மாதவிலக்கு. உணவும், தீர்வும்!
பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் நமது உடல் இயக்கம் என்பது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வரை, அதைப் பற்றி நாம் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் இந்த இயக்க சுழற்சியில் ஏதேனும் இயல்பு மீறுதல் அல்லது மாற்றம் அடையும் போது, நமக்குள் இனம் புரியாத பதற்றமும், பயமும் தொற்றிக் கொள்கிறது. இந்த பதற்றமே பாதி நோயாகி விடுவதை நம்மில் பலரும் உணர்வதே இல்லை. மாதவிலக்கு சுழற்சியில் ஒழுங்கின்மை, உடல்வலி, மேலதிக குருதிப் போக்கு நிகழும் போது அதற்கான காரணம் தெரியாததினால், ஏற்படும் பயமும், பதட்டமுமே பலருக்கு கூடுதல் உடல், உள்ள நலிவை ஏற்படுத்துகிறது. இதன் பொருட்டே மாதவிலக்கின் அனைத்து கூறுகளையும் பற்றி எழுதிட நேர்ந்தது. இப்போது மாதவிலக்கு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்த தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இனி அவற்றை தீர்க்கும் வழிவகைகளை பற்றி பார்ப்போம். இந்த தொடரில் பகிர்ந்து கொள்ளும் விவரங்களை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன். இந்தத் தகவல்களைக் கொண்டு முறையான வல்லுனர்கள், மருத்துவர்களின் உதவியோடு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றிட வேண்டுகிறேன். உடல் சார்ந்த எந்த ஒரு பிரச்சினைக்கும் இரண்டு வகையான தீர்வுகள் இருக்கின்ற்ன. முதலாவது வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள், மற்றது மருந்துகள் சார்ந்த தீர்வுகள் அதென்ன வாழ்வியல் ஒழுங்கு சார்ந்த தீர்வுகள்? நமது எண்ணம், செயல், சிந்தனைகளே, நமது வெளிப் புற அடையாளங்களையும், உள் உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் நமது உடல் இயங்கியலின் செயற்பாட்டை தீர்மானித்து ஒழுங்கு செய்வதும் நம்மில் இருந்தே துவங்குகிறது. இதனையே நமது முன்னோர்களும் காலம் காலமாய் வலியுறுத்தி வந்திருக்கின்றனர். எளிமையாய் சொல்வதென்றால் “இயற்கையோடு இணைந்த இயல்பான வாழ்வு” என்பதே நம்முடைய அத்தனை பிரச்சினைகளுக்கும் நீண்ட கால, நிரந்தர தீர்வாய் அமையும். ஆனால் நிதர்சனத்தில் நாம் அனைவருமே இயல்புக்கு மீறிய வாழ்வியல் சூழலில் வாழ்ந்திடும் கட்டாயத்தில் இருக்கிறோம். இதனை உணர்ந்து இயன்றவரை இயற்கையோடு இணைந்து வாழும் முயற்சியினை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். நமது உடல் என்பது பஞ்சபூதங்கள் எனப்படும் ஐந்து மூலங்களினால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்த ஐந்து மூலங்களின் அளவும், விகிதமும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் மாறுபடுகிறது. இதனை உணர்ந்து நமது உடலின் தன்மைக்கேற்ற உணவு மற்றும் வாழ்வியல் சூழலை அமைத்துக் கொள்வதே ஆரோக்கிய வாழ்விற்கான நீண்ட கால தீர்வாக அமையும். நமது முன்னோர்கள் உட்கொண்ட உணவு மற்றும் உடல் பயிற்சிகளினால்தான் அவர்கள் நோயற்ற நெடு வாழ்வு வாழ்ந்திருக்கின்றனர். இதைப் பற்றிய தகவல்களை முன்னரே இங்கு தொடராக பகிர்ந்திருக்கிறேன். அந்தத் தகவல்களை மீண்டும் இங்கே பகிர்வது அவசியம் என்பதால் இணைப்புகளை கீழே தந்திருக்கிறேன்.

No comments:
Post a Comment