Wednesday, August 10, 2016

கர்ப்பிணிப் பெண்கள் வாந்தி எடுக்காமல்இருக்க

கர்ப்பிணிப் பெண்கள் வாந்தி

 மருந்து இல்லாமல் வாந்தியை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.

 தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடுவது நல்லது. முடிந்தால் குல்கந்து

( ரோஜா இதழ்களை தேனில் போட்டுத் தயாரிப்பது)

 சேர்த்து வெற்றிலை சாப்பிடுங்கள். இது அஜீர்ணம், வாந்திக்கு நல்லது.

ஆரஞ்ச், மொசாம்பிக் ஜூஸ் நல்லது. தலை குளிக்கும் அன்று இந்த ஜூஸ்களை குடிக்காதீர்கள்.

குமட்டல் தோன்றும் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள். என்ன பிடிக்கிறதோ அதில் சத்தான சாப்பாடாக சாப்பிடுங்கள்.

 கீரை, மீன் போன்றவை மிகவும் நல்லது. வாமிட் வரும்போல இருந்தால் ஒரு எலுமிச்சை பழத்தை நன்றாக கசக்கி முகருங்கள். சாப்பிட்டவுடன் மெதுவாக நடங்கள்.

 ஜூஸ் மட்டும் குடிக்க பிடித்தால் காய்கறி கலந்த V8 ஜூஸ் குடியுங்கள்..உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு பொருட்களைத் தவிருங்கள்.

பைனாப்பிள், மாம்பழம், பப்பாளி போன்றவை கொஞ்ச நாட்களுக்கு வேண்டாம்.

மாத்திரை வேண்டவே வேண்டாம் என்பதே என் அட்டைஸ்.

இரண்டு பேருக்கு என்று நிறைய சாப்பிட வேண்டுமென்று அர்த்தமில்லை. எது சாப்பிட்டாலும் சத்தாக சாப்பிட வேண்டியதே அவசியம்.

சிலருக்கு பிரெட், பாரிட்ஜ் போன்றவை மட்டுமே பிடிக்கும். பொரியல் போன்றவை பிடிக்காவிட்டால் எல்லா காய்கறியும் போட்டு சாம்பார், சூப் என்று சாப்பிடுங்கள்.

 தக்காளி சூப் குடிப்பதுக்கூட வாந்தியை கட்டுப்படுத்தும்.

வாந்தி நிற்க வேண்டி லெமன் சோடா போன்றவற்றை குடிக்காதீர்கள். அதுவும் உடலுக்கு நல்லதல்ல.

கர்ப்பிணி பெண்களுக்கு
கர்பிணி பெண்கள் சாப்பிட கூடாதவை



1.சூடான அயிட்டம் எதுவும் சாப்பிட கூடாது.

2.பைனாப்பிள்,கொய்யா,பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும். 7 மாதத்திற்கு மேல் சிறிது சாப்பிடலாம்.

3.,இறால், பீஃப் ,கருவாடு ரொம்ப சூடு, கொஞ்சமா சாப்பிட்டு கொள்ளலாம்,

4.இரவு சாப்பாட்டை 7 மணிக்குள் முடிக்கவும்.

5.காய் வகைகளில் கேஸ் அயிட்டம் உருளை, சேனை,சீனி வள்ளி,மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.

கர்ப்பிணி பெண்களுக்கான அறிவுரைகள்   டிப்ஸ்

முதல் 3 மாதங்களில் கர்ப்பிணிகள் உட் கொள்ள வேண்டிய உணவுகள்!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. 

எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும் மருத்துவர்கள், இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது.

அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.

• பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.

• பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.

• கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். ஆனால் அதிகளவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

• ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.

• முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.

• பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன

No comments:

Post a Comment