Saturday, August 13, 2016

உடல் எடையை குறைக்க வேண்டுமா? உங்கள் ரத்தப் பிரிவிற்கு ஏற்றவாறு சாப்பிடுங்கள்!!

உடல் எடையை குறைக்க வேண்டுமா? உங்கள் ரத்தப் பிரிவிற்கு ஏற்றவாறு சாப்பிடுங்கள்!!

ரத்தபிரிவிற்கு தகுந்தாற் போல் உணவை உண்டால் உடலை கணிசமாக குறைக்கலாம் என்று இந்த மாதிரியான உணவுக் கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது இயற்கை மருத்துவர் பீட்டர் ஜெ. அடமோ என்பவர் ஆவார். இரண்டு உடல் பருமனானவர்களுக்கு ஒரே மாதிரியான உடற்பயிற்சி, ஒரே மாதிரியான உணவு, கொடுத்துப் பாருங்கள். இருவருக்கும் வேறு வேறு பலன்தான் கொடுக்கும். இதற்கு என்ன காரணமென்றால் மரபணு.

ஒவ்வொருவரின் மரபணுவும் ஒவ்வொரு மாதிரியான என்.ஏ அமைப்பை பெற்றிருக்கும்.அதற்கேற்றவாறுதான் ரத்த அணுக்களும் செயல்படும். சிலருக்கு சில உணவுகள் ஒவ்வாமையை உண்டாக்கும், பால் பொருட்கள், மாவிலுள்ள குளுடன் போன்றவை ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதற்கு காரணங்கள் நிறைய உண்டு. இதற்கு தீர்வு காண ரத்தப் பிரிவிற்கேற்றவாறு சாப்பிடுவதால் பயன்கள் ஏற்படும் என மருத்துவம் சொல்கிறது.

பொதுவாக ஒரே வகையான ரத்தப் பிரிவில் ஓரளவு மரபியல்கள் ஒத்துப் போகும். இதனால் வளர்சிதை மாற்றமும் ஒரு பிரிவிற்கு மற்றொரு பிரிவிற்கும் வேறுபடும். அவ்வகையில் ஒவ்வொரு ரத்தப் பிரிவிற்கு, எந்த சத்து எந்த வகையான உணவு ஏற்றது என தெரிந்த பின் உணவுக் கட்டுப்பாடை மேற்கொண்டால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.

ஓ ரத்தப் பிரிவு :

அதிக புரத சத்து கொண்ட உணவுகளான இறைச்சி, மீன் வகைகள், காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க குறைவான அளவு தானியங்கள், பால் பொருட்களை எடுத்துக் கொள்வது நல்லது.

ஏ ரத்தப் பிரிவு ;

 பழங்கள், காய்கறிகள், லெக்யூம், பீன்ஸ், முழுதானியங்கள் ஆகியவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான அளவு அல்லது இறைச்சி இல்லாத அசைவம் சாப்பிடலாம்.

பி ரத்தப் பிரிவு:

 பச்சை காய்கறிகள், முட்டை, கொழுப்பு குறைவான இறைச்சி, குறைந்த கொழுப்புள்ள பால் வகை உணவுகள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். சோளத்தை தவிர்ப்பது நல்லது.குறைந்த அளவே தக்காளி, கோதுமை, நிலக்கடலை ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏ-பி- ரத்தப் பிரிவு :

கடல் வகை உணவுகள், பச்சை காய்கறிகள், பால் ஆகியவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். காஃபி, மது , சிகரெட் ஆகியவை தவிர்ப்பது நல்லது.

No comments:

Post a Comment