இந்திய சமையல் அறையில் உள்ள ஒவ்வொரு பொருளும் மூலிகைகள். மஞ்சள், சீரகம், மிளகு என ஒவ்வொன்றும் மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஒரு சில உணவுகளுக்கு மட்டும் பயன்படும் கிராம்பு, ஏலக்காய், பட்டை போன்றவையும் மருந்துகளே.
பிரியாணி போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் பட்டையின் ஆன்டிபயாடிக், ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டிஆக்ஸிடண்ட் தன்மை காரணமாக இதை சீன மருத்துவத்தில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இவை திசுக்கள் குளுக்கோஸ் பயன்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இது தவிர இதய நோய் வருவதற்கான வாய்ப்பையும் பட்டை குறைக்கிறது. தினமும் ஒரு கிராம் அல்லது அரை டீஸ்பூன் அளவுக்கு பட்டையை உட்கொண்டு வந்தால் சர்க்கரை அளவு குறைவதுடன், கெட்ட கொழுப்பான எல்.டி.எல் மற்றும் டிரைகிளரைடு அளவு குறையும். மேலும், எச்.டி.எல் எனப்படும் நல்ல கொழுப்பு அளவு அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் குறைந்த நேரத்தில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மை இதற்கு உள்ளது என்று சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஒரு துண்டு பட்டையை எடுத்த ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற விட வேண்டும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும். அப்படி செய்து வந்தால் சர்க்கரை, கொலஸ்டிரால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
பட்டை தேநீர் தயாரிக்க ஒரு துண்டு பட்டை, ஒரு கப் வெந்நீர், சிறிதளவு தேநீர் பொடி அல்லது க்ரீன் டீ பாக்கெட், தேவை எனில் சிறிது தேன்.
கப் ஒன்றில் பட்டையைப் போட்டு கொதிக்கும் வெந்நீரை அதில் ஊற்ற வேண்டும். அதில் டீ பேக், தேன் விட்டு நன்கு கலக்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் மாலை நேரத்தில் தேன் இல்லாமல் இந்த தேநீரை டிரை செய்து பார்க்கலாம்!
No comments:
Post a Comment