Tuesday, August 23, 2016

மாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும்,

மாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும், 

எளிய மூச்சு பயிற்சியும்! Author: தோழி / Labels: பெண்களுக்கான தீர்வுகள், மாதவிடாய் வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பவை நம் உடல் மற்றும் மனம் ஆகியவைகளை பிரச்சினையின்றி இயங்க உதவுகின்றன என்பதால் கடந்த இரு பதிவுகளில் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள நேரிட்டது. இன்றைய பதிவில் இந்த ஒழுங்கின் மூன்றாவது ஒரு அங்கம் குறித்த தகவலை சேர்த்திட விரும்புகிறேன். இது பற்றி ஏனோ நம்மில் யாரும் பெரிதாய் கவனிப்பதில்லை. உயிர் சக்தி என்றும் பிராண சக்தி என்றும் குறிப்பிடப் படும் ஒன்றையே இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம்.  நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் இருந்து பிராணவாயு பிரித்தெடுக்கப் பட்டு அவை நம் குருதியின் ஊடே கலந்து உடல் இயங்கியலில் பங்கேற்கும் அறிவியல் உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. இதில் நாம் எத்தனை காற்றை உள்ளிழுக்கிறோம், அதில் இருந்து எத்தனை அளவு பிராணவாயு நம் உடலில் சேர்கிறது என்பதைப் பொறுத்தே நம் உடல் நலன் மற்றும் மன நலன் அமைகிறது.  இந்த அறிவியல் உண்மையை வேறெவரையும் விட நமது முன்னோர்கள் அறிந்து, இது தொடர்பில் பல நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கண்டறிந்து நமக்கு அளித்திருக்கின்றனர். நாம்தான் அதை உணந்து பயன்படுத்திட தவறியவர்களாக இருக்கிறோம். இந்த கலையின் விவரங்களை முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் மூச்சுக் கலையின் நுட்பங்களை கீழே உள்ள இணைப்பில் சென்று வாசித்தறியலாம். ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக்கலை: தேவையும், தெளிவும்  ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை பயிற்சியை நமது முன்னோர்கள் வாசியோகம் என அழைத்தனர். இவை இரண்டும் வெவ்வேறானவை என்கிற கருத்தும் உண்டு. அந்த விவாதத்திற்குள் நுழைவது நமது நோக்கமில்லை. இந்த கலையை குருமுகமாய் கற்றுக் கொள்வதே சிறப்பு என்றாலும் கூட அன்றாடம் செய்திடக் கூடிய ஒரு எளிய பயிற்சி முறை ஒன்றினை தகவலாய் மட்டும் இங்கு பகிரலாமென நினைக்கிறேன். நமது உடலின் பெரும்பான்மை முக்கியமான உள்ளுறுப்புகள் நமது இடுப்பு, மார்பு மற்றும் தலைப் பகுதியில்தான் அமைந்திருக்கின்றன. இவற்றைத் தூண்டி செயல்படுத்துவதே இந்த எளிய பயிற்சியின் நோக்கம். இது மூன்று பகுதியாக செய்ய வேண்டியது.  தளர்வாய் சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு கவனத்தை சுவாசத்தில் நிறுத்தி, அது இயல்பாய் போவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காற்றை நன்கு உள்ளிழுத்து, வாயினை மெல்ல திறந்து அதன் வழியே வெளியேற்ற வேண்டும். அப்படி வெளியே விடும் போது அடித் தொண்டையில் இருந்து மெதுவாகவும், நிதானமாகவும் "அ...அ...அ....அ" என்ற ஒலியை எழுப்பிட வேண்டும்.  இவ்வாறு செய்யும் போது நமது வயிற்றுப் பகுதியில் ஒரு விதமான அதிர்வை உணரமுடியும். இதே போல குறைந்தது ஐந்து முதல் ஆறு தடவைகள் செய்திட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் ஏற்படும் அதிர்வினால் நமது வயிற்றுப் பகுதியில் உள்ள கல்லீரல், மண்ணீரல், குடல் பகுதி, சிறுநீரகம், கருவறை, சூலகம் போன்ற உறுப்புகள் தூண்டப் படும். வயிற்றுப் பகுதியில் பிரச்சினை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து செய்து வந்தால் நீண்ட கால நோக்கில் நல்ல பலன் கிட்டும். மார்பகப் பகுதியில் உள்ள இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளையும் மேலே சொன்னதைப் போன்ற பயிற்சியின் மூலம் தூண்ட இயலும். இந்த பயிற்சியின் போது மேலே சொன்ன அதே முறையில் "அ" க்கு பதிலாக "உ....உ...உ...உ..உ" என உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது தோன்றும் அதிர்வினை நமது மார்பகப் பகுதியில் உணர்ந்திட முடியும்.  மூளை மற்றும் அது சார்ந்த உறுப்புகளான சுரப்பிகளைத் தூண்டுவது இந்த பயிற்சியின் மூன்றாவது கட்டம். இந்த பயிற்சியின் போது இரண்டு விரல்களினால் காது மடலை மெதுவாய் மூடிக் கொண்டு, சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடும் போது வாயை மூடி, மூக்கின் வழியேதான் விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது "ம்...ம்...ம்...ம்...ம்" என்கிற ஓலியினை எழுப்பிட வேண்டும். இப்போது அதிர்வுகளை நமது மூளை பகுதியில் உணர முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் மூளையை, அதன் சுரப்பிகளை புத்துணர்ச்சியுடன் செயல்படுத்திட முடியும். மாதவிலக்கு பிரச்சினை உள்ளவர்கள் இந்த எளிய பயிற்சியினை தொடர்ந்து செய்வதன் மூலம் நீண்டகால தீர்வுகளை பெற முடியும். தகுதியுடைய வல்லுனர்களின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் பயில்வதும் பழகுவதும் சிறப்பு. இவை தவிர, முத்திரைகள் எனப்படும் விரல்களை ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொள்வதன் மூலமும் உடல் ஆரோக்கியத்தினை பேண முடியும். இந்த முத்திரைகளை யாரும் பழகலாம். அவை பற்றி விரிவாகவே முன்னர் தொடராய் பகிர்ந்திருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் சென்று வாசித்தறியலாம். வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பது முழுமையான உடல் நலத்திற்கானது. அவற்றை தன்முனைப்புடன் கூடிய தொடர் முயற்சியாக பழகி வந்தால் மட்டுமே பலன் தரக்கூடியது என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.  Make Money Online : http://ow.ly/KNICZ

No comments:

Post a Comment