நோயின்றி வாழ்வதற்கு
ஆரோக்கிய அண்ணப்பொடி
தேவையான பொருள்கள்
சுக்கு
மிளகு
சீரகம்
பெருங்காயம்
அரிசித் திப்பிலி
இந்துப்பு
செய்முறை
முற்றின சுக்கை புளித்த தயிரில் ஊறவைத்து மறுநாள் வெயிலில் உலர்த்தி இடித்து சலித்துக் கொள்ளவேண்டும்
மற்ற பொருட்கள் அனைத்தையும் லேசான அனலில் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்
மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் சமஅளவாக பொடி செய்து ஒன்றாக கலந்து கொண்டு இந்த பொடியில் இரண்டு ஸ்பூன் எடுத்து காலை உணவுடன் கலந்து இதில் சிறிது
பசு நெய் ஊற்றி உணவுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள நோய்கள் அனைத்தும் விலகிவிடும்
மேலும் நோய்கள் எப்பொழுதும் உடலில் தோன்றாமல் நம்மை காக்கும்
இந்த மூலிகை பொடியை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் குறிப்பாக சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும் மேலும் நெஞ்சுவலி விலா எலும்பை பற்றிய குத்தல் வலி போன்ற வலி நோய்கள் விலகும்
இந்த அன்னப் பொடியில் இரண்டுகிராம் எடுத்து தேனுடன் குழைத்து சாப்பிட்டு வர மேல் சுவாசம் நீங்கும் சுவாச அடைப்பு குணமாகும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் விலகும் மூச்சுத்திணறல் குணமாக முக்கியமான மருந்து இது
இன்னொரு எளிய முறை
சுக்கு சீனா கற்கண்டு இவை இரண்டையும் சம அளவாக பொடி செய்து இதில் இரண்டு கிராம் எடுத்து வெந்நீருடன் கலந்து பருகி வந்தால் சுவாச சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்
ஒரு முக்கிய குறிப்பு
மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்கும் நுரையீரல் எப்போதும் பலமுடன் இயங்குவதற்கும் காலை எழுந்தவுடன் 21 முறை தினந்தோறும் தோப்புக்கரணம் போட்டு வந்தால் எந்த வயதிலும் மூச்சுத்திணறல் எனும் நோய் வரவே வராது
வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment