பூண்டு மற்றும் தேன் பயன்படுத்தும் ஆண்கள் பல அற்புதமான நன்மைகளைப் பெறலாம். ஆம், உண்மை தான். விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான தகவல்கள் மூலம் இந்த இரு அருமருந்துகள் குறித்த சில சிறப்பம்சங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
பூண்டு பொதுவாக நமது வீடுகளில் இயல்பாக பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகள், பயறு வகைகள் மற்றும் மாமிச உணவிலும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, தேனை பயன்படுத்துவதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், பூண்டு மற்றும் தேன் இரண்டையும் ஒன்றாக உட்கொண்டால், ஆண்களின் ஆரோக்கியத்திற்கு பல அற்புதமான நன்மைகள் ஏற்படுகிறது என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
ஆண்களின் பாலியல் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பூண்டு மற்றும் தேனை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் வேறுசில நன்மைகள் குறித்தும் விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
சிறப்பு குணம் கொண்ட பூண்டு மற்றும் தேன்
ஆண்களுக்கு இந்த அருமருந்தான உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு, பூண்டு மற்றும் தேனில் என்னென்ன பண்புகள் உள்ளன என்பதை தெரிந்துக் கொள்வோம். பூண்டில் அல்லிசின் எனப்படும் ஒரு சிறப்பான பண்பு உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில், தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்வது ஆண்களின் உடலில் ஆக்கப்பூர்வமான விளைவை ஏற்படுத்துகிறது.
ஆண்களின் சக்தி வலுப்படுகிறது
ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு உணவு பழக்க வழக்கங்களும் காரணம் என்று நம்பப்படுகிறது. ஆண்மை குறைபாட்டால் திருமண வாழ்க்கையிலும் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், பூண்டு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக உட்கொள்வதால், ஆற்றலை வலுப்படுத்துவதில் சிறப்பான நன்மைகள் ஏற்படும்.
பூஞ்சை தொற்றுநோயைத் தடுக்க உதவுகிறது
அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்று போன்ற உடல் தொடர்பான பல்வேறு வகையான பிரச்சனைகளுடன் ஆண்கள் போராடுவதைக் காண முடியும். பூண்டு மற்றும் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், எந்த வகையான பூஞ்சை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க ஆண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் உடலின் செல்கள் வலுவடைந்து, பாக்டீரியாவால் எந்தவிதமான தாக்கமும் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.
இதயம் தொடர்பான நோய் ஏற்படும் அபாயங்கள் குறையும்.
பெண்களை விட ஆண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது. உண்மையில், தவறான உணவுப் பழக்கத்தின் காரணமாகவே ஆண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் எளிதில் ஏற்படுகிறது. பூண்டு மற்றும் தேனை தவறாமல் சாப்பிடும் ஆண்களின் இதயம் வலுப்பெறுகிறது. இதனால் பல கடுமையான நோய்களால் ஆண்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவார்கள்.
பூண்டு மற்றும் தேனை எவ்வாறு உட்கொள்வது?
பூண்டை வறுத்து தேனுடன் சேர்க்க வேண்டும். நான்கைந்து பூண்டு பற்களை வறுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து சாப்பிடவும். வாரத்தில் குறைந்தது மூன்று முதல் நான்கு முறை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் ஆக்கப்பூர்வமான விளைவை சில நாட்களிலேயே தெரிந்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment