*கோடையில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்
கோடையில் உட்கொள்ள வேண்டிய உணவுகள்
*கம்பு, சோளம்* போன்ற *கூழ் உணவுகளை* உட்கொள்ளவும். *ஒரு நாளைக்கு* *ஒரு முறையாவது இந்த உணவுகளை உட்கொள்ளவும்.*
*தர்பூசணி, முலாம்* போன்ற *நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்* மற்றும் *பூசணி, வெள்ளரிக்காய், சுரைக்காய்* போன்ற *நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு* உட்கொள்ளவும். *சீசன்களில் விலை குறைவாக கிடைக்கும் உணவுகளை உட்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.*
*கீரைவகைகளை* குறிப்பாக முடிந்த வரை ஏதாவது *ஒரு கீரையை* தினமும் உட்கொள்ளவும். *பழங்கள், காய்கறிகள்* மற்றும் *கீரை வகைகளில் பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, வைட்டமின் சி, கால்சியம்* மற்றும் *மருத்துவ குணம் உள்ள ஆண்டி அக்ஸிடெண்ட்* அதிகம் உள்ளது. *நோய் வராமல் தடுப்பதற்கு இந்த உணவுகள் அவசியம்*.
*முளைகட்டிய முழு தானியங்கள், பயறு வகைகளை* உட்கொள்ள வேண்டும்.
*பழங்களை ஜூஸாக* உட்கொள்வதை விட *முழுதாக* சாப்பிடும் போது *நார்ச்சத்து* கிடைக்கிறது.
*பப்பாளி, கேரட், கொய்யா, தக்காளி, முளை கட்டிய தானிய வகைகள்* ஆகியவற்றை முடிந்த வரை *பச்சையாக சாப்பிட வேண்டும்.*
No comments:
Post a Comment