Sunday, October 30, 2016

"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக" (நமது பாரம்பரிய ரகசியம்)

"உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக"
(நமது பாரம்பரிய ரகசியம்)
     
                                        உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல நேரங்கள்: கணவனும், மனைவியும் கூடிய நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.
             
                                       சுழிமுனை நடக்கும் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது            
 
                                      அமாவாசையன்று கருவானால் கருப்பு நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும் குழந்தை பிறக்கும்
   
                                       தொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.
         
                                        அமாவாசை கழித்து பிரதமையில் கரு உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்

                                       அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.
     
                                       முழு நிலவுவில் உடலுறவு கொண்டு கருவானால் முடமாகவும், தண்டியாகவும் குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும்.

                                       முழுநிலவு கழித்துப் பிரதமையில் கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.
 
                                      பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம், முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.

                                      புணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.

                                     பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால் குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.

                                     உடலுறவு கொள்ளும் பொழுது வேறு பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால் அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.

                                     பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த உடலுறவும் கூடாது.வெள்ளிக்கிழமை மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு கருவானால்,மாறுகண் உள்ள குழந்தை பிறக்கும்.

                                     ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள் உடலுறவு கொண்டபோது கருவானால் குழந்தை திருடனாகப் பிறக்கும்.

                                     நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை வறுமையில் வாடும்.

                                     ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கும்.

                                    ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள் கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.

                                   ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய குழந்தை பிறக்கும்.

                                   எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை தரித்திரத்தில் வாழும்.

                                  ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால் செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக வாழும் குழந்தை பிறக்கும்.

                                  பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம் மிகுந்து கெட்ட பழக்கம்,அவ மரணம் உள்ள குழந்தை பிறக்கும்.

                                  பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால் நோயுள்ள குழந்தை பிறக்கும்.

                                   பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால் பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள குழந்தை பிறக்கும்.

                                  பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால் அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.

                                 பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும்.

                                 பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால்   ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும்.

                                பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.

Thursday, October 27, 2016

துத்திச்செடி

துத்திச்செடி
துத்திச்செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இவை இரத்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.

                                                 மருத்துவக்குணங்கள்🌿

ஆண்மை பெருகும்:
துத்திப்பூக்களை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை குணமாக்கும்.

மேலும் ஆண்மையை பெருக்கும்.

ஆஸ்துமாநோய் குணமாக:
துத்திப்பூக்களை காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பின் அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து அரைதேக்கரண்டி அளவு சூரணத்தை காலை, மாலை பாலில் கலந்து பருகினால் ஆஸ்துமா நோய் குணமாகும்.

காசம் என்ற எலும்புருக்கி நோய் குணமாகும்.

மூலநோய் குணமாக:
ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் மூலநோய் குணமாகும்.

ரத்தவாந்தி குணமாக:
அரைக் கைப்பிடியளவு துத்திப்பூக்களை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனை இறக்கி வடிகட்டி நான்கு மணிக்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.
இத்தகைய நன்மைகள் வாய்ந்த இந்தப்பூக்களை நாம் நம் அன்றாட உணவுடன் ‌கலந்து உண்போம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.                        

பெண்களுக்கான நோய்கள் :

பெண்களுக்கான நோய்கள் :

- கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்
- மாதவிலக்கு தொடர்பான பிரச்சினைகள்
- தைராய்டு பிரச்சினைகள்
- முடி உதிரல்
- முகப்பரு
- கால் பாத பித்த வெடிப்பு
- இரத்தக் குறைவு
- குழந்தை பேறின்மை
- உடல் பருமன்
- மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் கோபம் போன்ற மன பிரச்சினைகள்
போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவமே சிறந்தது என உறுதியாக கூற முடியும்.

இன்று நிறைய அலோபதி மகளிர் மருத்துவர்களே (gynaecologists) இந்த பிரச்சினைகளுக்கு சித்த மருந்துகளைப் பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டனர்.

குழந்தைகளுக்கான நோய்கள் :

குழந்தைகளுக்கான நோய்கள் :

- மூளை வளர்ச்சி குறைவு
- சிறு வயதில் ஏற்படும் ஆஸ்துமா
- சிறு வயதில் ஏற்படும் சர்க்கரை நோய்
(Juvenile diabetes)
- உடல் வளர்ச்சி குறைவு
- சரியாக சாப்பிடாமல் இருப்பது
- நினைவாற்றல் குறைவு (மறதி)
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல்

போன்ற பிரச்சினைகளுக்கு சித்த மருத்துவமே சிறந்தது. தடுப்பு ஊசி போடுவது போல நோய்எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சில மருந்துகளை கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும்.

“என்ன ஆச்சு.. குழந்தை அழுது…. …… வாட்டர் கொடு. உனக்கும் அதான் கொடுத்தேன்” என்பது ஒரு சித்தா மரு

பற்களும் ஈறுகளும் உறுதியடைய :

பற்களும் ஈறுகளும் உறுதியடைய :நெல்லிக்கனியைப் பற்களிளால் நன்றாக மென்று தின்று வர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.

இரத்த கொதிப்பு குணமாக : இரத்த கொதிப்பு நோய் கொண்டவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வர, இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்.

நரம்பு சுண்டி இழுத்தால்...

நரம்பு சுண்டி இழுத்தால்...

ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும்.

நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

பல்லில் புழுக்கள்

சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

உடல் பருமன் குறைய...

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்­ரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

வெண்மையான பற்களைப் பெற...

வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

கணைச் சூடு குறைய...

கணைச் சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

வலுவான பற்கள்

வேப்பங்குச்சியினால் பல் துஇலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

உடல் சூடு

ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

கற்கண்டு சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...

கற்கண்டு சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

கக்குவான் இருமல்

வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

உள்நாக்கு வளர்ச்சி

உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

இரத்த சோகை

இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.
ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும். 

மூட்டு வலி நீங்க...

மூட்டு வலி நீங்க...

(முழங்கை, முழங்கால், கணுக்கால்)

முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.

சாப்பிடும் விதம்

முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.

சுத்தம் செய்தபின் தண்­ர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸ’யில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.
நன்றாக குணமான பிறகு, வாரம் 3 முறை முடக்கத்தான் கீரையை உட்கொண்டால் மீண்டும் வலி வராது.

தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். நம் முன்னோர்கள் வாரம் 2 அல்லது 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடுவார்கள். நாமும் அதைக் கடைப்பிடித்தால் நமக்கு மூட்டு வலிகள் வராது.

குறுக்கு வலி நீங்க ...

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் குறுக்கு வலி குணமாகும்.

யோகாசனங்களில் தனுராசனம் என்ற ஆசனம் இருக்கிறது. இந்த தனுராசனம் செய்யும் பயிற்சியை பழகிக் கொள்ள வேண்டும். இது குறுக்கு வலியை குணப்படுத்தும்.

நல்லெண்ணெய்யை காய வைத்து, சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும். 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். இவ்விதம் 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் குறுக்கு வலி குணமாகும்.

சாப்பிடும் விதம்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 பூண்டுகளை சாப்பிட்டு வந்தால் குணமாகும்.

எலுமிச்சைச் சாற்றில் சிறிது உப்பு போட்டு தினமும் குடித்து வந்தால் குணமாகும்.

பச்சை உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர வேண்டும். வலிக்கும் இடத்தில் பச்சை உருளைக் கிழங்கை அரைத்துப் பற்று போடவேண்டும்.

குறுக்கு வலி அதிகமாக இருக்கும் நேரத்தில் கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்த்து, பச்சைக் காய்கறிகள், சாலட் சாப்பிடலாம். எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்த காய்கறிகளையும் சாப்பிடலாம்.

முழங்கால் வலி நீங்க ...

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் முழங்கால் வலி குணமாகும்.

சாப்பிடும் விதம்

பச்சை உருளைக்கிழங்கை 4 விரல்கள் அளவு சாப்பிடலாம்.

ஒரு சிறிய உருளைக்கிழங்கை கழுவி மிக்ஸ’யில் போட்டு சாறு எடுத்துக் குடிக்கலாம்.

ஒரு உருளைக்கிழங்கை சாலட் செய்து சாப்பிடலாம்.

லச்சக்கொட்டைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, குறுக்கு வலி குணமாகும்.
இந்தக்கீரையை கழுவி, நறுக்கி, பருப்பு போட்டு பொரியல் செய்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கி கொத்துக்கறியுடன் போட்டு சமைத்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மூட்டு வலிக்கு முட்டைக்கோஸ் சாற்றை அருந்தலாம். வலி ஏற்பட்டுள்ள மூட்டுக்களில் புதிய முட்டைக்கோஸ் இலைகளை அரைத்துப் பற்றுப் போடலாம்.

தலைவலி நீங்க ...

பாத்திரத்தில் தண்­ர் கொதிக்க வைத்து அரை தேக்கரண்டி விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் போட்டு, பெட்ஷ“ட்டால் மூடி ஆவி பிடித்தால் தலைவலி பறந்துவிடும்.

சாப்பிடும் விதம்

அரை டம்ளர் வெந்நீரில், அரை எலுமிச்சம்பழம் பிழிந்து 2 கல் உப்பு போட்டு குடித்தால் தலைவலி குணமாகும்.
காய்ச்சலும் தலைவலியும் சேர்த்து வந்தால் கடுகை அரைத்து உள்ளங்காலில் பற்றுப் போட்டால் தலைவலி, காய்ச்சல் நீங்கி விடும்.

நீண்ட நாட்களாக ஒற்றைத் தலைவலி தொல்லை இருந்தால் தினமும் 1 அவுன்ஸ் திராட்சை பழரசம் (50 மில்லி) குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

நொச்சி இலையை வதக்கி அதில் சிறிதளவு உப்பைத் தூவி இளஞ்சூட்டில் நெற்றியில் பற்றுப் போட்டால் குணமாகும்.

காலில் வீக்கம் நீங்க ...

நல்லெண்ணெய்யை வலிக்கும் இடத்தில் தேய்த்து விட்டால் காலில் வீக்கம் குணமாகும்.

சாப்பிடும் விதம்

தூதுவளை இலைகளையும், நற்சுங்கள் இலைகளையும் எடுத்து, சிறிது தண்­ர் விட்டு அரைத்து அரைத்த விழுதை எடுத்து சுண்டக்காய் அளவில் மாத்திரை போல் செய்து நிழலில் உலர்த்தி ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும். 3 மாத்திரைகளை 1 டம்ளர் பசும்பாலில் கரைத்து, இத்துடன் கற்கண்டு சேர்த்து 1 வாரம் வரை 2 வேளைகள் குடிக்க வேண்டும். இவ்விதம் செய்தால் கால் வீக்கம் குணமாகும்.

97marunthu

1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

 நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.
 வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

 இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும்.

பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்து சருமம் புத்துணர்ச்சி பெறும்.

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

அதிமதுரம் மருத்துவ பயன்கள்  சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த 'டானிக்'! தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது.

அறிமுகம்

அதிமதுரம் 1.5 மீட்டர் உயரம் வரை வளரும் மூலிகைசெடி. நட்டபின் மூன்று (அ) ஐந்து வருடங்கள் விட்டு அறுவடை செய்யப்படும். இந்த வருடங்களில் அதன் வேர்கிழங்குகளும் வேர்களும் பரவலாக, முழுமையாக வளர்ந்திருக்கும். பயன்படும் பாகங்கள் - வேர்த்தண்டு கிழங்கு  மற்றும் வேர்கள். தண்டு கிழங்கு பூமியின் கீழ் 3-4 அடிகளில், பரவலாக கிடைக்கும்.

அதிமதுரத்தின் தாயகம் மத்திய தரைக்கடல் பிரதேசங்கள் எனப்படுகிறது. தென் ஐரோப்பிய பகுதிகள், சிரியா, இராத், துருக்கி, கிரீஸ் மற்றும் ரஷ்யாவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் தென்னிந்தியாவிலும் பயிரிடப்படுகிறது.

பழங்கால கிரேக்கர்களுக்கு அதிமதுரத்தைப் பற்றி தெரிந்திருந்தது. சீன வைத்தியத்தில் உடலை "புதுப்பிக்கும்" மருந்தாக பயன்பட்டது.

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண்  குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும்.

காயங்களுக்கு அதிமதுரப்பொடி + நெய் கலந்து பூசலாம். அதிமதுரக் களிம்பு + வேப்பிலை இலை காயங்களை சுத்தம் செய்யும். அதிமதுர களிம்பு + நெய் கலவை காயங்களை ஆற்றும்.

அதிமதுர வேரின் சிறு துண்டுகளை பாலில் அரைத்து. துளி குங்குமப்பூ போட்டு கலந்து, இந்த கலவையை தலையில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி வரவும். சில வாரங்களில் முடிகள் தோன்றும்.

காலாணிகள்  - அதிமதுரப் பொடியை கடுகெண்ணை (அ) நல்லெண்ணெயில் குழைத்து காலாணிகள் மேல் போட்டால், அவை உதிரும்.

மலச்சிக்கல் - அதிமதுரப் பொடியை வெல்லத்துடன் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம்.

அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆசாரியர் சுஸ்ருதர் அதிமதுரத்தை அதிமுக்கியமான மூலிகையாக குறிப்பிடுகிறார். அலோபதி வைத்தியத்திலும் அதிமதுரப் பொடி பிரபலம்.



இருமல் வீட்டு வைத்தியம்

தொண்டைப்புண்களுக்கு தேன் நல்லது. தேனை வாயில் சிறிது நேரம் வைத்திருந்தால் தொண்டையில் பரவும். தொண்டையின் அழற்ச்சியை தணிக்கும். மஞ்சளும் நல்ல வீட்டு மருந்து. அரை தேக்கரண்டி மஞ்சள் பொடியை ஒரு கப் சூடான பாலில் இட்டு, சர்க்கரை சேர்த்து, தினமும் இரு வேளை பருகவும்.

அதிக அமில சுரப்பு (Acidity)

நான்கைந்து மிளகை, நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
இந்தப் பொடியை சிறிது சர்க்கரை கலந்து பாலில் சேர்த்து, தினமும் சாயங்காலம், 15 நாட்களுக்கு குடித்து வரவும்.
இளநீர் குடிக்கலாம். இளநீர் வழுக்கை (இளம் தேங்காய்) யை எடுத்துக் கொண்டால் இன்னும் நல்லது.
படுக்கும் முன் குளிர்ந்த பாலை குடிக்கலாம்.

இருமல்

எட்டு பாதாம் பருப்புகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் பாதாமின் தோல்களை அகற்றி விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் 20 கிராம் வெண்ணெய், சர்க்கரை சேர்க்கவும். காலையிலும், மாலையிலும் இரு வேளை இந்த விழுதை சாப்பிட்டு வர இருமல் குறையும். அதுவும் உலர்ந்த இருமலுக்கு இந்த விழுது நல்ல பலன் தரும்.

நல்ல மஞ்சள் பொடி 2 கிராம் எடுத்து சூடான பாலில் (1 கப்) கரைத்து தினமும் இரு வேளைகளில், 15 நாள் குடித்து வரவும்.

துளசி சாறு 5 மி.லி. எடுத்து 10 மி.லி. தேனில் கலந்து சாப்பிடவும். சிறுவர்களுக்கும் கொடுக்கலாம்.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல் ஏற்படுகின்ற வாய்ப்புள்ளவர்கள், படுக்கைக்குச் செல்லுமுன் கனத்த உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதுடன், இரவு உணவிற்கும், படுக்கைக்குச் செல்வதற்கும் இடையே குறைந்தது மூன்று மணி நேரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அஜீரணம்

அஜீரணம், அதுவும் ஜுரத்துடன் கூடிய பித்த அஜீரணத்திற்கு கடூக்கி எனும் கடுகு ரோகினி நல்ல மருந்து ஆகும்.

கடுகு ரோகினி ஜுரத்தை குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளை அகற்றும், இதமான மலமிளக்கி வயிற்று வலியை போக்கும்

தீப்புண் (Fire Sore)

தீப்புண் (Fire Sore)

தீக்காயமா... மருந்தை தேடி அலையாதீர்கள்..!

தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள். பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்.

சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும். தொடர்ந்து செய்து வந்தால், அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே.

Wednesday, October 19, 2016

"வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான்" என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்

"வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்ததும் சாக வேண்டியதுதான்" என்று கிராமங்களில் விரக்தியாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சில இடங்களில் அதை நடைமுறையிலும் பார்க்க முடிகிறது.

ஆனால் நம் முன்னோர்கள் உணவை மருந்தைப் போல அளவாகவும், பத்தியமாகவும் உண்டார்கள்.

மருந்தே உணவாக இருந்தது என்று கூடச் சொல்லலாம்.

அவர்களது சமையலறையில் மருத்துவ குணமுள்ள பொருட்களே அதிகம் இருந்தன.

மிளகு, சீரகம், வெந்தயம், மல்லி(தனியா) என்று பல மூலிகைப் பொருட்களை உணவில் பயன் படுத்தினர்.

இவைகளைப் பயன் படுத்தி குழம்பு, ரசம் எல்லாம் சமையல் செய்தனர்.

மஞ்சள் பொடி முக்கிய இடம் வகித்தது.

அது உணவுப் பொருள் வேகும் போது சத்துக்களை இழந்துவிடாமல் இருக்கவும், குடல் புண்ணை ஆற்றவும், கிருமி நாசினியாகவும் பயன் பட்டது.

துவரம் பருப்பை அவர்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளவில்லை.

பாசிப்பயிரையே அவர்கள் அதிகம் பயன்படுத்தியுள்ளனர்.

காரம் தேவைப்படும் போதெல்லாம் மிளகையே பயன்படுத்தியுள்ளனர்.

கறிவேப்பிலை கரைத்த நீர் மோர், சுக்கு பொடியிட்ட பானகம், கொத்துமல்லிக் காபி போன்றவற்றையே விருந்தினர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உளுந்தை அவர்கள் குறைவாகவே உபயோகப் படுத்தி இருக்கிறார்கள்.

காலையில் நீராகாரத்தை உண்டனர்.

தயிரைவிட மோர் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இரவு செப்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசியைப் போட்டு வைத்து, அதிகாலையே எழுந்து அந்த நீரைப் பருகிவிட்டு தியானத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.

மேலும் வாழையிலை, வாழை மரப்பட்டைகள் இணைந்த ஏடுகள், மந்தார இலை இவற்றையே உணவு உண்ண பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மற்ற உலோகங்களில் சூடான உணவை போடும் போது ஏற்படும் இரசாயன மாற்றம் இந்த இலைகளில் ஏற்படுவதில்லை.

மாறாக நன்மையே செய்கிறது என்று அறிந்து வைத்திருந்தார்கள்.

மதிய உணவுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே அவர்கள் வேறு எதையும் உட்கொள்ளமாட்டார்கள்.

உணவுக்கு முன் நீர் அருந்தினால் அது ஜடாராக்கினியை அவித்துவிடும் என்று உணவுக்கு முன் நீர் அருந்தமாட்டார்கள்.

எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுப் பண்டங்கள், கடின முயற்சியால் ஜீரணமாகும் உணவுப் பண்டங்கள் என்று அவர்கள் உணவு பிரிக்கப் பட்டிருந்தது.

பசியினால் சுருங்கியிருக்கும் உணவுக் குழாயில் சேதம் ஏற்பட்டு விடும் என்பதால் பரிமாறி முடிக்கும் வரை உணவை தொடமாட்டார்கள்.

உண்ணும்போது அந்தக் குழாயை சிறிதுசிறிதாக அகலப்படுத்தும் முறையாகவே அவர்கள் உணவுப் பழக்கம் இருந்தது.

இலையில் பதார்த்தங்கள் பரிமாறியதும் சாதம் வரும். அதற்கருகிலேயே பருப்பு வைக்கப்படும்.

நெய்யை சாதத்தின் மீது ஊற்றிய பின்னர் உண்ணத் துவங்குவார்கள்.

அதுவும் முதலில் சிறிதளவு நீரைக் கையில் எடுத்து இலையைச் சுற்றி ஊற்றிவிட்டு, மீதம் உள்ள துளிகளைப் பருகுவார்கள்.

இலையைச் சுற்றி ஊற்றுவதால் இலைக்கு சிறு பூச்சிகள் எறுப்புகள் வராது.

மீதமுள்ள துளிகளைப் பருகுவதால் அது சுருங்கிய உணவுக் குழாயில் ஈரப்பசையை உண்டாக்கி முன் செல்லும்.

இப்படி நீரால் சிறிது உணவுக் குழாய் விரிவடையும் போது, பருப்பு நெய் கலந்த சாதத்தை உண்ணுவார்கள்.

அது நெய்யினால் வழுக்கிக் கொண்டு போவதுடன் உணவுக் குயாயை மேலும் விரித்து விடும்.

பருப்பு ஜீரணமாக அதிக சக்தி தேவை என்பதால் உணவு உஷ்ணமாக இருக்கும் போதே பருப்பு மற்றும் சாம்பார் சாதத்தை சாப்பிட்டு விடுவார்கள்.

இந்த இரண்டு உணவுகளுக்குமே ஜீரண சக்தி அதிகம் தேவைப்படும் என்பதால் அடுத்ததாக எளிதில் ஜீரணமாகக் கூடிய மற்றும் ஜீரண சக்தியை அதிகப் படுத்தும் மருத்துவ குணமுள்ள ரசம் சாதத்தை உண்பார்கள்.

அடுத்து மோர் சாதம்.

இது உணவைப் புளிக்க வைத்து எளிதில் ஜீரணமாக உதவும்.

அதற்க்குத் துணையான ஊறுகாய்களும், அதிலுள்ள அமிலத் தன்மை (எலுமிச்சை, நார்த்தை) உப்பு, மிளகு போன்றவைகளும் மேலும் ஜீரணத்திற்கு உதவும்.

பண்டைய காலங்களில் ஊறுகாய்க்கு கடுகு எண்ணெயும், மிளகுமே பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

இதை இவ்வளவு விரிவாக ஏன் சொல்கிறேன் என்றால், இன்றோ நாகரீகம் என்ற பெயரில் மசாலா நாற்றத்துக்கு மயங்கி, கண்ட கண்ட வேளைகளில் கண்ட கண்ட உணவுகளை உள்ளே தள்ளி குடலையும், உடலையும் கெடுத்துக் கொள்கிறோம்.

இப்படி எல்லாம் நடக்காமல் இருக்க, திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களைக் கையாண்ட நம் முன்னோர்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.

நாமும் இனி திட்ட மிட்ட உணவுப் பழக்கங்களை கையாள வேண்டும் என்று உறுதி கொள்வோம்.

"ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய உணவு முறை அவசியம்"

"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"