Sunday, July 31, 2016

உடல் எடையைக் குறைக்கும் மாங்காய்

உடல் எடையைக் குறைக்கும் மாங்காய்

மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும் தன்மை இந்த மாங்காய்க்கு உண்டு.
man
மாங்காயில் உள்ள சத்துக்கள்
மாங்காயில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
100 கிராம் மாங்காயில் உள்ள சத்துக்கள்
கால்சியம் – 10 மி.கி, சுக்ரோஸ் 14.8 மி.கி, பைபர் 1.8 கி, இரும்பு 0.13 மி.கி, மக்னீசியம் 11 மி.கி, பொட்டாசியம் 156 மி.கி, புரோட்டின் 0.51 மி.கி, வைட்டமின் ஏ 38 மி.கி, வைட்டமின் சி 27.7 மி.கி, தயமின் 0.058 மி.கி, வைட்டமின் B12 0.057 மி.கி, வைட்டமின் பி3 0.548 மி.கி, வைட்டமின் பி5 0.180 மி.கி
மருத்துவ பயன்கள்
மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம்.
மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது.
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால்
வயிற்றுப்போக்கு நீங்கும்.
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.
தினமும் மாங்காய் சாப்பிட்டடால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் உடலை பலமாக்கும்.
ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும்.
சருமத்தை பளபளப்பாக்கி, முதுமை தோற்றத்தை தடுக்கும்.
மருத்து பயன்கள்
மாங்காய் சாப்பிடுவதன் மூலம் புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்யும்.
மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும், மேலும் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் சாப்பிடுவதற்கு பதிலாக மாங்காய் சாதம் செய்து சாப்பிடலாம்.
குறிப்பு
இதனை, சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

முடி கொட்டுவது நிற்க சில குறிப்புகள்

* முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் முடி வளரும்
* கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.
* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்

பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வழங்கும் போகர் பஞ்ச கல்பம்
1) நெல்லிப்பொடி
2) வெண்மிளகு
3) கடுக்காய்ப்பொடி
4) கஸ்தூரிமஞ்சள்
5) வேப்பன்வித்து
இதை வாரமிரு முறை பாலில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வைத்து அரைமணி நேரம் கழித்து இளம் சூடான வெந்நீரில் குளித்து வர தலையில் உள்ள சூடெல்லாம் தணிந்து கண்கள் குளிர்ச்சி பெறும்.
பகலிலும் நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவிற்கு கண்ணொளி வலிமை பெறும். கண்பார்வைக் குறைபாடுகள் , அது கிட்டப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி , தூரப் பார்வைக் குறைபாடாக இருந்தாலும் சரி சில மாதங்களில் நீங்கும்.இது கண் பார்வைக் குறைபாட்டால் அவதியுறுபவர்களுக்கு இது ஒரு வரப் பிரசாதமான மருந்து. 

மாதவிடாய் வலி தீர....

பெண்கள்....!

மாதவிடாய் வலி தீர....

மாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு  உப்பு கால் ஸ்பூன் தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து  சாப்பிட்டு வர வலி நீங்கும். (சளி  சைனஸ்  வீசிங் உள்ளவர்கள் தவிர்க்கவும்)

மலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர வலி தீரும்.

கருப்பை கோளாறுகள் நீங்க...

நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.

முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.

அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்


குழந்தை பாக்கியம் பெற ....

வாரத்தில் 3-நாட்கள் அகத்திக்கீரை சாப்பிட்டு வருவதுடன் தினசரி செவ்வாழைப் பழம் 1-வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கருத்தரித்த பெண்களுக்கு ....

கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது. (சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்கவும்)

குழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
 அதனால் குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.


நெல்லிக்காய் முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால் நல்லது.

தாய்ப்பால் சுத்தமாக....

தேன் 15-பங்கும், அமுக்கராங்கிழங்கின் ரசம் 10-பங்கும், மிளகுரசம் 15-பங்கும்,மணத்தக்காளி ரசம் 25-பங்கும் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.

வாத நோயிக்கான மருந்து

"வாத எண்ணெய்இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
 வெளிப் படுத்தி உள்ளோம்
 எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
 மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

வாத எண்ணெய்

௧) எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
௨)காடி நீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
௩)மருந்துப் பொருட்கள்
சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
௪)மருந்து சாப்பிட
நாட்டுப் பசும்பால்
வாத எண்ணெய் செய்யும் முறை
அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
 சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும்  பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ)இந்த சூரணத்தில்
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இ)வாணலியை அடுப்பிலேற்றி
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
 விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும்
நுரை அடங்கி வரும்

நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்

இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
 வாத எண்ணெய் என்று பெயர்

ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை

உள் மருந்தாக
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து
இறக்கி
குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன்
 அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து

 உணவுக்குப் பின்
அரை மணி நேரம் கழித்து
காலை மாலை என
தினமும் இரண்டு வேளை குடித்து  வர வேண்டும்

வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை
தினமும் இரவில்
கை கால்களில் தேய்த்து
 மென்மையாக மசாஜ் செய்து
மறு நாள் காலையில்
இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

இவ்வாறு தினமும் செய்து வர
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
 நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
 கைகால்கள் வீக்கம்
வலி
போன்ற அனைத்து வாத நோய்களும்
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்

இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
 என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்

தகவல் நன்றி :- திரு.பொன்.தங்கராஜ்"
வாத எண்ணெய்
இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்
இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

வாத எண்ணெய்

௧) எண்ணெய்கள்
நல்லெண்ணெய் ... நூறு மில்லி
வேப்ப எண்ணெய் ...நூறு மில்லி
விளக்கெண்ணெய் ...நூறு மில்லி
௨)காடி நீர்
புளித்த காடி நீர்
அதாவது புளித்த பழைய சோற்று நீர்
நீத் தண்ணீர் நீச்சதண்ணீர் என்றும் கூறுவார் )
௩)மருந்துப் பொருட்கள்
சுக்கு
மிளகு
திப்பிலி
பூண்டு
ஓமம்
பெருங்காயம்
கிராம்பு
வசம்பு
சதகுப்பை
௪)மருந்து சாப்பிட
நாட்டுப் பசும்பால்
வாத எண்ணெய் செய்யும் முறை
அ)மேற்கூறிய ஒன்பது மருந்துப் பொருட்களையும்
சம அளவு அதாவது ஒவ்வொன்றிலும் பதினைந்து கிராம் அளவுக்கு எடுத்து
சேர்த்து அரைத்து சூரணமாக ஆக்கிக்கொள்ளவும்

ஆ)இந்த சூரணத்தில்
நான்கு தேக்கரண்டி அளவு எடுத்து
அதை புளித்த காடி (பழைய சோற்று நீர் புளித்தது )ஊற்றி
நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்

இ)வாணலியை அடுப்பிலேற்றி
முதலில் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கொதித்ததும்
வேப்பெண்ணெய் ஊற்றிக் கலந்து கொதிக்கவிட்டு நன்கு கொதி வந்தபின்
விளக்கெண்ணெய் ஊற்றிக் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்

மூன்று எண்ணெய்களும் ஒன்றாக உறவாடி நன்கு கலந்து கொதித்த பின்
நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள மருந்து விழுதைச்
சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறி நன்கு கொதிக்க விட வேண்டும்
இவ்வாறு நன்கு கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில்
அத்துடன் ஒரு தேக்கரண்டி புளித்த காடி நீரை ஊற்றிக் கிளறவும்
நன்கு கொதிக்க விடவும்
நுரை அடங்கி வரும்

நுரை அடங்கி விட்டால் சரியான தைலப் பதம் வந்து விட்டது என்று பொருள்

இறக்கி வடி கட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமிக்கவும்
இந்த்த முழு செயலையும் சிறுதீயில் செய்ய வேண்டும்

இவ்வாறு கிடைத்த எண்ணெய்க்கு
வாத எண்ணெய் என்று பெயர்

ஈ)வாத எண்ணெயை மருந்தாக சாப்பிடும் முறை

உள் மருந்தாக
நூறு மில்லி நாட்டுப் பசும்பாலை நன்கு கொதிக்க வைத்து
இறக்கி
குடிக்கும் அளவுக்கு இளஞ்சூட்டில் இருக்கும்போது
அந்தப் பாலுடன்
அரை தேக்கரண்டி வாத எண்ணெயை ஊற்றிக் கலந்து

உணவுக்குப் பின்
அரை மணி நேரம் கழித்து
காலை மாலை என
தினமும் இரண்டு வேளை குடித்து வர வேண்டும்

வெளி மருந்தாக
இந்த வாத எண்ணெயை
தினமும் இரவில்
கை கால்களில் தேய்த்து
மென்மையாக மசாஜ் செய்து
மறு நாள் காலையில்
இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும்

இவ்வாறு தினமும் செய்து வர
எண்பது வகை வாதங்களும்
அனைத்து சூலை நோய்களும்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் கூட குணமாகும்

நடுக்கு வாதம்
முடக்கு வாதம்
கீல்வாதம்
நரித்தலைவாதம்
ஆமைவாதம்
பக்கவாதம்
கைகால்கள் வீக்கம்
வலி
போன்ற அனைத்து வாத நோய்களும்
அனைத்து சூலை நோய்களும் குணமாகும்

இது ஒரு இரகசிய எளிய அனுபவ வீட்டு மருந்து ஆகும்

இந்த தமிழ் மருத்துவம் அழிந்து விடக் கூடாது
அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும்
என்ற உன்னத நோக்கில்
இந்த இரகசிய மருந்து
தயாரித்துப் பயன்படுத்தும் முறையை
வெளிப் படுத்தி உள்ளோம்

Saturday, July 30, 2016

குடிநீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!

குடிநீரை சுத்தமாக்கும் தேத்தாங்கொட்டை!

நீரைத் தெளிய வைப்பதனால்தான் `இல்லம்’ என்ற தமிழிலக்கியப் பெயரைக் கொண்ட தாவரத்துக்குத் தேத்தாங்கொட்டை, தேறு, தேற்றா என்ற ஆகு பெயர்கள் பின்னர்த் தோன்றின.

 இந்தப் பண்பு “இல்லத்துக்காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து” என்ற கலித்தொகை பாடல் வரியிலும் (142:64), பெருங்கதை பாடல் வரியிலும் (35:215) சுட்டப்பட்டுள்ளது. பிரகத்சம்ஹிதை என்ற வடமொழி நூலும் இந்தப் பண்பு பற்றி குறிப்பிடுகிறது.

“அஞ்சனா (பெரிய ஏலக்காய்),
முஸ்டா (கோரைக்கிழங்கு),
உசிரா (வெட்டி வேர்),
நாகா (நன்னாரி),
கோசடக்கா (நுரைபீர்க்கை),
அமலக்கா (நெல்லி)

போன்றவற்றைப் பொடி செய்து, அவற்றைத் தேத்தாங் கொட்டைத் தூளுடன் கிணற்று நீரில் கலந்தால் கலங்கிய, கசந்த, சப்பென்ற, உப்பான, ருசியற்ற, நாற்றமடிக்கும் நீர் நன்கு தெளிந்து ருசியும் மணமும் கொண்ட நல்ல நீராகும்” இது சுரபாலர் எழுதிய விருக்ஷாயுர்வேத நூலின் 299-300-ம் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தமிழ் வடிவம்.


பீப்பாய் நீர் தெளிய

ஆப்பிரிக்கக் கண்டத்து அடிமைகள் அமெரிக்கக் கண்டத்துக்குக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்டபோது, பீப்பாய் நீரைச் சுத்தம் செய்வதற்காகப் புளியங்கொட்டை பயன்படுத்தப்பட்டதைப் போன்று, பண்டைய தமிழகக் கப்பல்களில் நீண்ட தூரப் பயணங்களின்போது, நீரைத் தெளிவாக்கிச் சுத்தம் செய்யத் தேத்தாங்கொட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்றும்கூடப் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டக் கிராமங்களில் தேத்தாங்கொட்டை நீரைத் தெளிவாக்கவும் சுத்தமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 அண்மைக்கால ஆய்வுகளின்படி பொடி செய்யப்பட்ட தேத்தாங்கொட்டைத் துகளிலுள்ள கார்போஹைட்ரேட் பல்வேறு வேதிப்பொருட்களை
 (கன உலோகங்களையும் சேர்த்து) உறிஞ்சி நீரைத் தெளிவாக்குகிறது.

வறண்ட நிலத் தாவரம்

கடகம், ஜலதம், அக்கோலம், சில்லகி, சில்லம் என்ற இதர பெயர்களைக் கொண்ட இந்தத் தாவரத்தின் தாவரவியல் பெயர் Strychnos potatorum
 (தாவரக் குடும்பம்: Loganiaceal) ;

இது எட்டி மரத்துடன் தொடர்புடைய ஒரு தாவரம். ஏறத்தாழ 30 முதல் 50 அடி உயரம்வரை வளரக்கூடிய இந்த மரம், நல்ல நிழல் தரும் மரமும்கூட.

 இந்தியாவின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் இது சாதாரணமாக வளர்கிறது. குறிப்பாக, முல்லை திரிந்த பாலை நிலப்பகுதிகளில் வளர்கிறது.

சங்க இலக்கியக் காலத்தில் முல்லை நிலத்தில் செழிப்பாக வளர்ந்ததாக அறியப்பட்டுள்ள இந்தத் தாவரம், தற்போது குறைந்த எண்ணிக்கைகளில் காணப்படுகிறது. “முல்லை இல்லமொடு மலர …. கார் தொடங்கின்றே”, “இல்லம் முல்லையொடு மலரும்” என்ற அகநானூற்று வரிகள்

(அகநானூறு 364:7, 9; 1: 1, 2,7) மட்டுமின்றி “நரு முல்லை உகு தேறு வீ “ என்ற பொருநராற்றுப்படை வரியும் மேற்கூறியதற்குச் சான்றாகும்.

 கார்காலத்தில் மலரும் இந்த மரத்தின் பூக்களைச் சங்ககால மக்கள் சூடினர் (குல்லை குளவி கூதளங் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தனை கண்ணியன்” நற்றிணை : 5:6). தற்காலத்தில் யாரும் சூடுவதில்லை.

நீரிழிவுக்கு மருந்து

தேற்றா மரம் பாரம்பரிய மருத்துவ முக்கியத்துவம் கொண்டது. இதன் அனைத்து உறுப்புகளும் மருத்துவத் தன்மை கொண்டவை.

உடல் இளைக்கவும் தேறாத உடம்பைத் தேற்றவும் தேத்தாங்கொட்டை லேகியம் சாப்பிட வேண்டும்.

பழம், விதை இரண்டுமே சளியை நீக்கும், கபத்தைப் போக்கும், சீதபேதி – வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்,

 புண்கள் – காயங்களை ஆற்றும்,
கண் நோய் போக்கும்,
சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்கும்,

 பெண் இனப்பெருக்க உறுப்புக் கோளாறுகளை அகற்றும்; இதன் கொட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.

தேற்றா மரம் ஆன்மிக முக்கியத்துவமும் கொண்டது. தியாகேசருடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள தாவரம். திருவாரூர் திருக்குவளையின் கோலிவிழிநாதர் கோயிலின் தலமரமாகத் திகழ்கிறது. தேற்றா வனத்தின் நடுவில் (கடக்கா வனம்) பிரம்மா ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டார் என்று புராணக் கதை ஒன்று கூறுகிறது.

தமிழகத்தில் அழிந்துவரும் தாவரங்களில் தேற்றா மரமும் ஒன்று. இதைப் பாதுகாப்பதற்கு மக்களும் அரசும் அதிக முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

 இதன் மருத்துவப் பண்புகளைப் பிரபலப்படுத்த, அறிவியல் சார்ந்த ஆய்வுகளும் அதிகம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

[1:55 AM, 7/30/2016] Maru kirushnan: தேற்றான் கொட்டை மரம்
[1:58 AM, 7/30/2016] Maru kirushnan: தேற்றான் கொட்டை மருத்துவ பயன்கள்

கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டதும், உஷ்ணத்தை குறைக்க கூடியதும், ரத்த ஓட்டத்தை சீராக்க வல்லதும், அடிக்கடி சிறுநீர் கழித்தலை தடுப்பதும், பலவீனமான உடலை தேற்றக் கூடியதும், பால்வினை நோயால் ஏற்படும் புண்களை குணப்படுத்த கூடியதுமான தேத்தான் கொட்டை சூரணம் பல மருத்துவகுணங்களை கொண்டது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடல் பலவீனம் அடைவதுடன் தூக்கம் கெட்டுவிடும். இந்நிலையில், தேத்தான் கொட்டை சூரணத்தை தேனீராக்கி பால் சேர்த்து குடிப்பதால் இப்பிரச்னை சரியாகும்.

தேத்தான் கொட்டை சூரணத்தை பயன்படுத்தி உடலை தேற்றும் மருந்து தயாரிக்கலாம்.

தேத்தான் கொட்டை சூரணப்பொடி, திரிகடுகு சூரணம், திரிபலா சூரணம், சீரகப்பொடி, சித்தரத்தை பொடி, பால் சேர்த்து பசை போன்று தயாரித்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர், 4 பங்கு வெல்லம், ஒரு பங்கு நீர் விட்டு பாகு தயாரிக்கவும். ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பசையை, வெல்ல பாகுடன் சேர்த்து கிளறவும். அல்வா பதத்தில் வரும்போது நெய்விட்டு கிளறவும்.

நெய் பிரிந்து தனியாக வரும் சமயத்தில் ஸ்டவ்வை ஆப் செய்யவும். கடைசியாக தேன் சேர்த்து கலக்கவும். லேகிய பதத்தில் இருக்கும் இதை காலை மற்றும் மாலை வேளைகளில் நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து கொண்டால் உடல் தேறும்.

உடலுக்கு பலத்தை கொடுக்கும் தேத்தான் கொட்டையானது, உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கும்.  உஷ்ணத்தை குறைக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. ரத்த நாளங்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் கொழுப்பை கரைக்கும். ரத்த ஓட்டத்தை சீர்செய்யும்.

லேகியமாக செய்து காலை, மாலை சாப்பிடுவதன் மூலம் உடல் எடை கூடுவதுடன் பலம் அதிகரிக்கும். பால்வினை நோய்க்கு தீர்வாக அமைகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.

சிறுநீரக கோளாறுகளை சரி செய்கிறது. இருமலை தணிக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்ததை குறைக்கிறது.

 பால்வினையால் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடியது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்து வெளியேறுதலை தடுக்கிறது.

கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை உடைத்து வெளித்தள்ளும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

இளைத்த உடம்பை தேற்றும். உயிரணுக்களை அதிகரிக்கும். தேத்தான் கொட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இதை வாங்கி இடித்து பொடியாக்கி அதனுடன் சிறிது பால் சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால் எடுத்துகொண்டு மெல்லிய துணியில் பொடியை பிட்டுபோல் வேக வைத்து எடுத்துக் கொண்டால் அது சுத்தமான பொடியாக இருக்கும்.

திண்டுக்கல்லிலல் அழகப்ப நாடார் நாட்டு மருந்துக் கடையில் தேற்றான் கொட்டை
சூரணம்  (பொடி) கிடைக்கும்

தேத்தான் கொட்டை  -  குறிப்பு


நீரை அதிகளவு சுத்திகரிக்கும் திறன் வாய்ந்தது தேத்தான் கொட்டை.

 தேவையான அளவு தேத்தான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் கரைத்துவிட வேண்டும்.

இது நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் நீக்கி, தூய்மையான தண்ணீரை தரும்.

அதோடு, உடல் இளைத்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர்

இது. வீட்டில் கிணறு வைத்திருப்பவர்கள், அரைக் கிலோ தேத்தான் கொட்டையைக் கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். எப்பேர்பட்ட அழுக்கான தண்ணீரையும் சுத்திகரித்துச் சத்தான நீராக மாற்றிவிடும்

http://naattumarunthu.blogspot.in/

https://www.facebook.com/NaattuMarunthu/

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன?

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன?
.
வெங்காயம் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை சிரப் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகள் கொண்டுள்ளது.இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஒட்டத்தை சீராக்குவதில் இருந்து, பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை சிறக்க வைப்பது வரை பல நன்மைகள் தரவல்லது இந்த இயற்கை சிரப்.
இனி, வெங்காயம், தேன் கொண்டு தயாரிக்கப்படும் சிரப்பை எப்படி தயாரிப்பது? இதனை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என பார்க்கலாம்...
 
தேவையான பொருட்கள்!
வெங்காயம் - 1
தேன்
   
வைட்டமின் சத்துக்கள்!
வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்..., வைட்டமின் A, B, B2, B3, B5, C, E ...
   
செய்முறை:-
மெல்லிசாக வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
ஒவ்வொரு ஸ்லைஸ் வெங்காயத்திலும் தேனை ஒரு டீஸ்பூன் அளவு தெளிக்கவும்.
ஒரு ஸ்லைஸ் வெங்காயத்தின் மீது மற்றொன்று என அடுக்கவும்.
24 மணிநேரம் இதை ஊறவிடுங்கள்.
மறுநாள் நீங்கள் ஊறவைத்த இந்த பாத்திரத்தில் சிரப் போன்ற நீர் தங்கியிருக்கும்.
இதை குடித்து வரவும்.
   
நன்மைகள்:-
தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.
சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் சீக்கிரம் குணமடையலாம்.
இதில் இருக்கும் ஆண்டி-கொலஸ்ட்ரால், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவும்.
   
இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க பயனளிக்கும்.
செரிமானத்தை ஊக்கவிக்கும் தன்மை கொண்டது இந்த சிரப்.
நீரிழிவுக்கு சிறந்த மருந்து இது. இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உடல் நலத்திற்கு உதவும்.
   
குறிப்பு:
இருமல் உள்ளவர்கள், இருமலை தடுக்க / குறைக்க ஒரு டீஸ்பூன் இதைக் குடித்து வரலாம்.

Tuesday, July 26, 2016

பெண்களுக்கு மட்டும் ...........

பெண்களுக்கு மட்டும் ...........

பெண்களின் பிறப்பு உறுப்பில்


ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர்போன்ற ) வெளிப்படுதல் எல்லாப் பெண்க ளாலும் உணரப்படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள்(GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த்தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈரத்தன்மை யை பேணும்.

இவ்வாறு ஈரத்தன்மை பேணப் படுவது அந்த பெண்ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY AND CLEAN) இருப்பதற்கு அத்தியாவசிய மாகும். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இந்த சுரப்பிக ளின் தொழிற்பாடு குறைவதால் அவர்களின் பிறப்பு உறுப்பு உலர் ந்த நிலையை அடைந்து காணப்படும். இதனாலேயே அவர்க ளுக்கு பாலியல் தொடர்பிலும் நாட்டம் குறையும். மேலும் பல அசொகரியங்களை இது கொடுக்கலாம்.

இவ்வாறு சாதாரணமாக வெளிப்படும் திரவமானது, சில பெண்களுக்கு மன ரீதியான உளைச்சலைக்கொடுக்கலாம். தங்களுக்கு ஏதோ நோய் இருக்கிறது அதனாலேதான் இந்நிலை ஏற்படுகின்ற து அவர்கள் கூச்சப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் மனதி ற்குள்ளே வருந்திக் கொண்டிருக்கலாம்.

உண்மையில் பிறப்பு உறுப்பிலே இருந்து வெளிவருகின்ற திரவ ங்கள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தெளிவாக அறிந்து வைத்தி ருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெ றால் சில நோய்களில் கூட இவ் வாறு திரவங்கள் வெளிவரலாம்.

எவ்வாறு நோய்களினால் வெளிவருகின்ற திரவங்களை சாதா ரண திரவங்களில் இருந்து வேறு பிரித்தறிவது?

சாதாரணமாக வெளிவருகிற திரவமானது தெளிவானதாக (CLEAR) எந்த விதமான கெட்ட மனமும் இல்லாததாக இருக்கும். இது அவர்களின் உள்ளாடையில் பட்டு உலரும் போது பால் (MILKY) போன்ற அல்லது தெளிவானதாக இருக்கும். இதுவே வெள்ளை படுதல் என்று நம் பெண்களால் அழைக்கப் படுகிறது.

சாதாரணமாக வெளிவரும் திரவம்

மேலும் இந்த திற வெளிப்பாடானது மாதவிடாயின் போது, உடலு றவின் போது, கர்பம் தரித்திருக்கும் போது போன்ற சந்தர்ப்பங் களில் அதிகரிக்கலாம்.

ஆனால் இவ்வாறு இல்லாமல் திரவமா னது பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்குமானால், கெட்ட மனமுடைய தாக இருக்குமானால், அல்லது தயிர் போன்று தடித்த கட்டி(THICK) போன்ற திரவமாக இருக்குமானால் இது குறிப்பிட்ட சில நோய்களின் அறி குறியாக இருக்கலாம். இவ்வாறான சந்தர்பத்தில் வைத்தியரை நாடி தகுந்த மறுத்ததை எடுத்து சில நாட்களுக்கு உட்கொண்டா லே போதும் இந்தப் பிரச்சினை சுகமா கி விடும். இது பொதுவாக கிருமி களின் தொற்றுகளால் ஏற்படும்.

மேலும் இந்தத் திரவமானது மிகவும் சகிக்கமுடியாத மனமுடையதாக, அல்லது இடையிடையே ரத்தம் போகு ம்போது இது புற்றுநோயின் அறிகுறி யாக கூட இருக்கலாம்.

ஆக பென்னுருப்பிலே இருந்து திரவம் வெளிப்படுகின்றது என்றுஅஞ்சினால், முதலில் அதன் தன்மையை அவதானியுங்கள்.

கீழே வரும் மாறன்கள் உங்கள் பிறப்பு வழித் திரவத்தில் இருந் தால் உடனேயே வைத்தியரை நாடுங்கள்.
* தயிர் தன்மையான வெள்ளை கட்டிகள் வெளிவருதல்
* பச்சை அல்லது மங்க்ச்சல் நிறத் திரவம் வெளிவருதல்
* சகிக்க முடியாத மனம் கொண்ட திரவம் வெளிவருதல்
* அதிக ரத்தம் போகுதல் அல்லது மாதவிடாய் அல்லாத நேரத்தில் ரத்தம் போகுதல்

இவை எதுவும் இல்லாமல் சாதரணமான பால் போன்ற அல்லது தெளிவான திரவங் கள் வெளிவந்தால் இது உங்களில் மட்டு மல்ல எல்லாப் பெண்களிலும் உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்தி ருக்க ஏற்படுகி ன்ற சாதாரணமான நிகழ்வே!

Monday, July 25, 2016

சுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக!!

சுவாசக் கோளாறுகள் மார்புச் சளி காச நோய் குணமாக!!

நூறு மில்லி செக்கு நல்லெண்ணெயை  நன்கு காயச்சி அத்துடன் நூறு  கிராம் கரிசாலை இலைகளை அரைத்து விழுதாக்கிப் போட்டு சிறு தீயில் நன்கு தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி ஆற வைத்து பாட்டிலில் சேமிக்கவும்

தினமும் காலை  உணவுக்கு அரை மனி நேரத்துக்கு  முன் பத்து மில்லி உள்ளுக்குக் குடித்து வர மேற்கூறிய நோய்கள் அனைத்தும் தீரும்

நோயின் தாக்கம் அதிகமாக இருந்தால் தினமும் காலை  மாலை இரண்டு வேளைகள் வேளைக்குப் பத்து மில்லி வீதம் குடிக்கலாம்

இது ஒரு கை கண்ட எளிய அனுபவ முறை


மூல நோய் தீர்க்கும்துத்திக்கீரை

மூல நோய்"
ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள்.
*
மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும் போது, மலம் வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும் போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே தள்ளிக் கொண்டு வந்து விடுகின்றன.
*
மேலும் காய்ந்த மலம் ஆசன வாயைக் கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும் போது அந்த வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர் அல்லது ஆசன வாய் வெடிப்பு என்கிறார்கள்.
*
இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன.
*
ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ் முன்னோர்கள் இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள்.
*
அவை:- நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினை மூலம், மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்தி மூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம்.
*
இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவ மூலம் என்றும் சொன்னார்கள்.
*
நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.
*
அதனடிப்படையில் மூல நோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும் போது பக்க விளைவுகள் இல்லாமல் மூல நோய் குணமாகும்.
*
ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் மருந்துகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன.
*
இதனால் உள் மூலம் குணமாகும், வெளி மூலம் சுருங்குகிறது. ஆசன வாயில் இருக்கும் சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. மீண்டும் வருவதில்லை.
*
*
உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
*
"துத்திக்கீரை" என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது.
*
எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலை மீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டி விட, கட்டி உடைந்து விடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்று விடும். வேண்டுமானால் மூலத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை செய்து பார்க்கலாம்.
*
*
துத்திக்கீரயின் மற்ற பயன்கள்:
*
இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
*
"மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ் சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும் இப்படியிற் றுத்தி யிலையை" (அகத்தியர் குணபாடம்)
*
*
மலச்சிக்கல் தீர:-
*
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச்சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்து விடும்.
*
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
*
*
மூல வியாதி குணமாக:-
*
காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூல நோயாக மாறுகிறது.
*
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர் விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூல நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூல நோய் படிப்படியாகக் குணமாகும்.
*
*
உடல் சூடு தணிய:-
*
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.
*
*
வெப்பக்கட்டி குணமாக:-
*
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.
*
துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
*
*
பல் ஈறு நோய் குணமாக:-
*
துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
*
*
குடல் புண் ஆற:-
*
துத்திக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.
*
*
சிறு நீர் பெருக்கி:-
*
சரியாக சிறு நீர் பிரியாமல் இருந்தால் சிறு நீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறு நீரக நோய் வராது.
*
துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
*
*
மூல நோய் விரட்ட:-
*
எல்லா வகை மூல நோய்களுக்கும் பக்குவமான மருந்து இது. கிராமங்களில் கிடைக்கும் மருந்து. அது தான் வேப்பமுத்து. அதன் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும். ஒரு பாக்கின் அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மாலையிலும் ஒரு பாக்கு அளவு அரைத்து உருட்டிச் சாப்பிட வேண்டும். இப்படியே (ஒரு மண்டலம்) நாப்பத்தெட்டு நாள் சாப்பிடணும். பத்தியம் உண்டு. அதாவது, மூல வியாதிக்கு மருந்து சாப்பிட்டு முடியும் வரை, உடல் உறவு கூடாது. சூடு உண்டாக்கி மூலம் அதிகமாகும். அருகம்புல் சாறும் நல்லது.


Sunday, July 17, 2016

குழந்தை எது கொடுத்தாலும் சரியாக சாப்பிடுவதில்லை என்ன செய்வது?

கிராமத்தில் “வேண்டா பிள்ளைக்கு வெல்லம் கொடு” என்பார்கள். இது வேண்டாத பிள்ளைக்கு கொடு என்று அர்த்தம் அல்ல. எதை கொடுத்தாலும் சாப்பிடாமல் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லும் பிள்ளைக்கு வெல்லம் கொடு என்று அர்த்தம்.

வெல்லத்தில் இரும்புச் சத்து உள்ளது. பொதுவாக யாராவது சோர்வாக காணப்பட்டால் அவர்கள் இரத்தச் சோகையோடு இருக்கிறார்கள் என்று கொள்ளமுடியும். இது இரும்புச் சத்து குறைவாக உள்ளதின் வெளிப்பாடு. எனவே புரதம் அதிகம் உள்ள பொட்டுக் கடலை, வேர்க்கடலை, வெல்லத்தோடு பொட்டுக் கடலை உருண்டையாகவும், வேர்க்கடலை உருண்டையாகவும், பொரி உருண்டையாகவும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது இரத்தத்தில் ஹீமோகுளோபினை உயர்த்தி இரத்தச் சோகையை குறைக்கும்.

புரதச் சத்து குழந்தைக்கு அதிகம் தேவை என்பதற்காக கடையில் விற்கும் ஊட்டச்சத்து மாவு வாங்கிக்கொடுக்கலாமா?

தேவையில்லை. இயற்கையாகவே நாம் கொடுக்கும் உணவில் சிலவற்றை சேர்த்து கொடுத்தாலே போதுமானது. பொட்டுக் கடலை, சுண்டல், பயிறு வகைகள், பச்சைப் பயிறு, பருப்பு வகைகள் சற்று அதிகமாக குழந்தைகளின் உணவில் சேர்த்தாலே போதுமான புரதச்சத்து கிடைத்து விடும்.

என் குழந்தை ஒழுங்காக சாப்பிட மாட்டேங்குது டாக்டர் என்று பலபேர் வருகின்றனர். அவர்களிடம் கவலைப்படாதீர்கள், குழந்தைக்கு முட்டையும், கீரையும் கொடுங்கள் என்று சொன்னால், இல்ல டாக்டர் ஏதாவது டானிக் கொடுங்கள் என்கின்றனர். இயற்கையாகவே உணவில் சிலவற்றை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தாலே அவர்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளமுடியும். டானிக்கும் வேண்டாம், எந்த ஹெல்த் பவுடரும் வேண்டாம்.

குழந்தைகள் சில சமயம் கோபமாகவும், எரிச்சலோடும் பேசுகிறார்களே? சிறு வயதிலேயே ஏன் இப்படி ?

குழந்தைகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முதல் பொறுப்பு பெற்றோர்கள்தான். ஏனென்றால் அவர்கள்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரி. இதுதான் உலக நியதியும்கூட. முதலில் அம்மாவும், அப்பாவும் தான். பிறகுதான் இந்த சமூகம் எல்லாம்.

குழந்தைகள் இப்படி நடந்து கொள்வது பெற்றோர்களைப் பார்த்துத்தான். குழந்தைகள் முன்பாகவே பெற்றோர்கள் சண்டைபோட்டுக் கொண்டால் அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். சாப்பாட்டில் உப்பு குறைவு அல்லது அதிகம் என்பதற்காக அப்பா சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிந்தால் குழந்தையும் ஒருநாள் இதையே செய்யும்.

கூட்டுக் குடும்பங்கள் மறந்து தனிக் குடும்பங்கள் அதிகமாவதாலும், குழந்தைகளை கவனிப்பது, கண்டிப்பது, தட்டிக் கொடுப்பது போன்றவையும், அதிகமாக செல்லம் கொடுப்பது, எதை கேட்டாலும் வாங்கிக் கொடுப்பது போன்றவையும் தற்போது அதிகரித்துள்ளது.

குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் வாங்கிக் கொடுப்பதும் தவறு, எதையுமே வாங்கிக் கொடுக்காமல் இருப்பதும் தவறு. அடம் பிடித்து அழுவதால் எல்லாம் நமக்கு கிடைத்துவிடும் என்ற சிந்தனை குழந்தைக்கு வந்துவிட்டால் அவ்வளவு தான். எது தேவையோ அதை வாங்கிக் கொடுங்கள். அடம் பிடித்து அழுது புரண்டால் ஒன்று புரியவையுங்கள் அல்லது புறக்கணியுங்கள்.

கைநடுக்கம் தீர

கைநடுக்கம் தீர

கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

அனைவருக்குமே வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள். சிலர் இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

அதற்காக வெண்டைக்காயை வேக வைத்து உட்கொள்வது ஆரோக்கியமற்றது என்பதில்லை, இருப்பினும் வெண்டைக்காயை திரவ வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது. வெண்டைக்காயை எப்படி திரவ வடிவில் எடுப்பது என்று நீங்கள் கேட்கலாம்.

அது வேறொன்றும் இல்லை, இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

நன்மை #1

வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.

நன்மை #2

சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.

நன்மை #3

வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

நன்மை #4

வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.

நன்மை #5

வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.

நன்மை #6

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

நன்மை #7

வெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்.

மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்!!!

மூல நோய்க்கான எளிய இயற்கை வைத்தியங்கள்!!!
பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!
பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை
மூல நோயின் வகைகள்
அறிகுறிகள்
இயற்கை வைத்தியம்
ஐஸ்
கற்றாழை
எலுமிச்சை சாறு
பாதாம் எணணெய்
ஆலிவ் ஆயில்
தானியங்கள்
ஆப்பிள் சீடர் வினிகர்
டீ பேக்
தண்ணீர்
கோடைக்காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மூல நோய் என்று அழைக்கப்படும் பைல்ஸ். பொதுவாக இந்த பிரச்சனையால் 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது சில இளம் வயதினர் கூட இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.

பைல்ஸ் பிரச்சனையா? வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாவதால் ஏற்படும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்ளல், அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை

இந்த மூல நோயில் பல வகைகள் உள்ளன. அவை ஏற்பட்டுள்ள இடம், தீவிரத்தன்மை, மோசமாகும் தன்மை கொண்டு வேறுபடும். அதில் பெரும்பாலும் இரண்டு வகைகளால் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

இங்கு மூலநோய் பற்றியும், அதனை சரிசெய்யும் இயற்கை வைத்தியங்களைப் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது.

மூல நோயின் வகைகள்

மூல நோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை உள் மூலம், வெளி மூலம். அதில் உள் மூலம் என்பது மலக்குடலினுள் வளரும் மற்றும் வெளி மூலம் என்பது ஆசனவாய்க்கு கீழே வளரும்.

அறிகுறிகள்

பைல்ஸ் இருந்தால் ஆசன வாயில் கடுமையான வலி, மலம் கழிக்கும் போது இரத்த கசிவு, ஆசன வாயில் கடுமையான எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றை சந்திக்கக்கூடும்.

இயற்கை வைத்தியம்

பைல்ஸ் பிரச்சனை இருந்தால், அதனை உடனே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை முற்றி நாள்பட்ட இரத்த கசிவு, திசுக்களின் இறப்பு மற்றும் ஆசன வாய் மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பைல்ஸ் பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வைத்தியத்தின் மூலம் சிகிச்சை அளிக்கலாம். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ஐஸ்

பைல்ஸ் பிரச்சனைக்கு சிறந்த சிகிச்சை எனில் அது ஐஸ் தான். ஐஸ் கொண்டு அவ்விடத்தை ஒத்தனம் கொடுத்தால், இரத்த நாளங்கள் விரிவடைந்து, வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும். அதற்கு ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு 10 நிமிடம் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்

கற்றாழை

கற்றாழை ஜெல்லை ஆசனவாயில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வந்தால், எரிச்சல் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு கூட பைல்ஸ் சிகிச்சைக்கு உதவும். அதற்கு எலுமிச்சை சாற்றில் காட்டனை நனைத்து, அதனை மெதுவாக ஆசனவாயில் தடவ வேண்டும். ஆரம்பத்தில் எரிய ஆரம்பித்தாலும், கடுமையான வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், சூடான பாலில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை தடவ வேண்டும்.

பாதாம் எணணெய்

பாதாம் எண்ணெய்க்கு பாதிக்கப்பட்ட திசுக்களை சரிசெய்யும் குணம் உள்ளது. ஆகவே சிறிது காட்டனை எடுத்து, அதனை பாதாம் எண்ணெயில் நனைத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர, வலி, அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த செயலை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்

தினமும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் குடித்து வந்தால், அவை வீக்கத்தை குறைப்பதோடு, அதில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், திசுக்களை சரிசெய்து, அதன் இயக்கத்தை அதிகரிக்கும். இல்லாவிட்டால், ஆலிவ் ஆயிலை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வர வேண்டும்.

தானியங்கள்

பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், தானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஏனெனில் அதில் நார்ச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இவற்றை உட்கொண்டு வந்தால், பைல்ஸ் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, இரத்த கசிவும் குறையும். மேலும் தானியங்களில் உள்ள நார்ச்சத்து மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றுவதால், கடுமையான வலியில் இருந்து தப்பிக்கலாம். எனவே ஓட்ஸ், பார்லி, கைக்குத்தல் அரிசி, திணை போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தை குறைத்து, அரிப்பு மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் தரும். அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் ஒரு நாளைக்கு பலமுறை தடவி வர வேண்டும். இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, தேன் சேர்த்து தினமும் இரண்டு முறை குடித்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

டீ பேக்

டீயில் உள்ள டானிக் ஆசிட், மூல நோய்க்கு காரணமான வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கும். அதற்கு டீ பேக்கை சுடுநீரில் ஊற வைத்து, அதனை லேசாக குளிர வைத்து, பின் பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடம் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை செய்து வருவது நல்லது. இல்லையெனில், டீ பேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து, அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் 10 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

தண்ணீர்

முக்கியமாக பைல்ஸ் உள்ளவர்கள், தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். உடலில் போதிய அளவில் தண்ணீர் இருந்தால் தான், அவை குடலியக்கத்தில் பிரச்சனையை ஏற்படுத்தாமல், மலம் எளிதாக வெளியேற உதவி புரியும். ஒருவேளை தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், கடுமையான இரத்தக் கசிவு மற்றும் வலியை உணரக் கூடும்.

தேமல் மறைய ..

வெற்றிலைச் சாற்றை எடுத்து தேமல் மேல் தடவ தேமல் மறையும். கற்பூரவள்ளி இலைச்சாற்றை எடுத்து தேமல் மேல் தேய்த்தால் தேமல் மறையும். பூவரசுக்காயை உடைத்து, அதில் மஞ்சள் நிற பாலை எடுத்து படை மேல் பூசி வந்தால் படை மறையும். சீமை அகத்தி இலையை எலுமிச்சம் சாற்றுடன் கலந்து அரைத்து படர் தாமரை மீது தடவலாம். ஆவாரை வேரை எலுமிச்சம் பழச்சாற்றுடன் அரைத்து வெண் தேமல் மீது தடவலாம். நவச்சாரத்தை பொடியாக்கி தேன் கலந்து படைமேல் தடவ படை மறையும். தேங்காய் எண்ணெய்யில் வெள்ளைப் பூண்டை போட்டு காயவைத்து எண்ணெய்யை தேமல் மீது தொடர்ந்து போட தேமல் மறையும்.


பப்பாளி இலையின் சாறை பிழிந்து படர் தாமரை மீது பூசி வர படர் தாமரை மறையும். மாமரப் பிசினோடு எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேமல், படை மேல் பூசி வரலாம். முந்திரி மரபபட்டையிலிருந்து சாற்றை எடுத்து தேமல் மேல் பூச தேமல் மறையும். வேப்ப இலையை அரைத்து நீர்விட்டு காய்ச்சி தேமல் மீது தடவ தேமல் மறையும். வெள்ளைப்பூண்டு, வெற்றிலை சேர்த்து நன்றாக அரைத்து வெண் தேமல் மீது தடவ தேமல் மறையும். பூவரசு காயின் சாற்றை படர் தாமரை மீது தடவி வர அது மேலும் படராமல் குணமாகும். படர் தாமரை உள்ள இடத்தில் சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ படர் தாமரை மறையும். அறுகம் புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்துவர தேமல் மறையும்

இலந்தை - பயன்கள்

இலந்தை   -    பயன்கள்

1. மூலிகையின் பெயர் :-
இலந்தை.

2. தாவரப்பெயர் :-
 ZIZYPHUS JUJUBA.

3. தாவரக்குடும்பம் :-
RHAMANACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :-
இலை, பட்டை. வேர்பட்டை பழம்ஆகியவை

5. வளரியல்பு :-

இலந்தையின் பிறப்பிடம் சைனா. 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. இது சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடியது.

 வளைந்த கூர்மையான முட்களுடன் முட்டை வடிவ மூன்று மூன்று பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம்.

 தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் 25 F தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்து காய்விட்டுப் பழமாகும்.

இதற்கு சிறிய பேரிச்சை, Red Date, Chinese Date என்றும் சொல்வர். காய்ந்த பழம் வத்தல் என்று சொல்வர். புளிப்புச் சுவையுடைய திண்ணக் கூடிய பழங்களை உடையது.

அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படும். விதை மிகவும் கெட்டியாக இருக்கும். அமரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய நாட்டில் வியாபாரமாக வளர்க்கப்படவில்லை.

இதில் A, B2, C, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புசத்து, மிதசர்கரை சக்தி உள்ளது. சாதாரணமாக இதன் இனவிருத்தி கட்டிங், மற்றும் ஒட்டு முறையில் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :-

இலந்தை இலை தசை,நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது.

இது இரத்த சுத்திக்கும், முதுகுவலி, இருதயநோய், ஆஸ்த்துமா, கழுத்து நோய், கண் தெரிய, இரத்த அழுத்தத்தைக் குறைக்க, தலைவலி, மன உழைச்சலைப் போக்க, எந்த வலியையும் போக்கவும் வல்லது.

இதை டீ யாக சைனா, கொரியா, வியட்னாம், ஐப்பான் ஆகிய நாடுகளில் பயன் படுத்துகிறார்கள். இதை ஊறுகாயாக மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஸ்சில் பயன் படுத்துகிறார்கள்.

 தமிழ் நாட்டில் இதன் பழத்துடன் புளி, மிளகாய் வற்றல், உப்பு, வெல்லம் ஆகியவை சேர்த்து நன்கு இடித்து வெய்யிலில் காயவைத்து இலந்தை வடையாகப் பயன் படுத்துகிறார்கள்.

இலந்தை இலை 1 பிடி, மிளகு 6, பூண்டுப் பல் 4 அரைத்து மாதவிலக்கான முதல் 2 நாட்கள் கொடுத்து வரக் கருப்பை குற்றங்கள் நீங்கிப் புத்திர பாக்கியம் கிட்டும்.

இலந்தைப் பட்டை 40 கிராம், மாதுளம் பட்டை 40 கிராம் சிதைத்து, அரை லிட்டர் நீரில்போட்டுக் கொதிக்க வைத்து 125 மி. லி. யாக்கி 4 வேளை தினம் குடித்து வர நாள்பட்ட பெரும்பாடு நீங்கும்.

இலந்தை வேர்பட்டை சூரணம் 4 சிட்டிகை இரவில் வெந்நீரில் கொள்ளப் பசியின்மை நீங்கும்.

துளிர் இலையையாவது பட்டையையாவது 5 கிராம் நெகிழ அரைத்துத் தயிரில் காலை மாலையாகக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு, இரத்தப்பேதி தீரும்

100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்கள்--

100 ஆண்டுகள் வாழும் ரகசியம் முடிந்தவரைகடைபிடியுங்கள்--

🏆அதிகாலையில் எழுபவன்
🏆 இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்                        🏆 முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்     🏆 மண்பானைச் சமையலை உண்பவன்
🏆 உணவை நன்கு மென்று உண்பவன்!
🏆 உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்
🏆 வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளாதவன்
🏆கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்
🏆 மலச்சிக்கல் இல்லாதவன்
🏆 கவலைப்படாத மனிதன்
🏆 நாவடக்கம் உடையவன்
🏆 படுத்தவுடன் தூங்குகிறவன்
🏆எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்
🏆 தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்
🏆 கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்
🏆 கற்பு நெறி தவறாது வாழ்பவன்
🏆 மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்
🏆 ஈகை மனப்பான்மையை வளர்ப்பவன்
🏆 வளையாத முதுகுத்தண்டுடன் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்
🏆 இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்
🏆தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்
🏆 உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பவன்
🏆 வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்
🏆 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவன்
மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வான் ---- 

மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி எதற்கு பயன்படும்..?

மருந்துகடைகளில் விற்கப்படும் எந்த மூலிகைபொடி  எதற்கு பயன்படும்..?

பாதுகாக்க படவேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!

அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

கடுக்காய் பொடி
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

அமுக்கரா பொடி
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

சிறுகுறிஞான் பொடி
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

நவால் பொடி
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

வல்லாரை பொடி நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

தூதுவளை பொடி நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

துளசி பொடி மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

ஆவரம்பூ பொடி
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

கண்டங்கத்திரி பொடி
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

ரோஜாபூ பொடி
 இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

ஓரிதழ் தாமரை பொடி
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா

ஜாதிக்காய் பொடி
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

திப்பிலி பொடி
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

வெந்தய பொடி
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

நிலவாகை பொடி
 மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

நாயுருவி பொடி
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

கறிவேப்பிலை பொடி
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.

வேப்பிலை பொடி குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

திரிபலா பொடி வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

அதிமதுரம் பொடி தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

துத்தி இலை பொடி உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

செம்பருத்திபூ பொடி அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடி
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

சிறியாநங்கை பொடி அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

கீழாநெல்லி பொடி, மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

முடக்கத்தான் பொடி மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

கோரைகிழங்கு பொடி
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருஙகைவிதை பொடி
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி
 பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுட்ர் குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி
 சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

வெள்ளருக்கு பொடி இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

நன்னாரி பொடி
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

நெருஞ்சில் பொடி சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

பிரசவ சாமான் பொடி
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

கஸ்தூரி மஞ்சள் பொடி
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

பூலாங்கிழங்கு பொடி
 குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

வசம்பு பொடி
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

சோற்று கற்றாலை பொடி
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

மருதாணி பொடி
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

கருவேலம்பட்டை பொடி
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்

மூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்!

மூல நோயை விரட்ட இளநீர் மற்றும் வெந்தயம்!
.
ஆவாரம்பூ (பச்சையாகவோ, காய வைத்ததோ) ஒரு ஸ்பூன். மாங்கொழுந்து 8 எண்ணிக்கை எடுத்துக்கோங்க…. ரெண்டையும் ஒரு டம்ளர் தண்ணியில போட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கணும். இதை, காலையில வெறும் வயித்துல 10 நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வரணும். 10 நாள் இடைவெளிவிட்டு, திரும்பவும் 10 நாள் குடிச்சா… மூல வியாதி அத்தனையும் இருக்குற இடம் தெரியாமப் போயிரும்.

⭕ இளநீரில் ஓட்டை போட்டு, ஒரு ஸ்பூன் வெந்தயம் போட்டு மூடி, வீட்டு மொட்டை மாடியில ஒரு ராத்திரி வச்சிரணும். காலையில அந்த இளநீரை குடிச்சிட்டு, வெந்தயத்தையும் சாப்பிடணும். தொடர்ந்து 5 நாள் இதே மாதிரி செய்தா மந்திரத்துக்கு கட்டுப்பட்டது கணக்கா… மூலம் ஓடிப்போயிரும். அப்படியும் சரியாகலைனா…. 5 நாள் கழிச்சி திரும்பவும் சாப்பிட்டா கண்டிப்பா சரியாயிரும்.

⭕ வெள்ளை வெங்காயம் ஒரு கைப்பிடி எடுத்து, பொடியா நறுக்கி, நெய் விட்டு வதக்கணும். ஓரளவு வதங்கினதும் ஒரு ஸ்பூன் பனங்கல்கண்டு, இல்லனா… பனைவெல்லம் போட்டுக் கிளறணும். விழுதானதும் இறக்கி வச்சு, சூடு ஆறினதும் பாதியைச் சாப்பிடணும். மீதியை மறுநாள் காலையில சாப்பிடணும். தொடர்ந்து 5 தடவை இப்படி செஞ்சி சாப்பிடணும். (ஒரு தடவை செய்ததில் பாதியை முதல் நாளும், மீதியை மறுநாள் காலையும்). அதுக்கு மேல செஞ்சி வச்சா கெட்டுப்போயிரும். இந்த வெள்ளை வெங்காயம் சாப்பிட்டா மூலம், பவுத்திரம், ரத்தப்போக்கு எல்லாமே சரியாகிவிடும்.

⭕ சோத்துக்கத்தாழை மடல் எடுத்து மேல்தோலை நீக்கி நல்லா கழுவணும். அதுல ரெண்டு அங்குல அளவு துண்டு போட்டு, அப்படியே சாப்பிடணும். தண்ணியில கழுவினாலும் லேசா கசப்பு இருக்கும். அதனால பனைவெல்லத்தையும் சேர்த்துச் சாப்பிடணும். மூலத்தை குணமாக்கற இந்தக் கத்தாழை, கேன்சரைகூட குணமாக்கும். முக்கியமா கர்ப்பப்பை புற்றுநோய்க்கு நல்ல மருந்து இது.

⭕ அடுத்ததா, ஒரு கைகண்ட மருந்து குப்பைமேனி. இந்த செடியைப் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. சிலர் இதை ஒண்ணுக்கும் ஆகாத செடினு சொல்வாங்க. ஆனா, மூலத்துக்கு இது நல்ல மருந்து. குப்பைமேனி இலையை காய வச்சு நல்லா தூளாக்கி வச்சுக்கிடணும். அதுல கால் ஸ்பூன் அளவு எடுத்து நெய் சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டா, எல்லா வகை மூலமும் சரியாயிரும்.

 ⭕ அருகம்புல் 20 கிராம் அளவு எடுத்து, மை போல அரைச்சு, காய்ச்சின பசும்பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா… மூலம் மட்டுமில்லாம ரத்த சோகையும் குணமாகும்

இயற்கை சிகிச்சை முறைகள்

இயற்கை சிகிச்சை முறைகள்
***********
(1) வாழையிலைக் குளியல்
(2) மண் குளியல்
(3) நீராவிக் குளியல்
(4) முதுகு தண்டுக் குளியல்
(5) இடுப்புக் குளியல்
(6) கண் குவளை
(7) மூக்கு குவளை
(8) எனிமா
(9) ஈரத்துணிப்பட்டி
(10) ஈரமண் பட்டி
(11) சூரிய ஒளி குளியல்

வாழையிலைக் குளியல்
==================
(1) 10லிருந்து 15 வரை முழு நீள வாழையிலை ஒரு நபருக்கு தேவைப்படும்.
(2) இந்த சிகிச்சையை பகல் 12 மணிக்கு முன்னால் செய்வது நல்லது. நல்ல சூரிய வெள்ச்சம் இந்த சிகிச்சை முறைக்கு தேவைப்படும். வியர்வையின் முலமாக இந்த சிகிச்சை முறையில் கழிவுகள் வெளியேறும். இதய நோயாளிகள் இந்த சிகிச்சையின் போது சிறிது சிறிது படபடப்பாக உணருவர். அதற்கு பயப்படத் தேவையில்லை.
(3) இந்த சிகிச்சை மூலமாக வியர்வை அதிகமாக வெளியேறுவதால் சிகிச்சைக்கு முன்னர் எவ்வளவு தண்ணிர் அருந்த முடியுமோ அவ்வளவு த ண்ணீர் அருந்தவேண்டும்.
(4) மிகவும் குறைந்த அளவு உடைகளே போதுமானது. ஒருசிறிய ஈரத்துணியை தலையின் மேல் போட்டுக் கொள்ள வேண்டும்.
(5) நல்ல சூரிய ஒளி உள்ள இடத்தில் ஒரு பாயை விரிக்கவும். அதற்கு மேல் ஒரு போர்வையை தண்ணீரில் நனைத்து போடவும்.
(6) போர்வையின் மேல் சிறிய சணல் கயிறு அல்லது நாடா போன்றவற்றை 5 (அ) 6 எடுத்து போர்வையின் மேல் சிறிது இடைவெளி விட்டு போடவும். (சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் கட்டுவதற்காக). இதற்கு மேல் வாழையிலைகளை விரிக்கவும். நாம் உண்ணும் பகுதி நமது உடலின் மேல் படுமாறு இருக்க வேண்டும். சிகிச்சை எடுப்பவரை வாழையிலையில் படுக்க வைத்து மேல் பக்கத்திலும் வாழையிலையை வைத்து மூடி கீழே இருக்கும் சணல் கயிற்றினால் காற்று உள்ளே புகாதவாறு கட்டி விடவும். மூச்சு விட மூக்கின் அருகே ஒரு சிறிய துளை செய்து விட வும்.
(7) 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த சிகிச்சையை செய்யலாம். மிகவும் சிரமமாக உணர்ந்தால் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடலாம்.
(8) 1/2 முதல் 1 லிட்டர் வரை கழிவுகள் வியர்வை மூலமாக வெளியேறி இருக்கும்.
(9) பிறகு காற்றோட்டமான நிழலுள்ள இடத்தினில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும்.
(10) உடல் பருமனுக்கு இது மிகவும் சிறந்த சிகிச்சையாகும்.
(11) இலைகளில் விஷமேறி விடுவதால் இதை செடி, கொடிகளுக்கு உரமிடுவதோ ஆடு, மாடுகளுக்கு தீவனமாக கொடுப்பதோ கூடாது.
(12) இந்த சிகிச்சை மேற்கொண்டால் சிறிது களைப்பாகவோ, தலைவலியோ இருக்கும். பயப்படத் தேவையில்லை.
(13) ஆரோக்கியமாக உள்ளவர்கள் இதை மாதம் ஒரு முறை செய்தால் போதும். நோய்க்காக சிகிச்சை எடுப்பவர்கள் 2 வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது இரத்தத்தை சுத்தம் செய்கிறது.

மண் குளியல்
==========
(1) செம்மண், களிமண், புற்று மண் (அ) ஒட்டக் கூடிய தன்மை உள்ள எந்த மண்ணையும் பயன் படுத்தலாம். மண் குளியல் எடுக்க வேண்டிய நாளைக்கு முதல் நாள் இரவே மண்ணை நீரில் குழைத்து வைத்து கொள்ள வேண்டும். இது மண்ணை குளிர்ச்சி அடைய வைத்து தோலுக்கு தேவையான நல்ல பாக்டீரியாக்களை வளர்ச்சி அடைய வைக்கிறது.
(2) பகல் 12 மணிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.
(3) மிகக் குறைந்த அளவு ஆடைகளே அணிய வேண்டும்.
(4) தலை உட்பட எல்லாப் பகுதிகளிலும் மணலை பூசிக் கொள்ள வேண்டும். புண்களிலும் பூசலாம்.
(5) சூரிய ஒளியில் நிற்க வேண்டும்.
(6) 1/2 மணி நேரத்திற்கு பிறகு (அ) மணல் முழுமையாக காய்ந்த பிறகு நிழலில் 1/2 மணி நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
(7) பிறகு பச்சை தண்ணீரில் குளிக்கவும். சோப்பு, ஷாம்பூ, சிகைக்காய் எதுவும் தேவையில்லை. மணலையே நன்றாக தண்ணீர் சேர்த்து தேய்த்து மெதுவாக மசாஜ் செய்து குளிக்கவும்.
(8) கழிவுகள் இம்முறையில் வெளியேறும். வியர்வைத் துளைகள் சுத்தமாகும். பிரஷ்ஷாக இருக்கும்.
(9) தோல் வியாதிகளான சொரியாஸிஸ், வெண் குஷ்டம் மற்றும் நரம்பு பிரச்சனைகள், வாதம், தொழு நோய் போன்றவற்றிற்கு இது நல்ல பலன் தரும்.
(10) அபார்ட்மென்ட் மற்றும் நகரங்களில் வாழும் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து இல்லாத நல்ல மணல் கிடைக்கப் பெறாதவர்கள் ’முல்த் தானி மிட்டி‘ என கூறப் படும் மண்ணை பேன்சி ஸ்டோர்களில் வாங்கி பயன் படுத்தலாம்.

நீராவிக் குளியல்
============
மழைக் காலங்களிலும், குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள் வெளியேறுவது மிகவும் குறைவு. இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை, வேப்பிலை, நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது. குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும். நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் (அ) சேரில் உட்கார வைத்து 3 (அ) 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.(சிகிச்சை பெறுபவர் உடலின் மேல் ஆவி படக் கூடாது). பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும். நன்றாக வியர்க்க வேண்டும். சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.

முதுகு தண்டு குளியல்
================
இதை எடுக்க தேவையான சாதனம் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். 1/2 மணி நேரம் முதுகு தண்டு படுமாறு இதில் ப டுக்க வேண்டும். பிறகு பச்சை தண்ணீரில் குளிக்க வேண்டும். முதுகு வலி, முதுகு தண்டு பிரச்னை, உயர் இரத்த நோயாளிகளுக்கு இது பயன் தரும்.

இடுப்புக் குளியல்
============
இதற்கு தேவையான சாதனமும் இயற்கை சிகிச்சை மையத்தில் கிடைக்கும். அல்லது ஒருவர் கால்களை வெளியில் விட்டு உட் காரக் கூடிய வகையில் உள்ள பாத்திரத்தையும் பயன்படுத்தலாம். பாத்திரம் குட்டையாகவும் அகலமாகவும் இருந்தால் நல்லது. பாதி பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் அமரவும். கால்கள் வெளியில் தரையில் படாதவாறு இருக்க வேண்டும். கால்களை மரக்கட்டைகளில் வைத்துக் கொள்ளலாம். இதனால் உடலின் காந்த சக்தி தரையில் பாயாதவாறு இருக்கும். ஒரு சிறிய துணியை வைத்து வயிற்றை மசாஜ் செய்து கொண்டே இருக்கவும். 40 நிமிடங்கள் வரை அமரலாம். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிக்கலாம். ஒரு முறை உபயோகித்த நீரை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. இது வயிறு சம்மந்தமான பிரச்னைகளுக்கு உகந்தது. வயிற்றை குளிர்ச்சி அடைய செய்து எல்லா நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலை கு றைக்கிறது. தலைவலி மற்றும் காய்ச்சலின் போது இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

கண் குவளை
==========
இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். அல்லது ஒரு நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம். இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி. பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும். இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.
இந்த குவளையில் கண்ணை வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக இருக்கும். இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.

மூக்கு குவளை
==========
இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்க
ி கொள்ளவும். அதற்கென உள்ள சாதனத்தில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும். முன்புறம் வளைந்து தலையை மேல்புறமாக திருப்பி வைத்து கொள்ளவும். வாயின் வழியாக மூச்சு விட்டுக் கொண்டு நீரை சிறிது சிறிதாக வலது நாசியில் விடவும். நீர் இடது நாசி வழியாக வெளியேறும். இதையே இடது நாசிக்கும் மாற்றிச் செய்யவும். இது சுவாச சம்பந்தமான பிரச்சனைகளான சளி, சைனஸ், ஆஸ்துமா, டிபி(காச நோய்) போன் றவைகளுக்கு பயன் தரும்.

எனிமா
======
இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கிறது.
மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும். எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும். உடல் நோய் வாய்ப்படும். மலச்சிக்கலினால் உடல் உஷ்ணம் அடைகிறது. இது மூல வியாதிக்கு காரணம் ஆகிறது. நாம் வாய் கொப்பளிப்பது போல எனிமா குவளையை குடலை கழுவ பயன்படுத்தலாம். மலச் சிக்கல் இருந்தால் இதனை தினமும் பயன் படுத்தவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் இருக்க அதிக நார்ச் சத்துள்ள உணவு(இயற்கை உணவு) உண்ண வேண்டும். இயற்கை உணவும் உண்டு நாக்கில் வெள்ளை படலமும் இல்லாமல் இருந்தால் வாரம்
1 முறை எனிமா எடுத்தால் போதுமானது. மலம் ஒட்டுவது மலச்சிக்கலை குறிக்கிறது. குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாம். தலை வலி, காய்ச்சல், சளி தொந்தரவுக்கு இதை பயன் படுத்தலாம். சமையல் உணவில் இருப்பவர்களுக்கு இது பயன் தரும்.
எப்படி உபயோகப்படுத்துவது?
எனிமா கப்பை தண்ணீர் ஊற்றி தலைக்கு மேலே ஒரு உயரத்தில் தொங்க விடவும். பின் நாசில் வழியாக தண்ணீரை மலத்து வாரத்திற்குள் முன்புறம் குனிந்தவாறு செலுத்தவும். நாசிலில் சிறிது எண்ணெய் பூசிக் கொள்ளலாம். தண்ணீர் அனைத்தும் குடலுக்குள் சென்ற பிறகு 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும். படுத்திருந்தால் மலத்தை அடக்க எளிதாக இருக்கும். பலனும் நன்றாக இருக்கும். பிறகு மலம் கழிக்கலாம். குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கழிவுகள் எல்லாம் வெளியேறும். குடிப்பதற்காக பயன் படுத்தும் நீரையே இதற்கும் பயன்படுத்த வேண்டும்.

ஈரமண்பட்டி
= =========
சுத்தமான மண், புற்று மண், செம் மண், களி மண்(உரமும், பூச்சிகொல்லி மருந்தும் இல்லாதது) தண்ணீருடன் குழைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு செவ்வக வடிவத்தில் உள்ள துணியில் மண்ணை வைத்து மண் வெளியே விழாதவாறு மடித்து கொள்ள வேண்டும். 1/2 மணி நேரத்திற்கு மேலாக வைக்கலாம். பயணத்தினால் ஏற்படும் உஷ்ணம், காய்ச்சல், தலை வலி, மலச்சிக்கலுக்கு இந்த சிகிச்சை முறை சிறந்தது. சிகிச்சைக்கு பிறகு எனிமா எடுப்பது நல்ல பலன் தரும்.

சூரிய ஒளிக் குளியல்
================
குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம். சுரிய ஒ:ளி நமக்கு நிறைய ஆற்றலை வழங்குகிறது. விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும், வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.
சூரிய ஒளியின் நன்மைகள்:
(1) தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.
(2) தோல் வியாதிகள் மிகவும் குறைவு.
(3) கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.
(4) காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும். சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில் 20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.

எண்ணெய் கொப்பளித்தல்
====================
இது இயற்கை சிகிச்சை முறையில் வராவிட்டாலும் இது உடலிலுள்ள கழிவுகளை ஒரு எளிய முறையில் நீக்குகிறது. இது தீங்கு விளைவிக்காது. நோய் அதிகமாக இருக்கும் போது இதை உணவு உண்பதற்கு முன்னர் தினசரி 3 நேரம் செய்ய வேண்டும். பிறகு ஒரு நா¬ ளக்கு ஒரு முறை செய்தால் போதுமானது.
செய்முறை:
சமையலுக்கு பயன்படுத்த கூடிய எந்த எண்ணெய் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். 1 ஸ்பூன் போதுமானது. வாயில் வை த்து 15 முதல் 25 நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். பிறகு அதை விழுங்காமல் துப்பி விட வேண்டும். விழுங்கினால் தவறேதும் இல்லை. ஆனால் விழுங்குவதை தவிர்ப்பது நல்லது. பிறகு நீரில் வாய் கொப்பளிக்கலாம். காலையில் பல் தேய்த்த உடன் இதை செய்யலாம். சவ்வூடு பரவுதல் (ஆஸ்மாஸிஸ்) மூலமாக கழிவுகள் வாய்க்கு இந்த முறையில் வந்து விடுகிறது.

சமையலுணவில் குறைக்கவேண்டியவ
ை மற்றும் அதற்கு மாற்று உணவு
குறைக்க வேண்டியது மாற்று உணவு
(1) சர்க்கரை வெல்லம், கரும்பு சர்க்கரை கருப்பட்டி
(2) பொடி உப்பு கல் உப்பு
(3) கரையாத கொழுப்பு கரையும் கொழுப்பு
கொண்ட எண்ணெய் கொண்ட எண்ணெய்
(4) மிளகாய் மிளகு
(5) புளி எலுமிச்சை
(6) கடுகு சீரகம்
(7) காபி,டீ லெமன் டீ, ப்ளாக் டீ,
சுக்கு காப்பி, வரக்காப்பி
(8) பாலிஷ் செய்த அரிசி அவல், சிகப்பரிசி
இந்த மாற்று உணவு (மிளகு, எலுமிச்சை, சீரகம் தவிர) சமைத்த உணவை தவிர்க்க முடியாதவர்களுக்கு மட்டும். இவை இயற்கை உணவு அல்ல. இவற்றினால் சிறிது தீமை குறைவு.

சாறு உண்ணா நோன்பு (ஜுஸ்பாஸ்டிங்)
==============================
வெறும் நீர் அருந்தி உண்ணா நோன்பு இருக்க முடியாத பட்சத்தில் சாறு உண்ணா நோன்பு இருக்கலாம். இதில் பழச்சாறுகள் மட்டுமே அருந்த வேண்டும்.
நன்மைகள்:
(1) உணவு திரவ வடிவில் இருப்பதால் ஜீரணத்துக்கு தேவைப்படும் ஆற்றல் மிகவும் குறைவு. எனவே உடலின் ஆற்றல் முழுவதும் கழிவுகள் வெளியேற்றத்துக்கு உபயோகப்படுத்தப் படுகிறது.
(2)உடல் எளிதாக ஆற்றலை கிரஹித்துக் கொள்ளும்.
(3)சாறுள்ள பழங்களின் ஜுஸ்கள் (திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம் பழம் போன்றவை) அதிகமான க்ளுக்கோஸ் சத் துக்களை கொண்டுள்ளதால்
உடல் நிலை பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய உதவுகிறது.
(4) மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டோர் இதை ஜீரணிக்க எளிதாக உணருவர்.
சாறு உண்ணாநோன்பின் போது கவனிக்க வேண்டியவை
(1) திரவ வடிவில் இருப்பதால் நார்ச்சத்து கிடைப்பதில்லை.
(2) மலச்சிக்கல் மற்றும் மூலவியாதி இருப்பவர்களுக்கு இது உகந்தது அல்ல. அவர்கள் இயற்கை உணவை உள்ளது உள்ள படியே (நார்ச்சத்துடன்) உண்ண வேண்டும்.
(3) சாறுண்ணா நோன்பின் போது மலச்சிக்கல் ஏற்ப்பட்டால் ஒரு நாளைக்கு ஒரு முறை எனிமா எடுத்துக் கொள்ளலாம்.

இயற்கை உணவும் இரத்தத்தின்தன்மையும்
================================
இரத்தம் காரத்தன்மை (ஆல்கலைன்) உடையது. இயற்கை உணவும் காரத்தன்மை உடையது. எனவே இயற்கை உணவு எளிதாக இரத்தத்தின் காரத் தன்மையை சமன் செய்யும். ஆனால் சமைத்த உணவு அனைத்தும் அமிலத்தன்மை (அசிடிக்) உடையது. எனவே அது இரத்தத்தை அமிலத்தன்மை உடையதாக்கும். ஆனால் உடலோ மீண்டும் இரத்தத்தை காரத்தன்மை உடையதாக்க போராடும். அந்த போராட்டத் தில் உடல் தோல்வியடையும் போது நாம் நோய்வாய்ப்படுகிறோம்.

நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவையாவன:
(1)பிட்யுட்டரி
(2)பீனியல்
(3)அட்ரீனல்
` (4) பான்கிரியாஸ்
(5) நாபிச் சக்கரம்
(6) தைராய்டு
(7) பாலியல் சுரப்பிகள் ஆகும்.

இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு, தைரியம், கருணை, வைராக்கியம், பொறுமை, எளிமை, பொது நலம், சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர். இவை சரியாக செயல் படாவி ட்டால் அதிக காமம், கோபம், பிடிவாதம், அமைதியின்மை, சிடுசிடுப்பு, ஆடம்பர பொருட்கள் மேல் மோகம், கோழைத்தனம், அதிக ஆசை, சுயநலம், சோம்பேறித்தனம், சோர்வு, தற்கொலை எண்ணம், திருடும் எண்ணம், கொடூரம், பயம் போன்றவற்றுடன் காணப்படுவர். எனவே மனரீதியான பிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவு, தியானம் மற்றும் அக்குபிரஷர்(முக
்கியமாக நாளமில்லா சுரப்பிகளில் எந்த சுரபி குறைபாடுடன் இ ருக்கிறது என கண்டுபிடித்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்) செய்து வந்தால் வியக்கத்தக்க மாறுதல்களை காணலாம். குற்றவாளிகளை கூட இந்த சிகிச்சை முறையால் திருத்தி விட முடியும்.

நாளமில்லா சுரப்பிகளை தவிர மற்ற உறுப்புகளுக்கு கடைகளில் விற்கப்படும் அக்குபிரஷர் உருளைகளை வாங்கி பயன்படுத் தலாம். மேலும் சீப்பு, துணிகிளிப், ரப்பர் பாண்டு, மரக்குச்சி, துணி துவைக்கும் பிரஷ் கூட பயன்படுத்தலாம். இவைகளை கொண்டு நாம் டிவி பார்க்கும் பொழுதும், கணினியில் வேலை செய்யும் பொழுதும், புத்தகங்கள் படிக்கும் பொழுது கூட நேரத்தை வீணாக்காமல் அக்குபிரஷர் கொடுக்கலாம். நாளமில்லா சுரப்பிகளுக்கு மட்டும் கட்டை விரலால் செங்குத்தாக அழுத்தம் கொடுக்க வேண்டும்

அடிக்கடி சிறுநீர் கழிந்துக் கொண்டே இருக்கின்றீர்களா? காரணங்கள் மற்றும் தீர்வுகள்!

அடிக்கடி சிறுநீர் கழிந்துக் கொண்டே இருக்கின்றீர்களா? காரணங்கள் மற்றும் தீர்வுகள்!


ஓர் நாளுக்கு சராசரியாக 4 – 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால்,அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல்நலத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.

பொதுவான காரணங்கள்.

நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். மேலும், சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றின் கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்கள்!

அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதால் ஆண்களுக்கு எரிச்சல் உணர்வு, வலி போன்றவை உண்டாகலாம். பால்வினை நோய் தொற்று, சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக கற்கள், புரோஸ்டேட் கோளாறுகள் இருந்தால் இதுப் போன்ற உணர்வு ஏற்படும். நீரிழிவு மற்றும் வலிநிவாரண மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் கூட ஆண்கள் மத்தியில் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணியாக விளங்குகின்றன.

பெண்கள்!

கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு கருப்பை பெரிதாகிவிடும். மேலும், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்து காணப்படும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதிலும், இரு வகை இருக்கிறது, சிலருக்கு சிறிதளவு சிறுநீர் கழியும், சிலருக்குபெருமளவு சிறுநீர் கழியும் எனப்படுகிறது.

இயற்கை தீர்வுகள்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம். ஒருவேளை பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையெனில், நீங்கள் இயற்கை உணவுகளை உண்டே இதற்கு நல்ல தீர்வுக் காணலாம்.

மாதுளை.

மாதுளையின் தோலை நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். சிட்டிகை அளவு பேஸ்ட்டை சில துளி நீர் கலந்து பருகுங்கள். ஒருநாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதை பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.

கொள்ளு.

நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொள்ளுங்கள். சிறுநீர் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. கொள்ளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.

பக்கவிளைவுகள் இல்லை.

இந்த இரண்டு வீட்டு மருத்துவ முறையும் பக்கவிளைவுகள் அற்றவை.மேலும், இதை நீங்கள் மிக சுலபமாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.
[5:52 PM, 7/14/2016] Ramkumar Sozhapuram: தினமும் காலையில் எழுந்ததும் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்

பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. இத்தகைய வெந்தயத்தை நம் முன்னோர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தார்கள்

இப்படி இதனை தினமும் சாப்பிட்டு வந்ததாலோ என்னவோ, நோய்கள் அவர்களை அண்டவே இல்லை எனலாம். அந்த அளவில் வெந்தயம் உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கி வந்தது. அதிலும் தற்போது கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருப்பதால், இதனை கோடையில் தினமும் சாப்பிட்டால் இன்னும் நல்லது.

சர்க்கரை நோய் :-

சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்

மாரடைப்பு :-

வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.

புற்றுநோய் :-

வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் . எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.

மாதவிடாய் பிடிப்புகள் :-

வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும்.

உடல் சூடு :-

கோடையில் உடலில் அதிகம் சூடு பிடிக்கும். இதனைத் தடுக்க தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும்.

தாய்ப்பால் உற்பத்தி :-

பிரசவித்த பெண்கள் வெந்தயத்தை தினமும் உட்கொள்வதனால், தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிக்கும். இதற்கு வெந்தயத்தில் உள்ள பைட்டோ-ஈஸ்ட்ரோஜென் தான் முக்கிய காரணம்.

கொலஸ்ட்ரால் குறையும் :-

 வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்க உதவும் . இதற்கு வெந்தயத்தில் உள்ள நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவோனாய்டு தான் காரணம். ஆகவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பின், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.

ஆர்த்ரிடிஸ் :-

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஆர்த்ரிடிஸ் என்னும் எலும்பு மூட்டு வலி. இது கடுமையான வலியுடன், வீக்கத்துடனும் காணப்படும். ஆனால் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டு வருவதுடன் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வலியைக் குறைக்கும்.

செரிமானம் :-

செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.

எடை குறையும் :-

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.

சிறுநீரக செயல்பாடுகள் :-

வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.

கல்லீரல் :-

கல்லீரல் தான் உடலை சுத்தம் செய்கிறது. அத்தகைய கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால், உடல் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும். கல்லீரல் முதலில் பாதிக்கப்படுவதற்கு ஆல்கஹால் முக்கிய காரணம். ஆனால் வெந்தயத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனாலிக் உட்பொருட்கள் மதுவினால் கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:
🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? மருந்தை தேடி அலைய வேண்டாம்...!

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா? மருந்தை தேடி அலைய வேண்டாம்...!

தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...

பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்...

சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது...

சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்...
தொடர்ந்து செய்து வந்தால்.....

அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....
{தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே....}

நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி :-

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..)

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..)

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். லதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..)

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

40 வகைக் கீரைகளும் அதன் முக்கியப் பயன்களும்:

40 வகைக் கீரைகளும் அதன் முக்கியப் பயன்களும்:

அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளியவைக்கும்.

காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும், பால்வினை நோயைக் குணமாக்கும்.

பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிப்பசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர்க் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைக்கீரை - பசியைத் தூண்டும். வீக்கம் வத்த வைக்கும்.

அரைக்கீரை - ஆண்மையைப் பெருக்கும்.

புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குக்கீரை - வெட்டையை, நீர்க்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னிக் கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்காக் கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தைப் போக்கும்.

வெள்ளைக் கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரைக் கீரை - மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும், வாயு விலகும்.

புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தைப் போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.

தும்பைக்கீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

முருங்கைக்கீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிக்கீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புக்கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டைத் தணிக்கும்.

புளிச்சகீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தைக் கரைக்கும்.

மணத்தக்காளிக் கீரை - வாய் மற்றும் வயிற்றுப் புண் குணமாக்கும், தேமல் போக்கும்.

முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

சக்கரவர்த்திக் கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவளை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.

தவசிக்கீரை - இருமலைப் போக்கும்.

சாணக்கீரை - காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை - தாய்பாலைப் பெருக்கும்.

விழுதிக்கீரை - பசியைத் தூண்டும்.

கொடிக்காசினிக்கீரை - பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை - வாய், வயிற்றுப் புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை - மூலநோயைப் போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைக்கீரை - சளியை அகற்றும்.

நருதாளிக்கீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

அடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்!

அடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்!

'தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது 'பதார்த்த குண சிந்தாமணி’ நூல். 'அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை.
விளையும் இடம், நிறம், வடிவம், அதில் உள்ள டானின் என்ற வேதிப் பொருளின் அளவு என இவற்றின் அடிப்படையில் கடுக்காய் மரத்தில் பல வகைகள் இருக்கின்றன. இது இலை உதிர் வகை மரமாகும். இந்தியாவில் உள்ள மொத்தக் கடுக்காய் மரங்களில் முக்கால் பங்கு மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பெரும் அளவு கடுக்காய் மரங்கள் உள்ளன. இதன் இலை கால்நடைத் தீவனமாகவும், இதன் பிசின் கோந்தாகவும் பயன்படுகிறது. மரப் பட்டையில் உள்ள டேனின், தோல் பதனிட உதவும் இயற்கைப் பொருளாகும். பூக்கள் தேன் மிகுதியாகக்கொண்டவை. மரம், கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுகிறது.

இந்த மரத்தின் தாவரவியல் பெயர் 'டெர்மினேலியா செபுலா’ (Terminalia chebula). 60 முதல் 75 அடி உயரம் வரை வளரக்கூடியது.

''மருத்துவக் குணங்கள் ஏராளமாக இருப்பதால், 'வைத்தியரின் காதலி’ (பிஷக் ப்ரியா) என்று கொண்டாடப்படுகிறது'' என்கிறார் பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி உதவி விரிவுரையாளர் ஜெயா எபனேசர்.
கடுக்காய்க் கொட்டையை நீக்கிவிட்டு மீதி உள்ள மேல் தோலை இடித்துச் சலித்து உண்ணலாம். கெட்டிப்படாமல் இருக்க, பசுநெய் சேர்த்துப் பிசைந்துவைக்க வேண்டும். இது ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது, மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும். நினைவாற்றலைப் பெருக்கும்.

கடுக்காய்ப் பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும் சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும், நரையும் நீங்கும்.

கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.
கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்.

கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.

கடுக்காய்ப் பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண் புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.
25 கிராம் கடுக்காய்ப் பொடியில் ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50 மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும். இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.

கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து இரண்டு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.

கடுக்காயும் காசுக் கட்டியும் சம அளவு எடுத்து அரைத்து, நாக்குப் புண்ணுக்கு தடவினால் குணம் கிடைக்கும்.
பச்சைக் கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால், இருமல், இரைப்பு, ரத்தமும் சீழுமாய் போகும் வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும்.

கடுக்காய்த் தூளையும் பசு நெய்யையும் சம எடை எடுத்து ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு ஒரு மெல்லிய துணியால் மூடி 40 நாள் வெயிலில் வைத்து வடிகட்டி 5 முதல் 10 மி.லி. அளவு காலை - மாலை உண்டுவந்தால், மலச் சிக்கல், வயிற்றுப் புண், மூல முளை, பவுத்திரம் போன்ற நோய்கள் தீரும்.

கடுக்காயைத் தட்டித் துணியில் முடிந்து ஆமணக்கு எண்ணெயில் விட்டுச் சூரிய ஒளியில்வைத்து பின் அதைக் கண்களில் பிழிந்தால், மேக நோயில் வரும் கண் நோய், கண் பீளை வடிதல், கண் சிவப்பு நீங்கும்.

கடுக்காயை நீரில் ஊறவைத்து வடிகட்டிய நீரை வெயிலில் குழம்பாகும் வரை வைத்து 5 முதல் 10 மி.லி. கிராம் அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் உண்டால், இரைப்பை பலப்படுவதோடு நாட்பட்ட மலச் சிக்கலும் தீரும்.

கடுக்காய்ப் பிஞ்சு: ஆமணக்கு எண்ணெயுடன் கடுக்காய்ப் பிஞ்சைச் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை உள்ளுக்கும் வெளியிலும் பயன்படுத்தினால், மலச் சிக்கல், மூலக்கடுப்பு, ஆசனவாய் வெடிப்பு முதலியவை தீரும்.

கடுக்காய்ப் பூ: இதனைப் பொடி செய்து இரண்டு கிராம் நீருடன் அருந்த, கடுப்போடு கூடிய பேதி தீரும். பூவை அத்திமரப் பட்டையுடன் சேர்த்துப் பால்விட்டு அரைத்து இரு வேளை உண்டால், ரத்தமும் சளியும் கலந்த வயிற்றுப்போக்கு மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.

கடுக்காய் மரத்தின் வேர்: எலும்பைப் பற்றிய நோய்கள் தீரும்.

கடுக்காய் மரக்கட்டை: தசையைப் பற்றிய நோய்கள் தீரும்.

கடுக்காய் மரப்பட்டை: தோல் நோய்களைப் போக்கும்