Sunday, June 6, 2021

முடி கொட்டவே கூடாதா, எளிமையா கிடைக்கும் இந்த மூலிகைகள் இப்படி பயன்படுத்துங்க! ஆண்களும்


*முடி கொட்டவே கூடாதா, எளிமையா கிடைக்கும் இந்த மூலிகைகள் இப்படி பயன்படுத்துங்க! ஆண்களும்!*

முடி உதிர்தல் என்பது அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்சனை தான். முடி உதிர்தலை தடுக்க பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும் அவை எல்லாம் தற்காலிகமானவை. ஆனால் இவை சமயங்களில் பக்க விளைவுகளையும் உண்டாக்குகின்றன.

முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்க விரும்பினால் அதை முன்கூட்டியே தடுப்பது தான் பாதுகாப்பான வழி. அதற்கு மூலிகைகள் உதவக்கூடும். முடி உதிர்தலை தடுக்கவும் முடி வளர்ச்சியை தூண்டவும் மூலிகைகள் பல உண்டு. இவை தான் ஹேர் டானிக் ஆக தயாரிக்கப்படுகின்றன. வீட்டில் சில மூலிகைகள் பயன்படுத்தி உங்கள் முடி உதிர்தலை தவிர்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

மருதாணி

மருதாணி முக்கியமான இயற்கை சாயத்தை கொண்ட மூலிகை. இது பூஞ்சை காளான் பண்புகள் மற்றும் பொடுகு தடுக்க சிகிச்சையளிக்கப்படுகிறது. மருதாணி உச்சந்தலையின் பி.ஹெச் அளவை சமன்படுத்தலாம்.

கூந்தல் செழித்து அடர்த்தியா நீளமா வளர ஆயுர்வேதம் சொல்லும் மூலிகை, எந்த பிரச்சனைக்கு எப்படி பயன்படுத்தணும்!

மருதாணியை மாதம் ஒரு முறை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டி நரைப்பதை தடுக்க செய்கின்றன. மருதாணியை மாதம் ஒரு முறை பயன்படுத்துங்கள்.

​சிகைக்காய்

சிகைக்காய் முடியை சுத்தப்படுத்தக்கூடிய பொருள் ஆகும். இது பாரம்பரியமாகவே கூந்தல் சுத்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. உலர்ந்த சிகைக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் ஆக்கி உச்சந்தலையில் தடவி வருவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செய்யும்.

முடி இழைகளை பலமாக்கும். உச்சந்தலையின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். வாரம் இருமுறை கூந்தலுக்கு சிகைக்காய் பயன்படுத்துங்கள்.

​நெல்லிக்காய்

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் உடலில் கொலாஜன் சுரப்பை அதிகரிக்கும். கொலாஜன் சருமத்துக்கு மட்டுமல்ல கூந்தலின் வளர்ச்சிக்கும் ஏற்றது. இது முடி வளர்ச்சியை ஆரோக்கியமாக தூண்டும். முடிக்கு வேண்டிய வலுவை கொடுக்கும். முடி பலமாக மாற்றுவதால் முடி உதிர்வது நிற்கும். கூடுதலாக கூந்தலுக்கு பளபளப்பு கொடுக்கும்.

நெல்லிக்காய் விழுதாக்கி மருதாணியுடன் கலந்து பயன்படுத்தலாம். சிகைக்காயுடன் கலந்து பயன்படுத்தலாம். நெல்லிக்காய் எண்ணெய் தடவி வரலாம்.

​செம்பருத்தி

செம்பருத்தி மலர்களில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இது உச்சந்தலையில் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்றன. செம்பருத்தி பூவில் இருக்கும் ஹைட்ரோகோஹாலிக் சாறு முடி வளர்ச்சியை தூண்டும் ஆற்றலை கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

செம்பருத்தி பூவை அரைத்து கூந்தலில் தடவி குளிக்கலாம். செம்பருத்தி தைலம் காய்ச்சி கூந்தலுக்கு பயன்படுத்தலாம். செம்பருத்தி பூவை காயவைத்து சிகைக்காயில் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.

​கற்றாழை

கற்றாழை அழகுக்கு பயன்படுத்தபடும் முக்கியமான பொருள். சருமத்துக்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்க கூடியது. கற்றாழையில் இருக்கும் புரோட்டியோலிடிக் என்சைம்கள் உள்ளன. இறந்த செல்களை உச்சந்தலையில் இருந்து அகற்றி முடி வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. இது உச்சந்தலையில் பி.ஹெச் அளவை மேம்படுத்துகிறது. உச்சந்தலை சருமத்தை ஈரப்பதமாக்குகிறது.

உச்சந்தலை வீக்கத்தை தணிக்கவும் பொடுகுக்கு சிகிச்சையளிக்கவும் இதை பயன்படுத்தலாம். கூந்தல் அலசி எடுத்த பிறகு கற்றாழை ஜெல் தடவி விடலாம். கற்றாழையின் உள் இருக்கும் ஜெல் போன்ற பகுதியை கூந்தலுக்கு தடவும் போது கூந்தல் பளபளப்பாக இருக்கும். முடி உதிர்வது தடுக்கும்.

வெந்தயம்

முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் வெந்தயம் விதைகள் முக்கியமானவை. இந்த விதைகளில் பைட்டோஎஸ்ட்ரொஜன்கள் உள்ளன. முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிக்கும் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இது டி.ஹெச்.டி செயல்பாட்டை தடுக்கின்றன. முடி உதிர்தல் அல்லது வழுக்கை விழுவதை தடுக்க செய்கின்றன.

ஆண்கள்: முடி அடர்த்தியா அழகா இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க, வழுக்கை இல்லாம அழகான முடி கிடைக்கும்!

வெந்தயத்தை சீயக்காயில் சேர்த்து அரைக்கலாம். வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் ஆக்கி கூந்தலுக்கு பயன்படுத்தலாம். வெந்தயத்தை பொடியாக்கி மருதாணியுடன் சீயக்காயுடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment