Thursday, June 3, 2021

சர்க்கரை நோய் குணமாக கீரைகள்…!


சர்க்கரை நோய் குணமாக கீரைகள்…!

1. முள்ளங்கிக் கீரைச் சாற்றில் வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அதிகாலை மற்றும் மாலை இருவேளையும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

2. கறிவேப்பிலையை உலர்த்தித் தூளாக்கி தினமும் அதிகாலையில் 1 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

3. வெந்தயக் கீரையை அரைத்து, அதில் மாதுளை ஓடு, வில்வ ஓடு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கலந்து காயவைத்துப் பொடியாக்கித் தினமும் அதிகாலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவு சாப்பிட்டால் நல்ல உடல் வலிமை உண்டாகும். சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

4. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் அதிகாலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

5. பொடுதலைக் கீரையை வெந்தயம் சேர்த்துக் கஷாயமாக்கி அதிகாலை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

No comments:

Post a Comment