அன்றைய காலங்களில் சிறு தலைவலி என்றால் கூட வீட்டில் இருக்கும் மருத்துவ பொருட்களை தான் வைத்தியம் செய்தனர்.
நாம் என்னதான் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்கவழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை.
அந்தவகையில் உடலில் ஏற்படும் சிறுசிறு நோய்களுக்கு எப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு குணமாக்கலாம் என பார்ப்போம்.
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.
பசி உண்டாக புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுபுண் குணமாகும்.
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும். மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும்.
குடல் புண் ஆற வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.
நாக்கில் புண் ஆற அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.
No comments:
Post a Comment