Saturday, June 12, 2021

அரு நெல்லி (அரை நெல்லி)யின் மருத்துவ‌ பயன்கள் நீரிழிவு நோய்க்கு நெல்லிக்காய்.

சக்கரை நோய்க்கு சிறந்த மருந்து அரு நெல்லி (அரை நெல்லி)யின் மருத்துவ‌ பயன்கள் நீரிழிவு நோய்க்கு நெல்லிக்காய். 

 சக்கரை நோய்க்கு சிறந்த மருந்து அரை நெல்லிக்காய் அல்லது அரிநெல்லிக்காய் 


insulin surakka arainellikai payangal
அரு நெல்லி (அரை நெல்லி)யின் மருத்துவ‌ பயன்கள்: “பிலந்தாசியா” குடும்பத்தைச் சேர்ந்த உண்ணக்கூடிய மஞ்சள் நிறமான சதைப்பற்றுள்ள் பழங்களை தரும்; மரமான அருநெல்லி என்று சொன்னால், அதன் புளிப்பு சுவை நம் நினைவிற்கு வரும் வேளை பொதுவாக கேட்போர்க்கு வாயில் எச்சில் ஊறும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நெல்லிக்காய்ச் சாறுடன் பாகற்காய்சாறைச் கலந்து உட்கொண்டு வரும்போது, அது கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பினை வேகப்படுத்தி நீரிழிவு நோய் ஏற்படுவதனைத் தடுப்பதுடன், உடல் சதை பலப்படும்.

மேலும், நெல்லிக்காய் நாவல்பழம் மற்றும் பாவற்காய் என்பனவற்றினை பொடியாக்கி ஒவ்வொரு கரண்டி அதாவது சம அளவு சேர்த்து உட்கொள்ளும் போது நீரிழிவு நோய் வாழ்நாளில் ஒருபோதும் ஏற்படாது. நன்கு காய்ந்த நெல்லிக்காய் மற்றும் சிறிதளவான வெல்லம் இரண்டையும் சேர்த்து உட்கொண்டுவரும் போது முடக்கு வியாதியில் இருந்து சுகம் பெற முடியும்.

இதனைவிட, இரண்டு நெல்லிக்காய்களை நல்ல தூய நீரில்; போட்டு ஊற வைத்து அவ்வாறு தண்ணீரினால் கண்களை நன்குஅகல விரித்து கழுவும் போது அது சிறந்த பலனைத் தரும்.

அரை நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்:Phyllanthus acidus
பொதுவாக நாம்மில் அதிகமானோரால் உப்பு மற்றும் மிளகாய்தூள் கலந்து நொறுக்குத் தீனியாக விரும்பி உண்ணப்படும் இக்காயானது சத்து மிக்கதொன்றாகும். இங்கு, நாம் உட்கொண்ட உணவானது விரைவாக நன்கு சமிபாடடைவதற்கு அருநெல்லியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து என்பன உதவுகின்றன.

அதாவது, இக்காயிலுள்ள நார்ச்சத்தானது குடலிலுள்ள விசத் தன்மையானக கழிவுகளை முழுமையாக இலகுவாக வெளியகற்றுவதுடன், மலச்சிக்கல், மூலநோய் உள்ளிட்ட பல்நோய்களுக்கு இக்காய் தீர்வாகின்ற வகையில் இது ஒரு மலமிளக்கியாகச் செயல்படுகின்றது.

அருநெல்லிக்காயினைப் பயன்படுத்தி பல்வேறுபட்ட இனிப்புகள், ஜாம்கள்;, கேக்குகள், விதவிதமான ஊறுகாய்கள், குளிர்பானங்கள் மற்றும் சாலட்டுகள் போன்ற பல்வேறுபட்ட சத்துமிக்கதும் சுவையானதுமான உணவுப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

நெல்லிக்காயும் கண்ணும் என்று நோக்கினால், இது தெளிவான கண்பார்வை வழங்குவதில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறப்பான மருந்தாக காணப்படுவதுடன், கண்கள் சிவப்பாகி புண் ஏற்படுதல் போன்ற நோய்களிலிருந்து சுகமளிக்கின்றன.

மேலும், நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு தூளாக்கி, அப்பொடியினை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்த பின்னர் அதனை குளிர வைத்து தலைக்குத் தடவும் போது, நன்கு பளபளப்பான அடர்த்தியான கருமையான கூந்தலைப் பெறமுடியும்.

தரமான தலைமுடிக்கான பூச்சுக்களில் நெல்லிக்காயின் விதைகளையினையே அதிகம் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறாக பல்வேறுபட்ட தரமான அழகு சாதனப் பொருள்களினைத் தயாரிப்பதில் நெல்லிக் காய் தவிர்க்க முடியாத வகையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

அருநெல்லி மற்றும் நெல்லி ஆகிய இரண்டினையும் சமமான அளவு எடுத்துச் உட்கொண்டு வரும்போது மிகத்துல்லியமான கண்பார்வை கிடைப்பதுடன், உடனடியாக வாந்தியினைக் கட்டுப்படுத்துவதற்கு அருநெல்லிச் சாற்றில் சீரகம், நெல் பொரி மற்றும் திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து, கஷாயம் தயாரித்து, அக்கசாயத்துடன் சர்க்கரை சேர்த்து பருகிவருதல் அவசியமாகும்.

அருநெல்லி பயன்கள்
அலங்காரத்திற்காகவும் வேறு பல தேவைகளுக்காகவும் பெரும்பாலும் வீட்டுத்தோட்டற்களிலும், முற்றத்திலும் வளர்க்கப்படுகிற அருநெல்லியானது சளி மற்றும் இருமல் உள்ளிட்ட பல்வேறுபட்ட நோய்த் தொற்றுகளிலிருந்து எம்மை பாதுகாப்பதற்கான நோய் எதிர்ப்பு சக்தியினை வழங்கக்கூடிய விட்டமின் சி இனை அதிகமாகக் கொண்டுள்ளது என்பது யாராலும் மறுக்கப்பட முடியாத ஒரு உண்மையாகும். சராசரியாக ஒரு நெல்லிக்காயில் 8.75 மில்லி கிராம் வைட்டமின் சி மற்றும் தாதுப்புக்கள் இரும்பு சத்து போன்றனவும் கொட்டிக்கிடக்கின்றன..

என்றும் இளமையான தோற்த்தில் வாழ வழிவகுக்கக் கூடிய தன்மை இந்நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சாதாரண பாமரர் முதல் நன்கு கற்றுத் தேர்ந்த சித்தர்கள் வரை அனைவரும் அறிவார்கள். நவீன ஆராய்ச்சி மூலம் பெறப்பட்ட முடிவுகள் இந்த உண்மைக்கு மேலும் வலுவூட்டும் வகையில் உள்ளன.

ஃபில்லந்தஸ் அசிடஸ் என்ற அறிவியல் பெயரினால் அழைக்கப்படும் அருநெல்லியானது ஃபிலந்தசியா என்ற தாவரக் குடும்பத்தைச் சோர்ந்தது. சின்ன நெல்லிக்காய், அரிநெல்லிக்காய் என்று அழைக்கப்படும் இக்காயிலுள்ள விட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் சருமத்தின் அழகினைப் பாதுகாக்கின்றன.

அதாவது, விட்டமின் சி அதிகம் கொண்ட உணவினை உட்கொள்ளும்போது சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும், தூய்மையானதாகவும் காணப்படுகின்றதுடன், பருக்கள் மற்றும் வரண்ட சருமம் போன்ற பல்வேறுபட்ட சருமப் பிரச்சினைகளுக்கும் இக்காய் ஒருநல்ல தீர்வாக அமைகின்றது.

அருநெல்லியில் கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ் மற்றும் சாம்பல் சத்து ஆகிய தாதுஉப்புக்களும், விட்டமின் சி, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்) போன்றனவும், புரதச்சத்து, நார்ச்சத்து, நீர்ச்சத்து, கரோடின்கள் ஆகியனவும் உள்ளன.

வெள்ளைப்படுதல் பிரச்சினையிலிருந்து குணம்பெறுவதற்கு அருநெல்லி, பச்சை திராட்சை, வெள்ளை வெங்காயம் ஆகியனவற்றில்; தலா 20 கிராம் எடுத்துச் சாறு பிளிந்து, அச்சாற்றுடன் படிகார பஸ்பத்தை (ஒரு கிராம்) அளவுக்குக் கலந்து பருகுதல் நல்லம்.


அருநெல்லி தொக்கு, சாதம், ஊறுகாய், ரசம்
வலுவான எலும்புகளைப் பெறுவதற்கு அருநெல்லியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்தல் அவசியம். அதாவது, அருநெல்லிக்காயில் இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகளவு உளளதனால், இக்காயினை உண்ணும் போது எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதோடு அவை வலுப்பெறுகின்றன.

அருநெல்லி இலையில் நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், பிளவனாய்டுகள், சபோனின், டானின்கள், பாலிபீனால்கள், புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியன உள்ளதனால், சதைப்பிடிப்பான உடலின் மேலதிக நிறையினைக் குறைத்து நன்கு மெலிந்த உடலமைப்பினைப் பெறுவதற்கு உதவுகின்றது.

நெல்லிக்கனியில் ஆரஞ்சு பழத்தினை விட 20 மடங்கு அதிகமான வைட்டமின் சி, ஆப்பிளை விட 3 மடங்கு புரதம், 160 மடங்கு அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன. இந்தவகையில், தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்கொதிப்பு போன்ற நோய்களிலிருந்து குணம் பெறுவதற்கு நெல்லிவற்றல், பச்சைபயறு என்பன தலா 20 கிராம் எடுத்து, அவற்றினை 1 லிட்டர் அளவான நீரில் நன்கு கொதிக்க வைத்து 200 மி.லி.ராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்துதல் வேண்டும்.

மஞ்சள் காமாலை நீங்குவதற்கு அரைத்த அருநெல்லிக்காயை, மோரில் நெல்லிக்காய் அளவு கலந்து ஐந்து நாட்கள் பருகுதல் வேண்டும்.

அருநெல்லியின் இலையிலுள்ள சபோனின் சத்தானது குடலானது உடலிலுள்ள மேலதிக கொமுப்பினை உறிஞ்சுவதைத் தடைசெய்து உடலின் தேவையற்ற நிறை குறைப்பிற்கு பங்களிக்கின்றது.

நன்கு சுத்தம் செய்து கொட்டைகள் நீக்கிய அருநெல்லி, வெந்தயம், மிளகாய்.

முதலில் வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு இடவும். கடுகு வெடித்தவுடன், அருநெல்லியை இட்டு நன்கு வதக்கவும். நன்கு வதங்கிய பின்னர்;, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய மிளகாய், வெந்தயம் மற்றும் பெருங்காயம் ஆகியனவற்றை நன்றாக கலக்கவும்.

பின்னர் சிறிது இந்துப்பு இட்டு, ஆறியபின்னர், ஒரு தூய பாத்திரத்தில் ஊற்றவும். இக்கலவையை உணவிற்கு தொட்டு உண்டுகொண்டு வரும்போது, நாவூறவைக்கும் இதன் சுவையில், சுவையின்மை பாதிப்புகள் நீங்கி, உணவில் சுவை அறியும் தன்மை மீண்டும் ஏற்பட்டு, பசியின்மை நீங்கி உணவில் நாட்டம் அதிகரிக்கும்.

இக்காயானது அதிகளவு இரும்புச்சத்தையும், விட்டமின் சி-யையும் கொண்டுள்ளதனால், இதனை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உடலினால் அகத்துறிஞ்சப்பட்டு, இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் அனீமியாவிலிருந்து குணம் பெறலாம்.

“அரோசகம்” என்று சித்த மருத்துவத்தினால் அழைக்கப்படும் சுவையின்மை பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு, அருநெல்லி ஊறுகாயினை தினமும் உணவில் சேர்த்துவருதல் வேண்டும்.

தினமும் 30 மில்லி அளவு அருநெல்லிக்காய் சாறு பருகி வந்தால் உள் சூடு, வேக்காடு, குடல் புண் போன்றனவற்றிலிருந்து விடுதலை பெறமுடியும்.

கற்பகாலங்களின் ஆரம்ப மாதங்களில் ஏற்படும் வாந்தி, வயிறு குமட்டுதல் போன்றவற்றிற்கு அருநெல்லி ஊறுகாய் சிறப்பான மருந்தாகும். இதனைவிட, சாதாரணமாக அருநெல்லியுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டு வருதல் மற்றும் அருநெல்லிக்காய் சாற்றில் தேன் கலந்து குடித்து வருதல் போன்றவற்றால் பெண்களின் வாந்தி பாதிப்புகள் விலகும்.

மேலும், அரைத்த அருநெல்லி இலையை (20 கிராம்) புளித்த மோரில் (500 மில்லி) கலந்து குடித்துவந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

அருநெல்லி இரசம்:

முதலில் அருநெல்லிக்காய்களை கொட்டை நீக்கி எடுத்துவிட்டு நன்கு சுத்தம் செய்துவைத்துக் கொள்ளவும். பின்னர் அரை கப் வேகவைத்த துவரம் பருப்பு, சிறிதளவான எலுமிச்சை சாறு, ஒரு தக்காளி, மூன்று பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி, பெருங்காயம், சிறிதளவான மஞ்சள் தூள், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி மற்றும் இந்துப்பு இவற்றை எடுத்துவைத்துக் கொள்ளவும்.

செய்முறை.:

கொட்டை நீக்கிய அருநெல்லியை ஓரளவு அரைத்து, அதனுடன் சிறிதாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, ஒன்றரை கப் நீரில் இட்டு, ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்;. பின்னர் இதில் இஞ்சி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், பெருங்காயம் சிறிதளவான இந்துப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் சில நிமிடங்களில் வேகவைத்த துவரம்பருப்பை கரைத்து கொதிக்கும் இரசத்தில் விடவும்.

நல்ல வாசனையுடன் இரசம் நன்கு கொதித்ததும் அதனை அடுப்பிலிருந்து இறக்கி, அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, பின்னர், தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி, சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதோ நீங்கள் எதிர்பார்த்த சுவையான வாசனைமிக்க, அருநெல்லி இரசம் ரெடி!

நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்: சின்ன நெல்லிக்காய் – 10, எலுமிச்சம்பழம் – 5, வெந்தயம் – 1/2 தேக்கரண்டி, சீரகம் – 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி, கடுகு – 1 தேக்கரண்டி, எண்ணெய் – 1/4 கோப்பை, மிளகாய்த்தூள் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு

செய்முறை: நெல்லிக்காயை சுத்தம் செய்து தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வைத்து வேக வைக்கவும். நெல்லிக்காய் சூடு ஆறியதும், பல் பல்லாக உதிர்த்து கொட்டை நீக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய் தூள், (உப்பு, மிளகாய் அளவை குறைத்துக் கொள்ளவும்.) மஞ்சள் தூள், எலுமிச்சம்பழச் சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

வெந்தயம், சீரகம் ஆகியவற்றை தனியே வறுத்து தூளாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி, கடுகு சேர்த்து தாளித்து, அதனுடன் வெந்தயம் மற்றும் சீரகத்தூளைச் சேர்க்கவும். தாளித்த பொருட்களை ஊறுகாயுடன் சேர்த்து உடனடியாக பரிமாறவும்.

No comments:

Post a Comment