கால் வீக்கம் ஏற்பட ஒரு முதன்மை காரணமாக இருப்பது சிறுநீரகங்களில் ஏற்படும் கோளாறுகள் ஆகும். இப்பிரச்னையால் அவதியுறுபவர்களுக்கு அவ்வப்போது கால்களில் வீக்கம் ஏற்படும். வயதின் மூப்பின் காரணமாகவும் சிலருக்கு கால் வீக்கம் ஏற்படும்.
ஆவாரம் பூ, மரப்பட்டை போன்றவை சிறந்த மருத்துவ குணங்களை கொண்டவையாகும். இந்த ஆவாரம் பட்டையுடன் சுக்கு சிறிது சேர்த்து, தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்க கால் வீக்கம் குணமாகும்.
ஓமத்தை தண்ணீர் விட்டு அரைத்து, சூடான நீரில் கலந்து வீக்கமுள்ள இடங்களில் பற்று போட்டு வர கால் வீக்கம் குணமாகும். கால் வீக்கம் குறைய வெற்றிலை ஒரு வெற்றிலையை எடுத்து அதில் விளக்கெண்ணெய் தடவி, நெய் தீபத்தின் தணலில் காட்டி, கால் வீக்கம் உள்ள இடங்களில் அவ்வப்போது வைத்து வர கால் வீக்கம் குறையும்.
வெறும் வாணலியை சூடேற்றி ஒரு வெள்ளை துணியில் சிறிது மஞ்சளை தடவி, அந்த வாணலியில் வைத்து வீக்கமுள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர சிறந்த நிவாரணம் கிடைக்கும். உடற்பயிற்சி நீண்ட நேரம் ஒரே இடத்தில் உடலியக்கமின்றி இருப்பதாலும் கால்களில் வீக்கம் ஏற்படும். எனவே அவ்வப்போது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
பலருக்கு அதிக நேரம் நின்று கொண்டே பார்க்க வேண்டிய வேலை இருக்கும். கால்களை நகர்த்தாது, அசைக்காது, நடக்காது தொடர்ந்து ஓரிடத்தில் நின்று கொண்டே வேலை பார்க்கும் பொழுது கால்களில் ரத்த ஓட்டத்தின் வேகம் குறைகின்றது. இதனால் பாதம், கணுக்கால் இவற்றில் நீர் தேக்கம் ஏற்படுகின்றது.
அதே போன்று கால்களை வெகு நேரம் தொங்க போட்டவாறு உட்காருபவர்களுக்கும் இதே பாதிப்பு ஏற்படும். இதனை தவிர்க்க வேண்டியது அவரவர் கையில்தான் உள்ளது. 30 நிமிடங்களுக்கொருமுறை 5 நிமிடங்கள் நடக்க வேண்டும். அப்பொழுது தான் ரத்த ஓட்டம் சீராய் இருக்கும். இதனை முறையாக செய்யாவிட்டால் பல பாதிப்புகள் ஏற்படும்.
கால் வீக்கம் குறைய என்ன செய்ய வேண்டும்..? swelling of legs home remedies
ReplyDelete