Sunday, May 4, 2025

தைராய்டு நோய்க்கான எளிய மருந்து

*நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘
🍁 *9787472712* 🍁

 *தைராய்டு நோய்க்கான எளிய மருந்து* 

முன் கழுத்துக் கழலை நோய் என்ற தைராய்டு நோய் 
தைராய்டு சமபந்தப்பட பாதிப்புகள் அதனால் வரும்  முன் கழுத்து வீக்கம் மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது 
இதை முறையாகக் கவனிக்காமல் விட்டு விட்டால் புற்று நோய் சம்பந்தப்பட்ட கட்டிகளாகவும் மாறி விட வாய்ப்புள்ளது 

அதற்காக அறுவை சிகிச்சை மூலமாக தைராய்டு சுரப்பியை நீக்குதல் என்ற மருத்துவம் செய்யப் படுகிறது 
இது சம்பந்தப் பட்ட பிரச்சினைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் குணப் படுத்த வேண்டும் என்றால் இந்தக் கசாயம் உதவும் 
தைராய்டு நோய்க் கசாயம் 
 
*சீந்தில் கொடி ....................  மூன்று கிராம்* 

 *ஆடாதோடை ...............  மூன்று கிராம்* 
 
*திப்பிலி ...............  மூன்று கிராம்* 
 
*வேப்பம் பட்டை   ..........  மூன்று கிராம்* 

ஆகிய நான்கு    பொருட்களையும் ஒவ்வொன்றிலும் சம அளவு எடுத்து  
நானூறு மில்லி தண்ணீரில் போட்டு காய்ச்சி நூறு மில்லி கசாயமாக சுருக்கி இறக்கி வடி கட்டி ஒரு வேளை மருந்தாகக் குடித்து வர வேண்டும் 
மருந்தாக அல்ல உணவாகவே இதைப் பயன்படுத்தி வரலாம் 
தினமும் காலை இரவு என இரண்டு வேளைகள் உணவுக்கு அரைமணி நேரம் முன்னதாக தொடர்ந்து குணமாகும் வரை இந்த மருந்தைக் குடித்து வர வேண்டும்

தைராய்டு வீக்கம் கழுத்தின் இரண்டு பக்கமும் இருக்கும் வீக்கம் படிப்படியாக மறைந்து கொண்டே வருவதைக் காண முடியும் 
எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டும் தைராய்டு நோய் கட்டுக்குள் வராமல் அதன் பக்க விளைவுகளான உடல் எடை அதிகரிப்பது மாதவிலக்குக் கோளாறுகள் தோல் நோய்கள் மன அழுத்தம் தலை முடி கொட்டி அழகு போய்விட்டது என்ற மன வருத்தம் மட்டுமல்லாமல் 
சிறு வயது மாரடைப்பு நோய் போன்ற பிரச்சினைகளையும் குறைத்துக் குணப் படுத்தும் அரு மருந்து இது 

தைராய்டு நோயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் அதன் பக்க விளைவுகளை மாற்ற வேண்டும் என்ற நிலையில் இந்தக் கசாயம் மிகப் பெரிய அளவில் உதவும் 

பல பெண்களுக்கு மாத விலக்குக் கோளாறுகள்  மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே மாதவிலக்கு வருவது அதன் பின் விளைவாக அதி உதிரப் போக்கு ஏற்படுவது போன்ற பிரச்சினைகளுக்கு மிகப் பெரிய காரணமாக தைராய்டு நோய் இருக்கிறது 

பத்து வருடங்களுக்கு மேலாக தைராய்டு நோய்க்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன் இரத்தப் பரிசோதனை செய்தால் தைராய்டு பிரச்சினை இல்லை நார்மல் என்று வருகிறது ஆனால் எனக்கு இந்தப் பக்க விளைவுகள் மற்றும் பிரச்சினைகள் இருக்கின்றன என்று வரும்போது இந்தக் கசாயம் தொடர்ந்து  மூன்று மாதங்கள் அல்லது இரண்டு மண்டலம் சாப்பிட்டு வரும்போது மாதவிலக்குக் கோளாறுகள்  நீங்கி உடல் எடை சரியாகி மன அழுத்தம் குறைந்து தோல் வறட்சி முழுமையாகக் குணமடைந்து எல்லாவற்றிற்கும் மேலாக  பெண்மைத்தன்மைக்கான உடல் அமைப்பு மீண்டும் ஏற்பட்டிருக்கும் 
படிப்படியாக தைராய்டு நோய்க்கான மாத்திரைகளைக் குறைத்துக் கொண்டே வந்து நிறுத்தி விடலாம் 
தொடர்ந்து தைராய்டு நோய் முழுமையாகக் குணமாகும் வரை இந்த மருந்தைக் குடித்து வர வேண்டும் சிலர் ஒரு வருடம் கூட இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டி இருக்கும்

No comments:

Post a Comment