Saturday, December 24, 2016

கருவுற சில தகவல்கள்

திருமந்திரம் 482
          உடலுறவில்  இணைகின்ற  ஆணுக்கு  வலது நாசியில் சுவாசம்  நடந்தால்  ஆண்குழந்தை  தோன்றும். சுவாசம் இடது நாசியில்  நடந்தால் பெண் குழந்தை தோன்றும். சுவாசம் சுழுமுனையில் நடந்தால் தோன்றும் குழந்தை  அலியாகும். வலது அல்லது இடது  நாசியில்   சுவாசம் நடந்து அப்போது  அபானன்   என்ற வாயு  எதிர்க்குமானால் இரட்டைக் குழந்தை தோன்றும்.
           பிறவியிலேயே  கூன், குருடு,  ஊமை போன்ற பல  குறைகளுடன் குழந்தைகள் பிறப்பதற்கு, காரணங்களை   சித்தர்கள்   சரநூலில்  பல இடங்களில்  கூறுகின்றனர். இதையே திருமந்திரத்தில

“மாதா உதரம் மலமிகில் மந்தனாம்
மாத உதரம் சலமிகில் மூங்கையாம்

மாதா உதரம்   இரண்டொக்கில் கண்ணில்லை.
மாதாஉதரத்தில்வந்தகுழவிக்கே'
                                                               திருமந்திரம் 481

உடலுறவின்   போது பெண்ணின் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் தோன்றும் குழந்தைக்கு   மூளை வேகமாக செயல்படாது  மந்தமாக இருக்கும். பெண்ணின் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருந்தால்  பிறக்கும் குழந்தை ஊமையாகும். மலம்,  சிறுநீர் இரண்டும் அதிகமாக  இருந்தால் பிறக்கும்  குழந்தைக்கு  கண் குருடாகும்  என்ற திருமூலர் திருமந்திரத்தில் கூறுகின்றார்.

“பாய்கின்ற   வாயு  குறையிற்  குறளாகும்
பாய்கின்ற   வாயு இளைக்கின் முடமாகும்.
 பாய்கின்ற   வாயு நடுப்படின் கூனாகும்
பாய்கின்ற   வாயு மாத்ர்க்கில்லை பார்க்கிலே”
                                                               திருமந்திரம் 480
ஆணின் உடலிலிருந்து உயிரணுக்கள்  வெளியேறும் நேரம் இருவரின் சுவாசமும் சரியான  அளவில் இருந்தால் எந்தக் குறைபாடும் இராது. ஆனால்  ஆணின் சுவாசம் தேவையான  அளவை விட குறைந்து வெளிப்படுமானால் பிறக்கும் குழந்தை குள்ளமாக இருக்கும்.  சுவாசம் திடமின்றி  வெளிப்படுமானால்  பிறக்கும் குழந்தை முடமாகும். சுவாசத்தின் அளவு குறைந்தும், திடமின்றியும்  வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தைக்கு  கூன் விழும்.

 'பாய்ந்த  பின்  அஞ்சோடிய ஆயுளும் நூறாம்
 பாய்ந்த பின் நாலோடி  பாரினில்  எண்பதாம்'
                                                                       திருமந்திரம் 479

          உயிரணுக்கள் வெளியேறும் நேரம் ஆணின் சுவாசம் ஐந்து மாத்திரை நேரம்  பாய்ந்தால் பிறக்கும் குழந்தை  நூறு வயது வரை வாழும். நான்கு மாத்திரை நேரம்    ஓடினால் எண்பது  வயதுவரை உயிர்வாழும். சுவாசம் வெளிப்படும் மாத்திரை குறைய குறைய ஆயுளும் குறையும்

'கொண்ட வாயு இருவருக்கும்   ஒத்தொழில்              
கொண்ட குழவியும்  கோமளமாயிரும்
கொண்ட  நல்வாயு இருவருக்கும்   குழறிடில்
கொண்டதும்  இல்லை  கோல்வினையாட்கே.'    
                                                                      திருமந்திரம் 483

உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கும் சுவாசம்  சீராக ஒரே அளவாக ஓடினால் தோன்றும் குழந்தை மிக அழகாக பிறக்கும் . சுவாசம் தாறுமாறா

சந்திர கலை  சூரியகலை சூரி

யன் உதிக்கும் போது ஓட வேண்டிய திதிகள்  குறிப்பிட்டிருந்தோம்.சூரியன் உதிக்கும்போது சூரியகலையில்  அதாவது  வலது நாசியில் ஓட வேண்டிய திதிகளில்  காலை 6 மணிக்கு ஓட ஆரம்பித்து  ஒரு மணிநேரம் கழித்து சந்திர கலை ஓட ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு  மணிநேரம் கழித்து சூரிய கலை ஓட ஆரம்பிக்கும். இதே போல்சூரியன் உதிக்கும்  போது சந்திர கலையில்   ஓட வேண்டிய  திதிகளில் சூரிய உதயத்தில்  சந்திர கலையில் ஒரு மணிநேரம்  மூச்சு  ஓடி, பின் சூரிய கலையில் ஒரு மணி நேரம் மூச்சு ஓடி இப்படியே  மாறி  மாறி   மூச்சு   ஓடிக்கொண்டிருக்கும்.

“நாத விந்து கலாதி நமோ நம
          வேத மந்திர சொரூபா நமோ நம”
                                   -அருணகிரிநாதர் திருப்புகழ்-

நாதத்திற்கும் (பெண்களிடமுள்ள  ஜீவசக்தி)    விந்துவிற்கும் (ஆண்களிடமுள்ள ஜீவசக்தி) முதல் வணக்கத்தைத் தெரிவித்த அருணகிரிநாதர் பின்னரே  வேத மந்திர  சொரூபனான  இறைவனுக்கே  வணக்கம் தெரிவிக்கிறார்.இதையேதிருப்புகழில்

  “அருகுநுனி பனியனைய  சிறிய துளி
 பெருகியொரு ஆகமாகிய பாலரூபமாய்”

          என்று கூறுகிறார். ஒரு விந்துவில் உள்ள இலட்சக்கணக்கான உயிரணுக்கள்  ஒவ்வொன்றும் மானிடனாகி 120 வருடங்கள் வாழ வைக்கக்கூடிய உயிர்ச் சக்தியைப்  பெற்றிருக்கின்றன.   எனவே “விந்து விட்டவன் நொந்து  கெட்டான்” என்று சித்தர்கள் கூறுகின்றனர்.  நாம் அணியும்   திருநீறு வெள்ளை நிறமாக  இருந்து இந்த விந்தையே குறிக்கிறது.  குங்குமம்  சிவந்த நிறமான  பெண்களின் நாதத்தைக் குறிக்கிறது.

இதையே உலக இயக்கம் என்பதால் குங்குமமும். திருநீறும்  நெற்றியில்அணிகிறோம். எல்லோருமே நாத விந்து சொரூபர்களே.

ஆண், பெண்களின் சேர்க்கையே   லிங்க சொரூபம். இடப் பாகம் சக்தியென்பதால்  லிங்கத்தின்   இடது பாகம் நீர்த்தாரை வைக்கப்பட்டுள்ளது.  சிவலிங்கத்தின் அந்த இடப்பாகத்தையே  நோக்குவது போல இடதுபுறம் நந்தி சாய்த்துப் பார்க்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.சக்தியான சந்திரகலையை முதலில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே,    இது கோயிலில் அமைப்பாக  காட்டப்பட்டுள்ளது.

(சீனத்து அக்கு பஞ்சர் முறை நமது போக முனிச் சித்தரால் கண்டுபிடிக்கப்பட்டு சீனத்தில் கையாளப்பட்டு வருகிறது அதில்'யின்'(yin)என்றால் இடப்பக்கம் என்றும் பெண் தன்மை என்றும் ,யாங்(yang)என்றால் வலப்பக்கம் என்றும் ஆண் தன்மை  என்றும் கூறப்பட்டுள்ளது.)

“மூலமான  மூச்சதில் மூச்சறிந்து  விட்டபின்
 நாலு  நாலு முன்னிலொரு  நாட்டமாகி  நாட்டில்
பாலனாகி   நீடலாம் பரப்பிரம்மம்  ஆகலாம்.
ஆலமுண்ட கண்டராணை  அம்மையாணை உண்மையே”
“இருக்கலாம் இருக்கலாம்  அவனியிலே இருக்கலாம்
அரிக்குமால் பிரம்மனும் அகண்ட  மேழ் அகற்றலாம்
கருக்கொளாத   குழியிலே   காலிடாத கண்ணிலே
நெருப்பறை  திறந்த பின்பு நீயும்  நானும் ”
                              “சிவ வாக்கியர்”

 மேற்கண்ட  பாடல்களில் மூலமான  மூச்சை  சரியான படி  அறிந்து அளவிட்டு   4 அங்குலமட்டில் ஓட  விட்டால் பாலன் போன்ற   தோற்றமும்,பரப்பிரம்மான   இறைவனுக்குச்    சமமாகவும்  ஆகலாம்  என்று சிவவாக்கியர் இறைவன்,  இறைவி   மீது  ஆணையிட்டுக் கூறுகிறார்.

          இந்த  அவனியான பூமி இருக்கும்  வரை, அரி, மால் பிரம்மன்.,அண்டங்கள்  இவற்றைக் கூட படைக்கலாம், அழிக்கலாம் காலிடாத கண்ணிலே  என்ற மூச்சுவிடாத (கால் என்றால் காற்று)   நிலை அடைந்தால் நெற்றிக்கண்ணில் நெருப்பறை திறக்கும். “நெருப்பறை திறக்குமானால் ,  நீ நான்  அனைவரும் ஈசனே.                    
     உண்ணும் போது உயிரெழுத்தைஉயரேவாங்கு
     உறங்குகின்ற   போதெல்லா மதுவேயாகும்.
     பெண்ணின்   பாலிந்திரியம்  விடும்போ தெல்லாம்
     பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு
     தின்னுங்  காயிலை மருந்தும் அதுவேயாகும்.
     தினந்தோறும் அப்படியே  செலுத்த வல்லார்
     மண்ணு}ழி  காலமட்டும் வாழ்வார் பாரு.
     மரலிகையில்  அகப்படவு மாட்டார்  தாமே.

அகத்தியர்தம்  ஞானப்பாடலில் இவ்வாறு கூறுகிறார்.
எனக்கு சொந்த அனுபவத்தில் சில மருத்துவ   கலைகளின் அறிவு உண்டு.   ஆனால் சித்த மருத்துவக்   கலையில்  எனது முன்னோர்கள் பரம்பரையாகச் செய்து வந்திருக்கின்றனர்.   இவற்றில் முக்கியமான விஷயம்,  என்னை பிரமிக்க வைத்த விஷயம்  ஒன்று உண்டு.  எல்லா வைத்திய  முறைகளும் உடலில் ஏற்படுகின்றன  பிணிகளைப்  போக்கிக் கொள்ளும்   முறைகளைப் பற்றிமட்டுமே கூறுகின்றன. அதிலும்  சில நோய்கள்   மனித குலத்திற்கும்,   விஞ்ஞானத்திற்கும்  சவாலாகவேஅமைந்திருக்கின்றன.

ஆனால்சித்தர்களோஉடலில் ஏற்படுகின்ற வியாதிகளின் எண்ணிக்கை 4448  வியாதிகள்   என்று குறிப்பிட்டுச் சொல்வதுடன்  அவற்றைப் போக்கும் முறைகளையும் தெளிவுபட விளக்கியுள்ளனர்.

          இதற்கு மேலும் ஒருபடி சென்று மரணம் என்பதும் ஒரு பிணி  என்று கூறுவதுடன் மரணம்  மாற்றம் முறைகளையும,  மரணமிலாப் பெருவாழ்வு   என்பதனையும் விளக்கிச் சொன்னதுடன்  கடைபிடித்து வெற்றியும்  கண்டுள்ளனர்.

குரு குல கல்வி   முறையில் இவையெல்லாம் ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டு வந்தன.இந்த மேம்பாடான் கல்விமுறை அழிந்து  தற்கால சந்ததியினருக்கு  கிடைக்காமல் போனது துரதிர்ஷ்டமே. தற்கால சந்ததியினர் மெக்காலே கல்வி முறை ஆங்கிலேயர் காலத்தில் குமாஸ்தாக்களை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டது.

அந்தக் கல்வி முறை மூலம் உருவாகும் இவர்கள்,சுயம் என்பது போய் தன் காலில் நிற்கத்தெரியாதவர்களாகவும்,அரசாங்க வேலையைஎதிர்பார்த்து ,அதற்கு கையூட்டு கொடுப்பவர்களாகவும். கொடுத்த கையூட்டை, மறுபடி மக்களிடம் அதே கையூட்டின் மூலம் வசூலிக்கும் அக்கிரமக்காரர்களகவும் மாறி கடைசியில் நிம்மதி தொலைத்து,முறையற்ற வழியில் பணம் தேடும்பிசாசுகளாய்வாழ்ந்து,முடிவில் இறந்தே போகுபவர்களாவே உள்ளனர்.

இந்த சரநூல் சாஸ்திரத்தைக் கொண்டு  நோய்களை போக்கிக் கொள்ளவும்,  நமக்கு வேண்டிய காரியங்களை முடித்துக் கொள்ளவும் சித்தர்களின் அருளாசியால்  மச்சமுனிவரின் எட்டாவது பேரனாகிய  என் மூலம்  கற்றுக் கொள்ள இங்கு இறைவன் கருணை புரிந்து இருக்கின்றார்.

Wednesday, December 21, 2016

*காய்ச்சல், மூட்டுவலியை போக்கும் மந்தாரை*

*நாட்டுமருந்து வாட்சப்குழு 9787472712*

*காய்ச்சல், மூட்டுவலியை போக்கும் மந்தாரை*

எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மந்தாரையின் மருத்துவ பயன்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். சாலையோரங்களில் காணப்படும் மூலிகை மந்தாரை. இது, இல்லத்தில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. வெள்ளை மந்தாரை, செம்மந்தாரை, நீலமந்தாரை உள்ளிட்ட வகைகளை கொண்டது. மந்தாரையின் இலைகள், பூக்கள், மரப்பட்டை ஆகியவை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட மந்தாரை நோய் எதிர்ப்பு சக்தி உடையது. பூச்சிகளை அழிக்க கூடியது. எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மாதவிலக்கு, வயிற்று கோளாறுகளை சரிசெய்கிறது. பற்களுக்கு பலம் கொடுக்க கூடியது.

மந்தாரை இலைகளை பயன்படுத்தி அஜீரண கோளாறு, காய்ச்சல், மூட்டுவலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மந்தாரை இலை, இஞ்சி, பனங்கற்கண்டு. செய்முறை: மந்தாரை இலையை அரைத்து 10 முதல் 20 மில்லி அளவுக்கு சாறு எடுக்கவும். இதனுடன் இஞ்சி துண்டு, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர அல்சர் வராமல் காக்கும். புண்களை ஆற்றுவதுடன் செரிமானத்தை தூண்டுகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளித்தள்ளும் அற்புத மருந்தாக விளங்குகிறது. காய்ச்சல், மூட்டு வலி குணமாகும். மருத்துவ குணங்களை உடைய மந்தாரை இலை பசியின்மையை போக்கும் தன்மை கொண்டது.

மந்தாரை பூக்களை பயன்படுத்தி மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மந்தாரை பூக்கள், பனங்கற்கண்டு. மந்தாரை பூக்கள் 4 எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி குடித்துவர மாதவிலக்கு கட்டுக்குள் வரும். கருப்பை கோளாறுகளை குணப்படுத்தும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும். மூட்டுவலியை போக்கும்.மந்தாரை பூக்களை பயன்படுத்தி கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மந்தாரை பூக்கள், விளக்கெண்ணெய்.ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் லேசாக நசுக்கி வைத்திருக்கும் மந்தாரை பூ இதழ்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து கண்களை சுற்றி இரவு தூங்கப்போகும் முன்பு பூசிவர கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறையும். கண்கள் குளிர்ச்சி அடையும்.

மந்தாரை பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையது. பூஞ்சை காளான்களை போக்க கூடியது. தோல்நோய்களை சரிசெய்யும் தன்மை உடையது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. ரத்த கசிவை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுபோக்கு, வாந்திக்கான மருத்துவம் குறித்து பார்போம். குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாத நிலையில் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படும். குறிப்பாக, பல் முளைக்கின்ற குழந்தைகளுக்கு இப்பிரச்னைகள் வரும். 5 வல்லாரை இலையுடன், 6 வெந்தயம் சேர்த்து தேனீராக்கி காலை, மாலை என சில நாட்கள் கொடுத்துவர வயிற்றுபோக்கு சரியாகும்.

தைராய்டு தொல்லைக்கு தீர்வு!

தைராய்டு தொல்லைக்கு தீர்வு!


எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல.. இந்த அறிகுறிகள் இருந்தால் தைராய்டு டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் லதா. அவர் கூறியதாவது:
தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் உள்ள ஒரு நாளமில்லா சுரப்பி. இது சுரக்கும் ஹார்மோன் அளவு அதிகரிப்பது, குறைவது இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இப்பிரச்னை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதே போல் உண விலும் கட்டுப்பாட்டைக் கடைபி டிக்க வேண்டும். மாதவிலக்கு காலம் மற்றும் கர்ப்பகாலத்தில் தைராய்டு பிரச்னை உள்ள பெண்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். தைராய்டின் அளவு அதிகரித்தால் மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப்போக்கு மற்றும் பிரசவ காலப் பிரச்னைகளை உருவாக்கும்.

தைராய்டு குறைவாக இருக்கும் போது வறண்ட தோல், உடல் எடை அதிகரித்தல், மலச்சிக்கல், சாதாரண நாட்களிலும் குளிர்வ தைப் போல உணர்வது, முறையற்ற மாதவிலக்கு, குரல் மாறுதல் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். தைராய்டு அளவு அதிகரிக்கும் போது தொண்டைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்குவதில் சிரமம் ஏற்படும். பிரச்னை சிறிதாக இருக்கும் போதே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம். இதன் மூலம் தைராய்டு அளவு அதிகரிப்பதையோ, குறை வதையோ தடுக்கலாம்.

உடலில் அயோடின் உப்பின் அளவு குறைவதன் காரணமாக தைராய்டு பிரச்னை வருகிறது. அயோடின் உள்ள உப்பு எடுத்துக் கொள்வதன் மூலம் தைராய்டு பிரச்னையை சரி செய்ய முடியும். அடுத்தகட்டமாக மாத்திரைகள் கைகொடுக்கும். தொண்டையில் கட்டி பெரிதாகும் பட்சத்தில் ரேடியோ தெரபி அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

பாதுகாப்பு முறை: தைராய்டு பிரச்னை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்னை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்னை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்னைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும். இது பற்றி பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்னைகளை சரி செய்ய முடியும்.

உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவில் கல் உப்பு பயன்ப டுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

ரெசிபி

கோதுமை பால் பர்பி: முழு கோதுமை இரண்டு கப் எடுத்து முதல் நாள் இரவே ஊற வைக்கவும். அதை நன்றாக அரைத்து இரண்டு கப் கெட்டிப் பால் பிழியவும். அடி கனமான பாத்திரத்தை எடுத்து இரண்டு கப் சர்க்கரை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். அதில் கோதுமைப் பால் சேர்த்து பின்னர் நெய் மற்றும் முந்திரி சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பால் கெட்டியான பின் ஒரு தட்டில் ஊற்றி பர்பிகளாக வெட்டி சாப்பிடலாம்.

அவல் பக்கோடா: அவல் இரண்டு கப், வெள்ளை ரவை கால் கப், பாசிப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் தேவையான அளவு, கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை. அவலை இரண்டு நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து பிழிந்து கொள்ளவும். ரவை, பாசிப்பருப்பு, உப்பு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை பக்கோடா பதத்தில் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்.

தேங்காய் பால் உருளை கறி: வேகவைத்த உருளைக் கிழங்கு & 5, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டீஸ்பூன், வெங்காயம் ஒரு கப், தக்காளி ஒரு கப், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, கசகசா, சோம்பு எடுத்துக் கொள்ளவும். தேங்காய்ப்பால் 2 கப் எடுத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் சிறிது. அரிசி மாவு அல்லது பொரி கடலைத் தூள் 2 டீஸ்பூன். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு பிரியாணி பொருட்களைப் போட்டு வதக்கவும்.

அத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், தக்காளி, வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கை உதிர்த்துப் போடவும். தேங்காய்ப்பால் சேர்த்து உப்பு சேர்த்து வேக விடவும். பின்னர் அரிசி மாவு, புளி அல்லது எலுமிச்சை சாறு சிறிதளவு விட்டு புதினா கொத்தமல்லி, பொரி கடலைப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இட்லி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தலாம்.

டயட்

உடலில் அயோ டின் அளவு குறைந் தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்னை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம். தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்னைகள் தோன்றும். அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்னைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

தைராய்டு பிரச்னை யை பொருத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண் டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட் களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம். தைராய்டு அளவு அதிகம் உள்ளவர் கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத் தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண் டிப்பாக தவிர்க்க வேண்டும்.

உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்‘ என்கிறார் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமை ஆகும்.

ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

உடல் அசதி தீர அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.

அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் அதிக ரத்தப் போக்கு குணமாகும்.

அடிக்கடி சளித்தொல்லையால் அவதியுறுபவர்கள் அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி சரியாகும்.

தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.

தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.

Saturday, December 17, 2016

இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.!

இளநீர்☘*
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.!

உடலுக்கு ஊட்டம் தரும் ஆளி விதை





நாம் அன்றாட உணவுகளில் காய், கனி, இலை, பருப்பு, விதை போன்றவைகளை பயன்படுத்தி வருகிறோம். நாம் உணவுகளாக பயன்படுத்தும் விதை வகைகளில் குறிப்பிடத்தக்கது, ஆளி விதை! ஆளி, கடுகு குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை செடி. 60 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.

ஆளி செடியின் விதையை ‘ஆளிவிதை’ என்று அழைக்கிறோம். இந்த விதை, கடுகு போன்று சுவைதரும். இதில் மருத்துவ குணம் நிறைந்திருக்கிறது. இதன் தளிர் இலையை சாலட்டில் சேர்த்து சாப்பிடும் பழக்கமும் உள்ளது. சித்த மருத்துவ பாடல், இது உடலைத் தேற்றும் தன்மை கொண்டதாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும் என்றும் குறிப்பிடுகிறது.

மேலும் ஆண்மைத்தன்மையை அதிகரிக்கவைக்கும் ‘காமம் பெருக்கி’ என்றும் எடுத்துச் சொல்கிறது. ஆளி விதையில் கால்சியம், இரும்பு, போலிக்அமிலம், வைட்டமின் சி, கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இருக்கும் சத்துக்கள் வாதத்தையும், கபத்தையும் சமன்படுத்தி, பித்தத்தை சரியான முறையில் இயங்கவைக்கிறது. இது சீரற்ற மாதவிடாயை சீர்செய்யும் சக்தியையும் பெற்றிருக்கிறது.

* மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் தினமும் 5 கிராம் ஆளிவிதையை நீரில் ஊற வைத்து, மென்று சுடுநீர் அருந்திவந்தால், மாதவிடாய் கோளாறுகள் சரியாகும். ஆளிவிதையை அரைத்து பொடி செய்தும் பயன்படுத்தலாம். ஒரு மாதம் தினமும் ஒரு வேளை மேற்கண்டவாறு சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்களின் சுரப்பு சரியாகும். அதன் மூலம் மாதவிடாய் கோளாறு உள்பட பல்வேறு உடல் பிரச்சினைகள் பெண்களுக்கு நீங்கும்.

* ஆளி விதைக்கு தாய்ப் பாலை பெருக்கும் சக்தியும் இருக்கிறது. அதனால் பிரசவித்த பெண்கள் ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். ஒரு தேக்கரண்டி விதையை பொடி செய்து பாலில் கலந்து பருகிவரலாம்.

* ஒரு தேக்கரண்டி ஆளிவிதை பொடியில், ஒரு தேக்கரண்டி நெய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் விந்து பலப்படும். ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

* ஒரு தேக்கரண்டி பொடியுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் அஜீரணம் நீங்கும். வயிற்றுப்போக்கு சீர்படும். உடைந்த எலும்புகளை விரைவாக கூடவைக்கும் சக்தியும் ஆளிவிதைக்கு உள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு ஆளி விதை உணவுகளை கொடுக்கும் பழக்கம், பல்வேறு நாட்டு பழங்குடி மக்களிடம் உள்ளது.

* ஓமம், வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவைகளோடு ஆளிவிதை பொடியை கலந்து சூரணம் தயாரிக்கலாம். இதனை தினமும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை சீர் செய்திட முடியும்.

* அடிபட்டதால் உண்டாகும் வீக்கம், வலி மற்றும் சருமத்தில் உண்டாகும் அரிப்பிற்கு ஆளிவிதை பொடியை எலுமிச்சம் பழ சாற்றில் அரைத்து பூசலாம். ஆளிவிதையை உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து, நல்ல கொழுப்பு அதிகரிக்கும். ஆளி விதைக்கு உடல் எடையை குறைக்கும் சக்தியும் இருக்கிறது.

* பத்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு எலும்புகள் உறுதியாக ஆளிவிதை பொடியை பாலில் கலந்து பருககொடுக்க வேண்டும். ஆளிவிதை பல்வேறு சித்த மருந்துகளில் சேர்க்கப்படுகிறது.

Wednesday, December 14, 2016

மூட்டு வலி போக்கும் கல்தாமரை

மூட்டு வலி போக்கும் கல்தாமரை

முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி.

அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன. பிறந்தது முதல் அங்குமிங்கும் பலவாறு சுழன்று அசைந்துக் கொண்டிருக்கும் மூட்டுகளுக்கு போதிய பயிற்சி தராவிட்டாலும் பரவாயில்லை... உடல் எடை கூடாமலாவது பார்த்துக் கொள்ள வேண்டும். சராசரி உடல் எடையை மட்டுமே தாங்கக்கூடிய அளவுக்கு எலும்புகள் வன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. உடல் எடை அதிகரிக்கும் பொழுது எலும்புகளின் இணைப்புகள் தங்கள் வன்மையை இழக்கின்றன. இதனால் மூட்டுகளில் வலியும், நடக்கும் பொழுது கலுக், கலுக் என சத்தமும் உண்டாகின்றன. ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ் என்று சொல்லப்படும் இந்த கீல்வாயுவானது எலும்பு இணைப்புகளை அதிகம் பாதிக்கிறது.

நமது உடலிலுள்ள ஒவ்வொரு எலும்புகளும் ஒவ்வொரு விதமாக அசைந்துக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு அசையும் எலும்புகளானது இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் மேலும், கீழும், முன்னும், பின்னும், அங்குமிங்கும் என சதா அசைந்து கொண்டும், சுற்றிக் கொண்டுமிருக்கும் நம்முடைய கழுத்து, தோள், இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் மற்றும் விரல் மூட்டுகளை வாழ்நாள் முழுவதும் சீராக இயங்க வைக்கின்றன. ஆனால் உடல் எடை மற்றும் வயது அதிகரிக்கும் பொழுது எலும்பு, எலும்பை பிடித்திருக்கும் தசைநார் மற்றும் பந்தங்கள் பலகீனமடைவதால் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி உயவுத்தன்மையை இழந்து, தங்கள் செயல்பாட்டையும் இழக்கின்றன. இந்நிலையில் எலும்புகளின் இணைப்புகளுக்கு தகுந்தாற்போல் பயிற்சிகள் செய்யவேண்டும் அல்லது நோயின் தன்மைக்கேற்ப ஓய்வெடுக்க வேண்டும். இல்லாவிடில் எலும்பு சந்திகளில் வலி, வீக்கம், குத்தல், குடைச்சல், எரிச்சல், இறுக்கம், சிவப்பு என பல மாற்றங்கள் உண்டாகின்றன.

போதிய நடைப்பயிற்சியின்மை, அதிகரித்த உடல் பருமன், கொழுப்புச்சத்து, ஒரே இடத்தில் தொடர்ந்து நின்றுக்கொண்டிருத்தல், வைட்டமின்கள் நிறைந்த கீரை, காய்கறிகளை தவிர்த்தல், இரும்பு, சுண்ணாம்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களின் குறைபாடு, மூட்டு இணைப்புகளில் கிருமித்தொற்று, பிற மருந்துகளின் ஒவ்வாமை, முதுமை, பரம்பரை போன்ற பல காரணங்களால் ஆர்த்ரைட்டிஸ் உண்டாகிறது. பெரும்பாலும் நடுத்தர மற்றும் முதிய வயதினரே கீல்வாயுவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் சமீபகாலமாக குழந்தைகள் கூட மூட்டுவலியால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூட்டுகளில் வலியுண்டாகும் பொழுது ஆரம்ப நிலையிலேயே நாம் மூட்டுவலியின் காரணங்களை அறிந்து சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை உண்பதால் நோய்க்கான காரணம் மறைக்கப்படுவதுடன், நோய் முற்றி பல பக்கவிளைவுகளும் உண்டாக ஆரம்பிக்கின்றன. சமவெளிப்பகுதிகளில் வசிப்பவர்களை விட மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் மூட்டுவலிக்கு அதிகம் ஆளாகின்றனர். மூட்டுகளில் தோன்றும் வலியை நீக்கி, வீக்கம் மற்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி, மூட்டுகளுக்கு வலுவைக் கொடுக்கக் கூடிய மலைப்பகுதிகளில் மட்டுமே அதிகம் காணப்படும் அற்புத மூலிகை கல்தாமரை என்று அழைக்கப்படும் மலைத்தாமரையாகும்.

Smilax zeylanica என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காகவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர் மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும். தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம். இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றடமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களில் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்.

Monday, December 5, 2016

இளநரை ...


தலைவலி சளி ...


அல்சர் குறைய 2


அல்சர் குறைய ....


அக்கி எனப்படும் சிரங்கு


அதிக சூட்டினால் வாயிற்று வலி ...


நேச்சுரல் வயாகரா... ஜாதிக்காய்


சேற்று புண் ஆற ...


ஜலதோஷம், மூக்கடைப்பா....? இதோ பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!

ஜலதோஷம், மூக்கடைப்பா....? இதோ பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம்!


உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோஷம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது. அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லையா... கவலையே வேண்டாம். மிக மிக உடனடியாக ஜலதோஷத்தை குணப்படுத்தும் மருந்துகள் இதோ, உங்களுக்காக!

முதலில் ஜலதோஷம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது,

தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது.

ஜலதோஷம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோஷம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோஷம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோஷம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோஷத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோஷத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம். மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.