Wednesday, May 26, 2021

சிறந்த 10 மூலிகை மருந்துகள் - நுரையீரல் சளி, ஜலதோஷம், வறட்டு இருமல்


சிறந்த 10 மூலிகை மருந்துகள் - நுரையீரல் சளி, ஜலதோஷம், வறட்டு இருமல் 

👉நுரையீரல் சளி

ஆடுதொடா இலை

நுரையீரலில் ஏற்படும் சளித் தொல்லை நீங்க ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை எடுத்து லேசாக அரைத்த பின் வேகவைத்து தேன் கலந்து சாப்பிட்டு வர குணமாகும். 

👉தொண்டை, நுரையிரல்/சளி, இருமல்

வெங்காயத்தோல்

வெங்காயத்தாளை அரைத்துதிப்பிலி கலந்துபொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குறையும். 

👉நுரையீரல் சளி

இஞ்சி

நுரையீரலில் சளி குறைய இஞ்சி, வெள்ளெருக்கம்பூ, மிளகு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வருதல் நலம் தரும் 

👉நுரையீரல் சளி/ஜலதோஷம்

உத்தாமணி இலை

உத்தாமணி இலைச்சாறு, தூதுவளைச் சாறு, துளசிச் சாறு, கற்பூரவள்ளிச்சாறு வெற்றிலைச்சாறு இவற்றை கொதிக்க வைத்து அருந்த ஜலதோஷம், மூக்கடைப்பு குறையும். 

👉 மார்புச் சளி

ஏலக்காய்

ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச் சளி குணமாகும். 

👉நுரையீரல் சளி/ஜலதோஷம்

கற்பூரவல்லி

கற்பூரவல்லி இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி வீதம் மூன்று வேளை குடித்து வந்தால் ஜலதோஷம், சளி குறையும். 

👉 நுரையீரல் சளி/ஜலதோஷம், இருமல்

சீரகம்

சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட ஜலதோஷம் , இருமல் குணமாகும். 

👉நுரையீரல் சளி/சளிக் காய்ச்சல்

சுக்கு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் ஜலதோஷத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும். 

👉நுரையீரல் சளி/ஜலதோஷம்

துளசி

துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அவித்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி. லி வீதம் 3 நாட்கள் குடித்து வந்தால் ஜலதோஷம், கோழை மற்றும் இருமல் குறையும். 

👉நுரையீரல் சளி/நுரையீரல் புண்

மருதம்பட்டை

மருதம்பட்டை, ஆடாதொடை பொடி இவற்றை வெள்ளாட்டுப் பாலில் கலந்து குடித்து வர நுரையீரலில் ஏற்பட்டுள்ள புண் சரியாகும்.

No comments:

Post a Comment