உங்களுக்கு தாடி வளரவில்லையா? கவலைய விடுங்க இதகொஞ்சம் ட்ரை பண்ணுங்க!
ஆண்களின் தற்போதைய ஸ்டைலே தாடி வைப்பது தான். இன்றைய கால ஆண்கள் பலரைப் பார்த்தால் பலரும் தாடியுடன் தான் சுற்றுவார்கள். இதற்கு காதல் தோல்வி தான் காரணம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் பெண்கள் தாடியுடன் இருக்கும் ஆண்களால் தான் அதிகம் ஈர்க்கப்படுவார்கள்.
இருப்பினும் சில ஆண்களுக்கு தாடி வளரவே வளராது. இதற்கு ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருப்பது தான் காரணம். எனவே டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உட்கொண்டு வருவதோடு, ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றி வந்தால், தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
இங்கு தாடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அன்றாடம் பின்பற்றி வந்தால், தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி ஆயில்
தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ்மேரி எண்ணெயை 10:1 என்ற விகிதத்தில் கலந்து, அதனை காட்டனில் நனைத்து, தாடி மற்றும் மீசை வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினடும் செய்து வந்தால், தாடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
நெல்லிக்காய் எண்ணெய்
நெல்லிக்காய் எண்ணெய்க்கு முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும் சக்தி உள்ளது. எனவே நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையை அரைத்து, அதில் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் 4 முறை செய்து வந்தால், தாடியின் வளர்ச்சியை நன்கு காணலாம்.
பட்டை மற்றும் எலுமிச்சை
ஒரு டீஸ்பூன் பட்டை பொடியுடன், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு ஒருவேளை இதனை அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்பட்டால், உடனே அவற்றைத் தவிர்த்திடவும்.
யூகலிப்டஸ் எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய் போன்றே, யூகலிப்டஸ் எண்ணெயும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். ஆனால் இதனை அப்படியே பயன்படுத்தாமல், ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து, முகத்தை மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முகத்தில் தாடி நன்கு வளர்வதைக் காணலாம்.
No comments:
Post a Comment