Thursday, June 3, 2021

நெஞ்சில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் ஓமம்.


நெஞ்சில் உள்ள சளியை கரைத்து வெளியேற்றும் ஓமம்.:

நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கேட்டால் கிடைக்கும் அதனை வாங்கி வந்து மூட்டு வலி இருந்தால் தடவி வர வேண்டும் மூட்டு வலி விரைவில் குணமாகும்.

வயிற்று வலி வந்து விட்டால் ஐந்து கிராம் ஓமத்துடன், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்து பொடி செய்து அதனை தேனில் கலந்து சாப்பிட வேண்டும். வயிற்று வலி குணமாகும்.

செரிமான பிரச்சனை மற்றும் ஆஸ்துமா போன்றவை இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் ஓமம் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் விரைவில்  குணமாகும். 

வயிறு மந்தமாக இருந்தால் ஓமம், சீரகம் சமஅளவு எடுத்து அதனை ஒரு கடாயில் பொன்னிறமாக வறுத்து கொள்ள வேண்டும். பின் அதை இறக்கி ஆறவைத்து  உப்பு சேர்த்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். இதை சாப்பிட பிறகு 20 நிமிடம் கழித்து சாப்பிட்டு வர வேண்டும்.

ஓமம் பொடி சிறிது உப்பு சேர்த்து மோரில் குடித்து வந்தால் நெஞ்சு சளி வெளியேறும். சோர்வாக இருப்பவர்கள் மற்றும் சோம்பல் இருப்பவர்கள் ஓமம் தண்ணீர்  குடித்து வந்தால் சுறுசுறுப்பாக இருப்பார்கள். பல்வலி இருப்பவர்கள் ஓமம் எண்ணெய் எடுத்து பஞ்சில் நனைத்து வலி உள்ள இடத்தில் வைத்தால் குணமாகும்.

No comments:

Post a Comment