Wednesday, February 22, 2017

பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!!!


பித்த வெடிப்பு போவதற்கான டிப்ஸ்!!!



பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க, அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும் வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தால் பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்திய நன்னாரிவேரை 3, 4 தடவை கூட பயன்படுத்தலாம்.

* பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மருதாணி இலையை அரைத்து பத்து போட்டாலும் குணம் கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.

* தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* தேங்காய் எண்ணெய் (200 மிலி), விளக்கெண்ணெய் (200 மிலி), கடையில் கிடைக்கும் வெண் குங்கிலியம் (35 கிராம்), சாம்பிராணிப்பொடி (10 கிராம்). தேன்மெழுகு (60 கிராம்). எண்ணெயை சூடு செய்து அதில் குங்கிலியம், சாம்பிராணி ஆகியப் பொடிகளை கலந்து, நன்கு கரைந்தவுடன் தேன்மெழுகு சேர்த்து நன்கு கலக்கி ஆறவைக்க களிம்பாகி இருக்கும். இதை பாதிக்கப்பட்ட இடத்தில் இரவு படுக்கும் முன் தடவி வர பித்தவெடிப்பு உடன் தீரும்.

* கிளிஞ்சில் சுண்ணாம்புப் பொடி, விளக்கெண்ணெய் இவை இரண்டும் தேவையான அளவு கல்லுரலில் இட்டு நன்கு அரைத்து பசையாக்கி பாதிக்கபட்ட இடத்தில் தடவிவர உடன் தீரும். விளக்கெண்ணெய் அதிகமாக சேர்க்காமல் பசையாகும் அளவு மட்டும் குறைவாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை, மாலை இரு வேளை தடவிவர உடன் தீரும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* பித்தவெடிப்பு இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருது வாகும். கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.
பித்தவெடிப்பிலிருந்து ரத்தம் வந்தால், உடனடியாக தோல் மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது அவசியம்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* ஆலமரப்பால்,அரசமரப்பால் இரண்டும் சமஅளவு கலந்து பூசவும் வெங்காயத்தை வதக்கி பின்பு அதை அரைத்து பாதங்களில் தடவி வர பித்தவெடிப்பு குணமாகும் .

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.
* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.⁠⁠⁠⁠

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம்

நரம்புகளை பலப்படுத்தும் மருத்துவம் :
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, எளிதான மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.
அந்தவகையில், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பலவீனத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். திருநீற்றுப்பச்சை, தூதுவளை, வல்லாரை ஆகியவை நரம்புகளை பலப்படுத்தும் மூலிகைகளாக விளங்குகின்றன.
நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை பொறுத்துதான் உடலின் அனைத்து செயல்பாடும் இருக்கும். ஞாபக சக்தி, ஜீரண சக்தி, தூக்கம் போன்றவற்றுக்கு நரம்பு மண்டலம் உதவுகிறது. முதுகுத்தண்டில் அடிபடுதல், அழுத்தம் ஏற்படுவது, மன உளைச்சல், உடற்பயிற்சி இல்லாதது, மூச்சுப்பயிற்சி இல்லாமை, சத்தான உணவுகளை சாப்பிடாமல் இருப்பது போன்றவை நரம்பை பலவீனப்படுத்தும். இதனால், கை கால்களில் நடுக்கம், சோர்வு, மறதி, உள்ளங்கை கால்களில் வியர்வை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

திருநீற்றுபச்சையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்

. 10 திருநீற்று பச்சை இலைகளை சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி சிறிது காய்ச்சிய பால் சேர்த்து, காலை வேளையில் குடித்துவர நரம்புகள் பலம் அடையும். சோர்ந்துபோன நரம்புகளை தூண்டுகிறது. உடல் சோர்வை போக்கும்.பல்வேறு நன்மைகளை கொண்ட திருநீற்று பச்சை மணத்தை தரக்கூடியது. நரம்புகளை பலப்படுத்தும் தன்மை உடையது. சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்தும்.

தூதுவளையை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தூதுவளை இலை, மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசாலை இலை ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர நரம்புகளுக்கு பலம் ஏற்படும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், கல்லீரலை பலப்படுத்தும். நீலநிற பூக்களை உடைய தூதுவளை, நரம்புகளை தூண்டக்கூடிய மூலிகையாக விளங்குகிறது.

வல்லாரை கீரையை பசையாக அரைத்து, தேவையான நல்லெண்ணெய் விட்டு தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை வாரம் ஒருமுறை தலை, உடலில் பூசி குளித்துவர நரம்புகள் தூண்டப்படும். தலைவலி, கழுத்து வலி சரியாகும். உடல் சோர்வு போக்கும். மன சோர்வு நீங்கும்.நரம்பு பலவீனம் அடையும்போது உள் உறுப்புகள் அனைத்தும் பலவீனம் அடைகிறது. மூளை செயல்பாடு குறையும். ஞாபக மறதி, விரல்கள் மரத்துபோகுதல், தொடு உணர்வு குறைதல் ஏற்படுகிறது. நரம்புகளை பலப்படுத்துவதில் செம்பருத்தி, ரோஜா ஆகியவை அற்புதமான மருந்தாகிறது. காலிபிளவர், முளைகட்டிய தானியங்கள் ஆகியவையும் சிறந்த மருந்துகளாகின்றன. தினமும் அரைமணி புல் வெளியில் வெறும் காலோடு நடக்க வேண்டும். இதனால் நரம்பு மண்டலம் தூண்டப்படும். மூளைக்கு இதமான சூழல் ஏற்பட்டு ஞாபக சக்தி பலப்படும்.

வேணல் கட்டியை குணப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வெங்காயம், மஞ்சள். சின்ன வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி நசுக்கி, மஞ்சள் சேர்த்து கலந்து கட்டிகள் மீது போட்டுவர நச்சுக்கள் வெளியேறி கட்டிகள் விரைவில் குணமாகும்.⁠⁠⁠⁠

Monday, February 20, 2017

கொழுப்பை குறைக்கும் கொடம் புளி

கொழுப்பை குறைக்கும் கொடம் புளி

கொடம் புளி – Garcina indica
கேரள மாநிலத்தில் பயன்படுத்தப் படும் புளி வகை இது..........
நாம் பயன்படுத்தும் புளி –Termarindus  indica

 1.குடற் புண்ணை உண்டாக்கும்
 2.வாதத்தை உண்டாக்கும்.

புளிப்பு சுவை விரும்பிகள் ,நாம் பயன்படுத்தும் புளிக்கு  பதில் கொடம் புளியை பயன்படுத்தலாம்.......
கொடம் புளியில்
   கால்சியம்
   பாஸ்பரஸ்
   இரும்பு
   தயமின்
   ரிபோப்ளவின் & நியாசின்
மற்றும் முக்கியப் கூறாக
   ஹைட்ரோசி சிட்ரிக் அமிலம் [ hydroxy citric acid ] உள்ளது.........
 இந்த HCA ,
 1.கொழுப்பை உண்டாக்கும் நொதியாம்  Citrate lyase ஐ தடுக்கிறது.......
 2. செரோடினின் ஹார்மோனை அதிகப்படுத்துகிறது ..இந்த ஹார்மோன் பசியை குறைக்கிறது......
யாரெல்லாம் பயன்படுத்த கூடாது
 1.கர்ப்பிணிகள்
 2. பத்து வயதிற்கு குறைவானவர்கள்.

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?

மூட்டு வலி முழுமையான நிவாரணம் வேண்டுமா ?
இதை முயற்சி செய்து பாருங்கள்.

#முடக்கொத்தான் இலை ஒரு கைப்பிடி
#கொத்தமல்லி 50 கிராம்
#கரீஞ்சீரகம் 30கிராம்
#சுக்கு 10கிராம்
#சித்தரத்தை 10கிராம்
#மிளகு 10 கிராம்
#கொடம்புளி இரண்டு துண்டுகள்
#பெருங்காயம் சிறிதளவு
#பூனைக்காலி விதை பத்து
எல்லாவற்றையும் நன்றாக தட்டி ஒரு பானையிலிட்டு 8 டம்லர் நீர்விட்டு  பாதியாக வற்றவைத்து
காலை மாலை விதம்  ஒரு டம்ளர் சாப்பிட்டுவர இளந்த சக்திகள திரும்ப பெற்று கை கால் அசதி,மூட்டுவலி,உடல் பலவினம்,பாலியல் பலவினம்,உடல்நடுக்கம் போன்றைவை  குணமாகி வலிமையும் இளமையும் உண்டாகும்....

இந்த பொருள்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

நெஞ்சு சளி நீங்க துளசிச் சாறு ஓர் அருமருந்து

நெஞ்சு சளி நீங்க துளசிச் சாறு ஓர் அருமருந்து

தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்.



நெஞ்சு சளி நீங்க நெல்லிக்காய், மிளகு , தேன் மருந்து

நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.



நெஞ்சு சளி நீங்க புதினா, மிளகு மருந்து

புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.



நெஞ்சு சளி குணமாக வெற்றிலை மருந்து

வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.



நெஞ்சு சளி குணமாக வெற்றிலை, இஞ்சி மருந்து

வெற்றிலைச் சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்தால் மார்பு சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.



நெஞ்சு சளி குணமாக பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மருந்து

பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்.

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்

சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்
சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.

சோடா :
சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

தக்காளி :
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

மாத்திரைகள் :
எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

ஆல்கஹால் :
பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

காரமான உணவுகள் :
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

காபி :
காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

டீ :
காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

தயிர் :
தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும். R.Athi, 8122048418

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.

இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.

உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்

கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
கோரை கிழங்கு பொடி 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும். இந்த மருத்துவ முறையை வராகமித்ரர் அங்கரசனைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.

குளியல் பொடி:

இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

குளியல்பொடி தயாரிப்பது எப்படி?
மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
வெட்டி வேர் 200 கிராம்
அகில் கட்டை 200 கிராம்
சந்தனத் தூள் 300 கிராம்
கார்போக அரிசி 200 கிராம்
தும்மராஷ்டம் 200 கிராம்
விலாமிச்சை 200 கிராம்
கோரைக்கிழங்கு 200 கிராம்
கோஷ்டம் 200 கிராம்
ஏலரிசி 200 கிராம்
பாசிப்பயறு 500 கிராம்

இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

தந்த ரோகம் - பல்பொடி

தந்த ரோகம் - பல்பொடி

அனைத்து விதமான பல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கும் ஒரு சித்த மருத்துவ அனுபவ முறை
பல்பொடி செய்முறை .
1 - சுக்கு
2 - காசுக்கட்டி
3 - கடுக்காய்
4 - இந்துப்பு

இந்த நான்கு சரக்கும் ஒரே எடை அளவு எடுத்து இடித்து போடி செய்யவும். இதனைக் கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் ஈறுகளில் இரத்தம் கசிதல், பல் ஆட்டம், பல் சொத்தை, இவை அனைத்தும் நீங்கும். இதனைக்கொண்டு காலை, மாலை, தினமும் இருமுறை பல் துலக்கி வர பல் நோய்களே வராது

மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? கவலைய விடுங்க.

மருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? கவலைய விடுங்க... வெங்காயம் போதும்... உடனே மரு மறைஞ்சிடும்...



பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும் மருக்கள் கொலாஜன் மற்றும் ரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

பொதுவாக இந்த மருக்கள் முகம், கழுத்து, அக்குள், மார்பின் கீழ்ப்பகுதி, முதுகு போன்ற பகுதிகளில் தான் உண்டாகின்றன. இவை சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆனால் இதுபோன்ற மருக்களைப் போக்க சில எளிய வழிகளை நம் முன்னோர்கள் பின்பற்றியிருக்கின்றனர்.

அவற்றைப் பின்பற்றி, மருத்துவமனைக்குச் செல்லாமல் நம்முடைய வீட்டிலேயே அவற்றை எளிதமாககப் புாக்கிக் கொள்ள முடியும். என்னென்ன பொருட்கள் மருக்களைப் போக்கும் தன்மை கொண்டவை?

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை எடுத்துத் தோல் சீவி, சிறிது தட்டிக் கொள்ளவும். அப்போது வெளியே வருகிற சாறினை மருக்களின் மேல் தேய்த்துவர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு செய்து வந்தால், மருக்கள் தளர்ந்து தானாகவே உதிர்ந்துவிடும்.

வெங்காயம்

வெங்காயத்துக்கும் மருக்களைப் போக்கும் சக்தியுண்டு. வெங்காயத்தை முதல் நாள் இரவே உப்பில் ஊறவைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் அதை எடுத்து மை போல அரைத்து, மருக்கள் உள்ள பகுதிகளில் அப்ளை செய்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உலர்ந்ததும் வெந்நீர் கொண்டு கழுவலாம். இதை இரவு தூங்கச் செல்லும் முன் அப்ளை செய்து கொண்டால், இரவு முழுக்க ஊற வைக்க முடியும்.

சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, மரு உள்ள இடத்தில் ஒற்றி ஒத்தடம் கொடுத்து வந்தால், மருக்கள் விரைவில் உதிரும்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயிலை தொடர்ந்து சருமத்தில் தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.  அதேசமயம் டீ ட்ரீ ஆயிலை சருமத்தில் அப்ளை செய்வதற்கு முன் மரு உள்ள இடத்தை சோப்பு போட்டு நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும். அதற்கடுத்து டீ ட்ரீ ஆயிலைத் தடவலாம்.

ஆயில் தடவும் இடத்தில் சிறிது நேரம் எரிச்சல் உண்டாகும். இதை ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் போதும் மிக விரைவில் மருக்கள் இருந்த சுவடே தெரியாமல் உதிர்ந்துவிடும்



பூண்டு

பூண்டு சாறினை எடுத்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வர, அவை விரைவில் மறைய ஆரம்பிக்கும். இதை ஒரு நளைக்கு மூன்று வேளையும் தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும்

Friday, February 17, 2017

சில சிகிச்சை முறைகள்

சில சிகிச்சை முறைகள்

தமிழ் மருத்துவ முறைப்படி இருபாலருக்குமுரிய சிகிச்சை முறைகள்-மனிதகணம் எனப்படும் மானிட மருத்துவம்.

தேவகணம் எனப்படும் தெய்வ மருத்துவம்.

ராட்சச கணம் எனப்படும் நிசாசர மருத்துவம்.  என இவை முப்பெரும் பிரிவாகக் கூறினாலும், அவற்றின் உட்பிரிவுகளாக வேறு சிலவற்றையும் கூறலாம்.

பொதுவாக வேர்பாரு, தழைபாரு, மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு என்பதற்கிணங்க மூலிகை மருந்துகளால் தீராப் பிணிகளை -பற்ப செந்தூரங்களினாலும், இவ்விரு முறைகளால் நீங்காப் பிணிகளை அறுவை, அக்கினி,காரம் இவற்றைக் கொண்டு நீக்க வேண்டுமெனவும் அறியவும்.

மானிட மருத்துவம்': இது தாவரங்களினாலான குடிநீர், சூரணம்,மணப்பாகு, இளகம், மாத்திரை, சுரசம், பிட்டு, வடகம், போன்றவற்றால் சிகிச்சை செய்வதாகும்.

தேவ மருத்துவம்: சகல பிணிகளும் இயற்கை, செயற்கை காரணங்களினாலும், சில துர் தேவதைகளினாலும்-சில பூர்வ சென்ம தீவினைகளினாலும் ஏற்படுகிறது.

குட்டம்,சுவாசகாசம், சயம் போன்ற கொடிய பிணிகள், முற்பிறவியின் பயனோடு இணைந்தும், பிறவி இலக்கினம்-நட்சத்திரம் இவற்றின் அடிப்படையிலும் ஏற்படுவதாகும். இத்தகைய நோய்களுக்கு மருந்துகள் மட்டுமின்றி, தேவதைக் குற்ற நீக்கக முறைகளும் தேவைப்படும். எனவே இது, பூர்வ கருமானு சாரத்தையே காரணமாகக் கொண்டு -தாது சீவ இனங்களாகிய இரசம்,கெந்தி, பாடாணம், உப்பு,உலோகம்,முத்து, பவளம் போன்றவைகளினாலான பற்பம், செந்தூரம், சுண்ணம்,கட்டு, களங்கு, குளிகை, திராவகம், செயநீர் போன்ற உயர்ந்த மருந்துகளால் சிகிச்சை செய்வதாகும்.

இராட்சச மருத்துவம்: இது கத்தி,கத்திரி, குறடு,சலாக்கை, போன்ற கருவிகளைக் கொண்டு அறுவை, கீறல்,சுட்டிகை,குருதி வாங்கல், கொம்பு கட்டல்,அட்டைவிடல், போன்ற முறைகளில் சதையை அறுத்து செய்யும் சத்திர சிகிச்சையாகும்.

இதை ஏன் பதிவு செய்கிறேன் என்றால் நமது குருமார்களாகிய சித்தர்கள் முப்பது பிரிவுகளாக பிரித்து மருத்து முறைகளை வகுத்துள்ளார்கள். உலகில் உள்ள  அனைத்து மருத்துவ முறைகளும் சித்தாவிலிருந்து பிரதியெடுக்கப்பட்டவை என்பதற்கே

சர்க்கரை வியாதி

நுணாக்கனி-தைராய்டை மேம்படுத்தும்( குணப்படுத்தும்)

நுணாக்கனி-தைராய்டை மேம்படுத்தும்(  குணப்படுத்தும்) அதிசய மூலிகை கனி. தினசரி ஒரு டீஸ்பூன் சாறை 100 மிலி நீரில் கலந்து காலை,மாலை குடிக்கவும். இதன் காய் இலை பட்டைச்சாறை அரைத்து தொண்டையில் பூசிவர கழுத்து வீக்கம் ,தைராய்டு வீக்கம்,கட்டி,புடைப்பு நீங்கும். நுணா என்ற மஞ்சனத்தியில் அடோப்டோஜன் ஹைப்போ,ஹைப்பர் தைராய்டை சீர்படுத்தும்.

அதிக உடல் உடல் சூடு

அதிக உடல் உடல் சூடு, பித்தம்,வயிற்று வலி,நீரழிவும் இணைந்தவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்த அன்பர்கள் முளைந்த வெந்தயம்,வெந்தயக்களி, வெந்தய தோசை,வெந்தயக் கீரை சூப், வெள்ளரி,வெண்பூசணி, இதோடு வெங்காய சாலட், பச்சடி, சூப், பொரியல், சாம்பார் இவைகளில் ஒன்றையோ பலவோ இரவு உணவில் சேர்க்கவும்

ஹைப்போ தைராய்டு

ஹைப்போ தைராய்டு, மெட்டபாலிசம் குறைவாக உள்ளவர்கள்,உடல் பருமன்,ஓபேசிட்டி அதிகரித்தவர்கள் கொள்ளை முளைக்க வைத்து கொள்ளு சுண்டல்,கொள்ளு சூப்,கொள்ளு தோசை,அடை, சப்பாத்தி செய்யலாம். மூட்டுவலி, எலும்பு பலக்குறைவு, தொப்பை சீராகும். சாத்துக்குடி,மாதுளை,திராட்சையை அவ்வப்போது சாப்பிடவும்.

ஹைப்பர் தைராய்டு

ஹைப்பர் தைராய்டு/ உடல் இளைத்தவர்கள் முளை எள் சாப்பிடலாம். எள்ளு லட்டு,கேக்/பர்பி,முந்திரி/பாதாம்/காளிபிளவர்/ தோலுடன் அவித்த உருளை/உளுந்து முளை,பேரீட்சை,பருத்திப்பால்,வள்ளிக்கிழங்கு,கடலை சுண்டல்,பலவகை பயறு சுண்டல்களை அடிக்கடி உணவில் சேர்க்கவும்.

காசநோய்க்கு

காசநோய்க்கு

ஐந்து பூண்டு பற்களை உரித்தெடுத்து 100மிலி பால் 200 மிலி நீர் ஊற்றிக் இலக்கி அடுப்பில் வைத்துக் கொதிக்கவைத்து அது பாதியாக வற்றியதும் இறக்கி இளஞ்சூட்டில் ஒரு நாளைக்கு மூன்றுவேளை அருந்தவும். இவ்வாறு தினசரி செய்து ஒரு மாதம் அருந்தி வர சிறந்த பலன் கிடைக்கும்.

கடும் வயிற்றுவலி,

கடும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு என்றாலும் ஐந்து பூண்டு பற்களை பாலில் தட்டிப்பொட்டு கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் அருந்த சரியாகும்.

Wednesday, February 15, 2017

பெரும்பாடு

பெரும்பாடு என்று சொல்லக்கூடிய அதாவது தொடர்ந்து அதிகமாக ரத்தம் வெளியேறினால் முருங்கைப் பட்டை, மருதம் பட்டை சம அளவு எடுத்து இடித்து கஷாயமாக காலை,மாலை அரை டம்ளர் கஷாயமாகக் கொடுக்கவும். ஒவ்வொரு மாதமும் அதிக ரத்தப்போக்கு இருக்குமானால் அச் சமயத்தில் இக் கஷாயத்தை மூன்று நாட்கள் சாப்பி நிரந்தரமாக இப்பிரச்சனை நிவர்த்தியாகும்.

கற்பமூலிகைகள் (இவை உடலை நெடுநாள் நிலைக்கச் செய்பவை)

கற்பமூலிகைகள் (இவை உடலை நெடுநாள் நிலைக்கச் செய்பவை)

அவுரி, அழுகண்ணி,ஆமிரம்,இருப்பவல்,எட்டி, ஓரிதழ்தாமரை,கடுக்காய்,கருவூமத்தை, கருந்துளசி,கப்புச்சடைச்சி,கருங்கொடிவேலி,கருவேம்பு,கருநெல்லி,கருவீழி,கல்பிரமி, காட்டு மரிக்கொழுந்து, கிளிமூக்கு மாங்காய்,கீழாநெல்லி, குரோசாணி,குழலாதொண்டை, சங்கநிறக்கரந்தை, சதுரக்கள்ளி,சர்கரை வேம்பு, சங்கத்தூதுவளை, சிவனார் வேம்பு,செங்கொடிவேலி, சாயாவிருட்சம்,செழுமலர்க்கொண்றை,செந்திராய்,கொடிநெல்லி,பலாசு,பிரமி,பொற்கையான்,பொன்னூமத்தை, பெருமலர்க்கொன்றை, எருமைகணைச்சான்,சுரபிசித்தி,நெல்லிமுள்ளி,நாறுகரந்தை, நெபத்திகை, விருத்தி,விட்டுணுகரந்தை, வெள்ளை தூதுளை,வெள்ளை விட்டுணு கரந்தை, சூரியகாந்திப்பூ, மிளகு, வெள்ளை ஆவிரை,மாஞ்சரோகணி, தில்லை, சிவப்புக்கள்ளி,வெண்டாமரை,வில்வப்பூ, மருதோன்றி, வெண்புரசு,பொற்கொன்றை, வெள்ளை நீர்முள்ளி, வெள்ளெருக்கு, வெண்கரந்தை, சேங்கொட்டை, சீந்தில்,வேம்பு,வெள்ளை மந்தாரை,செந்நாயுருவி, செங்கரந்தை,விடத்தேர்,நெல்லிப்பூ,பொன்னாங்கண்ணி,தொழுகண்ணி, நாகதாளி,தாசசின்னிமூலி,சூதபாடாணம்,கற்பூரசிலாசத்து,அமுரியுப்பு, ஈரற்கற்சத்து, சவர்காரம் முதலியனவாகும்.

வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு. இதுக்கு அடிப்படையான மூலிகைகள்

   வெண்படைகளுக்கு வெளிமருந்து, உள்மருந்து இரண்டும் உண்டு. இதுக்கு அடிப்படையான மூலிகைகள் கார்போக அரிசி, கருஞ்சீரகம், நீரடிமுத்து, சேராங்கொட்டை, பறங்கிப்பட்டை போன்றவை. இவற்றை மாத்திரை வடிவிலும், ரசாயனம், சூரணமாகவும் கிடைக்கும் வெளிமருந்தாக தைலம், பசை உண்டு.
மருந்து சாப்பிடும்போது உணவில் பத்தியம் உண்டு. புளிப்பு சுவையுள்ள பழங்கள், உணவுகள் தவிர்க்க வேண்டும். மாதுளை, அத்தி, சப்போட்டா, நாவல்பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். மீன், மாமிசம் தவிர்க்கவேண்டும். முளைகட்டிய தானியங்கள், கீரைகள், மோர் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒருமுறை மூலிகை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!

*  வெந்தயம்.    -  250gm
*  ஓமம்               -  100gm
*  கருஞ்சீரகம்  -  50gm

* மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது.

👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

👉 இருதயம் சீராக       இயங்குகிறது.

👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

👉 கண் பார்வை
தெளிவடைகிறது.

👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

👉மலச்சிக்கல்  நீங்குகிறது.

👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

👉  நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

👍  இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

Tuesday, February 7, 2017

மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம் !!

மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம் !!
கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி ஒரு  நாளைக்கு இரண்டு வேளைன்னு பத்து  நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வாருங்கள். மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும். அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வந்தால் மூலம் இனிமேல் உங்களுக்கு வரவே வராது

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க..

1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது.

2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க .

3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும்.

4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக.

5. உணவில் முடக்கறுத்தான், அரைக்கீரை, வாதநாராயணன் கீரை சேர்க்கவும்.

6. உருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்குச் சாற்றையும் அருந்தலாம்.

7. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

8. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒருநாளைக்கு இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

9. வெதுவெதுப் பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தைப் போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

10. ஒரு தேக்கரண்டி குதிரை மசால் என்னும் கால் நடை தீவன விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று முறை அருந்தலாம்.

11. இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
பிறகு மூன்று வாரங்கள் இடவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்கள் குடிக்கவும்.

12. ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை இரண்டு பூண்டுப் பற்களுடன் வேகவைத்து நாளொன்றுக்கு இருமுறை சாப்பிடுக.                      

சிறுநீரக கல் எப்படி உருவாகிறது?
நாம் தினமும் குடிக்கும் தண்ணீரில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரியா என பலவகையான உப்புகள் உள்ளன. இவை நாம் சாப்பிடும் உணவு வகைகளிலும் உள்ளன.

சாதாரணமாக இவ்வுப்புகள் சிறுநீரில் வெளியேறிடும். சில சமயம் இவற்றின் அளவு எல்லை தாண்டும் போது, இவை சிறுநீரில் முழுமையாக வெளியேறாமல் சிறுநீர் பாதையில் தங்கும். சிறுநீரகம் சிறுநீரகப்பை இவற்றை இணைக்கும் குழாய்கள் போன்றவற்றில் உப்புகள் படிகம் போல் படிந்து, சிறுக சிறுக சேர்ந்து, கல் போல் பெரிதாகும். இதுதான் சிறுநீரகக்கல்.

சிறுநீரகப்பையின்  புராஸ்டேட் வீங்கிக் கொள்ளும் போது, சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுவதாலும் சிறுநீரகக்கல் உண்டாகலாம். அடிக்கடி சிறுநீர் பாதையில் அழற்சி ஏற்படுவோருக்கும் சிறுநீரகக்கல் தோன்றும். பேராதைராய்டு எனும் ஹார்மோன்சுரப்பியின் மிகையான பணியினால் கால்சியத்தின் அளவு அதிகமாகி சிறுநீரகக்கல் தோன்றும்.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!

வாயுத் தொல்லை ஏற்படக் காரணமும் அதற்கான தீர்வும் !!

வாயுத் தொல்லை ஏற்படாத மனிதர்களே இல்லை என சொல்லலாம் ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த பிரச்சனை சாதரணமாக ஏற்படக்கூடியது.  சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.  ஒருவர் ஒரு நாளைக்கு ஆசன வாய் வழியா 14 முறை வாயுவை வெளியேத்தறது சாதாரணமானது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வாயுத் தொல்லை ஏற்பட காரணம் :

உணவு செரிமானமாகி, ஒரு பகுதி வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும். அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும். மிச்ச மீதி உணவோட, அந்த பாக்டீரியா சேர்ந்து, உணவு புளிச்சு, வாயுவா மாறுது. இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா, அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறியா எடுத்துக்கலாம். அதை சாப்பாடு மூலமா சரி செய்யலாம்.

வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம். மொத்தம் மூன்று வகையாக வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளைப் பிரிக்கலாம்.

அளவுக்கதிகமாக வாயுவை உற்பத்தி செய்கிற உணவுகள்

பால் மற்றும் பால் பொருள்கள், பிராக்கோலி, காலிஃப்ளவர், குட்டி முட்டைகோஸ், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், சோயா பீன்ஸ், டர்னிப், சோளம், உருளைக்கிழங்கு, ஓட்ஸ், கோதுமை.......

மிதமான வாயுவை உற்பத்தி பண்ற உணவுகள்

ஆப்பிள், வாழைப்பழம், கேரட், கத்தரிக்காய், செலரி மற்றும் பிரெட்............

குறைந்த வாயுவை வெளியேற்றும் உணவுகள்

முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய், அரிசி..........

வாயுத் தொல்லையிலிருந்து தப்பிக்க என்னதான் வழி?

சமைத்த உணவை சாப்பிடும் போது, கூடவே பச்சைக் காய்கறி, பழங்களை சாப்பிடக் கூடாது. பழம், பச்சைக் காய்கறி சாப்பிட்டு, சிறிது இடைவெளி விட்டு, பிறகு சமைச்ச உணவை சாப்பிடுவது நல்லது.
காய்கறி, பழங்களில் நார்ச்சத்து அதிகம். அது சமைத்த உணவோட சேர்ந்து சீக்கிரம் செரிச்சு, புளிச்சு, வாயுவை உண்டாக்கும்.

சில பேர் அவசரம் அவசரமா சாப்பாட்டை விழுங்குவாங்க, அப்ப காற்றையும் சேர்த்து விழுங்கறதும் வாயுவுக்கான காரணம்.

மலச்சிக்கல் இன்னொரு காரணம், தினம் காலை எழுந்ததும் மலம் கழிக்கிறதைப் பழக்கப்படுத்திக்கிறவங்களுக்கு வாயுத் தொல்லை குறையும்.

வாயுவுக்கு எதிரா போராடுற குணம் கொண்ட உணவுகள் பூண்டு, இஞ்சி, சோம்பு, ஓமம். வாயு அதிகம்னு தெரிஞ்ச உணவுகள்ல இதையெல்லாம் சேர்த்து சமைக்கிறப்ப, வாயு பிரச்சினை குறையும்.

கிழங்கு சாப்பிட்டா முதுகு பிடிச்சிருச்சு, கடலை சாப்பிட்டா கை, கால் பிடிச்சிருச்சு, வாயுனு சொல்றவங்களை நிறைய பார்க்கலாம். உண்மைல வாயுங்கிறது வயித்துப்பகுதில மட்டும்தான் இருக்கும். முதுகுப் பிடிப்பு மாதிரி மத்த பிரச்சினைகளுக்கு காரணம் வேற ஏதாவது இருக்கலாம்.

சுண்டல் சாப்பிட்டா வாயுப் பிரச்சினை வரும். சுண்டலுக்கான தானியத்தை ஊற வச்சிட்டு, அந்தத் தண்ணியை வடிச்சு, வேற தண்ணி மாத்தி, கொஞ்சம் இஞ்சி சேர்த்து பிரஷர் குக் செய்யலாம். இல்லைனா சுண்டலுக்கான கடலையை வெறும் கடாய்ல லேசா வறுத்துட்டு, இளம் சூடான தண்ணீர் விட்டு ஊற வச்சு, வடிச்சு வேக வச்சும் செய்யலாம். முக்கியமா அதோட மேல் தோல் உடையற அளவுக்கு வேக வைக்கணும்.

பழகாத எந்தப் புது உணவையும் ஒரே நாள்ளில் நிறைய சாப்பிடாம, கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்றதும் நல்லது. பார்ட்டி, விசேஷம்னு முதல்நாள் நிறைய சாப்பிட்டவங்களுக்கு, அடுத்த நாள் வாயுப் பிரச்சினை அதிகமாக இருக்கும். பசியிருக்காது. அந்த நேரத்துல இஞ்சி முரபா, இஞ்சி சிரப், இஞ்சி சூரணம், இஞ்சி காபினு எதையாவது எடுத்துக்கிறது உடனடி பலன் தரும்.