Sunday, May 4, 2025

கறிவேப்பிலைக் கசாயம்

🌿 *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘
🍁 *9787472712* 🍁

கறிவேப்பிலைக் கசாயம் 

கறிவேப்பிலை தூள் .............. மூன்று கிராம் 

கடுக்காய் தூள் .................. மூன்று கிராம் 

சுக்கு தூள் .............. மூன்று கிராம் 

ஆகிய மூன்று பொருட்களையும் கொடுக்கப் பட்டுள்ள அளவுகளின் படி எடுத்து 

நானூறு மில்லி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி 

நூறு மில்லி கசாயமாக சுருக்கி 

இறக்கி வடிகட்டி 

ஒரு வேளை மருந்தாக உணவுக்கு பின் இரண்டு மணி நேரம்  கழித்து குடித்து வர வேண்டும் 

தொடர்ந்து தினமும் காலை மதியம் என இரண்டு வேளைகள் உணவுக்கு பின் இரண்டு மணி நேரம்  கழித்து இவ்வாறு குடித்து வர  

வயிறு சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு ஆரோக்கியமாக வாழ முடியும் 

உடலைப் பலப்படுத்தக் கூடிய செரிமானத்தை  ஊக்குவிக்கக் கூடிய குறிப்பாக குடல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கக் கூடிய அரு மருந்து இந்த கறிவேப்பிலைக் கசாயம் 

இரிடபில் பவல் சிண்ட்ரோம் பிரச்சினையை நிரந்தரமாகக் குணமாக்கக் கூடிய அரு மருந்து இது 

வயிறு சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் செரிமானம்  சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வயிற்றுப்  போக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இரிடபில் பவல் சிண்ட்ரோம் என்ற கிராணிக் கழிச்சல் என்ற அடிக்கடி மலம் கழித்தல் பிரச்சினை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அல்சரேடிவ் கொலாயிடிஸ் என்ற பெருங்குடல் அழற்சி போன்ற பிரச்சினைகளால் பலர் பாதிக்கப் படுகின்றனர் 

இந்தப் பிரச்சினைகளைக் குறைக்கக் கூடிய குணப் படுத்தக் கூடிய வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு முதலுதவி மருந்தாக செய்து சாப்பிடக் கூடிய ஒரு மிக சிறந்த கசாயம் இது 

சிலருக்கு வெளியில் உணவு சாப்பிட்டால் விருந்து வீடுகளில் சாப்பிட்டால் வயிறு ஒத்துக் கொள்ளாமல் வயிறு உப்புசமாகி நெஞ்சில் குத்தி குத்தி எரிச்சலும் வலியும் ஏற்படுகிறது என்ற நிலையில் அந்தப் பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும் அருமருந்து இந்தக் கறிவேப்பிலைக் கசாயம் 

கல்லை சாப்பிட்டால் கூட கரைக்கும் சக்தி வாய்ந்தது இந்த கறிவேப்பிலைக் கசாயம் 

சிலருக்கு வெளி உணவுகள் சாப்பிட்டால் வயிறு ஒத்துக் கொள்ளாமல் அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும் 

வெளியில் உணவுகள் சாப்பிட்டால் மட்டுமல்ல வெளியில் அசைவ உணவுகள் சாப்பிட்டால் கூட வயிறுக்கு தொந்தரவு ஏற்படாமல் இருப்பதற்கு உதவும் இந்தக்  கசாயம் 

அல்சர்  பிரச்சினை புளித்த ஏப்பம் வயிறு எரிச்சல் நெஞ்சு எரிச்சல் பிரச்சனைகளை நீக்கி உடலை வயிறை  பலபடுத்தக் கூடிய மிகப் பெரிய மருந்து இது 

உடல் உற்பத்தி செய்யக் கூடிய நச்சுப் பொருட்களும் உணவில் இருந்து வெளியேறக் கூடிய நச்சுப் பொருட்களும் முழுமையாக வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் 

இந்த நச்சுகழிவுகள் முழுமையாக வெளியேறாமல் போனால் தான் குத்தலும் வலிகளும் வேதனைகளும் உண்டாகின்றன அவற்றைக் குறைத்துக் குணப் படுத்தக் கூடிய அருமருந்துகளில் ஒன்று இந்தக் கசாயம் 

பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறிப்பாக பெருங்குடல் அழற்சி வயிற்றுப் பொருமல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உணவு சாபிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் நான்கு ஐந்து முறைகள் மலம் கழிக்கும் நிலை அசைவ உணவுகள் காரமான உணவுகள் சாப்பிட்டால் வயிறு நொந்து நொந்து வலித்து வலித்து மலம் போகும் நிலை சீதமாகப் போகுதல் சீதம் அதிகாமாகப் போகும்போது உடல் ஆரோக்கியம் குறைந்து போய் உடல் பலம் குறைந்து உடலே மிகப் பெரிய தொந்தரவுக்கு ஆளாகின்றது 

இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் குறைத்து குணப் படுத்தக் கூடிய அழகான அரு மருந்து இது 

பெருங்குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறி உடல் நலமடைய உதவி செய்யும் மருந்து இது 

வயிற்றில் பூச்சி தொல்லை மிகப் பெரிய அளவில் கவனிக்கப் படுவதில்லை 

நிறைய தோல் நோய்கள் ஏற்படக் காரணம் வயிறு சம்பந்தப் பட்ட எரிச்சல் வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணம் உடலில் ஏற்படும் நிறைய மாற்றங்கள் ஏற்படக் காரணம் இந்த வயிற்றில் இருக்கும் புழுக்கள் பூச்சுகள் ஆகும் 

வயிற்றில் இருக்கும் புழுக்கள் பூச்சிகள் குழந்தைகளை மட்டுமல பெரியவர்களையும் பாதிக்கின்றன 

மன அழுத்தம் ஏற்படுவதற்கு கூட மூளை சம்பந்தப்பட்ட தேய்மானப் பிரச்சினை அதனால் வரும் பார்க்கின்சன் நோய் போன்றவற்றிற்கும் மிகப் பெரிய காரணம் இந்த வயிற்றுப் பூச்சிகளும் புழுக்களும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன 

இது சம்பந்தப் பட்ட பிரச்சினைகளையும் நீக்கி உடலுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி பார்க்கின்சன் நோய் தோல் நோய்கள் போன்றவை ஏற்படாமல் இருக்க மிகப் பெரிய அளவில் உதவி செய்கிறது இந்தக் கசாயம்

No comments:

Post a Comment