Monday, May 31, 2021

மருந்தாகும்_மலர்கள்


மருந்தாகும்_மலர்கள்

மலர்கள் நம் வாழ்வியல் முறையில் இன்றியமையாத இடத்தை பிடித்திருந்தாலும் மலர்களை நாம் வாசனைக்காகவும் அலங்காரத்துக்காகவும் ஆராதனைக்காகவும் மருத்துவக் குணங்களையும் அவற்றை எளிய மருந்தாகப் பயன்படுத்தும் முறைகளையும் தெரிந்து கொள்வோம்.

#குங்குமப்பூ

இதற்கு ஞாழல்பூ என்று வேறு தமிழ் பெயரும் உண்டு. குங்குமப்பூவின் மகரந்த தாள்கள் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  குங்குமப்பூ வாசனையுடன் மினுமினுப்பாய் இருக்கும்   இதனை நீர் விட்டு கலக்கினால் நீர் செம்மஞ்சள் நிறமாகும்   கர்ப்பிணிகள் குங்குமப்பூவை வெற்றிலையில் வைத்தோ அல்லது பாலிலிட்டு அருந்தினாலோ சுகப்பிரசவம் ஆகும். குங்குமப்பூவை தாய்ப்பாலில் உரைத்து கண்ணில் மை போலிட்டு வ்ர கண் நோய்கள் தீரும்.

#பன்னீர்_ரோஜா

நாட்டு வகை பன்னீர் ரோஜா பூக்கள் சிவப்பு இளஞ்சிவப்பு வெண்மை ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. தற்போது இவை கடைகளில் கிடைப்பது அரிதாகிவிட்டன. செடிகளை வாங்கி நம் வீட்டில் வளர்த்தால் எல்லாக் காலங்களிலும் பூக்கும்   பன்னீர் ரோஜாவின் இதழ்கள் மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பன்னீர் ரோஜாவின் இதழ்களைக் கொண்டு பன்னீர் மணப்பாகு குல்கந்து ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.  பூக்களிலிருந்து ஒருவகை நறுமணம் பொருந்திய எண்ணெய் எடுக்கப்படுகிறது  இதற்கு அத்தர் என்ரு பெயர்.  பன்னீர் ரோஜா இதழ்களை நீரில் ஊறவைத்து கண்களைக் கழுவ கண் சிவப்பு கண்ணெரிச்சல் நீங்கும்.  பன்னீர் ரோஜா இதழ்களை பச்சையாக மென்று தின்ன வாய்ப்புண் வயிற்றுப்புண் ஆறும்.

#மந்தாரைப்_பூ

சிவப்பு வெண்மை என பல வகைகள் உண்டு  மந்தாரைப்பூ மொட்டுக்களைக் குடி நீரில் இட்டுப் பருக இருமல் நிற்கும்  அதிகப்படியான குருதிப்போக்கு கட்டுப்படும்.

#மாதுளம்_பூ

மாதுளம் பூவை அரைத்து மோரில் கலந்து குடிக்க குருதி மூலம் போகும்  வயிற்றுக்கடுப்பு குறையும்.

#தாமரைப்பூ

அரவிந்தம்  கமலம் அப்புசம் சூரிய நட்பு போன்ற வேறு பெயர்களும் உண்டு.  வெண்தாமரைப் பூவின் இதழ்கள் ஐந்தினை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து பருகி வர இதயம் மற்றும் நரம்புகள் பலப்படும். படபடப்பு நீங்கும்  வெப்பமுள்ள மருந்துகள் உண்பதால் ஏற்படும் உடல் கூடு நீங்கும்.

#தும்பைப்_பூ

தும்பைப் பூவை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்துவர நீர்கோவை  தலைபாரம் நீங்கும். விளக்கெண்ணெய் தைலமாக காய்ச்சி கண்களில் மைபோல் தீட்ட கண்கள் ஒளிபெறும்.

#முருங்கைப்_பூ

முருங்கைப்பூவை பாலில் வேகவைத்து உண்டு வர உடல் வண்மை பெறும். உடல்சூடு தணியும் ஆண்மை பெருகும்.

#வாழைப்பூ

வாழைப்பூவை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டுவர கர்ப்பப்பை பலம் பெறும்  வாழைப்பூவை பாசிப்பருப்புடன் சூப் செய்து சாப்பிட குடல் புண்கள் ஆறும்.   வாழைப்பூச் சாறு மோருடன் சேர்த்து காலை மாலை பருக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

மூலிகை மருத்துவம்..!

*மூலிகை மருத்துவம்..!*

உடல் சூட்டைத் தணிக்கும் தாமரை..!

தாமரை மலர்களை இறைவனுக்குரிய ஆசனமாக புராணங்கள் சித்தரிக்கின்றன.

கல்வியின் நாயகி சரஸ்வதி வெண்தாமரை மலரிலும், செல்வத்தின் நாயகி செந்தாமரை மலரிலும் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது.

செந்தாமரை, வெண்தாமரை என தாமரையில் பல வகைகள் உண்டு. 

தாமரையை அதன் அழகு மலர்களுக்காக மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். 

அதன் மருத்துவ பயன் பலருக்கு தெரியாது. 

தாமரையின் மலர்கள் தான் பெரும்பாலும் மருத்துவ நோக்கில் அதிகமாக பயன்படுகிறது.

தாமரை மலரின் பொதுக்குணம் உடல் சூட்டை தணிப்பது தான். 

மற்றும் இரத்த நாளத்தையும் இது ஒழுங்குபடுத்தும் இயல்புடையது. 

வெண்தாமரை மலரைவிடச் செந்தாமரை மலருக்கு அதிகப்படியான மருத்துவச் சிறப்புகள் உண்டு. 

இது இதய நோய்க்கு நல்ல மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது.

செந்தாமரை மலரை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மண்பாண்டத்தில் ஆறு லிட்டர் அளவுக்குச் சுத்தமான நீர்விட்டு ஓர் இரவு முழுவதும் ஊறிக்கொண்டிருக்கச் செய்ய வேண்டும். 

மறுநாள் நன்றாக காய்ச்சி வடிகட்டி கண்ணாடி போன்ற பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். 

இந்த நீரில் ஓரு அவுன்ஸ் அளவு எடுத்து அத்துடன் சிறிதளவு தேன் சேர்த்து நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் படிப்படியாக குறைந்து முற்றுமாக அகன்று விடும். 

உடலின் உள்புண்களுக்கும் வெளிப்புண்களுக்கும் இது சிறந்த மருந்தாக உபயோகப்படும்.

வறட்சி காரணமாகத் தோன்றும் இருமலுக்கும் இது நல்லது. 

பித்த தலைவலியையும் இது அகற்றும். இதனை நாள்பட சாப்பிட வேண்டும். 

இரண்டொரு வேளையோடு நிறுத்திக்கொண்டால் முழுக்குணம் தெரியாது. 

வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். 

தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும்.

அதனை வடிகட்டி பால், சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். 

இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21நாட்களுக்கு குடித்து வர இருதய நோய் குணமடையும்.

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!*

Sunday, May 30, 2021

பொடுதலையும் மருத்துவ நன்மைகளும்


பொடுதலை முழுத் தாவரமும் துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்; கோழை அகற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்.பொடுதலை வீக்கத்தைக் கரைக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; சீதக் கழிச்சல், இருமல், வெள்ளை படுதல் போன்றவற்றையும் குணமாக்கும்.பொடுதலை சிறுசெடி வகையைச் சார்ந்தது. தரையோடு கிடைமட்டமாக படர்ந்து வளரும். பற்கள் கொண்ட சொர சொரப்பான கரண்டி வடிவ இலைகளையும், கதிரான பூங்கொத்துகளையும் உடையது.பொடுதலை ஆண்டு முழுவதும் பூக்கள், காய்களுடன் காணப்படும். பொடுதலை மலர்கள் சிறியவை. கருஞ்சிவப்புடன் கூடிய வெண்ணிறமானவை. பிளவுபட்ட நாக்குப் போன்ற தோற்றம் உடையவை.

பூற்சாம், பொறுதலை ஆகிய மாற்றுப் பெயர்களும் பொடுதலை தாவரத்திற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. பொடுதலை இலை, காய் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.பொடுகு பிரச்சனை குறைய, முடி உதிர்வதை தடுக்க பசுமையான பொடுதலை இலைகளை தேவையான அளவில் சேகரித்துக் கொண்டு, ஒரு கண்ணாடி சீசாவில் இட்டு அவை மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூரிய வெளிச்சத்தில் 21 நாள்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு தினமும் தலையில் தேய்த்து வர வேண்டும்.

பொடுதலை இலையுடன் சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிர் அல்லது வெண்ணெயில் கலந்து குடிக்க வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து வர வெள்ளைபடுதல் குணமாகும்.பொடுதலை இலையை நெய்விட்டு வதக்கி மிளகு, சீரகம், உப்புச் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.குழந்தைகளுக்கான கழிச்சல் குணமாக ஒரு கைப்பிடி அளவு பொடுதலை இலைகளை வதக்கி, 10 கிராம் வறுத்த ஓமத்துடன் சேர்த்து அரைத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு ரு லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி இரண்டு பாலைடை அளவு உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 4 வேளை வரை கொடுக்கலாம்.

தலைப்பொடுகைக் குணமாக்கும் சிறப்பு கொண்டதாலேயே பொடுதலை என்கிற பெயர் இந்த தாவரத்திற்கு ஏற்பட்டது. பொடுதலை இலைகளை அரைத்து பசையாக்கி, தலையில் தேய்த்து லு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பொடுகு கட்டுப்படும்.தலைக்கான சீயக்காய் மற்றும் கூந்தல் தைலங்களின் தயாரிப்பில் பொடுதலை முக்கிய இடம் பெறுகின்றது

நந்தியா வட்டையின் மருத்துவ பயன்கள்

நந்தியா வட்டையின் மருத்துவ பயன்கள்


நந்தியா வட்டைஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதன் பூவும் இலையும் மருத்துவக் பயன்கள் உடையன. சங்ககால மகளிர் குவித்து விளையாடியதாகச் சொல்லப்பட்டுள்ள 99 மலர்களில் ‘நந்தி’ என்னும் பெயரால் நந்தியாவட்டை மலர் சுட்டப்பட்டுள்ளது. பசுமையாய் கண்களுக்கு குளிர்ச்சியைத்தரும் இந்தச் செடி சுமார் 1.8 - 2.4 மீட்டர் உயரம் வளரும். இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. வேர், பூக்கள், மற்றும் அதிலிருந்து வடியும் பால் இவை அனைத்தும் மருத்துவ பயன் நிறைந்தவை.


வேர் கசப்பான சுவைகொண்டது. சிறிது துவர்ப்புச் சுவையும் இதிலுண்டு. உடல் சூட்டைக் கிளப்பி சீராக்கும், வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். பல் வியாதியிலும், மங்கலாக பார்வை உள்ளவர்களுக்கும் சிறந்தது வேர். பக்கவாதம், சிறுநீர்க் குழாயில் ஏற்படும் சுருக்கம், வாயு தோஷத்தின் சீற்றம், பூட்டுகளில் ஏற்படும் வலி போன்றவைகளில் வேர் சிறந்தது பூக்கள் குளிர்ச்சியானவை, வாசனையுடன் கூடியவை, கண் எரிச்சல், கண் சம்பந்தப்பட்ட நோய்களிலும், தோல் வியாதிகளிலும் பூ சிறந்தது. பால் குளிர்ச்சியும், புண்களில் ஏற்படும் நீர்க்கசிவுகளிலும் பயன்படுத்த உகந்தது.

வேரின் தோல் துவர்பபு கசப்புச்சுவை உடையது. வெந்நீர் விட்டரைத்து வெறும் வயிற்றில் இருவேளை நக்கிச் சாப்பிட அனாவசியமாக அடைந்து கிடக்கும் குடல் அழுக்குகளை அகற்றி- விடும். மலத்தைக் கட்டும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் வியாதிகளிலும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையையும், பூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளிலும் வேர்தோல் மிகுந்த பயன்களை அளிக்கக் கூடியது. சூடான புளித்த மோரில் வேர்த்தோலை அரைத்த பூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்களில் பற்று இடலாம். வெந்நீரில் அரைத்து உள்ளுக்கும் சாப்பிடலாம். அதுபோல் வாய் மற்றும் பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களில் வெந்நீரில் அரைத்து கரைத்த வேர்த்தோலை வாய் கொப்பளிப்பதால் (வாய் மற்றும் பல் உபாதைகள் நீங்கிவிடுகின்றன. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் உதிரப் பெருக்கத்தில் ஏற்படும் துர்நாற்றம், ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுதல் போன்ற நிலைமையில் வேர்த்தோலை நன்னாரி, கடுக்காய், சுக்கு கஷாயத்தில் ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் காலை விழுதுபோல் அரைத்து வெந்நீருடன் பருக நல்ல பலனைத் தரும்.

நந்தியார்வட்டைச் செடி இருவகைகளில் காணப்படுகின்றன. இருவகையும் பித்த சூட்டைக் குறைக்கும் தன்மையுடையவை. புண்களை சுத்தப்படுத்தி ஆற வைக்கும். பூக்களை இரவில் கண்களில் கட்டி, மறு நாள்காலை எடுத்து விடுதலின் கண்கள் குளிர்ச்சியடைகின்றன. பூக்களை சுத்தமான தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால் கண்நோய்கள் நீங்கி கண்பார்வையும் நன்றாக இருக்கும்

பெண்களுக்கு மகப்பேறு உண்டாக

அகர திரவியம் சித்தா

          பெண்களுக்கு மகப்பேறு உண்டாக

            விழுதி இலை தைலம்

1,விழுதி இலை சாறு
2,சிற்றாமணக்கு எண்ணெய்
3,நாட்டு பசு நெய்
4,சுக்கு
5,மிளகு
6,திப்பிலி
7,கோஷ்டம்
8,வசம்பு
9,லவங்கம்
10,ஏல அரிசி
11,சின்ன வெங்காயம்
12,பூண்டு

       4 முதல் 10 வரை உள்ள சரக்குகளை நன்றாக தூள் செய்து பாலில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  சிற்றாமணக்கு எண்ணெயை ஊற்றி 4 முதல் 10 வரை உள்ள சரக்குகளை பாலில் அரைத்து வைத்ததை கலந்து
பின் சின்ன வெங்காயம் பூண்டு சாறுகளையும், கலந்து விழுதி இலை சாறு கலந்து மிதமான தீயில் எரித்து கற்கம் வரும்வரையில் பதம் வந்ததும் சூடு பதத்தில் வடித்து வைத்துக் கொள்ளவும்.

                 தீரும் வியாதிகள்

பெண்களின் மலடு, கர்ப்பப்பை பிரச்சனை, கர்ப்பப்பை சூலை, கர்ப்பப்பை நீர்க்கட்டி, அதிக பெரும்பாடு, வெள்ளைபடுதல்,  வயிற்றுவலி. இடுப்பு வலி சரியாகி மகப்பேறு உண்டாவதற்கான இடையூறுகளை களைந்து பெண்களுக்கு கருத்தரிக்கும், மகப்பேறு உண்டாகும் அற்புதமான விழுதி இலை தைலம் அகஸ்தியர் பரிபூரணம் 400-ல் இருந்து இது பெண்களுக்கான தையலும்.

  ஆண்களுக்கு தனி மருத்துவம் அவர்களுக்கு விந்து அணு (counting)சரியாக வீரியம்உள்ளதா என்று பார்க்க வேண்டும்..
    மாதவிலக்கு ஆனா இரண்டு நாள் கழித்து மூன்றாம் நாள் முதல் 5ஆம் நாள் வரை காலை மாலை 40 ml .

    அனுபானம்.

 சோறு வடித்த கஞ்சி
நீராகாரம் நெய் வெண்ணெய் வெண்ணீர்.
  
இதுபோன்று வைத்தியம் முன்பே சித்தர்கள் கண்டுபிடித்து வைத்துள்ளார்கள்  என்பதற்காக இந்த பதிவு இதனால் பல பேர்கள் பயனடைவார்கள் என்பதனால். ஏனென்றால் மருத்துவமனையில் சென்று பல ஆயிரம் லட்சங்கள் கொடுத்தாலும் சில பேர்களுக்கு மகப்பேறு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது. மரம் பூ பூத்தால் கண்டிப்பாக காய்காய்க்கும் பூக்காத மரம் காய்க்காது இது போன்று தான் பெண்களும் நன்றி வணக்கம்.

   U. பிரபாகரன் பரம்பரை சித்த வைத்தியர். காஞ்சிபுரம்.
9500933355.

Saturday, May 29, 2021

நோயில்லா வாழ்வு வாழ 7 வழிகள்


கருந்துளசி


கருந்துளசி

கருந்துளசி – தெய்வீக மூலிகை, இடி தாங்கியாக செயல்படுவதினால் தமிழர்கள் வீடு தோறும் வளர்தனர்.

சாதாரண துளசி செடி போலவே கருந்துளசி இருக்கும், ஆனால் இலைகள், தண்டு மற்றும் பூ, காய் கருமையாக இருக்கும். சித்தர்களால் செங்க்கொட்டை மூலம் உண்டாக்கப்பட்ட மூலிகை. இதனை கிருஷ்ண துளசி, ஷ்யாம துளசி என்றும் அறியப்படலாம்

⭕️ அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை ஒரு லீட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி பின்னர் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.

⭕️ தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

⭕️ சிறிதளவு கருந்துளசியை எடுத்து பசும்பால் போட்டு காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒவ்வாமையால் ஏற்படுகின்ற சளித் தொல்லை நீங்கும்.

⭕️ நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் சைனஸ் தொல்லையால் ஏற்படும் சளிக்கு தீர்வு கிடைக்கும்.

⭕️ தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் 3, 4 இலைகளை சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

துளசினால் குணமாகும் பிற முக்கிய வியாதிகள்:

1.  காக்கா வலிப்பு
2. அனைத்து விதமான காச்சல்கள் ( மலேரியா, ஃப்ளு )
3. தோல் சம்மந்தமான நோய்கள்
4. ஆண்மைக்கு

💢 இதுவே புற்றுநோய்க்கும் துணை மருந்தாக அமைகிறது. . அதனுடைய ஆய்வுகளும் விளக்கங்களும், செய்முறையும் வேறு ஒரு பதவில்.

பொடுகு தொல்லை இனி இல்லை.:


பொடுகு தொல்லை இனி இல்லை.:

பொடுகு தொல்லை பலருக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது. தலையின் சருமம் வறண்டு போகவோ, எண்ணெய் வடியவோ விடுவதால் தலைமுடிகள் வறண்டு போவதோடு, பொடுகு வரவும் வாய்ப்புண்டு. குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும். இதற்குக் காரணம் கண்ணுக்குத் தெரியாத ஒருவித நுண்ணுயிர்களே.

பொடுகு வருவதற்கான முக்கிய காரணங்கள்.:
ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டு போன்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது.

தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்.

மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹhர்மோன் கோளாறுகள் போன்றவை பொடுகு வருவதற்கான காரணங்கள்.

பொடுகு எதனால் ஏற்படுகிறது.:
பொடுகு பாக்டீரியாவால் ஏற்படுகிறது. முடியைச் சுற்றி பாக்டீரியா அரித்துவிடும். இதனால், தலையின் மேற்பரப்பு தோலில் இறந்துபோன உயிரணுக்கள் செதில் செதிலாகத் தோன்றி அரிப்பை ஏற்படுத்தும். பொடுகு இருந்தால் அரிப்பு ஏற்படும். 

தலையில் உள்ள அதிகமான வியர்வையால் மாசு படிந்து பூஞ்சை காளான்கள் உண்டாகிறது. இதனால் பொடுகு ஏற்பட்டு தலையில் அரிப்பு உண்டாகிறது.

பொடுகு தொல்லைக்கு நீங்கள் என்ன செய்யலாம்.:
👉 பாசிப்பயிறு மாவு மற்றும் தயிர் கலந்து தலையில் ஊறவைத்து பின்னர் குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும். 

👉 கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

👉 தேங்காயை அரைத்து பால் எடுத்து அதை தலையில் நன்றாக தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்துவிடும். 

👉 சின்ன வெங்காயம் கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

👉 பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

👉 தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.

👉 வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணைய் தேய்த்து குளிக்கவும்.

👉 பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வராது.

👉 வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும், உஷ்ணமும் குறையும்.

👉 வேப்பிலை சாறும், துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.

Friday, May 28, 2021

மகளிர் மருத்துவம்


மகளிர் மருத்துவம்

திருமணமான – திருமணமாகாத பெண்களுக்குப் பொதுவாக வரும் நோய்களும் அவற்றிற்கான மருந்துகளும் கீழ்வருமாறு :

1. வெள்ளைபடுதல் – அசோகப் பட்டையைக் காய்ச்சி வடித்த நீரை அளவுடன் பருகி வர நிற்கும்.

2. பிறப்புறுப்பில் புண் – மாசிக்காயை அரைத்துத் தடவிவர ஆறும்

3. சீரற்ற மாதவிலக்கு – அரிநெல்லிக்காயைப் பச்சையாகச் சாப்பிட்டு வரச் சீர்பெறும்.

4. மாதவிலக்குக் கால வயிற்றுவலி – முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்து வர நிற்கும்.

5. உடல் நாற்றம் – ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.

திருமணத்துக்குப் பின்பு வரும் சில நோய்கள், அவற்றிற்கான மருந்துகளை இனிக் காணலாம்.

1. கர்ப்பகால வாந்தி – அரிநெல்லிக்காயை உண்டு வர நிற்கும்.

2. பிரசவ காலத்தில் ஏற்படும் வயிற்றுப்புண் – வேப்பந்தழையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து உண்டு வரப் புண் ஆறி வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கிப் பிரசவித்த பெண்கள் நலம் பெறுவர்.

3. பிரசவத்திற்குப் பின் உடல் மெலிவு – சீரகம், பூண்டு, குறுமிளகு சேர்த்துச் சமைத்த வெள்ளாட்டுக் கறியை உண்டு வர உடல் வலுப்பெற்று நலம் திரும்பும்.

4. தாய்ப்பால் பற்றாக்குறை – பேய் அத்திப்பழத்தை உண்டுவரப் பெருகும்.

5.பெண்களின் வயிற்று சதை குறைய: 

சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

6. மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். 
பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும்

பெண்கள் பிரசவதிற்கு பின் எடுக்க வேண்டிய மருந்து.


பெண்கள் பிரசவதிற்கு பின் எடுக்க வேண்டிய மருந்து:-

தே.பொருட்கள்:-
சுக்கு – 50 கிராம்
மிளகு – 50 கிராம்
அதிமதுரம் – 20 கிராம்
சித்தரத்தை – 20 கிராம்
லவங்கம் – 20 கிராம்
கண்டத்திப்பிலி – 50 கிராம்
வால்மிளகு – 10 கிராம்
ஓமம் – 25 கிராம்
சீரகம் – 50 கிராம்
ஜாதிக்காய் – 3
கருப்பட்டி – 150 கிராம்
நெய் – 100 கிராம்
நல்லெண்ணெய் – 100 மில்லி
பெருங்காயம் – சுமார் 20 கிராம்

செய்முறை

மேற்கண்டவற்றில், நல்லெண்ணெய், நெய், கருப்பட்டி, பெருங்காயம் ஆகியவற்றைத் தவிர்த்து, மற்றவற்றை, ஒரு வெறும் வாணலியில் வறுத்து, பெருங்காயத்தை சிறிதளவு எண்ணையில் பொரித்து, இதனுடன் சேர்த்து, மிக்சியில் நன்கு பொடி செய்துக் கொள்ளவும்.

பின்னர் இதை சலித்துவிட்டு, அந்தப் பொடியை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு எத்தனை கப் அரைத்த பொடி என்பதை அளந்து பார்க்கவும்.

கப்பின் அளவிற்க்கு கருப்பட்டி எடுத்துக் கொள்ளவும் .

இப்போது ஒரு கடாயில், சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை போட்டு, அது நன்கு கரைந்தவுடன் எடுத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

பின்னர் கருப்பட்டி பாகை கடாயில் ஊற்றி, கொதிக்க விடவும்.

இந்தப் பாகு கெட்டியாக ஆரம்பித்தவுடன், வறுத்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கிளறவும்.

இதனுடன், நல்லெண்ணையை ஊற்றிக் கிளறவும் .

எல்லாம் சேர்ந்து சுருள வர ஆரம்பிக்கும் போது, நெய்யை முழுவதும் ஊற்றி, மேலும் சிறிது கிளறி, இளகிய பதத்திலேயே இறக்கி வைத்து விடவும்.

இதை ஒரு சுத்தமான டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து சாப்பிட வேண்டும் .

லேகிய பயன்கள்
பிரசவித்த தாய்மார்கள் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமாகி, குழந்தைக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தினமும் இருவேளை எடுத்துக்கொள்ளலாம்.

அஜீர்ணம், வாயு சேர்தல், பித்தம், ருசியின்மை போன்றவை குறைந்து பிரசவம் ஆன பெண் நன்கு ஆரோக்கியமாக உணவு எடுக்க முடிவதோடு குழந்தைக்கு பாலும் நன்கு சுரக்கும். அதன் பிறகும் தேவை எனில் சாமான்கள் வாங்கி மருந்துப் பொடி தயாரித்துக்கொண்டு பயன்படுத்தலாம். குழந்தை பிறந்த பிறகு ஒருவருட காலம் வரை அந்த காலங்களில் எடுத்துள்ளார்கள்.
வெ.பாஸ்கரன்-புதுச்சேரி
8124700567

உடல் அரிப்பு, தோல் வியாதிகள் குணமாக... நாட்டு மருந்து


ஓமம் தண்ணீர் இப்படி தயாரித்து காலையில் குடிங்க!


*மூச்சுத் திணறல், காய்ச்சல் வராது:*

ஓமம் தண்ணீர் இப்படி தயாரித்து காலையில் குடிங்க!

ஓமத்திற்கு ஆண்டிசெப்டிக், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபராசிடிக் பண்புகள் உள்ளன, இது இருமல், சளி, காது அல்லது வாய் தொற்றுநோயை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகளுக்கு சரியான மருந்தாக அமைகிறது.

நம்முடைய உணவுகளில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் உணவுக்கு சுவையூட்டுவது மட்டுமல்லாமல் மருத்துவ நன்மைகளையும் தருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் இருக்ககூடிய இந்த எளிய மசாலாப் பொருட்கள், உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவை.

அப்படியான ஒரு மசாலாப் பொருட்களில் ஒன்றைப் பற்றி இப்பொழுது பார்ப்போம். நாம் வீடுகளில் அவ்வப்போது பயன்படுத்தும் மசாலாப்பொருட்களில் ஒன்று ஓமம். ஓமத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.


ஓமத்திற்கு மருந்தியல் பண்புகள் உள்ளன. இதில், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, புரதம், ஃபைபர், டானின்கள், கிளைகோசைடுகள், ஈரப்பதம், சபோனின்கள், ஃபிளாவோன் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, கோபால்ட், தாமிரம், அயோடின், மாங்கனீசு, தியாமின் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த உள்ளடக்கங்கள் அனைத்தும் இந்த சிறிய விதையை ஒரு ஆரோக்கிய அதிசயமாக்குகின்றன.

இந்த ஓமத்தை பயன்படுத்தி செய்யப்படும் பானத்தை தினமும் காலையில் குடித்து வந்தால் உங்களுக்கு பல மருத்துவ நன்மைகள் கிடைக்கும். இப்போது அந்த ஓமம் நீர் எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.

*ஓமம் நீர் செய்ய தேவையான பொருட்கள்:*


1 டீஸ்பூன் ஓமம்

500 மி.லி தண்ணீர்


1 எலுமிச்சை அல்லது 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்

1 தேக்கரண்டி மஞ்சள்

கருப்பு உப்பு தேவையான அளவு

1 டீஸ்பூன் தேன்

*செய்முறை*

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் ஓமம் சேர்க்கவும். பாத்திரத்தில் உள்ள தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்கவைக்கவும்.

ஒரு கிளாஸில் இந்த கலவையை வடிகட்டி கொள்ளவும். எலுமிச்சை அல்லது ஆப்பிள் சைடர் வினிகர், தேன் மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும். அதை நன்றாக கலந்து மெதுவாக குடியுங்கள்.

*ஓமம் நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்*

*தொற்றுநோய் தடுப்பு*

ஓமத்திற்கு ஆண்டிசெப்டிக், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிபராசிடிக் பண்புகள் உள்ளன, இது இருமல், சளி, காது அல்லது வாய் தொற்றுநோயை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகளுக்கு சரியான மருந்தாக அமைகிறது. கான்ஜுண்ட்டிவிடிஸ் போன்ற கண் நோய்த்தொற்றுகளை குணப்படுத்த ஓமம் உதவுகிறது.

*சுவாச பிரச்சனைகள்*

ஓமம் உங்கள் நுரையீரல் மற்றும் குரல்வளையை சுத்தமாக வைத்திருக்க உதவுவதாக அறியப்படுகிறது, இதனால் அடைப்பு உங்களுக்கு தொந்தரவாக இருக்காது. இந்த விளைவு மூச்சுக்குழாய் விளைவு என்று அழைக்கப்படுகிறது, இது குறிப்பாக ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஓமம் காற்றுப் பாதையை தளர்த்த உதவுகிறது மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நன்றாக சுவாசிக்க உதவுகிறது.

*குடல் ஆரோக்கியம்*

உங்களுக்கு இரைப்பை பிரச்சினைகள் இருந்தாலோ, அதிக வயிற்று வலி அல்லது பிடிப்புகள் இருந்தாலோ, நீங்கள் தினமும் இந்த பானத்தை குடிக்க வேண்டும். நீங்கள் வெறும் வயிற்றில் ஓமம் நீரைக் குடிக்கும்போது, ​​அது உங்கள் குடலில் உள்ள நொதிகளை செயல்படுத்துகிறது, இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. சிறந்த செரிமானம் என்றால் அமிலத்தன்மை மற்றும் குடல் இயக்க தொல்லைகள் நீங்கும்.

*வலி குறைப்பு*

முடக்கு வாதத்திற்கு ஓமம் நீர் நல்ல பலனை அளிக்கிறது. அழற்சி காரணமாக முடக்கு வாதம் ஏற்படுகிறது என்று அழற்சி ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. ஓமத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதற்கு சில நிவாரணங்களை அளிக்கிறது.

*எடை குறைப்பு*

உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்த ஓமம் உதவுகிறது. அடிப்படையில் உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற பல வாழ்க்கை முறை பிரச்சினைகள் மற்றும் இருதய பிரச்சினைகள் போன்றவற்றுக்கு வழிவகுக்கும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை ஓமம் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக, உங்கள் இதய ஆரோக்கியமும் நீண்ட காலம் நிலையானதாக இருக்கும்

காய்ச்சல், இருமல் நெருங்காது: வெதுவெதுப்பான மஞ்சள் பால் இந்த நேரத்தில் குடிங்க!காய்ச்சல், இருமல் நெருங்காது: வெதுவெதுப்பான மஞ்சள் பால் இந்த நேரத்தில் குடிங்க!

Turmeric Milk Benifits : உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் பால் எவ்வாறு பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்

மஞ்சள் பால் ஒரு பழமையான ஆரோக்கியம் நிறைந்த திரவ பாணமாகும். ஒவ்வொரு பருவகாலங்களிலும் வெளியில் சென்று வீட்டிற்கு திரும்பி வரும்போது, சுகாதார பிரச்சினைகளுக்கும்  இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் என எதவாக இருந்தாலும், தங்கள் குழந்தைக்கு ஒரு கப் மஞ்சள் பால் கொடுக்க வலியுறுத்துகின்றனர்.

மஞ்சள் பாலின் உள்ளார்ந்த ஆயுர்வேத குணங்கள் சிறந்த மகிழ்ச்சியாக வைக்க ஊக்குவிக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும், மஞ்சள் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உள் சிகிச்சைமுறை, காயங்களை குணப்படுத்துதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வீரியத்தை மேம்படுத்துதல் போன்றவற்றின் நன்மைகளை வழங்குகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) மதிப்பீட்டின்படி, 2016 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயால் 1.6 மில்லியன் இறப்புகள் நேரடியாக நிகழ்ந்தன. ஆனால் நீரிழிவு நோயை ஒழுக்கமான உணவு, வழக்கமான பரிசோதனை மற்றும் உடற்பயிற்சி மூலம் நிவர்த்தி செய்ய வழி உள்ளது.


நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மைகள்

குர்குமா லாங்கா என்ற வேரிலிருந்து தயாரிக்கப்படும் மஞ்சள் மற்ற எல்லா மசாலாப் பொருட்களுக்கும் மேலாக உச்சமாகும், ஏனெனில் இது மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. இது இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைத்து, இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. உடலில் மஞ்சள் தன் செயல்முறை தொடங்கியதும், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான குளுக்கோஸ் உயிரணுக்களை சரி செய்ய உதவுகிறது.

மனநிலை மாற்றங்களை அமைதிப்படுத்துகிறது


அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஜெரியாட்ரிக் சைக்காட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வின் முடிவில், மஞ்சள் நினைவகம் மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேரி ஸ்மால் கூறுகையில், “குர்குமின் எவ்வாறு நன்மைகளை எவ்வாறு கொடுக்கிறது என்பது  உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இது மூளை வீக்கத்தைக் குறைக்கும் திறனின் கொண்டுள்ளது. அல்சைமர் நோய் மற்றும் பெரிய மனச்சோர்வு ஆகியவற்றிற்கு தீர்வு தருகிறது. ஐக்கிய அமெரிக்கா. மஞ்சள் பாலின் தினசரி நுகர்வு ஒரு நல்ல இரவு தூக்கத்திற்கு உதவுவதாக குறிப்பிட்டுள்ளது.

கால்சியம்


பால் என்பது கால்சியத்தின் இயற்கையான மூலமாகும், ஆனால் இதில் மஞ்சள் கலந்தால் மட்டுமே முழு உடலுக்கும் நன்மை கிடைக்கும். மூட்டுகள் மற்றும் எலும்புகளில் நீண்டகால வலி உள்ளவர்கள் வலியிலிருந்து உடனடி நிவாரணம் பெற ஒவ்வொரு நாளும் ஒரு சூடான மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இது மூட்டு வலி, கீல்வாதம் மற்றும் முடக்கு வாதத்தை சரி செய்ய உதவுகிறது.

எடை பிரச்சினைகள்

மஞ்சள், பால் அல்லது குறைந்த கொழுப்புள்ள பாலுடன் எடுத்துக் கொள்ளும்போது, ​​குளுக்கோஸ், கல்லீரல் கொழுப்பு, மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவைக் குறைப்பதன் மூலம் கொழுப்பு திசுக்களின் அடர்த்தியைக் குறைக்கிறது. இதன் மூலம், கொழுப்பு உயிரணுக்களின் வளர்ச்சியைக் குறைத்து, தெர்மோஜெனீசிஸின் செயல்முறையை விரைவுபடுத்துகிறது, உடல் கொழுப்பை எரிக்க வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. ஹால்டி தூத் இயற்கையில் அழற்சி எதிர்ப்பதால் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

பாக்டீரியா எதிர்ப்பு

இது ஒரு காயத்திலிருந்து மீள உதவுகிறது மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது. இது இயற்கையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, இது உடலில் தொற்றுநோய்களின் தாக்குதலை கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, சருமத்தை குறைபாடற்ற முறையில் ஒளிரச் செய்கிறது. தோல் நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளைத் தடுக்க உதவுகிறது.

Thursday, May 27, 2021

போக முனிவர் அருளிய அன்னப்பொடி


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரம் சுக்கு சூப்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரம் சுக்கு சூப்.:

இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த சூப்பை குடிக்கலாம். மேலும் இந்த சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்.:
அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்,
சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்,
தூளாக்கிய பனை வெல்லம் - 2 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்,
தண்ணீர் - 1 டம்ளர்,
உப்பு - சிறிதளவு.

செய்முறை.:
அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்க தொடங்கியதும் அதிமதுரம் பொடியை கொட்டவும்.

அது நீரில் கலந்து கொதிக்க தொடங்கியதும் சுக்கு பொடியை தூவவும்.

பின்னர் பனை வெல்லம், உப்பு சேர்க்கவும்.

நன்கு கொதித்து சூப் பதத்துக்கு வந்ததும் எலுமிச்சை சாறை சேர்த்து இறக்கவும்.

அதிமதுரம் சுக்கு சூப் ரெடி.

சக்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் முக்கியமான காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய்.


சக்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் முக்கியமான காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய்.

கத்தரிக்காய் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜிகளைக் கொண்டுள்ளதால் பலரும் இதனை சாப்பிடத் தயங்குகின்றனர். ஆனால் இத்தகைய கத்தரிக்காயின் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

கத்தரிக்காய் இரும்புச் சத்தினைக் கொண்டதாக உள்ளது. இதனால் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கத்தரிக்கையினை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது சீறுநீரகத்தில் உள்ள கற்களைக் கரைக்க கூடியதாகவும் உள்ளது. மேலும் கத்தரிக்கையானது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு கடும் தீர்வினைக் கொண்டதாக உள்ளது.

மேலும் கத்தரிக்கையானது உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது. அதாவது கத்தரிக்காய் கொழுப்பைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கச் செய்கின்றது. மேலும் தோல் சம்மந்தப்பட்ட அலர்ஜி பிரச்சனைகள் உள்ளவர்களும் பிஞ்சுக் கத்தரிக்கையினை சாப்பிடலாம். மேலும் கத்தரிக்காய் புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டதாகவும், மேலும் சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் காய்களில் ஒன்றாக கத்தரிக்காய் உள்ளது.

சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள முலாம் பழம்.


சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள முலாம் பழம்.:

முலாம் பழத்தில் வைட்டமின் சத்துகள் நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.

கண்ணில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை முலாம் பழத்தில் இருக்கும் சத்துகள் ஊக்கப்படுத்தி, வயதாவதால் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனைகளை  தீர்க்கிறது. கண்கள் எளிதில் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது.

கோடைகாலங்களில் முலாம் பழங்களை துண்டுகளாக்கி, தண்ணீரில் சர்க்கரை அதிகம் சேர்த்து கரைத்து, அதில் முலாம் பழ துண்டுகளை ஊறவைத்து பருகி வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.

உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். கோடைகாலங்களில் உடலின் நீர் வியர்வையாக வெளியேறிவிடுவதால் ரத்தத்தில் நீர்சத்து குறைந்து  ரத்த ஓட்டம் வேகம் குறைகிறது. முலாம் பழச்சாறு அருந்துவதாலும் ரத்தத்தில் நீர்ச்சத்து  சேர்ந்து, ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. 

மலச்சிக்கல் நார்ச்சத்து குறைந்த உணவுகளையும், மாவுச்சத்து மிகுந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிடுவதால் பலருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகிறது. 

வயிற்றில் நீர்சத்து குறைவதாலும் மலச்சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கிறது. முலாம் பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து அதிகம் உள்ளது. இதை அதிகம் சாப்பிடுவதால் மலக்கட்டு இளகி, மலம் வெளியேறும். நீண்ட நாள் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். 

அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும். இவை அனைத்தும் அவ்வப்போது முலாம் பழங்கள் சாப்பிடுவதால் நாம் பெற முடியும். 

முலாம் பழத்தில் நார்ச்சத்து மற்றும் அடினோசைன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது ரத்த செல்கள் உறைவதை தடுத்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

வெறும் வயிற்றில் கொய்யா இலை நீர்… எவ்ளோ பலன் தெரியுமா?வெறும் வயிற்றில் கொய்யா இலை நீர்… எவ்ளோ பலன் தெரியுமா?

Benefits of Guava leaf and Guava leaf tea  கொய்யா இலை தேநீர் எடை இழப்பை ஊக்குவிக்கும். எனவே, நீங்கள் சில கூடுதல் கிலோவை இழந்து ஸ்லிம்மாக இருக்க விரும்பினால், இது உங்களுக்கான சிறந்த பானமாக இருக்கும்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமான ஒன்றாகும். அதே வேளையில் உணவு குறித்த ஆலோசனையும், வழிகாட்டுதலும் ஒருவருக்கு நிச்சயம் தேவைப்படுகிறது.

சரியான ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற உங்கள் தேடலில், எதைச் சாப்பிடுவது, தவிர்ப்பது, குடிப்பது, என்ன செய்வது என்பது குறித்த பல கட்டுரைகளை நீங்கள் கண்டிருக்கலாம். ஆனால், கொய்யா இலை ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்று நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது மட்டுமல்லாமல், இதை ஒரு அழகு சாதனமாகவும் பயன்படுத்தப்படலாம்.


கொய்யா, அல்லது அம்ரூட், பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சூப்பர்ஃபுட் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் இதன் சுவையை அறியாதவர்கள் எவரும் இலர். ஆனால் கொய்யா பழத்தின் இலைகளில் பல ஆரோக்கியமான பண்புகளும் உள்ளன.

தொடக்கத்தில், மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் பல ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்திற்கான ஒரு பகுதியாக கொய்யா இலை இருந்துள்ளது. இதன் இலைகளை கொண்டு தேநீர் தயாரிக்கலாம். இந்த தேநீர் தயாரிக்க, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சிறிதளவு தண்ணீரைக் கொதிக்கவைத்து, இலைகளை அதில் ஊறவைத்து, அந்த கலவையை குடிக்க வேண்டும். அது மிகவும் எளிது.

கொய்யா இலை தேநீர் குடிப்பதால் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிது நிம்மதி கிடைக்கும். இது வயிற்றுப் பிடிப்பைத் தணிக்கும் மற்றும் விரைவான மீட்சியை ஊக்குவிக்கும். மேலும், இது வாய்வழியாக எடுக்கப்பட வேண்டிய திரவமாக இருப்பதால், அது உங்களை நீரேற்றமாகவும் வைத்திருக்கலாம். ஒரு கப் சூடான நீரில் இலைகளைச் சேர்த்து, பின்னர் அதை வடிகட்டி வெற்று வயிற்றில் உட்கொள்ளுங்கள்.


கொய்யா இலை தேநீர் எடை இழப்பை ஊக்குவிக்கும். எனவே, நீங்கள் சில கூடுதல் கிலோவை இழந்து ஸ்லிம்மாக இருக்க விரும்பினால், இது உங்களுக்கான சிறந்த பானமாக இருக்கும்.

கொய்யா இலைகளில் வைட்டமின் சி மற்றும் இரும்பு ஆகியவை உள்ளன. எனவே, நீங்கள் லேசான குளிர்ச்சியால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், தேநீர் குடிப்பதைக் கவனியுங்கள். சளி சுவாசக்குழாய், தொண்டை மற்றும் நுரையீரலில் இருந்து விடுபட இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும், உங்கள் சரும அமைப்பை மேம்படுத்தவும், முகப்பரு வடுக்கள் நீங்கவும் நீங்கள் விரும்பினால், இலைகளை பயன்படுத்தலாம். முகத்தில் வித்தியாசத்தைக் காணவும் உணரவும் அவற்றை நசுக்கி, புள்ளிகளில் தடவவும். சருமத்தை இறுக்குவதற்கும் அதன் தொனியை மேம்படுத்துவதற்கும் ஒரு காபி தண்ணீரைப் பயன்படுத்துவதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

முடி உதிர்தல் மற்றும் குறைக்கப்பட்ட அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொய்யா இலைகளே தீர்வு. ஆக்ஸிஜனேற்றிகள் தங்கள் அதிசயங்களைச் செய்ய அனுமதிக்க, நீங்கள் இலைகளை வேகவைத்து உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். நீங்கள் மசாஜ் செய்யும் போது தண்ணீர் சூடாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும், தேநீர் உங்கள் நரம்புகளை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

குடல் தொற்றுகளை வெளியேற்ற பயன்படும் பொன்னாங்கண்ணி கீரை


குடல் தொற்றுகளை வெளியேற்ற பயன்படும் பொன்னாங்கண்ணி கீரை.:

பொன்னாங்கண்ணி கீரை இருக்கும் விட்டமின் ஏ, கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து உண்டு வந்தால் விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி போன்றவை நீங்கும். 

அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இக்கீரையை சூப்பாக அருந்தினால் குணப்படுத்தும், தாய்மார்களுக்கு நன்கு பல்சுரக்கச்செய்யும். குடலில் ஏற்படும்  இரணங்களை விரைந்து ஆற்றும், கல்லீரலை நன்கு பலப்படுத்தி காமாலை போன்ற தொற்றுக்களை வராமல் பாதுகாக்கும். மேலும் நோய் எதிர்ப்பு திறனை நம்  உடலுக்கு அதிகமாக்கிக் கொடுக்கிறது, அதோடு ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.

விழித்திரை நோயைப்போக்கும், கண்ணொளி கொடுக்கும், வாத தோசத்தினை நீக்கும்,. பீனிசம், மூக்கடைப்பு நோயை போக்கும். மூலரோகம், பித்தப்பை, கல்லீரலை  பலப்படுத்தும், மஞ்சள் காமாலையை குணப்படுத்தும், காய்ச்சலை சரி செய்யும், உடல் சூடு மற்றும் உடல் நஞ்சுக்களை நீக்கும்.

குடல் தொற்று மற்றும் புழுக்களை வெளியேற்றும், ஆண்களுக்கு ஏற்படும் விந்து ஒழக்கை சரி செய்யும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

உபயோக்கும் முறை: துவையலாகச் செய்து தினமும் உண்டு வரலாம். கீரையாகக் கடைந்து தினமும் உண்டு வரலாம். பொன்னாங்கண்ணி கீரையை நல்ல எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு, கண் ரோகம் ஒற்றைத்தலைவலி அனைத்தும் நீங்கும்.

பொன்னாங்கண்ணியானது பண்டைய காலத்தில் இருந்து இந்திய நாட்டில் மிகவும் பயன்பாட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட கீரையாகும். பொன்னாங்கண்ணி  கீரையை உண்டால் உடலே பொன்நிறமாக மாறும் என்பது சித்தர்கள் வாக்கு. உடல் பலம் பெறும். இந்த கீரை ஒரு காயசித்தியாகவும் பயன்படுகிறது.

சீத்தாபழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.:


சீத்தாபழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.:

சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும். குழந்தைகளுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.

சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது  உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன. 

சீத்தாப்பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது. சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும்.  இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீத்தாப்பழ விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

சீத்தாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. 

சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீத்தாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

உச்சி முதல் பாதம் வரை அனைத்து நோய்களை போக்கும் சின்ன வெங்காயம்!


உச்சி முதல் பாதம் வரை அனைத்து நோய்களை போக்கும் சின்ன வெங்காயம்!

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும். சின்ன வெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான காயாகும்.

முதன் முதலில் மத்திய ஆசியாவில் வெங்காயம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் வெங்காயம் காட்டுப் பயிராக, உலகின் மூலைமுடுக்கெல்லாம் முளைத்துள்ளது. இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி, மம்மியாக்குவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் எகிப்தியர்கள்.

இக்காயானது தமிழ்நாட்டில் வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இக்காயின் தனிப்பட்ட சுவையின் காரணமாக சமையலில் இது முக்கிய இடத்தினைப் பெறுகிறது. சின்ன வெங்காயமானது லேசான இனிப்பு கலந்த கார சுவையினைப் பெற்றுள்ளது.

உச்சி முதல் பாதம் வரை உடலுக்கு பலவிதமானப் பயன்களை வழங்கும் வெங்காயத்தை பதமாக சாகுபடி செய்வதால், விவசாயிகள் நல்ல லாபத்தைப் பெற முடியும்.

பாம்பு கடிக்கு :

பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

சிறுநீர் கடுப்பு :

ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

இருமல் குறைய :

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

பல் வலி குறைய :

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

உடல் பலம்பெற :

வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

மூட்டு வலிக்கு :

வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

இதயம் பலமாக :

பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்துசாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோய்க்கு :

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர் மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.

முடி பிரச்சினைக்கு :

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் காலப்போக்கில் முடி முளைக்கும். ஆண்களுக்கு மீசை பகுதியில் இப்படி சொட்டை இருந்தாலும், இதே முறையை செய்யலாம்.

தேள் கடிக்கு :

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது.

மாரடைப்பு நோயாளிகளுக்கு :

மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

உடலில் ரத்தம் ஊற


உடலில் ரத்தம் ஊற

 மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.

அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

* நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

* பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

* தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

* பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

* செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

* முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

* இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

* தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

* இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

* விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

அனைவருக்கும் பகிருங்கள்.

ஆஸ்துமா மற்றும் பல நோய்கள் குணமாக்கும் கிராம்பு & தேன்


*ஆஸ்துமா மற்றும் பல நோய்கள் குணமாக்கும் கிராம்பு & தேன் :*

🍯 முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்த கசாயத்தில் தேன் கலந்து அதிகாலையில் குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

🍯 கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.

🍯 கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி குணமாகும்.

🍯 கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

🍯 50 கிராம் அளவு கிராம்பை பொடித்து சலித்துக் கொள்ளவும். நாட்டுக் கோழி முட்டை 5 எண்ணிக்கையில் வாங்கி அவித்து, மஞ்சள் கருவை மட்டும் எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
½ கிலோ சுத்தமான தேனை பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயாக கொதிக்க விடவும். தேன் கொதிக்க ஆரம்பித்ததும் மஞ்சள் கருவை அதில் கலந்து கிராம்பினையும் சேர்த்து இறக்கிவிடவும்.
காலை, இரவு இருவேளை உணவுக்குப்பின் கொட்டை பாக்கு அளவு சாப்பிட போகத்தில் அபரிமிதமான சக்தி உண்டாகும்.

தொண்டை கரகரப்பு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்...


*_தொண்டை கரகரப்பு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்_*

தேவையான பொருள்

1.வால் மிளகு - 50 கிராம்
2.சுக்கு - 50 கிராம்
3.திப்பிலி - 50 கிராம்
4.ஏலரிசி - 50 கிராம்
5.தேன் - தேவையான அளவு

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

👉பிறகு வால் மிளகு,சுக்கு,திப்பிலி மற்றும் ஏலரிசி ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

👉வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.

👉மேலும் தேனுடன் இடித்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும்.

இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு முற்றிலுமாக குணமாகும்.

இஞ்சி சாறில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும்..


இஞ்சி சாறில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும்.:

இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும்.

இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும்.

இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுக்கும். இஞ்சியையும், சுக்கையும் உபயோகிக்கும் போது, அதன் தோலை நீக்குவது மிக  முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு முதலியவை ஏற்படும்.

இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்கவேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் செய்யும்போது அதன்  மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.

தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பு காம்பில் ஏன் புண் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது?


தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பு காம்பில் ஏன் புண் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது?

தாய்ப்பால் கொடுக்கும் போது இளந்தாய்மார்கள் முலையழற்சி என்னும் பிரச்சனையை சந்திப்பது உண்டு.
    
தாய்ப்பால் கொடுக்கும் இளந்தாய்மார்கள் கண்டிப்பாக இந்த மார்பக நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இவை முலையழற்சி என்று அழைக்கப்படுகிறது ஆங்கிலத்தில் மாஸ்டிடிஸ் என்கிறோம்.

மார்பக நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் போது தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அம்மாவும், தாய்ப்பால் குடிக்க முடியாமல் குழந்தையும் பெரும் அவதிக்கு உள்ளாவதுண்டு. இந்த மார்பக நோய்த்தொற்று என்றால் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
​மார்பக நோய்த்தொற்று என்னும் முலையழற்சி

தாய்ப்பால் கொடுக்க தொடங்கும் பிரசவத்துக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்துக்குள் தான் இந்த உபாதை பெருமளவு ஏற்படுகிறது. தாயின் மார்பகங்களில் மார்புகாம்புகளில் வெளிப்புறம், உள்புறம், மார்பு காம்புகளைச் சுற்றி, காம்பில் வெடிப்பு, உலர்வு போன்ற இடங்களில் இவை உருவாகலாம்.

சிசேரியனுக்கு பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

இந்த அழற்சி இயல்பாக வரக்கூடியது என்றாலும் சற்று கவனமாக சிகிச்சை பெறவேண்டும். இல்லையெனில் மோசமான விளைவை உண்டாக்கிவிடும். முலையழற்சி மார்பக நோய்த்தொற்று உண்டாவதற்கான ஆரம்ப அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு பெண்ணும் நிச்சயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

​அறிகுறிகள்

குழந்தைக்கு பால் புகட்டும் போது மார்பக காம்புகளில் வலி உண்டாகும். பால் கொடுத்தபிறகும் வலியானது நீண்ட நேரம் இருக்கும். குழந்தை பால் குடிப்பதன் மூலம் குழந்தையின் வாய்க்கும் தொற்று பரவி குழந்தை பால் குடிக்க முடியாமல் அழத்தொடங்கும்.

மார்பக காம்புகள் வறட்சியாக இருக்கும். சிலருக்கு வெடிப்பு நன்றாக தெரியும். கை வைக்கும் போதே எரிச்சல் இருக்கும். மார்பகத்தை தளர்வாக வைத்திருக்க செய்யும் ஆடைகளில் கூட மார்பக காம்புகள் உராயும் போது அதிக வலியை உண்டாக்கிவிடும்.

சிலருக்கு மார்பக காம்பில் வறட்சி, உலர்வு இருக்காது. ஆனால் உள்ளுக்குள் தொற்று பாதிப்பு இருக்கும். சிலருக்கு மார்பகம் மென்மையாக இருக்கும். மார்பகத்தில் வீக்கம் இருக்கும். தொடர்ந்து காய்ச்சல் இருக்கும்.

ஆனால் பொதுவான அறிகுறியே மார்பகத்தில் தொற்று நேர்ந்தால் தாய்ப்பால் புகட்டுவதில் கண்டிப்பாக சிரமம் உண்டாககூடும். மார்பகத்தில் வலி உணர்வு அதிகரிக்கும். இப்படி இருந்தாலே அது மார்பக நோய்த்தொற்றுதான் என்பதை அறிந்து மருத்துவரை அணுகுவது நல்லது.

காரணங்கள்

எதனால் இந்த பிரச்சனை உண்டாகிறது என்பதை அறிந்துகொண்டாலே பெருமளவு இதை தவிர்க்கவும் முடியும். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் சிறந்த முறைகள் உண்டு. இந்த நிலையில் இல்லாமல் அசெளகரியாமான நிலையிலேயே பால் கொடுக்கும் போது பால் கட்டிகொள்ள வாய்ப்பு உண்டு.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது இரண்டு மார்பகங்களிலும் பால் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பால் சுரப்பு சீராக இருக்கும். இல்லையெனில் ஒரு பக்க மார்பில் பால் கட்டிகொண்டு தொற்று உண்டாக வாய்ப்புண்டு.

சில குழந்தைகள் உமிழ்நீரில் இருக்கும் கிருமிகள் மார்பக காம்புகள் வழியாக பால் குழாய்க்குள் சென்று தொற்றை உண்டாக்க வாய்ப்புண்டு.
பாதிப்புகள்

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கும் போது மார்பகத்தில் நோய்த்தொற்று உண்டாகி குழந்தையால் பால் குடிக்க முடியாமல் போனால் அவை பெரும் பாதிப்பை குழந்தைக்கு உண்டாகும்.

மார்பக நோய்த்தொற்றால் குழந்தைக்கு வாய்ப்புண் உண்டாகும் போது குழந்தையால் பாலை உறிஞ்சு குடிக்க முடியாது. உரிய பசியாறுதல் இல்லாமல் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய சத்தும் கிடைக்காது.

பிரசவத்துக்கு பிறகு இளந்தாய்மார்கள் எதிர்ப்புசக்தியை நிறைவாக கொண்டிருக்க வேண்டும். தாயின் உடலில் நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் ஈஸ்ட் தொற்றை கட்டுக்குள் வைக்கிறது. இவை தவறும் போது கேண்டிடா தொற்று உண்டாகிறது.

இந்த தொற்றை ஆரம்பத்தில்கவனிக்காமல் விட்டால் பெருமளவு தீவிரப்படுத்திவிடும். அதனால் மார்பக வலியை உதாசினம் செய்யாமல் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. தொற்றை பொறுத்து முழுமையாக குணமடைய 7 முதல் 15 நாட்கள் வரை ஆகலாம்.

​​தவிர்க்கும் முறை

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் சற்று கவனத்துடன் இருந்தால் மார்பகத்தில் புண் வராமல் காத்துகொள்ளலாம். தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்பும், பின்னரும் சுத்தமான நீரில் மார்பகத்தை கழுவ வேண்டும். மார்பக காம்புகளில் பால் கசிவு வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.

உள்ளாடைகளை சுத்தமாக துவைக்க வேண்டும். கிருமிகள் அண்டாமல் இருக்க வெந்நீரில் அலசி வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டும். தினமும் உள்ளாடைகளை மாற்ற வேண்டும். உள்ளாடையில் பால் கசிவு ஏற்பட்டாலும் உடனே மாற்றிவிட வேண்டும். உடுத்தும் ஆடையால் மார்பகத்தில் உராய்வு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

இந்த 5 நிலைகளில் தான் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டணும், இளந்தாய்மார்களுக்கானது!

தாய்ப்பால் தர வசதியாக இருக்கும் பிரத்யேகமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். பால் வாசம் வருகிறது என்று வாசனை மிகுந்த சோப்பு வகையறாக்களை மார்பில் அதிகம் பயன்படுத்த கூடாது. மார்பகத்தில் கைகளை வைப்பதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவுவது நல்லது.

தாய்ப்பால் நிலை, சுத்தம் சுகாதாரம், ஊட்டச்சத்து உணவு இவை மூன்றிலும் கவனம் செலுத்தினால் முலையழற்சி என்னும் மார்பக நோய்த்தொற்று வராமல் தடுக்கலாம்.

வேனல் கட்டி குணமாக...


வேனல் கட்டி குணமாக

வேனல் கட்டி கோடை காலத்தில் ஏற்படும் ஒரு உபாதை ஆகும். அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து முகம் மற்றும் உடலில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன.

வேனல் கட்டி வராமல் தடுக்க தண்ணீர் மருந்து

வேனல் கட்டி மறைய மற்றும் ஏற்படாமல் இருக்க முதலில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மட்டுமாவது இந்த பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோடை காலங்களில் தோன்றும் அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

வேனல் கட்டிக்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம்.

வேனல் கட்டி போக சுண்ணாம்பு, தேன் மருந்து

வேனல் கட்டி ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும். அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும்.

வேனல் கட்டிக்கு கற்றாளை மருந்து

கற்றாழையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி மறைய மஞ்சள் மருந்து

வேனல் கட்டி குணமாக மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் வேனல் கட்டியிலிருந்து தப்பிக்கலாம்.

வேனல் கட்டி குணமாக சந்தனம், எலுமிச்சை சாறு மருந்து

சந்தனத்தை உரசிக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்து கனமாக பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகும்.

வேனல் கட்டி குணமாக சோப்பு, மஞ்சள், கல் உப்பு மருந்து

சோப்பை தூளாக்கிக் கொண்டு அதனுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்து வேனல் கட்டி ஏற்புடும் இடத்தில தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி சரியாக நல்லெண்ணெய் குளியல் மருந்து

சூட்டினால் ஏற்படும் கட்டி மறைய வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் வேனல் கட்டி மறையும். நல்லெண்ணெய் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

வேனல் கட்டி மறைய கடுகு மருந்து

கடுகை அரைத்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில போட்டால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி பழுத்து உடைய மஞ்சள் தூள் மற்றும் அரிசி மாவு மருந்து

மஞ்சள் மற்றும் அரிசி மாவையும் சேர்த்து தோசை மாவி போல் கலந்து கொண்டு அதனை கொதிக்க வைத்து களி பதத்திற்கு கிண்டி அதை வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் போட்டால் வேனல் கட்டி பழுத்து உடையும்.

வேனல் கட்டி குணமாக வெள்ளை பூண்டு மற்றும் சுண்ணாம்பு மருந்து

வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வேனல் கட்டு ஏற்பட்ட இடத்தில பத்து போடு வந்தால் வேனல் கட்டி குணமாகும்.

வேனல் கட்டி குணமாக சுண்ணாம்பு, தேன், வெல்லம், வெற்றிலை மருந்து

வெயில் காலங்களில் வேனல் கட்டி நிறைய பேருக்கு வரும். வேனல் கட்டி வந்தால் அதன் வலி மிக அதிகமாக இருக்கும். வேனல் கட்டி குணமாக ஒரு சிறிய தட்டில் சிறிதளவு சுண்ணாம்பை சிறிது தேன் விட்டு குழைக்க வேண்டும். தேன் கிடைக்கா விட்டால் வெல்லத்தை சிறிது நீர் விட்டு குழைக்கலாம். அவ்வாறு குழைக்கும் பொது அது சூடு பறக்க ஒரு கலவையாக வரும். அதை வேனல் கட்டி உள்ள இடத்தில் தடவி அதன் மேல் வெற்றிலையை ஒட்டி விட வேண்டும். வெகு விரைவில் வேனல் கட்டி குணமாகும்.

Wednesday, May 26, 2021


சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பட்டை நீர்… தயாரிப்பது எப்படி?


சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் பட்டை நீர்… தயாரிப்பது எப்படி?

இந்திய சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு பொருளும் மூலிகைகள். மஞ்சள், சீரகம், மிளகு என ஒவ்வொன்றும் மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஒரு சில உணவுகளுக்கு மட்டும் பயன்படும் கிராம்பு, ஏலக்காய், பட்டை போன்றவையும் மருந்துகளே.

பிரியாணி போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் பட்டையின் ஆன்டிபயாடிக், ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டிஆக்ஸிடண்ட் தன்மை காரணமாக இதை சீன மருத்துவத்தில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இவை திசுக்கள் குளுக்கோஸ் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 
இது தவிர இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பட்டை குறைக்கிறது. தினமும் ஒரு கிராம் அல்லது அரை டீஸ்பூன் அளவுக்கு பட்டையை உட்கொண்டு வந்தால் சர்க்கரை அளவு குறைவதுடன், கெட்ட கொழுப்பான எல்.டி.எல் மற்றும் டிரைகிளரைடு அளவு குறையும். மேலும், எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
 
மேலும் குறைந்த நேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை இதற்கு உள்ளது என்று சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஒரு துண்டு பட்டையை எடுத்த ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற விட வேண்டும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும். அப்படி செய்து வந்தால் சர்க்கரை, கொலஸ்டிரால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

பட்டை தேநீர் தயாரிக்க ஒரு துண்டு பட்டை, ஒரு கப் வெந்நீர், சிறிதளவு தேநீர் பொடி அல்லது க்ரீன் டீ பாக்கெட், தேவை எனில் சிறிது தேன்.

கப் ஒன்றில் பட்டையைப் போட்டு கொதிக்கும் வெந்நீரை அதில் ஊற்ற வேண்டும். அதில் டீ பேக், தேன் விட்டு நன்கு கலக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மாலை நேரத்தில் தேன் இல்லாமல் இந்த தேநீரை டிரை செய்து பார்க்கலாம்!

ஆளி விதை மோர்


ஆளி விதை மோர்

5-15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் உடல்பருமனாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கங்களில் மாற்றம் போன்றவற்றால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. தற்போதைய கொரோனா சூழலில் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் அனைவருக்கும் பூதாகர பிரச்சினையாகி வருகிறது பருமன். இதைத் தவிர்க்க ரிலாக்ஸ் டைமில் தினமும் இந்த மோரைக் குடித்துவர, ஆரோக்கியம் அதிகரிக்கும்; ஆயுள் கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்.

எப்படிச் செய்வது?

டிபார்ட்மென்ட்டல் கடைகளிலும் நாட்டு மருந்துக்கடைகளிலும் கிடைக்கும் ஆளி விதையைப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் பொடியை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்து வரலாம். உப்பு சேர்க்கக் கூடாது.

சிறப்பு

இடுப்புச் சதை கரைந்து, கட்டுடலாக மாறும். உடல் எடை குறையும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்கும். நல்ல கொழுப்பு அதிகரிக்கும். கெட்ட கொழுப்புக் கரையும்.

ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து உணவுகள்.
*ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இரும்புச்சத்து உணவுகள்.*

நமது உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களில் இரும்புச்சத்து இன்றியமையாதது. இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்படும். இரத்த சோகை என்பது, இரத்தத்தில் ஆரோக்கியமான இரத்த அணுக்கள் இல்லை என்பதாகும். இந்த இரத்த அணுக்களே நமது உடலுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கின்றன. இந்த பெருந்தொற்று நோய் காலகட்டத்தில் நோய்தொற்று பாதித்தவர்களுக்கு உடலில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்படுகிறது. இதனால் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

போதுமான அளவு இரும்புச்சத்தை நாம் எடுத்துக் கொள்ளாவிட்டால், அது உடலில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பலவீனம், சோர்வு, வெளிர் தோல், தலைச்சுற்றல், உடையக்கூடிய நகங்கள், மோசமான பசி மற்றும் பலவீனம் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையின் சில பொதுவான அறிகுறிகளாகும்.

இரும்புச்சத்து போதுமானதாக இல்லை என்பது இந்த வகை இரத்த சோகைக்கு சாத்தியமான காரணங்களில் ஒன்றாகும்.

இரத்த சோகையைத் தடுக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதோடு, உட்கொள்ளும் உணவில் இருந்து இரும்புச்சத்தை சிறப்பாக உறிஞ்சுவதற்கு போதுமான வைட்டமின் சி உள்ள உணவுகளையும் உட்கொள்வது அவசியம்.

தினசரி தேவையான இரும்புச்சத்து அளவு -

வயது வந்த ஆண்களுக்கு (19-50 வயது) ஒரு நாளைக்கு 8 மி.கி இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அதேநேரம், வயது வந்த பெண்களுக்கு (19-50 வயது) 18 மி.கி தேவைப்படுகிறது.

பிறக்காத குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து தேவை கொஞ்சம் அதிகம். கர்ப்ப காலத்தில் பெண்கள் தினமும் 27 மி.கி இரும்புச்சத்து உட்கொள்ள வேண்டும்.

இரத்த சோகையைத் தடுக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகளில் சிலவற்றை தற்போது பார்ப்போம்.

கீரை :
""""""""
பொதுவாக கீரைகளில் அதிக இரும்புச்சத்துக்கள் இருக்கும். இந்த பச்சை இலை காய்கறிகளில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. கூடவே இதில் இரும்புச்சத்தும் நிறைந்துள்ளது. கீரை எடை இழப்பு, கண்பார்வை அதிகரிக்க, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சாலடுகள், காய்கறிகள், பழச்சாறுகள் மற்றும் பலவற்றில் நீங்கள் கீரையைச் சேர்த்து உண்ணலாம்.

இறைச்சி :
""""""""""""'"""
இறைச்சியில் இரும்புச்சத்து, புரதம், பி வைட்டமின்கள் மற்றும் பலவற்றின் நல்ல ஊட்டப்பொருட்கள் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை தடுக்க உங்கள் உணவில் இறைச்சியை சேர்க்கலாம்.

பூசணி விதைகள் :
"""""""""""""""'"""""""'""""""
பூசணி விதைகள் மெக்னீசியத்தின் நன்கு அறியப்பட்ட மூலமாகும். அதேநேரம் இந்த சுவையான ஆரோக்கியமான சிற்றுண்டியில் இரும்புச்சத்தும் கிடைக்கிறது. ஆய்வுகளின்படி, நீரிழிவு நோயாளிகளுக்கும் பூசணி விதைகள் நன்மை பயக்கும்.

பருப்பு வகைகள் :
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பீன்ஸ், சுண்டல், பயறு மற்றும் சோயாபீன்ஸ் போன்ற பல பருப்பு வகைகள் உள்ளன. இந்த பருப்பு வகைகளில் ஃபைபர் அதிக அளவில் உள்ளது. எனவே பருப்பு வகைகள் எடை குறைப்பிற்கு உதவுகின்றன. உங்கள் உணவில் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்வது உங்களுக்கு இரும்புச்சத்து மட்டுமல்லாமல் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும்.

சீமைத்திணை அல்லது குயினோவா :
"""""""""""""""""""""""""""""""""""""""
குயினோவா தாவர அடிப்படையிலான புரதத்தின் நன்கு அறியப்பட்ட மூலமாகும். இது பசையம் இல்லாத இரும்புச்சத்தின் மூலமாகும். குயினோவாவில் அதிக அளவு ஃபைபர் உள்ளது. எனவே, இது எடை இழப்புக்கு உதவுகிறது. குறைந்த ஜி.ஐ மதிப்பெண் காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கும் இது நன்மை பயக்கும். 
            
          *┈┉┅━❀••❀━┅┉┈​​​​​​​​​​*

உடல் எடை குறைய எளிய குறிப்புகள்.:


உடல் எடை குறைய எளிய குறிப்புகள்.:

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடையும் குறையும், அதேபோல் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள்.

ஒரு அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமம் பொடியை சேர்த்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். மறு நாள் காலை அந்த கலவையை வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்ட வேண்டும். அதன் பிறகு தொப்பை  குறைய ஆரம்பிக்கும்.

விதை நிக்கிய நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிசாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொளுப்புகள் கரையும் இதனால் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.

கடுங்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் தொப்பை  குறையும்.

எலுமிச்சை சாறை எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் தினமும் அருந்தி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியெரும்.  உடல் எடை குறையும்.

வெள்ளேரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவ்வகை சாறு எடுத்து குடித்தாலும் உடல் எடை குறையும்.

நல்ல தூக்கத்திற்கு சில வழிகள்...


நல்ல தூக்கத்திற்கு சில வழிகள்...

கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் இருந்து .....

வாயுப் பதார்த்தங்களை இரவிலே சாப்பிடாதே; நள்ளிரவில் அது வயிற்றைப் புரட்டும். 

நான் இருபத்தெட்டு வருஷங்களாக இரவிலே இட்லி அல்லது தோசைதான் சாப்பிடுகிறேன்.

அண்மையில் ஒரு நாள், சாப்பாடு சாப்பிட்டுப் பார்த்தேன்; அன்று சுகமாக தூக்கம்! காரணம் அதில் உளுந்து இல்லை.

சர்க்கரை வியாதி இல்லாதவர்கள், தேங்காய்ப் பாலும் ஆப்பமும் சாப்பிட்டுவிட்டுப் படுக்கலாம். தேங்காய்ப் பாலிலுள்ள மதமதப்பில் நல்ல தூக்கம் வரும்.

சட்டையோ, பனியனோ, போட்டுக் கொண்டு இரவிலே தூங்கக் கூடாது. பூச்சிகள் உள்ளே போனால் ஒரு தடவைக்கு மூன்று தடவை கடிக்கும்.

என்னதான் குளிரடித்தாலும் சடலத்தை மூடுவது போல் உடலை மூடிக் கொள்ளக் கூடாது; மூக்கு மட்டும் வெளியே சுத்தமான காற்றைச் சுவாசிக்க வேண்டும்.

இரவிலே படுப்பதற்கு முன், பால் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நான்கு வெள்ளைப் பூண்டுப் பற்களைக் கடித்துத் தின்று விட்டுப் பால் குடிக்க வேண்டும்.
அதனால் வயிற்றில் இருக்கும் வாயு பகவான், காலையில் தன் மூதாதையர்களோடு ஐக்கியமாகி வெளியேறி விடுகிறான்.

அமுங்கி அமுங்கி `ஜோல்ட்’ அடிக்கும் மெத்தையில் யாரும் படுக்கக் கூடாது.

உடம்பின் நடுப்பகுதி தாழ்ந்தும், மேலும் கீழும் உயர்ந்தும் இருந்தால் புரண்டு படுப்பது சிரமம். அதனால் அடிக்கடி விழிப்பு வரும்.

வழுவழுப்பான தரையில் பாயை விரித்துப் படுப்பது வெகு சுகம்.
வசதி உள்ளவர்கள், கடம்ப மரக் கட்டிலில் பாய் இல்லாமல் படுத்தால், உடம்பு வலியெல்லாம் தீர்ந்து விடும்.

வெட்ட வெளியில் படுக்கிறவர்கள், வேப்பங் காற்றில் படுக்க வேண்டும்.
இப்போது வேப்ப மரங்களே குறைந்து வருகின்றன. தோட்டம் உள்ளவர்கள் வேம்புகளை நட்டு வையுங்கள்.

இரவில் படுக்கும் போது, `ஆலிவ் எண்ணெய்’ என்று ஒரு எண்ணெய் இருக்கிறது. அதை முகத்தில் தடவிக் கொண்டு படுத்தால் காலையில் களை இழந்த முகம் கூடப் பிரகாசமாக இருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாகச் சாயங் காலத்தில் மூன்று மைல் நடந்தோ, நன்றாக விளையாடி விட்டோ, குளித்துவிட்டுச் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள்; ஒரு பயலையும் கேட்க வேண்டாம்.

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!


அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!

1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .

8. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.

9. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவையற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

10. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
 
14. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.

17. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.

24. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.

30. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட…
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!

1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .

8. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.

9. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவையற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

10. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
 
14. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.

17. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.

24. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.

30. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட…
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!

முதுகு தண்டு வலி நீங்கி வலிமை பெற உதவும் இயற்கை வைத்தியம்


முதுகு தண்டு வலி நீங்கி வலிமை பெற உதவும் இயற்கை வைத்தியம்

தேவையான பொருள்

1.பூண்டு(பற்கள்) - 5 எண்ணிக்கை
2.பால் - 200 மி.லி
3.மிளகு தூள் - சிறிதளவு
4.மஞ்சள் தூள் - சிறிதளவு
5.தேன்  - 1 ஸ்பூன் அளவு
6.உலர் திராட்சை -  10 எண்ணிக்கை

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

👉பிறகு 200 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

👉மேலும் இதனுடன் இடித்த பூண்டையும் சேர்த்துக்கொண்டு நன்கு வேக வைக்கவும்.

👉பிறகு இதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் மிளகுதூள் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

👉பிறகு இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

👉பிறகு இதனுடன் உலர் திராட்சை சேர்த்துக்கொள்ளவும்.இப்போது ஒரு சுவையான பானம் தயார் ஆகிவிடும்.

இதனை முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து 10 நாட்கள் காலை மற்றும் இரவு குடித்து வந்தால் முதுகு வலி நீங்கி முதுகு தண்டு வலிமை பெறும்.

முதுகு தண்டு வலி நீங்கி வலிமை பெற உதவும் இயற்கை வைத்தியம்

முதுகு தண்டு வலி நீங்கி வலிமை பெற உதவும் இயற்கை வைத்தியம்

தேவையான பொருள்

1.பூண்டு(பற்கள்) - 5 எண்ணிக்கை
2.பால் - 200 மி.லி
3.மிளகு தூள் - சிறிதளவு
4.மஞ்சள் தூள் - சிறிதளவு
5.தேன்  - 1 ஸ்பூன் அளவு
6.உலர் திராட்சை -  10 எண்ணிக்கை

செய்முறை

முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.

👉பிறகு 200 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.

👉மேலும் இதனுடன் இடித்த பூண்டையும் சேர்த்துக்கொண்டு நன்கு வேக வைக்கவும்.

👉பிறகு இதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் மிளகுதூள் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

👉பிறகு இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

👉பிறகு இதனுடன் உலர் திராட்சை சேர்த்துக்கொள்ளவும்.இப்போது ஒரு சுவையான பானம் தயார் ஆகிவிடும்.

இதனை முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து 10 நாட்கள் காலை மற்றும் இரவு குடித்து வந்தால் முதுகு வலி நீங்கி முதுகு தண்டு வலிமை பெறும்.

உங்களுக்கு தாடி வளரவில்லையா?


உங்களுக்கு தாடி வளரவில்லையா? கவலைய விடுங்க இதகொஞ்சம் ட்ரை பண்ணுங்க!

ஆண்களின் தற்போதைய ஸ்டைலே தாடி வைப்பது தான். இன்றைய கால ஆண்கள் பலரைப் பார்த்தால் பலரும் தாடியுடன் தான் சுற்றுவார்கள். இதற்கு காதல் தோல்வி தான் காரணம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் பெண்கள் தாடியுடன் இருக்கும் ஆண்களால் தான் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.

இருப்பினும் சில ஆண்களுக்கு தாடி வளரவே வளராது. இதற்கு ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பது தான் காரணம். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவதோடு, ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றி வந்தால், தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

 
இங்கு தாடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி வந்தால், தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி ஆயில்

தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெயை 10:1 என்ற விகிதத்தில் கலந்து, அதனை காட்டனில் நனைத்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினடும் செய்து வந்தால், தாடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெய்க்கு முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையை அரைத்து, அதில் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால், தாடியின் வளர்ச்சியை நன்கு காணலாம்.

பட்டை மற்றும் எலுமிச்சை

ஒரு டீஸ்பூன் பட்டை பொடியுடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு ஒருவேளை இதனை அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால், உடனே அவற்றைத் தவிர்த்திடவும்.

யூகலிப்டஸ் எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய் போன்றே, யூகலிப்டஸ் எண்ணெயும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். ஆனால் இதனை அப்படியே பயன்படுத்தாமல், ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து, முகத்தை மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் தாடி நன்கு வளர்வதைக் காணலாம்.

உங்களுக்கு தாடி வளரவில்லையா?

உங்களுக்கு தாடி வளரவில்லையா? கவலைய விடுங்க இதகொஞ்சம் ட்ரை பண்ணுங்க!

ஆண்களின் தற்போதைய ஸ்டைலே தாடி வைப்பது தான். இன்றைய கால ஆண்கள் பலரைப் பார்த்தால் பலரும் தாடியுடன் தான் சுற்றுவார்கள். இதற்கு காதல் தோல்வி தான் காரணம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் பெண்கள் தாடியுடன் இருக்கும் ஆண்களால் தான் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.

இருப்பினும் சில ஆண்களுக்கு தாடி வளரவே வளராது. இதற்கு ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பது தான் காரணம். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவதோடு, ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றி வந்தால், தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

 
இங்கு தாடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி வந்தால், தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி ஆயில்

தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெயை 10:1 என்ற விகிதத்தில் கலந்து, அதனை காட்டனில் நனைத்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினடும் செய்து வந்தால், தாடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெய்க்கு முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையை அரைத்து, அதில் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால், தாடியின் வளர்ச்சியை நன்கு காணலாம்.

பட்டை மற்றும் எலுமிச்சை

ஒரு டீஸ்பூன் பட்டை பொடியுடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு ஒருவேளை இதனை அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால், உடனே அவற்றைத் தவிர்த்திடவும்.

யூகலிப்டஸ் எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய் போன்றே, யூகலிப்டஸ் எண்ணெயும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். ஆனால் இதனை அப்படியே பயன்படுத்தாமல், ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து, முகத்தை மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் தாடி நன்கு வளர்வதைக் காணலாம்.