Sunday, June 6, 2021

தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல், மூலம், நரம்புத்தளர்ச்சி, வாந்தி போன்ற நோய்களுக்கு அதிமதுரத்தை பயன்படுத்தும் முறைகள்..


*தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல், மூலம், நரம்புத்தளர்ச்சி, வாந்தி போன்ற நோய்களுக்கு அதிமதுரத்தை பயன்படுத்தும் முறைகள்..*

தொண்டை/இருமல்/அதிமதுரம்

அதிமதுரத்தை ஒரு சிறு துண்டு வாயில் போட்டு ஒதுக்கி கொள்ள இருமல் குணமாகும். 

தொண்டை/ வறட்டு இருமல்/அதிமதுரம்

அதிமதுரம் எடுத்து தண்ணியில வெறுமனே ஊறவச்சு காலையில எடுத்து வடிகட்டி சூடாக்கி கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால் இருமல் குணமாகும். 

 தொண்டை/இருமல்/அதிமதுரம்

அதிமதுரம், கடுக்காய், மிளகு ஓர் அளவாக எடுத்து இளவறுப்பாய் வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து கொடுக்க இருமல் குறையும். 

 தொண்டை/இருமல்/அதிமதுரம்

அதிமதுரம், சீரகம் மற்றும் உலர்ந்த திராட்சை ஆகிய மூன்றையும் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். குழந்தைகளுக்கு அதனுடன் சுத்தமான தேன் கலந்து கொடுத்து வந்தால் இருமல் குறையும். 

தொண்டை/இருமல்/அதிமதுரம்

அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி, சிற்றரத்தை வகைக்கு 10 கிராம் எடுத்து நீர்விட்டு அரைத்து ¼ ஆழாக்கு நீரில் கலக்கி பொங்கவிட்டு வடித்து சிறிது தேன் சேர்த்து கொடுக்க இருமல் குறையும். 

தலை/ஒற்றை தலைவலி/அதிமதுரம்

அதிமதுரம், சோம்பு இவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ஒற்றை தலைவலி குறையும். 

தொண்டை/தொண்டை கரகரப்பு, இருமல், மூலம், நரம்புத்தளர்ச்சி/அதிமதுரம் பொடி

அதிமதுரப்பொடி தொண்டை கரகரப்பு, இருமல், மூலம், நரம்புத்தளர்ச்சி போன்றவற்றிற்கு மிகச்சிறந்த ஒன்று. இதனை 1 அல்லது 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர வேண்டும். 

வாய்/வாய்ப் புண்/அதிமதுரம்

அதிமதுரத்தை தட்டி தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் நீங்கும். வாய் துர்நாற்றமும் நீங்கும். 

ஆண்மை/விந்து குறை/அதிமதுரம் பொடி

அதிமதுர பொடியுடன் சுத்தமான நெய் மற்றும் தேன் கலந்து நன்றாக குழைத்து இரவில் மட்டும் சாப்பிட்டு பால் குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து கோளாறு குறையும். 
இந்த செயலியை நிறுவுவதற்கு...

 பித்த நாடி/வாந்தி/அதிமதுரம் பொடி

அதிமதுரப் பொடி, சந்தனத் தூள் ஆகியவற்றை பாலில் கொடுத்து வந்தால் வாந்தி குறையும்.

No comments:

Post a Comment