மாத விலக்கும், உடல் உபாதைகளும்.
பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் மாதவிலக்கு என்பது பெண்கள் பருவம் எய்திய நாள் துவங்கி நாற்பத்தி ஐந்து முதல் ஐம்பது வயது வரையில் தொடரும் ஒரு உடல் இயங்கியல் நிகழ்வு. மூளையில் உள்ள Anterior pituitary gland எனும் சுரப்பியினால் சுரக்கப் படும் இரண்டு இயக்கு நீர்மங்களான Follicle Stimulating Hormone(FSH), Luteinizing Hormone(LH) ஆகியவையே மாதவிலக்கு சுழற்சியினை முறைப்படுத்துகின்றன. இவற்றில் Follicle Stimulating Hormone(FSH) எனும் இயக்கநீர் சூலகத்தில் கருமுட்டையை உருவாக்கி வளர்க்கும் வேலையைத் தூண்டுகிறது. Luteinizing Hormone(LH) எனும் இயக்க நீர் முதிர்ந்த கருமுட்டையை சூலகத்தில் இருந்து வெளித் தள்ளி கருவறைக்கு செல்லும் பாதைக்கு நகர்த்தும் வேலையினை தூண்டுகிறது. இந்த நீர்மங்களின் சுரப்பு விகிதம் ஒன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் இருக்கும் வரை மாதவிலக்கு சுழற்சி சுமூகமாய் நடந்து கொண்டிருக்கும். மாறாக இவற்றின் விகிதங்கள் மாறுபட்டால் அவை மாதவிலக்கு சுழற்சி மற்றும் கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கும், மேலும் அவை தொடர்பான வேறு சில நோய்களுக்கும் ஆரம்பப் புள்ளியாக அமைந்து விடுகிறது. நம்மில் பெருவாரியான பெண்களுக்கு சுமூகமான மாதவிலக்கு சுழற்சி ஏற்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம். மாதவிலக்கு துவங்குவதற்கு முன்னரே உடல் மற்றும் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை பெண்கள்எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இதனை ”Premenstrual syndrome” (PMS) என்கின்றனர். சமீபத்தைய ஆய்வறிக்கை ஒன்றின் படி இந்த காலகட்டத்தில் பெண்கள் 200 வகையான உடல் உபாதைகளை எதிர் கொள்கிறார்களாம்.இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னவோ நமது முன்னோர்கள் இந்த நாட்களில் பெண்களுக்கு பூரண ஓய்வினை அளித்தனர். விரக்தி, கோபம், எரிச்சல், படபடப்பு, ஆத்திரம், அழுகை, சோம்பல் போன்றவைகளை உளவியல் பாதிப்புகளாக கூறலாம். அடி வயிற்றில் வலி, மார்பகங்கள் கனத்து வலி ஏற்படுதல், தலைவலி,வாந்தி,வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு என உடலியல் உபாதைகளின் பட்டியல் நீள்கிறது. மாதவிலக்கின் போது பெண்கள் எதிர்கொள்ளும் முதன்மையான சிரமம் குருதிப் போக்கு. நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கு 50 முதல் 80 மில்லி குருதி ஒரு நாளில் வெளியேறும். துவக்கத்தில் அதிகமாய் இருக்கும் இந்த குருதிப் போக்கு அடுத்தடுத்த நாட்களில் குறைந்து விடும். ஆனால் சிலருக்கு குருதிப் போக்கு மிக அதிகமாகவும், சிலருக்கு குருதிப் போக்கே இல்லாமலும் இருக்கும். கருப்பையின் வாய்(cervix) சிறியதாக இருப்பவர்களுக்கு சூதகம் வெளியேறும் போது கடும் வலி ஏற்படும். மேலும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிவதாலும் வலி உண்டாகும். சிலருக்கு கருப்பையானது வழமையான நிலையில் இருந்து மாறி அமைந்திருக்கும், அத்தகையவர்களுக்கும் அதிக வலி உண்டாகும். கருமுட்டை சிதைந்து வெளியேறும் போதும் வலியேற்படும். இத்தகைய வலிகளை தவிர்க்க தற்போது பல்வேறு மருந்து மாத்திரைகள் உள்ளன. எனினும் இயன்றவரை அவற்றை தவிர்த்து விடுதல் நலம். இந்த நாட்களில் உணவில் இனிப்பை முற்றிலுமாக தவிர்த்துவிட்டால் வலியின் தாக்கம் குறைவாக இருக்கும்.மேலும் வென்னீர் ஒத்தடம் கொடுப்பதும் பலனைத் தரும். இது தொடர்பில் சித்தர்கள் அருளிய தீர்வுகளை தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன். இயல்பான சுழற்சியில் மாதவிலக்கு ஆகாதவர்கள், தாங்க இயலாத வலி மற்றும் உடல் உபாதைகளை எதிர் கொள்வோர், முப்பது வயதைத் தாண்டியவர்கள் மருத்துவரை அணுகி தேவையான பரிசோதனைகளை செய்து கொள்ளவது அவசியம்.ஏனெனில் இத்தகைய உபாதைகள் வேறு சில நோய்களின் அறிகுறியாக இருக்கும் வாய்ப்புள்ளது. துவக்க நிலையில் மருத்துவரை அணுகுவது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். மாதவிலக்கு தொடர்பில் பெண்கள் உடல்ரீதியாக எதிர்கொள்ளும் நோய்களைப் பற்றி

No comments:
Post a Comment