Sunday, June 6, 2021

சளி - இருமலை  விரட்டும் வால் மிளகு!

வால் மிளகு. எண்ணெய்ப்பசையும்,  காரமான  விறுவிறுப்பும், நறுமணமும் கொண்ட இது நாட்டு மருந்துக்கடைகளில்  கிடைக்கும். 

உடலில்  சூட்டை உண்டாக்கி சளியை வெளியேற்றக்கூடியது. சித்தரத்தை, அதிமதுரம் இரண்டும் தலா 10 கிராம் எடுத்து  5 கிராம் வால் மிளகு சேர்த்து கஷாயம் செய்து  தினமும் 2 வேளை சாப்பிட சளி, இருமல் போன்றவை குணமாகும்.  

குறிப்பாக வயதான காலத்தில் சிலருக்கு சளி சேர்ந்து மிகுந்த  தொல்லையை உண்டாக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் வால் மிளகுத்தூள்  5 சிட்டிகை  எடுத்து தேனுடன் கலந்து தினமும்  2 வேளை சாப்பிட்டால் சளித்தொல்லை  நீக்கி  குணம் கிடைக்கும்.


பல்வேறு வகையான  பல் நோய்களால்  அவதிப்படுவோர், வெற்றிலையுடன் 2 வால் மிளகு சேர்த்து மென்று தின்று வந்தால் நிவாரணம் கிடைக்கும். கசகசாவுடன் வால் மிளகை  பசும்பாலில் ஊற  வைத்து  சொறி  சிரங்கின் மீது பூசி வந்தால் குணம் கிடைக்கும். 


பெண்களில் பலருக்கு சிறுநீர் வெளியேறும் பகுதிகளில் சில காரணங்களால் ரணமாகி, புண்ணாகி  மிகுந்த தொல்லையை கொடுக்கும்.  அப்படிப்பட்ட வேளைகளில் வெண்ணெய் அல்லது மோருடன் வால் மிளகு பொடி மற்றும் சிறிது நன்னாரி வேர்த்தூள் கலந்து சாப்பிட கொடுத்தால் நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment