Tuesday, June 29, 2021

வெந்தயம் ஊற வைத்த நீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்...


வெந்தயம் ஊற வைத்த நீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்.

சமையல் பொருள்களில் ஒன்றான வெந்தயத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. அந்தவகையில், வெந்தயம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

இதற்காக நீங்கள், இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இரவு முழுவதும் நன்றாக ஊறிய பின்னர் தண்ணீரின் கலர் இளம் மஞ்சள் நிறமாக மாறியிருக்கும்.

இப்போது காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஊற வைத்த தண்ணீரை குடித்துவிட்டு ஊறிய வெந்தயத்தையும் சாப்பிடலாம்.

மூலிகைகளில் பயன்படுத்தக்கூடிய வெந்தயத்தை உணவுப்பொருள்களில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

வெந்தயம் ஊற வைத்த நீரை அருந்தி வருவதால்.:

உடலில் அமிலத்தன்மைகளை சரி செய்ய உதவுகிறது.

நெஞ்செரிச்சல் சரி ஆகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது. 

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியடையச் செய்கிறது. 

மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்னைகளை கலைகிறது. 

உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. 

பக்கவாதம், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. 

பெண்களுக்கு மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது. 

ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

உடல் எடையைக் கூட்டும் உலர்திராட்சை பற்றியும் அவற்றின் சில மருத்துவகுணங்கள்.


உடல் எடையைக் கூட்டும் உலர்திராட்சை பற்றியும் அவற்றின் சில மருத்துவகுணங்கள் :-

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது.

உலர் திராட்சையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்குப் பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.
இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால் ஒல்லியாக இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை அதிகரிக்க நினைத்தால் இதை எடுத்துக் கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள் கட்டுக் கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப்பொருள். இதில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியான ஆற்றலைத் தருவதால் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
உலர் திராசையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றை கிரகிக்க உதவுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில் அதிக அளவில் பொட்டாசியம் தாதூஉப்பு இருப்பதால், இரத்தக் குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து நிறைவாக உள்ளது. இது இரத்த செல்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருப்பதால் இரத்தசோகைக்கான வாய்ப்புக் குறைகிறது.
இயற்கை முறையில் உலர வைக்கப்பட்ட திராசையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. மிகவும் பழைய உலர்திராட்சையை வாங்குவதை விட நடுத்தரமானதைத் தேர்ந்தெடுத்து வாங்குவது மேலும் சிறந்தது.

Saturday, June 26, 2021

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு பலன் இருக்குன்னு தெரியுமா?

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் எவ்வளவு பலன் இருக்குன்னு தெரியுமா?

தினமும் நம் வாழ்வில் பல காய்களையும் கனிகளையும் உண்டு வந்தாலும் எந்த எந்த காய் கனிகளில் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள கனி நெல்லிக்கனி. மரங்களில் காய்கள் தான் அந்த மரத்தின் விதைகளை கொண்ட கனி
யாக மாறுகிறது.



பழ வகைகள் அனைத்துமே சாப்பிடுவதற்கு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. பல மருத்துவ குணங்களை கொண்ட பழ வகைகள் நிறைந்த நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரு படம் தான் நெல்லிக்கனியாகும். தமிழ் மொழியில் நெல்லியை நெல்லிக்காய் என்றும் நெல்லிக்கனி என்றும் அழைக்கின்றனர்.



ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் குறைந்த பச்சம் முப்பது ஆரஞ்சுப் பழங்களில் உள்ள வைட்டமின் சி சத்தை பெறலாம் ஆய்வுகள் குறிப்பிடுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும் விட்டமின் சி சத்து நெல்லிக்கனியில் அதிகமாக உள்ளது இந்த விட்டமின் சி சத்து இதில் இயற்கையாகவே இருப்பதால் அளவுடன் இதை எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது. இந்த விட்டமின் சி சத்து உடலில் உள்ள இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றும்.



எலும்புகள் வலிமை இருக்க

நெல்லிக்காய் ஜூஸ் தினமும் நாம் குடித்து வருவதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் நம் உடலில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்க

நெல்லிக்காயில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருக்கிறது. நெல்லிக்காய் ஜூஸ் தினமும் குடித்து வந்தால் நம் உடலில் புற்றுநோய் ஏற்படாது.

கண் பார்வை சரியாக

நெல்லிக்காய் சாரை அடிக்கடி குடித்துவர கண் குறைபாடுகள் நீங்கி கண் பார்வைத் திறன் அதிகரிக்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க

நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வருவதால் வாயில் துர்நாற்றம் ஏற்படாது. வாய் துர்நாற்றம் அதிகம் உள்ளவர்கள் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

கொழுப்புக்கள் கரைய

நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள்.

மலச்சிக்கல் பிரச்சனை தடுக்க

நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடித்து வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நெல்லிக்காய் ஜூஸ் நாம் தினமும் குடித்து வரலாம்
.     

Wednesday, June 23, 2021

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு!


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கிராம்பு!
 

இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அமிலத்தன்மை போன்ற வயிற்றுப் பிரச்னைகளைப் போக்க உதவும். இது உங்கள் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

கிராம்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பது மட்டுமல்லாமல் இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. மேலும், இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளது.

கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்வதன் மூலம் பல்வலியை தவிர்க்கலாம். அல்லது பல் வலியிருக்கும் இடத்தில் ஒரு கிராம்பை வைக்கலாம். இது வலி நிவாரணியாகவும் செயல்படும்.

தொண்டைப் புண் மற்றும் தொண்டை வலியைப் போக்க கிராம்பு உதவும்.

கை, கால்கள் நடுங்கும் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் படுக்கைக்கு செல்லும் முன் 1 முதல் 2 கிராம்புகளை உட்கொள்ளவதன் மூலம் பிரச்னையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தினமும் கிராம்பை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கரோனா பெருந்தொற்று காலத்தில் நமக்கு மிகவும் அவசியமான ஒன்று.

இருமல், சளி, வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்றவற்றிலிருந்து விடுபட கிராம்பு உதவும்.

Thursday, June 17, 2021

தற்சார்பு தடுப்பூசி.... உலகை காக்க உலகில் உள்ள தமிழ் படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் இக்கட்டுரையை முழுவதும் படிக்கவும்


வெளியீடு தேதி : 16.06.2021

நாள் : புதன்கிழமை

நேரம் : 11:25 Am

உலகை காக்க உலகில் உள்ள தமிழ் படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் இக்கட்டுரையை முழுவதும் படிக்கவும்

இக்கட்டுரையில் நீங்கள் தெரிந்துகொள்ள உள்ள தகவல்கள்

1 - சிந்திக்க வைக்கும் முன்னுரை

2 - இந்த கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்

3 - இந்த கேள்விக்கு சித்த மருத்துவர்கள் பதில் சொல்ல வேண்டும்

4 - உலகம் அறிய வேண்டிய சித்த மருத்துவத்தின் மகத்துவம்

5 - வந்தாச்சு இயற்கை தற்சார்பு தடுப்பூசி (தடுப்பு மருந்து)

6 - அரசு அனுமதி வழங்கிய நெல்லூர் ஆனந்தய்யா வைத்தியரின் கொரோனா மருந்து இலேகியத்தின் செய்முறை

7 - கொரோனா குணமான பின் சில மாதங்கள் தொடர்ந்து எடுக்க வேண்டிய சித்த மருந்துகள்

8 - தடுப்பூசியின் நஞ்சை வெளியேற்றும் முறைகள்

9 - சித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய வேலை என்ன

10 - அரசு செய்ய வேண்டிய வேலை என்ன

சிந்திக்க வைக்கும் முன்னுரை
----------------------------------------------------

இரத்தக்குழாய் வழியாக தடுப்பூசி போட்டால் தான் நோயை தடுக்க முடியுமா ?

வாய் வழியாக மருந்து எடுத்தால் நோயை தடுக்க முடியாதா ?

முடியாது என்றால்

போலியோ சொட்டு மருந்து வாய்வழியாகத்தானே கொடுக்கிறார்கள்

அப்படி என்றால்

வாய்வழியாக எடுக்கும் மருந்தும் நோயை தடுக்கும் என்று தானே அர்த்தம்

வாய் வழியாக அலோபதி மருந்து கொடுத்தால் தான் நோயை தடுக்க முடியுமா ?

வாய் வழியாக சித்த மருந்து கொடுத்தால் நோயை தடுக்க முடியாதா ?

என்ற எனது பல ஆண்டுகால கேள்விக்கு கிடைத்த பதிலே இந்த கட்டுரை

வாருங்கள் பயணிப்போம்

இந்நாட்டில் வாழும் பொதுமக்களில் ஒருவனாக நான் பல ஆண்டுகளாக கேட்க நினைத்த இரண்டு கேள்விகள்

உங்களுக்கும் கூட இந்த கேள்விகள் தோன்றி இருக்கலாம்

உங்களின் ஒருவனாக நான் கேட்கிறேன்

முதல் கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்

இரண்டாவது கேள்விக்கு சித்த மருத்துவர்கள் பதில் சொல்ல வேண்டும்

இந்த கேள்விக்கு அரசு பதில் சொல்ல வேண்டும் ?
-------------------------------------------------------------------

முதல் கேள்வி

வாழையடி வாழையாக வழி வழியாக பரம்பரை பரம்பரையாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சித்த வைத்தியர்கள் இந்த நாட்டில் மருத்துவம் பார்த்து வருகிறார்கள்

அதே போல்

வாழையடி வாழையாக வழி வழியாக பரம்பரை பரம்பரையாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சித்த வைத்தியர்களிடம் இந்நாட்டில் வாழும் பொது மக்கள் வைத்தியம் பார்த்து வருகிறார்கள்

இவர்கள் இருவரும் சித்த மருத்துவத்தை தங்களது வாழ்க்கை முறையாகவே கடைப்பிடித்து வாழ்ந்து வருபவர்கள்.

இப்போதும் கூட இந்நாட்டில் பல கோடி மக்கள் சித்த மருத்துவத்தை சார்ந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்

சித்த மருத்துவர்கள் ஆகட்டும்

சித்த வைத்தியம் எடுத்துக்கொள்ளும் பொது மக்கள் ஆகட்டும்

ஏதேனும் பிணி என்றால்

சித்த மருத்துவம் பார்த்து தான் தங்கள் பிரச்சனைகளை சரி செய்து கொள்வார்கள்

இவர்களுக்கு அலோபதி என்றால் என்னவென்றே தெரியாது ! தங்கள் வாழ்நாளில் அலோபதி மருத்துவம் பார்த்ததே கிடையாது !

இப்படி வாழ்நாள் முழுவதும் சித்த மருத்துவத்தை பின்பற்றும் மக்களிடம்

இவர்கள் மருத்துவமுறைக்கு

சற்றும் துளி கூட பொருத்தம் இல்லாத

மாற்று மருத்துவத்தின் நம்பிக்கையான தடுப்பூசியை

நீ செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு சொல்வது எத்தகைய செயல் ?

இது சரியான செயல் தானா ?

இது எந்த வகையில் நியாயம் ?

இவர்களை பார்த்து நீ தடுப்பூசி செலுத்தனும் என்று சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ? யார் கொடுத்தது ?

உங்களுக்கு அலோபதி தடுப்பூசி மீது நம்பிக்கை இருந்தால் நீங்கள் போட்டுக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ள வேண்டியது தானே. உங்களை யாரும் தடுத்து நிறுத்தவில்லையே.

சித்த மருத்துவம் பின்பற்றும் மக்களும் தடுப்பூசி போட வேண்டும் என சொல்வது எத்தகைய செயல்

என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை

அரசு செய்வது மாபெரும் வரலாற்று மருத்துவ பிழை அல்ல

மருத்துவ குற்றம்

ஏன் சித்த மருத்துவத்தை பின்பற்றும் மக்களை பார்த்து தங்கள் வைத்திய முறைக்கு துளி கூட பொருத்தம் இல்லாத இன்னொரு மாற்று மருத்துவத்தின் நம்பிக்கையான தடுப்பூசி போட வேண்டும் என்று அரசு சொல்கிறது ?

தடுப்பூசி என்பது அலோபதி நம்பிக்கை

அதை ஏன்

சித்த மருத்துவம் பார்க்கும் மக்கள் மீது திணிக்கிறீர்கள்

இதற்கு அரசு
மக்களிடம் பதில் சொல்ல வேண்டும்

இந்த கேள்விக்கு சித்த மருத்துவர்கள் பதில் சொல்ல வேண்டும் ?
------------------------------------------------------------------------------

சில நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அலோபதி மருத்துவம்

நோயை தடுக்க தடுப்பூசி என்று கொண்டு வரும் போது

எந்த காலத்தில் தோன்றியது என யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு தொன்மை வாய்ந்த மருத்துவமான சித்த மருத்துவம்

பயின்ற நீங்கள்

ஏன் நோயை தடுக்க நோய் தடுப்பு மருந்து என இன்னும் வெளிப்படையாக ஏதும் கொண்டு வரவில்லை ?

இரத்தக்குழாய் வழியாக தடுப்பூசி போட்டால் தான் நோயை தடுக்க முடியுமா ?

வாய் வழியாக மருத்து எடுத்தால் நோயை தடுக்க முடியாதா ?

முடியாது என்றால்

போலியோ சொட்டு மருந்து வாய்வழியாகத்தானே கொடுக்கிறார்கள்

அப்படி என்றால்

வாய்வழியாக எடுக்கும் மருந்தும் நோயை தடுக்கும் என்று தானே அர்த்தம்

வாய் வழியாக அலோபதி மருந்து கொடுத்தால் தான் நோயை தடுக்க முடியுமா ?

வாய் வழியாக சித்த மருந்து கொடுத்தால் நோயை தடுக்க முடியாதா ?

தற்போது இருக்கும் தொற்றுகளுக்கு

சித்த மருத்துவர்களாகிய நீங்கள் அனைவரும் இணைந்து தடுப்பு மருந்து தயாரித்து மக்களுக்கு கொடுக்கலாமே

தற்போது இருக்கும் தொற்றுகளுக்கு தடுப்பு மருந்து ஏதேனும் தங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்

என்று தமிழகத்தின் பல சித்த மருத்துவர்கள், பரம்பரை சித்த வைத்தியர்களை பார்த்து நான் கேட்ட போது

அவர்கள் எனக்கு அளித்த பதில்கள்

ஏன் இல்லை தடுப்பு மருந்து

இதோ எழுதிக்கொள்

என எனக்கு வழங்கிய

ஆபூர்வ தகவல்களான

தொற்று நோய் தடுப்பு மருந்துகளை தொகுத்து

இறைவன் பேரருளால்

தற்போது இந்நாட்டிற்கு பகிர்கிறேன்

தடுப்பு மருந்தை பார்ப்பதற்கு முன் உலகம் அறிய வேண்டிய சித்த மருத்துவத்தின் மகிமை என்ன என்று கொஞ்சம் பார்த்துட்டு வரலாம் வாங்க

உலகம் அறிய வேண்டிய சித்த மருத்துவத்தின் மகிமை !
-------------------------------------------------------

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி நம் தமிழ் குடியின் சித்த மருத்துவம்

96 தத்துவங்களை அடிப்படையாக கொண்டது

பூதங்கள் 5 🔱

நீர்
நிலம்
நெருப்பு
காற்று
ஆகாயம்

புலன்கள் 5 🔱

மெய்
வாய்
கண்
மூக்கு
செவி

பொறிகள் 5 🔱

பார்த்தல்
கேட்டல் 
சுவைத்தல் 
நுகர்தல் 
உணர்தல்

கன்மேந்திரியங்கள் 5 🔱

வசனம்
தானம்
கமனம்
விசர்கம்
ஆனந்தம்

ஞானேந்திரியங்கள் 5 🔱

சப்தம்
ஸ்பரிசம்
ரூபம்
ரசம்
கந்தம்

கரணம் 4 🔱

மனம்
புத்தி
அகங்காரம்
சித்தம்

அறிவு 1 🔱

உள்ளம்

நாடிகள் 10 🔱

இடகலை
பிங்கலை
சுழிமுனை
சிங்குவை
புருடன்
காந்தாரி
அத்தி
அலம்புடை
சங்கினி
குருநாடி

வாயுக்கள் 10 🔱

பிராணன்
அபானன்
வியானன்
உதானன்
சமானன்
நாகன்
கூர்மன்
கிருகரன்
தேவதத்தன்
தனஞ்செய்யன்

ஆசயங்கள் 5 🔱

அமராசயம்
பகிராசயம்
சலாசயம்
மலாசயம்
சுக்கிலாசயம்

கோசங்கள் 5 🔱

அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்

ஆதாரம் 6 🔱

மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விசுத்தி
ஆக்கினை

தோஷம் 3 🔱

வாதம்
பித்தம்
கபம்

மலம் 3 🔱

ஆணவம்
காமியம்
மாயை

மண்டலம் 3 🔱

அக்கினி மண்டலம்
சூரிய மண்டலம்
சந்திர மண்டலம்

ஈடனை 3 🔱

தாரேஷனை
புத்திரேஷனை
அர்த்தேஷனை

குணம் 3 🔱

ராஜஷம்
தாமசம்
சாத்வீகம்

வினை 2 🔱

நல்வினை
தீவினை

விகாரம் 8 🔱

காமம்
குரோதம்
உலோபம்
மதம்
மோகம்
மாச்சரியம்
இடும்பை
அசூயை

அவஸ்தை 5 🔱

சாக்கிரம்
சொப்பனம்
சுழுத்தி
துரியம்
துரியாதீதம்

இவை அனைத்தும் தஞ்சை தமிழ் பல்கழைகழகத்தில் நான் மூலிகை அறிவியல் பட்டப்படிப்பு படிக்கும் போது தெரிந்துகொண்டது

மொத்தம் 96 தத்துவங்கள்

சரி நோய்கள் எத்தனை என குறிப்பிடுகிறது சித்த மருத்துவம் வாங்க பார்க்கலாம்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே

4448 நோய்கள் உள்ளது எனவும்

இந்நோய்களுக்கு இது தான் மருந்து எனவும்

கண்டுபிடித்து பாடல் மூலம்

சித்தர்கள் மருத்துவ குறிப்புகளை எழுதி வைத்துள்ளார்கள்

மேலும் யார் சித்த வைத்தியன் என்ற இலக்கணத்தை வரையறுத்துள்ளது சித்த மருத்துவம் இதோ பாடல்

சோதிடம் பஞ்சபட்சி
துலங்கிய சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை 
குறுமுனி ஓதுபாடல்
தீதிலாக் கக்கிசங்கள் 
செப்பிய கன்ம காண்டம்
இதெல்லாம் தெரிந்தவர்கள்
இவர்களே வைத்தியராவர்

வெறும் நோய்க்கு மருந்து கொடுப்பவர் வைத்தியர் கிடையாது. வைத்தியர்கள் என்றால் சோதிட சாஸ்திரம், பஞ்சபட்சி சாஸ்திரம், சரம் மற்றும் இன்னும் பல குறிப்பிட்டுள்ள வித்தைகளை எவரெருவர் கற்று தேர்ந்தவரோ அவரே வைத்தியர் ஆவார்

"சரம் பார்ப்பவனிடம் சரசம் கொள்ளாதே"

"சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன் ஆவான்"

"பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே"

என்ற பழமொழிகள் உண்டு

சரி வாங்க இப்போது சித்த மருத்துவத்தில் எத்தனை மருந்து வடிவங்கள் உள்ளது என பார்ப்போம்

சித்த மருத்துவத்தில் உங்களுக்கு எத்தனை வகை மருந்து வடிவங்கள் தெரியும்

பொடிகள்
குடிநீர்கள்
சூரணம்கள்
இலேகியங்கள்

இவை நான்கும் தெரிந்திருக்கலாம்

ஆனால்

சித்த மருத்துவத்தில் மொத்தம் 64 வகையான மருந்து வடிவங்கள் உண்டு

உள் மருந்துகள் - 32

வெளி மருந்துகள் - 32

இதோ

உள்மருந்து வடிவங்கள் 32

சுரசம்
சாறு
குடிநீர்
கற்கம்
உட்களி
அடை
சூரணம்
பிட்டு
வடகம்
வெண்ணெய்
மணப்பாகு
நெய்
ரசாயனம்
இளகம்
தைலம்
மாத்திரை
கடுகு
பக்குவம்
தேனூரல்
தீநீர்
மெழுகு
குழம்பு
பதங்கம்
செந்தூரம்
பற்பம்
கட்டு
உருக்கு
களங்கு
சுண்ணம்
கற்பம்
சத்து
குரு குளிகை

வெளிமருந்து வடிவங்கள் 32

கட்டு
பற்று
ஒற்றடம்
பூச்சு
வேது
பொட்டணம்
தொக்கணம்
புகை
மை
பொடிதிமிர்தல்
கலிக்கம்
நசியம்
ஊதல்
நாசிகாபரணம்
களிம்பு
சீலை
நீர்
வர்த்தி
சுட்டிகை
சலாகை
பசை
களி
பொடி
முறிச்சல்
கீறல்
காரம்
அட்டை விடல்
அறுவை
கொம்பு கட்டல்
உறிஞ்சல்
குருதி வாங்குதல்
பீச்சு

*இவை அனைத்தும் சித்த மருத்துவத்தில் மருந்து வடிவங்களின் பெயர்கள்*

தத்துவங்கள் 96 
நேய்கள் 4448 
மருந்து வடிவங்கள் 64

என வகைப்படுத்திய சித்த மருத்துவம் சுரத்தை எப்படி வகைப்படுத்து உள்ளது என பார்ப்போம் வாருங்கள்

நமக்கு எத்தனை காய்ச்சல் தெரியும்

சாதாரண காய்ச்சல், பள்ளிக்கூடத்தில் விடுமுறைக்கு காரணம் கண்டுபிடிக்கனும் என்றால் வைரல் காய்ச்சல் இது மட்டும் தான் நமக்கு தெரியும்

சமீப காலமாக சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் தெரியும்

ஆனால் காய்ச்சலில் சித்த மருத்துவம் எத்தனை வகை குறிப்பிட்டுள்ளது வாங்க பார்க்களாம்

மொத்தம் 64 வகை சுரம் உள்ளது என்றும்

அதில்

தன்வழிச்சுரம் : 12

புறவழிச்சுரம் : 52

எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்

மொத்த சுரத்தின் எண்ணிக்கை : 64

தன்வழிசுரம் என்றால் உடலிற்கு உள் இருந்தே தானாக தோன்றுவது

புறவழிச்சுரம் என்றால் வெளியில் இருந்து வரும் கிருமி வைரஸ் தொற்றுகளால் உருவாவது

அகஸ்தியர் சுரக்கோள்

யூகிமுனி வைத்திய சிந்தாமணி 800

என்ற நூலில் இதை நீங்கள் பார்க்கலாம்

இப்படி காய்ச்சலை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து

அதை 64 வகைப்படுத்தி

நம் சித்த மருத்துவம் அத்தனைக்கும் மருந்து கண்டுபிடித்து

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன

ஒரு உதாரணம்

தற்போது உள்ள கொரோனா தொற்றிற்கு என்ன என்ன குறி குணங்கள் உருவாகும் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடல் மூலம் எழுதி வைத்துள்ளார்கள் சித்தர்கள்

இப்பாடல் யூகி சிந்தாமணி என்று நூலில் இடம் பெற்றுள்ளது

பார்க்கிறீர்களா இதோ

ஐயசுரத்தின் (கபசுரம்) குறி குணங்கள்

"சந்தாப மானசி லேத்ம சுரத்தைச்
சாற்றிடவே நாக்குமுகம் வெளுத்துக் காணல்
மந்தாப மார்நோத லிரும லிளைப்பு
வருகுதல்வாய் துவர்மதமே உருசி யில்லை 
தந்தாப மூச்சுவிட்டுப் போக மற்றான் 
முயங்கியே விக்கலொடு தாகங் காணல் 
சித்தாப மிடறுதொந்து மேன்மூச் சாதல்
தினவெடுத்தல் தியங்கிடுதல் சிலேட்ம மாமே

என்ற குறிகுணங்களை சரியாக சொல்கிறது இப்பாடல்

உடல் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சித்த மருத்துவம் பதிவு செய்துள்ளது வாருங்கள் பார்க்கலாம்

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்
தெள்ள தெளிந்தாருக்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப்புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு.
- திருமந்திரம்.

“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”
- திருமந்திரம்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
- திருமந்திரம்.

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றுதான்
அறிந்துதான் பார்க்கும் போதே

என சித்தர்கள் சொல்கிறார்கள்

இதில் இருந்து உடலின் அவசியம் எத்தகையது என்று நன்கு புலப்படுகிறது.

இனி தான் சித்த மருத்துவம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது எத்தகைய சக்தி வாய்ந்தது என்பதை பார்க்கப்போகின்றோம் வாருங்கள்

சித்த மருத்துவத்தின் சிறப்பு 1
----------------------------------------------------

அரசர்கள் போர்க்களத்திற்கு செல்லும் போது ஆயிரக்கணக்கான வைத்தியர்களை உடன் அழைத்து செல்வார்களாம்

போர்க்களத்தில் சில வீரர்களுக்கு கை கால் காதுகள் வெட்டு பட்டு துண்டாய் போகுமாம்

அந்த உறுப்புகளை எடுத்து வந்து தக்க வைத்தியம் செய்து உடலுடன் ஒட்டி விடுவார்களாம். அப்படி ஒட்டப்பட்ட சில நாழிகைக்குள் மீண்டும் அந்த வீரர் போருக்கு செல்வாராம்

இவ்வளவு சிரமப்பட்டு தான் இந்நாட்டை நம் கையில் கொடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள், ஆனால் நம் நாட்டை நாம் எப்படி வைத்துள்ளோம்

சரி, சித்த மருத்துவத்திற்கு அறுவை சிகிச்சை தெரியாமலா இதை செய்திருப்பார்கள்

அடேய் இப்படி துண்டாய் போன உறுப்புகளை மீண்டும் உடலுடன் சேர்க்க தெரிந்த மருத்துவத்திற்கா நோய்யை தடுக்க மருந்து தெரியாது

சித்த மருத்துவத்தின் சிறப்பு 2
-----------------------------------------------------

உங்களுக்கு எத்தனை உடல் என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்வோம்

ஒன்று

கண்களுக்கு ஒரு உடல் தெரிவதால் ஒன்று என சொல்கின்றோம்

ஆனால் நமக்கு ஐந்து உடல்கள் உள்ளது

முன்னர் 96 தத்துவங்களில் படித்தீர்கள் அல்லவா

கோசங்கள் 5 🔱

அன்னமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
விஞ்ஞானமய கோசம்
ஆனந்தமய கோசம்

இப்படி உடல்கள் ஐந்து அடுக்குகளாக இருக்கும்

அன்னம் உண்டு உருவான உடல் இது என்பதால்

நாம் பார்க்கும் உடலிற்கு

அன்னமய கோசம் என்று பெயர்

மீதி நான்கு உடல்கள் நம்மை சுற்றி அடுக்கடுக்காக இருக்கும்

இவை நம் கண்களுக்கு தெரியாது. இவற்றிற்கு சூட்சம உடல் என்று பெயர்

வெறும் அன்னமய கோசத்தின் மூலமாக மட்டும் நோய்கள் வராது, கண்களுக்கு புலப்படாத சூட்சம உடல்களில் ஏற்படும் பாதிப்புகள் மூலமாகவும் மனிதனுக்கு நோய்கள் தோன்றும்

சூட்சம உடலில் உள்ள பாதிப்புகளை எப்படி சரி செய்ய வேண்டும் என்று அதர்வன வேத நூல்களில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்

இதைத்தான் தற்போது ரெய்கி, பிரானிக் ஹீலிங், சக்ரா ஹீலிங், ஆரா கிலென்சிங் என செய்து வருகின்றோம்

அடேய் கண்களுக்கு தெரியாத உடலை கண்டுபிடித்து அதில் உள்ள பாதிப்பை சரி செய்யத்தெரிந்த மருந்த்துவத்திற்கா, கண்களுக்கு தெரியும் உடலிற்கு வரும் நோயை தடுக்க மருந்து தெரியாது

சித்த மருத்துவத்தின் சிறப்பு 3
-----------------------------------------------------

மேலே 96 தத்துவங்களில்

தசவாயுக்கள் என்று படித்தீர்கள் அல்லவா

வாயுக்கள் 10 🔱

பிராணன்
அபானன்
வியானன்
உதானன்
சமானன்
நாகன்
கூர்மன்
கிருகரன்
தேவதத்தன்
தனஞ்செய்யன்

இந்த தச வாயுக்கள் உடலுக்குள் என்ன என்ன வேலை செய்கிறார்கள் வாங்க பார்க்கலாம்.

பிராணன் : மூலாதரத்தில் ஆரம்பித்து இதயத்தில் நின்று மூக்கு வழியாக மூச்சு விடல். இது மேல் நோக்கி இயங்கும். மற்ற ஒன்பது வகை வாயுவிற்கும் இதுவே மூலாதாரம்.

அபானன் : சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலம், சிறுநீறு போன்றவைகளை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். இது கீழ் நோக்கி இயங்கும்.

வியானன் : இது தொழில் காற்று மூளையின் கட்டளைகளை அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும். தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உறுப்புக்களை நீட்ட, மடக்க உணர்ச்சிகளை அறியவும், உணவின் சாரத்தை கொடுத்து உடலைக் காக்கும்.

உதானன் : உணவின் சாரத்தை கொண்டு செல்லும். உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு. தொண்டையில் குரல் நரம்புகளை அதிரச் செய்து ஒலியை எழுப்புகிறது.

சமானன் : நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இந்த வாயு. நாபியிலிருந்து கால் வரை பரவும். வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் ரத்தத்திற்கும் எல்லா உறுப்புகளுக்கும் பகிர்ந்து கொடுக்கும் வேலையை செய்கிறது.

நாகன் : உடம்பில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றுவது நாகன். இது அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், இமைகள் மூட வேலை செய்யும். வாந்தி குமட்டல் போன்ற உணர்வுகளுக்கு காரணமாகிறது.

கூர்மன் : கண்ணில் நிற்கும் வாயு. கொட்டாவி, வாய் மூட, கண் இமைக்க, கண்ணீர் வரவழைக்கும்.

கிருகரன் : இது தும்மலுக்கு காரணமான காற்று. நம் உடம்பில் எந்த தூசியும் மாசுவும் நுழைய விடாது. தும்மல், இருமலை உண்டு பண்ண உதவும் வாயு இது. நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும், பசியை கிளப்பி விடும்.

தேவதத்தன் : கொட்டாவி, விக்கல் போன்றவை ஏற்பட காரணமே இந்த வாயுதான். மூளைக்கு போகும் வாயுவை குறைத்தல், ரத்தத்தில் பிராண வாயுவின் அளவு குறைவது, உடலை ஓய்வு நிலைக்கு தள்ளுவது, சோம்பல், தூங்கி எழும்போது ஒரு வித சோர்வை தருவது இந்த வாயுதான்.

தனஞ்செயன் : ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுது, தோலுக்கு கீழே தனஞ்சயன் இருந்து உடலுக்கு ஏற்படும் எந்த வித பாதிப்பையும் தாங்க வைக்கும், காப்பாற்றும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது மேற்சொன்ன ஒன்பது வாயுக்களும் நன்றாக வேலை செய்யும். உயிர் பிரிந்த பின்னர் ஒன்பது வாயுக்களும் செயல்பாட்டை நிறுத்திய பின்னர் இந்த தனஞ்செயன் வாயு செயல்படத் தொடங்கும். இதனை வீங்கல் காற்று என்றும் சொல்வார்கள். மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கத்தை ஏற்படுத்தும். நுண்ணியிரிகள் மூலம் உடலை அழுகச் செய்யும்.

மேலும் 'தனஞ்செயனை" வாயுக்களுக்கு தலைவன் என்றிடலாம். ஏன் என்றால், உயிர் பிரியும் முன்பாக நமது அனைத்து உறுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஒவ்வொன்றாக நிறுத்தி, எந்த வழியாக உடலைவிட்டு உயிர் வெளியேற வேண்டுமோ, அந்த வழியாக தனஞ்செயன் என்ற அந்த வாயு மற்ற வாயுக்களையும் வெளியே அழைத்து செல்லும். அதன் பின்னரே உயிர் பிரியும். மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் மற்ற வாயுக்களை சேர்ப்பிக்கும்.

நம் உடல் இயங்குவதே இந்த 10 வாயுக்களால் தான் என சொல்லலாம். அதனால் தான் இந்த தச வாயுக்களின் பெயரை சொல்லி கோவில்களில் மந்திரங்களாக உச்சாடனம் செய்கிறார்கள்

உயிர் பிரியும் நிலையில் உள்ளோருக்கு முதலில் பிராணன் வெளியேறும்

அதன் பின்னர் ஒவ்வொரு வாயுக்களாக உடலை விட்டு வெளியேறும்

இறுதியாக வெளியேறுவது தனஞ்செயன் வாயு

யாரேனும் விசக்கடி அல்லது வேறு ஏதேனும் பிரச்னையில் திடிரென இறந்து விட்டால்

உயிர் மூச்சு நின்றுவிட்ட நிலையிலும் கூட

குறிப்பிட்ட நாழிகைக்குள் வைத்தியரிடம் அழைத்து சென்றால்

ஒரு தடி வைத்து தொடையில் ஓங்கி அடிப்பார்களாம்

அடித்த இடம் வீங்கினால்

உடலில் தனஞ்செயன் வாயு இருக்கிறதென்று அர்த்தமாம்

உடனடியாக அதற்குண்டான சில வைத்தியம் செய்யும் போது உயிர் மீண்டுவிடுமாம்

அடேய் இறப்பு ஏற்பட்ட நிலையிலும் கூட  ஒரு சில நாழிகைக்குள் போன உயிரையே மீட்ட மருத்துவத்திற்கா உயிரோடு இருக்கும் உடலிலிற்கு நோயை தடுக்க மருந்து தெரியாது

சித்த மருத்துவத்தின் சிறப்பு 4
----------------------------------------------------

வெளி மருந்தில் கலிக்கம் என்று உள்ளதை படித்தீர்கள் அல்லவா

சித்த மருந்துவத்தில் இது ஒரு அபூர்வமான வைத்திய முறை

அப்படி என்ன அதியம் இதில் உள்ளது என கேட்பது தெரிகிறது

அதாவது

கண்களில் சொட்டு மருந்து விடுவது மூலமாகவே

உடலில் உள் உறுப்புகளில் உள்ள பிற நோய்களையும் சரி செய்யும் மருந்திற்கு பெயரே கலிக்கம்

சமீபத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் நெல்லூர் வைத்தியர் ஆனந்தய்யா பல லட்சம் பேருக்கு கொரோனா மருந்து கொடுத்து வந்தாரல்லவா

அங்கு எனது மருத்துவ நண்பரின் நண்பர் ஒரு காவலராம் அவர் நேரில் பார்த்தை சொன்னார் இதோ

ஆம்புலன்சில் ventilator oxygen support உடன் வந்தவர்கள், Oxygen support எடுத்தால் உயிர் பிரிந்துவிடும் என்ற நிலையில் இருந்தவர்

ஆனந்தய்யா வைத்தியர் இவர் கண்களுக்கு மருந்து விட சில நிமிடத்திலேயே எழுந்து அமர்ந்தாராம் பாதிக்கப்பட்டவர் அதுவும் Oxygen support இல்லாமல். இப்படி ஆயிரக்கணக்கானோர் அங்கு உயிர் பிழைத்துள்ளார்கள்

பரம்பரை வைத்தியர் ஆனந்தய்யா கண்களுக்கு மருந்து விட்டார் அல்லவா

அந்த மருத்துவ முறைக்கு பெயர் தான் கலிக்கம்

அடேய் நீ எந்த நோய்க்கு மருந்து இல்லை என்று சொன்னையோ

அதே நோயால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்டு சாகக்கிடந்த நிலையில் இருந்தவரை ஒரு சில நிமிடத்தில் குணப்படுத்திய மருத்துவத்திற்கா

இந்த நோயை தடுக்க மருந்து தெரியாது

நிச்சயம் தெரியும்

இதோ சித்த மருத்துவர்கள், வைத்தியர்கள் எனக்கு வழங்கிய தடுப்பு மருந்துகளை இந்நாட்டிற்கு பகிர்கிறேன்

வந்தாச்சு இயற்கை தற்சார்பு தடுப்பூசி
------------------------------------------------------------------

தடுப்பு மருந்துகள் 
--------------------------------

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 
வைத்தூறு போலக் கெடும்.

குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின்முன் நின்ற வைக்கோல்போர்போல் அழிந்துவிடும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை

தற்போது பரவி வரும் கொரோனா போன்ற பெருந் தொற்றுகளுக்கும், உருமாறிய கொரோனாக்களுக்கும், டெல்டா கொரோனாக்களுக்கும், கருப்பு வெள்ளை பூஞ்சை நோய்களுக்கும், அடுத்தடுத்து இன்னும் எத்தனை அலை கொரோனா வந்தாலும், இனி வர உள்ள என சொல்லப்படும் புதிய புதிய தொற்று நோய்கள் அனைத்தையும் தடுக்க இதுவே தடுப்பு மருந்து

இரத்தக்குழாய் வழியாக தடுப்பூசி போட்டால் தான் நோயை தடுக்க முடியுமா ?

வாய் வழியாக மருந்து எடுத்தால் நோயை தடுக்க முடியாதா ?

முடியாது என்றால்

போலியோ சொட்டு மருந்து வாய்வழியாகத்தானே கொடுக்கிறார்கள்

அப்படி என்றால்

வாய்வழியாக எடுக்கும் மருந்தும் நோயை தடுக்கும் என்று தானே அர்த்தம்

வாய் வழியாக அலோபதி மருந்து கொடுத்தால் தான் நோயை தடுக்க முடியுமா ?

வாய் வழியாக சித்த மருந்து கொடுத்தால் நோயை தடுக்க முடியாதா ?

நிச்சயம் முடியும்

இப்போது தமிழகத்தின் சித்த மருத்துவர்கள், சித்த வைத்தியர்கள் எனக்கு வழங்கிய தடுப்பு மருந்துகளை பகிர்கிறேன்.

தடுப்பு மருந்து 1
-----------------------------

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை

என சொல்வார்கள்

இதோ முதலில் வந்துவிட்டான் சுப்பிரமணியன்

நோய் தடுப்பு மருந்தாக முதலில் வருவது சண்முக சூரணம்

சண்முக சூரணம்

நூல் ஆதாரம் : அகத்தியர் பரிபூரணம்

1 - சுக்கு
2 - மிளகு
3 - வால்மிளகு
4 - திப்பிலி
5 - ஆனை திப்பிலி
6 - சீரகம்
7 - கருஞ்சீரகம்
8 - நெல்லிமுள்ளி
9 - கடுக்காய்
10 - தான்றிக்காய்
11 - ஓமம்
12 - சுருள்பட்டை
13 - கிராம்பு
14 - கோஸ்டம்
15 - கோரைக்கிழங்கு
16 - பற்படாகம்
17 - தாளிசபத்திரி
18 - அகில் பட்டை
19 - அமுக்ரா
20 - சித்தரத்தை
21 - அதிமதுரம்
22 - ஏலரிசி
23 - கருங்காலி தூள்
24 - மஞ்சள்
25 - கஸ்தூரி மஞ்சள்
26 - தனியா
27 - சிறுநாகப்பூ

மேற்கண்ட சரக்குகள் அனைத்தும் 1பலம்(35கிராம்)

28 - தூதுவேளை
29 - ஆடாதொடை
30 - கருந்துளசி
31 - விஷ்ணுகிராந்தி
32 - ஓரிதழ் தாமரை
33 - நிலவேம்பு
34 - கரிசாலை
35 - கீழாநெல்லி

மேற்கண்ட மூலிகைகள் அனைத்தும் 70 கிராம்

செய்முறை

அனைத்தையும் பொடிசெய்து கொள்ளவும், மொத்தம் 1 கிலோ சூரணம் வருகிறது என்றால் ஒரு லிட்டரிற்கு சற்று அதிகமாக நாட்டு பசும்பால் எடுத்துக்கொள்ளவும்

ஒரு இட்லி பாத்திரத்தில் நாட்டு பசும் பால் ஊற்றி இட்லி தட்டு வைத்து அதில் துணி விரித்து இந்த சூரணத்தை வைத்துத்து மூடி

அந்த ஒரு லிட்டர் பால் முழுவதும் சுண்டிய பின்னர் சூரணம் தயார் என்று அர்த்தம்

பின்னர் இந்த சண்முக சூரணத்தை சேகரித்து வைக்கவும்

இதை பாலில் பிட்டு அவியல் இடுதல், பாலேற்றம் செய்தல் என சொல்வார்கள். இதன் பலன்கள் பிட்டு அவியல் செய்தால் சூரணத்தின் ஆயுட்காலம் 1 வருடம், செய்யாவிட்டால் 6 மாதம், மேலும் பிட்டு அவியல் செய்தால் சுரணத்தின் சக்தி அதிகரிக்கிறது, இதில் உள்ள குற்றங்கள் நீங்குகிறது

பயன்படுத்தும் முறை

பெரியவர்கள்

தடுப்பு மருந்தாக எடுப்பவர்கள் 3 கிராம் வெண்ணீரில் கலந்து எடுக்கலாம்

இரண்டு வேளை காலை மாலை சா.பின்

வாரம் இரண்டு நாள் மட்டும் எடுத்து வந்தால் போதுமானது

தொற்று சுரம் உள்ளவர்கள் 6 கிராம் அளவு தேனில் கலந்து தொடர்ந்து 5 நாள் வரை எடுக்கலாம்

சிறுவர்கள் அதில் பாதி அளவு

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 1 முதல் 2 சிட்டிகை அளவு அதே முறையில் எடுக்கலாம்

தாய் பால் எடுக்கும் குழந்தைகளுக்கு, தாய் மருந்து எடுத்தால் போதுமானது

தீரும் நோய்கள்

தீராத விஷ ஜுரம் எலும்பை பற்றும் காய்ச்சல் சளி இருமல் ஆஸ்துமா இளைப்பு சுவையின்மை தீரும்

தடுப்பு மருந்து 2
----------------------------

இப்போது நாம் பார்க்க உள்ள கொரோனா தடுப்பு மருந்து

நுரையீரலை சுத்தம் செய்ய கொரோனா Positive உள்ளவர்களும் இல்லாதவரும் எடுக்கலாம்

கிட்டத்தட்ட 5 லட்சம் மக்களுக்கு ஒரு தனி வைத்தியர் இம்மருந்தை இலவசமாக தடுப்பு மருந்தாக கொடுத்துள்ளார்

இம்மருந்தை எடுத்த எவருக்கும் கொரோனா தாக்கவில்லை

ஆம் நண்பர்களே

அரசு அனுமதி வழங்கிய நெல்லூர் கிருஷ்ணபட்டினம் பரம்பரை சித்த வைத்தியர் ஆனந்தய்யா அவர்கள் கொரோனா மருந்து இதோ உங்களுக்காக

உங்களுக்கொன்று தெரியுமா இவர் மருத்துவம் கற்றதே தமிழகத்தில் தான்

ஆனந்தய்யாவின் கொரோனா இலேகியம் 
-------------------------------------------------------------------------

தேவையான பொருட்கள் !
---------------------------------------------

1 - வெள்ளெருக்கன் பூ மொக்கு - 50 கிராம்

2 - வில்வம் துளிர் - 50 கிராம்

3 - நாவல் துளிர் - 50 கிராம்

4 - வேப்பத் துளிர் - 50 கிராம்

5 - சிறுபூனைக்காலி - 50 கிராம்

( இவை அனைத்தும் 5 பங்கு )

6 - கருஞ்சீரகம் - 10 கிராம்

7 - பட்டை - 10 கிராம்

8 - மஞ்சள் - 10 கிராம்

9 - வால் மிளகு - 10 கிராம்

10 - பச்சை கற்பூரம் - 10 கிராம்

11 - பரங்கி பட்டை - 10 கிராம்

( இவை அனைத்தும் 1 பங்கு )

12 - தேன் - 800 மிலி

செய்முறை

1 முதல் 5 வரை உள்ள மூலிகைகளை லேசாக தண்ணீர் விட்டு நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும்

6 முதல் 11 வரை உள்ள சரக்குகளை நன்றாக பொடி செய்து சலித்து எடுத்துக்கொள்ளவும்

இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து தேனில் சிறுதீயில் வேக வைக்கவும்

தேன் சுண்டி ஒன்றாக திரண்டு வரும்

கிட்ட தட்ட 2 மணி நேரம் ஆகலாம்

லேகிய பதம் வந்ததும் அடுப்பை அனைத்து ஆற வைத்தால்

ஆனந்தய்யாவின் கொரோனா இலேகியம் தயார்

பயன்படுத்தும் முறை
-------------------------------------

பொது மக்கள் நோய் தடுப்பு மருந்தாக 2 வாரத்திற்கு ஒரு முறை ஒரு வேளை மட்டும் சா.பின் நெல்லிக்காய் அளவு எடுத்தால் போதுமானது

கொரோனா Positive உள்ளவர் தினம் நெல்லிக்காய் அளவு இரண்டு வேளை சா.பின் 3 நாள் மட்டும் எடுத்தால் போதுமானது

சிறுவர்கள் சுண்டக்காய் அளவு எடுத்தால் போதுமானது

5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு நாக்கில் ஒரு துளி தடவி விட்டால் போதுமானது

தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு, தாய் இம்மருந்தை எடுத்தால் போதுமானது

மருந்து எடுக்கும் போது தவிர்க்க வேண்டியது என்ன ?

அசைவ உணவுகள்

யார் இம்மருந்தை தவிர்க்க வேண்டும் ?

கர்ப்பிணிகள் மற்றும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் இம்மருந்தை தவிர்க்கவும்

நெல்லூர் கிருஷ்ணபட்டினம் ஆனந்தய்யா அவர்களின் இந்த பொது மருந்தை

கொரோனா வராமல் தடுக்கவும்

வந்தவர்க்கு நோய் தீர்க்கவும் கொடுக்கலாம்

தடுப்பு மருந்து 3
----------------------------

தேவையான பொருட்கள்

1 - சீந்தில் சூரணம்
2 - கரிசாலை கர்பம்
3 - அஸ்வகந்தா சூரணம்

4 - கபசுரக் குடிநீர்
5 - வாதசுரக் குடிநீர்

1,2,3 பயன்படுத்தும் முறை

சீந்தில் சூரணம் 1/4 tea spoon இரண்டு வேளை சா.பின் தேன் கலந்து எடுக்கலாம்

5 வயதிற்கு மேல் உள்ள சிறுவர்கள் 2 சிட்டிகை எடுக்கலாம்

5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 1 சிட்டிகை எடுக்கலாம்

கரிசாலை கர்பம் மாத்திரை 1 இரண்டு வேளை சா.பின் வெந்நீரில் எடுக்கலாம்

சிறுவர்கள் 1/2 மாத்திரை

அஸ்வகந்தா சூரணம் 1 டி ஸ்பூன் இரண்டு வேளை சா.பின் பாலில் எடுக்கலாம்

சிறுவர்கள் 1/2 டி ஸ்பூன்

அடுத்து

4,5 பயன்படுத்தும் முறை

வாதசுரக்குடிநீர் : 1/2 தே.க

கபசுரக்குடிநீர் : 1/2 தே.க

செய்முறை

இரண்டையும் 4 டம்ளார் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்

1/2 டம்ளாராக வந்த பின்

வடித்து இளம்சூட்டில் அருந்தவும்

பயன்படுத்தும் அளவு

தடுப்பு மருந்தாக எடுப்பவர்கள்

பெரியவர்கள் : 40 மிலி

சிறுவர்கள் : 10 மிலி

5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு : 2.5 மிலி ( 1 டீ ஸ்பூன் )

எடுக்கலாம்

எப்போதெல்லாம் பயன்படுத்தலாம்

15 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து 3 நாட்கள் பயன்படுத்தலாம், 1 வேளை மட்டும் சா.பின் எடுக்கலாம். ஒரு மாதத்திற்கு 3 முதல் 7 நாட்கள் வரை கூட பயன்படுத்தலாம்

சுரம் உள்ளவர்கள்

பெரியவர்கள் : 60 மிலி

சிறுவர்கள் : 20 மிலி

5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு : 5 மிலி ( 2 டீ ஸ்பூன் )

சுரம் தீரும் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்

ஒவ்வொரு மாதமும் இது போல் பயன்படுத்தலாம்

ஆங்கில மருந்துகள் எடுக்கும் போது வயிறு புண்ணாகாமல் இருக்கவும் மாத்திரை சேர்த்து கொடுப்பார்கள் அல்லவா

அதேப்போல் வீரியமான கசாயங்களை தொடர்ந்து எடுக்கும் போது

நீங்கள் ஒரு வேளை ஏலாதிச்சூரணம் தேனிலோ வெந்நீரிலோ எடுத்தால் உங்கள் வயிற்றிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

சிலர் கசாயம் நல்லது என்று அதிகமாக குடித்து விடுகிறார்கள் அவர்களுக்காக சொல்கிறேன்

தடுப்பு மருந்து 4
-----------------------------

தேவையான பொருட்கள்

வில்வம் இலை - 2

துளசி இலை - 2

வேம்பு இலை - 2

மிளகு - 2

பயன்படுத்தும் முறை

அனைத்து இலைகளையும் நடுத்தர இலையாக எடுத்துக்கொண்டு அதில் 2 மிளகு வைத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடவும்

தினம் காலை சா.முன் ஒரு வேளை மட்டும்

சிறுவர்கள் அதில் பாதி அளவு எடுக்கலாம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கர்ப்பிணிகள் என அனைவரும் இம்மருந்தை

48 நாட்கள் தொடர்ச்சியாக எடுக்கலாம்

இதனுடன் கேழ்வரகை பல்வேறு விதத்தில் உணவாக எடுத்தால் உடலின் நோய் தடுப்பாற்றல் சிறப்பாக வேலை செய்யும்

தடுப்பு மருந்து 5
----------------------------

தேவையான பொருட்கள்

சுக்கு - 25 கிராம்

மிளகு - 25 கிராம்

திப்பிலி - 25 கிராம்

கோரைக்கிழங்கு - 25 கிராம்

இலவங்கப்பட்டை - 25 கிராம்

இலவங்க இலை - 25 கிராம்

நெல்லி வற்றல் - 25 கிராம்

ஏலரிசி - 25 கிராம்

பனங்கற்கண்டு - 350 கிராம்

செய்முறை

சுக்கு தோல் நீக்கவும், கோரைக்கிழங்கு அதன் வேர் குப்பைகளை சுத்தம் செய்து உரலில் ஒன்றிரண்டாக இடித்துக்கொள்ளவும்

இந்த கலவையை ஒரு கிலோவிற்கு மேல் மிசினில் கொடுத்தால் அரைத்து கொடுப்பார்கள்

இதை வீட்டில் மிக்சியில் அரைக்க முடியாது

பயன்படுத்தும் முறை

1/4 tea spoon பொடி

200 ml தண்ணீரில் போட்டு

100 ml ஆக கொதிக்க விடவும்

பெரியவர்கள் ஒரு டம்ளர் அளவும்

சிறுவர்கள் 1/2 டம்ளர் அளவும்

தேனீர் போல் பருகலாம்

தினம் 1 முதல் 3 வேளை வரை சா.பின் எடுக்கலாம்

தடுப்பு மருந்து 6
-----------------------------

தேவையான பொருட்கள்

வேம்பம்பட்டை பொடி - 50 கிராம்

சீந்தில் தண்டு பொடி - 50 கிராம்

விஸ்ணுகிராந்தி பொடி - 25 கிராம்

பற்படாகம் பொடி - 25 கிராம்

பயன்படுத்தும் முறை

இந்நான்கையும் கலந்து வைத்துக்கொள்ளவும்

4 டம்ளார் தண்ணீரில் 1 ஸ்பூன் பொடி போட்டு கொதிக்க வைத்து, கொதிக்கும் போது அதில் மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை சேர்த்து 3 டம்ளாராக வந்த பின்

பெரியவர்கள் 1/2 டம்ளார் அளவு

சிறுவர்கள் 1/4 டம்ளார் அளவு

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 ஸ்பூன் அளவு கொடுக்கலாம்

தாய் பால் குடிக்கும் குழந்தைகளின், தாய் குடித்தால் போதுமானது

இம்மருந்தை தொடர்ந்து 48 நாட்கள் இரவு மட்டும் சா.பின் கொடுக்கலாம்

கர்ப்பிணிகள் 5 மாதத்திற்கு பிறகு

தீரும் நோய்கள்

அனைத்து வைரஸ் காய்ச்சல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா போன்ற காய்ச்சல்கள் வராமல் தடுக்கும்

குறிப்பு : மேலே ஆறு வகையான சித்தா தடுப்பு மருந்துகளை சொல்லி உள்ளேன். அனைவரும் அனைத்து மருந்துகளையும் எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, யாருக்கு எது கிடைக்கிறதோ அதை பயன்படுத்தலாம், இவை அனைத்தும் சம அளவு சக்தி உடையது தான், நீங்கள் அனைத்து மருந்தையும் எடுத்தாலும் தவறு இல்லை, ஒரே நாளில் அனைத்து தடுப்பு மருந்தையும் எடுக்காதீர்கள், ஒரு நாளில் ஒரு மருந்து மட்டுமே எடுங்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள கால அவகாசத்திற்கு மட்டும் எடுங்கள், அனைவரும் செய்யும் ஒரு தவறு என்னவென்றால் நல்லது என்று சொன்னால் போதும் தினம் வீட்டில் திருவிழா தான், விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் தான் என்ற பழமொழி எப்போதும் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கட்டும்

ஒருவேளை உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால்

ஏற்கனவே உங்கள் உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தகுந்தார் போல் இம்மருந்துகளை எப்படி சாப்பிடலாம் என்று தேர்வு செய்து தர வேண்டும் என்றால்

உங்கள் வீட்டு அருகே உள்ள சித்த மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்

இம்மருந்துகள் அனைத்தும் தாய்ப்பாலிற்கு நிகரானது

*கொரானாவிற்கு பிறகு உடல் தேற எடுக்க வேண்டிய சித்த மருந்துகள்*
------------------------------------------------------------------------------

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 15 நாட்களில் கொரோனா Negative வந்தால் உங்கள் உடல் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை

கொரோனா பாதிப்பிற்கு தகுந்தார் போல் நீங்கள் தொடர்ந்து 1 மாதம் முதல் 6 மாதம் வரை கீழ் உள்ள சித்த மருந்துகளை எடுக்க வேண்டும்

கொராணா வந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு அல்லது நம் மருந்து 5 நாளோ 7 நாளோ கொடுத்து கொரானா அறிகுறியில் இருந்து மீண்ட பிறகும் பலருக்கு உடல் சோர்வு, உடல் வலி, மூச்சு இரைப்பு, பலவீனம், போன்ற பிரச்சனைகள் உள்ளதை பார்க்கிறோம். 
உடல் பலமடைய

1.அமுக்கரா சூரணம் - 50 கி
இலிங்க செந்தூரம் - 5 கிராம்

கலந்து 500 mg Capsule ல் போட்டு காலை மற்றும் மாலை உணவுக்கு பிறகு கொடுக்கவும்.

2. சிலாசத்து பற்பம்
சங்கு பற்பம்
முத்து சிப்பி பற்பம்
சிருங்கி பற்பம்
பவள பற்பம்
வெடி அன்னபேதி செந்தூரம்

எல்லாம் சம அளவு கலந்து 300 mg முதல் 500 mg வரை Capsule ல் போட்டு உணவுக்கு முன் காலை மாலை கொடுக்கவும்.

3. கரிசாலை கற்பம் அல்லது இம்ப்காப்ஸ் சீந்தில் சூரணம் காலை இரவு கொடுக்க நுரையீரல் கல்லீரல் பலமடையும்.

4. பரங்கிப்பட்டை மாத்திரை 2 வேளை சா.பின் 1 மாத்திரை எடுக்கலாம்

எளிதில் செரிமானமாகவும் பசியை தூண்டவும் பஞ்சதீ பாக்கினி சூரணம் அல்லது அஸ்ட சூரணம் சேர்த்தும் கொடுக்கலாம்.

நோயாளியின் வயது, நோயின் தன்மை, 
அவரின் குறிகுணங்களை பொருத்து மருந்தின் அளவுகளை கூட்டியும், குறைத்தும்,

வேறு மருந்துகளை, சேர்த்தும் கொடுப்பது வைத்தியரின் கடமை.

அதிதீவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் இம்மருந்துகளை தொடர்ந்து 6 மாதம் எடுக்க வேண்டும்

கொரோனாவால் ஒரளவு பாதிக்கப்பட்டோர் இம்மருந்துகளை தொடர்ந்து 3 மாதங்கள் எடுக்க வேண்டும்

கொரோனாவால் லேசாக பாதிக்கப்பட்டோர் இம்மருந்துகளை தொடர்ந்து 1 மாதம் எடுக்க வேண்டும்

தடுப்பூசியின் நஞ்சை உடலில் இருந்து நீக்கும் மருந்து
------------------------------------------------------------------------------

தடுப்பூசி போட்டதால் உங்கள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால்

அதெல்லாம் சரியாகுமா என்று எனக்கு தெரியாது

ஆனால் தடுப்பூசியில் உள்ள நச்சுக்களை இம்மருந்து உடலில் இருந்து வெளியேற்றும்

ஏதாவது தடுப்பூசிபோன்ற மருந்துகள் உலகில் எந்தநாட்டில் போட்டுக்கொண்டாலும் அதன் எதிர்விளைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழரின் உலகநாடுகளுக்கான  மருத்துவம்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நச்சுக்களை நீக்க,

1. தடுப்பூசி போட்ட பத்து நாள் கழித்து இம்மருந்தை எடுக்கலாம்

தேவையான பொருள்

கருஞ்சீரகம்       - 25 கிராம் 
குப்பை மேனி    - 25 கிராம்
சதைகுப்பை       - 25 கிராம்
கிராம்பு                 - 25 கிராம்
ஏலக்காய்              - 25 கிராம்
அண்ணாசி பூ      - 25 கிராம்
பட்டை                    - 25 கிராம்
மஞ்சள்                  - 25 கிராம்
கரந்தை                 - 25 கிராம்
மிளகு                     - 25 கிராம்
சுக்கு                       - 25 கிராம்
திப்பிலி                  - 25 கிராம்

பயன்படுத்தும் முறை

அனைத்தையும் பொடி செய்து 1 ஸ்பூன் அளவு 400 மிலி தண்ணீர் விட்டு 100 மிலியாக வந்த பின்

பெரியவர்கள் 100 மிலி

சிறுவர்கள் 50 மிலி

5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் : 2 ஸ்பூன் அளவு

தொடர்ந்து 21 நாள் முதல் 48 நாள் வரை எடுக்கலாம்

2. இரசகாந்தி மெழுகு

இம்மருந்தை தொடர்ந்து 10 நாட்கள் மட்டும் எடுக்கலாம் (தோல் நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 3 மாதம் கூட எடுக்கலாம். சித்த மருத்துவரின் அறிவுரைப்படி)

பெரியவர்கள் சுண்டக்காய் அளவு இரண்டு வேளை சா.பின்

சிறுவர்கள் பட்டாணி அளவு இரண்டு வேளை சா.பின்

3. பேதி மருந்து அகத்தியர் குழம்பு

அகத்தியர் குழம்பு ஒன்று அல்லது இரண்டு மிளகு அளவு

ஒரு முறை பேதிக்கு எடுக்க வேண்டும் 

ஞாயிற்றுகிழமை, செவ்வாய்கிழமை, தேய்பிறை வியாழன் அன்று பேதி மருந்து எடுக்கலாம்

அதிகாலை 4 மணிக்கு தான் மருந்து எடுக்க வேண்டும்

இந்த பேதி மருந்தை எடுத்த பின் கூட நீங்கள் மேல் உள்ள மருந்தை தொடர்ந்து எடுக்கலாம்

சுண்டைக்காய் வற்றல் உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும்

நிலவேம்பு குடிநீரும் தடுப்பூசியில் உள்ள வைரசை அழிக்கும் வல்லமை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நிலவேம்பு குடிநீரை தடுப்பூசி போட்ட 10 நாள் கழித்து ஒரு வாரம் வரை நீங்கள் தொடர்ந்து எடுக்கலாம்

அத்தான் தடுப்பூசி நச்சை நீக்கும் மருந்து சொல்லீட்டாங்களே

இனி நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டு இம்மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என யாரும் நினைக்காதீர்கள்

ஏன் என்றால் மீண்டும் சொல்கிறேன் தடுப்பூசியால் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதெல்லாம் மாறுமா என தெரியாது நச்சுகள் வைரஸ்கள் மட்டுமே நீங்கும்

இந்த தகவல் தடுப்பூசியின் பாதகம் அறியாமல் போட்டுக்கொண்டவருக்கு மட்டுமே

சித்த மருத்துவர்கள் செய்ய வேண்டிய வேலை என்ன ?
------------------------------------------------------------------------

தமிழகத்தின்

சித்த மருத்துவர்கள் 
ஆயுர்வேத மருத்துவர்கள்
இயற்கை மருத்துவர்கள்
ஹோமியோபதி மருத்துவர்கள்
யுனானி மருத்துவர்கள் 
அஃகுபங்சர் ஹீலர்கள்
பல்துறை ஹீலர்கள்
வர்ம ஆசான்கள்

என பல்துறை மருத்துவர்கள் ஒருங்கிணைத்து

இவர்கள் உள்ள சங்கங்களை ஒருங்கிணைத்து

அரசு அனுமதி பெற்று ஒரு ஆய்வு செய்ய வேண்டும்

என்ன ஆய்வு

தமிழகத்தில் 1 லட்சம் மக்களை தேர்வு செய்ய வேண்டும்

50000 பேர் தடுப்பூசி போட்ட மக்கள்

50000 பேர் தடுப்பூசி போடாத மக்கள்

என தேர்வு செய்து

தடுப்பூசி போடாத 50000 மக்களுக்கு மேல் உள்ள சித்தா தடுப்பு மருந்தோ அல்லது இதை விட சிறப்பான மருந்து தங்களுக்கு தெரிந்தால் அதை கொடுக்க வேண்டும்

ஒரு 3 மாதம் வரை கொடுக்கலாம்

பிறகு 3 மாதம் கழித்து

1 லட்சம் மக்களை ஆய்வு செய்ய வேண்டும்

யார் யாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது

எந்த பிரிவு மக்களை அதிகம் தாக்கி உள்ளது என்று ஆய்வு அறிக்கை தயார் செய்ய வேண்டும்

நிச்சயம் சித்தா தடுப்பு மருந்து எடுத்த எவருக்கும் தொற்றி தாக்கி இருக்காது

தமிழகத்தின் ஒட்டு மொத்த மரபு மருத்துவர்கள் சார்பாக நீங்கள் தமிழக அரசிற்கு இந்த ஆய்வறிக்கையை சமர்பித்து

சித்தா தடுப்பு மருந்திற்கு அனுமதி வாங்க வேண்டும்

இனி இது தான் உங்கள் வேலை

இது நடந்தால் மட்டுமே

இந்நாடும், இந்நாட்டு அரசும், மக்களும் காக்கப்படுவார்கள்

அரசு செய்ய வேண்டிய வேலை என்ன ?
---------------------------------------------------------------------

சித்த மருத்துவர்கள் தலைமையில் பெறப்பட்ட ஆய்வு அறிக்கையின்

உண்மைத்தன்மையை பரிசோதித்து

உண்மையாக இருக்கும் பட்சத்தில்

நீங்கள் சித்தா தடுப்பு மருந்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது

பரம்பரை பரம்பரையாக மரபு வழி மருத்துவம் மட்டும் பார்க்கும் ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கை

100 ல் 99 பேருக்கு தானாக சரியாகும் ஒரு பிரச்சனைக்கு தடுப்பூசியே அவசியம் இல்லையே

1 % சதவீத மக்களை மருத்துவம் பார்த்து சரி செய்து கொள்ளலாமே

அப்படியே நீங்கள் தடுப்பூசி போட்டாலும் அதன் ஆயுட்காலம் 8 மாதம் தான் என தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமே சொல்கிறது

ஆண்டுக்கு ஒரு தடுப்பூசி போட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பொறுப்பாளர்கள் சொல்கிறார்கள்

அப்ப வருட வருடம் தடுப்பூசிக்கு மட்டும் நீங்கள் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்ய வேண்டியது வருமே

ஏன் நீங்கள் சித்தா தடுப்பு மருந்தை முயற்சி செய்ய கூடாது

இது பெரும் பொருளாதாரத்தை மிச்சப்படுத்தி தருமே

அரசும் நலமடையும்

மக்களும் நலமடைவார்களே

அரசின் மேன்மை போற்றப்படுமே

சித்தா தடுப்பு மருந்து சரியாக இருக்கும் பட்சத்தில் உலக நாடுகளுக்கே நீங்கள் தடுப்பு மருந்து தயாரித்து விநியோகம் செய்யலாமே

இதனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் சிறப்படையுமே

நீங்கள்

மருத்துவம் படிக்க

அலோபதி மருத்துவ கல்லூரி

சித்தா மருத்துவ கல்லூரி

என்று வைத்துள்ளது

யாருக்கு எந்த மருத்துவம் பிடிக்கிறதோ அதை படிக்கிறார்கள்

அதேப்போல்

அலோபதி தடுப்பு மருந்து

சித்தா தடுப்பு மருந்து

என கொண்டு வரலாமே

யாருக்கு எது விருப்பமோ அதை எடுத்துக்கொள்ளட்டுமே

பரம்பரை பரம்பரையாக சித்தா மரபு வழி மருத்துவம் மட்டும் பார்க்கும் மக்களுக்கு நீங்கள் வழங்கும் வாய்ப்பு என்ன ?

நன்றி

இரா.மதிவாணன்