Saturday, May 22, 2021

அற்புத பலன்தரும் மூலிகைகளும் அதன் மருத்துவ பலன்களும்.:


அற்புத பலன்தரும் மூலிகைகளும் அதன் மருத்துவ பலன்களும்.:

கற்றாழை.: 
கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நீர்ச்சத்து நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பை விரைவாக கரைக்க  உதவுகிறது.

கரிசாலை.:
கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை, ஆகியவற்றின் சூரணம் சமன் கலந்து நாள்தோறும் காலை, மாலை அரை தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இளவயதில் தோன்றும் நரை மாறும். 

ஊமத்தை.:
இலையை நல்லெண்ணெய்யில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம் ஆகியவை தீரும். இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி இளஞ்சூட்டில் காதில் விட சீதளத்தால் வந்த காதுவலி தீரும். 

புதினா.:
புதினா அதன் இனிப்பு வாசனையால் நிறைய உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இவை நமது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட  கொழுப்புகளை வெளியேற்றுகிறது. 

விஷ்ணு க்ரந்தி.:
விஷ்ணு க்ரந்தி நமது கல்லீரல் செயலை மேம்படுத்துகிறது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அவற்றை சுத்தப்படுத்துகிறது. 

கண்டங்கத்திரி.:
இதன் பழத்தை உலர்த்தி நெருப்பிலிட்டு வாயில் புகைப்பிடிக்க பல்வலி தீரும். கண்டங்கத்திரி சமூலத்தைக் குடிநீரிட்டுக் குடிக்க உடலின்  நீரேற்றம், மூக்கு நீர் பாய்தல், இரைப்பு இவை தீரும்.

துளசி.:
துளசி இலைகள் உடல் கொழுப்பு அதிகரிக்க காரணமான கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைக்கிறது. அதிகமான கார்டிசோல் அளவு கீழ்வயிற்றில்  அதிகமான கொழுப்பு சேரச் செய்கிறது.

No comments:

Post a Comment