குழந்தைப் பேறு!... அகத்தியரின் தீர்வு!!
அகத்தியர், சித்த மருத்துவம், பெண்களுக்கான தீர்வுகள் தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது என்கிற நம்பிக்கை நமது சமூகத்தில் வேரோடியிருக்கிறது. திருமணம் ஆன ஒவ்வொரு பெண்ணும் அவளது சுற்றமும் இந்த தாய்மை அடைதலை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது தொட்டுத் தொடரும் பாரம்பரிய நிகழ்வு. ஒரு வேளை அதே பெண்ணிற்கு தாய்மை அல்லது கருவுறுதல் தாமதமானால் கொஞ்சமும் ஈவிரக்கம் இல்லாத அவளின் சமூகம், அந்த பெண்ணிற்கு தரும் பட்டம் ”மலடி”, இது காலம் காலமாய் பெண்கள் மீது நடத்தப்படும் உளவியல் ரீதியான வன்முறை, தற்காலத்தில் இந்த போக்கில் கொஞ்சம் விழிப்புணர்வு வந்திருப்பது ஆறுதலான ஒன்று. தற்போதைய நவீன அலோபதி மருத்துவம் பல தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவ #3016; செலவு பிடிப்பனவாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் இதற்கு பல தீர்வுகளை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர். அவற்றை தொடர்ச்சியாக பதிவுகளின் ஊடே பகிர்ந்து வருகிறேன். அந்த வரிசையில் இன்று அகத்தியர் அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம். "அகத்தியர் வைத்தியம் 600" என்னும் நூலில் இந்த முறை அருளப் பட்டிருக்கிறது. கேளுநீ கெர்ப்பந்தான் வாழ்வதற்கு கெடியான நன்னாங்கள்ளி வேரு ஆளவேயரைத்துப் புன்னைக்காய் போலே ஆவின்வெண்ணெய் பாக்களவு கலந்து நீளநீகுளித்த முதல் மூன்றுநாளும் நினைவாகத் தானருந்த கெர்ப்பமுண்டாம் கோளறவே பத்தியந்தான் புளிபுகையும் கொள்ளாம லாவின்பால் சோறுமுண்ணே. - அகத்தியர். கர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நன்னாங்கள்ளி வேரினை அரைத்து புன்னைக் காயளவு எடுத்து அத்துடன் பசுவின் வெண்ணெய் பாக்களவு கலந்து உட்கொண்டு, இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்குமாம். பத்தியமாக மருந்துண்ணும் மூன்று நாட்களும் புளியும், புகையும் நீக்குவதுடன் சாதத்தில் பசுப்பால் விட்டு சாப்பிடவேண்டும் என்கிறார். ஆச்சர்யமான தகவல்தானே!, தேவையிருப்பவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள் தேவையுள்ளோருக்கு இந்த தகவலை அறியத் தரலாம்

No comments:
Post a Comment