Tuesday, August 30, 2016

மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்

மாதவிலக்கை சீர்படுத்தும் கழற்சிக்காய்


காய்ச்சலை குறைக்க கூடியதும், கல்லீரல் வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதும், மாதவிலக்கை சீர்படுத்த வல்லதும், கர்ப்பபை கோளாறுகளை குணப்படுத்த கூடியதுமான மருத்துவ வகைகளில் ஒன்று கழற்சிக்காய். கழற்சிக்காய் கடினமான ஓட்டை உடையது. கழற்சி கொடியில் கூர்மையான முட்கள் இருக்கும்.
காடுகளில் வளரக் கூடியது. வைரத்தை போன்ற கடுமையான விதையான இது காய்ச்சலை குறைக்க கூடியது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. வீக்கத்தை குறைக்கும் கழற்சிக் காயானது, சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. ரத்த போக்கை நிறுத்தக்கூடியது. மலேரியா காய்ச்சலை போக்கும்.கழற்சிக்காயை பயன்படுத்தி கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். கழற்சிக்காயை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை இடித்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
கால் ஸ்பூன் அளவுக்கு பொடியுடன், சிறிது பெருங்காயம், அரை கப் மோர், சிறிது உப்பு சேர்த்து கலந்து வெறும் வயிற்றில், 48 நாட்கள் குடித்துவர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும். ஈரல் பலப்படும். வயிற்று புண்கள் ஆறும். வயிற்று வலி குணமாகும். வாயுவை வெளித்தள்ளும். விரைவாதம் குணமாகும். கழுத்து, கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். தைராய்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். கழற்சிக்காயை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுக்கான மருந்து தயாரிக்கலாம். 4 பங்கு அளவுக்கு கழற்சிக்காய் பொடி, ஒரு பங்கு மிளகுப் பொடி ஆகியவற்றை கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தினமும் மூன்று விரல்களில் எடுக்கக்கூடிய அளவுள்ள பொடியை, 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிலக்கு சீராகும். வயிற்று வலி குணமாகும்.
கழற்சிக்காய் குழந்தையின்மைக்கு மருந்தாகிறது. கர்ப்பபை கோளாறுகளை சரிசெய்ய கூடியது. வயிறு, இடுப்பு வலியை போக்க கூடியது. எந்தவகையான காய்ச்சலையும் குணப்படுத்தும் தன்மை உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
யானைக்கால் நோயை குணப்படுத்தும். கால்களில் நரம்புகள் தடித்து இருக்கும் நிலையை போக்கும். உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கும். கழற்சிக்காயை பயன்படுத்தி வீக்கத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண் ணெய்யுடன் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்து கொள்ளவும். இதை தடவுவதன் மூலம் மூட்டு வீக்கம், தொண்டை வீக்கம், விரைவாதம் சரியாகும். எந்தவொரு வீக்கத்தையும் போக்கும். வயிற்று வலியை குணமாக்கும் தன்மை கொண்டது கழற்சிக்காய். நெறிகட்டை சரிசெய்யும். நெறிக்கட்டால் வரும் காய்ச்சலை போக்கும். கருச்சிதைவு ஏற்படும் என்பதால் கர்ப்பிணிகள் கழற்சிக்காயை எடுத்துக் கொள்ள கூடாது. கழற்சிக்காய் இலையை பயன்படுத்தி மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலை களை சுத்தப்படுத்தி எடுத்துக்கொள்ளவும். முட்கள் இருக்கும் என்பதால் இலையை பாதுகாப்பாக சுத்தப்படுத்துவது அவசியம். இலைகளை, ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் வதக்க வேண்டும். இதை வீக்கம் இருக்கும் இடத்தில்  கட்டி வைக்கவும். வீக்கம், வலி குறையும். மூட்டு வலி சரியாகும். கழற்சிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இது மலேரியா காய்ச்சல், மனபிரமைக்கு மருந்தாகிறது.

Wednesday, August 24, 2016

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.

                         இது உண்மைச் சம்பவம்

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள் ரூ.2,25,000-த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு

1 கப் இஞ்சிச் சாறு

1 கப் புண்டு சாறு

1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள். மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்

மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு

மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு

டாக்டர் எல். மகாதேவன்

எனக்கு polycystic ovarian syndrome உள்ளது. ஹார்மோன் எடுக்க வேண்டி வருகிறது. மாதவிடாய் விட்டுவிட்டு வருகிறது. மிகவும் அவதிப்படுகிறேன். இதனால் மனசோகமும் ஏற்படுகிறது. எனக்கு ஆலோசனை தந்து உதவுவீர்களா?

Polycystic ovarian syndrome (PCOD) என்று சொல்லக்கூடிய நோயில் ஒழுங்கற்ற மாதவிடாய் காணப்படும். சில நேரங்களில் வராது. முகத்தில் பருக்கள் காணப்படும்.

ஆண்களைப் போல் முகத்தில் முடி வளரும். இவர்களுக்கு உடல் எடை அதிகமாகவோ, நீரிழிவு நோய் வருவதற்கோ, ரத்தக்கொதிப்பு வருவதற்கோ, இதய நோய் வருவதற்கோ வாய்ப்பு உண்டு.

சரியான சிகிச்சை மூலம் காரணிகளை அப்புறப்படுத்தி குணப்படுத்தலாம். இது ஒரு ஹார்மோன் பிரச்சினை. இந்த நோய் வரும் பெண்களுக்குச் சினைமுட்டைப் பையில் (ovary) சிறு கட்டிகள் காணப்படும். பல காரணங்களால் சினைமுட்டைகளில் நீர்கட்டிகளை காணலாம். 5 முதல் 10% பெண்களுக்கு இது காணப்படுகிறது. குழந்தையின்மைக்கும் இது முக்கியக் காரணம். பருவமடையும் சமயத்தில் இது தொடங்குகிறது.

ஒழுங்கற்ற மாதவிடாய் மூலமும் இது தெரியவருகிறது. சிலர் திருமணம் முடிந்து குழந்தையின்மை ஏற்படும் பொழுதுதான் இதைக் கண்டறிகிறார்கள். இது ஏன் வருகிறது என்பதற்குச் சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு மரபணு தொடர்பு காரணமாக இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடந்துவருகிறது. கட்டிகள் மட்டுமே இதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது.

இவர்களுக்கு இன்சுலின் செயல்படும் தன்மை பாதிக்கப்பட்டுக் காணப்படலாம். இவர்களுக்கு இன்சுலின் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு ஆண் ஹார்மோன் ஆன்ட்ரோஜன் அதிகமாகச் சுரக்கும். எல்.ஹெச். என்ற ஹார்மோனும் மாறுபட்டு இருக்கும். இவை மூளையில் இருந்து சுரக்கப்படுபவை.

இந்த நோயாளிகளுக்குத் தைராய்டு சுரப்பி பரிசோதனை, Prolactin hormone test, ஆண் ஹார்மோன் பரிசோதனை, DHEA hormone test, வயிற்றில் Ultra sound scan, LH Hormone போன்றவற்றையெல்லாம் நவீன மருத்துவர்கள் பார்ப்பார்கள். Ultra sound scan பார்க்கும்போது சினைமுட்டையில் உள்ள நீர்க்கட்டிகள் கண்டுபிடிக்கப்படும். இவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புண்டு. அபூர்வமாக endometrial cancer வரலாம்.

இது தொடர்பாக தாய்மை அடைவதில் உள்ள பிரச்சினை என்றே பலரும் என்னிடத்தில் வருகிறார்கள். மாதவிடாய் வருகிறது, வந்தால் நிற்பதில்லை என்றும் சொல்கிறார்கள். சினைமுட்டை சரியான நேரத்தில் உருவாகாது. பலரும் உடல் எடை மிகுந்தவர்களாக இருப்பார்கள். கொழுப்புச் சத்தும் அதிகமாகக் காணப்படும். கழுத்தைச் சுற்றிக் கருமையான நிறம் உருவாகும்.

ஆயுர்வேதத்தில் மாதவிடாய் என்பது நெருப்பின் தன்மை கொண்டது. இடுப்பு என்ற யோனிப் பகுதி அபான வாயுவின் இருப்பிடமாகும். நெருப்பின் செயல்பாடும், அபான வாயுவின் செயல்பாடும் பெண்களுக்குச் சீராக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், டிவியைப் பார்த்துக் கொண்டு இருத்தல், தின்பண்டங்களை அளவுக்கு மீறி சாப்பிடுதல், பாரம்பரிய உணவை அறவே புறக்கணித்தல் போன்ற காரணங்களால் பருவமடைந்து வரும் நேரத்தில் இடுப்பைச் சுற்றிச் சதை வளர்ந்து விடுகிறது.

இந்திய முறை கழிப்பறை போய்விட்டது. நவீன முறையிலேயே சிறு குழந்தைகளும் அமர்கிறார்கள். இந்திய முறையில் குத்துக்காலிட்டு அமர்ந்து மலம் கழிப்பது, ஒரு வகை ஆசனம். இது அபான வாயுவைச் சீராக்கும். அபான வாயுவைப் பெண்கள் சீராக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த PCOD நோயை நான்கு விதங்களில் அணுகலாம்.

1.ஒரு குல்மமாக (ஒரு கட்டி போன்று) கருதலாம்

2.விஷமத் தன்மையுடைய வாயுவாகக் கருதலாம்

3.விஷமத் தன்மையுடைய ரத்தப் போக்கு (விஷமபிரதரம்)

இம்மாதிரி மாதவிடாயே வராமல் இருப்பவர்களுக்குக் கபவாதத்தைக் குறைத்து உஷ்ணத்தைக் கூட்டுகின்ற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். அதற்குச் சிறந்த மருந்துகள் உள்ளன.

கருஞ்சீரகம், சீரகம், நாயுருவி, மாவிலங்கப்பட்டை, உளுந்தங் களி, உளுந்தங் கஞ்சி, 30 கிராம் எள்ளுருண்டையுடன் சீரகக் கஷாயம், 30 கிராம் கருவேப்பிலை, மாதுளம் பழம், தினமும் 20 மி.லி. நல்லெண்ணெய் உள்ளுக்குக் கொடுத்தல், கொள்ளு கஷாயம், சதகுப்பை, கொத்தமல்லி சூர்ணம், சுக்கு, மிளகு, திப்பிலி சூர்ணம், கண்டுபாரங்கி சூர்ணம் போன்றவை நல்ல பலன் அளிப்பவை.

இவை தமது உஷ்ண வீர்யத்தால் மாதவிடாயை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் அதீத ரத்தப் போக்கு உண்டாகும், நிற்காது. அந்த நிலையில் அசோகப்பட்டை, செம்பருத்தி, நாவல்கொட்டை, மாங்கொட்டை, புளியாரை, மரமஞ்சள் கஷாயம், மாசிக்காய்ச் சூர்ணம் போன்றவற்றைக் கொடுப்போம். அசோக கிருதம் (அசோகப்பட்டை சேர்ந்த நெய்), புஷ்யானுக சூர்ணம் (பாடாகிழங்கு, நாவல்கொட்டை, மாம்பருப்பு முதலிய மருந்துகள் சேர்ந்தது) போன்ற மருந்துகள் உள்ளன.

அப்படி இருந்தும் மாறிமாறி வருபவர்களுக்கு வாயுவின் நிலையற்ற தன்மை என்று கருதிக் கல்யாணக கிருதம் போன்றவற்றைத் தொடர்ந்து கொடுத்து,அவர்களுக்கு மலசுத்தி செய்து (மலத்தை வெளியேற்றி), ஒரு சில வஸ்தி (ayurvedic enema) சிகிச்சைகளைச் செய்வோம். உடல் எடையைக் குறைப்பதற்கு உள்ள மருந்துகளைக் கொடுப்போம். மனச் சோகத்தைத் தவிர்ப்பதற்கும் மருந்து கொடுப்போம். மூக்கில் நஸ்யம் (எண்ணெய் விடும் சிகிச்சை) செய்தலும், தாரை செய்வதும் இதற்கு முக்கியமான பிரயோகங்கள்.

உடல் எடையைக் குறைப்பதற்குச் சிலாஜத் (கன்மதம்) என்கிற மலையில் இருந்து கிடைக்கும் ஒரு தாதுப் பொருளைக் கொடுப்போம். இதற்கு கொழுப்பை அழிக்கும், எடை குறையச் செய்யும் குணம் உண்டு. இது கபத்தைக் குறைத்துக் கரையச் செய்து, உடலை மெலிய வைத்து மாதவிடாயை உருவாக்கும்.

சந்திரப்பிரபா குளிகை சிலாஜத் சேர்ந்த குளிகை அகும். ஒரு சிலருக்கு 30 நாட்களில் பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு ஒன்றரை வருடம்வரை சிகிச்சை தேவைப்படும். மிகுந்த பொறுமையும், நிதானமும் இந்தச் சிகிச்சைக்குத் தேவை.

இந்த நோய் இன்று காட்டுத் தீ போல் வேகமாகப் பரவிவருவதால், பருவமடையாத பெண்களை வீட்டில் வைத்திருக்கும் தாய்மார்கள் நொறுக்குத் தீனிகளைக் கொடுக்காமல் குழந்தைகளை உடல் வெயில்பட வைத்து, வியர்வை வரும்வரை உடற்பயிற்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் 10க்கு ஐந்து குழந்தைகள் இந்த மாதிரி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

அசோகம் செடி பெண்களுக்கு உகந்த மருந்து. அசோகப்பட்டை பெண்களுக்கு உயர்ந்த மருந்து. மாதவிலக்கான மூன்றாவது நாளில் வாழைப்பூ, பச்சை சுண்டைக் காய், வெண்டைக் காய் ஆகியவற்றைக் காரம் இல்லாமல் சேர்த்துக்கொண்டால் அதிக ரத்தப் போக்கு நிற்பதுடன், வெள்ளைப்படுதல் பிரச்சினையும் தீரும். துத்தி இலை, மிளகு, பூண்டு ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிட்டால் தடைப்பட்ட மாதவிலக்கு ஒழுங்காகும்.

மலை வேம்பும் விழுதி எண்ணெயும்

வேப்பமரத்தையொத்த எண்ணெய் குடும்ப மர வகையைச் சேர்ந்த, மிக வேகமாக வளரும் விலை மதிப்புமிக்க அரிய மர வகைகளில் ஒன்று மலைவேம்பு. இது ஒரு மூலிகை மரம். மலைவேம்பு மரத்தின் இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் ஆகிய அனைத்தும் மூலிகை வைத்தியத்துக்குப் பயன்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

பெண்களுக்குக் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தால், நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

விழுதி

இது தனியிலைகளையும் மங்கலான வெண்ணிற பூக்களையும் செந்நிறப் பழங்களையும் உடைய முள்ளில்லாத சிறு செடி. இதன் இலை, காய், வேர் முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. விழுதி இலையை இடித்துச் சாறு எடுத்து அதில் நல்லெண்ணெய் கலந்து 25 மி.லி. அளவு உட்கொண்டுவந்தால் சினை முட்டை உருவாகும்.

அதித ரத்தப்போக்கு உள்ள நிலையில் மலைவேம்பும், மாதவிடாய் வராத நேரத்தில் விழுதி எண்ணெயும், தாறுமாறாக வருகின்ற நிலையில் இவற்றின் இணைப்பு சிகிச்சையும் எனது அனுபவத்தில் பலன் அளித்துள்ளன.

Tuesday, August 23, 2016

மகளிருக்கு வரும் பொதுவான பிரச்சனைகள் . . .

மகளிருக்கு வரும் பொதுவான பிரச்சனைகள் . . .

மெனொரேஜியா—அதிகப் படியாக வெளியேறும் இரத்த கசிவு
என்றால் என்ன?

மாதவிடாய் நாட்களில் அதிக இரத்த கசிவு ஏற்படுதல்-- அதிக அளவு அல்லது அதிக நாள் வரலாம்

காரணங்கள் . . .

*பருவம் அடையும் போது வருவது.
*சினைப்பையில் நீர் கட்டிகள்
*கர்ப்பபையில் கட்டி
*கர்ப்பபையில் அதிக திசு வளர்ச்சி
*DUB—Dysfunctional uterine bleed
*அடிவயிற்றில் ஏற்படும் கிருமி தாக்கம்

பருவம் அடையும் சமயத்தில் ஏற்படும் மாறுதல் . . .

?*பருவம் அடைந்து சில மாதங்களே ஆகி இருந்து அதிக இரத்த கசிவு ஏற்படும்
*கீழ்காணும் பரிசோதனைகளை செய்ய வேண்டும்

1.Hb%, Thyroid profile
2.BT /CT
3.Pelvic scan

மருத்துவ சிகிச்சை . . .

*ஒரு வருடம் தரவேண்டும்

*இரத்த கசிவு குணமாகாத பட்சத்தில் ஹார்மோன் சிகிச்சைகள் அளிக்க வேண்டும்

சினைப்பை நீர் கட்டிகள் . . .

*மாத விடாய் மாறி மாறி வரும் ஸ்கேனில் சினைப்பையில் சிறிய நீர் கட்டிகள் இருப்பது தெரியும்.

*இதனால் உடல் பருமன் அதிகம் ஆகும், அதிக முகப்பருக்கள் வரும்,முகத்தில் தாடி வரலாம்.

கண்டறிந்து-குணப்படுத்துதல் . . .

*HORMONE PROFILE

*PELVIC SCAN

*திருமணம் ஆகாதவருக்கு—ஹார்மோன் சிகிச்சை

*திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்க்கு—நீர் முட்டைகள் உடைய மருந்துகள்

*குழந்தைகள் பெற்றபின் மாதவிடாய் சீராக வர மாத்திரைகள்

PCOD ஆல் ஏற்படும் மலட்டுதன்மை . . .

*மருந்துகள் மூலம் குணம் ஆகவில்லை என்றால் லேப்ராஸ்கோப்பி முறையில் அந்த நீர் கட்டிகளை உடைத்து விடவேண்டும்.

Fibroid Uterus—கர்ப்பபை கட்டி . . .

*சாதாரண வகை கட்டிகள்

*தனியாகவோ அல்லது அதிக எண்ணிக்கையிலோ வரலாம்.

*அதன் அளவு மாறலாம்.

*கர்ப்பபையில் எந்த பகுதியில் கட்டி ஏற்படுகிறது என்பதை பொறுத்து நோயின் வெளிப்பாடு மாறும்.

சிகிச்சை . . .

*மருந்துகளால் கட்டியின் அளவை குறைக்கலாம் ஆனால் மறையாது.

*பெரிய கட்டிகளுக்கும் அதிகமாக கட்டிகள் இருந்தாலும் அறுவை சிகிச்சை தேவை.

*சிறிய கட்டிகளை விட்டு விடலாம், அடிக்கடி ஸ்கேன் செய்ய வேண்டி வரும்.

*அதற்கு கட்டியை மட்டும் எடுப்பதா-கர்ப்பபை முழுவதும் எடுப்பதா—ஓபன் அறுவைசிகிச்சையா-லேப்ராஸ்கோபியா என்பது நோயாளியின் வியாதியின் தன்மையை பொருத்து மாறும்.

கர்ப்பபை சதை கட்டிகள் . . .

*மத்திய வயது பெண்களுக்கு வரும்.

*அதிக இரத்தப்போக்குடன் வலியும் சேர்ந்து வரும்.

*மருந்துகளுக்கு கட்டுபடாவிட்டால் கர்ப்பபையை எடுக்க வேண்டிவரும்.

Dysfunctional Uterine Bleeding . . .

*Patient with persistant bleeding p/v when all other causes are ruled out is labeled as DUB.

*TREATMENT Options depend on individual choice ,medical ,endometrial ablation,hysterectomy

அடி வயிற்றில் வரும் கிருமி தாக்கம் . . .

*அடி வயற்றில் உள்ள உறுப்புகளை பாக்டீரியா கிருமி தாக்குவதால் வரும்.

*இதனால் மாதவிடாய் சமயத்தில் அடி வயறு வலிக்கும் ஆன்டிபயாடிக்ஸ் மருந்துகளால் நோயை குணப்படுத்தலாம்.

வெள்ளை படுதல் . . .

*கலர் இல்லாமல், அளவு குறைவாக நாற்றம் இல்லாமல் இருந்தால் அது இயற்கையானது.

*அதிக படியாக நாற்றத்துடன் தயிர் போன்றோ, பச்சையாகவோ இரத்தம் கலந்தோ வந்தால் அது வியாதி.

*சிகிச்சை எடுக்காமல் தொடர்ந்து வந்தால் அது கர்ப்பபாதை புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்-ஆகவே சிகிச்சை அவசியம்.

வெள்ளை படுவதற்கான காரணங்கள் . . .

*Vaginitis
*Cervicitis
*Erosion of cervix
*Cervical polyp
*Vaginal prolapse
*Cervical cancer

எப்படி தெரிந்து கொள்ள?---PAP SMEAR . . .

*வெளி நோயாளி பரிசோதனை முறை

*வலியில்லை

*35 வயதுக்கு மேல் உள்ள அனைத்து பெண்களும் வருடம் ஒருமுறை செய்து கொள்ளுதல் நன்று.

*ஏனெனில் கர்ப்பபை பாதை புற்றுநோய் தான் மகளிருக்கு வரும் பிரதான புற்று நோய்

*PAP smear டெஸ்ட் மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்
*Pap smear is included in MHC FOR WOMEN

சினைப்பை நீர்கட்டி...

 சினைப்பை நீர்கட்டி...

                         சினைப்பையில் சிறு சிறு கட்டிகள் காணப்படும் நிலையை சினைப்பை நீர்க்கட்டிகள் என்று கூறுவர். பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவது பரவலாக காணப்படுகிறது. இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.

சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது.

இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது.

பெரும்பாலும் 1முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2,3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.

இவ்வாறு மாதவிலக்கு தள்ளிப்போவது பல பிரச்சனைகளுக்கு வழிகோலுகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. ஆண்மைத் தன்மை பெண்களுக்கு மிகுதியாகிறது. ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் ரோமம் வளர ஆரம்பிக்கிறது. தேகத்திலும் ரோமங்கள் வளரும். சினைப்பைகள் அளவில் பெரிதாகும். சினைப்பை நீர்க் கட்டிகளில் நீர் சேர்வதே இதற்கு காரணமாகும்.

சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

நோயுண்டாக்கும் காரணத்தை அறுதியிட்டு கூற முடியுமா எனில் இயலாது என்றுதான் கூறவேண்டும். இந்நோய் பெரம்பாலும் பருவமடைந்த மங்கைகளில் காணப்படும் . எனினும் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.

மரபணு மூலமாகவும், பரம்பரையாகவும் இந்நோய் வரலாம்.

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. ஊகுஏ எனும் ஹார்மோன் குறைந்து காணும். ஃஏ எனும் ஹார்மோன் அதிகரித்துக் காணும். சில சமயங்களில் அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன்கள் அதிகரித்துக் காணும்.

டெஸ்டோஸ்டிரான் அதிகரித்துக் காணும்.

புரோலாக்டின் அதிகரித்துக் காணும்.

மாதவிடாய் கோளாறுகள்

ஒரு பெண் பூப்பெய்திய பின் முறையாக மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு உண்டாகும். இது இயல்பானது. ஆனால் இந்நோய் கண்ட சிலருக்கு மாதந்தோறும் மாதவிலக்கு நிகழாது. சில பெண்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் சினைமுட்டை வளர்ச்சியின்றி மாதவிடாய் நிகழும். இயல்பாக பெண்களில் மாதந்தோறும் சினைப்பையில் இருந்து ஒரு சினைமுட்டை வளர்ந்து வெளிப்படுகிறது.

0.5-1 மி.மீ. அளவிலான கட்டிகள் சினைப்பையில் ஓரத்தில் காணப்படும். பத்துக்கு மேற்பட்ட கட்டிகள் காணப்படும். 20 மி.மீ. அளவுக்கு மேல் கட்டிகள் பெரும்பாலும் பெரிதாவதில்லை. சினைப்பையின் மேற்பரப்பில் நெக்லஸ் அமைப்பில் ஸ்கேன் சோதனையில் கட்டிகள் காணும். சினைப்பை அளவில் பெரிதாக காணப்படும்.

இந்நோயுற்ற பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்திற்கு அதிகமாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளல் அவசியம்.

மலட்டுத் தன்மை

சினை பை நீர்கட்டிகள் பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மைக்கு 30% வரை காரணமாக இருக்கிறது. சாதாரணமாக கருத்தரிக்க இயலாமல் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான பெண்களுக்கு இந்நோய் இருக்கிறது. இதற்கு சிகிச்சையளித்தாலே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

முடி வளர்ச்சி

பெரும்பாலும் பெண்களுக்கு முகத்திலும், உடலிலும் அதிகளவில் முடிகள் இருப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும்.

குறிப்பாக மேலுதடு, கீழ்தாடை, மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, முன்கைகளில் முடி வளர்ச்சி காணப்படும்.

தோலில் காணப்படும் மாற்றங்கள்

உடலில் சில இடங்களில் கருமை நிறம் அதிகரித்து காணும்.

பெரும்பாலும் கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதிகளில் இம்மாற்றம் காணப்படுகிறது.

ஆய்வுகூடத் தேர்வுகள்

ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.

ஹார்மோன்களின் அளவுகளை பரிசோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

மருத்துவம் மற்றும் ஆலோசனைகள்

சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன என்பதை சூதகதடை, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுணங்களைக் கொண்டு யூகிக்கும்போது அல்லது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும்போது பெண்கள் செய்யவேண்டிய முதற் காரியம் அவர்களது உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதேயாகும்.

உடல் எடையை குறைத்தல்

தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி மேற் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கின்றன. நடைபயிற்சி மூலம் ஒரு மாத காலத்திலேயே நல்ல பலனை அடையலாம்.

நடை பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இயற்கை உணவுகளான காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் சீராக

சினைமுட்டை முதிர்ச்சியடைந்து வெளிப் படுதலைத் தூண்ட ஆங்கில மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

எனவே சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு ஏற்ற மருத்துவம் சித்த மருத்துவமே என்று கூறலாம். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் பக்க விளைவுகளின்றி அறுவை சிகிச்சையின்றி சினைப்பை நீர்க்கட்டிகளை அகற்றிவிடலாம்.

சினைப்பை நீர்க்கட்டிகள் கரைய தொடங்குகின்ற போதே சினைமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் சூழல் உருவாகிறது.

============================================

நீர்க்கட்டிகளை விரட்டினால்... வாரிசு ஓடி வரும்!

'குழந்தையின்மை பிரச்னைக்குத் தீர்வு தருகிறோம்' என்றபடி ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 'கருத்தரிப்பு மையங்கள்' பலவும், காசு பார்க்கும் வெறியில், பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுவது வாடிக்கையாகிப் போய்விட்டது. இதுதான் காரணம் என்பதை அறியாமல், 'கடவுளே சொல்லிட்டார்' என்பதுபோல, 'டாக்டர் சொல்லிட்டார்' என்றபடி நம்பிக்கையோடு நடைபோடுகிறார்கள் பெண்கள் பலரும். ஆனால், நிஜத்தில், பெரும்பாலும் மோசடி வேலைகளே நடக்கின்றன. இதைப் பற்றி கடந்த இரண்டு இதழ்களாக எழுதியிருந்தோம்.

''குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு... பெரும்பாலும் நம்மிடமே இருக்கிறது. நம்முடைய உடல்நலத்தை தகுந்தபடி பேணுவதோடு, உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் அக்கறை காட்டினால், இத்தகைய பிரச்னைகளில் இருப்பவர்களில்  80 சதவிகிதத்தினருக்கும் மேல், பைசா செலவில்லாமலேயே... குழந்தைப்பேறு அடைய முடியும்'' என்பதுதான் நம்முடைய மண்ணின் மருத்துவர்களான சித்த மருத்துவர்கள் சொல்லும் தீர்வாக இருக்கிறது!

உணவும், வாழ்க்கை முறையுமே மருந்து!
இங்கே அதைப் பற்றி பேசுகிறார்... சென்னையைச் சேர்ந்த பிரபல சித்த மருத்துவர், கு.சிவராமன். ''பெரும்பாலான கருத்தரிப்பு பிரச்னைகளை சிகிச்சையின்றியே தீர்த்துக்கொள்ளலாம். கருத்தரித்தலுக்கான முக்கியக் காரணமான மாதவிடாய் சிக்கல் ஏற்பட, நீர்க்கட்டிகளே பிரதான காரணம். சத்து இல்லாத 'ஜங் ஃபுட்' உணவுப் பழக்கம், அளவுக்கு அதிகமான இனிப்புகள் உண்பது, எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடப்பது, நேரங்காலமில்லாமல் உண்பது, உரிய நேரத்தில் உண்ணாமல் இருப்பது... இதுபோன்ற காரணங்களால் நீர்க்கட்டிகள் ஏற்படலாம். தினசரி உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறி, பழங்கள் சேர்த்து, முறையாக யோகா செய்தாலே போதும்... நீர்க்கட்டிகளைத் தவிர்க்கலாம். பெற்றோர்களே... இதை கண்டிப்பாக உங்கள் பெண் பிள்ளைகளிடம் அறிவுறுத்துங்கள்.

ஏற்கெனவே நீர்க்கட்டி இருப்பவர்கள், அதிலிருந்து குணம்பெற தினமும் 45 நிமிடம் வேகமான நடைபயிற்சி செய்யலாம்; 20 - 30 நிமிடங்கள் யோகா செய்யலாம். நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதுடன் சிறுதானியம், கீரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும் இனிப்பை யும் அறவே தவிர்க்க வேண்டும். சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பவருக்கு சர்க்கரை மற்றும் தைராய்டு பிரச்னை இருக்கும்பட்சத்தில், சுயமருத்துவமின்றி சித்த மருத்துவரை அணுகி தீர்வுகாண வேண்டும்.

மன அழுத்தத்தை விரட்டுங்கள்!
அடுத்த பிரச்னை, சினைப்பை அடைப்பு. இதற்கு மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். எனவே, மற்ற சிகிச்சைகள் எடுப்பதற்கு முன் கவுன்சலிங் எடுத்துக்கொண்டு, மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டாலே, அடைப்பு தானாக நீங்கிவிடும். அதேபோல் வெள்ளைப்படுதல் ஒரு முக்கியக் காரணம். சாதாரணமாக மாதவிடாய்க்கு 4 நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், துர்நாற்றம் வீசக்கூடிய அளவுக்கு அடிக்கடி வந்தாலோ... பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட்டாலோ கண்டிப்பாக மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதிலிருந்து விடுபட, வாரம் இருமுறை வெள்ளைப் பூசணிக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்த கூட்டு வைத்து சாப்பிடலாம். வெள்ளைப்பூசணி சாறு எடுத்துக்கொள்வதும் நல்லது. கண்டிப்பாக கோழி இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். சோற்றுக்கற்றாழை சாற்றை, உணவுக்கு முன் காலையில் எடுத்துக்கொள்ளலாம். சித்த மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் சோற்றுக்கற்றாழை லேகியம் சாப்பிடலாம். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் அவசியம். பிறப்புறுப்பில் பூஞ்சை அல்லது நுண்ணுயிர் தொற்று இருக்கும்பட்சத்தில், உரிய மருத்துவரை அணுகுதல் நல்லது.

சினைப்பை முட்டை வளர்ச்சி குறைவாக இருப்பது, கருமுட்டையானது சினைப்  பையிலிருந்து கருப்பைக்கு வர தாமதிப்பது, ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவையும் பெண்களைப் பொறுத்தவரை குழந்தை   யின்மைக்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன.
ஆண்களைப் பொறுத்தவரை, விந்தணு உற்பத்தி எண்ணிக்கை குறைவு, விந்தணு உற்பத்தியில்லாத ஆண்மைக் குறைவு, விந்தணுவின் இயக்கத்தில் குறைபாடு ஆகியவை முக்கியக் காரணங்கள். ஆண்களின் விந்தணு உற்பத்தி அதிகரிக்க, தினமும் காலையில் மாதுளையும், மாலையில் மஞ்சள் வாழையும் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைப்பூ மற்றும் பாதாம் பருப்பு கலந்த பாலை இரவில் அருந்த வேண்டும். பயறு வகைகளையும், புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மகத்துவம் தரும் மாதுளை... பப்பாளி!
பெண்ணின் கருப்பையை பலப்படுத்தவும், வருங்காலத்தில் குழந்தையின்மையைத் தவிர்க்கவும், ஒரு பெண் பூப்படைந்து மாதவிடாய் ஆரம்பிக்கும் காலத்தில் இருந்து வாழ்நாள் முழுக்கவே பின்வரும் உணவுக்குறிப்புகளைப் பின்பற்றலாம். உளுந்தங்களி, கருப்பைக்கு மிகவும் நல்லது; மார்பகங்களை சீராக வைத்திருக்கவும் உதவும். தோல் நீக்காத கறுப்பு உளுந்தை வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் எடுத்துக்கொள்வதுடன் மாதுளை, பப்பாளி போன்ற பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆண்களோ, பெண்களோ... பர்கர், பீட்ஸா மற்றும் துரித உணவுகளை உண்பதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கலாம். அதேபோல், உடற்பயிற்சியின்மையும் மலட்டுத்தன்மைக்கான காரணமாகலாம். சீரான உடற்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள், கருப்பை கோளாறுகளைத் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி செய்வது... ஆண்களுக்கு ஆபத்தா?
'ஆண்கள் உடற்பயிற்சி செய்வதால் விந்தணு உற்பத்தி குறைய வாய்ப்பிருக்கிறது’ என்றொரு தகவல் உண்டு. இது தவறான தகவல். ஆனால், உடற்பயிற்சிக்குத் தகுந்த, சத்தான உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, உடற்பயிற்சி மையங்களில் தரப்படும் புரோட்டீன் பவுடர்களை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்வது ஆகியவை விந்தணு குறைபாட்டுக்கு காரணமாகலாம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்'' என்ற டாக்டர் சிவ ராமன்,

''உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நெருப்புக்கு அருகில் வேலை செய்பவர்களுக்கு விந்தணு குறைபாடு ஏற்பட வாய்ப்பிருக் கிறது'' என்று எச்சரிக்கையும் தந்தார்.

மூலிகை வைத்தியத்தில் தீர்வு!
''விந்தணு குறைபாடு, கர்ப்பப்பை அடைப்பு மற்றும் சினை முட்டை உற்பத்தியின்மை போன்றவையே குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்கள். இவற்றை மூலிகை வைத்தியத்தின் மூலம் எளிதாக நிவர்த்தி செய்யமுடியும்'' என்கிறார் பழநிமலையை அடுத்துள்ள கொழுமம் கிராம மூலிகை ஆராய்ச்சியாளர் பிறைசூடிப்பித்தன்.

''ரசாயன இடுபொருள் பயன்பாட்டில் விளைந்த உணவுப் பொருட்கள், மது, புகை, மன உளைச்சல், குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போடுதல், உடல் பருமன் நோய் போன்ற பற்பல காரணங்களினால்... ஏழை, பணக்காரர் பாகுபாடின்றி ஆண், பெண் மலட்டுத்தன்மை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்னையை எளிமையாகக் குணப்படுத்தி, பிறருடைய விந்தணு மற்றும் கருமுட்டை என தேடிக்கொண்டிருக்காமல், அந்தந்த ஜோடியினரே ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றுக்கொள்ள மூலிகை வைத்தியத்தில் அநேக வழிகள் உள்ளன.

இதற்கு பொறுமை யும், ஒத்துழைப்பும் மிக அவசியம்.
சோற்றுக்கற்றாழை, மூசாம்பர மெழுகு, பெருங்காயம், வெல்லம் உள்ளிட்ட பலவற் றைப் பயன்படுத்தி பெண்ணின் சினைமுட்டை உற்பத்தியைப் பெருக்கவும் வழிஉண்டு. பப்பாளி, அன்னாசிப்பழம் இரண்டையும் குறைபாடு உள்ள பெண்கள் சாப்பிட்டு வந்தால்... முறையான மாதவிலக்கு சுழற்சி ஏற்படும். முறையான மூலிகை வைத்தியம் செய் தால்... கர்ப்பப்பை குறைபாடுகள், அடைப்பு, கட்டிகள் போன்றவற்றை கத்தியின்றி சரிசெய்யலாம்'' என்கிறார் பிறைசூடிப்பித்தன்.

#############################################

சினைப்பை நீர்க்கட்டி  --பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்,!!!

(எளிய இயற்கை மருத்துவத்தில் குணமான தோழி ஒருவரின் அனுபவம் )

வணக்கம் தோழிகளே எனக்கு pcos இருந்தது.டாக்டரிடம் சிகிச்சை எடுத்து 6 மாதமாகியும் குழந்தை உண்டாகவில்லை.அப்போது எனது அத்தை மலை வேம்பு சாறை மாதவிலக்கு ஆன முதல் 3 நாட்கள் வெறும் வயிற்றில் 1 டம்ளர் குடிக்க சொன்னார்கள்.அதன்படி குடித்தேன்.அடுத்த மாதம் சென்று பார்த்த போது கரு முட்டையின் வளர்ச்சியும் நன்றாக இருந்தது,நீர்க்கட்டியின் வளர்ச்சியும் குறைந்து இருந்தது.அடுத்த 3வது மாதத்தில் குழந்தை உண்டாகி விட்டது.இப்போது எனக்கு 6வது மாதம் நடக்கிறது.நீர்க்கட்டி இருக்கும் தோழிகள் முயற்சி செய்து பாருங்கள்.

 நானும் treatment எடுத்துக் கொண்டே தான் ஜுஸ் குடித்தேன்.அதனால் எதுவும் side effect இல்லை தோழி. மாத விலக்கு ஆன முதல் 3 நாட்கள் morning வெறும் வயிற்றில் 1 டம்ளர் ஜூஸ் குடிக்க வேண்டும்.1 மாதம் மட்டும் குடித்தால் போதும்.

1.நீர்க்கட்டி இருந்தால் தான் குடிக்க வேண்டும் என்பது இல்லை.குழந்தை உண்டாவது தள்ளிப் போகிறவர்களும் குடிக்கலாம்.
2.மலை வேம்பு வேப்ப மரத்தில் வேறு வகை.பார்க்க கருவேப்பிலை போல் இருக்கும்.சிலர் வீட்டில் வைத்திருப்பார்கள்.நாட்டு வைத்தியரிடம் கேட்டு பாருங்கள் உங்கள் ஊரில் அந்த மரம் எங்கு இருக்கிற்து என்று.
3.இலைகளின் அளவு சரியாக தெரியாது.கருவேப்பிலை ஜூஸ் 1 glass எடுக்க எவ்வளவு இலை செர்ப்போமோ அவ்வளவு சேருங்கள்.
4.பழச்சாறு டம்ளரின் அளவு.
5.தொடரலாம்.
6.ஜூஸ் குடிக்கும் 3 நாட்கள் மட்டும் தான் எண்ணெய்,புளிப்பு இல்லாத சாப்பாடு சாப்பிடனும்.மற்ற நாட்கள் எப்போதும் போல சாப்பிட்டுக் கொள்ளலாம்.
எங்கள் குடும்பத்தில் என்னுடன் சேர்த்து 3 பேர் குழந்தை உண்டாகி இருக்கிறோம்.அதனால் முயற்சி செய்து பாருங்கள் தோழி...

சினைப்பை (சூலக) நீர்க்கட்டி (PCOD - PCOS) !

சினைப்பை (சூலக) நீர்க்கட்டி (PCOD - PCOS) !
.
Poly (பாலி) என்பது பல
Cyst (சிஸ்ட்டிக்) எனப்படுவது தண்ணீர் நிரம்பிய கட்டி.
OVARY (ஓவேரியன்) எனப்படுவது பெண்களின் சூலகம்.
Disease (டிஸீஸ்)என்பது நோய்.

ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இது கரு முட்டைகளை (அண்ட அனுக்கள்) உருவாக்கி கருவாக்கம் நடைபெற்று குழந்தை உருவாகிறது.

ஒரு பெண்ணின் சூலகத்திலே நீர் கட்டிகள் பல உருவாவதே Poly Cystic Ovarian Disease (PCOD) எனப்படுகிறது.

Poly Cystic Ovarian Disease ஆனது பல அறிகுறிகளை (Syndrome) உருவாக்குகிறது. அந்த அறிகுறிகள் Poly Cystic Ovarian Syndrome (PCOS) என்று அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்
- குழந்தையின்மை - சூலகத்தில் சிறு சிறு நீர் கட்டிகள் பரவலாக காணப்படுவதால் சினை முட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது. இதனால் பெண்கள் கருத்தரிப்பதில் சிரமங்கள் ஏற்படுகிறது.

- ஹார்மோன் குறைபாடு - சூலக நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் தன்மை ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.

- ஒழுங்கற்ற மாதவிடாய் - சூலக நீர்க்கட்டிகள் உடைய பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக வராது. 2 - 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி வரும். சிலருக்கு இரத்தப்போக்கு குறைவாக இருக்கும். சிலருக்கு மிகுதியாக இருக்கும்.

- முகத்தில் முடி வளர்தல் - ஆண்மைத் தன்மை பெண்களுக்கு ஏற்படுவதால் ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் (மேலுதடு, கீழ்தாடை) முடி வளர ஆரம்பிக்கிறது. உடலிலும் (மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, கைகளில்) முடி வளரலாம்.

- எடை அதிகரித்தல் - மாதவிடாய் தள்ளிப்போவதால் உடல் எடை அதிகரிக்கிறது..

- முகப்பரு வரலாம்.

- நிற மாற்றம் - உடலில் சில இடங்களில் (கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதி) கருமை நிறம் அதிகரித்து காணும்.

இந்த அறிகுறிகள் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் இருக்கும் என்றில்லை. சூலக நீர்க்கட்டிகள் இருக்கும் போதே குழந்தைகள் பல பெற்ற பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பின்பு கூட சூலக நீர்க்கட்டிகள் வரலாம்

காரணம்
சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்

- நோய்க்கான காரணத்தை இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்த போதும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

- பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.

- வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

- கருத்தரிக்க இயலாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் பல போராட்டங்களை சந்திக்கின்றனர்.

ஆய்வக பரிசோதனைகள்
ஸ்கேன் செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.
ஹார்மோன்கள் சோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.

ஆலோசனைகள்

- உடல் எடையை குறைத்தல் - உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

- உணவு கட்டுப்பாட்டு - அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும், தவிர்த்தல் நல்லது. காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

- புகை - புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும்.

மருத்துவம்

மாதவிடாய் சீராக வெளிப்படுதலைத் தூண்ட நவீன மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.

ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ப ஹோமியோபதி மருந்துகள் உட்கொள்வதின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் ஹோமியோபதி சிறப்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் நல்ல பலன் பெறலாம்.

எப்போது மருத்துவரை சந்திக்கவேண்டும்

- 14 வயதாகியும் மாதவிலக்கு ஆரம்பிக்காவிட்டால்.

- ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய் ஏற்படுகிறது என்றால்.

- மார்பு , முகம் போன்ற இடங்களிலே முடி வளர்ந்தால்.

- உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்

- அளவுக்கு அதிகமாக முகப் பரு ஏற்பட்டால்.

- கழுத்து மற்றும் அக்குள் தொடை பகுதிகளிலே கருமை நிறமாற்றம் காணப்பட்டால். உடனே மருத்துவரை சந்திக்கவும்.

சித்த வைத்தியம் என்ன சொல்கிறது ?

சினைப்பை நீர்க்கட்டி : சித்த மருத்துவம் மாயமாக்கும்

பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். பெரும்பாலும் இன்று. சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டி தான் முதல் காரணமாக இன்று கற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினைப்பை நீர்க்கட்டிகள் (poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதி பயமும் உள்ளது. மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. ”பாலி சிஸ்டிக் ஓவரி”, என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம், உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.

இது தவிர பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும். சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக் கொள்வதும் நல்லது.

மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில் சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும். சிறிய வெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிட உதவும்.

Opinion 2

சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லது பயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

பிரச்னைக்குக் காரணம் என்ன? சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்க வேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின் அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம் காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.

நவீன மருத்துவமும் இதற்கு "ஹைப்பர் இன்ஸýலினிமியா'வைத்தான் காரணம் எனக் கருதி சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.

எடை குறைய...: தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமான நடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சி ஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும். மூலிகைத் தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மா சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

உணவு முறை என்ன?

பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல் எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்க வேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே உயர்த்தும் உணவை ("லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிட வேண்டும். கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். வெந்தயம், பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம் ஆகியவை சினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும் உதவும்.

சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகு ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.

மீசை வளர்வது ஏன்?

சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண் ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில் சுரக்கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசை வளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.

சினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே, கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது. பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதி மருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி - யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம் சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்.

குழந்தைப் பேறு!... அகத்தியரின் தீர்வு!!

குழந்தைப் பேறு!... அகத்தியரின் தீர்வு!! 

 அகத்தியர், சித்த மருத்துவம், பெண்களுக்கான தீர்வுகள் தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு. ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று.  தற்போதைய நவீன அலோபதி மருத்துவம் பல தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவ #3016; செலவு பிடிப்பனவாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு பல தீர்வுகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர். அவற்றை தொடர்ச்சியாக பதிவுகளின் ஊடே பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று அகத்தியர் அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியம் 600" என்னும் நூலில் இந்த முறை அருளப் பட்டிருக்கிறது.  கேளுநீ கெர்ப்பந்தான் வாழ்வதற்கு கெடியான நன்னாங்கள்ளி வேரு ஆளவேயரைத்துப் புன்னைக்காய் போலே ஆவின்வெண்ணெய் பாக்களவு கலந்து நீளநீகுளித்த முதல் மூன்றுநாளும் நினைவாகத் தானருந்த கெர்ப்பமுண்டாம் கோளறவே பத்தியந்தான் புளிபுகையும் கொள்ளாம லாவின்பால் சோறுமுண்ணே. - அகத்தியர். கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நன்னாங்கள்ளி வேரினை அரைத்து புன்னைக் காயளவு எடுத்து அத்துடன் பசுவின் வெண்ணெய் பாக்களவு கலந்து உட்கொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்குமாம். பத்தியமாக மருந்துண்ணும் மூன்று நாட்களும் புளியும், புகையும் நீக்குவதுடன் சாதத்தில் பசுப்பால் விட்டு சாப்பிடவேண்டும் என்கிறார். ஆச்சர்யமான தகவல்தானே!, தேவையிருப்பவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள்  தேவையுள்ளோருக்கு இந்த தகவலை அறியத் தரலாம்

சூலை நோய் தீர்க்கும் வல்லாதி தைலம்

சூலை நோய் தீர்க்கும் வல்லாதி தைலம் 

சித்த மருத்துவம், புலிப்பாணிச் சித்தர் வல்லாதி என்பது சேங்கொட்டையைக் குறிக்கும். இதன் தாவரவியல் பெயர் “Semecarpus anacardium” என்பதாகும். இது இயல்பில் நச்சுத் தன்மை கொண்டது. இதனை முதன்மையான மூலப் பொருளாகக் கொண்டு பல மருந்துகளை சித்த மருத்துவம் முன் வைக்கிறது. இதன் பொருட்டே பல்வேறு சித்தர்களும் வல்லாதியின் பெயரில் நூல்களே அருளியிருக்கின்றனர். அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்ற நூலில் சேங்கொட்டையினை தைலமாக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம்.  தானான வல்லாதி தைலமொன்று தயவாகச் சேங்கொட்டை அழிஞ்சிக்கொட்டை மானான பூவத்திக் கொட்டையொடு மைந்தனே யெட்டியுட கொட்டைதானும் வானான வேம்பின் புண்ணாக்குக்கூட வகையான சிவனது வேம்புமேதான் கானான இவையெல்லாஞ் சரியெடையாய்த் கனிவான கன்னியிட சாற்றில்போடே - புலிப்பாணி சித்தர். போடேநீ யொருநாள்தான் னூறவைத்துப் பொங்கமுடனிரு நாள்தா னெடுத்துலர்த்தி ஆடேநீ குழித்தைலமாக வாங்கி அப்பனே காசெடைதான் கொண்டாயானால் நாடேநீ பனைவெல்லந் தன்னிற்கொள்ளு நாயகனே சூலைபதினெட்டுந் தீரும் வாகேநீ போகாமல் மண்டலங்கால்கொள்ள மைந்தா பத்தியந் தானொன்றாகாதே - புலிப்பாணி சித்தர். சேங்கொட்டை, அழிஞ்சில் கொட்டை, பூவந்திக் கொட்டை, எட்டிக் கொட்டை, வேப்பம் புண்ணாக்கு, சிவனார் வேம்பு ஆகியவைகளை சம அளவில் எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு அது மூழ்கும் வரை கற்றாழை சாறு விட்டு ஒரு நாள் முழுதும் ஊறவைத்து, மறுநாள் எடுத்து நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துச் சேமித்துக் கொள்ள வேண்டுமாம். (குழித்தைலம் பற்றிய மேலதிக விவரங்களை இந்த இணைப்பில் காணலாம்.) இதுவே வல்லாதி தைலம். தினமும் இந்த தைலத்தில் இருந்து ஒரு பண எடை அளவு எடுத்து காலை அல்லது மாலை என ஏதேனும் ஒரு வேளை உண்ண வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் உண்டு வந்தால் பதினெட்டு வகையான சூலை நோய்கள் நீங்கும் என்கிறார். இந்த மருத்துவ முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. 

மாதவிலக்கு என்பது..

மாதவிலக்கு என்பது..

 பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் நமது உடலின் கழிவுகள் எப்படி வியர்வையாக, சிறுநீராய், மலமாய் வெளியேறுகிறதோ அப்படியான ஒன்றுதான் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு. அதைத் தாண்டிய முக்கியத்துவம் எதுவும் இந்த நிகழ்வுக்கு இல்லை. பெண்ணாய் பிறந்த எல்லோருக்கும் இது இயல்பான ஒன்றுதான். ஆனால் இதைப் பற்றிய தெளிவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக தவறான எண்ணப் போக்குகளே காலம் காலமாய் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. மாதவிலக்காகும் பெண்களுக்கு உடல் மற்றும் உளவியல் ரீதியாக நிறைய ஓய்வு தேவைப் படுகிறது. இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் அந்த நாட்களில் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தனர். நல்ல ஓய்வும், உடல் சுத்தமும் தேவை என்பதன் பொருட்டே மாதவிலக்கு என்கிற பெயர் வழங்கியது. பெண்களின் உடல் இயங்கியலில் ஏற்படும் இந்த இயல்பான நிகழ்வினைக் குறித்த எனது புரிதல்களையும், அதற்கு நம் சித்தர் பெருமக்கள் அருளிய சில தெளிவுகளையும் பொதுவில் வைப்பதே இந்த குறுந் தொடரின் நோக்கம். பெண்களின் கருப்பையில் உள்ள கருமுட்டையும், அதனை பாதுகாக்க வேண்டி உருவான மற்ற நீர்மங்களும் சிதைந்து பிறப்பு உறுப்பின் வழியே குருதிப்போக்கு ஏற்படுவதையே மாத விலக்கு என்கிறோம். இத்தகைய போக்கு குறிப்பிட்ட நபரின் உடல் அமைப்பினைப் பொறுத்து மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். ஒரு நாளில் குறைந்தது ஐம்பது மில்லி லிட்டர் முதல் 80 மில்லி லிட்டர் ரத்தம் இவ்வாறு வெளியேறும். இவை நம் உடலின் கெட்ட ரத்தம் என்றொரு தவறான நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது. பருவம் எய்திய பெண்களுக்கு இந்த மாதவிலக்கு 21 நாள் முதல் 45 நாட்களுக்குள் நிகழும். இது அவ்வந்த நபரின் வயது, உடல் அமைப்பு, அவர் வாழும் சூழல் மற்றும் அவர்களுடைய உளவியல் போன்ற கூறுகளைப் பொறுத்து முன் பின் நிகழலாம். மேற்சொன்ன காரணங்களினால் மிகக் குறைவான விழுக்காடு பெண்களுக்கு மட்டுமே சரியான சமயத்தில் அதாவது 21 நாட்களில் மாதவிலக்கு உண்டாகிறது என்பது குறிப்பிடத் தக்கது. மாதவிலக்கு சுழற்சி என்பது என்ன?, அது எதனால் நடை பெறுகிறது? எவ்வாறு நடைபெறுகிறது என்பதை விளக்கும் அசைபடம் ஒன்றினை இணைத்திருக்கிறேன். சுருக்கமாக சொல்வதென்றால் பெண்ணின் சூலகத்தில் உருவான கருமுட்டையானது வளர்ச்சி அடைந்து முதிர்ந்த நிலையில் கருப் பையில் வந்து சேர்கிறது. இவ்வாறு வந்த கருமுட்டையை பாதுகாக்க வேண்டி கருப்பையானது சில நீர்மங்களை உருவாக்கி கருமுட்டையை பாதுகாக்கிறது. மேலும் கருவறையின் சுவர்கள் தடித்து கருமுட்டையின் வளர்ச்சிக்குத் தேவையான குருதியை நிரப்பி வைக்கிறது. இந்த காலகட்டத்தில் கருத் தரிப்பு நிகழாவிட்டால், அந்த கருமுட்டையானது சிதைந்து அழிந்து கருப்பை உருவாக்கிய நீர்மங்களோடு சேர்ந்து குருதியாக பிறப்பு உறுப்பின் வழியே வெளியேறுகிறது. இந்த நிகழ்வு சுழற்சி முறையில் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனையே மாதவிலக்கு சுழற்சி என்கிறோம்.

மாதவிலக்கு, ஏன்?, எதனால்?, எப்படி?

மாதவிலக்கு, ஏன்?, எதனால்?, எப்படி?

 பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் மனித உடலின் வளர்ச்சி மற்றும் சீரான செயல்பாட்டினை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதில் சுரப்பிகளின் பங்கு முக்கியமானது. இவற்றால் சுரக்கப் படும் நீர்மங்களே (Hormones) உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் “ஹைப்போதாலமஸ்” (hypothalamus) என்னும் சுரப்பிதான் மனிதனின் இனப் பெருக்க செயல்களை கண்காணித்து செயல்படுத்துகிறது. ஹைப்போதாலமஸ் சுரப்பியினால் சுரக்கப்படும் இயக்கு நீர்மமான Gonadotropin releasing hormone (gnrh) சுரந்தவுடன், இதன் கட்டுப் பாட்டில் இருக்கும் Anterior pituitary gland எனும் சுரப்பி விழித்துக் கொள்ளும். இந்த சுரப்பி தன் பங்கிற்கு இரண்டு இயக்கு நீர்மங்களை சுரக்கிறன்றது. அவை முறையே Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) என்பனவாகும். இந்த இரண்டு இயக்கு நீர்மங்களே கருமுட்டையை உற்பத்தி செய்யும் சூலகங்களை தூண்டுகிறது.  இதே சமயத்தில் கருவறையின் உட்புறத் தோல் கோழைப் படிவமாக தடிக்கத் துவங்கும், இந்த செயல் பதினைந்து நாட்கள் வரை நீடிக்கும். அரை செண்ட்டி மீட்டர் அளவு தடிமனான இந்த கோழைப் படலத்திற்கு அடியில் இருக்கும் நுண்ணிய குருதி நாளங்களில் குருதி பாய்ந்து நிரம்பும். ஒரு வேளை கரு தரித்து விட்டால் அந்த கருமுட்டையை பாதுகாக்கவும், வளரச் செய்யவுமே இந்த ஏற்பாட்டினை கருவறை செய்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் கருத்தரிப்பு நிகழாவிட்டால் இந்த கருவறையின் உட்புறத்தில் உருவாகி இருந்த பஞ்சு மெத்தை போன்ற அமைப்பு துண்டு துண்டாக பிய்ந்து பிறப்பு உறுப்பின் வழியே வெளிப்பட ஆரம்பிக்கும். அப்போது இந்த கோழைப் படலத்தின் கீழே உள்ள நுண்ணிய குருதிநாளங்கள் உடைந்து அதில் நிரம்பியிருந்த குருதியும் வெளியேறும். இவ்வாறு வெளியேறும் கழிவை “சூதகம்” என்கிறோம். இது இயல்பான ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. ஆனால் எல்லாப் பெண்களுக்கும் இத்தகைய மாதவிலக்கு சுழற்சி இயல்பாக நடப்பதில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மேலும் இந்த மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னதாகவும், மாதவிலக்கின் போதும் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை அனுபவிக்க வேண்டி வருகிறடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

மாத விலக்கும், உடல் உபாதைகளும்.

மாத விலக்கும், உடல் உபாதைகளும். 

பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் மாதவிலக்கு என்பது பெண்கள் பருவம் எய்திய நாள் துவங்கி நாற்பத்தி ஐந்து முதல் ஐம்பது வயது வரையில் தொடரும் ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. மூளையில் உள்ள Anterior pituitary gland எனும் சுரப்பியினால் சுரக்கப் படும் இரண்டு இயக்கு நீர்மங்களான Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) ஆகியவையே மாதவிலக்கு சுழற்சியினை முறைப்படுத்துகின்றன.  இவற்றில் Follicle Stimulating Hormone(FSH) எனும் இயக்கநீர் சூலகத்தில் கருமுட்டையை உருவாக்கி வளர்க்கும் வேலையைத் தூண்டுகிறது. Luteinizing Hormone(LH) எனும் இயக்க நீர் முதிர்ந்த கருமுட்டையை சூலகத்தில் இருந்து வெளித் தள்ளி கருவறைக்கு செல்லும் பாதைக்கு நகர்த்தும் வேலையினை தூண்டுகிறது. இந்த நீர்மங்களின் சுரப்பு விகிதம் ஒன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் இருக்கும் வரை மாதவிலக்கு சுழற்சி சுமூகமாய் நடந்து கொண்டிருக்கும். மாறாக இவற்றின் விகிதங்கள் மாறுபட்டால் அவை மாதவிலக்கு சுழற்சி மற்றும் கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கும், மேலும் அவை தொடர்பான வேறு சில நோய்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக அமைந்து விடுகிறது.  நம்மில் பெருவாரியான பெண்களுக்கு சுமூகமான மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னரே உடல் மற்றும் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை பெண்கள்எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இதனை ”Premenstrual syndrome” (PMS) என்கின்றனர். சமீபத்தைய ஆய்வறிக்கை ஒன்றின் படி இந்த காலகட்டத்தில் பெண்கள் 200 வகையான உடல் உபாதைகளை எதிர் கொள்கிறார்களாம்.இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னவோ நமது முன்னோர்கள் இந்த நாட்களில் பெண்களுக்கு  பூரண ஓய்வினை அளித்தனர். விரக்தி, கோபம், எரிச்சல், படபடப்பு, ஆத்திரம், அழுகை, சோம்பல் போன்றவைகளை உளவியல் பாதிப்புகளாக கூறலாம். அடி வயிற்றில் வலி, மார்பகங்கள் கனத்து வலி ஏற்படுதல், தலைவலி,வாந்தி,வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு என உடலியல் உபாதைகளின் பட்டியல் நீள்கிறது. மாதவிலக்கின் போது பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சிரமம் குருதிப் போக்கு. நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு 50 முதல் 80 மில்லி குருதி ஒரு நாளில் வெளியேறும். துவக்கத்தில் அதிகமாய் இருக்கும் இந்த குருதிப் போக்கு அடுத்தடுத்த நாட்களில் குறைந்து விடும். ஆனால் சிலருக்கு குருதிப் போக்கு மிக அதிகமாகவும், சிலருக்கு குருதிப் போக்கே இல்லாமலும் இருக்கும்.  கருப்பையின் வாய்(cervix) சிறியதாக இருப்பவர்களுக்கு சூதகம் வெளியேறும் போது கடும் வலி ஏற்படும். மேலும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிவதாலும் வலி உண்டாகும். சிலருக்கு கருப்பையானது வழமையான நிலையில் இருந்து மாறி அமைந்திருக்கும், அத்தகையவர்களுக்கும் அதிக வலி உண்டாகும். கருமுட்டை சிதைந்து வெளியேறும் போதும் வலியேற்படும். இத்தகைய வலிகளை தவிர்க்க தற்போது பல்வேறு மருந்து மாத்திரைகள் உள்ளன. எனினும் இயன்றவரை அவற்றை தவிர்த்து விடுதல் நலம். இந்த நாட்களில் உணவில் இனிப்பை முற்றிலுமாக தவிர்த்துவிட்டால் வலியின் தாக்கம் குறைவாக இருக்கும்.மேலும் வென்னீர் ஒத்தடம் கொடுப்பதும் பலனைத் தரும். இது தொடர்பில் சித்தர்கள் அருளிய தீர்வுகளை தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன். இயல்பான சுழற்சியில் மாதவிலக்கு ஆகாதவர்கள், தாங்க இயலாத வலி மற்றும் உடல் உபாதைகளை எதிர் கொள்வோர், முப்பது வயதைத் தாண்டியவர்கள் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ளவது அவசியம்.ஏனெனில் இத்தகைய உபாதைகள் வேறு சில நோய்களின் அறிகுறியாக இருக்கும் வாய்ப்புள்ளது. துவக்க நிலையில் மருத்துவரை அணுகுவது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். மாதவிலக்கு தொடர்பில் பெண்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் நோய்களைப் பற்றி 

மாத விலக்கும், நோய்களும்!

மாத விலக்கும், நோய்களும்! 

 பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் மாதவிலக்கின் போது ஏற்படும் வலி மற்றும் குருதிப் போக்கு போன்றவை இயல்பான உடல் இயங்கியல் நிகழ்வுதான் என்றாலும் கூட, சமயங்களில் தாங்க இயலாத வலியும், கட்டுப் பாடில்லாத குருதிப் போக்கும் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். ஏனெனில் இவை மாதவிலக்கு தொடர்பான வேறு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். இவற்றில் முதன்மையானது கிருமித் தொற்றினால் ஏற்படும் அழற்சி (Inflammation). கருவறையின் வாயிலில், கருவறையின் உட்புறத்தில் இத்தகைய அழற்சிகள் ஏற்படலாம். இதனால் இந்த உறுப்புகள் வீங்கி, புண்ணாகும் போது ஆரம்பத்தில் வலியையும், பின்னர் வலியுடன் கூடிய குருதிப் போக்கினையும் உருவாக்கும். மேலும் முறையற்ற உடல் உறவினாலும் பாலியல் தொடர்பான கிருமித் தொற்றுகளினாலும் நோய் உண்டாகும்.இவ்வாறு உருவாகும் நோய்களை  ”Pelvic inflammatory disease” என்கின்றனர். இவை தவிர கருவறையின் உட்புறச் சுவற்றில் “Fibroids” எனப்படும் தசைநார் கட்டிகள் வளரும் வாய்ப்பு உள்ளது. இதனாலும் அதிக அளவில் குருதிப் போக்கு உண்டாகும். இவற்றின் தன்மை மற்றும் அளவினைப் பொறுத்து அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றிவிடலாம். பெண்களின் சூலகத்தில் முதிர்வடையாத கரு முட்டைகள் நிறைந்திருக்கும். இவற்றை வளர்ச்சியடையச் செய்யும் இயக்க நீர்மமான Follicle-stimulating hormone தேவையை விட குறைவாக சுரக்குமானால் இந்த கருமுட்டைகள் வளராமல் சூலகத்தில் தேங்கிவிடும். இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லாது போகும். இத்தகைய பெண்களுக்கு உடல் எடையும் அதிகரிக்கும். வளரிளம் பருவத்தில் உள்ள பெண்களில் கணிசமானவர்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாய் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மாதவிலக்கு சுழற்சியில் கருமுட்டையை ஏந்தி பாதுகாத்திட கருவறையின் உட்புறத்தில் பஞ்சு போன்ற கோழைப் படலம் உருவாகி பின் அழியும் என பார்த்தோம். சிலருக்கு கருவறையின் வெளிப்புறத்திலும் இத்தகைய கோழைப் படலம் உருவாகி அழியும். இதனை புற கருவறை வளர்ச்சி “Endometriosis” என்கிறோம். இத்தகையவர்களுக்கும் கடுமையான வலியுடன், குருதிப் போக்கும் அதிகமாய் இருக்கும். முறையான மருத்துவ ஆலோசனையின் பேரில் இதற்கான தீர்வுகளை காணலாம். தற்போதைய அவசரயுகத்தில் தங்களுடைய தேவைக்காக மாதவிலக்கினை தள்ளிப் போடும் மருந்துகளை சிலர் எடுத்துக் கொள்கின்ற்னர். அவர்களுக்கும் மாதவிலக்கின் போது மேற்சொன்ன பிரச்சினைகள் வரும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதினாலும் கடுமையான உடல் உபாதைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இவை தவிர சூலகத்தில் உருவாகும் நீர்ம கட்டிகள், முழுமையாக வளர்ச்சியடையாத கருவறை, உடல் சுத்தம், வாழ்வியல் சூழல், உளவியல் கூறுகள் போன்றவைகளும் மாதவிலக்கு சுழற்சி தொடர்பான உபாதைகளுக்கு காரணமாகின்றன. இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பெரும்பான்மையான பெண்களிடத்தில் இல்லை என்பது வருத்தம் தரும் உண்மை. இயல்பான உடல் இயங்கியல் நிகழ்வான மாதவிலக்கில் ஏற்படும் குறைபாடுகளை உரிய சிகிச்சையின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். அதற்கு தற்போதைய நவீன மருத்துவம் பல்வேறு தீர்வுகளை முன் வைக்கின்றன. எனினும் நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே இந்த தொடரின் நோக்கம் என்பதனால் இனி வரும் நாட்களில் சித்தர் பெருமக்கள் இது தொடர்பில் அருளிய சில தீர்வுகளை பகிர்ந்து கொள்கிறேன். 

மாதவிலக்கு. உணவும், தீர்வும்!

மாதவிலக்கு. உணவும், தீர்வும்! 

பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் நமது உடல் இயக்கம் என்பது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வரை, அதைப் பற்றி நாம் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் இந்த இயக்க சுழற்சியில் ஏதேனும் இயல்பு மீறுதல் அல்லது மாற்றம் அடையும் போது, நமக்குள் இனம் புரியாத பதற்றமும், பயமும் தொற்றிக் கொள்கிறது. இந்த பதற்றமே பாதி நோயாகி விடுவதை நம்மில் பலரும் உணர்வதே இல்லை. மாதவிலக்கு சுழற்சியில் ஒழுங்கின்மை, உடல்வலி, மேலதிக குருதிப் போக்கு நிகழும் போது அதற்கான காரணம் தெரியாததினால், ஏற்படும் பயமும், பதட்டமுமே பலருக்கு கூடுதல் உடல், உள்ள நலிவை ஏற்படுத்துகிறது. இதன் பொருட்டே மாதவிலக்கின் அனைத்து கூறுகளையும் பற்றி எழுதிட நேர்ந்தது. இப்போது மாதவிலக்கு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்த தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இனி அவற்றை தீர்க்கும் வழிவகைகளை பற்றி பார்ப்போம். இந்த தொடரில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். இந்தத் தகவல்களைக் கொண்டு முறையான வல்லுனர்கள், மருத்துவர்களின் உதவியோடு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றிட வேண்டுகிறேன். உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு வகையான தீர்வுகள் இருக்கின்ற்ன.  முதலாவது வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள், மற்றது மருந்துகள் சார்ந்த தீர்வுகள்  அதென்ன வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள்? நமது எண்ணம், செயல், சிந்தனைகளே, நமது வெளிப் புற அடையாளங்களையும், உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது உடல் இயங்கியலின் செயற்பாட்டை தீர்மானித்து ஒழுங்கு செய்வதும் நம்மில் இருந்தே துவங்குகிறது. இதனையே நமது முன்னோர்களும் காலம் காலமாய் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். எளிமையாய் சொல்வதென்றால் “இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்வு” என்பதே நம்முடைய அத்தனை பிரச்சினைகளுக்கும் நீண்ட கால, நிரந்தர தீர்வாய் அமையும். ஆனால் நிதர்சனத்தில் நாம் அனைவருமே இயல்புக்கு மீறிய வாழ்வியல் சூழலில் வாழ்ந்திடும் கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை உணர்ந்து இயன்றவரை இயற்கையோடு இணைந்து வாழும் முயற்சியினை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். நமது உடல் என்பது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து மூலங்களினால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்த ஐந்து மூலங்களின் அளவும், விகிதமும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் மாறுபடுகிறது. இதனை உணர்ந்து நமது உடலின் தன்மைக்கேற்ற உணவு மற்றும் வாழ்வியல் சூழலை அமைத்துக் கொள்வதே ஆரோக்கிய வாழ்விற்கான நீண்ட கால தீர்வாக அமையும். நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவு மற்றும் உடல் பயிற்சிகளினால்தான் அவர்கள் நோயற்ற நெடு வாழ்வு வாழ்ந்திருக்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களை முன்னரே இங்கு தொடராக பகிர்ந்திருக்கிறேன். அந்தத் தகவல்களை மீண்டும் இங்கே பகிர்வது அவசியம் என்பதால் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன்.

மாதவிலக்கும், வெள்ளை படுதலும்

மாதவிலக்கும், வெள்ளை படுதலும்

 பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் மாதவிலக்கு தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்வதுதான் இந்தத் தொடரின் முதன்மையான நோக்கம் என்றாலும் கூட, இது ஒரு நோய், பெண்களுக்கான சாபம், தீராத துன்பம், தீட்டு என காலம் காலமாய் பலவாகிலும் கட்டமைக்கப் பட்ட கருத்தாக்கங்களை களைந்து, மாதவிலக்கு என்பது சாதாரணமான உடல் இயங்கியல் நிகழ்வு என்பதனை அனைவரும் உணர்ந்திட வேண்டியே இத்தனை நீளமான அடிப்படை விளக்கங்களை எழுதிட நேர்ந்தது. சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்வதற்கு முன்னர், இரண்டு நண்பர்கள் மின்னஞ்சலில் எழுப்பியிருந்த கேள்விகளுக்கான பதிலாய் இன்றைய பதிவு அமைகிறது. அந்த கேள்வி இதுதான்....வெள்ளை படுதல் எனப்படும் வெள்ளை ஒழுக்கும், மாதவிலக்கும் ஒன்றா?, வெவ்வேறென்றால் வெள்ளைப் படுதல் என்பது என்ன?. எப்படி நமது கண்கள், காதுகள், வாய், ஆசனவாய் போன்ற உறுப்புகள் உடலின் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கின்றனவோ, அதைப் போலவே நமது பிறப்பு உறுப்பும் வெளிப்புறத்திற்கும், உள் உறுப்புகளுக்கும் பாலமாய் அமைந்திருக்கிறது. நமது வாயில் உமிழ்நீர் சுரந்து வாயின் உட்புற அமைப்பினை பராமரிப்பது போல, நமது பிறப்பு உறுப்பும் இயல்பாகவே ஒரு நீர்மத்தை சுரந்து பிறப்புறுப்புகளை பராமரிக்கிறது. இந்த நீர்மம் நிறமற்றதாகவும், மணமற்றதாகவும் இருக்கும். நாளொன்றிற்கு நான்கு மில்லி லிட்டர் வரை சுரக்கும். இது எல்லா வயதினருக்கும் இயல்பாக நிகழக் கூடிய ஒன்றுதான். எனவே மாதவிலக்கும், வெள்ளைப் படுதலும் அடிப்படையில் வெவ்வேறானவை.  எனினும், உடல் நல பாதிப்புகள், உடல் இயங்கியலில் ஏற்படும் மாற்றங்கள், நோய்த் தொற்று பாதிப்பு போன்றவைகளால் இந்த நீர்மம் இயல்பைவிட அதிகமா வெளியேறும். இந்த நீர்மம் வழவழப்பாகவும், வெள்ளை, மஞ்சள், பச்சை நிறத்திலும், குருதி கலந்த நிலையிலும் வெளியேறும். தீவிரமான நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு மிகுந்த துர் நாற்றத்துடனும் நுரைத்த நீர்மமாகவும், தக்கை தக்கையாவும், இறுகிய நீர்மமாகவும் வெளியேறும். இதனையே வெள்ளை படுதல் என்கிறோம். மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னர், மாதவிலக்கு முடிந்த பின்னர், கருத்தரித்த சமயங்களில், குழந்தை பேற்றிற்கு பின்னர், கருத்தடை சாதனங்கள், மருந்துகளை உட்கொள்ளும் போது, நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் போது, முறையற்ற பாலியல் பழக்கங்கள் என பல்வேறு காரணங்களினால் இத்தகைய வெள்ளை ஒழுக்கு ஏற்படுகிறது. மொத்தத்தில் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்த் தொற்று, மற்றும் உடலின் அமில, காரத் தன்மையில் ஏற்றத்தாழ்வு ஆகியவையே அதிகமான வெள்ளை போக்கினை உருவாக்குகின்றன. மேலும் ஒருவரின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தும் இது மாறுபடுகிறது.  முறையான உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி, அழுத்தங்கள் இல்லாத வாழ்வியல் சூழல் போன்றவையே இதற்கு நீண்டகால தீர்வாக அமையும். எனினும் ஆரம்ப நிலையில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்வதன் மூலம் எளிதில் குணப்படுத்தி விடக் கூடிய ஒன்றுதான் வெள்ளை படுதல். இனி வரும் பதிவுகளில் மாதவிலக்கு பிரச்சினைகளை எதிர்கொள்வது மற்றும் சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகள் குறித்து பார்ப்போம். 

மாதவிலக்கு. உணவும், தீர்வும்!:

மாதவிலக்கு. உணவும், தீர்வும்!: 

பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் நமது உடல் இயக்கம் என்பது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வரை, அதைப் பற்றி நாம் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் இந்த இயக்க சுழற்சியில் ஏதேனும் இயல்பு மீறுதல் அல்லது மாற்றம் அடையும் போது, நமக்குள் இனம் புரியாத பதற்றமும், பயமும் தொற்றிக் கொள்கிறது. இந்த பதற்றமே பாதி நோயாகி விடுவதை நம்மில் பலரும் உணர்வதே இல்லை. மாதவிலக்கு சுழற்சியில் ஒழுங்கின்மை, உடல்வலி, மேலதிக குருதிப் போக்கு நிகழும் போது அதற்கான காரணம் தெரியாததினால், ஏற்படும் பயமும், பதட்டமுமே பலருக்கு கூடுதல் உடல், உள்ள நலிவை ஏற்படுத்துகிறது. இதன் பொருட்டே மாதவிலக்கின் அனைத்து கூறுகளையும் பற்றி எழுதிட நேர்ந்தது. இப்போது மாதவிலக்கு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்த தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இனி அவற்றை தீர்க்கும் வழிவகைகளை பற்றி பார்ப்போம். இந்த தொடரில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். இந்தத் தகவல்களைக் கொண்டு முறையான வல்லுனர்கள், மருத்துவர்களின் உதவியோடு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றிட வேண்டுகிறேன். உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு வகையான தீர்வுகள் இருக்கின்ற்ன.  முதலாவது வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள், மற்றது மருந்துகள் சார்ந்த தீர்வுகள்  அதென்ன வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள்? நமது எண்ணம், செயல், சிந்தனைகளே, நமது வெளிப் புற அடையாளங்களையும், உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது உடல் இயங்கியலின் செயற்பாட்டை தீர்மானித்து ஒழுங்கு செய்வதும் நம்மில் இருந்தே துவங்குகிறது. இதனையே நமது முன்னோர்களும் காலம் காலமாய் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். எளிமையாய் சொல்வதென்றால் “இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்வு” என்பதே நம்முடைய அத்தனை பிரச்சினைகளுக்கும் நீண்ட கால, நிரந்தர தீர்வாய் அமையும். ஆனால் நிதர்சனத்தில் நாம் அனைவருமே இயல்புக்கு மீறிய வாழ்வியல் சூழலில் வாழ்ந்திடும் கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை உணர்ந்து இயன்றவரை இயற்கையோடு இணைந்து வாழும் முயற்சியினை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். நமது உடல் என்பது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து மூலங்களினால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்த ஐந்து மூலங்களின் அளவும், விகிதமும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் மாறுபடுகிறது. இதனை உணர்ந்து நமது உடலின் தன்மைக்கேற்ற உணவு மற்றும் வாழ்வியல் சூழலை அமைத்துக் கொள்வதே ஆரோக்கிய வாழ்விற்கான நீண்ட கால தீர்வாக அமையும். நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவு மற்றும் உடல் பயிற்சிகளினால்தான் அவர்கள் நோயற்ற நெடு வாழ்வு வாழ்ந்திருக்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களை முன்னரே இங்கு தொடராக பகிர்ந்திருக்கிறேன். அந்தத் தகவல்களை மீண்டும் இங்கே பகிர்வது அவசியம் என்பதால் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன். தமிழர்கள் உணவும், உடல் நலமும் : 

பெண்களுக்கான தீர்வுகள்,



பெண்களுக்கான தீர்வுகள், 

மாதவிடாய் மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு மருந்துகள்தானே உடனடித் தீர்வாக இருக்கும், உணவும், உடற் பயிற்சியும் எப்படி தீர்வாக அமையமுடியும் என்கிற கேள்வி இன்னேரம் உங்களுக்குள் எழுந்திருக்கும். மருந்துகள் உடனடித் தீர்வுகளுக்கு உதவினாலும் கூட, அவை தற்காலிகமானவையே. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உடற்பயிற்சியினால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர, நீண்டகாலத் தீர்வுகள் கிடைக்கும் என்பதால் அவற்றை முதலில் பகிர நினைத்தேன். தொடரின் நெடுகே சித்தர்கள் அருளிய மருந்துகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். மாதவிலக்கு சுழற்சியில் மூன்று முக்கிய உறுப்புகளின் செயல்திறனும், அவற்றின் ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது. அவை முறையே, பிறப்பு உறுப்புகளின் செயல்பாட்டினை நெறிப் படுத்தும் பிட்யூட்டரி சுரப்பி, கரு முட்டையை உருவாக்கி முதிரச் செய்யும் சூலகம், கருமுட்டையை உள் வாங்கி கருத்தரிப்பை செயல்படுத்தும் கருவறை. இவற்றின் இயல்பான செயல்பாடுகளில் ஏற்றத் தாழ்வுகள் நிகழும் போதே மாதவிலக்கு சுழற்சியில் பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே இந்த மூன்று உறுப்புகளின் செயல்பாட்டினைத்  தூண்டி அவற்றை நெறிப் படுத்தும் உடற் பயிற்சிகளை மட்டும் இங்கே கவனத்தில் கொள்வோம். இந்த இடத்தில் குண்டலினி யோகம் பற்றி ஒரு சில வரிகள் அவசியமாகிறது.நமது உடலானது 7 சக்கரங்களினாலும், 72,000 நாடிகளினாலும் பின்னப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு சக்கரமும் குறிப்பிட்ட சில உடல் உறுப்புக்களின் செயல்பாட்டினை கட்டுப் படுத்துவதாக அமைந்திருக்கிறது. இந்த தகவல்களை எல்லாம் முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். தேவை உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பில் சென்று தகவல்களை அறியலாம். குண்டலினி யோகமும், உடல் நலமும்.. இதன் படி பிட்யூட்டரி சுரப்பியானது ஆக்ஞா சக்கரத்தினாலும், பிறப்புறுப்புகளான சூலகம் மற்றும் கருவறை சுவாதிட்டான சக்கரத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இந்த சக்கரங்களை மலரச் செய்வதன் மூலம் இந்த உறுப்புகளின் செயல்பாட்டினை சீராக்கிட முடியும். இது மட்டுமில்லை உடலின் அத்தனை உறுப்புகளின் செயல்பாட்டினையும் ஒரு ஒழுங்கில் கொண்டு வரும் மகத்துவம் குண்டலினி யோகத்திற்கு உண்டு.  அடிவயிற்று தசைகள், சூலகம், கருவறை, சிறு நீரகம் போன்ற உறுப்புகளை தூண்டி நெறிப்படுத்தும் ஆசனங்களை தொடர்ந்து செய்து வரலாம். குறிப&##3021;பாக வஜ்ராசனம், புஜங்காசனம் போன்றவை நல்ல பலன் தரும். இந்த ஆசனங்களை பற்றி அகத்தியர் அருளிய தகவல்களை இந்த இணைப்பில் காணலாம்.  புஜங்காசம், வஜ்ராசனம் செய்யும் முறை.. குண்டலினி யோகம், ஆசனங்கள் என்பவை முறையான வழி காட்டுதலோடும், விடாத முயற்சி மற்றும் பயிற்சி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். எனவே வாய்ப்புள்ளவர்கள் குருவின் வழிகாட்டுதலோடு இவற்றை முயற்சிக்கலாம்.  இவை தவிர பிராணயாமம், முத்திரை பயிற்சிகளின் மூலமும் இந்த உறுப்புகளின் செயல்பாட்டினை மேம்படுத்தி நலமுடன் வாழலாம். எளிய பிராணயாம பயிற்சி மற்றும் முத்திரை விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்கிறேன். Make Money Online : http://ow.ly/KNICZ

மாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும்,

மாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும், 

எளிய மூச்சு பயிற்சியும்! Author: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பவை நம் உடல் மற்றும் மனம் ஆகியவைகளை பிரச்சினையின்றி இயங்க உதவுகின்றன என்பதால் கடந்த இரு பதிவுகளில் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள நேரிட்டது. இன்றைய பதிவில் இந்த ஒழுங்கின் மூன்றாவது ஒரு அங்கம் குறித்த தகவலை சேர்த்திட விரும்புகிறேன். இது பற்றி ஏனோ நம்மில் யாரும் பெரிதாய் கவனிப்பதில்லை. உயிர் சக்தி என்றும் பிராண சக்தி என்றும் குறிப்பிடப் படும் ஒன்றையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.  நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் இருந்து பிராணவாயு பிரித்தெடுக்கப் பட்டு அவை நம் குருதியின் ஊடே கலந்து உடல் இயங்கியலில் பங்கேற்கும் அறிவியல் உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. இதில் நாம் எத்தனை காற்றை உள்ளிழுக்கிறோம், அதில் இருந்து எத்தனை அளவு பிராணவாயு நம் உடலில் சேர்கிறது என்பதைப் பொறுத்தே நம் உடல் நலன் மற்றும் மன நலன் அமைகிறது.  இந்த அறிவியல் உண்மையை வேறெவரையும் விட நமது முன்னோர்கள் அறிந்து, இது தொடர்பில் பல நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கண்டறிந்து நமக்கு அளித்திருக்கின்றனர். நாம்தான் அதை உணந்து பயன்படுத்திட தவறியவர்களாக இருக்கிறோம். இந்த கலையின் விவரங்களை முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் மூச்சுக் கலையின் நுட்பங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று வாசித்தறியலாம். ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக்கலை: தேவையும், தெளிவும்  ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை பயிற்சியை நமது முன்னோர்கள் வாசியோகம் என அழைத்தனர். இவை இரண்டும் வெவ்வேறானவை என்கிற கருத்தும் உண்டு. அந்த விவாதத்திற்குள் நுழைவது நமது நோக்கமில்லை. இந்த கலையை குருமுகமாய் கற்றுக் கொள்வதே சிறப்பு என்றாலும் கூட அன்றாடம் செய்திடக் கூடிய ஒரு எளிய பயிற்சி முறை ஒன்றினை தகவலாய் மட்டும் இங்கு பகிரலாமென நினைக்கிறேன். நமது உடலின் பெரும்பான்மை முக்கியமான உள்ளுறுப்புகள் நமது இடுப்பு, மார்பு மற்றும் தலைப் பகுதியில்தான் அமைந்திருக்கின்றன. இவற்றைத் தூண்டி செயல்படுத்துவதே இந்த எளிய பயிற்சியின் நோக்கம். இது மூன்று பகுதியாக செய்ய வேண்டியது.  தளர்வாய் சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு கவனத்தை சுவாசத்தில் நிறுத்தி, அது இயல்பாய் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காற்றை நன்கு உள்ளிழுத்து, வாயினை மெல்ல திறந்து அதன் வழியே வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியே விடும் போது அடித் தொண்டையில் இருந்து மெதுவாகவும், நிதானமாகவும் "அ...அ...அ....அ" என்ற ஒலியை எழுப்பிட வேண்டும்.  இவ்வாறு செய்யும் போது நமது வயிற்றுப் பகுதியில் ஒரு விதமான அதிர்வை உணரமுடியும். இதே போல குறைந்தது ஐந்து முதல் ஆறு தடவைகள் செய்திட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் நமது வயிற்றுப் பகுதியில் உள்ள கல்லீரல், மண்ணீரல், குடல் பகுதி, சிறுநீரகம், கருவறை, சூலகம் போன்ற உறுப்புகள் தூண்டப் படும். வயிற்றுப் பகுதியில் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால் நீண்ட கால நோக்கில் நல்ல பலன் கிட்டும். மார்பகப் பகுதியில் உள்ள இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளையும் மேலே சொன்னதைப் போன்ற பயிற்சியின் மூலம் தூண்ட இயலும். இந்த பயிற்சியின் போது மேலே சொன்ன அதே முறையில் "அ" க்கு பதிலாக "உ....உ...உ...உ..உ" என உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது தோன்றும் அதிர்வினை நமது மார்பகப் பகுதியில் உணர்ந்திட முடியும்.  மூளை மற்றும் அது சார்ந்த உறுப்புகளான சுரப்பிகளைத் தூண்டுவது இந்த பயிற்சியின் மூன்றாவது கட்டம். இந்த பயிற்சியின் போது இரண்டு விரல்களினால் காது மடலை மெதுவாய் மூடிக் கொண்டு, சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடும் போது வாயை மூடி, மூக்கின் வழியேதான் விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது "ம்...ம்...ம்...ம்...ம்" என்கிற ஓலியினை எழுப்பிட வேண்டும். இப்போது அதிர்வுகளை நமது மூளை பகுதியில் உணர முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் மூளையை, அதன் சுரப்பிகளை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்திட முடியும். மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் இந்த எளிய பயிற்சியினை தொடர்ந்து செய்வதன் மூலம் நீண்டகால தீர்வுகளை பெற முடியும். தகுதியுடைய வல்லுனர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் பயில்வதும் பழகுவதும் சிறப்பு. இவை தவிர, முத்திரைகள் எனப்படும் விரல்களை ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொள்வதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தினை பேண முடியும். இந்த முத்திரைகளை யாரும் பழகலாம். அவை பற்றி விரிவாகவே முன்னர் தொடராய் பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம். வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பது முழுமையான உடல் நலத்திற்கானது. அவற்றை தன்முனைப்புடன் கூடிய தொடர் முயற்சியாக பழகி வந்தால் மட்டுமே பலன் தரக்கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.  Make Money Online : http://ow.ly/KNICZ

மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்!

மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்! 

: அகத்தியர், சித்த மருத்துவம், பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் இதுவரை மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்சி, அவற்றின் இயங்கியல், ஏற்படும் பிரச்சினைகள் என விரிவாகவே பார்த்து விட்டோம். இந்த தகவல்கள் யாவும் நவீன அறிவியல் நமக்கு கண்டறிந்து சொன்ன உண்மைகள். இனி நம் முன்னோர்கள் இந்த பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதைப் பற்றியே பார்க்க இருக்கிறோம். மாதவிலக்கு பிரச்சினைகள் தொடர்பில் நிறைய தகவல்கள் சித்தர்களின் பாடல்களின் ஊடே காணக் கிடைக்கிறது. இந்த தகவல்களை முழுமையாக தொகுப்பது என்பது சவாலான ஒன்று.மேலும் நிறைய நேரம் பிடிக்கும் காரியம் என்பதால், என்னால் இயன்ற அளவில் திரட்டிய தகவல்களையே இனி வரும் பதிவுகளின் ஊடே பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல்கள் பலவற்றை இன்றும் நாம் கைவைத்தியம் என்கிற பெயரிலும், பாட்டி வைத்தியம் என்கிற பெயரில் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதையும் இந்த இடத்தில் நினைவு படுத்திட விரும்புகிறேன். மற்றொரு முக்கிய குறிப்பு ஒன்றினையும் இந்த இடத்தில் பதிவது அவசியம் என கருதுகிறேன். சித்தர் பெருமக்கள் இத்தகைய பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர் என்பதை பகிர்வதே "சித்தர்கள் இராச்சியம்" வலைப்பதிவின் முதன்மையான நோக்கம். எனவே இங்கே பகிரப் படும் தகவல்களை ஒரு வழிகாட்டுதலாய் மட்டும் அணுகிட வேண்டுகிறேன். தேவையும், அவசியமும் உள்ளவர்கள் தேர்ந்த வல்லுனர்கள்/மருத்துவர்களின் ஆலோசனையோடு சிகிச்சை மேற்கொள்வதே சிறப்பு. சித்தர் பெருமக்கள் மாதவிலக்கு தொடர்பில் அருளிய தீர்வுகளை மூன்று வகையாய் அணுகிடலாமென நினைக்கிறேன். அவை முறையே... மாதவிலக்கு வராமல் இருப்பது, தள்ளிப் போவது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு. மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, உடல் தளர்வு போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வு. பெரும்பாடு எனப்படும் அதிகமான, தொடர் குருதிப் போக்கினை கட்டுப் படுத்துவதற்கான தீர்வு. இன்றைய பதிவில் மாதவிலக்கு வராமல் இருப்பது அல்லது தள்ளிப் போகும் பிரச்சினைகளுக்கான இரண்டு தீர்வுகளை மட்டும் பார்ப்போம்.“அகத்தியர் வைத்தியம் 600” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்ட தகவல்கள் இவை. மீறாமற் றூரமில்லாப் பெண்களுக்கு வேலியிலைப் பசுவின்பாலில்மிகவருந்த நேரும் கூறான தூதுவளை சாறுவாங்கி கொடைகொடையாகக் கிடக்குங் குளத்துப்பாசி ஏறாமற் புனைக்கா யளவுகூட்டி யிதமாகச் சர்க்கரையும் மேகமொன்றாய் பேறுபட மூன்றுநா ளருந்தும்போது புறப்படுமே செங்குருதி சிவப்பதாமே  வேலிப் பருத்தி இலையை அரைத்து பசுப்பாலில் கலக்கி, அதிகளவில் அருந்த மாதவிலக்கு ஏற்படும் என்கிறார். மேலும் குளத்துப்பாசியை புனைக்காய் அளவு எடுத்து அத்துடன் தூதுவளை சாற்றையும் அளவான சர்க்கரையும் சேர்த்து மூன்று நாட்கள் அருந்த மாதவிலக்கு உண்டாகுமாம். கிரமாதீத சூதகம் ஒழுங்கான மாதவிலக்கு சுழற்சி என்பது 28 தினங்களுக்கு ஒருமுறை ஏற்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி நடப்பதில்லை. ஒரு சிலருக்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னதாகவே மாதவிலக்கு கண்டு மறைந்து போவதையும், அல்லது சேர்ந்தாற் போல 2-3 மாதங்களுக்கு சூதகமே வெளிப்படாமலும் இருக்கும். இதனை சித்த மருத்துவத்தில் 'ஒழுங்கீன சூதகம்' 'கிரமாதீத சூதகரோமம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு வெங்காயம், கரியபோளம், மிளகு இவைகளில் வகைக்கு 21/2 கிராம் எடுத்து, அவற்றைத் தனித்தனியே இடித்துத் தூளாகச் சேகரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அம்மியில் சிறிதளவு தேன் விட்டு அதில் இந்த தூளை இட்டு, மை போல் அரைத்து, அதை 16 சிறு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொண்டு தினசரி காலை, பகல், மாலை ஆக மூன்று வேளை உணவிற்குப் பின்னர் இரண்டு மாத்திரை வீதம் வாயில் போட்டு, அரை ஆழாக்கு அளவு பசுவின்பால் குடித்து வர வேண்டும். இந்த விதமாக மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு ஒழுங்கு முறையுடன் மாதா மாதம் தவறாது வெளியேறுமாம். Make Money Online : 

"சூதகம்"

மாதவிலக்கின் போது வெளியேறும் குருதி கலந்த கழிவினையே "சூதகம்" என்கிறோம். இந்த சூதகம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு சூதகம் கட்டிக் கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளான சூதக வலி, சூதக ஜன்னி, சூதக கட்டி போன்றவைகளுக்கு நம் முன்னோர்கள் அருளிய தீர்வுகளை இன்றைய பதிவில் பார்ப்போம்.  முன்னரே குறிப்பிட்ட படி தேவையும், அவசியமும் உள்ளவர்கள் இந்த தகவல்களை ஒரு வழிகாட்டுதலாக மட்டும் எடுத்துக் கொண்டு தகுந்த வல்லுனர்களின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தி பலன் பெற வேண்டுகிறேன். பதிவின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி தொடர்புடைய பாடல்களை தவிர்த்திருக்கிறேன். சூதக வயிற்றுவலி.. பெரும்பாலும் மாதாந்திர சூதகம் வெளிப்படும் முன்னதாக வயிற்றுவலி இருக்கும். இத்தகைய வயிற்றுவலி சூதகம் வெளிவந்தவுடன் நின்றுவிடும். சிலருக்கு சூதகம் வெளிப்படத் தொடங்கியபின் வயிற்றுவலி இருக்கும். இதற்கு பின்வரும் மருந்துகளைச் சாப்பிட்டால் குணமாகும் என்கின்றனர். மாவிலங்கப் பட்டையைக் அரைத்து அந்த பொடியுடன் 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். இவ்வாறு உண்டு வந்தால் சூதக வயிற்றுவலி குணமாகுமாம்.  மற்றொரு முறையில் வேலிப்பருத்தி என்னும் உந்தாமணி செடியின் கொழுந்து இலையாக ஐந்து இலையுடன், 12 மிளகு, வெள்ளைப் பூண்டின் பற்கள் 12 சேர்த்து மீண்டும் நன்கு அரைத்து சூதக வயிற்றுவலி ஏற்படும் நாட்களில் காலை வேளையில் மட்டும் பாக்களவு தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ண வேண்டும். சூதக வயிற்றுவலி குணமாகும்.  வேப்பம் பட்டை 10கிராம், சீரகம் 2 1/2 கிராம் இரண்டினையும் ஒரு சட்டியில் தட்டிப்போட்டு, ஒரு ஆழாக்கு தண்ணீர் விட்டு அதனை அரை ஆழாக்காக காய்ச்சி எடுத்து காலையில் மட்டும் மூன்று நாட்கள் குடிக்க சூதக வயிற்றுவலி குணமாகும் என்கின்றனர்.  சூதகச் சன்னி அளவு மீறிய நரம்பு தளர்ச்சி , மாதவிலக்கின் போது வெளியேற வேண்டிய கழிவு குருதியில் விஷக்கிருமிகள் உண்டாகி விடுவதன் காரணத்தினாலும், அதிக அளவில் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு விடுவதினாலும், இருதயம், மூளை இவைகளில் ஏதாவது பாதிப்பு இருந்தாலும், பெரும்பாடு, சூதகக்கட்டு, நீண்ட நாள் வயிற்றுப் போக்கு, பிரமேகம் இது போன்ற வியாதிகளின் காரணத்தினாலும், அடிக்கடி கருத்தரித்தல் காரணமாகவும், நரம்புகளின் குணம் மாறி அது சன்னியாக மாறிவிடும். இத்தகைய சூதகச்சன்னி ஏற்பட்டால் வலிப்பு உண்டாகும். அடிக்கடி வாய் விட்டுச் சிரிப்பார்கள். அல்லது அழுவார்கள். நர நரவென்று பற்களைக் கடிப்பார்கள். கை, கால்களை முறுக்கி ஒடிப்பது போல முறுக்குவார்கள். சில சமயம் தலையிலுள்ள கூந்தலைப் பற்றிப் பலமாக இழுத்துக் கொள்வார்கள். சில சமயம் நாக்கையும், கையையும் கடித்துக் கொள்ளுவார்கள்.சிலருக்கு இந்த வலிப்பு விட்டு விட்டு வரும். இந்த விதமான வலிப்பு இருக்கும் சமயம், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போலவும், நெஞ்சில் ஏதோ பளுவைத் தூக்கி வைத்தது போலவும் இருக்கும். இடது பக்க அடிவயிற்றில் இரைச்சலும், வலியும் இருக்கும். இந்தச் சன்னியின் கோளாறு, தானே ஆடி அடங்கிவிடும். புயல் அடித்து ஓய்ந்தது போல் உடல் தளர்ந்து போய்விடும். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழியும். சிறுநீர் அதிக அளவில் தெளிவாக இறங்கும். சன்னி தெளிந்து விடும். சிலர் இந்த நிலையைக் கண்டு பெண்ணுக்கு ஏதோ பேய், பிசாசு பிடித்திருக்கிறதெனக் கருதி அவளை மந்திரவாதியிடம் கொண்டு போய் அவளைப் பல வகையிலும் தொந்தரவு கொடுப்பார்களாம். இதற்கான மருந்தைத் தயாரித்துக் கொடுத்து வந்தால், இந்த நோய்க் குணமாகிவிடும் என்கின்றனர். சன்னியின் போது மயக்கமடைந்து விட்டால், துணியை சிறியதாகச் சுருட்டி நெருப்புப் பற்ற வைத்து அதிலிருந்து வரும் புகையை லேசாக முகரக் கொடுக்க வேண்டும். புகையை அதிகமாக்கி சுவாசத்துடன் அதிக அளவில் உள்ளே போகும்படி கொடுக்கக் கூடாது.சிறிது புகையைக் காண்பித்து விட்டு, ஓரிரண்டு சுவாசம் போய்வர விட்டு மறுபடி லேசாக காண்பிக்க வேண்டும். ஒரேடியாக அதிகப் புகையை உள்ளே செல்லும்படிச் செய்தால், புகை உள்ளே பந்தனமாகி அபாயத்தை உண்டு பண்ணும். எனவே, கவனமாக புகை கொடுக்க வேண்டும். ஒரு சில நிமிஷத்தில் மயக்கம் லேசாகத் தெளியும். முகத்தில் சில்லென்று தண்ணீரை அடித்து துடைத்து வீட்டால் மயக்கம் தெளிந்துவிடும். சூதகக் கட்டி 28 தினங்களுக்கு ஒரு முறை வெளியாக வேண்டிய சூதகமானது அதிக வாயுவின் காரணமாக கருப்பையிலேயே தங்கி, சிறிதளவு கூட வெளியேறாமல் நின்று விடும். இந்தச் சூதகமானது ஒன்றாகக் கட்டித் திரண்டு, உருண்டு பருமனாகி விடுமாம்.இதனை சித்த மருத்துவத்தில்உதிரக்கட்டி, சோணிதக்கட்டி, கற்பசூலை, இரத்தக்கட்டி, கர்ப்பசூலை, சூதகக்கட்டி, கற்சூலை, சூல்மகோதரம் என்று பல பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூதமானது கர்ப்பப் பையிலிருந்து வெளியேறாமல் கட்டிவிட்டால், பிறகு வெளியேறாது. கர்ப்பம் தரித்த பெண்களுக்கு ஏற்படக்கூடிய எல்லா குணங்களும் தோன்றும். அதாவது, பசிமந்தம் ஏற்படும். தேகம் வெளுக்கும். ஸ்தனத்தில் கருவளையம் தோன்றி, ஸ்தனமானது பெருத்து விம்மும். சேர்க்கையில் வெறுப்பு உண்டாகும். மார்பு துடிக்கும். ஆயாசம், வாந்தி உண்டாகும். சிலருக்கு ஸ்தனங்களில் பால் சுரக்கும். வயிறு கர்ப்பஸ்திரீ போல பெருத்துக் கொண்டே வரும். கருப்பையில் உள்ள சூதகக் கட்டி குழந்தைபோல அசையும், உருளும், பிரளும். இந்தக் குறிகளைக் கண்டு சில பெண்கள், தாம் கர்ப்பம் தரித்துவிட்டதாகவே எண்ணுவார்கள். சில பெண்களுக்கு பிரசவவலி போல ஏற்பட்டு இந்தக் கட்டி வெளியேறிவிடும். சிலருக்கு இது சூதகக் கட்டி என்று அறிந்து, தக்க மருந்து கொடுத்தால் வெளியேறும்.  இதைப் பற்றிய மேலும் சில விபரங்களை "மெய்க்கர்ப்பம், பொய்க்கர்ப்பம்" என்ற பதிவில் காணலாம்.. சூதக கட்டி குணமாக... சீரகம், சக்திசாரம், நவாச்சாரம் வகைக்கு 30 கிராம். கருஞ்சீரகம், வால்மிளகு, பெருங்காயம், வாய்விளங்கம் கோஷ்டம் வகைக்கு 10 கிராம்.கடுகு, ரோகினி, வெடியுப்பு, மிளகு, இந்துப்பு, கறியுப்பு, கடுக்காய், வளையலுப்பு, கல்லுப்பு வகைக்கு 5 கிராம். இவைகளை எல்லாம் சுத்தம் பார்த்து நன்றாகக் காய வைத்து, கல் உரலில் போட்டு இடித்துத் தூளாக்கி சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொண்டு, ஒரு பெரிய முற்றின தேங்காயை எடுத்து அதன் ஒரு கண்ணைத் திறந்து, அதனுள் இந்தத் தூள்களை எல்லாம் செலுத்தி, துளைக்கு மரக்கட்டையைச் சீவி அடைத்துவிட்டு, 21/2 அடி ஆழம் பூமியைத் தோண்டி, அதில் இந்தத் தேங்காயை வைத்து, மண்ணைத் தள்ளி மூடி, புதைத்த இடத்தில் அடையாளம் வைக்க வேண்டும். இதைத் தயாரித்து சூரிய உதயத்தில் புதைக்க வேண்டும். ஏழாம் நாள் காலை சூரிய உதயத்தில் இதைத் தோண்டி எடுக்க வேண்டும். எடுத்த தேங்காயைப் பக்குவமாக தேங்காய் ஓட்டை மட்டும் உடைத்து எடுத்துவிட்டு, அதனுள் உள்ள மருந்துத் தூளுடன் தேங்காயையும் நைத்து அம்மியில் வைத்து தேன் விட்டு மைபோல அரைத்து, மெழுகுபதம் வந்தவுடன் எடுத்து வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு நாளைக்கு காலை, மாலை இரு வேளையும் கழற்சிக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த விதமாக ஏழுநாள் சாப்பிட்டால் சூதகக்கட்டி உடைந்து வெளியேறிவிடும். பிறகு மாதா மாதம் சூதகம் ஒழுங்காக வெளியாகும். பத்தியமாக மருந்து உண்ணும் நாட்களில் ஆண் - பெண் சேர்க்கை கூடாது என்கின்றனர். Make Money Online : http://ow.ly/KNICZ

Saturday, August 13, 2016

உடல் எடையை குறைக்க வேண்டுமா? உங்கள் ரத்தப் பிரிவிற்கு ஏற்றவாறு சாப்பிடுங்கள்!!

உடல் எடையை குறைக்க வேண்டுமா? உங்கள் ரத்தப் பிரிவிற்கு ஏற்றவாறு சாப்பிடுங்கள்!!

ரத்தபிரிவிற்கு தகுந்தாற் போல் உணவை உண்டால் உடலை கணிசமாக குறைக்கலாம் என்று இந்த மாதிரியான உணவுக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது இயற்கை மருத்துவர் பீட்டர் ஜெ. அடமோ என்பவர் ஆவார். இரண்டு உடல் பருமனானவர்களுக்கு ஒரே மாதிரியான உடற்பயிற்சி, ஒரே மாதிரியான உணவு, கொடுத்துப் பாருங்கள். இருவருக்கும் வேறு வேறு பலன்தான் கொடுக்கும். இதற்கு என்ன காரணமென்றால் மரபணு.

ஒவ்வொருவரின் மரபணுவும் ஒவ்வொரு மாதிரியான என்.ஏ அமைப்பை பெற்றிருக்கும்.அதற்கேற்றவாறுதான் ரத்த அணுக்களும் செயல்படும். சிலருக்கு சில உணவுகள் ஒவ்வாமையை உண்டாக்கும், பால் பொருட்கள், மாவிலுள்ள குளுடன் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதற்கு காரணங்கள் நிறைய உண்டு. இதற்கு தீர்வு காண ரத்தப் பிரிவிற்கேற்றவாறு சாப்பிடுவதால் பயன்கள் ஏற்படும் என மருத்துவம் சொல்கிறது.

பொதுவாக ஒரே வகையான ரத்தப் பிரிவில் ஓரளவு மரபியல்கள் ஒத்துப் போகும். இதனால் வளர்சிதை மாற்றமும் ஒரு பிரிவிற்கு மற்றொரு பிரிவிற்கும் வேறுபடும். அவ்வகையில் ஒவ்வொரு ரத்தப் பிரிவிற்கு, எந்த சத்து எந்த வகையான உணவு ஏற்றது என தெரிந்த பின் உணவுக் கட்டுப்பாடை மேற்கொண்டால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

ஓ ரத்தப் பிரிவு :

அதிக புரத சத்து கொண்ட உணவுகளான இறைச்சி, மீன் வகைகள், காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க குறைவான அளவு தானியங்கள், பால் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.

ஏ ரத்தப் பிரிவு ;

 பழங்கள், காய்கறிகள், லெக்யூம், பீன்ஸ், முழுதானியங்கள் ஆகியவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான அளவு அல்லது இறைச்சி இல்லாத அசைவம் சாப்பிடலாம்.

பி ரத்தப் பிரிவு:

 பச்சை காய்கறிகள், முட்டை, கொழுப்பு குறைவான இறைச்சி, குறைந்த கொழுப்புள்ள பால் வகை உணவுகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். சோளத்தை தவிர்ப்பது நல்லது.குறைந்த அளவே தக்காளி, கோதுமை, நிலக்கடலை ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏ-பி- ரத்தப் பிரிவு :

கடல் வகை உணவுகள், பச்சை காய்கறிகள், பால் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். காஃபி, மது , சிகரெட் ஆகியவை தவிர்ப்பது நல்லது.

இரணகள்ளி.

இரணகள்ளி.



மூலிகையின் பெயர் –: இரணகள்ளி.

தாவாரப்பெயர் –: EUPHORBIA.

தாவரக்குடும்பம் :– EUPHORBIACEAE.

பயன்தரும் பாகங்கள் –: பால் மற்றும் இலை.

வளரியல்பு –: கள்ளி இனங்ளில் 2008 வகைகள் உள்ளன.. கால்நடைகள் சாதாரணமாக இதைக் கடித்துச் சாப்பிடுவதில்லை. கள்ளிகள் பலவிதமான தோற்றங்கள், சிறு செடிமுதல் மரம் வரை வளரக்கூடியவை. பல வண்ண மலர்களுடன் காணப்படும். அழகுக்காக எல்லா நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இதன் தோற்றம் சங்க காலத்திலும், ஜீலிசீசர் காலத்திலும் இருந்துள்ளது. அதனால் காலம் நிர்ணியிக்க முடியவில்லை.

கள்ளி இனங்களில் இந்த இரணகள்ளி செடியாக வளரும் இனம். இதன் இலைகள் ஆலமரத்து இலை போன்று, ஆனால் சற்று தடிப்பாக இருக்கும். இலையைக் கிள்ளி ஈரமான இடத்தில் போட்டால் அங்கும் செடி உண்டாகும். இது வரண்ட சமவெளிகளிலும் மலைகளிலும் தன்னிச்சையாக வளரக்கூடியது. தண்ணீரோ மழையோ தேவையில்லை.. காற்றிலுள்ள நீரைக் குடித்தே இது செழிப்பாக வளரும். இதன் இலை உடம்பில் பட்டால் சிவந்து தடித்து விடும். இரணகள்ளி இலை மூலமும், விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

மருத்துவப்பயன்கள் –: இரணகள்ளி- பொதுவாக நீர் மலம் போக்கும், வாந்தி உண்டாக்கும், தடிப்புணாட்டாக்கும் செய்கையுடையது. கள்ளி இனங்களான கொம்புக்கள்ளி, கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, திருகுக் கள்ளி என்ற கள்ளியின்னங்களுக்கு என்ன செய்கை உண்டோ, அதே செய்கை இதற்கும் உண்டு. ஆனால் இந்த ரணக்கள்ளி செடியில் பால் இராது.

இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை அரைத்து வைத்துக் கட்டி விட தேள்கடி நஞ்சு இறங்கப் போகும்.

இரணக்கள்ளி இலைக்கு இரணத்தை ஆற்றும் சக்தியுண்டு. இந்த இலையை மை போல் அரைத்து, அறாத இரணத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக இரணம் ஆறும்.

இரணகள்ளிச் சாற்றை மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொற சொறப்பான மருக்கள் பேரில் இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி, பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வர வேண்டும்.

மூன்று இரணகள்ளி இலையை அம்மியில் வைத்து அரைத்து, ஒரு புதிய சட்டியில் போட்டு தேக்கரண்டியளவு மிளகு, அரைத் தேக்கரண்டியளவு சீரகம் இவைகளையும் அரைத்துப் போட்டு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து ஒரு டம்ளராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் கபவாத சம்பந்தமான நோய்கள் சன்னி ரோகம், நரம்புச் சிலந்தி, நளிர் வாத நோய்கள் ஆகியவை குணமாகும்.

இரணக் கள்ளி செடியைக் கொண்டு வந்து வீட்டில் உயரத்தில் கட்டி வைக்க கொசுக்கள் இதன் வாடையால் வீட்டில் தங்காமல் ஓடிவிடும்.

இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அரைக் கிலோ பசு வெண்ணையுடன் 500 மில்லி சாறு சேர்த்து நெய் காய்ச்சி எடுதுக்கொண்டு, அந்த நெய்யை பிரண்டைத் துவையல் சோற்றுடன் கலந்து அதில் மேல்படி நெய்யை உருக்கி ஊற்றிப் பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிட்டுவர குன்ம நோய், அசீரணம், வயிற்றில் ரணம், வாயுத்தொல்லை, மற்றும் சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல் ஆகியவைகளில் காணும் எல்லாவித புண், ரணம், அழிற்சி யாவும் ஆறிப்போகும். அறுவை சிகிச்சை செய்து தான் தீரவேண்டும் என்ற நோய்களும் மேல் கண்ட முறையால் அறுவை சிகிச்சையின்றி குணமாக்கிக் கொள்ளலாம். பத்தியம்; சுட்ட புளி, வறுத்த உப்பு சேர்த்துக் கொண்டு இதர பொருட்களை நீக்கி இச்சா பத்தியமாக இருப்பது அவசியம்.

இரணக் கள்ளி செடியின் சமூலத்தை எடுத்து இடித்து சாறு 500 மில்லி, தேங்காய் எண்ணை 400 மில்லி, அதனுடன் கஸ்தூரி மஞ்சள் 10 கிராம், நீரடிமுத்து 20 கிராம், கார்போக அரிசி 30 கிராம், கப்பு மஞ்சள் 40 கிராம், கசகசா 5 கிராம், சேர்த்து இடித்து யாவும் ஒன்றாக கலந்து அடுப்பில் சிறு தீயாக கொதிக்க வைத்து சாறு சுண்டிய பின்னர் வடிகட்டி வைத்துக் கொண்டு, காலையில் எழுந்து சர்மநோய் உடையவர் தலை முதல் கால் வரை மேலுக்குப் பூசி அரைமணி நேரம் ஊரவைத்துப் பின்னர் இளஞ்சூடான நீரில் சீயக்காய்த் தூள் போட்டுக் குளித்துவர குட்டம், மேகநீர், ஊரல் படை, கருமேகநீர், சம்பந்தமான சர்ம நோய், செம்மேகப்படை, கிரந்தி நோய்கள் யாவும் போகும்.

கிட்னியல் கல் உள்ளவர்கள் இரணகள்ளி இலையை அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு நாளுக்கு ஒரு இலை வீதம் (அதை சுத்தம் செய்து) மென்று சாப்பிட்ட பின் 100 மில்லி தண்ணீர் குடித்தால் 4 வது நாள் கிட்னியில் உள்ள கல் வெளியேறி விடும். இதை அறிய, சாப்பிடும் முன்பும், மூன்றாவது இலை சாப்பிட்ட பின்பும் ஸ்கேன் செய்து பார்த்தால் குணமாவது கண்கூடத் தெறியும். மீண்டும் கல் உருவாவதற்கு வாய்ப்பே இல்லை.

Wednesday, August 10, 2016

கர்ப்பிணிப் பெண்கள் வாந்தி எடுக்காமல்இருக்க

கர்ப்பிணிப் பெண்கள் வாந்தி

 மருந்து இல்லாமல் வாந்தியை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.

 தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடுவது நல்லது. முடிந்தால் குல்கந்து

( ரோஜா இதழ்களை தேனில் போட்டுத் தயாரிப்பது)

 சேர்த்து வெற்றிலை சாப்பிடுங்கள். இது அஜீர்ணம், வாந்திக்கு நல்லது.

ஆரஞ்ச், மொசாம்பிக் ஜூஸ் நல்லது. தலை குளிக்கும் அன்று இந்த ஜூஸ்களை குடிக்காதீர்கள்.

குமட்டல் தோன்றும் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள். என்ன பிடிக்கிறதோ அதில் சத்தான சாப்பாடாக சாப்பிடுங்கள்.

 கீரை, மீன் போன்றவை மிகவும் நல்லது. வாமிட் வரும்போல இருந்தால் ஒரு எலுமிச்சை பழத்தை நன்றாக கசக்கி முகருங்கள். சாப்பிட்டவுடன் மெதுவாக நடங்கள்.

 ஜூஸ் மட்டும் குடிக்க பிடித்தால் காய்கறி கலந்த V8 ஜூஸ் குடியுங்கள்..உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு பொருட்களைத் தவிருங்கள்.

பைனாப்பிள், மாம்பழம், பப்பாளி போன்றவை கொஞ்ச நாட்களுக்கு வேண்டாம்.

மாத்திரை வேண்டவே வேண்டாம் என்பதே என் அட்டைஸ்.

இரண்டு பேருக்கு என்று நிறைய சாப்பிட வேண்டுமென்று அர்த்தமில்லை. எது சாப்பிட்டாலும் சத்தாக சாப்பிட வேண்டியதே அவசியம்.

சிலருக்கு பிரெட், பாரிட்ஜ் போன்றவை மட்டுமே பிடிக்கும். பொரியல் போன்றவை பிடிக்காவிட்டால் எல்லா காய்கறியும் போட்டு சாம்பார், சூப் என்று சாப்பிடுங்கள்.

 தக்காளி சூப் குடிப்பதுக்கூட வாந்தியை கட்டுப்படுத்தும்.

வாந்தி நிற்க வேண்டி லெமன் சோடா போன்றவற்றை குடிக்காதீர்கள். அதுவும் உடலுக்கு நல்லதல்ல.

கர்ப்பிணி பெண்களுக்கு
கர்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை



1.சூடான அயிட்டம் எதுவும் சாப்பிட கூடாது.

2.பைனாப்பிள்,கொய்யா,பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.

3.,இறால், பீஃப் ,கருவாடு ரொம்ப சூடு, கொஞ்சமா சாப்பிட்டு கொள்ளலாம்,

4.இரவு சாப்பாட்டை 7 மணிக்குள் முடிக்கவும்.

5.காய் வகைகளில் கேஸ் அயிட்டம் உருளை, சேனை,சீனி வள்ளி,மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.

கர்ப்பிணி பெண்களுக்கான அறிவுரைகள்   டிப்ஸ்

முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகள் உட் கொள்ள வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. 

எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும் மருத்துவர்கள், இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது.

அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

• பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

• பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

• கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். ஆனால் அதிகளவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

• ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

• முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

• பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன

சீரகத்தின் மருத்துவ குணங்கள்

சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.