Monday, June 7, 2021

வயிற்று எரிச்சல் நீங்க வெந்தயப் பொடி காப்பி


வயிற்று எரிச்சல் நீங்க வெந்தயப் பொடி காப்பி

தேவையான பொருட்கள்:

வறுத்த வெந்தயம் – 50 கிராம்
வறுத்த சீரகம் – 25 கிராம்
பிளந்த மாங்கொட்டைப் பருப்பு – 25 கிராம்
சுக்கு – 20 கிராம்
காய்ந்த மல்லி – 25 கிராம்
ஏலக்காய் – 10
புளியங்கொட்டை – 50 கிராம்

செய்முறை:

     புளியங்கொட்டை, வறுத்த வெந்தயம், சீரகம், மாங்கொட்டை, வறுத்த சுக்கு இவைகள் அனைத்தையும் நன்றாக பொடி செய்து, காய்ந்த மல்லியையும், ஏலக்காயையும் காய வைத்து நனறாகப் பொடி செய்து, ஒரு பாட்டிலில் அடைத்ஹ்டு பத்திரப்படுத்தவும். இந்த வெந்தயப் பொடியில் இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அரை டம்ளர் தண்ணீரை கொதிக்கவிடவும். இந்தத் தூளைப் போட்டு கொதிக்க விட்டு வடிகட்டவும். பகலில் இரண்டு டம்ளர் எடுத்துக் காய்ச்சி அதில் சர்க்கரை போட்டு காய்ச்சி, முதலில் வடிகட்டிய டிகாஷனை ஊற்றி பருகிவரலாம்.

குறிப்பு:

     இதை உணவுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு பருகி பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.

பயன்கள்:

     கருப்பை பலம் அடையும். வாய்ப்புண், வயிற்று நோய், வயிற்று எரிச்சல், குமட்டல், புளியேப்பம், சீதபேதி, மூலம், நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், பித்தம், பசியும் எடுக்கும்

No comments:

Post a Comment