், தொடர்ச்சியாக வாகனத்தை ஓட்டுவதாலும், போதிய உடற்பயிற்சியில்லாத தாலும் முதுகு வலி ஏற்படுகிறது.

முதுகு வலிக்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட பலரில், பூரண குணமடைந்தவர்களைப் பற்றி தெளிவான விவரங்கள் இல்லை.

இது குறித்து ஆராயத்தொடங்கினோம் என்றால், முதுகுவலிக்காக சென்று மருத்துவரிடம் ஆலோசனைக் கேட்கும் போது, அவர் வைக்கும் முதல் கோரிக்கையே சிறிது நாள் வாகனத்தை ஓட்டாதீர்கள்.

அலுவலகத்திற்குச்செல்லாதீர்கள். வீட்டில் நன்றாக சாப்பிட்டு உறங்கி ஓய்வு எடுங் கள் என்பது தான். அதிலும் முதுகு வலிக்காக நீங்கள் சத்திர சிகிச்சை செய்திருந்தால் இந்த கோரிக்கை கட்டாயமாகும்.

ஏனெனில் இவர்கள் முதுகு வலிக்கான சிகிச்சையின் போது, சென்சிடிவ்வான நரம்புகளின் சங்கமமான முதுகெலும்பில் இருக்கும் சத்து திரவத்தை பரிசோதனை என்ற பெயரில் உறிஞ்சி எடுத்துவிடுகிறார்கள்.

இதனால் கூட முதுகு வலி ஏற்படலாமல்லவா. இதையெல்லாம் தவறு என்று சுட்டிக்காட்டுவது எங்கள் நோக்கமல்ல. முதுகுவலிக்கு முதுகெலும்பு மட்டுமே காரணமல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

அதே தருணத்தில் முதுகு வலிக்காக நீங்கள் எடுத்துக்கொள்ளும் எம். ஆர். ஐ. ஸ்கேன், சி. டி. ஸ்கேன் போன்ற வற்றால் உங்கள் உடலில் ஏற்படும் கதிர்வீச்சு அபாயகரமானவை என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

எம்முடைய வயிற்றின் இடப்புறமாக கீழிறக்கக்குடல் அமைந்துள்ளது. இங்கு சக்தி குறையும் போது, அதாவது பெருங்குடலின் சக்தி குறையும் போது, அதன் பாதிப்பு இடது முதுகில் அதிலும் குறிப்பாக முதுகெலும்பின் நான்காவது லம்பாரை ஒட்டிய சவ்வுகளில் வலிமூலம் உணரப்படுகிறது.

இதிலிருந்து பெருங்குடலின் சக்தியை தூண்டிவிட்டால் முதுகெலும் பின் வலி குறையும் என்பது ஊர்ஜிதமாகிறது.

முதுகு வலியை கண்டறியும் முறைகள்:

இது மிகவும் எளிது. எம்முடைய கை கட்டை விரல் மற்றும் ஆட்காட்டி விரல் களுக்கு இடைப்பட்ட பகுதியில் கொஞ்சம் கீழ்ப் புறமாக சற்று அழுத்திப் பார்த்து தெரிந்து கொள்ளஇயலும்.

மெட்டாகார்பல் எலும்பு பகுதியான அந்த பகுதியை அழுத்தும் போது வலி இருப்பின் முதுகு வலி இருப்பதை உணரலாம். அதேபகுதியை தொடர்ந்து மிதமாக அழுத்தி வந்தால் அந்த முதுகு வலி மாயமாக மறைவதை யும் காணலாம்.
Photo: முதுகு வலியை குறைக்கும் எளிய பயிற்சி..

நீர் பிரம்மி அருதினால் கோழைக்கட்டு நீங்கும்

*************************************************************************
நீர் பிரம்மி:

நீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

நினைவாற்றலைத் தூண்ட:

நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும் சிறுநீர் பெருக்கம் ஏற்படும்.

தொண்டை கரகரப்பு குணமாக:

நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

கோழைக்கட்டு குணமாக:

நாீர் பிரம்மி வேரை அரைத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து நெஞ்சில் தடவினால் கோழைக்கட்டு நீங்கும்.

வீக்கங்கள் கரைய:

நீர் பிரம்மி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களின் மீது ஒற்றடமிட்டுஅதன்மீது வைத்துக் கட்டினால் வீக்கங்கள் கரையும்.

Photo: நீர் பிரம்மி அருதினால் கோழைக்கட்டு நீங்கும்

கொக்கிப் புழு, நாடாப் புழுவை அடித்து விரட்ட உதவும் மல்லிகை பூ.......

கொக்கிப் புழு, நாடாப் புழுவை அடித்து விரட்ட உதவும் மல்லிகை பூ.......
******************************************************************************

மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா?

தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம்.

மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு.

மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.

இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவல்.

தொண்டையில் சதை வளர்ச்சி தடுக்க ஜா‌தி‌க்காய்...

தொண்டையில் சதை வளர்ச்சி தடுக்க ஜா‌தி‌க்காய்.....
***************************************************************************
தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.

இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.

இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும் தான் செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய். .
Photo: தொண்டையில் சதை வளர்ச்சி தடுக்க ஜா‌தி‌க்காய்.....
***************************************************************************
தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜா‌தி‌க்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும்.

அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம்.

இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.

இதற்கெல்லாம் தற்போது அறுவை சிகிச்சை மட்டும் தான் செய்யப்படுகிறது. கத்தியின்றி, ரத்தமின்றி எளிதாக சதை வளர்ச்சியைக் குணப்படுத்துகிறது இந்த ஜாதிக்காய். .

உடல் சூட்டைத் தணிக்கும் பேரிக்காய்..

உடல் சூட்டைத் தணிக்கும் பேரிக்காய்..!

பழங்களில் அதிக சத்து நிறைந்த பேரிக்காயில், ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை கணிசமான அளவு உள்ளது.பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.

இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :

1. இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.

2. வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு.தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.

3. உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.

4. இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.

5. உடல் சூட்டைத் தணிக்கும்.

6. கண்கள் ஒளிபெறும்.

7. நரம்புகள் புத்துணர்வடையும்.

8. தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.

9. குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்.
Photo: உடல் சூட்டைத் தணிக்கும் பேரிக்காய்..!

வைட்டமின் சி அதிகம் உள்ள முந்திரிபழம்..!

வைட்டமின் சி அதிகம் உள்ள முந்திரிபழம்..!
***************************************************************************
பழங்கள் வகைகளிலேயே, முந்திரிபழத்தில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
இந்த பழத்தில் டானின் எனும் வேதிப்பொருள் இருப்பதால், பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.

இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம்.

மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் ஐந்து மடங்கு அதிகமுள்ளது.

வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது.

பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின்றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குணமாக்குகின்றது.

மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.

மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகின்றது.

இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
Photo: வைட்டமின் சி அதிகம் உள்ள முந்திரிபழம்..!