Sunday, June 6, 2021

நகச் சொத்தைக்கு வீட்டு மருத்துவம்




*🍒நகச் சொத்தைக்கு வீட்டு மருத்துவம்🍒*

🍒பூஞ்சையை அழிக்கும் மருத்துவத்தை உபயோகித்து நகச் சொத்தையிலிருந்து மீளலாம்.

*கற்பூரவல்லி எண்ணெய்*

🍒இந்த எண்ணெயை பாதிப்படைந்த இடத்தில் 5 சொட்டு விட்டு தேய்த்து 5 முதல் 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். இது ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது.

*பூண்டு*

🍒சிறிது பூண்டு பற்களை எடுத்து நசுக்கி மிதமான சூடுள்ள தண்ணீரில் சேர்த்துக் கலந்து இந்த தண்ணீரில் காலை ஊற வைக்க வேண்டும். கால் சரியாகும் வரை அதனை தொடர்ந்து செய்து வாருங்கள். இதில், பூஞ்சைத் தொற்று பண்புகள் அதிகமாக உள்ளது. 

*மஞ்சள் தூள்*

🍒மஞ்சள் தூள் பொதுவாக ஒரு கிருமிநாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இது கால் சொத்தையை எளிதில் சரி செய்துவிடும். ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் சிறிது எலுமிச்சை சாறு  சேர்த்துக் கலந்து காலில் தடவி 3 முதல் 4 மணி நேரம் வைத்திருந்து பின்னர் கழுவி விட வேண்டும். 

*வேப்பிலை*

🍒ஒரு கைப்பிடி வேப்பிலை சிறு துண்டு மஞ்சள் கிழங்கு சேர்த்து பேஸ்டு போல் அரைத்து சொத்தை வந்த கால் விரலில் மருதாணி போல் பற்றுபோட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர் கழுவினால் நக சொத்தை சரியாகி விடும். வேப்பிலையும் மஞ்சளும்  பல்வேறு நோய் தொற்றுகளை போக்கும் பண்பு உள்ளது.   

*வெங்காயம்*

🍒வெங்காயத்தை நறுக்கி நக சொத்தை உள்ள இடத்தில் 5 நிமிடம் தடவ வேண்டும். பின்னர், 20 நிமிடம் கழித்து அதை கழுவி விட வேண்டும். வெங்காயத்தில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கால் நக சொத்தையை போக்கும்.

*தேங்காய் எண்ணெய் (செக்கு எண்ணெய்)*

🍒தேங்காய் எண்ணெய் பூஞ்சைகளை அழித்து நோய் தொற்றுகளை அகற்றிவிடும். சிறிது தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை செய்ய வேண்டும். இது ஒரு எளிய கை வைத்திய முறையாகும்.

🍒நகத்தின் அளவிலோ நிறத்திலோ திடீர் மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் காண்பித்து ஆலோசித்துக்கொள்ளுங்கள்.

*நகத்தை பராமரிக்க உணவுகள்*

🍒பால், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன், முழு தானியங்கள், காய்கறி, கீரைகள், கொட்டைகள், பயறுகள் போன்ற உணவு வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் நகம் ஆரோக்கியமாக வளரும்.

No comments:

Post a Comment