Thursday, May 27, 2021

உச்சி முதல் பாதம் வரை அனைத்து நோய்களை போக்கும் சின்ன வெங்காயம்!


உச்சி முதல் பாதம் வரை அனைத்து நோய்களை போக்கும் சின்ன வெங்காயம்!

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும். சின்ன வெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான காயாகும்.

முதன் முதலில் மத்திய ஆசியாவில் வெங்காயம் தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும் வெங்காயம் காட்டுப் பயிராக, உலகின் மூலைமுடுக்கெல்லாம் முளைத்துள்ளது. இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி, மம்மியாக்குவதற்கும் வெங்காயத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் எகிப்தியர்கள்.

இக்காயானது தமிழ்நாட்டில் வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இக்காயின் தனிப்பட்ட சுவையின் காரணமாக சமையலில் இது முக்கிய இடத்தினைப் பெறுகிறது. சின்ன வெங்காயமானது லேசான இனிப்பு கலந்த கார சுவையினைப் பெற்றுள்ளது.

உச்சி முதல் பாதம் வரை உடலுக்கு பலவிதமானப் பயன்களை வழங்கும் வெங்காயத்தை பதமாக சாகுபடி செய்வதால், விவசாயிகள் நல்ல லாபத்தைப் பெற முடியும்.

பாம்பு கடிக்கு :

பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

சிறுநீர் கடுப்பு :

ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

இருமல் குறைய :

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

பல் வலி குறைய :

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

உடல் பலம்பெற :

வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

மூட்டு வலிக்கு :

வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

இதயம் பலமாக :

பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்துசாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோய்க்கு :

மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர் மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.

முடி பிரச்சினைக்கு :

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால் காலப்போக்கில் முடி முளைக்கும். ஆண்களுக்கு மீசை பகுதியில் இப்படி சொட்டை இருந்தாலும், இதே முறையை செய்யலாம்.

தேள் கடிக்கு :

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது.

மாரடைப்பு நோயாளிகளுக்கு :

மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment